தொடை அழகும் சொத்து சுகமும்

அண்ணே வணக்கம்ணே !
எதை எழுதலாம்னு ஆரம்பிச்சாலும் ஏற்கெனவே சொன்னாப்லயே இருக்கு. அப்பாறம் அரைச்ச மாவை அரைக்கிறான்னுருவிங்க. கணிணி புழக்கத்தால ஞா சக்தி வேற பஜ்னு ஆயிருச்சு. சரி சரி மேட்டருக்கு வந்துர்ரன்.

சாமுத்ரிகாலட்சணம்னு ஒரு சப்ஜெக்டு இருக்கு. ஒருத்தன்/ஒருத்தி எந்தளவுக்கு அளகா இருந்தா அந்தளவுக்கு அதிர்ஷ்டசாலின்னு சொல்லுது. இதுல தொடை அழகும் சேர்த்தி. அழகுக்கும் அதிர்ஷ்டத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக சொல்றேன்.

லக்னம்: தலை,முகம் ,இரண்டாமிடம் வாய் ,கழுத்து ,கண்களை காட்டுது. இப்படியே இறங்கிப்போனா எட்டாமிடம் பலான இடத்தை காட்டுது. ஒன்பதாமிடம்? தொடை .

இந்த ஒன்பதாமிடம் தான் அப்பா,அப்பாவழி உறவு, சொத்து ,முதலீடு,சேமிப்பு,தூர தேச தொடர்பு,புக்,வெப் பப்ளிஷிங் எல்லாத்தையும் காட்டுது. ஜாதகத்துல இந்த 9 ஆமிடம் சுப பலமா இருந்தா தொடையழகு சூப்பரோ சூப்பரா இருக்கும். மேலே சொன்ன விஷயங்களும் அனுகூலமா இருக்கும்.
ஆனா ஆண்கள் பெண்களின் தொடைய ரசிக்கிறதுல மட்டும் ரெண்டுவிதமான கருத்து இருக்கு.( நமக்கு) ஒன்னு அம்மாவுக்கு பிறவு இவ மடியில கண்ணசரலாம்ங்கற எண்ணம். அடுத்தது ..

வேற ஒரு சின்ன மேட்டரை சொல்லிட்டு இதையும் சொல்லிர்ரன். நமக்காகவே -அதாவது உங்களுக்காகவே ஒரு வலைதளம் ஆரம்பிச்சிருக்கேன்.
இதனோட உள்ளடக்கம் ……..ஒரு வரியில சொன்னா உங்களுக்கு பிடிச்ச வலைதளங்களை பற்றிய குறிப்புகள் .இந்த குறிப்புகளையும் நீங்களே தான் தரப்போறிங்க. முழு விவரத்துக்கு இங்கே அழுத்துங்க.

