செவ்வாயும் கில்மாவும் (மீள்பதிவு)

ஜோதிடமும் கில்மாவும் புக்ல வர வேண்டிய ஐட்டங்களை தொகுத்துக்கிட்டிருக்கன்.ஃபான்ட் ப்ராப்ளம்.அதனால இந்த மீள் பதிவு .

இன்னாபா இது யுத்தகிரகத்தை போயி கில்மாவோட அநியாயத்துக்கு சேர்க்கிறேனு உ.வ பட்டுராதிங்க. பல யுத்தங்கள் வரதுக்கு கில்மாதான் காரணமா இருந்திருக்கு. யுத்தத்துல வேற்றி கிடைச்சாச்சுன்னா கில்மாவுக்கு குறைவே இருக்காது.

செவ்வாய்னா ரத்தம். பலான இடத்துக்கு ரேப்பிட் ஃபோர்ஸ் மாதிரி ரத்தம் பாயலைன்னா அதை அல்பசங்கியைக்கு மட்டும் தான் உபயோகிக்கமுடியும்.

ஆண்,பெண்கள் சுய இன்பம் இத்யாதியில் இறங்காம, பெண்கள் சாகசங்கள் புரியாம இருந்தா முதல் உறவின் போது கருமுத்துக்களை பார்க்கலாம். ( இது எல்லாருக்கும் கட்டாயமில்லிங்கோ) சிவப்புதுளிகள் ஜீரோ வாட்ஸ்ல கரு முத்தாதான் தெரியும்.

பெண்கள் விசயத்துல ஒவ்வொரு மாதவிலக்குக்கப்பாறம் தான் புதிய எக் செல் ஓவரிலருந்து புறப்பட்டு வந்து கருப்பையில தன் காத்திருப்பை துவங்குது . அப்பத்தேன் அவிக “உணர்ச்சிகள்” தீட்டப்பட்டிருக்கும்.

சாமுத்ரிகா லட்சணத்துல சிவந்திருக்க வேண்டிய இடங்கள்னு ஒரு லிஸ்டே இருக்கு. இதனோட அடிப்படை என்ன? ரத்த ஓட்டம் கரீட்டா நடக்குதா இல்லியாங்கறதுதேன்.

(ஜாதகததை வைத்து உடல் அமைப்பை சொல்வது போல் (உ.ம் : லக்னம் = தலை,முகம்) உடல் அமைப்பை வைத்து சாதகம் சொல்லமுடியாதா என்பதே சாமுத்ரிகா லட்சணத்தின் அடிப்படை போலும். ஆனால் பாவகிரகங்கள் ஜஸ்ட் உடலை மட்டும் பாதிப்பதில்லை. மனதையும் பாதிக்கின்றன.

சிலர் விஷயத்தில் பாவ கிரகங்கள் உடலை பாதிக்காது (இவர்கள் பார்க்க சுந்தர புருஷர்களாய் இருப்பர்) ஆனால் மனதை கோரமாக பாதித்திருக்கும். ( சாடிஸ்டிக் சார்மிங் வில்லனாக இருப்பார்கள்)

எச்சரிக்கை: இதெல்லாம் என் கருத்து /ஊகம்/அனுபவம் மட்டுமே

இவ்ளோ டீட்டெயில்டா போவானேன் செவ்…….வாய்ங்கற பேரை பாருங்க. ஒடனே சால்னா கடையில நமீதா கணக்கா ஒரு கேரக்டர். வெற்றிலை போட்டு சிவந்த வாய் ஞா வரலை. மத்த கிரகங்கள் செரியில்லைன்னா அது சரியில்லை இது சரியில்லைனு தான் சொல்வாய்ங்க. இவரு சரியில்லைன்னா மட்டும் ( லக்னம் முதற்கொண்டு 3,6,10,11 தவிர வேறு இடங்களில் இருத்தல்) செவ் தோஷம்னு ஒதுக்கி வச்சிர்ராய்ங்க.

இன்னாபா இது அக்குறும்புனு பொங்கி எழுந்துராதிங்க. மேட்டர் கீது வாத்யாரே. மன்சனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தர்ரது வெள்ளயணுக்கள். அது உற்பத்தியாகிறது எலும்புக்குள்ள இருக்கிற மஜ்ஜையில. அந்த மஜ்ஜைக்கு காரகன் செவ்வாய். தாளி நோ.எ.ச இல்லாத பார்ட்டிக்கு எந்த ரோகம் தான் வராது?

மேலும் செவ் சரியில்லின்னா ரத்த சுத்தி சரியா இருக்காது. சொறி சிரங்கு கட்டி எல்லாம் வரும். இப்படி காட்பாடியா போன பாடி கொண்டவன் பலவீனனாதான் இருப்பான். கோபத்துக்கு காரணம் இயலாமை. பலவீனனுக்கு இயலாமை அதிகம். கோபமும் அதிகம்.

இப்ப கில்மாவுலயே பாருங்க. எத்தினியோ சந்தர்ப்பத்துல விட்டுக்கொடுக்கவேண்டி வரும். ” விளக்கை அணை” “அம்மா தூங்கட்டும் – ஆட்டுக்குட்டி தூங்கட்டும்” செவ் தோஷமுள்ளவன் சீக்கிரத்துல கோபப்படுவான். கோபப்பட்டவனுக்கு காரியம் நடக்காது.

