காதல் காதல் தவிர வேறில்லை: 5 (ஏகராசி)

8487அண்ணே வணக்கம்ணே !
ஜோதிட பாடம் தொடரை ஆரம்பிச்சு -ஆரம்பத்துக்கே வந்துட்டம். இடையில கொஞ்சம் அலார்ட் ஆகித்தான் இந்த தொடருக்கு ட்ராக் மாறிட்டம்.
செரி செரி மேட்டருக்கு வந்துர்ரன். ஆண்,பெண் ஒரே ராசியா இருந்தா கண்ணாலத்துக்கு உத்தமம்னு சொல்லி வச்சிருக்காய்ங்க. ஒரே ராசின்னா என்ன?
ஒரே குணம்,ஒரே டெம்பர்மென்ட்,ஒரே விதமான பிரதிவினை. ரெண்டும் ஒரே விதமான பிரகிருதிகள். ஆண்,பெண் என்ற வித்யாசம் வேணம்னா ஒரு கவர்ச்சியை கொடுக்கலாம்.ஆனால் இந்த இனக்கவர்ச்சி நிரந்தரமில்லைனு எல்லாருக்கும் தெரியும்.
பின்னே ஏன் இந்த ஏக ராசி கான்செப்டை ஆக்செப்ட் பண்ணியிருக்காய்ங்க? ஆணுக்கு ஆண் மேல என்ன கவர்ச்சி இருக்க முடியும்? பெண்ணுக்கு பெண் மேல என்ன கவர்ச்சி இருக்க முடியும்?
அப்போ இந்த ஏக ராசி மேட்டரே டுபுக்கான்னு கேப்பிக. பொறுமையா இருங்க பாய்ண்டுக்கு வரேன்.
ஆணுக்கு ஆண் மேல கவர்ச்சி இல்லைதான். ஆணுக்கு பெண் மேல தான் கவர்ச்சி நெஜம் தான்.ஆனால் அந்த கவர்ச்சியை வச்சுக்கிட்டு மேக்சிமம் என்ன செய்ய முடியும்?
தொலைவா இருந்தா கவிதை எழுதலாம், சமீபத்துல இருந்தா சாடை காட்டலாம். பிரிஞ்சு போனா கவிதை எழுதலாம். மிஞ்சி மிஞ்சிப்போனா சொல்லனுமா என்ன?
பிறவு என்ன பண்றது?
எல்லாம் முடிஞ்சதும் மைண்ட் ஆட்டோமெட்டிக்கா சேம் செக்ஸ் மேல டைவர்ட் ஆகும். ஆண் ஆணோட டீல் பண்றது ஈசி. ஏன்னா அவனோட  இயல்பும் இவனோட இயல்பும் ஒன்னு. புரிதல் சுலப சாத்தியம். எந்த வித போலித்தன்மையோ,இன்செக்யூரிட்டியோ ,ஒப்பனைகளோ இல்லாம இன்டராக்ட் ஆகலாம்.
ஆணோட ஆண் சேர்ந்து செயல்பட்டா  சரித்திரம் படைக்கலாம்.

பெண்ணோட பெண் சேர்ந்தா ????  ஆருப்பா அது சின்னம்மா,பெரியம்மாங்கறது. அதெல்லாம் விதிவிலக்கு பாஸ்.(தமிழ்மக்களோட விதின்னும் சொல்லலாம்) பாசிட்டிவா திங்க் பண்ணுங்க பாஸ்.
ரஜினி -கமல்ங்கற ஆசாமிகள் ஜஸ்ட் தனி மனிதர்கள் இல்லே. உலக ஆண்கள் அனைவரிலும் ரஜினி -கமல் இருக்காய்ங்க. ஐ மீன் அவிகளோட குண நலன்கள் இருக்கு.
அன் மெச்சூர்ட் மைண்ட் உள்ளவர்கள் என்றால் ரஜினி ஃபேக்டர் அதிகமா உள்ள ஆள் கமலையும்,கமல் ஃபேக்டர் அதிகம் உள்ள ஆள் ரஜினியையும் லைக் பண்ணுவாய்ங்க. (ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட் ஈச் அதர் )
இதுவே மெச்சூர்ட் மைண்ட் உள்ளவர்கள் என்றால் நிலைமை தலைகீழா இருக்கும். அட நம்ம கேஸையே எடுத்துக்கங்களேன் நமக்குள்ள கமல் ஃபேக்டர்ஸ் அதிகம்.அந்த காலத்துல நாம அன் மெச்சூர்ட் ரஜினி ரசிகனா இருந்தம். காலப்போக்குல கொஞ்சம் போல மெச்சூரிட்டி வந்துருச்சு. ரஜினின்னாலே செம கடுப்பாகுது. கமல்னா மனசுக்குள்ள ஒரு இதம் வருது.
இதே தியரிய கணவன் -மனைவி உறவில் அப்ளை பண்ணி பாருங்க.
ஆரம்பத்துல இனக்கவர்ச்சி கொஞ்சம் போல ஒப்பேத்திருது . அந்த மயக்கத்துல “என்னை  போலத்தானா நீயும்ங்கற “அண்டர் எஸ்டிமேட் எல்லாம் வர்ரதில்லை. ” ஐ ..எனக்கும் அப்படித்தான் ஃபீல் ஆகும்”ங்கற மாதிரி பாசிட்டிவ்   மன ஓட்டம் இருக்கும்.
இதுவே நேர் எதிர் மனப்பாங்கு கொண்டவர் லைஃப் பார்ட்னரா இருந்தா உடல் தொடர்பான பிரமைகள் எல்லாம் தீர்ந்து போன பிறகு “ச்சே .. நம்மை புரிஞ்சுக்குவே மாட்டேங்குறாரே” “ஷிட் .. எவ்ளதான் எடுத்து சொன்னாலும் புரிஞ்சுக்கமாட்டேங்கறாளே”ங்கற புகார்கள் அதிகரிக்கும்.
இப்பம் புரியுதா? ஏன் ஏக ராசியை ஆப்ட் பண்ணியிருக்காய்ங்கனு . இந்த மேட்டர்ல இன்னம் விரிவா பேச வேண்டியது இருக்கு.அடுத்த பதிவுல சந்திப்போம்.

Advertisements

காதல் காதல் தவிர வேறில்லை : 4

double

அண்ணே வணக்கம்ணே !
காதல் ஒருவனை கைப்பிடித்தே அவன் காரியம் யாவிலும் கை கொடுத்தேன்னு பாரதி பாடினாரு. அவ்வையார் என்னடான்னா “தையல் சொல் கேளேல்”னாரு .

“பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும்”னும்னு வி.சேகர் படம் எடுத்தாரு. ஆரோ “பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே”னு பாட்டு எழுதினாரு.

வாழ் நாள் எல்லாம் நினைத்ததை முடிப்பவனா இருந்த ஆனானப்பட்ட எம்.ஜி.ஆரே ஜெ மேட்டர்ல நினைச்சதை முடிக்காம போய் சேர்ந்துட்டாரு.
எத்தனையோ பெண்கள் சுதந்திர போராட்டத்துலயும், பிறவு வந்த எமர்ஜென்சி எதிர்ப்பு போராட்டத்துலயும் உசுரை பணயம் வச்சு போராடியிருக்காய்ங்க. இன்னைக்கும் ஈழ பெண் புலிகளோட தியாகம் நம்ம கண்ணு முன்னே நிற்குது.