இப்போ பலான மேட்டருக்கு வந்துருவம். ஆண்கள் பெண் தொடையை ரசிக்கிறார்கள்னா அதுக்கான இன்னொரு காரணம் ..ஹ்ம்.. சொல்லிரலாமா? வேணாம் .. வேணாங்ண்ணா ரெம்ப ஏ வா போகும். ஆளை விடுங்க.
ஸ்..அப்பாடா எப்படியோ கவர்ச்சியான தலைப்பையும் கொடுத்து தலைப்புல உள்ள தொடையை ஜஸ்டிஃபையும் செய்துட்டம். இன்னைக்கு பாக்யாதிபதி எந்த எந்த பாவங்களில் நின்னா என்ன பலன்னு பார்ப்போம்.
1.லக்னத்தில்:
இவர் நைசர்கிக சுபரா-லக்னாத் சுபரா இருந்தா அப்பாவோட நல்ல குணங்கள் ஜாதகரில் ஏற்படும். அப்பா -பிள்ளை உறவு பெட்டரா இருக்கும். சின்ன வயசுலருந்தே சிக்கனம்,சேமிப்பு,மணி மேனேஜ்மென்ட்ல ஆர்வம், தூர தேசங்களை பற்றி தெரிந்து கொள்ளும் விருப்பம் இருக்கும்.எழுத்தாளரா கூட ஆகலாம். வெளி நாடு சென்று பொருளீட்ட வாய்ப்பு.
2.தனபாவம்:
பண விஷயத்துல அப்பாவை சார்ந்திருக்கலாம். அப்பா வழி சொத்துக்களை “அனுபவித்து”விடலாம். அப்பாவோட பஞ்ச் டயலாக்ஸை மிமிக்ரி பண்ணலாம் அ ரிப்பீட் பண்ணலாம்.அப்பா வீட்டோடு தொழில் செய்பவராக அ வீட்டோடு இருப்பவராக மாறலாம்.
3.சகோதர பாவம்:
அப்பா வேறிடம் -ஜாதகர் வேறிடத்தில் வசிக்கலாம். சந்திப்புக்காக பயணங்கள் தொடரலாம். அப்பா தில்லு துரையா இருக்கலாம். ஜாதகர் வெளி நாட்டு சங்கீதங்களை ரசிக்கலாம். சொத்து,முதலீடு,சேமிப்பு மேட்டர்ல அல்லல் அலைச்சல் நஷ்டம் ஏற்படலாம்.
4.மாத்ருபாவம்:
அப்பா கொஞ்சம் ஃபெமிலிஷா இருக்கலாம். ஹி மே பீ தி ஹோம் மேக்கர். அம்மா கமாண்டர் ஆஃப் தி ஃபேமிலியா இருக்கலாம். ஆனால் ஜாதகர் இதயத்துல அப்பாவுக்கு பிரத்யேகமான இடம் நிச்சயம்.ஜாதகருக்கு அம்மா,அம்மா வழி உறவுகளால் வீடு,நிலம்,சொத்து சுகம் ஏற்படலாம்.கல்வியே செல்வமா மாறும். ஜாதகர் போக்கு வரத்து, டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் துறையில முன்னேறலாம்.
5.புத்ரபாவம்:
அப்பா ஜாடையில பிள்ளை பிறக்கும். சிலருக்கு அப்பா இறந்த அதே வருடம். ஜாதகரின் பூர்வ ஜென்ம பாப புண்ணியங்களுக்கான பலன் எல்லாம் அப்பா மூலமாகவே கிடைக்கும். தூர தேசங்களில் இருந்து உதவி கிடைக்கும்( கணிதமேதை ராமானுஜத்துக்கு கிடைச்சாப்ல) அப்பா வழி சொத்துக்கள் கிடைக்கும். ஜாதகர் தம் புத்தி பலத்தால் இன்னும் சொத்து சேர்ப்பார். செட்டாக வாழ்வார்,தர்ம காரியங்களும் செய்வார். புத்தக வெளியீட்டில் சாதனை படைக்கலாம். ஸ்தூல பூஜைகளை விட மனோ பூஜைக்கு அதி முக்கியத்துவம் தருவார்.
6.ரோகபாவம்:
இங்கு பாக்யாதிபதி நின்றால் அப்பா நோய்,கடன்,வழக்கு,எதிரிகளால் பாதிக்கப்படுவார். அல்லது ஜாதகருக்கு அப்பாவுடன் விரோதம் ஏற்படும். சொத்துக்கள்,முதலீடு,சேமிப்புகள் மீது வில்லங்கம் ஏற்படும்.சிலர் கடன் வாங்கி சொத்து வாங்குவர். மெடிக்கல் ரீ இம்பர்ஸ்மென்ட் கிடைக்கும். தூர தேச தொடர்புகளால் கடன் ஏற்படும். ஓடாத பத்திரிக்கைய நடத்தறவுகல்லாம் இந்த கேட்டகிரிதான்.
7.களத்ர பாவம்:
இங்கு பாக்கியாதிபதி நின்றால் அப்பாவுடன் நல்ல தோழமை ஏற்படும். அப்பா வழி உறவில் மனைவி அமைவார். மனைவி வழியில் சொத்து கிடைக்கும். வெளி நாடு செல்வார். என்னடா வில்லங்கம்னா அங்கன ஒரு கிராக்கி மாட்டிக்கலாம். பார்ட்னர்ஷிப்ல முதலீடு சேமிப்பு தொடர்பான தொழில் செய்யலாம். தம்பதி சமேதரா தீர்த்தயாத்திரை போவார்.
8.ஆயுள்பாவம்:
இங்கு பாக்கியாதிபதி நின்றால் அப்பாவுக்கு கெண்டம்,அவர் மறைந்து வாழ வேண்டி வரலாம்,சிறை செல்லலாம்,ஜாதகரை பிரியலாம். ஜாதகர் கொலைத்தொழிலுக்கும் துணியலாம். ( சிக்கன் சென்டர்?) .தூர தேச பயணம் செல்கையில் விபத்து நேரலாம் அல்லது வெளி நாட்டில் உயிர் பிரியலாம். ஒரு மரணத்தால் ஜாதகர் தம் சொத்து,முதலீடு ,சேமிப்பு அனைத்தையும் இழக்க வேண்டி வரலாம். சகட்டு மேனிக்கு எழுதி கிளிச்சு செயிலுக்கு போற பார்ட்டியெல்லாம் இந்த கேட்டகிரி .
9.பாக்யபாவம்:
பாக்கியாதிபதி பாக்யபாவத்துலயே ஆட்சி பெற்றால் அப்பாவுக்கு நெல்லது. அவர் முன்னேற்றம் வேகம் பெறும். ஜாதகருக்கு பூர்விக சொத்து கிடைக்கும் . சேமிப்பு ,முதலீடுகளி ஆர்வம்,அனுகூலம் இருக்கும்.ஆனால் ஜாதகரின் ஜாதகத்தில் லக்னாதிபதி உச்சம் பெறாவிட்டால் அப்பா கோண்டுவாகி பெண்டாட்டிக்கும் -அப்பாவுக்கும் மத்தியில மாட்டி முளிக்கனும். கிட்னி வித்து வெளி நாடு போறதெல்லாம் இந்த கேட்டகிரிதான்.ஜாதகர் பப்ளிஷிங்,வெப் பப்ளிஷிங்ல பெயர் பெறுவார். ( உத்யோகஸ்தராவே முடிஞ்சுருவாரு)
10.ஜீவனபாவம்:
சுற்றுலா, சிறு சேமிப்பு துறை, வருவாய்த்துறை, செய்தி மக்கள் தொடர்பு அல்லது அற நிலைய துறைகளில் வேலை செய்யலாம். தொண்டு நிறுவனம் துவங்கி செயல்படலாம். ஃபுல் டைம் ஆன்மீக ,மத பிரச்சாரம் .ஜனக மகரிஷி போல இக,பர சுகங்களுக்கு மினிமம் கியாரண்டி உண்டு.
11.லாப பாவம்:
அப்பாவின் அன்போடு ,ஒரு காட் ஃபாதர் அல்லது ஃபாதர்லி பர்சனோட அன்பு ஆதரவு கிடைக்கும். சகோதர நஷ்டத்தால் அல்லது அவர் வேண்டாம் என்று சொல்லிவிடுவதால் பூர்விக சொத்து உபரியாகவே கிடைக்கலாம்.மூத்த சகோதரர் தந்தை ஸ்தானத்தில் இருந்து ஜாதகரை சம்ரட்சிப்பார்.
12.விரயபாவம்:
பூர்விக சொத்துக்கள் இரா. இருந்தாலும் வீண் விரயமாகிவிடும். அப்பா ? இருந்தாலும் இல்லாதது போலத்தான். ஓடிப்போன சிட் ஃபண்ட் முதலாளிகளிடம் பணம் போட்டவர்கள் இந்த கேட்டகிரிதான். சிவில் வழக்குகளுக்காக கோர்ட்டில் குடித்தனம் இருப்பவர்களும் இவர்களே. பொஞ்சாதி தாலிய அடகு வச்சு கவிதை தொகுப்பு போட்டு தெரிஞ்சவுகளுக்கு ஓசியில கொடுக்கிறவுகளும் இவிகதான்.

