காலமாற்றம்-கிரகபலன் : பாக்ய பாவம் (1)

ballon burst

அண்ணே வணக்கம்ணே !
காலமாற்றம்-கிரகபலன் தொடர்ல 9 ஆவது பாவமான பாக்ய பாவம் தரும் பலனில் கால மாற்றத்தால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பற்றி பார்ப்பம். நம்ம ராசியான சிம்மத்துக்கு கோசாரத்துல 2-8 ல் இந்த ராகு கேது செம அட் ராசிட்டி பண்றாய்ங்க. இதுக்கு பரிகாரமா இந்த பதிவுல கொஞ்சம் காட்டடி அடிக்கலாம்னு இருக்கன். (குறைஞ்ச பட்சம் ஒரு லாயர் நோட்டீஸ்னா வரனும்)

எச்சரிக்கை:

இந்த வலை தளம் இயங்க ஒரே சோர்ஸா இருக்கும் கட்டண ஆலோசனை வரும் டிசம்பர்,31 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதால் நன் கொடைகளை ஏற்க முன்வந்தம். நன்கொடைகள் வருது .ஆனால் சொல்லிவச்ச மாதிரி எல்லாருமே என் பேரை அவுட் பண்ணாதிங்கன்னு சொல்லிர்ராய்ங்க. நமக்கு ஏனோ இது பெரிய மனக்குறையா இருக்கு .

இந்த வாரமாச்சும் பேர் போடும் வகையில் நன்கொடைகள் வரும் என்று நம்புகிறேன்.

மொதல்ல லக்னாத் 9 ஆவது பாவ காரகங்கள் என்னன்னு பார்த்துரலாம் .(ஒவ்வொன்னா விளக்க வசதியா இருக்கும்ல)(இதை பித்ருபாவம்னும் குறிப்பிடலாம்)

இதன் காரகங்கள் :

த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து, சேமிப்புக்க‌ள்,தூர‌பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.பப்ளிஷிங்,தூர தேச தொடர்புகள், கோவில் ,குளம்,சேவை அமைப்புகள், நீதி, நிர்வாகம், தொடை பகுதிகள்

காலமாற்றத்தால இன்னைக்கு கொளந்தைங்க அப்பன் முகத்தை கூட பார்க்கிறது சிரமமா போச்சு. அப்பா வழி உறவுன்னா?
அவிகல்லாம் ஒன்னு கிராமத்துல இருப்பாய்ங்க -அல்லது டவுன்ல இருப்பாய்ங்க (இவிக சிட்டில) அல்லது சிட்டியிலயே வேற ஒரு ஏரியாவுல இருப்பாய்ங்க.

காலமாற்றத்தால இந்த ரெண்டு காரகமும் அவுட். இதன் விளைவாக – தன் உறவுகளை விட எட்ட வச்சுட்டு அப்பங்கரான அப்படி ஓடி ஓடி சம்பாதிச்சாதான் சேமிப்புன்னு ஒன்னை கண்ல பார்க்கலாம் (விக்கிற விலை வாசி அப்படி) ,முதலீடுன்னா வேற என்ன? ஹவுசிங் சைட் அல்லது வீடு .
இந்த வீடு கட்டறவிக போடற பொட்டை கணக்கை எல்லாம் நுங்கெடுத்து ஒரு பதிவு முக நூல்ல வலம் வருது .கண்ல சிக்கினா விடாதிங்க.
ஆனை அசைஞ்சு தின்னும் -வீடு அசையாம தின்னும் : இது பழமொழி . வீட்டை கட்டிப்பார் -கல்யாணம் பண்ணிப்பார் :இதுவும் பழமொழிதான். (கொய்யால ..செமர்த்தியா வாழ்ந்து பார்த்து எளுதி வச்சிருக்காய்ங்கப்பா )

எங்க ஊர்ல -அதுவும் கார்ப்பரேஷனாக்கிய பிறகு ஹவுஸ் டாக்ஸ் எல்லா எகிறிக்கிச்சு . பஸ் சார்ஜ் அம்மாத்தம் துட்டை டோல் கேட் கொடுத்து அழறாப்ல -வாடகை அம்மாத்தம் பணத்தை ஹவுஸ் டாக்ஸா அழனும்.

வங்கில கடன் வாங்கி கட்டறவன் ஓரளவு சேஃப்.ஏன்னா அவிக ரீ சேல் வேல்யூ இருக்கனுங்கறதுக்காவ (கடன் கட்டலின்னா ஜப்தி பண்ணி விக்கனும்ல?) இத்தனை ஃபீட் ரோட் இருக்கனும் /காம்பவுண்ட் இருக்கனும்னு கண்டிஷன்லாம் போடுவாய்ங்க.

அங்கே இங்கே பீராய்ஞ்சு கட்டறவன் பாடுதான் அய்யோ பாவம். தீப்பெட்டிய அடுக்கின கணக்கா கட்டித்தொலைச்சுட்டு வாடகைக்கும் விடமுடியாம -வளர்ந்துட்ட பசங்களை அங்கே வச்சும் வாழ முடியாம அவதிபடற குடும்பங்க ஆயிரம்.

செரி ஒழியட்டும் நம்ம சப்ஜெக்ட்டுக்கு வந்துருவம் . இந்த 9 ஆம் பாவ காரகத்வத்துல அப்பா,அப்பாவழி உறவு போச் ! முதலீடா? கவைக்குதவாத முதலீடு .
இல்லத்தரசிங்க முதலீடே வேற. கிரைண்டர்,ஃப்ரிட்ஜ்,வாஷிங் மெஷினுன்னு வாங்கி அடுக்கிருவாய்ங்க. அது வாரண்டி பீரியட் வரைகட்டின பசுவா இருக்கும்.பிறவு வேலை கொடுக்க ஆரம்பிச்சிரும்.கொய்யால ..அதுகளை ரிப்பேர் பண்ண ஆகற செலவும் புதுசு வாங்கற செலவும் ஈக்வலா இருக்குமா? ஒடனே இதை தூக்கி ஸ்டோர் ரூம்ல போட்டுட்டு புதுசு வாங்கிரவேண்டியதுதான்.

ஆக சேமிப்பு முதலீடாகி – அந்த முதலீடும் வீணா போயிருது. இந்த பாவ காரகத்வத்துல அடுத்து வர்ரது தூர‌பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்,தூர தேச தொடர்புகள். இந்த இன்டர்னெட் உபயத்துல பயணமே இல்லாம “நட்பும் -உறவும்”சாத்தியமாயிருது .

vikatan

மேலும் நடுத்தர ,மேல் தர நடுத்தர குடும்பங்கள்ள அமெரிக்காவுல செட்டில் ஆகறதுங்கறது எழுதப்படாத சட்டமாயிருச்சு .அப்பன் இதுக்காவ ட்ரை பண்ணி டொக்கு விழுந்து -பசங்களை உசுப்பிவிட்டுக்கிட்டிருப்பான். ஆக இந்த பாவம் அன்னியமோகத்தை அள்ளித்தருது . இவிக கண்ணுக்கு தெரியறதெல்லாம் எவனோ ஒரு பிள்ளை தான். ஒட்டகம் மேய்க்கிறவன் கதைல்லாம் இவிக கண்ணுக்கு தெரியவே தெரியாது .

இந்த ரூட்ல வாழ்ந்து – அந்த வாழ்க்கையோட “அர்த்தமற்ற தன்மை உறைச்சாலோ” அல்லது அந்த ரூட்டுல முக்கி முனகி முன்னேறிக்கிட்டிருந்தாலோ கோவில் ,குளம்,சேவை அமைப்புகள் இத்யாதில்லாம் கிராஸ் ஆயிருது .

இந்த பாவ காரகத்வத்துல வர்ர நீதி, நிர்வாகம்லாம் இவிக வாழ்க்கையில காணாம போக உட்கார்ந்த வாக்குல தின்னு தின்னு பிருஷ்டம் , தொடைல்லாம் ஒரே சைஸாயிருது .

வாரிசுகளை இஞ்சினீர் ஆக்கற/டாக்டர் ஆக்கற முயற்சியில பல்பு வாங்கினாலோ – ஃபைனான்ஸ் கம்பெனில துட்டை போட்டு மொட்டைய போட்டுக்கிட்டாலோ கோர்ட்டுக்கு அலையவேண்டியதாயிருது .

காலமாற்றம் இப்படியாக 9 ஆம் பாவ காரகத்வத்துல பலதுக்கும் வேட்டு வச்சுருச்சு . சில மேட்டர்ல லொங்க வச்சு நாக்கை தள்ள வைக்குது .
இந்த 9 ஆம் பாவ காரகத்வத்தை எப்படி “நிர்வாகம்” பண்றதுன்னு அடுத்த பதிவுல சொல்றேனே..