நாயகன் படத்துல கமலை பார்த்து ” நீங்க நல்லவரா கெட்டவரா”னு கேட்டா தெரியாதும்பாரே அது மாதிரி பெண்ணை போய் நீ நல்லவளா கெட்டவளான்னா தெரியாதுன்னு தான் சொல்வா. (ஆனால் வேலு நாயக்கர் போலவே ரெம்ப பவர் ஃபுல்)

பென்சிலின் நல்லதா கெட்டதான்னா என்ன சொல்ல? சிலருக்கு உயிர்காக்கும் மருந்து சிலருக்கு ?

பெண்ணும் அப்படித்தான். பெண்ணால உசரனும்ங்கற கொடுப்பினை உங்களுக்கு இருந்தா பெண் ஒரு ஏணி.ஒரு பெண்ணால அல்லாடனுங்கற தலை எழுத்து உங்களுக்கு இருந்தா பெண் ஒரு பாடை.

போருக்கும் – திருமண வாழ்க்கைக்கும் சின்ன வித்யாசம் தான். போர்ல எதிரியை போர்க்களத்துல சந்திக்கிறோம். தனிய வந்து -செக்யூர்டா படுத்துக்கறோம். திருமண வாழ்க்கையில ? எதிரியோடவே தூங்க வேண்டி வருது.

நோ மேன் ஈஸ் எ ஹீரோ டு ஹிஸ் வைஃப்னு சொல்றாய்ங்க. மத்தவுக நம்மோட அவுட் புட்டை மட்டும் பார்க்கிறாய்ங்க. ஆனால் மனைவி? நம்மளோட ரஃப் ஒர்க் ,ஒர்க் அவுட்,பதைப்பு, அலைக்கழிப்பு ,நாய் பிழைப்பு எல்லாத்தையும் பார்த்துர்ரா.

மேலும் உலக மகா பிரச்சினைக்கெல்லாம் அசால்ட்டா சொல்யூஷன் சொல்ற ஆணுக்கு – வீட்டு பிரச்சினை புரிபடவே மாட்டேங்குது. அவன் ஃபிசிக் அப்படி,அவனோட சைகிக் ஸ்ட்ரக்சர் அப்படி.

இந்தியில ஒரு பழமொழி உண்டு “ஆக் லகே தப் கோதே குவா” நெருப்பு பிடிச்ச பிறவு கிணறை வெட்டினான்.

ஒரு பையனுக்கு ஒரு பெண்ணோட பெருசா வேலையே கிடையாது. கண்ணாலம் முடியறவரைக்கும்.பெண்ணை பொருத்தவரை ரெண்டு கேரக்டர் இருக்கு. ஷோ கேஸ்ல ஒரு கேரக்டர். கொடவுன்ல ஒரு கேரக்டர். பையன் பெரும்பாலும் பெண்களோட ஷோ கேஸ் கேரக்டரை மட்டும் பார்த்துக்கிட்டிருந்தவன்.

மேலும் அவனால அவள் உடலை தாண்டி ரோசிக்கவே முடியறதில்லை.பெண்களும் உடலை தவிர வேறு எதையும் அவனுக்கு எக்ஸிபிட் பண்றதில்லை.
கண்ணாலத்துக்கு பிறவு அவளோட கொடவுன் கேரக்டரை பார்த்து அப்டியே ஷாக் ஆயிர்ரான். மேலும் அவள் உடல் மீதான பிரமைகளும் கொஞ்சம் கொஞ்சம் விலக ஆரம்பிக்க ஒரு க்ளேரிட்டி வந்துருது.

பல ஆண்கள் அந்த க்ளேரிட்டியோட பயங்கரத்துக்கு பயந்து மறுபடி மறுபடி பாடி லெவலுக்கே இறங்கிர்ராய்ங்க. (பலர் இந்த மேட்டர்ல ஒரு பர்ஃபெக்சனுக்காக)

ஒரு பெண்ணோட கம்பேனியன் ஷிப் அதுவும் 24 மணி நேர கம்பெனியன் ஷிப் பையனுக்கு ரெம்ப புதுசு.அரண்டு போயிர்ரான்.
வீட்டுக்கு நெருப்பு பிடிச்ச பிறவு கிணறை வெட்டின மாதிரி அதுக்கு தீர்வுகள் தேட கிளம்பறான்.

கத்திரியில சாலக்கா காது குடைஞ்சு சேஃபா இருக்கிறவனும் இருக்கான். ஜான்சன் பட்ஸ்ல காது குடைஞ்சு ட்ரம்ஸ் கிளிஞ்சவனும் இருக்கான். அதுக்கெல்லாம் ஒரு நேக் தேவை. சில முன்னேற்பாடுகள் தேவை. இதை எல்லாம் வெறும் ஜோதிட பார்வையில மட்டுமில்லாம மனவிய,பாலியல் பார்வையிலும் சொல்லிரத்தான் போறேன்.வெய்ட் ப்ளீஸ்.

மறுபடி ஒரு இந்தி பழமொழி. “ஹவன் கர்தே ஹுயே ஹாத் ஜல்னா” யாகம் செய்யப்போயி கையை கொளுத்திக்கிட்டான்.
உண்மை, நேர்மை, சின்சியாரிட்டி ,ஹானஸ்டி எல்லாமே நெல்ல மேட்டர்தான்.ஆனால் பெண் விஷயத்துல அதுவும் பொஞ்சாதி மேட்டர்ல இதெல்லாம் வேலைக்காகாது.

பல ஆண்கள் உண்மையா இருக்கனும்,நேர்மையா இருக்கனும்னே ஆரம்பகட்டத்துல பல்பு வாங்கிர்ராய்ங்க.பிறவுதான் கொஞ்சம் பொய், கொஞ்சம் பித்தலாட்டம்லாம் மேக் அப் பண்ணிக்கிட்டு வெற்றிகரமான கணவரா மார்ராய்ங்க.

பெண் வீக்கர் செக்ஸ், ஃபிசிக்கலா வீக்கு. இதை பேலன்ஸ் பண்ண இயற்கை அவளுக்கு ஒரு வித இன் செக்யூரிட்டி ஃபீலிங்கை கொடுத்திருக்கு.
சிலரோட பாடியில உள்ள இம்யூன் சிஸ்டம் வெளியிலருந்து வர்ர “வைரஸ்,நோய் கிருமிகளை போலவே பாடிக்கு தேவையான மேட்டரை எல்லாம் கூட எதிர்க்க ஆரம்பிச்சுரும். இதைத்தான் அலர்ஜிங்கறாய்ங்க.

அதை போலத்தான் பெண்ணோட மனசும் . உண்மை ரெம்ப அசிங்கமா,அருவருப்பா இருக்குமா – இந்த உண்மைய அப்படியே கிராஸ்ப் பண்ணிக்கிட்டா மனசுக்கு என்னாயிருமோ ஏதாயிருமோன்னு உண்மைக்கே அலர்ஜிட்டிக் ஆயிருது பெண் மனசு.

செரி இன்னைக்கு ஜோசியத்தையே டச் பண்ணாம பதிவே முடிஞ்சுருச்சு. நாளைக்கு வட்டியும் முதலுமா ஏக ராசி கான்செப்டை பாய்ண்ட் டு பாய்ண்ட் பார்த்துரலாம்.
உடுங்க ஜூட்டு

காதல்.. காதல் தவிர வேறில்லை:3

B3

அண்ணே வணக்கம்ணே !
வாழ்வோ -சாவோ ,உயர்வோ – தாழ்வோ ,சாடிசமோ -மசாக்கிசமோ எல்லாத்துக்கு பின்னாடி ஒரு காதல் இருக்கு. அல்லது காதலை இழந்த சோகம் இருக்கு ,அல்லது காதலை பிரிச்ச குற்ற மனப்பான்மை இருக்கு, அல்லது காதலுக்கு இழைத்த துரோகம் இருக்கு அல்லது காதல் கிட்டாத ஏக்கம் இருக்கு.

