ஆகஸ்ட் 8 முதல் சோனியாவுக்கு கவுண்ட் டவுன் ஆரம்பம்

வணக்கம்ணே.

08/Aug/2012 முதல் ஆகஸ்ட் 8 முதல் சோனியாவுக்கு கவுண்ட் டவுன் ஆரம்பம் ஆரம்பமாயிரும்.

யுபிஏ சர்க்காருக்கும் -சோனியா காந்திக்கும் நடக்கப்போற சம்பவங்களை நினைச்சா பரிதாபமா இருக்கு. சர்க்கார் அன்னாடங்காய்ச்சி மாதிரி ஆயிரும்.

ஒவ்வொரு பில்லுக்கு ஒவ்வொரு கட்சியோட ஆதரவை பெற மல்லு கட்ட வேண்டி வரும். தமிழ் நாட்ல மந்திரி சபை நிலவரம் மாதிரி தில்லி காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி விவகாரம் ஆயிரும்.

அவனவன் ஊட்டு மாப்ளை மாதிரி அலட்டப்போறான். சோனியா அம்மா பிழிய பிழிய அழுது கொஞ்ச நாள் சமாளிக்கலாம்.

ஆனால் ரெண்டு மாசத்துல ஆட்சி கவுந்து போனா கூட நான் ஆச்சரியப்படமாட்டேன். உங்களை பதிவுக்குள்ள இழுக்க போட்ட பாரா இது.

பிட்டு படம் மாதிரி இருக்கேன்னு நினைக்காதிங்க. ஒழுங்கு மரியாதையா ஜாதகத்தை அனலைஸ் பண்ணித்தான் எழுதியிருக்கேன்.டோன்ட் ஒர்ரி

காங்கிரஸ் பீகார் தேர்தல்ல பல்பு வாங்கறதுக்கு முந்தியே ஆங்கிலம் தெலுங்கு தமிழ்னு மும்மொழில பதிவு போட்டு சோனியாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் அபாயச்சங்கு ஊதின பார்ட்டி நாம.
.இத்தனைக்கும் அப்பம் ஜஸ்ட் நியூமராலஜிப்படியான ஆய்வுத்தேன். இடையில தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் சமயம் ஜெ, கலைஞர்,சோனியா,ராகுல்னு வரிசையா ஜாதகங்களை அனலைஸ் பண்ணி பதிவுகள் போட்டோம்.

தனக்கு வந்தாத்தான் தலைவலியும் சுரமும்ங்கற மாதிரி இந்த மகராசி தில்லியில உட்கார்ந்துக்கிட்டு கிழவாடிங்க பேச்சை கேட்டு ஜகனை கழட்டி விட்டுட்டாய்ங்க. அந்த புள்ளைய சி.எம் ஆக்காம விடறதில்லைன்னு கங்கணம் கட்டிக்கிட்டிருக்கம்.

மேலும் உ.பி தேர்தலுக்கு பிறகு யுபிஏ சர்க்காருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிருச்சு. காங்கிரஸ்ல சோனியாம்மா நாற்காலியே ஆட்டம் கண்டு போச்சு. ஆந்திராவுல சோனியா பேரை சொன்னதும் ராம நாராயணன் சினிமா கணக்கா சாமியாடற கிழவாடியெல்லாம் தெலுங்கானா பை எலக்சன்ஸ்ல கட்சி பல்பு வாங்கின பிறவு சி.எம் ராஜினாமா பண்ணனும் – மேலிடம் மாத்தி ரோசிக்கனும்னெல்லாம் அல்ட்டிமேட்டம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.

அட நம்ம தாத்தாவே வெளியிலிருந்து ஆதரவு -மந்திரிகள் ராஜினாமா -உண்ணாவிரதம்னு சினிமா காட்ட ஆரம்பிச்சுட்டாருன்னா இன்னா அருத்தம் அம்மாவுக்கு டப்பா டான்ஸ் ஆடிப்போச்சுன்னு தானே அருத்தம்.

தமிழ் ஈழம் மேட்டரை பொருத்தவரை காங்கிரஸை விட பா.ஜ.க வை நம்பலாம் . இங்கனருந்து பத்து அய்யரை அனுப்பி அவிகளுக்கு பிழைப்பு வழிகாட்டவாச்சும் – அங்கன உள்ள இந்து கோவில்களை காப்பாத்தவாச்சும் காட்டடி அடிப்பாய்ங்க.ஆனால் சோனியா,காங்கிரஸ்லாம் இந்த மேட்டர்ல பூட்ட கேஸு.

