உங்களுக்கும் ராஜயோகம் :24

ஓபாமா

அண்ணே வணக்கம்ணே !
உங்களுக்கும் ராஜயோகம் தொடர் தொடர்கிறது .கடந்த பதிவுல குருவின் காரகங்கள் எப்படில்லாம் ராஜயோகத்தை தரக்கூடும்னு ச்சூ காட்டியிருந்தேன். அந்த பட்டியல் தொடர்கிறது .

குரு என்பவர் எப்பவுமே ஒரு வித சுயக்கட்டுப்பாட்டை தரக்கூடியவர். இடுப்புக்கு கீழே அடிக்கிறதெல்லாம் முடியாது .இதனால எதிரிகள் கூட ஒரு வித மருவாதிய வச்சிருப்பாய்ங்க.ஆஸ் பெர் ரூல்ஸ் விளையாடறவனை அவுட் பண்றது ரெம்ப கஷ்டம் ( நான் சொல்றது வாழ்க்கை/அரசியல் விளையாட்ல)

இங்கே ரூல்ஸ்ங்கறது ரெண்டு விதம் ஒன்னு அமல்ல இருக்கிற சட்டம் . அடுத்தது நேச்சுரல் லா. ஏன் நேச்சுரல் ஜஸ்டிஸ்னு கூட வச்சுக்கலாம். குரு பலம் உள்ளவன் ஆஸ் பெர் லா தான் ஃபைட் பண்ணுவான்னு கன்ஃபார்மா சொல்ல முடியாது.ஆனால் அவன் அவுட் ஆஃப் லா போனாலும் நேச்சுரல் ஜஸ்டிஸ் தான் அவன் நோக்கமா இருக்கும்.
இந்த தன்மை உலகின் 8/9 வகை மனிதர்களிடம் இருக்காது .ஆகவே அவிக எல்லாமே இவர்களின் பால் ஈர்க்கப்படுவார்கள்.

அடுத்தது இவிக பேச்சு . வாமனன் வந்து த பாருப்பா உன் நாட்ல பலான இடத்துல பலான ஏரியாவுல பலான கிராமத்தை விட்டு உன் அதிகாரத்தை விலக்கிக்கனும்னிருந்தா ராசா “போடா கொய்யால”ன்னிருப்பான்.ஆனால் வாமனன் கேட்டது தானம்.

இவிக கோரிக்கையில சுய நலம் இருக்காது .அப்படியே இருந்தாலும் அது பொது நலத்தோட கலந்ததா இருக்கும். இவிக பேச்சு நீ இதை செய்வே -உன்னால தான் செய்ய முடியும் -இதை செய்தா உனக்கு புண்ணியம் கிடைக்கும். செய்யலின்னாலும் பரவால்ல. என்ன உனக்குத்தான் கிடைக்கவேண்டிய புகழ் கிடைக்காம போயிரும் -ரேஞ்சுல இருக்கும்.எதிராளி என்ன ஆவான் பாருங்க?

இவிக குடும்பமும் ஓரளவுக்கு இவிகளோட ஒத்துப்போவாய்ங்க. (பிள்ளைங்க ஜாதகம் வேற மாதிரி இருந்தா காந்தியோட மவன் இஸ்லாமுக்கு தாவின கதை தான்)

தங்கள் செயலில் ஒரு வித தெய்வீகம் இருக்கிறதா நினைக்கிற வரை எதுக்கு பயப்பட மாட்டாய்ங்க. ஒரு வேளை அதுல சுய நலம் இருக்கிறதா இவிகளுக்கே ஸ்பார்க் ஆச்சுன்னா மட்டும் பம்மிருவாய்ங்க.

உங்களுக்கும் குடும்பம் இருக்குங்க அதையும் பாருங்கன்னா அட .நமக்காவது நிற்க நிழல் இருக்கு. பசியில்லாம இருக்கம். மத்தவிகளை பாருங்கம்பாய்ங்க.

ஏற்கெனவே சொன்னதை போல இரக்கம் -கருணை இத்யாதி இருந்தாலும் அதையும் ப்ளான் பண்ணி லாங் டெர்ம்ல ஒர்க் ஆவறாப்ல செய்வாங்க.