காதல்னா என்ன? ஆண்,பெண்கள் அனேக முஸ்தீபுகள்,கவசங்கள்,ஆயுதங்களை கைவசம் வச்சிருக்காய்ங்க. ஒரு ஆணுக்கு ஒரு பெண் எதிர்ப்பட்டாலோ – ஒரு பெண்ணுக்கு ஆண் எதிர்ப்பட்டாலோ படக்குன்னு அட்டென்ஷனுக்கு வந்துர்ராய்ங்க.

யாரிடம் அந்த அட்டென்ஷன்லாம் தேவையில்லாமயே பாதுகாப்பா உணரமுடியும்னு நினைக்கிறோமோ அவிக நம்ம வாழ்க்கையில என்னைக்கும் இருக்கனும்னு முடிவு கட்டிர்ரம்.அதுக்கு பேர் தான் காதல்.

அந்த நம்பிக்கை, அந்த எண்ணம்,அந்த உணர்ச்சி நமக்குள்ள பிறக்க ஆயிரத்தெட்டு ஃபேக்டர்ஸ் காரணமா இருக்கு.

அதுல இந்த ராசியும் ஒரு ஃபேக்டர். ஏற்கெனவே பல பதிவுகள்ள நாம சொன்னாப்ல இந்த காதல்,கண்ணாலம் இதுக்கெல்லாம் ஜாதகத்தை அடிப்படையா வச்சு பார்க்கிறதுதான் முறை. தசவித பொருத்தம்லாம் ச்சொம்மா ப்ரிலிமினரி. இதுல ராசிப்பொருத்தம்ங்கறது ஜஸ்ட் ஒரு பொருத்தம் தான்.

ஜாதகத்தை பார்த்தாதான் சர்ப்பதோஷம்,செவ் தோஷம் இத்யாதி தோஷங்களை எல்லாம் ஐடென்டிஃபை பண்ண முடியும். தோஷமுள்ளவர்கள் தோஷமுள்ளவர்களையே கட்டிக்கனும்னு பண்டிதர்கள் சொல்றாய்ங்க.

இதுக்கு பின்னாடி பார்ட்டிகளோட நலனை விட சமூக நலன் தான் இருக்கு. தக்காளி கூடைய பிரிச்சதுமே பொடிய பொறுக்கி தனியா போட்டு கூறு கட்டிருவாய்ங்களே அதே ஃபார்முலா தான். இந்த தோஷ ஜாதகர்கள் சுத்த ஜாதகர்கள் வாழ்க்கைய டிஸ்டர்ப் பண்ணிரக்கூடாதுங்கறது ஒரு நோக்கம்.

அடுத்த நோக்கம் இதுக அரைகுறையா வாழ்ந்து விதவர்களா,விதவைகளா வாழ்ந்து சமூக ஒழுங்கை பாதிச்சுரக்கூடாதுங்கறது அடுத்த நோக்கம்.
செவ் தோஷம் ரெண்டு பேருக்கும் இருந்தா சாலை விபத்தில் தம்பதி மரணம்னு செய்தி வரும். (குழந்தைங்க அனாதையாயிரும் அது வேற கதை ) சர்ப்ப தோஷம் ரெண்டு பேருக்கும் இருந்தா விஷம் அருந்தி தம்பதி தற்கொலைனு செய்தி வரும்.

இந்த தோஷங்கள்ளயே வில்லங்கம் பிடிச்ச தோஷம் இந்த சுக்கிர தோஷம் தான். கள்ளக்காதல் எதிரொலி -மனைவி கழுத்து நெறித்து கொலை செய்திக்கெல்லாம் இதான் அடி நாதம்.

ஏதோ புஸ்தவத்துல படிச்சன். குறிப்பிட்ட கிரகஸ்திதியில பிறந்த பெண்ணுக்கு எத்தனை முறை உடலுறவில் ஈடுபட்டாலும் திருப்தியே கிடைக்காதாம். போலியா ஒரு உறுப்பை தயாரிச்சு அதாலதான் திருப்தியடையனுமாம். ( இதை எல்லாம் நம்பாதிங்க .பல புஸ்தவங்கள்ள லாஜிக்கே இல்லாம பீலா விட்டிருப்பாய்ங்க)

ஜாதகத்தை பத்தி பேச ஆரம்பிச்சா நிறைய பெரு கழண்டுக்கறாய்ங்க.அதனாலதான் ராசியை பிடிச்சன். இந்த ராசிப்பொருத்தத்துல மொத விதி என்ன ஏக ராசி .அதாவது காதலன் -காதலி ரெண்டு பேரும் ஒரே ராசியா இருந்தா நல்லது.

எனக்கென்னமோ இது மனசுக்கே வர்ரதில்லை. கவர்ச்சிங்கறது எதிர்முனைகளுக்கிடையில் தான் ஏற்படும். உ.ம் ராதை கண்ணன்.

அதே நேரத்துல இனம் இனத்தோடு ,காம்ரெட்ஸ் இன் டெஸ்ட்ரஸ்னும் சொல்லிவச்சிருக்காய்ங்க. இதை எப்படி புரிஞ்சுக்கனும்னா ஆரம்ப காலத்துல ஐ மீன் இந்த ஆசை அறுபது,மோகம் முப்பது பீரியட்ல வேணம்னா ஏக ராசியினரிடையே ஒரு வித அனாசக்த நிலை இருக்கலாம்.

ஆனால் இந்த ஆசை,மோகம்லாம் எவாப்ரேட் ஆனபிறவு அட இதுவும் நம்மை மாதிரியே கன்ஃப்யூஸ் ஆகுது,அட இதுவும் நம்ம மாதிரியே கோவப்படுதுங்கற எண்ணங்கள் உறவை பலப்படுத்தும்.

ஏகராசி ஃபேக்டர் காரணமா இந்த உறவுகள் (காதல்/கல்யாணம்) இப்படி பலப்படறதுல ஒரு ரிஸ்க் இருக்கு. உதாரணமா மேஷராசிக்காரவுக ஜஸ்ட் சோல்ஜர்ஸ் மாதிரி.இவிகளுக்கு சரியான கமாண்டர் இருக்கனும்,அட்வைசர் இருக்கனும். இல்லின்னா காலையில மலையேற ஆரம்பிச்ச ஆடு மேல மேல ஏறிப்போயி மாலை நேரம் இறங்கி வரமுடியாம மே மேன்னு குரல் கொடுக்கிறாப்ல ஆயிரும்.

இதே போல சிம்மம் .ஏற்கெனவே ஓவர் கான்ஃபிடன்ட். இதுல லவ்வரும் இதே கேஸா இருந்தா என்ன ஆகும்?
இப்படி ஏக ராசிங்கறது நல்லதும் கெட்டதும் சேர்ந்த பலனை தான் தரும். இதை எல்லாம் அடுத்தடுத்த பதிவுகள்ள விரிவா பார்க்கத்தான் போறோம். உடுங்க ஜூட்டு

காதல் காதல் தவிர வேறில்லை: 2

True love

அண்ணே வணக்கம்ணே !

ஏன் காதலிக்கிறோம்? இந்த கேள்வியை கேட்டதும் பல தரப்பட்ட பதில்கள் ஸ்பார்க் ஆச்சு. அதை அப்படியே தரேன். தீர்ப்பு? நீங்க தேன் கொடுக்கனும்.