ஆக சோனியாம்மா ஆடி முடிச்சு ( அல்லது அவிக தலையில உட்கார்ந்த சைத்தான் ஆட்டி முடிச்சு) ஊரைப்பார்க்க பூட்டா நெல்லது நடக்கலாம். அது எப்பம் நடக்கும்னு கொஞ்சம் சின்சியரா பார்ப்போம்.

அம்மாவோட ஜாதக விவரம்: கடக லக்னம் , லக்னத்துல சனி . நாலாவது இடத்துல சூர்யன் குரு, அஞ்சுல செவ்,புதன்,சுக்கிரன் ,கேது , 11ல சந்திரன் ராகு ( அதாவது ரிசபராசிங்க. லக்னாதிபதி உச்சம் – அக்காங் நம்ம கலைஞர் தாத்தா ஜாதகத்துல உள்ள அதே அம்சம்தேன். இங்கன ராகு சேர்ந்து தொலைச்சுட்டாரு.

லக்ன சனி:
இந்த அமைப்பு இளமையில் முதுமையை தரும். ஜாதகருக்கு மட்டுமில்லிங்கண்ணா ஜாதகரோட வாழ்க்கைத்துணைக்கும் முதுமைதேன் பரிசு. மேலும் கால்,ஆசனம், நரம்பு தொடர்பான பிரச்சினைகளையும் தரும். ஒரு லேபரை கணவராக்கும் (ராஜீவ் காந்தி அந்த சமயம் ஏதோ ப்ரிக் ஃபேக்டரில வேலை செஞ்சுக்கிட்டிருந்தாருனு ஞா)

இதுமட்டுமில்லிங்கண்ணா சீக்கிரமே வா.து யோட கதையை முடிச்சுரும். சனி பிதுர்களுக்கும்,ப்ரேதாத்மக்களுக்கும் காரகர். அதனால ஆ.காரர் சீக்கிரம் ப்ரேதாத்மா ஆயிரவும் வாய்ப்பிருக்கு. சனி கரும காரகன். அதாவது ஏழேழு தலைமுறைக்கு மிந்தி செய்த பாவம்,புண்ணியத்துக்கெல்லாம் கூட கூலி கொடுத்துருவாராம்ல.

இவருக்கு இவிக ஜாதகத்துல சப்தமாதபத்யமும் ,அஷ்டமாதிபத்யமும் ( கணவர் – சொந்தகட்சி தலைவர்கள்- கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாரையும் காட்டுமிடம் இது) கிடைச்சது. கணவர் கதை முற்றும்ங்கறதால இந்த சனி மேற்படி சொந்தகட்சி தலைவர்கள்- கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாரையும் வாட்டி வதக்குதோனு ஒரு சம்சயம். உ.ம் ஒய்.எஸ்.ஆர். வீல் சேர்ல கலைஞர்.

இவர் 3 ஐபார்க்கிறதால சகோதரத்துக்கும் பாதிப்புத்தேன் ( ஸ்பெக்ட்ரம் ஜில அவிகளையும் விஜாரிப்பாய்ங்களாமே) ஆனால் இவரு செமை தகிரியத்தையும் கொடுப்பாருங்கோ. ( சவுண்ட் பாக்ஸு அடி வாங்கவும் வாய்ப்பிருக்கு) ஏழை பார்த்த கதை (வதை) ஆல்ரெடி ஓடிருச்சு. பத்தை வேற பார்க்கிறாருங்கோ.

இதனால சட்டையில்லாதவன் ,கிழிஞ்ச சட்டை போட்டவன், லேபர், பிச்சைக்காரி பணம் கூட அம்மாவுக்கு வந்து சேர வாய்ப்பிருக்கு. ( மைக்ரோ ஃபைனான்ஸ் மேட்டர் தெரியும்ல)

மரணம் -மரணம் தொடர்பான சொத்து ,சுகங்களுக்கெல்லாம் சனிதேன் இன் சார்ஜு. எட்டாமிடம் காரகம். அம்மாவுக்கு இன்னைக்குள்ள ” வானளாவிய அதிகாரம்” உயில் மூலமாவும் /வாரிசு அடிப்படையிலயும் வந்ததுதேன்.