காலமாற்றம்-கிரகபலன் :8 ஆம் பாவம் (3)

planets

அண்ணே வணக்கம்ணே !

காலமாற்றம்-கிரக பலன் தொடர்ல எட்டாம் பாவத்தை பத்தி சொல்லோனம். ஏற்கெனவே கடந்த 2 அத்யாயங்கள்ள விரிவா சொல்லியிருக்கன்.

ஆனாலும் பாய்ண்ட் டு பாய்ண்ட் காலமாற்றம் எட்டாம் பாவ காரகத்வத்தை எப்படி மாத்தியிருக்குன்னு நாலு வரி சொல்லிர்ரன்.

1.வெல்ல முடியாத‌,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌கூடிய‌சத்ரு

ஒருத்தன் நமக்கு எதிரியாகனும்னா மொதல் ஸ்டெப் அவன் நமக்கு நண்பனாகனும். இன்னைக்கு அதுக்கெல்லாம் பெருசா வாய்ப்பே கிடையாது .

ஏற்கெனவே சொன்னாப்ல கிராமம் -டவுன் -சிட்டி -அப்ராட் இப்படி நகர்ந்துக்கிட்டே இருக்கிறதால நமக்கு மட்டுமில்லை நம்ம வாரிசுகளுக்கு கூட நண்பர்கள் கிடைக்கிறது துர்லபமாயிருச்சு.

இப்படி நகர விரும்பாத -நகர முடியாத சனத்துக்கு தான் இந்த சத்ராதிங்க தொல்லை. நம்ம நண்பர் ஒருத்தரு சந்திரகிரி ,புத்தூர்,பாகாலா,கடப்பா இப்படி வேலை பார்த்துக்கிட்டிருந்தவரை உசுரோட இருந்தாரு . அடிச்சு பிடிச்சு சொந்த ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக்கிட்டு வந்தாரு .

பிதுரார்ஜிதமா வந்த வீட்டை பார்த்து பார்த்து கட்டினாரு .பக்கத்து வீடு சொந்த அக்காவோடது .அவிக புருசன் லாலாபார்ட்டி .இவரோட மனைவிக்கு அந்தாள பார்த்தாலே செம கடுப்பு .அவனும் சும்மா இருக்க மாட்டான். மேலும் இவரோட மனைவிக்கு அம்மா வீட்டுக்கு கிட்டே வாழனும்னு ஆசை போல. சட்டிய தூக்கிக்கிட்டு வாடகை வீட்டுக்கு வந்தாய்ங்க.

நண்பரோட ராசி ரிஷபராசி .ஒலகத்துல மாற்றத்தை எதிர்க்கிற மொத பார்ட்டி இவிக தான். இதுவே மன நோய் கணக்கா அவரோட ஷுகர் லெவல்ஸை எகிற வச்சு ஹார்ட் அட்டாக்ல போய் சேர்ந்துட்டாரு .

என்னை கேட்டா சொந்த ஊர்ல -சொந்த வீட்ல இல்லாம இருக்கிறதே பல தோஷங்களுக்கு பரிகாரமாயிருது .ஆக யாரு ஸ்திரமா சொந்த ஊர்ல -சொந்த வீட்ல வாழறாய்ங்களோ , யாரு ஒரே ஊர்ல வேலை/வியாபாரம் பார்க்கிறாய்ங்களோ அவிகளுக்கு நட்பு -உறவு சாஸ்தியாகும்.அதுல எவனாச்சும் முட்டிக்கிட்டா அவன் தான் எதிரி .

இன்னைக்கு யாரும் -யாரையும் நண்பனா பார்க்கிறதில்லை -ஜஸ்ட் அறிமுகங்கள் தான். இந்த நிலையில இருக்கிறதால இந்த பாய்ண்ட் இன்னைய தேதிக்கு ஒர்க் அவுட் ஆகாது .

2.தீராத‌ரோகம்:
இதை பத்தியும் சொல்லியிருக்கன். தீராத ரோகம்னா பத்துக்குள்ள அடங்கிரும். மத்த சில்லறை நோய்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்து விழுங்கி இம்யூன் செட் அப் நாஸ்தியாகி மேற்படி டாப் 10 நோய்களுக்கு இலக்காகறதுதான் நடக்குதே தவிர தீராத நோய்லாம் ஏறக்குறைய இல்லேன்னுரலாம்.

ஆனால் காலமாற்றம் – நகரமயமாக்கம் -கமர்ஷியலைசேஷன் – மைக்ரோ ஃபேமிலி செட் அப் – வண்டி வாகனம்- சமையல் கட்ல எலக்ட் ரானிக் உபகரணங்கள்,புதிய உணவு பழக்கங்கள் இதெல்லாம் புது புது நோய்களை கொடுத்திருக்கிறதை மறுக்க முடியாது .ஆனால் இவற்றை தீராத நோய்கள்னு சொல்லிரமுடியாது .சாதா நோய் எல்லாம் ஆறாம் பாவம் .சோதா நோய்கள் தான் எட்டாம் பாவம் .நோட் திஸ் பாய்ண்ட்.

சாதா நோய்கள் கச்சா முச்சான்னு இருக்கிறதாலதான் ஆறாம் பாவத்தோட வேக்குவம் குறைஞ்சு சனம் ஈசியா கடன் வாங்க ஆரம்பிச்சுர்ராய்ங்க.

3.தீர்க்கமுடியாத‌ கடன்

ஏதோ சாதா நோய்களால அவதிபடறானே ஒழியட்டும்னு ஆறாம்பாவம் கொஞ்சம் சைடு கொடுக்குது .இதுல கடன் பழக்கமா போயிருது.சகட்டு மேனிக்கு வாங்க ஆரம்பிச்சுராய்ங்க.அது ஒரு ஸ்டேஜ்ல தீராக்கடன் ஆயிருது . நம்ம பவர் ஸ்டார் கடன் வாங்கி தரேன்னு டக்கால்ட்டி வேலை பண்ணிக்கிட்டிருந்தப்போ ஏமாந்ததெல்லாம் யாரு? தெரியும்ல .குப்பனோ சுப்பனோ இல்லை . பெரிய பெரிய சவுண்டு பார்ட்டிங்க தான்.

நம்ம ஜாதகத்துல ரோகாதிபதி உச்சம்ங்கறதால கடன் மேட்டர்ல பி.ஹெச்.டி பண்ணாத குறைதான். நெல்லவேளையா அவரே பாக்யாதிபதியும் கூட என்பதால் அந்த அனுபவங்களே ஒரு சொத்தாயிருச்சு .

உயிர்களுக்கிடையிலான பி(இ)ணைப்பை உணர்ந்தவன் -தனிமையை உணர்வதில்லை -அதை போக்க செக்ஸில் விழுவதில்லை -செக்ஸ் கிடைக்கலியேன்னு பணத்து பின்னாடி ஓடறதில்லை .உயிர்களுக்கிடையிலான பி(இ)ணைப்பை உணராதவன் பணத்து பின்னாடி ஓடறான். அது ஏதோ ஆக்சிஜன் சிலிண்டர் மாதிரி ஃபீல் பண்றான். அவனோட பதைப்பு யோசிக்க விடறதில்லை.கடன்ல விழறான்.

இன்னைக்கு சின்ன குழந்தைக்கு கூட ஈகோ இருக்கு -விருப்பு வெறுப்பு இருக்கு . இது மேலும் அதை தனிமைப்படுத்துது .விஷ சுழலில் சிக்க வைக்குது .ஆகவே எட்டாம் பாவம் பெரும்பாலும் தீராக்கடனையே தருது .

இந்த தீராக்கடனுக்கு மேலும் ஒரு காரணம் வீடு . சொந்த வீடுங்கறதே சக உயிர்களின் பால் நம்பிக்கை இன்மையே. பொருளாதார ரீதியா பார்த்தா டெவலப்பிங் ஏரியாவுல வீடு கட்டனும்.ஆனால் அவனவன் மூத்திர சந்துல கூட சகட்டுமேனிக்கு கடன் வாங்கி வீட்டை கட்டி “டம்ப்” பண்ணி தீராகடன்ல மாட்டிக்கிறான்.

,சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல், தலைமறைவாதல் ,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்,பிரிவுகள்,வீண்பழி சுமத்தல்.

4.ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்-தலைமறைவாதல்:

தீராக்கடன்ல சிக்கினவன் ஒன்னு தற்கொலை பண்ணனும் – அல்லது மஞ்சள் கடிதாசு கொடுக்கனும். ரென்டுமே எட்டாம் பாவ காரகம் தான்.