செவ்வாய் காரகத்தின் கீழ் வரும் அம்சங்களையும் அதனால கில்மாவுக்கு வரக்கூடிய ஆப்பையும் இப்ப பார்ப்போம்.
வயதில் இளையவர்கள்:
ஜாதகத்துல செவ் நல்ல இடத்துல உட்கார்ந்தா ஆண்டொன்று கூடுமே தவிர வயதொன்று கூடவே கூடாது. பார்ட்டி சொம்மா நச்சுனு இருப்பாப்டி. சப்போஸ் பார்ட்டி ஜாதகத்துல செவ் சரியில்லைனு வைங்க. சின்னப்பசங்களை எல்லாம் தனக்கு போட்டியா நினைக்கிற சைக்காலஜி வந்துரும். டிஷ் பையன், பால் பாக்கெட் போடற பையன் மேல கூட சந்தேகம் வரும்.( காரணம் உற்சாகத்தை தர்ரது செவ். உற்சாகம் குறைஞ்சிக்கிடக்கறச்ச துடியா இருக்கிற பசங்களை பார்த்தா இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வருமா வராதா?)
போலீஸ், மிலிட்டரி, ரயில்வே:
செவ் நல்ல இடத்துல இருந்தா இந்த மாதிரி டிப்பார்ட்மென்ட்ல வேலை கிடைக்கும். ( செவ் சரியில்லாத ஜாதகத்துல பிறந்து லஞ்சம் கொடுத்து இந்த வேலையெல்லாம் வாங்கினா செவ்வாயின் இதர காரகங்களான ஆயுதங்கள், வெடி பொருட்கள், அறுவை சிகிச்சை, விபத்து, தீ விபத்து இத்யாதிக்கு பலியாகவேண்டி வரும்ங்கோ. மேற்படி உத்யோகங்கள்ள இருந்தா கண்ணாலம் கன்னா (சீக்கிரமா) ஆகும். அப்பாறம் என்ன கில்மாதான்.
எரிபொருள், மின்சாரம்:
வீட்ல கியாஸ் ஆயிருச்சு. கெரசின் இல்லை. எலக்ட்ரிக் ஓவன்ல ஆக்கி முடிச்சுரலாம்னு பார்த்தா வீராசாமி புண்ணியத்துல கரண்டு வாரா சாமி ஆயிருச்சு. சமையல் எப்படி முடியும். பெட் ரூமுக்கு எப்படி போகமுடியும். செவ் நல்லா இருந்தாதான் எல்லாமே கணக்கா முடியுங்கோ. எரிபொருள் தொடர்பான துறையில வேலை,தொழில் அமைஞ்சாலும் சுராங்கனிக்கா சேக்குதேன். தினம் தினம் அல்வா மல்லிப்பூதேன்..
தர்க்கம், வியூகம்:
அட என்ன பாஸ் எதுலதான் தர்க்கம் பார்க்கிறதுனு விவஸ்தையே இல்லையானு கேப்பிக சொல்றேன். ஆன்மீகத்துல மட்டும் தேன் தர்கம் நாலு காலை தூக்கிரும். உ.ம்: இழப்பவன் பெறுவான். காப்பவன் இழப்பான்.
கில்மாங்கறது உலகியல் வாழ்க்கையில ஒரு அங்கமே. அதனால ஜஸ்ட் ஒரே ஒரு தர்கத்தை கேட்ச் பண்ணினா ஊடல் கீடலையெல்லாம் ஊதித்தள்ளிட்டு காம் நகர்ல அப்பார்ட்மென்டே கட்டிரலாமுங்கோ.
அடுத்தது வியூகம். இதென்ன யுத்தமா வியூகம் வகுக்கனு கேப்பிக சொல்றேன். அச்சம், நாணம்,மடம்,பயிர்ப்பு அது இதுனு சொல்றாய்ங்கல்ல இதெல்லாம் என்னவாம் ஒவ்வொன்னும் ஒரு கோட்டை .இந்த கோட்டைகளுக்கெல்லாம் வேட்டு வைக்கலைன்னா நோ கில்மா. ஒவ்வொரு கோட்டைக்கும் ஒரு வியூகம் வகுத்து டமார் பண்ணாதான் கில்மா.
அறுவை சிகிச்சை:
செவ் சரியில்லைன்னா அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பு ஏற்படுது. போதாதகுறைக்கு அவருக்கு சனியோட பார்வை தொடர்பு ஏற்பட்டுதுனு வைங்க அது எவ்ள தூரத்துக்கு போவும்னு சொல்லமுடியாது. அட ஒரு சிசேரியனை எடுத்துக்கங்க. லேடி டாக்டர் ” ஒரு ஆறு மாசத்துக்கு பொஞ்சாதிய தங்கச்சி மாதிரி பார்த்துக்கங்க”னு சொல்ட்டா கில்மாவாவது வேறொன்னாவது. இன்னம் ஓவரிய தூக்கறது, யூட் ரஸை தூக்கிர்ரதுனு கதைபோச்சுன்னா ஹார்மோன் சுரப்புலயே பிரச்சினை வந்து சம்சாரத்துக்கு மீசை தாடியெல்லாம் வர ஆரம்பிச்சுரும்.
சமையல்:
யுத்த காரகனான செவ்வாயை சமையலுக்கும் காரகம்னு சொல்லியிருக்காய்ங்க.ரெண்டுக்கு என்ன சம்மந்தம்? யுத்தம்னா மொதல்ல எதிரி நாட்டை வேவு பார்க்கனும், எதிராளியோட படைபலம் ,வியூகம் தெரியனும். அதுக்கேத்தமாதிரி நம்ம படைய பலப்படுத்தனும். சமையல்னா நாம யாருக்கு சமைக்கப்போறோம், அவிக காஞ்சு கிடக்காய்ங்களா?, ஓஞ்சு கிடக்காய்ங்களா? பசியேப்பமா? புளியேப்பமா தெரிஞ்சிக்கிடனும். அப்பாறம் கிச்சன்ல என்ன இருக்கு என்ன இல்லைனு (முக்கியமா கியாஸ்/கரண்ட்) பார்த்துக்கனும்.
யுத்தம்னா மொதல்ல ஏர் பாம்பிங்கா, காலாட்படையா, கடல் வழி தாக்குதலா முடிவு பண்ணனும். சமையல்னா மொதல்ல கொறிக்க ஏதாச்சும் கொடுத்துரலாமா? இல்லை அவசர அடியா பிரியாணி பண்ணி அதுக்கு தயிர் சட்னி கொடுத்துட்டு அதுக்குள்ளாற கோழிகுருமாவ ஒப்பேத்தமுடியுமானுல்லாம் ஸ்கெட்ச் பண்ணனும்.
இப்படி யுத்தத்துக்கும் சமையலுக்கும் நிறைய சம்பந்தமிருக்குங்கோ. சமைக்கிற கணவன் மாரை வச்சு நிறைய ஜோக்கெல்லாம் எழுதறாய்ங்க. ஆனால் சமைக்க தெரிஞ்ச கணவனா இருக்கிறதுல நிறைய லாபம் இருக்கு பாஸ்.
பொஞ்சாதி ஏகத்துக்கு பில்டப் கொடுக்கமுடியாது ( ஸ்டவ்வு கிட்டே நின்னு பாருங்க தெரியும்) – நெஜமாலுமே பொஞ்சாதிக்கு முடியாத சமயம் கோதாவுல இறங்கி கேட்டு கேட்டு செஞ்சா அவிகளுக்கும் ஈகோ சேட்டிஸ்ஃபேக்சன் ஆகும். மனசுல நன்றி உணர்ச்சி பொங்கும். அது கில்மாவுல கூட முடியலாம்.
ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள்:
செவ் சரியில்லைன்னா இதெல்லாம் வந்து கழுத்தறுக்க ஆரம்பிக்கும். லோ பிபி,ஹை பிபி உள்ளவுக,அல்சர் ,பெப்டிக் அல்சர் உள்ளவுக கில்மாவுக்கும் இந்த வியாதிகளுக்கும் என்ன தொடர்புனு சொல்லலாம்.
மார்ஷல் ஆர்ட்ஸ் ,போட்டி, ஸ்போர்ட்ஸ்:
இதுல வெறி கொண்டு ,வெற்றியே குறியா உள்ளவுகளுக்கு மைண்ட் கில்மா பக்கம் போகவே போகாது. உடம்பு கெட்டுரும்ங்கறதெல்லாம் சொம்மா சாக்கு. மனுஷன் பேசிக்கலா பண்றது ரெண்டுதேன். கொல்றது,கொல்லப்படுவது.இது செக்ஸுல சாத்தியம். ஆனால் இது ரெண்டுமே மேற்படி மார்ஷல் ஆர்ட்ஸ் ,போட்டி, ஸ்போர்ட்ஸ்ல சைக்கலாஜிக்கலா -சுத்தி வளைச்சு நடந்துருது -அதனாலதான் மேற்படி ஃபீல்டுல உள்ள பார்ட்டிங்க கில்மா பக்கம் திரும்பறதில்லை. ஆனால் தமாசு என்னடான்னா அதுகள்ள சாதனை பண்ணி முடிஞ்ச பிற்பாடு பலான மேட்டர்ல ஆர்வம் பீறிட்டு கிளம்பும். சில பிக்காலிங்க (முக்கியமா கோச்சுங்க) “ஏடாகூடமா”பிஹேவ் பண்றாய்ங்கனு கேள்வி. இதுக்கு காரணம் அவன் வெறி கொண்டு ,வெற்றியே குறியா செயல்படலைங்கறதுதேன்.
பால்:
மேட்டருக்கு மின்னாடி ஒரு தம்ளர் பால் (முடிஞ்சா ஒரு சில மசாலாக்கள் சேர்த்து) அடிச்சா தெம்பா இருக்கும்.
கொம்புள்ள பிராணிகள்:
மஞ்சு விரட்டு தெரியும்ல. மஞ்சு விரட்டுல குடல் சரியாம தப்பிச்சா குட்டிக மேலாடை சரிக்கும்னு சரித்திரம் சொல்லுதுல்ல .
மாமிசம்:
இது காம உணர்வை தூண்டும்.

ஆக ஒடனே உங்க குடும்ப ஜோதிடரை சந்திச்சு சாதகத்துல செவ் சாதகமா இல்லியானு ஒடனே தெரிஞ்சிக்கிடுங்க. சாதகமா இல்லாட்டி கீழ்காணும் பரிகாரங்களை ஆரம்பிச்சுருங்க.

1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.

தொழிலும் -கில்மாவும் : ஜோதிட பார்வை

அண்ணே வணக்கம்ணே !
கால ஞானம் :உலக எதிர்காலம் தொடருக்கான விஷயங்களை கி.பி 2000 லயே சேகரிச்சு வச்சிருந்தம். அதெல்லாம் பத்திரமா இருக்கும்ங்கற நம்பிக்கையில தொடரை ஆரம்பிச்சுட்டம். முன்னோட்டமா சொல்ல வேண்டிய மேட்டரை எல்லாம் சொல்லி முடிச்ச பிறவு குறிப்புகளை தேடி பார்க்கிறேன்.. ஒன்னும் பேரலை.

மொபைல் -கம்ப்யூட்டர் உபயோகிக்க ஆரம்பிக்கிறதுக்கு மிந்தி இருந்த ஞா சக்தி இப்பம் இல்லை. கிழவாடிகளுக்கு பழசோ பழசான மேட்டர்லாம் பக்காவா ஞா இருக்கும்.அதை சொல்லி மொக்கை போடுவாய்ங்கனு சொல்றாய்ங்க. நமக்கு அந்த யோகமும் இல்லை போல. எல்லாம் பஜ்னு இருக்கு.மறுபடி அடியை பிடிடா பரதப்பட்டான்னு கால ஞானம் தொடருக்கான சேகரிப்புகளை
துவக்கியிருக்கேன். எல்லாமே உதிரியாத்தான் இருக்கு. உதிரிப்பூக்களை சாதி பார்த்து பிரிச்சு ..ஊஹூம் கிளிஞ்சுரும்.

அதுவரை தொழிலும் -கில்மாவும் தொடரை ஒப்பேத்தலாம்னு நினைக்கிறேன். எந்த தொடர்லயும் வராத சிக்கல் தொ .கி தொடர்ல வந்துருச்சு.அது என்னடான்னா ஏறக்குறைய நோ ஜோதிடம்.இதை பாலன்ஸ் பண்றதுக்கு இன்னைக்கு முழுக்க முழுக்க ஜோதிட ரீதியிலான விஷயங்களை தரேன்.

தொழில் காரகன் சூரியன் , கில்மாவுக்கு காரகன் சுக்கிரன். தொழிலுக்கு பத்தாமிடம் -கில்மாவுக்கு 12 ஆமிடம்.
சூரியனுக்கு ஏன் தொழில் காரகத்தை கொடுத்தாய்ங்க? அவர் தான் நம்மிலான செல்ஃப் -க்கு (சுயம்) காரகர். தூக்கத்துல இருக்கிற ஓலகத்தையே தட்டி எழுப்பறவரு.

சுயம் என்பது உங்களில் இருந்து உலகம் வேறு பட்டது என்பதை ஞா படுத்தும் . நீங்கள் வெர்சஸ் இந்த உலகம் என்ற இழுபறி தான் சுயம்.(செல்ஃப்) . இது முத்திப்போனா ஈகோ.

இந்த உலகத்துல புதுசா -கூடுதலா ஒரு கடல் ஏற்படுதுன்னு வைங்க. அது என்னை பாதிக்காது. நாம ஃபேஸ்புக்ல போடற குண்டக்க மண்டக்க ஸ்டேட்டஸ்களுக்காவ நம்மை தூக்கி 15 நாள் உள்ள வச்சுட்டாய்ங்கன்னு வைங்க .இதனால இந்த உலகம் பாதிக்கப்படுமா? நோ நெவர்.

பழைய தெலுங்கு சினிமாவுல ஒரு பாட்டு :
நேனு புட்டானு ஈ லோக்கம் புட்டிந்தி ( நான் பிறந்தேன் – இந்த உலகமும் பிறந்தது)
நேனு நவ்வானு ஈ லோக்கம் ஏட்சிந்தி ( நான் சிரித்தேன் -இந்த உலகம் அழுதது)
நேனு ஏட்சானு ஈ லோக்கம் நவ்விந்தி ( நான் அழுதேன் – இந்த உலகம் சிரித்தது)
நாக்கிங்கா லோக்கம் தோ பணி ஏமுந்தி (இதுக்கு பிறகும் எனக்கு உலகத்திடம் என்ன வேலை – )
டோன்ட் கேர்.