சுதேசியில் ஜெ,கலைஞர்,சோனியா,ராகுல் ஜாதக அலசல்

“சுதேசி”மாத இதழில் ஜெ,கலைஞர் ஜாதக அலசல்

அண்ணே வணக்கம்ணே !
சுதேசி மாத இதழ்ல ஜெ,கலைஞர்,சோனியா,ராகுல் குறித்த நம்ம ஜாதக அலசல் வெளி வரப்போகுதுன்னு சொல்லியிருந்தேன். அது வந்தே உட்டுது. நம்ம டவுசர் பாண்டி தான் முதல்ல பார்த்து தகவல் தந்தாரு. சுதேசி வலைதளத்துல அவிக ஒட்டு மொத்த இதழையும் பி.டி.எஃப் ஃபைலா வச்சிருக்காய்ங்க. இங்கே அழுத்தி ஃப்ரீயா டவுன் லோட் பண்ணிக்கலாம். ரைட் சைட் அரியணையில் அரங்க நாயகி தலைப்புள்ள ஃபைலை டவுன் லோட்பண்ணுங்க.

( ஹும்.. பதிவு போட நேரமில்லாத குறைக்கு என்னெல்லாம் கிம்மிக் செய்ய வேண்டி வருது)

அனுமனை அண்டினால் சர்வதோஷ பரிகாரம்

வழக்கமா ஒவ்வொரு கிரக தோஷம் குறைய ஒவ்வொரு சாமிய கும்பிடச்சொல்லி எங்காளுங்க ( ஜோதிடர்கள்).சொல்வாய்ங்க நம்ம பர்சனல் ப்ரிஸ்க்ரிப்ஷன் கடாசில தந்திருக்கன்.

ஆனால் அனுமனை அண்டி வணங்கினா, அவருக்கு ப்ரீதியான ராம நாமத்தை ஜெபிச்சா சர்வதோஷங்களும் பரிகாரமாவதோடு – ஆன்மீக ரீதியிலான முன்னேற்றமும் உறுதி என்பது என் அனுபவம்.

நான் ஏற்கெனவே பல தடவை சொன்னாப்ல “பலான மேட்டரு” காதல் கத்திரிக்கா காரணமா நம்ம சுயமரியாதைக்கு பங்கம் வர்ரதை ஃபீல் பண்ணி “அதை” செயிக்கத்தேன் அனுமாரை புடிச்சேன். அவருக்கு புடிக்குமேனு ராம நாமத்தை புடிச்சேன்.

இத்தினி நாளு நம்ம ஜாதகத்தை பத்தி பயங்கரமா பீத்தியிருப்பன்.ஆனால் இதுல உள்ள ஒரு பயங்கரத்தை இப்ப ப்ளாஸ்ட் பண்றேன்.

6,8,12 ஸ்தானங்களை பத்தி ஏற்கெனவே சொல்லியிருக்கேன். இவிகளோட “வீர தீர பிரதாபங்களை” மறுபடி சொல்லதேவையில்லைனு நினைக்கிறேன். இந்த 3 ஸ்தானாதிபதிகள் 6,8,12 ஸ்தானங்களுக்குள்ளயே மாறி உட்கார்ந்தா ஜாதகம் சேஃப். ( மாறி உட்காரனும் பாஸ். அதாவது 6 க்கு அதிபதி எட்டுல ,எட்டுக்கதிபதி 12 ல மாதிரி )

இந்தபாவாதிபதிகள் மேற்படி 3 இடங்கள்ள ஏதோ ஒரு இடத்துல சேர்ந்துட்டா அது விபரீதராஜயோகம். . இதெல்லாம் பாசிட்டிவ்.

ஆனால் நம்ம ஜாதகத்துல எக்கு தப்பா இவிக லக்னத்தோட சம்பந்தப்பட்டுட்டாய்ங்க. லக்னம்ங்கறது ஜாதகரை காட்டற இடம். 6ன்னா கடன், நோய்,விரோதம்,வழக்கு – 8ன்னா மரணம் – 12ன்னா வீண் விரயங்கள்.

லக்னத்துலயே 6 க்கு அதிபதி – 12க்கு அதிபதி இருக்க, 6க்கு அதிபதி 9 ல உள்ள அஷ்டமாதிபதியை பார்க்கறாருங்க. இதனோட பலன் என்னானு தந்தில ராசிபலன் படிக்கிற பார்ட்டி கூட கெஸ் பண்ணிரலாம். அதாவது பார்ட்டி டிக்கெட் வாங்கிரனும் – இல்லாட்டி மஞ்ச கடிதாசு கொடுக்கனும் – அல்லது கோர்ட்டுல குடியிருக்கனும்.

சுக்கிர தசை நடக்கிற வரை ( இவரு ரெண்டுல இருக்கிறதால தப்பிச்சேன்) இதெல்லாம் ஒன்னும் டிஸ்டர்ப் பண்ணலை. தாளி சூரியதசை ஆரம்பமாச்சு 6,8,12 அதிபதிகளோட லீலை ஆரம்பமாயிருச்சு. சூரிய தசை 6 வருஷம், ( 20/Apr/1993 முதல் 20/Apr/1999 வரை) சந்திர தசை ( 20/Apr/1999 முதல் 19/Apr/2009 வரை).
மேற்படி டிக்கெட் – மஞ்சகடிதாசு – கோர்ட்டுல குடித்தனம்லாம் கன ஜோரா நடக்கவேண்டிய நேரம். தசா நாதர்களுக்கு 6,8,12 அதிபதிகளுடன் தொடர்பு.