5.சிறைப் ப‌டுத‌ல்,அடிமையாத‌ல்:
எம்ப்ளாயர் அரசோ/தனியாரோ ஒழுங்கு மருவாதியா அவிக கிட்டே சிறைப்பட்டு -அடிமையா கிடந்து ,வரவுக்கும் செலவுக்கும் இடையில அடைப்பட்டு கிடந்தா மொதல்ல சொன்ன மஞ்ச கடிதாசு இத்யாதி இழவெல்லாம் கிராஸ் ஆகாது .

ஆராய்ச்சி -ஒப்பீடுல்லாம் செரிண்ணே ..ஆயுள் கூடனும்னா என்ன பண்ணனும் சொல்லுங்கன்னு கேப்பிக.? கூடவே எட்டாம் பாவ காரகங்களான //வெல்ல முடியாத‌,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌கூடிய‌சத்ரு, தீராத‌ரோகம், தீர்க்கமுடியாத‌ கடன்,சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல், தலைமறைவாதல் ,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்,பிரிவுகள்,வீண்பழி சுமத்தல்// இத்யாதிலருந்து எப்படி தப்பறதுன்னு கேப்பிக.

நம்ம ஸ்பெசாலிட்டியே பரிகாரம் தானே..அடுத்த சாப்டர்ல பரிகாரம் கொடுத்துர்ர்ரன். ஓகேவா உடுங்க ஜூட்டு

காலமாற்றம்-கிரக பலன் ( பாவம்:8 -பகுதி :2)

Lion

அண்ணே வணக்கம்ணே !
இடையில லால் கிதாப் பரிகாரங்கள் பற்றிய நம்ம கருத்துக்களை மினி தொடரா கொடுக்க ஆரம்பிச்சம்.ஆனால் அதைவிட கால மாற்றம் -கிரக பலனுக்கு தான் செம ரெஸ்பான்ஸு.

முன்னொரு காலத்துல ரஜினிய நாம கிளிச்சு போஸ்ட் போட்டப்போ ஒரு பக்கி ஆளில்லாத கடையில ஆருக்கு டீ ஆத்தறேன்னு கேட்டுருச்சு.

அன்னைலருந்து ஒரு ஓரமா ஹிட்ஸ்,ரெஸ்பான்சையும் கவனிச்சுட்டே பதிவு எழுதறத வழக்கமா வச்சிருக்கம்.கால மாற்றத்தால எட்டாம் பாவ பலன் எப்படி மாறியிருக்குன்னு பார்த்துக்கிட்டு வர்ரம் . எட்டாம் பாவ காரகங்கள் என்னென்னன்னு ஒரு பட்டியல் போட்டு ஒவ்வொரு அம்சமும் கால மாற்றத்தால எப்படி மாறியிருக்குன்னு பார்க்கிறோம்.

பட்டியல்:
வெல்ல முடியாத‌,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌கூடிய‌சத்ரு, தீராத‌ரோகம், தீர்க்கமுடியாத‌ கடன்,சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல், தலைமறைவாதல் ,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்,பிரிவுகள்,வீண்பழி சுமத்தல்.

மேற்படி பட்டியல்ல இனி பார்க்கவேண்டியது மேஜ‌ர் விப‌த்து, மேஜர் ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்,பிரிவுகள்,வீண்பழி சுமத்தல்.சிறைப் ப‌டுத‌ல். மேஜ‌ர் விப‌த்து, மேஜர் ஆப்ப‌ரேஷன்லாம் இப்ப சகஜமாயிருச்சு.

சனத்தொகை பெருத்து போனதால நெம்பர் சாஸ்தியாயிருச்சு /மீடியா வளர்ச்சியால எல்லாமே வெளிச்சத்துக்கு வர்ரதால பூதாகரமா தெரியுதுன்னு அசால்டா சொல்லிர முடியாது.

மேஜர் ஆப்ப‌ரேஷனாச்சும் சுய உந்துதல் இல்லாம -புற காரணிகளால் நடக்குதுன்னு சொல்லிரலாம். புற காரணிகள்னா ஆயிரத்தெட்டு இருக்கு .
ஆனால் இந்த மேஜர் விபத்துக்கள்? அப்படி சொல்ல முடியல. அவனவன் சாகனும்னே ரோட்டுக்கு வர்ரானோன்னு ஒரு ஃபீல் ஆகுது.
மன்சங்களோட பல்வேறு செயல்பாடுகளுக்கான உந்துதலை ரெண்டு பிரிவுக்குள்ள அடக்கிரலாமாம் (சைக்காலஜி) ஒன்னு சாகறது அடுத்தது சாகடிக்கிறது . (இது ரெண்டுமே செக்ஸுல பாசிபிள்ங்கறதாலதான் மன்சனுக்கு செக்ஸ் மேல் இவ்ளோ நாட்டம்- செக்ஸ் ஏறக்குறைய இந்த சமூகத்தால் தடை செய்யப்பட்டிருக்கிறதால மனித அடிமனம் அதற்கு மாற்றாக தேர்வு செய்து கொண்டு லொங்கு லொங்குன்னு அலையறது பணத்துக்காவ)

சைக்காலஜி இங்கிருந்துதான் துவங்குது .ஆனால் நாம கொஞ்சம் பின்னோக்கி போயி பார்த்து ஒரு தியரிய கண்டுபிடிச்சு வச்சிருக்கம்.
உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் மூலம் ஒரு ஒரு செல் அங்க ஜீவி (அமீபா) அதுதான் செல் காப்பியிங் எர்ரார் காரணமா புது புது உயிரா பரிணாமமடைந்தது. ஓருயிர் ஓருடலா இருந்தப்போ காலம்/தூரம்/பாதுகாப்பின்மை/கம்யூனிகேஷன் ட்ரபிள்/பயம்/கவலை ஏதும் கிடையாது.
இரண்டாவதா இன்னொரு உயிர் இருந்தாதான் மேற்படி பிரச்சினைகள். ஓருயிரா இருந்தப்ப அனுபவிச்ச நிம்மதி பற்றிய செய்தியின் பதிவு செல் காப்பியிங் மூலமா கடைசி உயிர் வரை வந்திருக்கு .

இதனால் அனைத்து உயிர்களும்மீண்டும் இணைய துடிக்கின்றன. இந்த இணைப்புக்கு தத்தமது உடல்கள் தான் தடை என்று பிரமிக்கின்றன. உடலை உதிர்த்து தள்ள துடிக்கின்றன. இதனால் தான் மனிதர்களின் எல்லா செயல்களுக்கும் தூண்டுதலாக இரண்டே உணர்வுகள் உள்ளன. ஒன்று கொலை எண்ணம். அடுத்தது தற்கொலை எண்ணம்.

நாம உடலால பிரிஞ்சிருக்கம் . இல்லேங்கல.ஆனால் ஏதோ ஒரு அமானுஷ தளத்துல இணைஞ்சு தான் இருக்கம். ஆனால் அந்த இணைப்பை நம்ம ஈகோ மறைச்சுருது .

லேண்ட்லைன்ல இருந்து லேட்டஸ்ட் ஐ ஃபோன் வரை மேக் வேற/ப்ராண்ட் வேற ஆனால் எல்லா இழவெடுத்த ஃபோன்லயும் சார் உங்களுக்கு ஹவுசிங் லோன் வேணுமான்னு கால் வருதுல்ல? இதுவும் அப்படித்தான்.

நம்ம ஃபோன் என்னதான் லேட்டஸ்ட் மேக்கா இருந்தாலும் ஃப்ளைட் மோட்ல வச்சுக்கிட்டா கால் ரீச் ஆகுமா?

பிரிஞ்சிருக்கம் -இந்த படைப்புல நாம தனிங்கற ஃபீலை கொடுக்கிறது நம்ம ஈகோ. மறு இணைப்புக்கு தடையா இருக்கிறது இந்த உடல்ங்கறது மடமை .
ஒரு காலத்துல ஒருத்தன் ஒரு குக்கிராமத்துல பிறந்து தொலைச்சா அங்கயே வாழ்ந்து அங்கயே முடிஞ்சுருவான்.கு.பட்சம் அந்த குக்கிராமத்துலயாவது மனிதர்கள் பிணைக்கப்பட்டிருந்தாங்க. இன்னைக்கு ? கிராமத்துல உள்ளவன் டவுனுக்கு வந்துரனும்னு பார்க்கிறான் ,டவுன்ல உள்ளவன் சிட்டிக்கு வந்துரனும்னு பார்க்கிறான் ,சிட்டியில உள்ளவன் ஃபாரின் போகனும்னு துடிக்கிறான்.

எதுக்கு? காசு-பணம் -துட்டு -மணி மணி .