அம்மா -அப்பாவின் கூட்டு முயற்சி தான் நாம . ஒவ்வொரு ஆணிலும் பெண் தன்மை இருக்கு (அம்மா கிட்டருந்து வந்தது) ஒவ்வொரு பெண்ணிலும் ஆண் தன்மை இருக்கு அப்பாக்கிட்டே இருந்து வந்தது.

ஆக நாம அரைகுறையாத்தான் அலையறோம். ஒரு ஆணும் பெண்ணும் இரண்டற கலந்தால் நம்மில் அரைகுறையாக இருக்கும் ஆண்,பெண் தன்மைகள் முழுமை பெறும் என்ற ஹஞ்ச் நம்மை காதலிக்க தூண்டுதா?

இந்த படைப்பு ரெம்பவே பிரம்மாண்டம். இதுல தனிமை பயப்படுத்துதா? அந்த தனிமையில இருந்து தப்பிக்க காதலிக்கிறோமா?

பெண் இந்த உலகத்தின் ஸ்பெசிமன். அவள் ஒரு குட்டி உலகம். உங்களை பத்தி உலகம் என்ன நினைக்குதுன்னு தெரிஞ்சுக்க உலக அளவு சர்வேல்லாம் தேவையில்லை. வீட்டம்மா என்ன நினைக்கிறாய்ங்கனு பாருங்க. அதான் உலகின் கருத்தும்.

ஆக உலகத்து மேல ஒரு பயம்,மிரட்சி உள்ளவன்லாம் லவ் பண்றானோ? உலகம் என்ன நினைக்குதுன்னு தெரிஞ்சுக்கவே லவ் பண்றானோ? கண்ணாலம் கட்டறானோ?

ஆனாலும் மேல் சேவனிசம் காரணமா பொஞ்சாதி வாய திறந்தா போதும் 144 போட்டுர்ரான். உண்மைன்னா அவ்ளோ பயம் பக்கிக்கு .
நேற்றிலும் – நாளையிலும் கவனம் வைத்த, நிகழ்காலத்தில் கால் பாவாத இயந்திரமயமான வாழ்க்கையில் காதல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நப்பாசையா?

ஓருயிர் ஓருடலாய் இருந்தோம் (அமீபா)
பிரிந்தே பல்லுயிர் ஆனோம்.
காலம்,தூரம், இன்செக்யூரிட்டி ச்சே

அன்று தானிருந்த நிலைபெற தவித்தோம்
அதற்கு தடை உடல் என்று பிரமித்தோம்.

உடலை உதிர்த்திடவே
கொல்லுகிறோம் . சொல்லப்படுகிறோம்.

தைரியமானவர்கள் ஒரு தவணையில்
தைரியமற்றவர்கள் தவணைகளில்

கற்கால வாழ்வில் இது ஸ்தூலமாகவே நடந்தது.
சஞ்சார வாழ்விலும் தொடர்ந்தது.

ஸ்திர வாசம் ஏற்பட்ட பின் -நிர்வாகம் என்ற ஒன்று தோன்றிய பின்

சாந்தி காலங்களில் அது செக்ஸில் மட்டுமே சாத்தியமானது

பண்பாடு நாகரீகம் என்ற பெயரில் செக்ஸ் ஏறக்குறைய (மோர் ஆர் லெஸ்) தடைசெய்யப்பட்டு விட்டது.
சோ… அதற்கு மாற்றாக பணம் வந்தது.

பணத்தால் கொன்றாலும் -கொல்லப்பட்டாலும் அது ரப்பர் சூப்பான் என்ற உள்ளுணர்வு இருக்கிறது.
அதனால் தான் செக்ஸுக்கு மாற்றாக பணத்தை துரத்தியவன் பின்
பெண்ணை துரத்த ஆரம்பிக்கிறான்.

ஏன் பெண்? ஏன் காதல்?

மனிதனுக்கு மரணத்தின் மீது காதலும் இருக்கிறது .பீதியும் இருக்கிறது.
மரணம் செக்சில் தரிசனம் தருவது ஒரு நொடி மட்டுமே.

காதலில்?

ஒவ்வொரு நொடியும் மரணம். அதனால் தான் காதலிக்கிறோம்.

மரணம் எட்ட இருந்தால் மரண பயம் துரத்துது
எதை பார்த்தாலும் மரணமே ஞாபகம் வருது…
தனிமை, ஏழ்மை, இருட்டு எதை கண்டாலும் ..அதுவே ஞா வருகிறது.

இவற்றில் இருந்து
தப்பணும்னா ஒரே வழி
சாகணும்…கு.பட்சம் மரணத்தை பக்கத்துலயே வச்சுக்கனும்.

ஒவ்வொரு நொடியும் சாகனும்.அது காதலில் தான் சாத்தியம்.

என்னங்கடா இது சோசிய வாசனையே இல்லைனு அலுத்துக்காதிங்க. இதோ வருது சோசியம்.

கண்ணால பொருத்தத்துல ராசி பொருத்தம்னு ஒரு கான்செப்ட் வருது அதுக்கான விதிகளை பார்க்கலாம்.இதையே லவ்ஸுக்கும் அப்ளை பண்ணி பார்க்கலாம்.

பெண் ராசியிலிருந்து எண்ணும் பொழுது ஆண் ராசி 6-க்கு மேல் இருந்தால் உத்தமம்.
பெண் ராசிக்கு ஆண் ராசி 7-வதாக இருந்தால் உத்தமம்.

பெண் ராசியும் ஆண் ராசியும் ஒரே ராசியானால் உத்தமம்.

பெண் ராசிக்கு ஆண் ராசி 2-5-6 ஆக வந்தால் பொருந்தாது.

பெண் ராசிக்கு ஆண் ராசி 3-4 ஆக வந்தால் சமம் அல்லது மத்யமம்.

1-7-8-9-10-11-12 ஆக வருமானால் பொருத்தம்.

இதுல கடைசி வரியை பாருங்க .பெண் ராசிக்கு ஆண் ராசி இத்தனையாவது ராசியா வந்தா பொருத்தம் ஓகேன்னு சொல்லியிருக்காய்ங்க. இந்த லிஸ்டுல 8 ஆம் நெம்பரை பாருங்க.

எட்டுங்கறது ஆயுள் ஸ்தானம்.மரணத்தை கொடுக்கிற ஸ்தானம். பெண் ராசிக்கு எட்டாவது ராசி ஓகேன்னா என்ன அருத்தம்?
அவனால அவள் சாகனும். அப்படி சாகனும்னா அவிக இடையில எப்பவும் காதல் இருக்கனும். எப்பூடி?

18 வகை காதல்: சுக்கிர காதல்- பரிகாரம்

அண்ணே வணக்கம்ணே !
தகவல் தொழில் நுட்ப புரட்சி ஆருக்கு நெல்லத பண்ணுச்சோ இல்லையோ நம்ம வாழ்க்கையில விளக்கேத்தி வச்சிருக்கு. மொத மொதலா ப்ளாக் ஆரம்பிச்சப்போ (ஜூலை 31,2000) நாம ப்ரெட் ஹன்டர். இன்னைக்கு தினத்தந்திய விட்டு கழண்டுக்கிட்டும் ஒரு மிடில் க்ளாஸ் ஃபேமிலிக்குண்டான மருவாதி,சௌகரியங்களோட வாழ்ந்துட்டிருக்கோம்னா அதுக்கு காரணம் இணையம் தான்.