ஆனால் பாருங்க ஆஞ்சனேயர் அருளால மைனஸ் எல்லாம் ப்ளஸ் ஆகி ஒரு சரித்திரமே உருவாகிப்போச்சு. ( உங்கள்ள பலருக்கும் இதெல்லாம் பழங்கதைங்கறதால் ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்)
ஆஞ்சனேயருக்கும் நமக்கும் ஒரு இன்டிமசியே இருந்தது . (இப்பயும் இருக்கிறதா ஒரு நினைப்பு)

சரி ஆஞ்சனேயரை வணங்கறதால ராம நாமம் சொல்றதால சர்வதோஷங்களும் எப்படி பரிகாரம் ஆகும்னு சொல்றேன்.

1.அவர் சூரியன் கிட்டே படிச்சதால, சூரியனை பழம்னு நினைச்சு பிடிக்க பாய்ஞ்சதால சூரியனுக்கு பரிகாரம்.

2.கடல் தாண்டி இலங்கை போனதால சந்திரனுக்கு பரிகாரம்.

3.யுத்தத்துல துள் பறத்தினதால செவ்வாய்க்கு பரிகாரம்.

4.இலங்கைக்கு போய் “வேவு” பார்த்ததால ராகுவுக்கு பரிகாரம்

5.சீதைங்கற ஆத்மா ராமன் என்ற பரமாத்மாவோட இணக்கமா வாழும்போது பொன்மான் என்ற உலக பொருள் மேல ஆசையால பரமாத்மாவை பிரிஞ்சுருச்சு. இனி பரமாத்மன் வரவே மாட்டானோங்கற குழப்பத்துல (சீதை) தற்கொலைக்கு ட்ரை பண்ணப்போ ” இல்லே கண்ணு .. தலைவன் இருக்கான். வரான். வந்துக்கிட்டே இருக்கான்”னு உபதேசம் பண்ணதால குருவுக்கு பரிகாரம்.

6.ராமனோட அடிமைங்கறதால சனிக்கு பரிகாரம்

7ராம தூதனா ராவணனை டீல் பண்ணதால புதனுக்கு பரிகாரம்

8..கண்ணாலம்,காட்சி எதுவுமில்லாத நித்ய ராம நாம பஜனையில இருக்கிறதால கேதுவுக்கு பரிகாரம்

9.ராமன் களத்ரத்தை ( சீதை) இழந்து தவிச்சப்ப ராமனை சீதையோட சேர்த்துவச்சதால சுக்கிரனுக்கு பரிகாரம்.
//.செக்ஸ் மேட்டர்ல ப்ராக்டிக்கல் அப்ரோச் உள்ள ஒரே மதம் இஸ்லாம் தான், இன்னம் நிறைய பாய்ண்ட்ஸ் இருக்கு. ..// இத பற்றி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க..

எந்தகிரகம் சரியில்லைன்னா எந்த சாமிய கும்பிடனும்?

சூரியன் – காயத்ரி / சூரியன்
சந்திரன்- கன்னியாகுமாரி
செவ்வாய் – முருகன்
ராகு -துர்கை
குரு – தட்சிணா மூர்த்தி / ஷீர்டி பாபா போன்ற குருக்கள்
சனி – வராஹ ஸ்வாமி , வாராஹி
புதன்- கிருஷ்ணர்
கேது – வினாயகர்
சுக்கிரன் -லட்சுமி

வடிவேலுக்கு அஞ்சுல சனி

அண்ணே வணக்கம்ணே,

வடிவேலுக்கு பாவம் அஞ்சுல சனி ஆட்டிவைக்குது. ஜூன் 12க்குள்ளே அம்மா ஆட்சியில என்னெல்லாம் பாடுபடப்போறாரோ?

வடிவேலு மீது ஏற்கெனவே ஒரு புகாரை முன் வைத்தவன் நான். சலவை தொழிலாளி, சவர தொழிலாளி போன்ற பாத்திரங்களில் நடிக்கையில் அந்த இன மக்களை இழிவு படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட காட்சிகளில் கேள்வி கேட்காமல் நடிப்பது.( இதில் சொந்த சரக்கு எவ்வளவோ?) அடிக்கடி சண்டாளப்பாவிகளா.. சண்டாளங்களா என்று அனத்துவது .மேலதிக விவரங்களுக்கு இங்கே அழுத்துங்க.

ஏதோ விஜய்காந்துக்கும் இவருக்கும் சொந்த தகராறு. அதை குரங்கு புண்ணை பெரிசாக்கறாப்ல ஆக்கிக்கிட்டு இன்னைக்கு வி.காந்தை “இஷ்டா………..த்துக்கு ” வாரு வாருன்னு வாரிட்டிருக்காரு. வி.கா மேல ஆயிரம் விமர்சனங்களை வச்சாலும் ரஜினியை விட பெட்டர் ஆப்ஷன் வி.கா தான்.

ரஜினி இதோ வண்டி அதோ ஷாமியானான்னுட்டு வாய்ப்பந்தல் போட்டுக்கிட்டிருந்தப்ப கட்சி ஆரம்பிச்சு 3 பெரிய கட்சிகளுக்கு எதிரா நின்னு விளையாடின தில்லு துரை.பீஷ்மருக்கு சிகண்டி மாதிரி வி.காவுக்கு ஒரு வடிவேலு.சரி அவரை வார்ரதுனு முடிவு பண்ணியாச்சு. வாரட்டும். .