பாட்டு தமாசா கீதுபானுட்டு ஸ்க்ரால் பண்ணிராதிங்க. பாட்டுக்குள்ள ஒரு சூப்பர் மேட்டர் கீது வாத்யாரே..
“நான்” (சுயம்) பிறந்தேன். இந்த உலகம் பிறந்தது.

நான் (சுயம்) பிறக்கும் வரை நானும் -இந்த உலகமும் இரண்டற கலந்திருந்தோம். நான் (சுயம்) பிறந்த பிறகுதான் இந்த உலகம் என்னிலிருந்து வேறு பட்டது என்ற எண்ணம் பிறந்தது. – என்னை பொருத்தவரை உலகம் புதுசா பிறந்தது.

என்னிலான “சுயம்” கண் விழிக்கும் வரை இந்த உலகம் சிரிக்கும் போது நானும் சிரித்தேன். இந்த உலகம் அழும்போது நானும் அழுதேன்.

சுயம் கண் விழித்த பிறகு நிலைமை தலை கீழானது. உலகம் ரெம்ப டிஸ்டர்ப் பண்ணுது. இதனால் டோன்ட் கேர்னு கர்ஜிக்கிறேன்.
இந்த டோன்ட் கேர் என்ற வார்த்தையை சீனாவின் ஏதோ மானிலத்தின் ஏதோ ஜில்லாவின் ஏதோ டவுனில் வசிக்கும் “சிங்சிங்” ஐ பார்த்து சொல்வேனா? ஊஹூம்.

ஏன்னா அவன் யாருன்னே தெரியாது. அவன் என்னை எந்த வகையிலயும் பாதிக்கலை.அவனை பார்த்து டோன்ட் கேர் சொல்லவேண்டிய அவசியமே இல்லை.

பின்னே யாரை பார்த்து சொல்வேன்? என்னை எவன் ரெம்ப டிஸ்டர்ப் பண்றானோ – எவன் என்னை ரெம்ப பாதிக்கிறானோ – யாருடைய பாதிப்பிலிருந்து நான் விடுபடலின்னா பைத்தியம் ஆய்ருவனோ அப்படியா கொத்தவனை பார்த்து தான் டோன்ட் கேர்னு கர்ஜிப்பேன்.
உலகம் வெர்சஸ் நீங்கள் . இந்த உறவில் நிச்சயமா உங்கள் கை தாழ்ந்து தான் இருக்கும். ஒலகம் எம்மாம் பெருசு. அதோட போயி சண்டை வலிச்சிக்கினு இருக்க முடியுமா என்ன? அதுக்காவ நான் சிரிச்சா அழுது – நான் அழுதா சிரிச்சு என்னை கடுப்பேத்தும் உலகத்தை டீல் பண்றதுதான் எப்பூடி ? என்ன பண்ணலாம்?

நம்மில் சுயத்தை தட்டி எழுப்பி உலகத்தோட முரண்பட செய்யும் சூரியன் தான் இந்த தெளிவையும் கொடுத்தாகனும்.
சூரியன் உங்க ஜாதகத்துல பெட்டர் பொசிஷன்ல இருந்தா உங்களிலான சுயம் உங்களை வடிவமைக்கும். அதுவும் எப்படி?
கொய்யால நான் உங்கள்ள யாரை போலவும் இல்லை. நான் பெசலு. ஏய் ஒலகம் ! நான் டிஃப்ரன்ட் டைப். நான் இல்லைன்னு வை – நீ என்னை கண்டுக்கலைன்னு வை .. உன்னில் ஒரு குறை -ஒரு இடைவெளி நிரப்பப்படாமலே போயிரும்னு உலகத்துக்கு அறைகூவல் விடுக்கும் அளவுக்கு உங்களை பிரத்யேகமாக வடிவமைக்கும்.

உங்களை நீங்கள் வெளிப்படுத்த “தொழிலை” விட பெட்டர் மீடியம் இருக்கா என்ன? தொழில் மூலமா நீங்க இந்த உலகத்துக்கு போட்டியா – மாற்றா ஒரு உலகத்தை உருவாக்கறிங்க. திரிசங்கு சொர்கம் மாதிரி. நீங்க அசலான ஒலகத்தை மறந்து இதுவே என் உலகம்னு மாறிப்போயிட்டா அது ஈகோ.

இதுவே சூரியன் உங்க ஜாதகத்துல பல்ப் வாங்கியிருக்காருன்னு வைங்களேன். அப்போ என்ன ஆகும்? அடுத்த பதிவில் பார்க்கலாம்..

தொழிலும் கில்மாவும்:9

அண்ணே வணக்கம்ணே !
சமீபத்துல இந்த தொடர்பதிவை டீல்ல விட்டுட்டம். இன்னைக்கு ஒரு ஃபினிஷிங் டச் கொடுத்து கழண்டுக்கலாம் -புதுசா எதையாவது ஆரம்பிக்கலாம்னு ப்ளான் பண்ணியிருக்கன். ராஜாஜியோட பாட்டு ஒன்னு ரெம்ப பிரபலம் “குறையேதுமில்லை மறைமூர்த்தி கண்ணா”

இது பச்சை ஹிப்பாக்ரசி. குறையில்லாத பிறவியே கிடையாது. குறை இருந்தா -இதோ இந்த குறை இருக்கு இதை தீர்த்துவைன்னு கேட்கனும். அதை விட்டுட்டு குறைய கொளந்தை ஏ.சி. பஸ்ஸுல கக்கா போனா கர்ச்சீஃப்ல முடிஞ்சு வச்ச மாதிரி வச்சுக்கிட்டா நாறிரும்.

நிற்க. தொழில்லயோ -கில்மாவுலயே நீங்க தூள் பண்ணனும்னா இந்த ரெண்டுல எதுவோ ஒன்னுல குறை இருக்கனும். அந்த குறை உங்க சப் கான்ஷியஸ் மைண்டை தூண்டி அற்புதம்லாம் செய்துரும்.

குறை இருந்தாத்தான் அதை நிறைவு செய்யும் செயல் துவங்கும். நிறைகுடம் தளும்பாதுன்னு சொல்வாய்ங்க.குடத்து நீர் தளும்பும்போதுதான் செயல்படுகிறது. அது தளும்பலின்னா அதன் இருப்பு சந்தேகத்துக்குள்ளாகுது.

மனிதனிலும் ஏதோ ஒரு குறை அதிலும் முக்கியமா தொழில் அல்லது கில்மாவுல இருக்கனும்.அப்பத்தேன் அவனையும் அறியாம அவன் உள்ளுணர்வு தீட்டப்படும்.சாதனைகள் படைப்பான்.

அட வாஸ்துவையே எடுத்துக்கங்க. அதுலயும் ஒன்னு அரை குறை இருந்தாதான் சாதனைகள் படைக்க முடியும்.

100 சதம் வாஸ்து உள்ள வீட்ல வாழ்ந்தா “போதுமென்ற மனமே பொன் செய் மருந்து” ” யாவும் அவன் செயல்” மாதிரி மென்டாலிட்டிதான் டெவலப் ஆகும். இப்படி 100 சதம் வாஸ்து உள்ள வீட்டுக்காரர் கதையையும் அனுபவ பூர்வமா பார்த்தேன்.

ஏதோ பூர்விக சொத்தா நிலங்கள் இருந்ததால பசி பட்டினி இத்யாதி இல்லைன்னாலும் பசங்க படிப்புக்காக ஒவ்வொரு சொத்தா வித்து ( நல்ல விலைக்கு) ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருந்தாய்ங்க. பசங்களும் படிப்பை முடிச்சுட்டு அப்பாவுக்கு தப்பாத பிள்ளைகளா ஹால் சோஃபால தூங்கி வழிஞ்சிக்கிட்டு இருந்தாய்ங்க.
வாஸ்து வாஸ்துதான் இல்லேங்கலை. ஹ்யூமன் பாடிக்கு ஒரு தர்மம் இருக்கில்லயா. அதை எந்தளவுக்கு சிரமப்படுத்தறமோ அந்த அளவுக்கு ஸ்ட்ரெங்தர்ன் ஆகும் லாஞ்சிவிட்டி அதிகரிக்கும். எந்த அளவுக்கு அதை சுகம்மா வச்சிருக்கமோ அந்த அளவுக்கு லொடக்கானி ஆயிரும்.

பார்ட்டி சொகம்மா தூக்கத்துலயே மேசிவ் ஹார்ட் அட்டாக்ல போய் சேர்ந்துருச்சு.. இத்தனைக்கு வயசு 50+ தான்.

இன்னைக்கிருக்கிற மெடிக்கல் மிராக்கிள்ஸுக்கு இது ஒரு வயசா? பார்ட்டி (பாட்டியில்லை) டிக்கெட் வாங்கின பிற்காடுதான் பின்னாடி எவ்ளோ பெரீ ஓட்டைய (கடன்) வச்சிட்டு போயிருக்குனு சனத்துக்கு தெரிஞ்சு என்னை கூப்டாய்ங்க.

நாமதான் அதிரடிக்கு மறுபெயர் இல்லியா? மேட்டரை உடைச்சு சொல்லி (பால்ல கூட கொஞ்சம் போல தண்ணி சேர்த்துத்தான் காய்ச்சி குடிக்கனும். அப்படியே குடிச்சா நாஸ்திதான். தங்கத்துல கூட கொஞ்சம் போல செம்பு, பித்தளை சேர்க்கனமப்பு)

டெம்ப்ரரியா ஈசானத்துல செங்கல் அடுப்பு வச்சி தண்ணி காய வைச்சு குளிங்கன்னேன்.ஒன்னரை மாசத்துல பசங்களுக்கு ஒன் பை ஒன் வேலை கிடைச்சு வீட்டை விட்டு வெளியேறினாய்ங்க. வீட்டுக்காரம்மா தனிய இருக்க பயந்துக்கிட்டு உறவுக்கார குடும்பம் ஒன்னை வாடகைக்கு வச்சுக்கிட்டாய்ங்க.

ஏதோ கொஞ்சம் போல சுறுசுறுப்பா வாழ்க்கைச்சக்கரம் நகருது. குடி வந்த பார்ட்டி விருச்சிக லக்னம்,செவ்வாய் உச்சம். லேத் வச்சிருக்காரு. விடியல் 6க்கெல்லாம் லேத்துக்கு போயாகனும். அதனால செங்கல் அடுப்பை இன்னம் எடுக்க சொல்லலிங்கண்ணா.