இந்த இழவெடுத்த பணத்தை வச்சு என்ன செய்றது? அது ஏதோ சேட்டிலைட் கணக்கா தன்னை இந்த உலகத்தின் அனைத்து உயிர்களோடும் லிங்க் பண்ணிரும். கு.பட்சம் தன் இருப்பை வெளிச்சம் போடும்.அந்த வெளிச்சத்தை கண்டு எல்லா உயிரும் -கு.பட்சம் எல்லா உறவும் தன்னை தேடி வந்துரும்னு நம்பறான்.

கொய்யால .. நமக்குள்ள பிரிவே இல்லை . இணைப்பு இருக்கு. இணைஞ்சுதான் இருக்கம்.நம்ம ஈகோதான் அதை லேசா மறைக்குது.
ஆனால் மனித மனம் தன் உடலை தடையா நினைக்குது .அதை உதிர்க்க ஹைஸ்பீட்ல ட்ரைவ் பண்ண சொல்லுது – உங்களை/உங்களுக்கு எதிரே வரும் வாகன ஓட்டியை .

மனிதனோட ஈகோ எந்தளவுக்கு வலுக்குதோ அந்தளவுக்கு தனிமையை உணர்வான். உறவுகள் அவனுக்கு உறைக்கவே உறைக்காது. தனிமையை தவிர்க்க செக்ஸு,செக்ஸுக்கு மாற்றா பணம்னு அலைவான். பணம் எதுக்குடான்னா உறவுகளை புதுப்பிக்க/அல்லது புது உறவுகளை ஸ்தாபிக்க.
ஆக இன்னய தேதிக்கு ஈகோ விஸ்வரூபம் எடுத்துருச்சு . உயிர்களுக்கிடையிலான பிணைப்பை மறந்து /துறந்து எல்லா பக்கியும் தனிமையில தவிக்குது .மனிதனோட ஆயுள் கூட மருத்துவ கண்டுபிடிப்புகள் காரணம்னு சொல்றாய்ங்க.

ஆனால் ஒவ்வொரு மருந்து ,மாயத்தோட பின்னணிய தெரிஞ்சுக்கிட்டா டர்ராயிருவிங்க. அட இந்த ஆன்டிபயாடிக்ஸையே எடுத்துக்கங்க டோட்டலா நம்ம இம்யூன் செட்டப்பையே ஃபணால் ஆக்கிருச்சுல்ல?

இன்றைய மனிதனோட ஆயுளை கூட்டறது இந்த தனிமைதான்.மேலும் ஒவ்வொரு மனிதனும் அடிமைப்பட்டுத்தான் கிடக்கான். நான் தலை மேல தூக்கி வச்சு கொண்டாடற விவசாயி கூட அடிமைதான்.பூச்சி மருந்துக்கு ,செயற்கை உரத்துக்கு ,இயந்திரங்களுக்கு, அரசு தர்ர மானியத்துக்கு , கிராமத்துலயே வாழ்ந்தாலும் நகர வாழ்வின் சுகபோகங்களுக்கு அவன் அடிமையாத்தான் இருக்கான். பெண்களை பத்தி சொல்லவே தேவையில்லை.
ஆக நவீன மனிதர்களின் ஆயுளை கூட்டுவது தனிமை-அடிமைத்தனம். ஜாதக சக்கரத்துல எட்டுக்கும் -ரெண்டுக்கும் உள்ள தொடர்பை ஏற்கெனவே சொன்னதா ஞா.

இருந்தாலும் நியூ அட்மிஷன்ஸுக்காக சொல்றேன். 2 =வாய் , 8 =இன உறுப்பு .எல்லா கிரகங்களுக்கும் 7 ஆம் பார்வை உண்டு. 2 ல் உள்ள கிரகம் எட்டை பார்க்கும். எட்டில் உள்ள கிரகம் இரண்டை பார்க்கும்.

13-14 வயசுல செக்ஸுவலா மெச்சூர் ஆயிர்ர பையனுக்கு ஆத்தரைஸ்ட் செக்ஸ் எப்போ கிடைக்குது? 30-35 வயசுல தான் கிடைக்குது .அதுவரைக்கும் அவன் இன உறுப்பு என்ன ஸ்லீப் மோட்லயா இருக்கும்? ஊஹூம். ஓவர் டைம் பார்த்து பார்த்து -தன் கையே தனக்குதவின்னு -செமர்த்தியா உழைச்சு ஓய்ஞ்சு போயிருக்கும்.

மேலும் உள்ளார்ந்த தூண்டுதலின் காரணமா அவன் தன் வாய்க்கு வேலை கொடுக்க ஆரம்பிச்சிருப்பான் (ஓரல் செக்ஸ் இல்லிங்கோ -வெட்டி பேச்சு / நொறுக்கு தீனி )

மனித உடலின் முக்கியமான இரண்டு மண்டலங்கள் இனப்பெருக்க மண்டலம் -ஜீரண மண்டலம். ஒன்னு வேலை செய்யும் போது அடுத்தது வேலை செய்யாது . மீறி செய்யனும்னு மோட்டிவேட் பண்ணா முன் சொன்னது தன் வேலைய திராட்டுல விட்டுரும்.

மன்சன் லவ்வு,செக்ஸுல தோத்தா அடுத்து அவனோட புகல் வாய் தான். சோமாலியா கதைகள் ஒரு பக்கம் உலகத்தை அச்சுறுத்தினாலும் மன்சங்களுக்கு பட்டினியால வர்ர நோய்களை விட அமித தீனியால வர்ர நோய்கள் தான் அதிகம்னு சொல்றாய்ங்க. நோய் வர்ர நிலை பிறவு.ஆனால் அதுக்கு மிந்தி அந்த தீனி பாடியோட கடைக்கால ஸ்ட்ராங் ஆக்கிருதுல்ல. இதுவும் நவீன மனிதனின் ஆயுள் நீட்டிப்புக்கு( ஆரோக்கியத்துக்கு அல்ல) காரணம் .
தொடர்ந்து பேசுவம்..

காலமாற்றமும் -கிரகபலனும் : 8 ஆம் பாவம் (மரணம்)

DSCN0191

அண்ணே வணக்கம்ணே !
காலமாற்றமும் -கிரகபலனும்ங்கற தலைப்புல காலம் மாறினதால கிரகங்களின் பலன் எப்படில்லாம் மாறியிருக்குன்னு சொல்லிட்டு வரேன்.(பாவ வாரியா) ஒவ்வொரு பாவத்துக்கும் சில காரகங்கள் உண்டு. ஒரு பாவம் கெடும்போது அதன் காரகங்களில் பாதிப்பு ஏற்படும். ஒரு பாவம் பலம் பெறும் போது அந்த பாவ காரகங்களில் நல்ல பலன் ஏற்படும். இதான் ஜோதிட விதி.

ஜோதிட நூல்கள் பலவும் ராசாகாலத்துல எழுதப்பட்டது தான். அந்த காலத்து அரசியல் சூழல் ,பொருளாதார சூழல் , அன்றைய சமூக நிலை (வேறென்ன வர்ணாசிரமம்/தீண்டாமை /பெண்ணடிமை -நில பிரபுத்துவம்) இத்யாதியை அடிப்படையா வச்சு எழுதப்பட்டவையே.

நம்மாளுங்க அந்த நூல்களையே பிடிச்சு தொங்கிட்டு இருக்கிறதால – இன்றைய அரசியல்,பொருளாதார,சமூக சூழல்களை கணக்கில் எடுக்காம அதே பலன் களை சொல்லிட்டு போறதால பலதும் பல்பு வாங்கிருது.

உதாரணமா நான் படிச்ச ஒரு புஸ்தவத்துலயே ஒரு கிரக ஸ்திதிய சொல்லி இந்த கிரகஸ்திதியில பிறந்தவன் உத்தம குலஸ்தனா இருந்தா அரசனாவான் – இல்லைன்னா அரசனுக்கு சமமான செல்வம் பெற்று வாழ்வான்னு சொல்லியிருந்தது .

பொதுவிதிப்படி ராஜ கிரகங்கள்னா சூ,செவ்,குரு தான்.சூரியன்,செவ் =சத்திரியர்கள், குரு =பிராமணர்கள். இந்த 3 கிரகங்கள் ஒரு ஜாதகத்துல நெல்ல பொசிஷன்ல இருந்தா ஜாதகன் அரசனாகனும். மேற்படி 2 க்ரூப் மட்டும் ஓட்டுப்போட்டுட்டா ஒருத்தன் அரசனாயிரமுடியுமா? நெவர்.
இப்படி பலதும் மாறிப்போச்சுங்ணா.

இந்த அடிப்படையிலதான் காலம் -கால மாற்றம் கிரகங்களோட பிரபாவத்தை எப்படி மாத்தியிருக்குன்னு சொல்லிட்டு வரேன். போற போக்குல இந்த நவீன யுகத்துல -காலமாற்றத்தை கணக்கில் கொண்டு – கிரகங்கள் தரும் தீய பலனை எப்படி தவிர்ப்பது – நல்ல பலனை எப்படி அதிகரிச்சுக்கறதுங்கற மேட்டரையும் சொல்லிட்டிருக்கன்.