இதுக்கெல்லாம் அம்மா ஆட்சியில வடிவேலு என்ன பாடு படப்போறாரு ..எப்படி அனத்துவாருன்னு கற்பனை பண்ணினாலே சிரிச்சு சிரிச்சு வவுத்தை வலிக்குது. இதெல்லாம் வேற விசயம்.

கலைஞரை தூக்கறதுன்னு முடிவு பண்ணியாச்சு. இதையும் புரிஞ்சிக்க முடியுது.அப்படி தூக்கனும்னு முடிவு பண்ணா வேற எப்படி வேணம்னாலும் தூக்கலாம். ஆனால் நாகூர் ஹனீஃபாவின் பாட்டை கலைஞருக்கு பொருத்தி வியாக்யானம் பண்றச்ச உடம்பெல்லாம் கம்பளி பூச்சி ஊர்ராப்ல இருக்கு.

இறைவனுக்கு இணை வைப்பதை ஹராம் என்று கருதும் மதம் இஸ்லாம். ஆனால் அல்லாஹ்விற்காக எழுதப்பட்டு ,அல்லாஹ்விற்காக பாடப்பட்ட பாட்டை அதிலும் தமிழ் மட்டுமே அறிந்த முஸ்லீம்களுக்கு மட்டுமல்லாது அனைத்து மதத்தினருக்கும் இஸ்லாமின் அடையாளமாகவே மாறிவிட்ட “இறைவனிடம் கையேந்துங்கள்” பாட்டை கலைஞருக்கு பொருத்தி வியாக்யானம் பண்றது எந்தவகையில நியாயம்?

இது அல்லாஹ்விற்கு கலைஞரை இணைவைத்ததாக ஆகாதா? அட வடிவேலுவுக்கு “போறாது” பேசிட்டாரு. கட்சியில இருக்கிற முஸ்லீம் தோழர்களாச்சும் விசயத்தை சொல்லி தடுத்திருக்கலாமே. அதுவும் போவட்டும். கலைஞராச்சும் ஒரு “பெரிய மன்சனா” இதெல்லாம் தப்புய்யா.. பாய்ங்களுக்கு கோபம் வந்தா கஷ்டம்னு சொல்லியிருக்கவேணா?

வடிவேலு கோட் பண்ற பாடல் வரிகளை பாருங்க.

தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்

தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
ஒரு வாதத்துக்கு வச்சுக்கிட்டாலும் தாத்தா அரிசி மட்டும் தானே தராரு

வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்

வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்

தா.கிருட்டிணனுக்கு கூடவா?

அலைமுழங்கும் கடல்படைத்து அழகுபார்ப்பவன்

அடங்கொய்யால சேது சமுத்திர திட்டத்துக்கே சங்கு ஊதியாச்சு.

அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்

அப்ப சுனாமி கூட தாத்தா வேலை தானா?

தலைவணங்கிக் கேட்பவர்க்குத் தந்து மகிழ்பவன்

த பார்ரா?

தரணியெங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்

இது மட்டும் சீக்கிரமே நிறைவேறிரும். (ஸ்பெக்ட்ரம் ஜி புண்ணியத்துல)

வடிவேலு சார்! நடந்தது நடந்து போச்சு. இனியாச்சும் விட்டுத்தொலைங்க.

நம்ம கிருமி சார் போட்ட பதிவை பத்தி நான் போட்ட போடுக்கு வேற யாராச்சும்னா “ஆளவிடு”ன்னு ஓடியே போயிருப்பாய்ங்க. ஆனால் கிருமிகிட்டே சரக்கிருக்கு -முறுக்கிருக்கு -குறை சொன்னா குறைய ஏத்துக்கற பெருந்தன்மை இருக்கு – ஆராய்ச்சி இருக்கு -அனுபவம் இருக்கு – எல்லாத்துக்கும் மேல டைட்டில்ல விளையாடற திறமை இருக்கு. “ராகு column” தூளா இருக்கில்லை.

இந்த மாதிரி டுபாகூர் பிரச்சாரத்துக்கெல்லாம் அவசியமே இல்லாம ஒரு தேர்தலை நடத்த முடிஞசா எப்படி இருக்கும்னு கற்பனை ஹோண்டாவை சீற விட்டேன். அதில் கிடைத்த பதிவு தான் இது:

என் ஆதர்ச தேர்தல்
இன்னைக்கு நடக்கிற தேர்தல் எல்லாம் சொம்மா கண்கட்டி வித்தை, ஜாலக்கட்டு, வாண வேடிக்கை மாதிரி. இங்கே ( ஆந்திராவுல) சிரஞ்சீவி தனிய நின்னதால காங்கிரசு ஜெயிச்சுருச்சு. அங்கே விஜயகாந்த் ஜெவோட கூட்டு பொட்டதால திமுக தோற்கப்போகுது.

போன தாட்டி காங்கிரசுக்கும் – தெ.தேசத்துக்கும் வித்யாசம் என்னங்கறிங்க? ஜஸ்ட் ஒரு சதவீதம். அப்போ தெலுங்கு தேசத்துக்கு போட்ட ஓட்டெல்லாம் வேஸ்டா?

1999 தேர்தல்ல சந்திரபாபு சி.எம்.ஆனாரு அப்பம் பா.ஜ.க வோட கூட்டு. காங்கிரசுக்கும் – தெ.தேசத்துக்கும் வித்யாசம் என்னங்கறிங்க? ஜஸ்ட் ரெண்டு சதவீதம். (இதுல பா.ஜ.க வாங்கின ஓட்டு ரெண்டு சதம்)

அதுலயும் மும்முனை போட்டில நடக்கிற கூத்து பெருங்கூத்து. இவ்ள எதுக்கு ஒரு தாட்டி என்.டி.ஆர் காலத்துல 1000 ஓட்டுக்குள்ள (வித்யாசத்துல ) 100 இடங்கள் வரை தோத்தாய்ங்க. அனகாபள்ளிங்கற தொகுதில 3 ஓட்ல தோத்தாய்ங்க.