இவ்ளோ எதுக்கு ஜாதகத்தையே எடுத்துக்கங்க. கொய்யால ..ஒலகம் இன்னம் இயங்குதுன்னா அதுக்கு காரணம் குறையுள்ள ஜாதகர்கள் தான். அல்லாருக்கும் அல்லா கிரகமும் கேந்திர கோணங்கள்ள நின்னிருந்தா அல்லாரும் கிருஷ்ணா ராமான்னு மரத்தடியிலயோ -குகையிலயோ வாழ்ந்து முடிஞ்சிருப்பாய்ங்க.

நம்ம ஜாதகத்தையே எடுத்துக்கங்க. ஒரு சந்திரன் -சுக்கிரனை தவிர மத்த கிரகம்லாம் கேந்திர கோணத்துலதான் இருக்கு. சுக்கிரன் ரெண்டுல நின்னு எட்டை பார்த்ததாலதேன் கில்மா பெசலிஸ்ட் ஆனோம் (இதுக்கு விலையா ப்ரெட் ஹன்டரா நாறினம்ங்கறது வேற கதை )

சந்திரன் ரெண்டுல நின்னு எட்டை பார்த்ததாலதேன் மனசை கடைஞ்சு கடைஞ்சு தாளி அது அமுதமோ விசமோ வர்ரதை அப்டியே ஷேர் பண்ணிக்கிறேன். ஐ மீன் இயங்கறேன். என் இருப்பு பத்திரமா இருக்கு. இல்லின்னா என்னாயிருக்கும்?

ஒலகத்துக்கும் நமக்கும் உள்ள டீலிங் என்னடான்னா நாம எதையோ சொல்லுவம் -சனம் திருப்தியா பைசா கொடுக்கும் – அல்லது கில்மா பற்றிய உண்மைகளை போட்டு உடைப்போம் ஒலகமே நம்மை எதிரியா பார்க்கும் (யதார்த்தவாதி பஹுஜன விரோதி) .என்னைக்கோ ஒரு நாள் கல்லால அடிச்சு கொன்னாலும் ஆச்சரியப்படமாட்டேன்.

சரிங்னா தொழில் -கில்மா என்ற இந்த ரெண்டு மேட்டர்ல ஒன்னுல குறை இருந்தா இன்னொன்னுல சாதனை படைக்கலாம்ங்கறிங்க.
எனக்கு ரெண்டுலயுமே குறை இருக்கே -என்னால ஒரு மண்ணு சாதனையையும் படைக்க முடியலியேன்னு சிலர் கேட்பாய்ங்க.

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானேன்னு ஒரு பாட்டு இருக்கு.அதைப்போல சிலர் வாழ்ந்துர்ராய்ங்க. அவிகளுக்கு தங்களில் குறை இருக்கிறதே உறைக்காது.. அப்படியே உறைச்சாலும் அதை படக்குன்னு மறைக்க செயல்பட ஆரம்பிச்சுருவாய்ங்க. இந்த பொய் -மறைப்புல்லாம் குழந்தை பருவத்துலயே துவங்கிருது.

ஒரு குழந்தை சூப்பானுக்கு காம்ப்ரமைஸ் ஆயிருச்சுன்னா அதுக்குள்ள இருக்கிற உயிர் சக்தி பற்றாக்குறையில இருக்குன்னு அருத்தம்.
ஒரு இளைஞன் சுய இன்பத்துக்கு காம்ப்ரமைஸ் ஆயிட்டா அவனுக்குள்ள இருக்கிற உயிர் சக்தி பற்றாக்குறையில இருக்குன்னு அருத்தம்.

இந்த உண்மையை புரிஞ்சு விழிச்சுக்கிட்டா நோ ப்ராப்ளம். அப்படியில்லாம சுய ஏமாற்றே (ஹிப்பாக்கிரசி) வாழ்க்கையா போச்சுன்னா அவன் ஒரு ம..னாவும் சாதிக்க முடியாது.

தொழிலும் கில்மாவும்: 7

அண்ணே வணக்கம்ணே !

ஒரு டேபிளின் ஒரு மூலையில் ஒரு குண்டூசி இருக்கு . அந்த குண்டூசியை கையாலயோ /அல்லது வேறு எந்த பொருளாலயோ தொடப்படாது.ஆனால் எதிர்மூலைக்கு கொண்டுட்டு போகனும். முடியுமா? முடியும்.

ஒரு காந்தத்தை விழிப்போட கையாண்டால் -அது குண்டூசியை தொடாதயும் பார்த்துக்கிட்டு எதிர்மூலைக்கு கொண்டுட்டு போகலாம்.
இங்கே குண்டூசி தான் நீங்க. டேபிளின் எதிர்மூலை தான் தொழிலில் வெற்றி. காந்தம் தான் கில்மா. காந்தம் குண்டூசியை தொடப்படாது. அதே போல கில்மா உங்களை தொடப்படாது.ஆனால் உங்களை எதிர் மூலைக்கு கவர்ந்துக்கிட்டே இருக்கனும்.

இந்த நிலை அன் மேரீட் சாப் விஷயத்துல மட்டும் தான் ஒர்க் அவுட் ஆகும். அதுவும் அவிக சுய இன்பம், கள்ளக்காதல்,ஹோமோன்னு டைவர்ட் ஆகாம இருக்கனும்.
இதுவே கண்ணாலமானவுகன்னா எப்படி ஒர்க் அவுட் பண்ணலாம்? உங்கள் தாம்பத்யத்தை பொருத்து – உடலுறவுகளின் இடையிலான இடைவெளிகளை பொருத்து உணர்வுகள் எல்லாமே மரத்து போயிருக்கும்.

எது ஒன்னுமே அவெய்லபிள்னு தெரிஞ்சா அது மேல இருக்கிற ஈர்ப்பு குறைஞ்சு போயிரும். அதுலயும் தாய்க்குலம் கண்ணாலத்துக்கு மிந்தி மார்க்கெட்டிங் கட்டாயங்களால என்னென்னமோ திரிசமன் எல்லாம் செய்து “பக்காவா” சீன் போடுவாய்ங்க. கண்ணாலத்துக்கு அப்பாறம் டீல்ல விட்டுருவாய்ங்க.
இதுவே இல்லாம கண்ணாலத்துக்கு மிந்தி செய்த லீலைகளும் இந்த ஈர்ப்பை ரெம்பவே குறைச்சுரும்.அவை உடனடியாக தீட்டப்படனும். அதுக்காவ மருந்து மாயம்னு தாவாதிங்க. அதெல்லாம் விசப்பரீட்சை. உள்ளதும் போச்சுரா நொள்ளைக்கண்ணானு ஆயிரும்.

எண்ணெய் தீர்ந்து போல விளக்குல திரியை எவ்ளதான் தூண்டி விட்டாலும் திரி தான் கருகிப்போயிரும். இந்த மருந்து மாயம்லாம் செய்றது இதைத்தான்.
விவசாயி அறுவடை முடிஞ்சதும் விதை நெல்லுன்னு தனியா எடுத்து வைப்பான். (இப்பம் இந்த இழவும் இல்லேனு நினைக்கிறேன் -எல்லாம் அட்டைப்பெட்டியில போட்டு சீல் பண்ணி விக்கிறாய்ங்க போல. அல்லது கெவுர்மென்டு தங்களுக்கு தேவையானவுக கம்பெனிகளுக்கு ஆர்டர் போட்டு இலவசமா தர்ராய்ங்க)
பட்டினியே இருக்கவேண்டி வந்தாலும்விதை நெல்லுல கை வைக்கமாட்டான்.அதை போல ஹ்யூமன் பாடியும் சக்தியில் ஒரு பாகத்தை சேமிச்சு வச்சிக்குது. இந்த மருந்து மாயம்லாம் அதுல கை வச்சு அதை வலுக்கட்டாயமா ரிலீஸ் ஆக வைக்குதோ என்ன இழவோ?

இந்த கருமத்தையெல்லாம் டச் பண்ணாம ஒரு ரெண்டு வாரம் போல இயற்கையுடன் ஒட்டிய வாழ்வு + பிரம்மச்சரியம் இது ரெண்டையும் ஃபாலோ பண்ணா போதும். உணர்வுகள் தீட்டப்பட்டுரும். பரபரன்னு இருக்கும். ஒடனே கில்மாவுல இறங்கிட்டா மேட்டர் ஓவர். இந்த மாதிரி சந்தர்ப்பத்துல கொஞ்சம் போல தள்ளிப்போட்டுக்கிட்டே வரனும்.

உதாரணமா இந்த டிப்பார்ட்மென்டல் டெஸ்டை முடிச்சுட்டு ப்ரமோஷனுக்கு கியாரண்டி ஏற்பட்ட பிறவு தான் கில்மா. இந்த குவார்ட்டருக்கான சேல்ஸ் டார்கெட்டை கவர் பண்ணிட்டுத்தான் கில்மா .

நான் பல பதிவுகள்ள சொன்னாப்ல இயற்கையின் மொத டார்கெட் இனப்பெருக்கம் தான். அதுலயும் பருவ வயதை தொட்டவுக விஷயத்துல இது பர்ஃபெக்டா ஒர்க் அவுட் ஆகும்.

இந்த கில்மா மேட்டருக்கு தான் பாடி ஃபர்ஸ்ட் ப்ரிஃபரன்ஸ் கொடுக்கும். பாடியில இருக்கிற எனெர்ஜி எல்லாம் சேகரிக்கப்பட்டு -கில்மா டிப்பார்ட்மென்டுக்கு டைவர்ட் செய்யப்படும்.