மோதறது பெரிய்ய இடமா பார்த்து மோதுவாய்ங்க. ஏரியா கவுன்சிலர்லாம் இவிக பார்வையில படவே மாட்டாய்ங்க.
ரெம்ப தொலை நோக்கோட ரோசிப்பாய்ங்க. பத்து வருசத்துக்கப்பறம் ,இருபது வருசத்துக்கப்பறம்னு யோசிச்சு செயல்படுவாங்க. உடனடி லாட்டரி கணக்கா ஆதாயம் தேடி செயல்படறவிக இவிகளை கணக்குல வச்சுக்காம விட்டுருவாய்ங்க. சந்தடி சாக்குல இவிக வளர்ந்துக்கிட்டே போவாய்ங்க.

இந்த கல்யாண குணங்கள் தற்காலிகமா கொஞ்சம் சிக்கல் /பின்னடைவுகளை தந்தாலும் லாங் டெர்ம்ல இயல்பாவே ஒரு வித செல்வாக்கு இவியளுக்கு வந்திரும். அதையும் பொது நலத்துக்காகவே செலவழிக்க ஆரம்பிச்சா அரசியல்ல ஒரு நல்ல இடம் கியாரண்டி.

மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்களோட தொடர்பு ஏற்பட்டுரும். இந்த தொடர்பின் வழியே பெரிய மனிதர்களின் அறிமுகம் /அவிக சிபாரிசுல்லாம் கிடைக்கவும் வாய்ப்புண்டு.

ஃபைனான்ஸ் மேட்டர்னு வந்திங்கனா சொந்த விஷயத்துல சொதப்பினாலும் ஊர்ப்பணம்/நிதி நிர்வாகம்னா பக்காவா இருப்பாய்ங்க. ஆரம்ப காலத்துல ட்ரஷரர் மாதிரி செயல்படவும் வாய்ப்புண்டு.

இப்படியாக ஒரு ஜாதகத்துல குரு பலம் ஜாதகனுக்கு ராஜயோகத்தை கொடுக்கும். செரி ஜாதகத்துல குரு பலமே இல்லை . ஆனாலும் ராஜயோகம் கட்டாயம் வேணம்னா என்ன பண்ணனும்? அதுக்கு சில தியாகங்களை செய்யனும்.
உதாரணமா திருமணத்தை தள்ளிப்போடலாம்.அப்படியே செய்தாலும் “வளர்ப்பு மகன்”திருமணம் மாதிரி இல்லாம எளிமையா சீர்திருத்த திருமணம் செய்யலாம். அடுத்து குழந்தை பிறப்பு/வளர்ப்புலயும் எளிமையை கடைபிடிக்கலாம்.
தனியார் பள்ளிக்கு லட்சக்கணக்குல டொனேஷனை அள்ளி விடறதை விட அருகாமையில உள்ள அரசு பள்ளிக்கு நம்மால முடிஞ்ச கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரலாம்.

இப்படி நிறைய குறுக்கு வழி இருக்கு.அதெல்லாம் அடுத்த பதிவுல தரேன். உடுங்க ஜூட்டு .

Advertisements

உங்களுக்கும் ராஜயோகம் :22

4

அண்ணே வணக்கம்ணே !
கிரகங்களை வரிசைப்படுத்தறதுல சில முறைகள் இருக்கு சூரியன், சந்திரன்,செவ்,ராகு,குரு,சனி,புத,கேது,சுக்ரன். இது ஒரு முறை.

சூ,சந்திரன்,செவ்,புதன்,குரு,சுக்கிரன்,சனி,ராகு,கேது இது ஒரு முறை.ஆனால் நான் முடிஞ்சவரை முதல் முறையையே ஃபாலோ பண்றேன். ஏன்னா மேற்படி வரிசையில தான் தசைகள் வரும்.

இந்த தொடர்ல சூ,சந்திரன்,செவ்,ராகு என்ற 4 கிரகங்களை பற்றி அனலைஸ் பண்ணியாச்சு. இந்த சாப்டர்ல குருவை பத்தி தான் எழுதனும்னு கன்ஃபார்ம் பண்ணிக்க பழைய பதிவையெல்லாம் ஸ்க்ரால் பண்ண வேண்டியதாயிருச்சு. அப்பத்தேன் இந்த வரிசை படுத்தும் முறை பத்தி யோசனை வந்தது .

ஓகே இந்த பதிவுல குரு தரும் ராஜயோகத்தை பார்ப்போம்.

ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு வர்ணம் உண்டு. இதன் படி குருவுக்குரிய வர்ணம் பிராமண வர்ணம்.
பிராமணாள் எப்படி ராஜயோகத்தை தரமுடியும்? நேத்திக்கு முக நூல் பதிவு ஒன்னை பார்த்தேன்.அமுகவாம் .அஃதாவது அந்தணர் முன்னேற்ற கழகம். தமிழ் நாட்ல 40 லட்சம் பிராமணால் இருக்காய்ங்களாம்.

இந்த 40 லட்சம் பேர் ஓட்டுப்போட்டு ஒரு ஆள் முதல்வராயிர முடியுமா? நிச்சயமா முடியாது . அப்ப ஜாதகத்துல குரு புஷ்கலமா இருந்தாலும் ராஜயோகம் கிடையாதான்னு கேட்டுராதிங்க.

அவா ஓட்டு போட்டு செயிக்க முடியாதுதான்.ஆனால் “லாபி” பண்றதுல அவா தான் புலிகள். கல்கி வார இதழ்ல கல்கியும் நானும்னு ஒரு தொடர் வருது. அதை படிச்சவிகளுக்கு தெரியும். தெறமை கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் நூலாடும் அவாளை எல்லாம் எப்படி ப்ரமோட் பண்ணியிருக்காய்ங்கன்னு.

அந்த தொடர்லயும் கலைஞருக்கு பயந்து இ.ஒ பின்பற்றியிருந்தாலும் “அவா” தான் சாஸ்தி. கலைஞர் மொத முறை தேர்தல்ல செயிச்சும் -எமர்ஜென்சி எதிர்ப்பு காரணமா பல்பு வாங்கி -அடுத்த தேர்தல்ல எம்.ஜி.ஆர் கிட்டே ஆட்சியை இழந்த எப்பிசோட்ல அவா ரோல் ரெம்ப முக்கியம்.

எம்.ஜி.ஆர் உலகம் சுற்றும் வாலிபன் ஷூட்டுக்கு வெளி நாடு போக அந்த ப்ராஜக்டுக்கு பி.ஆர்.ஓ இதயம் பேசுகிறது மணியன்.

அது நாள் வரை குற்றம் சொல்ல முடியாத குணாளனா இருந்த வாத்யாரை அன்னிய செலாவணி மோசடிங்கற வலையில சிக்க வச்சு -சென்டர்ல கொண்டு போய் சரண்டர் பண்ணி -ஊரை ரெண்டாக்கி -இடையில கெடா வெட்டி பொங்கல் வச்சது அவா தான்.

பதிமூனு வருசமா கலைஞர் வனவாசம் அனுபவிக்க காரணம் தில்லியில ஒரு லாபி இல்லாததுதான். இதை புரிஞ்சுக்கிட்டு தான் கலைஞர் சென்டர் ரிலேஷன்ஸ்ல அடக்கி வாசிக்க ஆரம்பிச்சாரு .

தமிழ் நாட்லயாச்சும் பெரியார் பயத்துல பிராமண லாபி அடக்கி வாசிக்கும்.ஆனால் வட நாட்டு பக்கம் போனா சீன் ரிவர்ஸ். இப்ப எங்க பக்கமும் ரெம்ப பவர் ஃபுல். ரெண்டு தெலுங்கு மானிலத்துக்கும் சி.எம் என்னமோ சூத்திராள் தான்.ஆனால் கவர்னர் அவா. பலன் ? பிராமண வாரியம்.ரெண்டு ஸ்டேட்லயும்.

அவா உங்களுக்காவ எப்ப லாபி செய்வாங்க?

நீங்க பார்க்கவாச்சும் அவா மாதிரி இருக்கோனம். பிராமண லட்சணம்.அய்யராத்து மாமிய தாயா / பொண்ணை தங்கையா பார்த்து நடக்கனும். கடவுள் நம்பிக்கை உள்ளவரா இருக்கனும். வேதங்களை ஏத்துக்கனும்.கோவில் /குளம்/யாகம்/ஹோமம்/புராணம் /இதிகாசம் இதை எல்லாம் கேள்வி கேட்காம ஏத்துக்கறவரா இருக்கனும். அவாளுக்கு வர்ணாசிரம (அ)தர்மமும் ,மனு (அ)தர்மமும் கொடுத்திருக்கிற ப்ரிவெலெஜஸை அப்படியே ஏத்துக்கற கிராக்கியா இருக்கோனம்.