மொத 7 பாவங்களோட கதைய பைசல் பண்ணியாச்சு. இன்னைக்கு அஷ்டம பாவம். மொதல்ல அஷ்டம பாவ காரகங்களை பார்க்கலாமா?
வெல்ல முடியாத‌,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌கூடிய‌சத்ரு, தீராத‌ரோகம், தீர்க்கமுடியாத‌ கடன்,சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல், தலைமறைவாதல் ,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்,பிரிவுகள்,வீண்பழி சுமத்தல்.

நாம சின்ன வயசா இருந்தப்போ ரவுடிங்கல்லாம் ஒரு ரவுண்டு போட்டுக்கிட்டு (வட்டம் பாஸ்)ஒன்டிக்கு ஒன்டி அடிச்சுக்குவாய்ங்கன்னு கதை கதையா கேட்டிருக்கன். ஒரு எஸ்.ஐ – ஆஃப்டர் ஆல் பிக் பாக்கெட்டோடவும் கூட ஒன்டிக்கு ஒன்டி நின்னிருக்காரு .(அந்த பிக் பாக்கெட்டோட பேரு எலிக்குஞ்சு -அவன் கதைய படமா எடுத்தா ஹீரோ வேற யாரு தனுசுதேன்)

கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்ச பிறவு எதிராளி மேல பாம் போட்டுட்டு -அவன் நிலை குலைய -கும்பலா கிட்டக்க போயி தாறுமாறா வெட்டிட்டு ஓடிடறது ட்ரெண்டாச்சு.

பிறவு என்னாச்சுன்னா ரவுடிங்க -ரவுடிங்க மோதிக்கிறதையே விட்டுட்டாய்ங்க. இந்த ஏரியா நாய் அந்த ஏரியாவுக்கு போகாதுங்கறாப்ல ஏரியா பிரிச்சுக்கிட்டு -தன்னோட ஏரியாவுல உள்ள வாய் செத்த சனத்தை வாய்ல போட்டுக்கிறது ட்ரென்டாச்சு.

பிறவு பிறவு அதுவும் போயி ஜஸ்ட் போலீஸ் டிப்பார்ட்மென்டை கையில போட்டுக்கிட்டு குடுமிகளை லாடம் வைக்கிறது ட்ரென்டாயிருச்சு .

வெல்ல முடியாத‌,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌கூடிய‌சத்ருக்கள் இருக்கவே செய்றாய்ங்க. ஆனால் 99.99 சதவீதம் சனம் காசு ,பணம் ,சொத்து ,நிலம் , பொஞ்சாதி ,பெத்த பொண்ணு உட்பட சகலத்தையும் “விட்டுக்கொடுத்து” அஜீஸ் பண்ணி வாழ்ந்துர்ராய்ங்க.

இப்படி வாழமுடியாத சனம் 00.01% தான் கொலைக்கு ஆளாயிர்ராய்ங்க.

அடுத்தது தீராத‌ரோகம். கணிதமேதை ராமானுஜம் ஆஃப்டர் ஆல் டிபிக்கு பலியாயிட்டாரு .இன்னைக்கு? கவுர்மென்டு ஆஸ்பத்திரியில இலவசமாவே மருந்து மாயம் கொடுத்து கியூர் பண்ணிர்ராய்ங்க. சீசனலா இந்த டெங்க்யூ ,சிக்கன் குன்யா மாதிரி வியாதிங்க கிட்டேவிக்கெட்ஸ் டவுன் ஆக காரணம் அரசோட அலட்சிய போக்கு -சனத்துக்கு போதிய விழிப்புணர்வு ஊட்டாதது தான். இல்லின்னா இதுவும் கிடையாது .

காலமாற்றம் கொடுத்திருக்கிற பெரிய சிக்கல் என்னன்னா பொல்யூஷன். பஞ்ச பூதங்களிலும் பொல்யூஷன். எல்லாமே விசம். தண்ணி,காத்து ,பயிர், பச்சை ,ஏன் தாய் பால் விந்துவில் கூட விசமாம். ( ஹேர் டை போட்ட அரைமணி நேரத்துல சிறு நீர்,விந்து ,தாய்ப்பால்ல கூட டை கன்டென்ட் காண கிடைக்குமாம் -படிச்சேங்க)

சின்ன சின்ன நோய் எல்லாம் ஜுஜுபி . ஆன்டிபயாடிக்ஸ் கொடுத்து ஒரே அமுக்கா அமுக்கிரலாம். என்ன.. ஒரு இமிசைன்னா இம்யூனிட்டி செட் அப்பே கோவிந்தா ஆயிரும். இன்னைய தேதிக்கு தீராத நோய்னா எய்ட்ஸ் உட்பட மேல ஒரு 9 ஐட்டம் இருக்கலாம் தட்ஸால்.

செரி ..8 ஆம் பாவ காரகங்கள்ள இந்த ரெண்டும் ப்ளாக் ஆனா மத்தபடி அந்த பாவ பலன் எப்படி வெடிக்கும்னு பார்க்கலாம்.

இன்றைய காலமாற்றங்களால தீர்க்கமுடியாத‌ கடன் என்ற ரூபத்துல இந்த பாவ பலன் வெடிக்குது. அந்த காலத்துல கடன்னாலே சனத்துக்கு பயம்.ஆனமுதலில் முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டு போனதிசை ..எல்லோர்க்கும் கள்வனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு..ன்னு வாழ்ந்தாய்ங்க.

இன்னைக்கு விஜய் மல்லய்யாவுல இருந்து எங்க பக்கத்து சென்ட் ரல் மினிஸ்டர் சுஜனா சவுதரியில இருந்து கடன் வாங்கறதையே தொழிலா வச்சுக்கிட்டு டக்கால்ட்டி வேலைல்லாம் பண்ணிக்கிட்டே இருக்காய்ங்க. ஒலக மகா பணக்காரன்ல இருந்து அன்னாடங்காய்ச்சி வரை கடன் கடன் .

ஆக எட்டாம் பாவம் காலமாற்றம் காரணமா தீரா கடனையும் – ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,கடன் கொடுத்தவனுக்கு அடிமையாத‌ல், கை மீறிப்போனா தலைமறைவாதல் இப்படி தான் வேலை செய்யுது .

செரி பதிவு ரெம்ப நீளமாயிரும் போல இருக்கு .அடுத்த சாப்டர்ல கன்டின்யூ பண்றேன்.உடுங்க ஜூட்டு .

காலமாற்றம் – கிரகபலன் :(7 ஆம் பாவம் :பகுதி 4)

JF

அண்ணே வணக்கம்ணே !
காலம் மாறிக்கிட்டே வருது . காலசக்கரம் ஓட ஓட ஆண் -பெண் இருபாலாருடைய வாழ்க்கை நிலையும் மாறிக்கிட்டே வந்துருச்சு . கணவன் -மனைவி மேல அந்த காலத்துலயும் நவகிரகங்களுடைய இம்பாக்ட் இருந்திருக்கும். ஆனாலும் இந்த காலம் போல சந்தி சிரிக்கலியே? ஏன் ? அப்படி என்னதான் மாறிப்போச்சு? இதுக்கு என்னதான் தீர்வு?

வாங்க ஜிந்திப்பம்.

இந்த புருசன் பொஞ்சாதி மேட்டர்ல சூரியன் முதலா சுக்கிரன் ஈறாக என்னென்ன கிரகம் எப்படி வேலை கொடுக்கும்னு பொத்தாம் பொதுவா சொல்லிட்டே போயிரலாம். ஆனால் இந்த தொடரோட தலைப்பு ஜஸ்டிஃபை ஆகாது (காலமாற்றம் – கிரகபலன்) ஆகவே ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் போல -புருசன் பொஞ்சாதிக்கிடையில் பிரச்சினைக்கு காரணம் சூரியன்னா அது அந்த காலத்துல என்ன செய்திருக்கும்? இந்த காலத்துல என்ன செய்யுதுன்னு பார்ப்பம். அடுத்தடுத்த கிரகங்க மேட்டர்ல ஜஸ்ட் பிரச்சினை-பரிகாரம்னு சல்லீசா போயிரலாம் .