வீட்ல /தொழில்ல எவ்ள செலவுகள் இருந்தாலும் கந்து வட்டிக்காரனுக்கு மொதல்ல எண்ணி வச்சுர்ராப்ல பாடி இதை மெயின்டெய்ன் செய்யும்.
திடீர்னு கந்து வட்டிக்கடன் தீர்ந்து போச்சு -மறுபடி வாங்க வேண்டிய அவசியமில்லேன்னா என்ன ஆகும்? பாத்ரூம் கதவை ரெடி பண்றது – துருபிடிச்சு போன பீரோவுக்கு பதிலா புதிய பீரோ வாங்கறதுன்னு ப்ரியாரிட்டி மாறிரும்.

படக்குன்னு நீங்க பிரம்மச்சரியத்தை கை கொண்டதும்..ஒரே வழியில் பாய்ந்து பழக்கப்பட்ட சக்தி அதே வழியில பாய ரெடியாகும். நீங்க லோயர் லெவல்ல உள்ள “கேட்”டை போட்டு விட்டுட்டிங்கனா அது பின்னோக்கி பாயும்.

உடலுறவுகளுக்கிடையிலான இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க துரித ஸ்கலிதத்துக்கு வாய்ப்பு அதிகமாகும்னு ஒரு நம்பிக்கை பரவலா இருக்கு. இந்த நம்பிக்கையிலயும் நிஜம் இல்லாமல் இல்லை. இடைவெளி குறுகிய இடைவெளியா இருந்தா இதுக்கு சான்ஸ் அதிகம் தான் ஒத்துக்கறேன்.
இந்த கெண்டத்தை தாண்டியாச்சுன்னா இடைவெளியை மாசக்கணக்குல இழுக்கலாம். அதுக்காவ கால முச்சூடும் ஈர கோவணம் கட்டிக்கிட்டு இருக்க சொல்லலை.அது ரெம்ப டேஞ்சர்.

இதுல இன்னொரு தமாசு இன்னாடான்னா மனிதன் “செயல்பட” முடியாத குறைக்கு (காரணம் இயலாமை மட்டுமே இல்லை) மேற்படி செயல் குறித்த நினைவுகளில் ஆழ்ந்துர்ரான்.

மூளையால என்ன பண்ண முடியும்? மிஞ்சிப்போனா கொஞ்சம் நஞ்சம் ஆன்ட் ரோஜனை அதிகமா சுரக்க வைக்க முடியும். செயல்பட வேண்டியது? பாடி தானே.. ஆனால் நடக்கிறது என்ன?

ஏற்கெனவே சொன்னதை போல பயக்கதோசம் காரணமா மனிதனிலான ஒரே பவர் -செக்ஸ் பவர் மூளையை மையம் கொண்டுருது. சாதாரணமாவே ரத்த ஓட்டத்துல 70 சதவீதம் மூளைக்குத்தான் போகுதாம். இதனால ஆக்சுவலா செயல்பட வேண்டிய ஆர்கன்ஸ் கொஞ்சம் பேஸ்தடிச்சாப்ல ஆயிருது.

ஆக மொத்தத்துல ஹ்யூமன் பாடியில உள்ளது ஒரே பவர்.அது செக்ஸ் பவர். ஆனால் நம்ம தவறான -இயற்கைக்கு எதிரான பழக்க வழக்கங்களால் – லாஜிக்கே இல்லாத கிளர்ச்சிகளால் – செயல்பாடுகளால் – தளர்ச்சிகளால் அது குறைஞ்சு போகுது.

அதே சமயம் புறக்காரணிகளால் ( கிளர்ச்சி தரும் காட்சிகள்) திரியை மட்டும் தூண்டி விட்ட காரணமாய் “எல்லாம்” சுபமாய் முடிஞ்சதா ஒரு பிரமை நமக்கு ஏற்பட்டுருது.

இயற்கையின் வரமாய் நமக்கு கிடைச்ச பவர் கொளந்தையிலருந்து நாம் வாழ்ந்த இயற்கைக்கு விரோதமான போக்கால் – டீன் ஏஜ் சமயத்து நிராசைகளால் – தவறான பழக்க வழக்கங்களால் மங்கிக்கிட்டே வருது. இருக்கிற கொஞ்ச நஞ்சம் பவரும் “கடமையே” போல் ஈடுபடும் செக்ஸ் காரணமா போன்டியாயிருது.
இந்த நிலையில அது எங்கே கிரியேட்டிவ் பவரா ட்ரான்ஸ்மிட் ஆறது – அது எங்கே நம்ம தொழில் உத்யோக வியாபார துறைகளில் ஒர்க் அவுட் ஆறது – நாம எங்கருந்து கிளிக்கிறது?

எச்சரிக்கை:
இந்த பதிவை படிச்சுட்டு இன்ஸ்டன்டா பிரம்மச்சரியத்துக்கு தாவ நினைச்சா பொளப்பு நாறிரும். இதனால கொஞ்சம் கொஞ்சமா உடலுறவுகளுக்கிடையிலான இடைவெளியை அதிகரிச்சுட்டு வாங்க. ஹேண்ட் பை ஹேண்ட் ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க.
இல்லாட்டி ருசி கண்ட பூனை உறிக்கு உறிதாவும்ங்கறாப்ல மனசு கில்மாவுக்கே தாவும். அதை நீங்க வலுக்கட்டாயமா அழுத்த நினைச்சா புறவாழ்க்கையில எரிச்சல்,சிடு சிடுப்பு,படபடப்புன்னு மாறிரும்.

மேலும் மத்தவுகளை விட நாம தாழ்ந்துட்டா பிரச்சினை இல்லை. கொஞ்சம் உசந்துட்டா உலகமே ஒன்னாகி -உங்க மனசு புண்ணாகி என்னாகுமோ சொல்ல முடியாது..

இதை படிக்காதிங்க:
நம்ம அனுபவஜோதிடம் முக நூல் பக்கத்துல மனிதர்களை 9 வகையா பிரிச்சு சூரிய காரகம் முதல் சுக்கிர காரகம் கொண்ட மனிதர்களின் பின்னணி,குணாதிசயங்களை சொல்லியிருக்கம்.

மேலும் சூரிய காரகம் வெர்சஸ் சூரிய காரகம் ,சூரிய காரகம் வெர்சஸ் சந்திர காரகம்னு ஆரம்பிச்சு சுக்கிர காரகம் வெர்சஸ் கேது காரகம் வரை இன்டராக்ட் ஆனா அந்த உறவு எப்படியிருக்கும்னு பிட்டு பிட்டா சொல்லப்போறோம்.
ஆர்வம் இல்லாதவர்கள் இங்கே க்ளிக் பண்ணாதிங்க

தொழிலும் கில்மாவும் : 6

அண்ணே வணக்கம்ணே !
இந்த தொடர்பதிவுல தொழில்-கில்மாவுக்கு இடையிலான ஒற்றுமை, வேற்றுமையை சொல்லியிருக்கேன். கில்மாவ பொருத்தவரை மன்சன்ல எத்தனை சாதின்னு சொல்லியிருக்கேன். ஒரு மன்சன் உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கானா? மனசுக்கு முக்கியத்துவம் கொடுக்கானா? புத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கானாங்கறதை பொருத்தும் சனத்தை சாதி பிரிக்கலாம்னும் சொல்லியிருக்கேன்.

மன்சன் நைட் டைம்ல பெட் ரூம்ல எதை செய்றானோ அதையேத்தான் டே டைம்ல தொழில்,உத்யோகம்,வியாபார மேட்டர்ல செய்றான்னும் சொல்லியிருக்கேன். இன்னம் என்னெல்லாம் சொல்லலாம்னு ரோசிச்சேன். பல மேட்டர் ஸ்பார்க் ஆச்சு.

மனித மனம் கொல்லுதல் -கொல்லப்படுதல் இது ரெண்டைத்தான் விரும்புது. (இது ரெண்டும் செக்ஸ்ல பாசிபிள்ங்கறதால செக்ஸை விரும்புது.பணம் இருந்தா செக்ஸ் கிடைக்கும்ங்கறதால பணத்தை விரும்புது.பதவி இருந்தா பணம் வரும்னுட்டு பதவியை விரும்புது. அதிகாரம் இருந்தா எவளை வேணா படுக்கப்போடலாம்னு பதவிக்கு அலையுது.)

ஆண் உச்சம் பெறுவதால் கொல்லப்படுகிறான்.பெண்ணுக்கு உச்சம் கிடைக்கும் பட்சத்தில் அவளும் கொல்லப்படுகிறாள் . கிடைக்காத பட்சத்தில் அவள் அவனை பல வகையில் கொல்லப்பார்க்கிறாள்

இது ஆண்கள் உலகம். நம்ம பதிவை தந்தைகுலம் பெருவாரியா படிக்கிறதாலயும் – உடலளவில் நாம ஆண் என்பதாலும் இந்த தொடர் ஆணின் கோணத்துலயே எழுதப்படுது.

கொல்லவும் -கொல்லப்படவும் ஆண்,பெண்கள் விரும்புவது தாங்கள் உசுரோடத்தான் இருக்கமாங்கற சந்தேகம் வர்ரதாலதேன். அந்த சந்தேகம் வர காரணம் மெக்கானிக்கல் -போரிங் லைஃப் தான். அதுவும் டீன் ஏஜ்ல சக்தி ஊற்றெடுக்கும். மனசு பரபரன்னு இருக்கும்.ஆனால் ஒன்னத்தையும் செய்ய முடியாது. தான் உசுரோடத்தான் இருக்கமா? இல்லையாங்கற அளவுக்கு வெக்ஸ் ஆயிரும்.

அதே நேரம் ஹார்மோன் கலகத்தால பாலுணர்வு தேக்கப்பட்டு சிறு புறத்தூண்டுதல் கிடைச்சாலும் சீறி பாய காத்துக்கிட்டிருக்கும். ஆனால் செக்ஸ்இந்த சமுதாயத்தால ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருக்கு.

பின்னே எப்படி தன்னோட உயிர்ப்பை ,இருப்பை தனக்காச்சும் ஸ்தாபிச்சுக்கரது? அவனுக்கு/அவளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற சக்தியின் நோக்கம் /இந்த இயற்கையின் எதிர்ப்பார்ப்பு உயிர் வாழ்தல் மற்றும் பரவுதல் (இனப்பெருக்கம்).