நம்முது கடகலக்னமாச்சா -சுக்கிரன் பாதகாதிபதியாச்சா -இவரு அன்ன,பான சேவனத்தை காட்டும் ரெண்டாம் இடத்துலயே நின்னாரா தாளி எவ்ள உசரம் பறந்தாலும் படக்குன்னு சோத்துக்கில்லைங்கற நிலை வந்துரும். இது எப்பூடி சால்வ் ஆச்சுன்னு பார்த்தா இந்த கில்மா பதிவுகள் தான்.

ஆக்சுவலா ஜோதிடர்னா சீன் போடனும். நமக்கு இந்த ஜோதிடர் ரோல் டெம்ப்ரரிதான். நமக்குள்ள ஒரு சேகுவாரா இருக்காரு. ஒரு ஃபிடல் காஸ்ட் ரோ கிடைச்சா தாளி இந்தியாவை மட்டுமில்லை பாக்கிஸ்தானையும் -விட்டா பங்களா தேஷையும் கூட டெவலப் பண்ணி காட்டிருவம். அதனால இன்னைக்கு பிளைப்பு நடக்கிறதுக்காவ ஒரு ஃப்ரேம்ல நம்மை சிறை வைக்கிறது விருப்பமில்லாமையால தில்லா மனவியல் பாலியல் பதிவெல்லாம் போட்டுக்கிட்டு வந்தம். இதனால பலர் விலகியும் இருக்கலாம். முக்கியமா ஹிப்பாக்ரட் தாய்க்குலம். இதனாலதேன் சுக்கிரனோட எஃபெக்ட் எக்ஸாஸ்ட் ஆச்சு போல.

வந்துட்டன் வந்துட்டன். மேட்டருக்கு வந்துட்டன் . சுக்கிர காதலுக்கு பரிகாரம் சொல்லோனம். சொல்லிரலாம். நாளைக்கு நமக்கு சுகந்தர நாளு. நமக்கு சுதந்திரம் வந்த தேதி 15-08-1947. இதுல பிறப்பு எண் 6 – கூட்டு எண் 35/இதை சிங்கிள் நெம்பராக்கினா 8 .

போவட்டும் நாம குடியரசா மாறின நாளை எடுங்க. 26-01-1950 இதுல பிறப்பு எண் 8 கூட்டு எண் 24 இதை சிங்கிள் நெம்பராக்கினா 6. எட்டுன்னா சனி .ஆறுன்னா சுக்கிரன். சனி ஆசனதுவாரத்துக்கு காரகன். சுக்கிரன் இன உறுப்புக்கு காரகன். இது ஒத்துவருமா? இதனாலதேன் ஒரு ஹோமோ செக்ஸுவல் பிரதமரானாப்ல இருக்கு. நொண்டி முடம்லாம் நாடாள வந்துருச்சு. சனியோட சேர்ந்த சுக்கிரன் உருப்படுவாரா? நோ.. இந்திரா டிவோர்சி, சோனியா விடோ, வாஜ்பேயி பிரம்மசாரி (இன்னொரு பிரம்மசாரி க்யூவுல இருக்காரு)

காதல்,கண்ணாலம்,கில்மா இதுக்கெல்லாம் காரகனே சுக்கிரன் தான். இவரோட சனி லிங்க் ஆனாரு. என்ன ஆச்சு? அந்த நாள் முதல் இந்த நாள் வரை காதலுக்கு ஆப்படிக்கிறதே பொளப்பு. கண்ணாலம்னா சந்தையில எருமை வாங்கின கணக்குதான் (சனி=எருமை),கில்மான்னா ஒன்னு அது எதுக்கிருக்கோ தெரியாத வயசுல கண்ணாலம் பண்ணிர்ரது. இல்லின்னா அது சகட்டுமேனிக்கு மிஸ் யூஸ் ஆகி வளைந்து நெளிந்து செல்லும் பாதையான பிறவு பண்றது. மேலும் கில்மான்னா அது தீட்டு. ரகசியம். அசிங்கம். பல லட்சங்கள் செலவழிச்சு கக்கூஸு கட்டறானுவ ( சனி =ஆசனம்) . நாட்டை ஆள்றவன்ல எத்தீனி பேருக்கு பெட் ரூம் இருக்கு. அதுல எவ்ள நேரம் ஆக்டிவா இருக்கான்னு பார்த்தா ப்ர்ர்ர்.

எப்பூடி உருப்படும்? சந்தோசத்துல உள்ளவன் அடுத்தவனை சந்தோசப்படுத்தி பார்ப்பான். துக்கத்துல உள்ளவன்? துக்கப்படுத்தி தான் பார்ப்பான்.
ஆஃப்டர் ஆல் ஒரு தேதியில சுக்கிரன் கெட்டதுக்கே இத்தீனி ஆப்புன்னா.. ஜாதகத்துலயே சுக்கிரன் கெட்டா -அதுவும் அந்த பார்ட்டி லவ்வுன்னு போனா எந்தளவுக்கு பல்பு வாங்குவான் ரோசிங்க.

இதுக்கெல்லாம் பரிகாரமில்லையான்னா இருக்கு. சுக்கிரன்னா ருசி. உணவுக்கு ருசியை கொடுக்கிறது உப்பு,சர்க்கரை,காரம்,புளிப்பு தான். இதை பாதியா குறைச்சுக்கிட்டாலே 25% தோஷம் பரிகாரமாயிரும். அடுத்து சுக்கிரன்னா ரசனை. இசை,சங்கீதம்,நடனம்,நாட்டியம்,ஓவியம்லாம் சுக்கிர காரகம் தான் .இதையெல்லாம் வாழ்க்கையிலருந்து விரட்டி விட்டுருங்க.இன்னம் மேட்டருக்கு வரலைல்ல. வந்துட்டன். சுக்கிர காரகங்களில் தலையாயது கில்மா.

சுக்கிர பலம் இல்லாத ஜாதகர்கள் லவ் பண்றதே வித் அவுட்ல ரயிலேறின மாதிரி. இதுல கில்மான்னா வேற வினையே வேணாம். அதுக்குன்னு ஈர கோவணம் கட்டி கண்ட் ரோல் எல்லாம் பண்ணாதிங்க. கர்னாடகாகாரவுக மாதிரி பாடியே அணைய திறந்து விட்டுரும். அதுக்காவ ஒர்ரி பண்ணாதிங்க.

வேறுந்தரையில படுங்க. ஃபர்னிச்சர்ஸை அவாய்ட் பண்ணுங்க ( மேசை ,நாற்காலி உட்பட) . சொந்த வாகனத்தை யூஸ் பண்ணாதிங்க.பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டையே உபயோகிங்க.

பெண்கள் (உங்களுக்கு முறையாகக்கூடாது) மனம் குளிர அவிகளுக்கு சின்ன சின்ன பரிசுகள் கொடுங்க. அவிகளுக்கு உதவி செய்ங்க ( ஆனா ரெம்ப ஈஷிக்காதிங்க) தப்பித்தவறி கண்ணால மாயிருச்சுன்னு வைங்க. அழகு ,அலங்காரம்,ஃபேன்சி,நாவல்ட்டிக்கெல்லாம் தடா போட்டுருங்க. டிஃபனுக்கு என்ன, லஞ்சுக்கு என்னன்னு ப்ளான் பண்ணாதிங்க. மார்க்கெட்ல எது சீப்பா கிடைக்குதோ அதையே சமைச்சு சாப்பிடுங்க. உப்பு,காரம் ஏத்தக்குறைச்சலா இருந்தா பொஞ்சாதி மேல பாயாதிங்க. சூப்பர் கில்மா காத்திருக்குன்னு அருத்தம்.