புருசன் பொஞ்சாதி மத்தியில ஈகோ மோதல்கள் , அப்பன் மாரோட இன்ஃப்ளுயன்ஸ் ஓவரா இருக்கிறது . ராத்திரி பூரா தூங்காம கண்டதையும் உருட்டிக்கிட்டிருந்து சூரியன் உச்சிக்கு வர்ர வரை தூங்கறது ,ஒத்தை தலைவலி, கான்சிட்டிபேஷன்னு அவதிபடறது . இந்த எரிச்சல்ல சிடு சிடுப்பு,படபடப்பு.ஓவர் கான்ஃபிடன்ஸ், புகழ்ச்சிக்கு மயங்கி குண்டக்க மண்டக்க செய்துட்டு மாட்டி முழிக்கிறது , எதிராளிய கொஞ்சம் கூட ரிலாக்ஸ் ஆக விடாம சதா முடுக்கிக்கிட்டே இருக்கிறது ,ஊர்வேலைன்னா ஓடியோடி செய்யறது ,வீட்டு வேலைன்னா பம்மறது,எப்பப்பாரு லாட்ஜு வைத்தியர் மாதிரி ஜர்னியிலயே இருக்கிறது. இதெல்லாம் சூரியனால வரக்கூடிய பிரச்சினைகள்.

இந்த பிரச்சினைகள் அந்த காலத்துல பெருசா பாதிச்சிருக்காது .ஏன்னா?

1.ஈகோ மோதல்கள்
கூட்டுக்குடும்பம்ங்கறதால ஆரோ ஒருத்தரு தான் கேப்டன்.மத்தவிகல்லாம் ப்ளேயர்ஸ் தான். ப்ளேயர்ஸை பொருத்தவரை ஒபே பண்ணியே ஆகனும். இல்லின்னா புவ்வா கிடைக்காது . இன்னைக்கு மாதிரி புரட்சில்லாம் பண்ண முடியாது . கேப்டனா இருக்கிற ஆளுக்கு சூரிய பிரச்சினை இருந்தாலும் அது ஒரே ஆள போட்டு காய்ச்சாம (பொஞ்சாதி) சகலருக்கும் டிவைட் ஆயிரும்.

2.அப்பன் மாரோட இன்ஃப்ளுயன்ஸ் ஓவரா இருக்கிறது
அந்த காலத்துல இது இல்லின்னா தான் பிரச்சினை . இவனுக்கு அம்பது வயசு ஆயிட்டாலும் உங்க அப்பாவை ஒரு பேச்சு கேட்டுருங்கன்னு பொஞ்சாதியே சொல்லிருவா.

3.ராத்திரி பூரா தூங்காம கண்டதையும் உருட்டிக்கிட்டிருந்து சூரியன் உச்சிக்கு வர்ர வரை தூங்கறது ,ஒத்தை தலைவலி, கான்சிட்டிபேஷன்னு அவதிபடறது .
ராத்திரி தூங்கினமோ இல்லையோ “வைகறை துயிலெழுந்தே” ஆகனும். எந்திரிச்ச நிமிட்லருந்து டங்குவார் அந்துரும். போது சாயறதுக்குள்ளே கண்ண சுழட்டி தூக்கம் வந்தே தீரும். ஆகவே பிற பிரச்சினைகளும் காலப்போக்குல ரெக்டிஃபை ஆயிரும். இது எப்படி ஒர்க் அவுட் ஆகுதுன்னா அந்த காலத்துல விவசாயம் ஒன்னுதேன் பிரதான தொழில். ஓப்பன் ஏர்ல சன் லைட்லயே உழைக்கிறதால சூரிய தோஷம் பரிகாரம் ஆயிருதுங்கோ .

4.இந்த எரிச்சல்ல சிடு சிடுப்பு,படபடப்பு
கூட்டுக்குடும்பத்துல இதெல்லாம் வேலைக்காகாது . “என்னப்பா அங்கே சத்தம்”னு அப்பாவோ அண்ணனோ ஒரு குரல் கொடுத்தா “ச்சும்மா பேசிக்கிட்டிருந்தம்பா”ங்க வேண்டியதுதான்.

5.ஓவர் கான்ஃபிடன்ஸ்
அந்த காலத்து லைஃப் சின்ன வட்டத்துக்குள்ள ஓடிக்கிட்டிருந்தது . நாலு பேர் மின்னே கவுரதையா வாழனுங்கற ஃபீல். ஆகவே கெட்டுப்போன சூரியன் என்னதான் ஓவர் கான்ஃபிடன்ஸ் கொடுத்தாலும் டிஃபென்ஸே ப்ளே பண்ணிக்கிட்டிருக்க வேண்டியதுதான். அகல கால் வைக்கிறதுக்கெல்லாம் தில்லு வராது .

6.புகழ்ச்சிக்கு மயங்கி குண்டக்க மண்டக்க செய்துட்டு மாட்டி முழிக்கிறது
புகழ்ச்சிங்கறது வேலை வெட்டி இல்லாதவனோட ஒரே ஆயுதம்.அந்த காலத்துல இந்த ஆயுதத்தை ஜஸ்ட் அவா மட்டும் தேன் யூஸ் பண்ணியிருப்பாய்ங்க. அதுவும் வருசத்துக்கு ஒரு தரமோ ரெண்டு தரமோ (திருவிழா/திதி) .

7.எதிராளிய கொஞ்சம் கூட ரிலாக்ஸ் ஆக விடாம சதா முடுக்கிக்கிட்டே இருக்கிறது
கூட்டுக்குடும்பத்துல உறுப்பினர் எண்ணிக்கை அதிகம்ங்கறதால கிராமமே ஒரு குடும்பம் போல வாழ்ந்த காரணத்தால இந்த ஃபீச்சர் டிவைட் ஆயிருது . ஆரும் பெருசா இர்ரிட்டேட் ஆகமாட்டாய்ங்க.

8.ஊர்வேலைன்னா ஓடியோடி செய்யறது ,வீட்டு வேலைன்னா பம்மறது
கூட்டுக்குடும்பம்ங்கறதால வீட்டுக்கு நாலு ஊருக்கு ஒன்னுன்னு லூஸ்ல விட்டுருவாய்ங்க.

9.எப்பப்பாரு லாட்ஜு வைத்தியர் மாதிரி ஜர்னியிலயே இருக்கிறது.
பெருசா வண்டி வாகனம் இல்லாத காலங்கறதால மிஞ்சிப்போனா 18 பட்டிக்குள்ள சுத்திட்டு ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன் ஆயிருவம்.ஃபேமிலி மெம்பர்ஸ் சாஸ்திங்கறதால பெருசா சிக்கல் வராது -முக்கியமா பொஞ்சாதிக்கு இன் செக்யூரிட்டி/தனிமை இத்யாதில்லாம் எஃபெக்ட் ஆகாது .

சூரியனால வரக்கூடிய பிரச்சினைகள்னு நான் சொன்ன பிரச்சினைகள் இன்றைய தனிக்குடித்தனத்தில் -நகர்மய ஜீவிதத்தில் எப்படியா கொத்த கிரைசிஸை கொடுக்கும்னு கற்பனை பண்ணி பாருங்க. கிளிஞ்சுரும் ( நானும் அடுத்த பதிவுல கொஞ்சம் விரிவா சொல்றேன் -பரிகாரங்களையும் தான் )

கால மாற்றமும் கிரக பலனும் : 6 ஆம் பாவம்

Jpeg
Jpeg

அண்ணே வணக்கம்ணே !
பல காலத்துக்கு மிந்தி கால மாற்றமும் கிரக பலனும்ங்கற தலைப்புல ஒரு தொடரை ஆரம்பிச்சம். இடையில குரு பெயர்ச்சி ஃபீவர் தாக்க அது அப்டியே டீல்ல இருக்கு . செரி அதையாவது தொடரலாம்னு உத்தேசம்.கடேசியா எந்த பாவத்தை டச் பண்ணோம்ங்கறது கூட மறந்துருச்சு.

இப்டி மாய்ஞ்சு மாய்ஞ்சு எளுதி என்னத்த கண்டேன்னு மனசாட்சி கேட்கும். விதைக்கிறதெல்லாம் முளைக்குதா என்ன ..விதைக்கிற நம்ம கடமை . இலவசமா கிடைச்சதை இலவசமா கொடுக்கனும். சேராதிருப்பது கல்வியும் செல்வமும்ங்கறது நம்ம மேட்டர்ல பக்காவா ஒர்க் ஆகுதா ? வவுத்து பொளப்புக்காவ கை நீட்ட வேண்டியதா இருக்கு (ஹி ஹி ஏடிஎம் முன்னாலே)

செரி அப்டி என்னதான் எளுதி கிளிச்சுட்டன்னு மனசாட்சி கேட்கும். நம்ம எழுத்துக்களோட சாரம் ரெம்ப சிம்பிள். மனித வாழ்வு கொஞ்சமே கொஞ்சமாச்சும் பெட்டர் ஆகனும். .

சில மாசங்களுக்கு மிந்தி வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தினர் நடத்திய கருத்தரங்கத்துல “நவீன பரிகாரங்கள்”ங்கற தலைப்புல பேசினேன். அதன் வீடியோவ ஆருக்கோ போட்டு காட்ட பார்க்கவேண்டியதாயிருச்சு .