இதெல்லாம் எப்ப அமையும்? குரு உங்க ஜாதகத்துல பவர் ஃபுல் பொசிஷன்ல உட்கார்ந்திருக்கனும்.அப்பத்தேன் அமையும்.

சேரிப்பிள்ளைக்கு உப நயனம் பண்ணது கூட ஒரு அவா தான் (பாரதி) ஆனால் அந்தாளு கெட்டுப்போன பார்ப்பான். மாமூல் வாழ்க்கையில இருக்கிற அவா “செயிக்கிற குதிரை மேல “தான் காசு கட்டுவோ.

நெல்ல ஞா சக்தி ,பெரியவான்னா கவுரதை ,ப்ளானிங்லாம் உங்களுக்கு இருக்கோனம். முக்கியமா வேதம்,புராணம் ,இதிகாசம் இத்யாதியில இருந்து பொருத்தமான நேரத்துல பொருத்தமான கோட்ஸை வாந்தி பண்ணனும்.

குடும்பத்துல அப்பன் குடிகார நாயா இருந்தாலும் -அம்மாக்காரி அவுசாரியா இருந்தாலும் ரெபல் ஆகாம கமுக்கமா இருக்கோனம். தெருவுல கொலையே நடந்தாலும் ஓடி வந்து வீட்டுக்குள்ள தாப்பா போட்டுக்கோனம், சோத்துக்கு இருக்கோ இல்லையோ மந்திரவாதி கணக்கா செண்டு செண்டா பூவாங்கி பூஜை பண்ணனும்.

வீட்டு பொம்பளைங்களுக்கு ஆஸ்மா இருந்தாலும்,ப்ராங்கட்டிஸ் இருந்தாலும் வாரத்துக்கு 3 தபா வீடு பூரா அலம்பி விடனும். அப்பப்போ கணபதி ஹோமம் ,திவசம்னு அய்யரை வீட்டுக்கு கூப்டு செலவழிக்கனும்.

உங்களை போல “உருப்படற ” பசங்களோட மட்டும் சகவாசம் வச்சுக்கனும். பசி,பட்டினிய கூட சகிச்சுக்கிட்டு கிடக்கனும். எல்லாத்தையும் அம்பாள் பார்த்துப்பா. எங்க குடும்பத்துக்கும் ஒரு நல்ல நேரம் வரும் மாமான்னுக்கிட்டு கிடக்கனும்.

அஞ்சு வட்டி பத்து வட்டிக்கு வாங்கியாவது நவகிரக ஸ்தலம், அறுபடை வீடு,திருப்பதின்னு எங்கெங்கும் இருக்கும் அவாளுக்கு படியளந்துட்டு வரனும். மொதலாளி உங்களை /உங்க உழைப்பை சுரண்டோ சுரண்டுன்னு சுரண்டினாலும் அவனுக்கு ஜல் ஜக் போட்டுக்கிட்டு அரசு தேர்வுகளுக்கு ப்ரிப்பேர் ஆயிட்டிருக்கனும்.

இந்த கருமாந்திரத்தை எல்லாம் மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டு அவா ஆத்துக்கு ஒட்டடை அடிச்சு ,கக்கூஸு அடைச்சுக்கிட்டா அடைப்பை நீக்கி “பிரமணை” தூக்கோனம்.

இந்த நிபந்தனைகளை எல்லாம் பூர்த்தி பண்ணா எட்டு இடமும் குளிர்ந்து இருக்கும் போது -அவா சொந்தம் /பந்தம்/ஒன்னு விட்ட உறவு / கசின் இப்படி யாரும் சூட்டபிள் கேண்டிடெட் இல்லின்னா உங்களை லாபி பண்ணி ரெக்கமெண்டேஷன்ல ஒரு இடத்துல செருகி விடுவோ.

குருபலம் இந்த கேடு கெட்ட வாழ்க்கைய வாழ்ந்தாதான் ராஜயோகத்தை கொடுக்குமான்னு நீங்க பல்லை கடிக்கிறது கேட்குது.

டோன்ட் ஒர்ரி குரு பலத்தை வச்சு எப்படி ராஜயோகத்தை கரெக்ட் பண்றதுங்கற சூட்சுமத்தை அடுத்த பதிவுல சொல்றேன்.