மாதர் போகம் மாதமிருமுறைங்கறதெல்லாம் கண்ணாலமான புதுசுல கஷ்டம் தேன். அதனால மத்த ரெமிடீஸை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க. பசிக்காக அல்லாது ருசிக்காக எதையும் திங்காதிங்க,குடிக்காதிங்க. தூக்கத்தை எந்தளவு குறைச்சா அந்தளவு நெல்லது.

கேது காதல் : லட்சணங்கள்

அண்ணே வணக்கம்ணே !
ஜோதிட ரீதியாக காதல்களை , தாம்பத்ய வாழ்வுகளை 18 வகையா பிரிச்சு இந்த தொடரை எழுதிக்கிட்டு வர்ரம். கிரகங்கள் மொத்தம் ஒன்பது.இவற்றின் பாசிட்டிவ் இம்பாக்டோட 9 வகை, நெகட்டிவ் இம்பாக்டோட 9 வகை காதல்களை பத்தி பிரிச்சு மேஞ்சுக்கிட்டு வர்ரம்.

இந்த தொடரோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா ஜோதிடம்,ஜாதகம்,கிரகங்கள் பற்றிய ஜீரோ நாலெட்ஜ் உள்ளவுக கூட தங்கள் காதல் /தாம்பத்ய வாழ்வின் லட்சணங்களை படிச்சு – அடடே நம்முது பலான வகை காதலா/தாம்பத்யமானுட்டு புரிஞ்சுக்கிட்டு – அது குறிப்பிட்ட கிரகத்தோட நெகட்டிவ் இம்பாக்ட் என்ற புரிதலோட உரிய பரிகாரங்களை ஃபாலோ செய்து மஹிளா ஸ்டேஷன், ஃபேமிலி கோர்ட்டையெல்லாம் அவாய்ட் பண்ணலாம்.

இந்த செனேரியோல இன்னைக்கு கேது காதலோட லட்சணங்களை பார்க்கனும். மத்த கிரகங்களோட எஃபெக்டுகு லாஜிக் இருக்கும். காரண காரியம் இருக்கலாம்.

ஆனால் கேதுவோட வேலை ஸ்..நினைச்சாலே கண்ணக்கட்டுது. கேதுவோட லீலைகளுக்கு எந்தவித லாஜிக்கும் இருக்காது.

கேதுவோட லீலைகளை பத்தி சொல்லனும்னா மெகா சீரியலா எடுக்கலாம். அந்த அளவுக்கு இந்த மேட்டர்ல உபகதைகள் இருக்கு. ஆனாலும் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு பார்த்துரலாம். ஈரோயின் பேரு? யமுனான்ன் வச்சுக்குவம். இன்னைக்கு வயசு 50 ப்ளஸ் தான். ஆனால் யமுனாவோட கதை பெரிய கதை.

இன்னைக்கும் ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் உள்ள இளவட்டங்கள் திரும்பி பார்க்காம போக மாட்டாய்ங்க.அப்படி ஒரு ஸ்ட்ரக்சர், மாநிறம் தான். ஆனால் செம கட்டை . இனி ஃப்ளாஷ் பேக்.

அப்பங்காரன் ஏதோ தேவஸ்தான ப்ரஸ்ல வேலையில் இருந்தான். எலிக்கு அறுவடை காலத்துல 60 பொஞ்சாதிங்கறாப்ல பல பட்டறைய பார்த்தாச்சு. அந்த பாவமோ என்னமோ கண்ணாலம் கட்டின சில மாசத்துல உத்யோகம் காலி. கேர் ஆஃப் ப்ளாட்ஃபார்ம்.

வரிசையா அஞ்சு பொண்ணு. அதுல மொத பொண்ணுதேன் யமுனா. அம்மாக்காரிக்கு ஒரு தம்பி. அம்மா நெலம், தன் நிலம் எல்லாத்தையும் அந்தாளே பயிர் பண்ணிக்கிட்டிருந்தாரு. யமுனாவ அந்த தம்பிக்கு கட்டிக்ககொடுத்துட்டாய்ங்க.

ரெட்டை சொத்து , சொந்த மாமனே புருசன். லைஃப் ச்சொம்மா ஜில்லுன்னு போகனுமில்லையா? ஊஹூம்.புருசங்காரனை அப்படி என்னதான் டார்ச்சர் பண்ணாளோ நமக்கு தெரியாது. இவளோட பிற்கால பிஹேவியரை வச்சு பார்க்கும் போது அங்கே இங்கே மேய ஆரம்பிச்சிருக்கனும். அந்த மன்சன் பம்ப் செட் ரூமே கதின்னு இருந்துட்டாரு. திருவாசகம்,தேவாரம்லாம் வாய் விட்டு படிச்சிட்டிருப்பாரு.

இதுல ஒரு தலித் பெண் அவருக்கு மனிதாபிமான அடிப்படையில சில உதவிகள் செய்ய நம்ம ஈரோயின் நாயி மேல ஏறி கோலம் வந்து விவாகரத்து வாங்கியாச்சு. அதுவும் எப்போ ஒரு பிள்ளை ரெண்டு பொண்ணு பெத்த பிறவு.

சோம்பலா, உடல் உபாதைகளா, ஜீனா ,திமிரா என்ன இழவோ தெரியாது.ஆனால் பார்ட்டிக்கு பெட் காஃபிலருந்து -சோத்து வரைக்கும் எல்லாமே உட்கார்ந்த இடத்துலயே கிடைக்கனும். இப்படியா கொத்த கேரக்டர் விவசாயத்துல என்னத்த கிழிக்க முடியும்?

ஆனால் புருசங்காரன் பர்ஃபெக்ட் ஜென்டில் மேன். ஹார்ட் ஒர்க்கர். நல்ல விளைச்சல். கிருஷ்ணா ராமான்னு காலத்தை ஓட்டிக்கிட்டிருந்தாரு.

யமுனாவுக்கு இது கண்ணை உறுத்த கோர்ட் மூலமா சொத்தை பிரிச்சது இல்லாம,ஜீவனாம்சம் வாங்கிக்கிறது இல்லாம பிள்ளைய விட்டு பிச்சை எடுக்க வைப்பா. புருசங்காரனும் வஞ்சனை இல்லாம அள்ளிக்கொடுப்பான்.

பிள்ளை தலை எடுக்க ஆரம்பிச்சான். உயிர்மொழியில டாக்டர் ஷாலினி சொல்றாப்ல யமுனாவோடது ஓவராக்சன். எதிர்காலத்துல சொல்லிக்காட்டவே இருக்கிற நிலத்தை எல்லாம் துண்டு போட்டு வித்து பெரிய படிப்பெல்லாம் லக்சரியா படிக்க வச்சா.

இதற்கிடையில புருசங்காரனுக்கு ஒடம்பு சரியில்லாம – ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகி -அவரை கண்டுக்கற நாதி இல்லாம – அவர் ஆஸ்பத்திரி மொட்டை மாடியில நடை பயிற்சியில இருக்க -இவள் ஊரெல்லாம் தேடி ஃபிலிம் காட்டினது பிள்ளை மனசை ரெம்பவே உறுத்திருச்சு போல.

ரெண்டு பெண்கள் இருக்கிறதா சொன்னேன். நோ டீட்டெய்ல்ஸ். இதுல மொத பெண் அச்சு அசல் யமுனா மாதிரி . ஜகத் சோம்பேறி. ரெண்டாவது பொண்ணு யமுனாவோட நெகட்டிவ் கேரக்டர்ஸுக்கு கலர் ஜெராக்ஸ் மாதிரி.