மொத நோக்கமான உயிர் வாழ்தலே சந்தேகாஸ்பதமா இருந்தா இயற்கை விட்டுருமா? நோ .. தான் உயிர் வாழ்ந்திருப்பதை ருசுப்படுத்திக்கொள்ள 500 சிசி வண்டி கேட்டு பேரன்ட்ஸை கொல்றான். பேய் வேகத்துல பறந்து தன்னை கொன்னுக்க பார்க்கிறான்.

இவனைப்போலவே தான் உசுரோடத்தான் இருக்கமாங்கற சந்தேகத்துல இருக்கிற ஒரு குட்டியை கணக்கு பண்றான்.அவள் இவன் ப்ரப்போஸலை ஏத்துக்கிட்டா அவளோட சோடியா பறந்து தன் நண்பர்களை கொல்றான்.

ஒரு வேளை அவள் இவனை ரிஜெக்ட் பண்ணிட்டா செல்ஃப் பிட்டியில சாகிறான்.அல்லது ஆசிட் அடிக்கிறான். தலைப்பு செய்தியில வர்ரான்.மெழுகுவர்த்தி விற்பனைய உயர்த்த பயன்படறான்.

என்னை கேட்டா இயற்கைக்கு நெருக்கமா,இயற்கையின் வரபிரசாதமான இளமையை ,இளமையின் சக்தியை ,சக்தி ஊற்றை பெற்று பொங்கி தீர்க்க தயாரா இருக்கிற இந்த வயசுல ஒரு பையன் ஒரு தொழில்ல இறங்கிட்டா தூள் பண்ணலாம்.

ஏன்னா இந்த வயசுலதான் அவனுக்குள்ள கொல்லும் -கொல்லப்படும் இச்சை உச்சத்துல இருக்கும்.அவன் உழைக்கும் போது கொல்லப்படும் இச்சை நிறைவேறுது. உழைப்பின் பலனை அடையும் போது (பிறரை) கொல்லும் இச்சை நிறைவேறுது.

ஆனால் இந்த வயசுல அவனுக்கு உழைக்கவோ ,வியாபாரம் பண்ணவோ இந்த உலகம் வாய்ப்பு தர்ரதே இல்லை.

உச்சத்தில் இருந்த அவனிலான வேக்குவம் சுய இன்பம்,காதல்,கள்ள உறவுன்னு மிக மிக குறைஞ்சு போன பிறவு தான் அவன் உத்யோகம்,வேலை,யாவாரம்னு வரான்.
இதுல படக்குன்னு கண்ணாலம் வேற கை கூடிவந்துட்டா தீர்ந்தது கதை . வேக்குவம் க்ளோஸ். எவனில் மித மிஞ்சிய செக்ஸ் பவர் இருந்து -அது சுய இன்பம்,காதல்,கள்ள உறவுன்னு செலவழிஞ்சாலும் -கண்ணாலம் -உடலுறவுன்னு எக்ஸாஸ்ட் ஆனாலும் மிச்சமா இருக்கோ அவன் தான் சாதிக்கிறான்.

கு,பட்சம் ஆசை அறுபது நாள் மோகம் 30 நாள்ங்கறாப்ல உடலுறவில் சலிப்பு ஏற்பட்டு -கொய்யால இது இல்லை என் தேவை. நான் செய்ய வேண்டியது உண்மையான உருவாக்குதல் -உண்மையான பரவுதல் -ங்கற ஞானோதயம் ஏற்பட்டவன் சாதிக்கிறான்.

அல்லது ரிஷ்ய ஸ்ருங்கன் கணக்கா கில்மாவுக்கே வழியில்லாம (அதுக்குண்டான உடல் தகுதி /ஆர்வம் இருந்தும்) தன்னிலான வேக்குவம் எள்ளளவும் குறையாம இருக்கிறவன் சாதிக்கிறான்.

இளமையை இழந்தவனோ -உடலுறவுக்கு மட்டும் போதுமான இளமை உள்ளவனோ “ச்சொம்மா கதை தான்” பண்ணுவான்.
ஒரு சில ஸ்பெஷல் கேஸஸ்ல அம்மா அவுசாரியா இருக்கிறது -பொஞ்சாதி கெட்டுப்போனவளா வர்ரதுன்னு நடந்திருந்தாலும் அவன் பெருசா சாதிக்கிறதை பார்க்க முடியுது.

எச்சரிக்கை:
இந்த பதிவுல ஜோதிட கன்டென்ட் சுத்தமா கிடையாது.அடுத்த பதிவுல எந்த கிரக ஸ்திதிகள் மன்சனை இப்படியெல்லாம் சாதி பிரிக்குதுன்னு பார்ப்போம்.ஓகேவா உடுங்க ஜூட்டு.

தொழிலும் கில்மாவும் :5

அண்ணே வணக்கம்ணே !
நாம யூத்தா இருந்தப்பயே எல்லா மேட்டருக்கும் ஒரு விதியை வகுத்துருவம். உ.ம் நகம் கடிக்கிற குட்டி வெட்கப்படும் – விரலை கடிக்கிற குட்டி வந்துரும்.
ரெம்ப காலத்துக்கு பிறகுதான் விதிகள் போல(வே) தோன்றும் விதிவிலக்குகளின் தொகுப்பே வாழ்க்கைங்கற முடிவுக்கு வந்துட்டம்.
முள்ளை முள்ளால எடுத்த பிறவு ரெண்டு முள்ளையும் தூக்கிப்போட்டுர்ராப்ல .. இந்த வாழ்க்கையில விதிகளுக்கு இடமில்லைன்னு தெரிஞ்சுக்கவாச்சும் விதிகளை தெரிஞ்சுக்க வேண்டியதா இருக்கு.

இந்த மொக்கையெல்லாம் எதுக்குன்னா தொழிலும் கில்மாவும் தொடர்ல நிறைய விதிகளை சொல்லப்போறேன். இது எல்லா சனத்துக்கும் பொருந்துங்கற கியாரண்டி கிடையாது. விதி விலக்குகள் நிச்சயமா இருக்கும்.

ஏன்னா மன்சங்கள்ள பல ரகம் இருக்காய்ங்க.

1.உடலளவில் வாழ்வோர்
2.உள்ளத்துடன் வாழ்வோர்
3.புத்தியுடன் வாழ்வோர்
4.உள் உணர்வுகளால் வழி நடத்தப்படுவோர்

நாம வகுக்கும் விதிகள் மொத கேட்டகிரியில உள்ளவுகளுக்கு வேணம்னா சிக்குன்னு பொருந்தலாம். ரெண்டு,மூனு,நாலாவது கேட்டகிரின்னு வர வர நம்ம விதிகளோட தாக்கம் குறைஞ்சு போயிரும்.

ஹோல்டான் !

கடந்த பதிவுலயே ஜோதிட மேட்டர் சுத்தமா இல்லையேன்னு கம்ப்ளெயிண்ட் வந்துருச்சு. வரேன். ஜோசியமும் வருது.வெய்ட் அண்ட் சீ.
சாடிசம் -மசாக்கிசம்னா என்னனு தெரியாதவுக இருக்கமாட்டாய்ங்க.

ஆனாலும் புதிய வரவுகளுக்காக சிறுகுறிப்பு.
சாடிஸ்ட் : மற்றவரை துன்புறுத்தி -அதில் இன்பம் காண்பவன். மசாக்கிஸ்ட்: தன்னை தான் துன்புறுத்திக்கிட்டு மத்தவுகளை குஜிலியாக்கிறவன்.
ஒரு ஜாதகத்தை கையில எடுத்ததும் அந்த ஜாதகன் சாடிஸ்டா -மசாக்கிஸ்டா சொல்லமுடியுமான்னு கேப்பிக.சொல்லலாம்.

கிரகங்கள்ள ரெண்டு குரூப்பிருக்கு. நைசர்கிக சுபர்கள் ,நைசர்கிக பாபிகள் .
குரு, சுக்கிரன், தீய கிரகங்களுடன் சேராத புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியோர் நைசர்கிக சுபகிரகங்கள்.

சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது, தீய கிரகங்களுடன் சேர்ந்த புதன், தேய்பிறைச் சந்திரன் ஆகியோர் நைசர்கிக பாப கிரகங்கள்.

இந்த நைசர்கிக சுபர்கள் லக்னப்படியும் சுபர்களா இருந்து நற்பலன் தரக்கூடிய நிலையில இருந்தா இவிக சாடிஸ்டாவும் இருக்க மாட்டாய்ங்க. மசாக்கிஸ்டாவும் இருக்க மாட்டாய்ங்க.

எச்சரிக்கை:
இதுல குருவுக்கு மட்டும் விதி விலக்கு. இவர் நைசர்கிக சுப கிரகம். லக்னப்படியும் சுபனாயிருந்தாலும் – நற்பலன் தரக்கூடிய நிலையில இருந்தாலும் -தனிய நின்னா – ஜாதகர் கொஞ்சம் போல மசாக்கிஸ்டா இருக்க சான்ஸ் இருக்கு.

இந்த நைசர்கிக சுப கிரகங்கள் லக்னாத் பாபிகளா இருந்தா இந்த ஜாதகர்களுக்கு நெல்லவுகளை பார்த்தா இளிச்சவாயனுங்கன்னு தோனும். தான தருமங்கள் பண்றவனை ஊதாரிம்பாய்ங்க.பொஞ்சாதிகிட்ட அன்பா நடந்துக்கிட்டா வழியறான் -பொண்டாட்டி தாசன்ம்பாய்ங்க.

இப்படி நெல்ல மேட்டர் எல்லாம் கெட்ட மேட்டராவே படும். ஒலகத்துல அப்பன்,ஆயிலருந்து பிள்ளை குட்டி,தோஸ்துங்க வரை எல்லாரும் ஃப்ராடு பசங்க. நாம அலார்ட்டா இல்லின்னா ஆப்படிச்சுருவாய்ங்கன்ற ஃபீலிங் இருக்கும்.