அட தமிழகத்துல ம.தி.முக கதை கூட இப்படியா கொத்த சோகக்கதை தானே. இந்த ரிவிட்டெல்லாம் இல்லாம, சனம் எல்லோரும் ஓட்டுப்போடற மாதிரி, போட்ட ஓட்டு எக்காரணம் கொண்டும் வீணாப்போகாம இருக்க ஒரு தேர்தல் முறையை யோசிச்சேன்.

தேர்தல்ல வேட்பாளர்களே இருக்கக்கூடாது.
– மோசமான கட்சியெல்லாம் பெட்டர் வேட்பாளரை போட்டு செயிச்சுர்ராய்ங்கப்பா

பிரதமர்/ முதல்வர் வேட்பாளர் யாருங்கறதையும் அறிவிக்கக்கூடாது.
– ஒரு தனிப்பட்ட மன்சனொட சரிஸ்மா காரணமா மோசமான கட்சி செயிச்சுருதுப்பா

கட்சிகள் தான் மோதனும். எல்லா கட்சிகளும் உட்கட்சி ஜன நாயகத்தை மெயின்டெய்ன் பண்றாய்ங்களா பார்க்கனும். கட்சி தேர்தலை கூட தேர்தல் கமிஷனே நடத்தனும்.

ஒவ்வொரு கட்சியும் தன்னோட தோற்றம் – வரலாறு – உத்தேச வேட்பாளர் பட்டியல் ,தேர்தல் வாக்குறுதிகளை கமிஷன் கிட்டே கொடுத்துரனும். ஸ்டாம்ப் பேப்பர்லங்கோ. அடுத்த தேர்தலுக்குள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றலைன்னா கட்சி, தலைவன், வேட்பாளர்களோட எல்லா சொத்தையும் ஜப்தி பண்ணிரனும்.

கட்சிகள் தங்களோட உத்தேச வேட்பாளர் பட்டியலை ( வித் ப்ரியாரிட்டி) தேர்தல் கமிஷன் கிட்டே கொடுத்துரனும். .

– அஞ்சாறு சீட்டு மட்டும்தேன் வருங்கற கட்சிகள்ள சொந்த பந்தங்களுக்கு சீட்டுகளை வாரி கொட்ட முடியாதில்லை. மத்தவன் தேர்தல் வேலை பார்க்கமாட்டான்ல. போடா பொங்கின்னுருவான்ல.

தேர்தல் கமிஷன் கட்சிகள் தந்த விவரங்களை சரி பார்த்து தன்னோட கமெண்ட்ஸோட வெப்சைட்ல வச்சுரனும். அதை மட்டும் தான் டாகுமெண்டாவோ, ஆடியொ,விடியோ ஃபைலாவோ மாத்தி கட்சிகள் தேர்தல்ல பிரச்சாரம் பண்ணனும்.

பிரச்சார காலம் குறைந்த பட்சம் 100 நாளா இருக்கனும். ( டாரா கிழியனும் – அதுவும் தேர்தல்னு வச்சா ஏப்ரல் மே மாசத்துல வச்சு டங்குவாரை அறுக்கனும்) செலவுக்கு கட்டுப்பாடெல்லாம் இருக்கக்கூடாது. வாகன சோதனை , வெங்காய சோதனைல்லாம் இருக்கக்கூடாது. செலவழிக்கட்டுமே மவனுங்க.

புல்லெட் ப்ரூஃப் கண்ணாடி, ஜெட் கேட்டகிரி பாதுகாப்போட எஸ்.டி.டி பூத் ரேஞ்சுல ஏடிஎம் சைஸுக்கு பூத் ஏற்பாடு செய்யனும். ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு பூத் . வாக்காளர் அட்டைய கதவுல உள்ள ஸ்கானர்ல வச்சாத்தான் கதவே திறக்கனும். தேர்தல்ல 100 சதவீதம் வாக்குகள் பதிவானா தான் எண்ண ஆரம்பிக்கனும்.

கட்சிகளுக்கு கிடைச்ச வாக்குகளின் சதவீதத்தின் அடிப்படையில அந்த கட்சிகளோட ப்ரப்போஸ்ட் கேண்டிடேட்ஸை எம்.பி/எம்.எல்.ஏக்களா நாமினேட் பண்ணனும்,

அதே அடிப்படையில மந்திரி சபையையும் அமைக்கனும். தேர்தலுக்கு முந்தி கட்சிகள் கொடுத்த தேர்தல் அறிக்கைகளின் அம்சங்களை அவிக பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பொறுக்கி எடுத்து புதிய அரசின் குறைந்த பட்ச செயல் திட்டம் வகுக்கப்படனும்.

மேற்படி குறைந்த பட்ச செயல் திட்டத்தை அமல் செய்வதற்கு ஏற்ற வகையில் அரசியல் சாசனத்தை சட்டங்களை , திருத்தனும்.

பாராளுமன்றம் /சட்டமன்றத்துல வாக்கெடுப்பு நடக்கும்போது உறுப்பினர்கள் தம் மனசாட்சிப்படி வாக்களிக்க வழி செய்யனும். ( கொறடா புருடாக்கெல்லாம் டாட்டா) மசோதா நிறைவேறலன்னா நீ சோதான்னிட்டு அரசாங்கத்தை வீட்டுக்கெல்லாம் அனுப்பக்கூடாது. தாளி அஞ்சு வருசத்துல என்னதான் கிழிக்கான்னு பார்த்துரனும்.