பிள்ளை தலை எடுத்து ரெண்டு பெண்களுக்கும் கண்ணாலம் கட்டி வச்சான்.பிறவு தானும் கல்யாணம் கட்டிக்கிட்டான். அம்மாவையும் சிட்டிக்கு வர சொல்லி கூடவே வச்சுக்கிட்டான்.

ஆனால் பாருங்க.. இங்கயும் நம்ம ஈரோயின் ரிலாக்ஸே ஆகலை. பிள்ளைக்கு கண்ணாலம் ஆன கையோட ஆத்தாக்காரிக்கு ஒரு லவ்ஸ். ஆரம்பத்துல ஆருக்கும் டவுட்டே வரலை.ஆனால் போக போக அகுடாகி நாஸ்தியாயிருச்சு.

இதுல மருமவளை வேற காச்சி எடுக்கிறது. ஒரு சாதா மாமியார் டார்ச்சர் பண்ணாலே மருமவ கடுப்பாயிருவா. இதுல சோதா மாமியார் டார்ச்சர் பண்ணா?

மவனுக்கு அம்மாவா? மருமவளா?னுட்டு முடிவெடுக்கிற ஸ்டேஜ் வந்துருச்சு.மவன் பொஞ்சாதிதான்னு டிசைட் பண்ணிட்டான்.

கொய்யால நீ ஆடின ஆட்டம் போதும். ஒழுங்கு மருவாதியா ஊரை போயி சேரு. உன் வயித்துல பிறந்த பாவத்துக்கு செலவுக்கு மாசா மாசம் ஒரு அமவுண்டு அனுப்பிர்ரன்னுட்டு பார்சல் பண்ணிட்டான்.

இந்த ஸ்டேஜ்லயும் ரிலாக்ஸ் ஆகி – கிருஷ்ணா ராமான்னு வாழ்க்கைய ஓட்டலாம். ஆனால் நம்ம ஈரோயின் அடங்கவே இல்லை.

பிள்ளை கை மீறி போயிட்டான்.கு.பட்சம் பொண்ணுங்களையாச்சும் நம்ம கண்ட் ரோல்ல கொண்டு வந்துரனும்னு கண்ணாலமான பொண்ணுங்களோட வாழ்க்கையில விளையாட ஆரம்பிச்சா.

சந்தோசத்துல உள்ளவுக அடுத்தவுகளையும் சந்தோசப்படுத்தி பார்ப்பாய்ங்க. துக்கத்துல உள்ளவுக? ஊஹூம். பொண்ணுங்களோட வாழ்க்கையில கும்மியடிச்சுட்டா.

பெரிய பொண்ணாச்சும் பரவால்லை. ஒரு ஆறு மாசத்துலயே அலார்ட் ஆயி- வாழ போயிட்டா. ரெண்டாவது பொண்ணு நிலைமாதான் மோசம் ஆயிருச்சு.

புருசன் காரன் சுத்தமா கழட்டி விட்டுட்டு வேற பொண்ணை கண்ணாலம் கட்டிக்கிட்டான். இந்த பொண்ணு இப்பம் வரைக்கும் நாலு கை மாறிருச்சு.

இன்னைக்கும் யமுனா தன் ஸ்டைலை மாத்திக்கவே இல்லை. இன்னைக்கும் காஃபிலருந்து -ராத்திரி சோறு வரைக்கும் பெட்லயே நடக்கனும்.

வயசா ஆயிட்டே போகுது. ஒரு காலத்துல இவளுக்கும் இவ சொத்து சுகத்துக்கும் பயந்து நடந்த அக்கா,தங்கச்சிங்கள்ளருந்து – வீட்டுக்கு வாட்டர் கேன் போடற பையன் வரைக்கு ஆரும் மதிக்கிறதில்லை.

நடமாட்டம் இருக்கிற வரை சரி. வாழ்க்கையில வழுக்கி விழுந்தாப்ல பாத்ரூம்லயும் வழுக்கி விழுந்தா ? நாலு கை மாறின சின்ன பொண்ணுக்கு நெல்லவன் ஒருத்தன் கிடைச்சு அவளும் கழண்டுக்கிட்டா ?

இதான் கேது காதல்/தாம்பத்யோட லட்சணங்கள் ..லாஜிக்கே இருக்காது. காரணமே கிடைக்காது. எல்லாம் நெல்லா இருக்கும். ஆனால் சுகம் ? நிம்மதி ? ஊஹூம்..

ஏன் காதலிக்கிறோம்?

18 வகை காதல் தொடருக்கு என்னவோ வரலாறு காணாத ஹிட்ஸ் கிடைச்சுக்கிட்டு தான் இருக்கு. ( வரலாறு = நம்ம பதிவுலக வரலாறுங்கோ). ஆனாலும் தொடர் முழுக்க முழுக்க ஜோதிட தொடரா வந்துக்கிட்டிருக்கு.

ஜோதிடத்தை தாண்டி இன்னம்கொஞ்சம் ஆத்தன்டிக்கேட்டடா அமைஞ்சா என்னன்னு கொஞ்சம் ஞம ஞம..

அதை செயலாக்கியிருக்கம். ஆக்சுவலா இந்த அத்யாயம் முன்னுரையா வந்திருக்கனும் அல்லது மொத அத்யாயமா வந்திருக்கனும்.(எடிட்டிங்ல பார்த்துக்குவம்)
இப்பம் பதிவோட தலைப்புக்கு வந்துருவம். ஏன் காதலிக்கிறோம்? சிலர் அச்சாணியமா வேற எதுக்குன்னு சுஜாதா கதை போல கையால சைகை செய்வாய்ங்க.
கேள்வி ஏன் காதலிக்கிறோம்ங்கறது தான்.

கில்மா தான் டார்கெட்டுன்னா கரிக்குலம் விட்டேயுடன் கண்ணால சந்தையில பாஞ்சுரலாமே. இல்லின்னா பலான சந்தையில செட்டில் ஆயிரலாமே? தேடுதலோடு பார்வைய திருப்பினா அக்கம் பக்கம் எத்தீனி கிராக்கி ? பின்னே ..ஏன் காதல்?

இங்கத்தான் நம்ம முடிவான தத்துவம் நிக்குது. உயிர்களின் ஆரம்பம் ஒரு செல் அங்கஜீவியான அமீபா. அங்கே இருந்துதான் அந்த ஒரு செல் கொழுத்து ஒன்றே போல இரு செல்கள் உருவாகி சுதந்திரம் பெற்று பிரிஞ்சு மற்றொரு அமீபாவாகி ம்யூட்டேஷன் காரணமா புதிய உயிர்கள் உருவாகி மனிதன்ல வந்து முடிஞ்சிருக்கம்.
ஆக நம்ம ஆதி உயிர் ஒன்னுதான். ஓருடல் ஓருயிரா இருந்தப்ப படைப்புடனான அதன் தொடர்பு பக்காவா இருந்தது.ஈகோ, காலம்,தூரம்,அபத்திரம் ஏதுமில்லை.
அந்த ஓருயிர் பல்லுயிர் -பல்லுடலாகி வந்த பிறவு தான் ஈகோ, காலம்,தூரம்,அபத்திரம்லாம் வந்துருச்சு. என்னதான் பல்லுடலானாலும் – லேசா சுயம் இருந்தாலும் – ஈகோ,தூரம்,காலம்,அபத்திரம்லாம் மத்த உசுரையும் வாட்டினாலும் மேக்சிமம் அதெல்லாம் இயற்கை மீதான நம்பிக்கையோட -தங்களை இயற்கைக்கு ஒப்புக்கொடுத்து -வாழ்ந்துக்கிட்டிருக்கு.