சந்திரன் உச்சம் தேன். (மனோகாரகன்) ஆனால் ராகு கூட சேர்ந்தாரே. இதனால தண்ணீர் மூலமா பரவும் வியாதிகள்,மனோவியாதிகள், நுரையீரல்,சிறு நீரகம் தொடர்பான வியாதிகள் வரலாம்.

கடல் தாண்டியும் “விவகாரங்கள்” நடத்தின மாதிரி கீது. ராசி ரிஷபங்கறதால அம்மாவுக்கும் தாத்தாபோல பணம்,குடும்பம்னா உசுரு.

அதுலயும் ஒரு லொள்ளை பாருங்க சர லக்னத்துக்கு லாபஸ்தானம்தேன் பாதகஸ்தானம் லக்னாதிபதியே இங்கன மாட்னாரு.உபரியா ராகுவோட சேர்க்கை. அம்மாவுக்கு ” நெல்ல மனசுங்கோ”.

ரெண்டுக்குடையோனும் ஆறுக்குடையோனும் சேர்ந்ததால குடும்ப கலகம் ( மேனகா காந்தி எபிசோட் தெரியும்ல) மேற்படி ரெண்டுக்குடையோன்( தன பாவாதிபதி) தூர தேசங்களை காட்டும் 9 ஆமிடத்தோனான குருவோட சேர்ந்தாருங்கோ. இதனாலதான் ஏதோ நோன்பு அதிரசம் கணக்கா சொந்த பந்தத்துக்கு எதையோ அனுப்பி வச்சுட்டதா சுப்பிரமணியம் ஸ்வாமி உளறி கொட்டறாரோ என்னமோ?

இந்த சேர்க்கை 4 ஆமிடத்துல நடந்தது. 4ங்கறது தாய் வீட்டை காட்டுமுங்கோ ( இத்………தான மானாங்கறது) ஏதோ சிறுவாடு பணம் தாய் வீட்டுக்கு போகுது.

அடுத்து பாருங்க 4 ஆமிடத்துக்கு இம்மாம் பில்டப் இருந்தாலும் அங்கன விரயாதிபதி சேர்ந்தாருங்கோ. பிச்சையெடுத்தான் பெருமாளு அத்த பிடுங்குச்சாம் அனுமாரு கணக்கா கைய விரிச்சுருவாய்ங்களோ என்னமோ ?

4ன்னா இதயம்ங்கண்ணா இந்த பாவாதிபதியோட விரயாதிபதி சேர்ந்ததால தான் இதயமே இல்லாம நம்ம தொப்புள் கொடி சொந்தங்களுக்கு தொட்டிலுக்கு முன்னாடி சவப்பெட்டிகள் தயாரானப்பல்லாம் வேடிக்கை பார்த்தாய்ங்களோ என்னமோ?

அஞ்சாமிடத்தை பாருங்க: எண்ணிக்கைய பார்த்தா ஹவுஸ் ஃபுல்லா தோணும். ஆனால் இங்கன விரயாதிபதியான புதன் ஒக்கார்ந்தாரு. அஞ்சுன்னா புத்தி விரயம்னா தெரியுமில்லை. அஞ்சுன்னா புள்ளை விரயம்னா தெரியுமில்லை. அஞ்சுன்னா பேர்புகழ் ,மன அமைதி விரயம்னா தெரியுமில்லை.

இதுமட்டுமில்லிங்கண்ணா மிச்சம் மீதி எதுனா பெட்டர் ரிசல்ட் இருந்தாலும் அதை ஒழிச்சுக்கட்ட இங்கன கேது ஒக்கார்ந்தாரு.

என்னதான் எதிரிகளை பத்தி சதா சிந்திச்சு வாழ்ந்தாலும் ( செவ்) சகோதரங்களை தாங்கி பிடிச்சாலும் ( புதன், செவ்) சுக போக ஆடம்பர வாழ்க்கைய நடத்தினாலும் (சுக்கிரன்) இந்த இடத்துல கேது உட்கார்ந்ததால கடாசில மிஞ்ச ப்போறது விரக்தி.

கேது தர்ர சாய்ஸ் ரெண்டுதேன். ஒன்னு பிச்சை எடுக்கனும் அ சன்னியாசியாகனும். பிச்சையே எடுத்தாலும் கிடைக்கனுமில்லை.