ஒரு எம்.பி., எம்.எல்.ஏ செத்தா மறு தேர்தல் எல்லாம் நடத்த கூடாது. கட்சி கொடுத்த ப்ரியாரிட்டி லிஸ்ட்ல செத்தவனுக்கு அடுத்து உள்ள கேண்டிடெட்டை டிக்ளேர் பண்ணிரனும்.

மனிதர்களை தேடும் “சம்பவங்கள்”

“போதுமென்ற மனமே பொன்செய் மருந்து”. “இருக்கிறத விட்டு பறக்கறதுக்கு ஆசை படாதே”, “ஆசையே உலக துன்பங்களுக்கு காரணம்”, பருகெடுதூ பாலு தாகடம் கன்னா கூர்ச்சுனி நீள்ளு தாகடம் மேலு ( ஓடிக்கிட்டே பால் குடிக்கிறத விட உட்கார்ந்துக்கிட்டு தண்ணி குடிக்கிறது மேலுனு அர்த்தம்) (டாஸ் மாக் சரக்கு இல்லிங்கண்ணா)

இதெல்லாம் கையாலாகாதவங்க பேச்சாயிருச்சு. சாமியாருங்க கூட அத்தனைக்கும் ஆசைப்படுனு சொல்ற காலமாகிப்போச்சு.

“ஆசையே உலக துன்பங்களுக்கு காரணம்”னு புத்தர் என்ன டாஸ்மாக் கடைல போதையிலயா சொன்னார்.போதிமரத்து கீழே ஞானம் பெற்றுச்சொன்னார். உன் ஆசையே உன் துன்பங்களுக்கு காரணம்னு சொல்லலே. உன் ஆசையா என் ஆசையானு ஸ்பெஷலைஸ் பண்ணாம மொட்டையா உலக துன்பங்களுக்குன்னு ஆரம்பிக்கிறார்.

இதுல தான் சூட்சுமமிருக்கு. எவன் ஆசைப்பட்டாலும் அந்த ஆசை காத்துல வைரஸ் பரவின மாதிரி பரவுது.எவனாச்சும் நாலணா தலைவன் செத்தா ஜங்சன்ல லாரி டயரை கொளுத்திவிட்டா அட்மாஸ்ஃபியர் பாழாகற மாதிரி எவனுடைய மனசுல ஆசைங்கற பொறி விழுந்து அது கருக ஆரம்பிச்சாலும் நூஸ்ஃபியர் பாழாகுது. ( மனிதர்களின் எண்ணங்களால் உருவாகிற சூழல்)

இயற்கையை உள்ளபடி புரிஞ்சிக்கிட்டா எவனும் எதுக்கும் ஆசைப்படமாட்டான். இயற்கைக்குன்னு ஒரு அஜெண்டா ( நிகழ்ச்சி நிரல்) இருக்கு. அதுல நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. அதை எந்த சக்தியாலயும் மாத்த முடியாது.

உயிரில்லாத பொருட்கள்(அப்படினு நாமதான் நினைக்கிறோம்) முழுசாவும், ,ஐந்தறிவுள்ள பிராணிகள் ஓரளவுக்கும் எப்படியோ அந்த அஜெண்டாவை புரிஞ்சிக்கிட்டு அதற்கேற்ப நடந்துக்குதுங்க. இயற்கையோட நிகழ்ச்சி நிரலுக்கு முழு திருப்தியோட ஒத்துழைப்ப கொடுக்குதுங்க.

இந்த விதிப்படி பார்த்தா நாமெல்லாம் மண்ணாந்தைங்க. நாம ஃப்ளாட்டு, வீடு, டி.வி, கம்ப்யூட்டர் மாதிரி பொருட்களை பார்த்து இதை வாங்கிரனும்பா, இத மட்டும் வாங்கிட்டா போதும்னிட்டு நினைக்கிறோம். அங்கே போடு, இங்கே வை. அங்கே நிற்க வைனு (முட்டாள் தனமா) பேசறோம்.

எனக்கென்னமோ இந்த பொருட்கள்தான் அப்படி நினைக்க வைக்குதா? நம்மை கமாண்ட் பண்ணுதானு ஒரு சம்சயம்.

அட ஜாமான் செட்டை விடுங்க. நிகழ்ச்சிகளை எடுத்துக்குவம். அது பர்த்டே பார்ட்டியாகட்டும், விபத்தாகட்டும், கொலையாகட்டும், தற்கொலை ஆகட்டும். ஜாமான் செட்டு எப்படி நம்மை கண்ணடிச்சு கூப்டு எங்கன வந்து உட்காரனும்னு நினைக்குதோ அங்கே உட்கார்ர மாதிரி சம்பவங்களும் மனிதர்களை தேடி வருதானு டர்ரான டவுட்டு வந்திருச்சு.

ஒரு உதாரணத்தோட இதை விளக்க முயற்சி பண்றேன். நீங்க ஒரு காலனில இருக்கிங்க. அங்கே 200 ஃபேமிலி இருக்குனு வைங்க. அங்கே வர்ர 2010, ஜூன் 21 ஆம் தேதி ஒரு குடும்பம் வரவுக்கு மேல செலவு பண்ணி, கொண்டாடிட்டு, பட்ஜெட்ல விழற துண்டை ஈடு கட்ட பொருளாதார குற்றங்கள்ள ஈடுபட்டு போலீஸ்ல மாட்டி தற்கொலை செய்துக்கிடனும்னு இயற்கையோட நிகழ்ச்சி நிரல்லே இருக்குனு வைங்க.