மன்சனும் காட்டு வாழ்க்கையில இப்படித்தான் இருந்தான். சகலத்தையும் தலைவனுக்கு ஒப்புக்கொடுத்துட்டு வாழ்ந்தான்.

சஞ்சார ஜீவனத்துலயும் இந்த குணம் ஓரளவுக்கு இருந்தது. ஆனால் எப்போ ஸ்திரவாசம் ஆரம்பிச்சதோ கொஞ்சம் கொஞ்சமா சுயம் பெருகிப்போச்சு. இயற்கையை உள்ளுணர்வோட பார்க்கிறதை விட்டுட்டு பர்ப்பஸ்ஃபுல்லா பார்க்க ஆரம்பிச்சான்.

இயற்கையை சகட்டுமேனிக்கு கன்ஸ்யூம் பண்ண ஆரம்பிச்சான். ஒரு சில உதவாக்கரை வெற்றிகளுக்கு பின் அவன் ஈகோ பூதாகரமாகி இயற்கைக்கு விரோதமாவே வாழ ஆரம்பிச்சுட்டான்.

வெயில்,மழை,காற்றுலருந்து தன்னை பிரிச்சுக்கிட்டான்.இயற்கையோட இருந்த கேபிள் தொடர்பு கட் ஆயிருச்சு. இதனால இந்த இயற்கையில -படைப்புல தான் தனிங்கற ஃபீல் வந்துருச்சு. எதிர்கால இருண்மையை எதிர்கொள்ள ஒரு துணை தேடி அவன் மனசு அல்லாட ஆரம்பிச்சது. அதான் காதல்ல வந்து முடிஞ்சிருக்கு.
மறுபடி ஞா படுத்தறேன். நாம இங்கே செக்ஸை பத்தி பேசலை. செக்ஸுக்காகவே செக்ஸெல்லாம் வன வாழ்வு,சஞ்சார வாழ்வுலயே க்ளோஸ். ஸ்திர வாழ்க்கையில ரிலாக்ஸ்ட் செக்ஸ் காரணமா செக்ஸுக்கு -பின்னான நிகழ்வுகள் அவனை ரெம்பவே அட்ராக்ட் பண்ணிருச்சு.

இந்த படைப்புடனான -இயற்கையுடனான அவனது போராட்டத்தோட தீவிரத்தை இயற்கையின் பிரதியான , நிதியான ,பிரதி நிதியான பெண்ணுடனான இன்டராக்சன் கொஞ்சம் குறைச்சாபல இருந்திருக்கனும்.அல்லது அவனது குற்ற உணர்வுக்கு ஒரு ரிலீஃப் கிடைச்சிருக்கனும்.

சக ஆண் இவனை போலவே ஒரு சக போராளி.அவனோட ஆயுதம் எப்ப வேணம்னா இவனுக்கு குறி வைக்கப்படலாம்.

ஆனால் பெண் அப்படி இல்லை. வன வாழ்வு,சஞ்சார ஜீவிதத்தோட ஒப்பிட்டா ஸ்திரவாசத்துல அவள் ரெம்ப சாஃப்டாயாச்சு. இவன் தயவை எதிர்ப்பார்த்து வாழற உசுராயிட்டா.

பெண்ணோட கொள்ளும் உறவு சப்கான்ஷியஸா இவனுக்கு இயற்கையுடனான உறவை ஞா படுத்துது.

உடலுறவுங்கறது அவன் உடலிலான மிருகத்தனத்தை,வன்முறைய கட்டுக்குள் வைக்க உடலுறவுக்கு பின்னான இன்டராக்சன் அவன் மனதிலான மிருகத்தனத்தை கட்டுக்குள் வைக்குது. (மிருகம் = உயிர் வாழும் இச்சை, பசி,உயிர்பயத்தின் போது கடைந்தெடுத்த சுய நலம்)

ஆக மொத்தத்துல காதல்ங்கறதுக்கான அவசியம் இயற்கையுடன் ஏற்பட்ட இடைவெளியால் மட்டுமே ஏற்பட்டிருக்கனும். அந்த இடைவெளியை பெண் நிரப்புவாள்ங்கற சப் கான்ஷியஸ் தாட் தான் மனிதனை காதலிக்க வைக்குது.

உயிர்களின் செயல்கள் அனைத்தையும் ரெண்டு கேட்டகிரியில அடக்கிரலாம்னு சைக்காலஜி சொல்லுது.

1.கொல்லுதல் 2.கொல்லப்படுதல்

இதனோட நோக்கம் சக உயிர்களில் இருந்து -இயற்கையில் இருந்து -படைப்பில் இருந்து தம்மை பிரிக்கும் உடல்களை உதிர்த்து ஒரே உயிராய் மாறுதல்ங்கறது என்னோட வாதம்.

1.கொல்லுதல் 2.கொல்லப்படுதல் இது ரெண்டுமே உடலுறவில் ஜஸ்ட் ஒரு செகண்ட் நிகழுது தட்ஸால். ஆனால் காதலில்?
ஃபிசிக்கலா கொல்லப்படுவதும் ,கொல்வதும் செகண்டுல முடிஞ்சு போற காரியம்.ஆனால் காதல்ல மன்சன் சைக்கலாஜிக்கலா கொல்றான்,கொல்லப்படறான். இது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு.மேலும் அந்த அனுபவங்கள் கென் பீ ரிகலெக்டட் அட் எனி மூவ் மென்ட்.

முன்னொரு அத்யாயத்துல சொன்னாப்ல தன்னை கடந்து இன்னொரு உயிரின் பால் கவனத்தை திருப்புவது ஒரு மெச்சூரிட்டி. வளர்ச்சி. ஆனால் அது இல்லாது தானில்லைங்கற நிலைக்கு வர்ரது அன் மெச்சூர்ட் மென்டாலிட்டி.

ஏன் காதலிக்கிறோம்னு தெரிஞ்சுக்கிட்டாலே காதல் ஃபணால் ஆயிரும். அவலை நினைச்சு உரலை இடிச்ச கதைய போலேம்பாய்ங்களே அப்படி ..
நாம தொடர்பு கொள்ள துடிப்பது இயற்கையோடு – ஆனால் தொடர்பு கொள்வது பெண்ணோடு.. ஒரு ரேடியோ -ரேடியோ ஸ்டேஷன் ஆக முடியுமா?
பெண்ணுக்கு எப்படி இயற்கையோடு உறுதியான தொடர்பு இருக்கிறதோ அதே போல ஆணுக்கும் இருக்கு. ஆனா ஆணின் தொடர்பு மேல் சேவனிசம் காரணமா – ஈகோ காரணமா தேசலாயிருது.

காதலிக்கும் போது ஆணின் மேல் சேவனிசம் -ஈகோல்லாம் கொஞ்சம் போல மங்கிப்போகுது.அதுவும் ப்ரப்போசல் ஓகே ஆகிற வரை “குருட்டு பிச்சைக்காரன் தன் தட்டில் விழும் நாணயத்தின் ஓசைக்கு காத்திருக்கிற மன நிலையில “ஆண் இருக்கான்.
இது அவனை இயற்கைக்கு நெருக்கமாக்குது.அவனோட காம்ப்ளெக்ஸ் எல்லாம் நெகிழ்ந்து போகுது. ப்ரப்போசல் ஓகே ஆனப்பறம் மறுபடி முருங்கை மரம் ஏறிருது அது வேற கதை.

ஏன் காதலிக்கிறோம்ங்கற கேள்விக்கு பதில் கிடைச்சுதா இல்லையா இந்த கேள்விக்கு பதிலை உங்க கமெண்ட்ல எதிர்பார்க்கிறேன்.
உடுங்க ஜூட்டு