சம்பிரதாய பரிகாரங்கள் இந்த காலகட்டத்துல ஏன் வேலை செய்றதில்லைன்னு சில பாய்ண்ட் எல்லாம் எடுத்து விட்டன். கோவில் ,இறை வழிபாடுல்லாம் ஏன் ஒர்க் அவுட் ஆவறதில்லைன்னு சொல்ல ஆரம்பிச்சு ( வழக்கம் போல ) ட்ராக் மாறி அசலான மேட்டரை எல்லாம் உளறி கொட்டிட்டன். மேற்படி பேச்சின் வீடியோ பதிவை இணையத்துலயும் தரவேற்றி வச்சிருக்கம்.

அதை ஒரு 1000 பேரு பார்த்து 100 பேர் ஃபாலோ பண்ணியிருந்தா கூட கு.பட்சம் இயற்கையிலயாச்சும் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். பார்த்தது எத்தனை பேருங்கறிங்க?

இந்த நவீன பரிகாரங்களை மேட்டர்லயே 1994 வாக்குல தெலுங்குல எழுத்து வடிவம் கொடுத்தம். வாழ்க்கையில பெரும்புயலே வீசிருச்சு. பீதியில பேதியாகி இதெல்லாம் சிருஷ்டி ரகசியம் போல. இதை எல்லாம் சனத்துக்கு கொடுத்தா நமக்கு சங்குதான் போலன்னு டிசைட் பண்ணி கொளுத்தியாச்சு.

பிறகு வந்த கால கட்டத்துல அங்கே இங்கே பிச்சு சனத்துக்கு சொல்ல ஆரம்பிச்சம். நாம 100 பேருக்கு பரிகாரம் சொன்னா தாளி ரெண்டு மூனு பேர் கூட அதை ஃபாலோ பண்றதில்லைன்னு கன்ஃபார்மா தெரிஞ்சு போச்சு. அதனால ஆத்தா கிட்டே வாதாடி “தாயீ ! நான் சொல்றதை சொல்றன். எவனும்/எவளூம் ஃபாலோ பண்ண போறதில்லை. உன் விதிப்படி எவன் உருப்படனும்னு இருக்கோ அவந்தேன் ஃபாலோ பண்ணுவான். நீ எதுக்கு சொம்மா உ.வ படறேன்னு கன்வின்ஸ் பண்ணித்தேன் மறுபடி எழுத்து வடிவம் கொடுத்தம்.

ஒரு கால கட்டத்துல தேவ ரகசியமோன்னு பயந்து எரிச்சு போட்ட இந்த நவீன பரிகாரங்களை அசால்ட்டா அள்ளி கொடுத்துக்கிட்டே இருக்கன். ஆத்தாவுக்கு சனங்க மேல அவ்ளோ நம்பிக்கை . (எவனும் ஃபாலோ பண்ண மாட்டான் -எவனுக்கு ஆத்தாவோட பெர்மிசன் இருக்கோ அவன் லைஃப்ல இதெல்லாம் ஆட்டோவா இம்ப்ளிமென்ட் ஆயிரும்)

நிற்க ..தொடருக்கு வந்துருவம். இந்த தொடர்ல சமீபத்திய லேட்டஸ்ட் அத்யாயத்துல அஞ்சாம் பாவத்தை போட்டு சொதப்பியிருக்கம். இன்னைக்கு ஃப்ரஷ்ஷா ஆறாம் பாவத்துக்கு போயிரலாம். இது சத்ரு,ரோக ருண ஸ்தானம், வயிறு தாய்மாமன் இத்யாதி உப காரகங்களும் உண்டு.

நம்ம ஜாதகத்துல ரோகாதிபதி குரு உச்சமா இருக்காரா? தாளி ..எதிரின்னா பி.எம், சி.எம் லெவல் தான். மத்த பிக்காளில்லாம் கணக்கே கிடையாது . கடன் ? 2007 ல தந்தில சேர்ரதுக்கு மிந்தி சந்து சந்துக்கு கடன் இருக்கும். பிறவு வண் டி ட்ராக்ல ஏறிருச்சு . நம்ம எதிரில்லாம் அவன் தான் நம்மை எதிரியா நினைச்சு பொங்கிக்கிட்டு கிடப்பான். நம்ம மைண்ட்ல அந்த பன்னாடைகளுக்கு இடமே கிடையாது . இதனால என்னாச்சுன்னா நோய்கள் தலை காட்ட ஆரம்பிச்சிருக்கு.

இதுலருந்து என்ன தெரியுது? மன்சன்னு இருந்தா ஒன்னு நோயாவது ஆப்பு வைக்கும் -அல்லது எதிரியாவது பல்பு கொடுப்பான் – அல்லது விஜய் மல்லய்யா கணக்கா கடன் காரனா இருக்கனும்.

இதுல கால மாற்றம் என்ன செய்திருக்குன்னு பார்க்கனும். கடனும் – நோயும் ஃபேஷனாயிருச்சு .வங்கில்லாம் ஃபோன் போட்டு கடன் வாங்கிக்கோங்கற சீசன். ஒரு காலத்துல கடன்னாலே பதறுவாய்ங்க. போதுமென்ற மனமே பொன் செய்மருந்து அது இதுன்னு ஜல்லியடிப்பாங்க. இன்னைக்கு ? அத்தனைக்கும் ஆசைப்படு. கிடைச்ச கடனை எல்லாம் வாங்கிடு இதான் ஸ்லோகன்.

நோயை பத்தி சொல்லவே தேவையில்லை. திங்காததால வர்ர நோயை விட அளவுக்கு மீறி திங்கறதால வர்ர நோய் தான் அதிகம்.( நோய்க்கும் வவுத்துக்கும் இருக்கிற லிங்க் புரியுதா? இதனாலதான் ரெண்டையும் ஒரே பாவ காரகத்வத்துல சேர்த்திருக்காய்ங்க)

திருப்தியா தின்னு தொலையட்டும். எத்தை திங்குது சனம்? பாலிஷ் போட்டு விட்டமின் “பி” ஐ இழந்த அரிசி . பாலிஷ் போட்டு சக்தி மிகுந்த மேலோட்டை இழந்த பருப்பு.

எதெல்லாம் பாடிக்கு நல்லதோ அதெல்லாம் உவ்வே. ஆரு திம்பா? எதெல்லாம் பாடியை சீக்கிரமா பாடியாக்கிருமோ அதெல்லாம் ரெம்ப பிடிக்கும் . சினிமாக்கு தான் கலர் தேவை .திங்கற பொருளுக்குமா கலரு ? டீட்டெய்னர்ஸ்,ப்ரிசர்வட்டீஸ்.

தின்னது செரிக்கிற அளவுக்கு உழைப்பாவது இருக்கான்னா இல்லை . பஸ் ஸ்டாப் வரை போயி ஒரு தம் போடனும்னாலும் வண்டி .தாய்க்குலத்தை பத்தி சொன்னா அவிக கோவிச்சுக்குவாய்ங்க. ஃபெல்விக் போனுக்கு வேலையே கிடையாது . நிமிந்த நடைங்கறது நடக்கறப்ப இருந்தாலும் பரவால்ல. வீடு பெருக்கறப்பயும் அதே. அந்த சைஸுக்கு துடைப்பம் வருதுங்கோ .

ஆக கடனும் -நோயும் ஃபேஷனாயிருச்சா? சாய்ஸ்ல மிச்சம் இருக்கிறது என்ன? முட்டல் மோதல் தான். வீடியோ கேம்ஸ் விளையாடதடான்னா பையன் மணிக்கட்டு நரம்பை வெட்டிக்கிறான். என்னம்மா இது விடிய விடிய சீரியல்னா ஒடனே டௌரி அட்ராசிட்டி கேஸு , ஆனால் சனம் ரெம்ப அறிவாளிங்க.
முட்டுவாய்ங்க. மோதுவாய்ங்க.ஆனால் யாரோட? மதுவை ஆறா ஓட விடற கவுர்மென்ட் கிட்டே மோதமாட்டாய்ங்க. தொகுதிய கண்டுக்காத எம்.எல்.ஏ கிட்டே மோதமாட்டாய்ங்க. வார்டை கண்டுக்காத கவுன்சிலர் கிட்டே மோதமாட்டாய்ங்க.

தன்னோட ஒத்துழைக்காத உடம்போட மோதமாட்டாய்ங்க. கண்ட “கப்” ல கொண்டு விடற மனசோட மோதமாட்டாய்ங்க. வாய் செத்தவன், திருப்பி அடிக்க முடியாதவன், அடிச்சா என்னன்னு கேட்க கதியில்லாதவனை அடிச்சு தூள் பண்ணுவாய்ங்க.