இவிக மேற்சொன்ன காரணங்கள்/ஊகங்களை வச்சு இவிக வெறுக்கிற சனம் சமுதாயத்தை பொருத்தவரை அல்லாருக்கும் நெல்லது செய்துக்கிட்டிருப்பாய்ங்க. ஆனால் இவிகளுக்கு மட்டும் நெல்லது செய்றோங்கற துடிப்புல ஆப்படிச்சுருவாய்ங்க.அட அவிக நெல்லதே செய்தாலும் அது இவிகளுக்கு ஆப்பா முடியும்.

இப்படி ஒரு சில அனுபவங்கள் காரணமா இவிக மேற்சொன்ன கேட்டகிரி மக்களை விலக்கியே வைப்பாய்ங்க. அவிக கதி கெட்டு உதவின்னு வந்தா நோகடிப்பாய்ங்க. இந்த வகையில இவிகள்ள சாடிசம் இருக்க சான்ஸிருக்கு.

இதுலயே இன்னொரு கேட்டகிரி இருக்கு. ( நைசர்கிக சுபர்கள் லக்னாத் பாபிகளாய் இருக்கும் போது) இவிக என்னவோ சாஸ்திரம்,சம்பிரதாயம்,கோயில் ,குளம்,விரதம், சிக்கனம், சேமிப்புன்னு எல்லாத்தையும் ஃபாலோ பண்ணிக்கிட்டுதான் இருப்பாய்ங்க.ஆனால் இதுவே இவிகளுக்கு ஆப்பா முடியும். உ.ம் இவிக சேர்த்துவச்சதை ஆரு வாய்ல போட்டு தண்ணி ஊத்திருவாய்ங்க. இவிகள்ள கொஞ்சம் மசாக்கிசம் இருக்கும்.

இனி அடுத்த கேட்டகிரிய பார்ப்போம். நைசர்கிக பாபிகள் இவிக லக்னத்துக்கு சுபர்களா இருப்பாய்ங்க.

பொய்,பித்தலாட்டம்,லஞ்சம் ,கூட்டி கொடுக்கிறது காட்டிக்கொடுக்கிறதுல்லாம் செய்துட்டு வர்ர வரைக்கும் இவிக கேரியர் டாப்ல போயிட்டிருக்கும். (இதன் கொடிய விளைவுகள் இவிகள வேற ரூட்ல வந்து சாச்சுரும் அது வேற கதை- இங்கே நாம குறிப்பிடறது உலகியல் வாழ்வை -அதுவும் சமுதாயத்தின் பார்வைக்கு வர்ர வாழ்வை மட்டும் தான் ). இதனால இவிக உள்ளுணர்வு இவிகளை சாடிசத்துக்கே உசுப்பும். அடுத்தவனுக்கு ஆப்படிச்சாதான் லைஃபுங்கற ஃபீல் இவிகளுக்கு வந்துரும்.

ஆனால் இதே கேட்டகிரி சனத்துக்கு கெட்ட நேரம் வரும்போது “அய்யோ பாவம்”ங்கற ஃபீல் வந்து இரக்கம் காட்டின ஒரே காரணத்துக்காவ ஆப்படிச்சுக்கறதும் உண்டு.

ஆக சாடிசம் -மசாக்கிசம்ங்கறது ஜாதகப்படியே அமையுது. ஓகேவா.

இந்த பாபர்,சுபர் மேட்டர் மட்டுமில்லை. ஜாதகத்துல இந்த சுக்கிரன் ஆரு? லக்னாத் பாபியா? சுபனா? எங்க நின்னாரு ? ஆரோட சேர்ந்தாருங்கறதை பொருத்து இவிக செக்ஸ் லைஃப் இருக்கும். (இதுல 7க்குடையவர், 7 ல் நின்ற கிரகங்கள்,12 ஆமிடம் ,அங்கே நின்ன கிரகங்கள், எட்டு ,எட்டில் நின்ற கிரகங்கள் கூட செக்ஸ் லைஃபை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும்)

காலாகாலத்துல கிடைக்க வேண்டியது கிடைச்சாச்சுன்னா -கில்மாவை சொன்னேன்பா – அடுத்து என்னன்னு மனசு முன்னோக்கி போகும். கிடைக்க வேண்டியது தொடர்ந்து லீகலா – எத்திக்கலா அவெய்லபிளா இருந்தா -மன்சன் உண்மையான உருவாக்குதலுக்கு ஷிஃப்ட் ஆயிருவான்.

1.திருப்தியா கிடைக்குது – கிடைக்கும் -கிடைச்சுட்டே இருக்கும்ங்கற நிலையில மன்சன் நார்மலா இருப்பான். நோ சாடிசம் -நோ மசாக்கிசம்

2.கிடைக்குது -ஆனா இல்லீகல் – எத்திக்ஸ் படி தப்புன்னு வைங்க. கொய்யால நான் “அதுக்காவ” எவ்ளோ அவஸ்தை படறேன்.இவன்லாம் பாரு கமுக்கமா முடிச்சுட்டு ரிலாக்ஸா இருக்காங்கற கடுப்புல சாடிஸ்டா மாறுவாய்ங்க.

3.இப்ப கிடைக்கலை -ஆனால் எதிர்காலத்துல நிச்சயமா கிடைக்கும்.
கண்ணுக்கு முன்னே பச்சை புல் கட்டை பார்த்து தலைய அசைச்சுக்கிட்டே வண்டியிழுக்கிற மாடு போல ஆர்வமா உழைப்பாய்ங்க. சமயத்துல மசாக்கிஸ்டு போல தங்களை தாங்களே துன்புறுத்திக்கிட்டும் உழைப்பாய்ங்க.

4.இப்ப கிடைக்கலை – எதிர்காலத்துல கிடைக்குமோ கிடைக்காதோ கூட தெரியாது
உழைப்புல ஆர்வமிருக்காது. ஆர்வமா உழைக்கிறவனை நக்கலடிப்பாய்ங்க.உழைப்புக்கேத்த பலன் கிடைக்காம அவன் நொந்துகிடக்கிறப்போ அவனை மேலும் நோகடிப்பாய்ங்க. மேயற மாட்டை நக்கற மாடு கெடுத்தாப்ல அடுத்தவன் வேலையையும் கெடுப்பாய்ங்க.

5.இப்ப கிடைக்கலை -எப்பயும் கிடைக்காது
இவிகளை மறுபடி ரெண்டு சப் கேட்டகிரியா பிரிக்கனும். நல்ல குடும்பம், நல்ல ஜீன்ஸ், நல்ல ஆசிரியர்கள், நல்ல கொலிக்ஸ் , சுமாரான ஜாதகத்துல பிறந்தவுக மசாக்கிஸ்டா மாறுவாய்ங்க. அடுத்தவன் லவ்ஸுக்கு தூது போறது – கொலிக்ஸுக்கு அல்லையன்ஸ் தேடறது-கல்யாண வேலையை இழுத்து தோள்ள போட்டுக்கிட்டு செய்றது -ஓடி வந்தவுகளுக்கு கண்ணாலம் கட்டி வைக்கிறது எட்செட் ரா..

இதுவே தத்தாரி குடும்பம் ,கேடு கெட்ட ஜீன்ஸ், குவார்ட்டர் வாங்கி வர சொன்ன ஆசிரியர்கள், களவாணி பயலுவ சகவாசம் – தரித்திர ஜாதகத்துல பிறந்தவுக சாடிஸ்டா மாறுவாய்ங்க.

இதையெல்லாம் சொல்லிட்டு வந்தது எதுக்கு? தொழில் -உத்யோகம் -வியாபாரத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக சொல்றேன்.

தொழில் -உத்யோகம்-வியாபாரம் ங்கற 3 சமாசாரத்துலயுமே பேர் தான் மாறுதே தவிர கவுண்டர் பார்ட் நிச்சயம் உண்டு.
தொழில்ல பார்ட்டி/கிராக்கி/கஸ்டமர்னு சொல்றோம், உத்யோகத்துல பாஸுன்னு ஒருத்தர் இருப்பார், வியாபாரத்துல வாடிக்கையாளர்,பையர்னு (Buyer) ஒருத்தர் இருப்பார்.

மன்சன் தன் வீட்டில் -கட்டில் அறையில் தான் எதை பெற்றானோ அதையே தன் கவுண்டர் பார்ட்டுக்கு வழங்க முற்பட்டுருவான்.

உ.ம்
சாடிஸ்ட் மனைவிகிட்டே டார்ச்சர் அனுபவிக்கிறவன் எதிராளிகளை டார்ச்சர் பண்ணிக்கிட்டே இருப்பான்.
மனைவி மசாக்கிஸ்டா அமைஞ்ச மன்சன் -மனைவியால ராஜசுகம் அனுபவிக்கிற மன்சன் எதிராளிகளையும் குஷிப்படுத்திக்கிட்டே இருப்பான்.

எச்சரிக்கை:
சாடிஸ்ட் பொஞ்சாதிக்கிட்டே படாத பாடு பட்டாலும் தெரு நாய்க்குட்டிக்கு கூட அன்பு காட்டற புண்ணியாத்மாக்கள் அங்கொன்னும் இங்கொன்னுமா இருப்பாய்ங்க. ஒன்னு இவிக அக்மார்க் மசாக்கிஸ்டுகளா இருப்பாய்ங்க. அல்லது பயங்கர ஹிப்பாக்கிரட்ஸா இருக்கலாம். அல்லது ஆரம்பத்துல சொன்னாப்ல புண்ணியாத்மாக்களா இருக்கக்கூடும்.

சாடிஸ்ட் பாஸ் -மசாக்கிஸ்ட் சர்வெண்ட் டபுள் ஓகே. சாடிஸ்ட் கஸ்டமர் -மசாக்கிஸ்ட் வியாபாரி டபுள் ஓகே. இந்த காம்பினேஷன் மாறினாத்தான் வம்பு .
தொடர்ந்து நோண்டி நுங்கெடுக்கலாம்.உடுங்க ஜூட்டு.