இது பூர்வ புண்ணியத்தை காட்டற இடம் . இங்கன கேது உட்கார்ந்ததால அடி விழ ஆரம்பிச்சா தாளி ஏழேழு ஜன்மத்து பாவமும் ஞா வந்து ஞானத்தை தேட ஆரம்பிச்சுரனும். அப்படிவிழும். மேலும் இது வாரிசை காட்டற இடம் (ராகுல்) இங்கன கேது உட்கார்ந்ததால தான இவருக்கு சதா சர்வ காலம் 180 டிகிரில – ஏழாவது வீட்ல இருந்து பார்வை செய்யும் ராகுவோட பேரே வாரிசுக்கு ஃபிக்ஸ் ஆச்சோ என்னமோ?

அஞ்சுல உட்கார்ந்த கேது ராகுலை சன்னியாசியாக்கனும் அ பிச்சைக்காரர் ஆக்கனும். ரெண்டுல ஒன்னு சீக்கிரமே பைசல் ஆயிரும்.

5+3 துணிச்சலான முடிவுகள் 10+3 துணிச்சலான செயல்கள் 5+12 : புத்தி யுக்தியெல்லாம் வீணாஆஆஆஆஆ போயிரனும். 5+4 சதா குடும்ப சிந்தனை ( தாய்வீடுங்கோ) 5+11 சதா லாபம் குறித்த ஆவல், 5+ கேது நிராசை,அவமானம்,அவப்பேர், விரக்தி.

இதாங்கண்ணா அம்மாவோட ஜாதக பலன். இப்பம் தசாபுக்தியை பார்ப்போம்.

சனி தசை சுக்கிர புக்தி (27/Jun/2008 => 27/Aug/2011 )
பாதகாதிபதியோட புக்தி. லக்னாதிபதியே இங்கனதான் ராகுவோட சேர்ந்து உட்கார்ந்தாரு பாதகாதிபதி+சுகஸ்தானாதிபதி+லாபஸ்தானாதிபதியான சுக்கிரனோட கேது சேர்ந்திருக்கிறதால டப்பா டான்ஸ் ஆடப்போறது நிச்சயம்.

இவிக மண வாழ்வை பத்தி ஒரு தாட்டி ஓட்டிப்பாருங்க. (சுக்கிரன்) அதுக்கு காரணம் சுக்கிரனோட கேது சேர்ந்த எஃபெக்ட் தேன். வேணம்னா குரு தசை சுக்கிர புக்தில அம்மாவோட நெலமை எப்படியிருந்ததுன்னு கூகுல்ல தேடிப்பாருங்க (17/Jul/1993 => 16/Mar/1996 ) அதே ரேஞ்சுதேன் இப்ப மறுபடி வரப்போகுது.

இன்னொரு சமாசாரம் பாஸ். சனி தசையில சூரிய புக்தி 27/Aug/2011 அன்று ஆரம்பமாகப்போகுது. இதனோட எஃபெக்ட் ஆறு மாசம் முன்னாடி இருக்கும்னு அனுபவம்.

சூரிய தசையில சனி புக்தியோ ,சனி தசையில சூரிய புக்தியோ வந்தா நாஸ்திதேன். சூரிய குரு சேர்க்கை பத்தி ஸ்லாகிச்சு எழுதியிருந்தேன். ( 2+9) ஆனால் அதே குருவுக்கு ரோகாதிபத்யமும் இருக்குதுங்கோ.வாக்குஸ்தானாதிபதி சத்ரு ரோக ருணஸ்தானாதிபதியோட சேர்ந்தா நம்ம சொற்களே விற்களா மாறி கற்களை மழையா பொழிவிக்குமுங்கோ

சத்தியமே உரைச்சாலும் அது எதிராளிக்கு உரைக்காதுங்கோ . இந்த பீரியட் 08/Aug/2012 வரை நடக்குதுங்கோ. அதனால அடிமேல அடிதேன்.

2012, ஆகஸ்ட் ,8 க்கு அப்புறம் சனிதசையில சந்திர புக்தி ஆரம்பிச்சுரும்.கூட ராகு வேற இருக்காரு. ஒரு பாரால மனம்,சிறு நீரகம், நுரையீரல் பாதிக்கும். தண்ணீர் மூலம் பரவும் வியாதி வரலாம்னு சொல்லியிருக்கனே அதுவரலாம்.

லக்னாதிபதியோடயே ராகு சேர்ந்திருக்கிறதால அவருக்கு ரெட்டையான கேது அஞ்சுல உட்கார்ந்திருக்கிறதால ஒரு பெரிய்ய அவமானம் நடந்து சொல்லிக்காமயே கூட போயிரலாம். ( அட இத்தாலிக்குங்க)