எப்பயாச்சும் அசெஸ்மென்ட் மிஸ் ஆகி புரட்சி வெடிச்சா செமர்த்தியா பல்பு வாங்குவாய்ங்க. இவிகளுக்கு என்னாத்த பரிகாரம் கொடுக்கிறது?
ரோசிச்சு வைக்கிறேன்.அடுத்த பதிவுல அவுத்து விடறேன்.

கால மாற்றமும் -கிரகபலனும் : 6

அண்ணே வணக்கம்ணே !
கால மாற்றமும் -கிரகபலனும்ங்கற தலைப்புல ஒரு தொடரை ஆரம்பிச்சு எழுதிக்கிட்டிருக்கம்.இதுல மொத நாலு பாவங்களை அனலைஸ் பண்ணியாச்சு. இப்ப ஐந்தாம் பாவம்.

இது புத்தி,புத்திர,பூர்வ புண்ணிய ஸ்தானம். அதிர்ஷ்டம்,பெயர் புகழ் இத்யாதிய காட்டும் பாவமும் இதுதான்.

எதை எழுத நினைச்சாலும் எப்பமோ எழுதிட்டதா ஃபீல் ஆகுது. இந்த ஃபீலையும் பல முறை எழுதிட்டாப்ல ஒரு ஃபீல். ஆனாலும் எடுத்துக்கிட்ட தலைப்பை நிரவித்தானே ஆகனும். மேலும் நம்ம சனத்துக்கு மறதி சாஸ்தி. மேலும் சனம் புதுசு புதுசா வர்ராய்ங்களே ! அவிகளுக்காச்சும் உபகாரமா இருக்கட்டுமே.

மொதல்ல இந்த புத்திங்கற மேட்டரை எடுத்துக்கிடலாம். புத்தின்னா என்ன? ஞா சக்தியா?ஒரு வகையில ஊம். இன்னொரு வகையில ஊஹூம்.
கவனித்தல் – கூர்ந்துகவனித்தல் -கவனித்தவற்றை பல கூறுகளாக்கி கவனித்தல் – அந்த கூறுகளின் இடையிலான பந்தம்-பந்தமின்மையை உணர்தல் – அந்த கூறுகள் ஒன்றை ஒன்று பாதித்தலை /பாதிக்காதிருத்தலை கவனித்தல் -இவற்றை எல்லாம் நினைவில் வைத்தல் .

புதிய சூழல் ,சவால் எதிர்ப்பட்ட போது நினைவில் வைத்தவற்றை மீட்டெடுத்தல் – கடந்த அனுபவத்துக்கும் தற்போதைய சூழலுக்கும் இடையிலான தொடர்பு தொடர்பின்மையை கவனித்தல் . இப்படியே ஒரு சுழல் தொடரும்.

இன்னைக்குள்ள ட்ரெண்டுல புத்தின்னா? சட்டத்தை தெரிஞ்சுக்கறதை விட ஜட்ஜை தெரிஞ்சுக்கறதுன்னு ஆயிருச்சு. இந்த குறுமதி தரும் வெகுமதி வமிசத்தை ஒழிச்சுரும். பைத்தியமாக்கிரும். பெருத்த அவமானத்துக்கு இலக்காக்கும்.

நிற்க .புத்திக்கும் புத்திரருக்கும் என்ன தொடர்பு?
கொஞ்சம் வெகண்டையாவே இருந்தாலும் கில்மா ட்ராக்லயே ரோசிப்பம். “முடியும்”னு நினைச்சா முடியும்,முடியாதோன்னு இறங்கினா முடியாமயே கூட போயிரலாம்.

மனித உடல் அப்பாவி. அது பலசமயம் மனித மனத்துக்கு அப்படியே கீழ் படிய ஆரம்பிச்சுருது. பஸ்ஸுல போறச்ச வாந்தி வர்ரதுக்கு கொஞ்சமே கொஞ்சம் உடல் சார்ந்தகாரணம் இருக்கலாம்.ஆனால் நிறைய சதவீதம் மனம் சார்ந்த காரணம் தான்.

தப்பு பண்ணிட்டமோங்கற ஃபீல் நோயா பரிணமிக்குது . நான் தப்பே பண்ணலியேங்கற ரேஞ்சுல தன்னை தான் செல்ஃப் ஹிப்னட்டைஸ் பண்ணிக்கிறவன் ராக்கெட் வட்டி வசூலிச்சிருந்தாலும் நோய் வர்ரதில்லை (சில காலம்) இன்ன பிற காரணங்களால் ஒரு நோய் ப்ரசன்ட் போட்டாச்சுன்னா மனசு கலகலத்து ஊர்ப்பட்ட நோய்களும் வந்துருது .அது வேற கதை .

முடியும்-முடியாதுங்கற ஒரே விஷயத்துல தானா புத்திக்கும் புத்திரர்களுக்கும் தொடர்பு ஏற்படுது? இல்லிங்ணா. பல மேட்டரு இருக்கு.
முலைக்காம்புக்கு பதில் ரப்பர் சூப்பான்ல காம்ப்ரமைஸ் ஆகிற புத்தி செக்ஸ் மேட்டர்ல கூட காம்ப்ரமைஸ் ஆயிரும். மாஸ்டர்பேஷன்ல இருந்து , ஹோமோ/லெஸ்பியன் , அனிமல் செக்ஸ், கள்ள உறவு இப்படி காம்ப்ரமைஸ் ஆயிட்டே இருக்கும்.

மாஸ்டர் பேஷன் பத்தி நிறைய எழுதியிருக்கன். இதுக்கு பழக்கப்பட்டாலும் பரவால்ல, இதுலயே திருப்தியும் அடைஞ்சு தொலைச்சா என்னாகும்?
ஹோமோவா இருந்தவனுக்கு மனைவியோட என்னமாதிரி அட்டாச் மென்ட் வரும்? கைக்குழந்தைங்க எல்லார் மேலயும் மூத்திரம் விட்டுராது. வளர்ந்த ஆண் உடலும் இப்படித்தான் . அங்கே மூத்திரம் -இங்கே விந்து . ஏதோ வம்படியா அடிச்சு புடிச்சு உறவில் இறங்கினாலும் பெப்பே தான்.
பாற்கடலை கடைஞ்சு அமுதம் எடுத்த கணக்கா உள்ளுக்குள்ள ஊறனும். இவன் மைண்ட்ல இவனோட “காதலன்”இருக்க. படுக்கையில மனைவி இருக்க? என்னாத்த ஊறி ..

இப்ப புரியுதா? அஞ்சாமிடம் கரீட்டா இருந்தா புத்தி கரீட்டா இருக்கும் (ஐ மீன் பாசிட்டிவ்) ,புத்தி கரீட்டா இருந்தா நார்மல் செக்ஸுவல் லைஃப். அது நார்மலா இருந்தா காலப்போக்குல எல்லாம் சமனாகி கருவுறுதல் நடக்கும்.

எப்படியா கொத்த தம்பதிக்கிடையிலும் ஆரம்பத்துல காமம் தான் தலைவிரிச்சாடும், காலப்போக்குல அது இரண்டாம் பட்சமாகி அன்பை காட்டும் ஒரு சாதனமாகி முதிர்ச்சி பெறும் போது உருவாகும் கரு நிச்சயமா பெட்டர் சாய்ஸா தான் இருக்கும்.

அதென்னா நேர்மறை /பாசிட்டிவ். இதெல்லாம் தடிமனான இங்கிலீஸ் புஸ்தவத்துலருந்து கத்துக்கறது இல்லிங்ணா. இதெல்லாம் ஜீன்லயே இருக்கனும். நாங்க ஜோதிஷ பரிபாஷையில பூர்வ புண்ணியம்னு சொல்றம்.

எப்பவும் சொல்ற விதிதான். அஞ்சாம் பாவம் 100% ஃப்ரூட் ஃபுல்லா இருந்தா பூர்வ புண்ணியம் (ஜீன்ஸ்) ஓகே, புத்தி ஓகே,புள்ள குட்டியும் ஓகே. எல்லாம் நார்மலா இருக்கும் போது பெயர் புகழுக்கு ஆசைப்படாத மன நிலை ஓகே. எப்பல்லாம் நாம பெயர் புகழுக்கு ஆசைப்படாம இருக்கமோ -இன்னம் சொல்லப்போனா அவமானங்களுக்கு ப்ரிப்பேர் ஆயிர்ரமோ அப்ப பெயர் புகழுக்கு குறைவே இருக்காது.
செரி ..உபகதைகள்,உதாரணங்கள் இல்லாம நேரடியா சொல்லிட்டன். புரியாதவிக டோன்ட் ஒர்ரி.அடுத்த பதிவுல படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சுரலாம். லூஸ்ல விடுங்க.