தொழிலும் கில்மாவும் : 2

மொபைல் ஹவுஸ்

அண்ணே வணக்கம்ணே !
இப்படி பைசா அப்படி கில்மா ரெண்டையும் கேட்ச் பண்ணத்தேன் ஆண் உலகம் லோ லோன்னு லோல் படுது. குட்டிகளை பிக் அப் பண்ற பர்சனாலிட்டி – அட்வெஞ்சர் – நாலெட்ஜ் எதுவுமில்லாத சனம் சுத்தி வளைச்சு பைசா புரட்டிரலாம் .அப்பாறம் ஆட்டோமெட்டிக்கா நமக்குன்னு ஒன்னு வந்துருங்கற சப் கான்ஷியஸ் தாட்ல ஒர்க் அவுட் பண்ணுதுங்க.

இதுல இன்னாடா சிக்கல்ன்னா இவன் பணத்தை துரத்தி துரத்தி தொந்தி,தொப்பை,பிருஷ்டம் பெருத்து பாடியெல்லாம் பாடி போடற அளவுக்கு ஆயி, பேட்டரி வீக் ஆகி , மேற்படி சமாசாரத்தை அல்ப்ப சங்கியைக்கு மட்டும் உபயோகிச்சுக்கிட்டிருக்கிற காலத்துல பொஞ்சாதி மட்டும் வீட்டோட யூத்தா ,ஃப்ரெஷ்ஷா இருக்கிறதை பார்த்து வீட்டுக்கு வர்ர எலக்ட் ரீஷியன் மேல ப்ளம்பர் மேலல்லாம் சந்தேக படவேண்டி வர்ர காலத்துல கொய்யால தப்பு பண்ணிட்டமோன்னு இழந்த சக்தி வைத்தியர்களை தேடி ஓட வேண்டி வந்துர்ரது.

அதே நேரம் மேற்சொன்ன பர்சனாலிட்டி -அட்வெஞ்சர் – நாலெட்ஜ் எல்லாத்தையும் வச்சுக்கிட்டு மந்தை மந்தையா குட்டிகளை கட்டி மேய்ச்ச பார்ட்டிங்க குட்டிகளோட இன்செக்யூரிட்டி – எதிர்காலம் பற்றிய சிந்தனை இத்யாதி வெளிப்படும்போது நாக்கை கடிச்சுக்கிட்டு கொய்யால தப்பு பண்ணிட்டமே “இதுகளுக்கு கில்மாவ விட பைசா தான் முக்கியம் போல”ன்னு யு டர்ன் அடிச்சு பைசா புரட்ட கிளம்பிர்ராய்ங்க.

இந்த இழவையெல்லாம் ஓவர் கம் பண்ண முடியாதா? இது ரெண்டுத்துக்கும் இடையில உள்ள தொடர்பு தான் என்ன? எல்லாத்தையும் நோண்டி நுங்கெடுத்துருவமில்லை.
ஜாதகத்துல 10 ஆமிடம் தொழில்-உத்யோகம் -வியாபாரத்தை காட்டுது. எட்டாமிடம் மரணம் -இன உறுப்பை காட்டுது. இந்த இரண்டு அதிபதிகள் அல்லது பாவங்களுக்கு தொடர்பு ஏற்பட்டால் ரெம்ப நல்லது. தொழில்-உத்யோகம்-வியாபாரத்துல ஆர்வம்,பிடிப்புல்லாம் வரும்னு கடந்த பதிவுல சொன்னேன்.

இந்த தொடர்பால் மேற்படி நன்மைகள் ஏற்படும் அதே நேரத்துல பத்தாமிடம் கர்மஸ்தானம்ங்கறதால . கர்மங்கள் கூடும். எட்டாமிடம் இன உறுப்பை மட்டுமல்லாது பேரிழப்புகள்,விபத்துகள்,தனிமை உணர்வு, வீண்பழி,சிறை செல்லுதல், தலை மறைவாதல்,திவால் ஆதல் இத்யாதிய கூட காட்டும் என்பதால் இவையும் ஏற்படலாம்.
என்ன பாஸு இப்படி குழப்பறிங்கன்னு கோச்சுக்காதிங்க. உள்ளதை சொன்னேன் தட்ஸால். வாழும் உதாரணம் வேணம்னா சரவணபவன் அண்ணாச்சி.
தொழில் -கில்மா இரண்டுக்கும் தேவை பவர். ஹ்யூமன் பாடியில உள்ளது ஒரே பவர் அது செக்ஸ் பவர். அதனோட நோக்கம் உருவாக்குதல் (குழந்தை மட்டுமல்ல – புதிய உலகம் ,புதிய நாடு இப்படி எதை உருவாக்கனும்னாலும் இதே பவர் தான் தேவை)

எட்டு பத்து அதிபதிகள்னா கடகலக்னத்துக்கு சனி செவ் தான். இவிக ரெண்டு பேருக்கும் தொடர்பு ஏற்படும் போதெல்லாம் நாம ரெம்ப பிசியாயிர்ரம். இல்லேங்கலை. (இப்பவும் கடக செவ் நாலாம் பார்வையா துலாத்துல இருக்கிற சனியை பார்க்கிறாரு)

ஆனால் நமக்கு மட்டும் பேசிக்கல் மெடிக்கல் நாலெட்ஜ், ஹெல்த் கான்ஷியஸ் இல்லாம இருந்திருந்தா இன்னேரத்துக்கு பைல்ஸ் ,ஃபிஸ்டுலா எல்லாம் வந்திருக்கும். அதுக்குண்டான சிம்ப்டம்ஸ் எல்லாம் புஷ்கலமா வந்தாச்சு ( சனி = ஆசனம் , செவ் = ரணம்) .

ஒழுங்கு மருவாதியா ரத்ததானம் செய்துட்டம். கொசுறுக்கு ஒரு ஈத்தரை அரைலிட்டர் பெட் ரோலை ஆட்டைய போட்டுட்டு குழாயை செருகாம போனதால மறுபடி ஒரு முப்பது ரூவா பெட் ரோல் ஃபணால்.(செவ்= எரிபொருள்)

ஒரு ஃபோக்கஸ் லைட்டை ஆன் பண்றோம். எதிர்ப்பக்கம் தேஜோமயமாயிருது.ஆனால் பின் பக்கம்? இருட்டு தானே. அதைப்போல எட்டுபத்து அதிபதிகள் சேர்க்கை ,பார்வைல்லாம் தொழில் முன்னேற்றத்தை மட்டும் தந்துராது. கூடவே வேற எதையோ கூட தரும்.

டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட். அது தொழிலா இருந்தாலும் சரி.கில்மாவா இருந்தாலும் சரி. ரெண்டுக்கும் தேவை ஒரே பவர் -ஒரே இஸ்டிங்ட் . இந்த புரிதல் இருந்தாலன்றி ரெண்டுலயும் ஒரே நேரத்துல சாதிக்க முடியாது.

பவர் -இன்ஸ்டிங்ட் -புரிதல் இது மட்டும் சாதனைக்கு போதுமானதில்லை. உங்க இருப்பில் -உங்கள் உயிர்ப்பில் உங்களுக்கு சந்தேகம் இருக்கனும். உங்க இருப்பை -உங்களிலான உயிர்ப்பை கு.பட்சம் உங்களுக்காச்சும் நிரூபிச்சாகவேண்டிய கட்டாயம் இருக்கனும்.

அப்பத்தேன் பவர் ஜெனரேட் ஆகும். ஜெனரேட் ஆனது இத்துனூண்டு பவர்னு வைங்க அந்த பவரை நீங்க கில்மாவுல இழந்துட்டா தொழில்,உத்யோகம்,வியாபாரம்லாம் பெப்பே காட்டிரும்.

நீங்க உயிர் உள்ள வஸ்துங்கற ஃபீலே இல்லாம – நீங்களும் இருக்கிங்கங்கற ஞா கூட இல்லாம உங்க குடும்பம், உங்க தெரு , உங்க ஏரியா பிஹேவ் பண்ணனும். நான் இருக்கேனா இல்லையாங்கற சந்தேகம் உங்களுக்கே வந்துரனும்.டு பீ ஆர் நாட் டுபீ – வாழ்வதா? சாவதா?ங்கற கேள்வி வந்துரனும். அப்பத்தேன் எனாரமஸ் பவர் ஜெனரேட் ஆகும்.

அந்த பவரை உண்மையான உருவாக்குதலில் ஐ மீன் தொழில் உத்யோகம் வியாபாரம் இத்யாதியில செலவழிச்சும் அது கம்ப்ளீட்டா எக்ஸாஸ்ட் ஆகாம செக்ஸுக்கு உங்களை டைவர்ட் பண்ணும்.

தொழில் -கில்மா ஒற்றுமை:
1.நீங்க உங்க உயிர்ப்பை – இருப்பை உங்களுக்கும் கன்வே பண்ணி ஊருக்கும் பறை சாற்ற முடியும்.
2.உருவாக்க முடியும்
3உங்க மரணத்தை தள்ளி போட முடியும் ( நீங்க செத்துப்போகலாம் -ஆனால் நீங்க உருவாக்கினவை இருக்கும். கட்டி எழுப்பினவை இருக்கும்)

வேற்றுமை:
1.கில்மாவுல உங்கள் உயிர்ப்பு -இருப்பு உங்களுக்கு மட்டும் – மிஞ்சிப்போனா உங்க செக்ஸ் பார்ட்னருக்கு மட்டும் அஞ்சலாகும். தொழில்ல ? சொல்லனுமா என்ன?
2.கில்மாவுல நீங்க உருவாக்க முடிஞ்சதை (கொளந்தை -குட்டி) எல்லா உயிரும் உருவாக்கும் .ஆனால் தொழில்ல?
3. நீங்கள் பெற்ற குழந்தை ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து ஆளாகி -அது உங்க நிழலாவோ -நகலாவோ உருவானால் மட்டுமே – உங்க மரணத்தை ஒரு அந்தாஸா தள்ளிப்போடமுடியும். ஆனால் தொழில்ல?
அப்போ கில்மாவே வேஸ்ட் ஆஃப் டைமுங்கறியா? காலமெல்லாம் உழைச்சே ஓடா தேய சொல்றியாம்பிங்க. சொல்றேன். ப்ளீஸ் வெய்ட்..