இந்த மெசேஜை பத்து பன்னெண்டு வருஷம் முன்னாடியே கூட அந்த ஜில்லால, அந்த ஸ்டேட்ல சில சமயம் அந்த நாட்ல , சில சமயம் உலகத்துல இருக்கிற எல்லா பொருட்களும் எப்படியோ ரிசீவ் பண்ணிக்கிடுதுங்க.

குறிப்பிட்ட சீக்வென்ஸை க்ரியேட் பண்ண எல்லா பொருட்களும் முயற்சி பண்ணுதுங்க. நான் என்ன நினைக்கிறேன்னா மேற்படி நிகழ்ச்சி நிரல்ல குறிப்பிட்ட காலனில,குறிப்பிட்ட அப்பார்ட்மென்ட், அதுல குறிப்பிட்ட வீடுன்னெல்லாம் இருக்காதுன்னு தான் நினைக்கிறேன் ,

ஒரு அப்பார்ட்மென்ட்ல ஒரு தகாத சம்பவம் நடக்கிறதுக்கு 3 மாசம் முந்தி அந்த அப்பார்ட்மென்டை ஒரு கருமேகம் மாதிரி, கரிய நிற கொசுவலை மாதிரி ஒரு அலை கப்பிக்குது.

குறிப்பிட்ட தகாத சம்பவம் ( கொலை அ தற்கொலை) நடக்கிறதுக்கு முந்தி அந்த 3 மாசத்துல அதே அப்பார்ட்மென்ட்ல பலருக்கு மேற்படி கொலை அ தற்கொலைக்கான சிச்சுவேஷன் வந்திருக்கும்.

மனத்தூய்மையோ , மந்திர பலமோ , தெய்வ பலமோ, கிரக பலமோ , தாயத்தோ அந்த சம்பவம் அவிகளை கூப்டப்ப ” ஊஹூம் நான் மாத்தேன்”னு சொல்ல வச்சிருச்சு.

மேற்படி ஐட்டம்ஸ் எதுவுமில்லாத பார்ட்டி மாட்டிக்கிறான். தொங்கறான். தந்தியில செய்தியா வரான்.

ஏன்னா..நிறைய சம்பவங்கள்ள பார்த்திருப்பிங்க கடைசி செகண்ட்ல கூட டிஸீஸ்ட் (சாகறவன்) மாறிர்ராங்க. ஒரு தடவை கிராஃபிக் ரவிங்கற எல்டர் ஃப்ரெண்டு தன் நண்பர்கள் மூணு பேரோட டூவீலர்ல வெளியூர் போனார். ரெண்டு வண்டில வண்டிக்கு ரெண்டு பேரா புறப்பட்டாங்க. ஒரு இடத்துல யூரின் பாஸ் பண்ண இறங்கினாங்க. காரியத்தை முடிச்சுட்டு மறுபடி ஏர்ரப்ப ரெண்டாவது வண்டில பின்னாடி உட்கார்ந்து ட்ராவல் பண்ண பார்ட்டி அதுவரைக்கும் க்ராஃபிக் ரவி பின்னாடி உட்கார்ந்து ட்ராவல் பண்ண வண்டிக்கு மாறிட்டாரு. அவர் ஏறின வண்டி அடுத்த திருப்பத்துலயே ஒரு லாரியோட மோத ஓட்டினவனுக்கு சின்ன கீறல் கூட இல்லே பின்னால உட்கார்ந்திருந்தவரு மட்டும் காலி. இந்த சம்பவத்துல செத்திருக்க வேண்டியவன் ரவி. ஆனால் அவன் சாகலை.இது மாதிரி நிறைய சம்பவங்கள்.

இதுலருந்து நான் புரிஞ்சிக்கிட்டதென்னன்னா இயற்கையோட அஜெண்டால ஒரு கொலை, ஒரு தற்கொலை,ஒரு விபத்துன்னு மொட்டையா இருக்கே தவிர க்லைஞர், ஜெயலலிதா ,முருகேசன் இப்படி பர்ட்டிகுலரா இருக்கிறதில்லை.

இந்த ஐ.பி ,கொலை, தற்கொலை, விபத்துங்கற இழவெல்லாம் ஒரு மியூசிக்கல் சேர் மாதிரி. எவன் தன் நெஞ்சுல ஆசைங்கற வேக்குவத்தை வச்சிக்கிட்டு வேகமா ஓடறானோ அவனுக்கு ஒரு சேர் கிடைச்சுருது.ஐ.பி ,கொலை, தற்கொலை, விபத்துக்கு இலக்காயிர்ரான். என்னடா விளையாட்டு இது , ஏன் இப்படி இரைக்க இரைக்க ஓடறோம்னு யோசிச்சிக்கிட்டே ஓடறவன் ஆட்டத்துல கோட்டை விட்டுர்ரான்.( அதாவது க்ரேட் எஸ்கேப்)

1982 ல நான் பத்தாம் வகுப்பு . பரீட்சைல 72 % மார்க் கிடைச்சது. இந்த 72 % ஐ நான் தேடிப்போகலை. அதுவா தேடிவந்தது. சுயம்வரம் மாதிரி வச்சிக்கங்களேன். குறிப்பிட்ட 72 சதவீதமோ, விபத்தோ, சாவோ கைல மாலைய வச்சுக்கிட்டு சுயம்வர மண்டபத்தை சுத்தி சுத்தி வருது. தனக்கு பிடிச்சவன் கழுத்துல போட்டுருது. எனக்கு எனக்குன்னு முண்டியடிக்கிறதால ஒரு இழவும் கிடைக்காது.

நான் சொல்லவந்தது என்னன்னா .. சம்பவம்தான் மனுஷனை தேடி வருதே தவிர, தேடிப்போற மனுஷனை சம்பவம் ரெகக்னைஸ் பண்றதில்லை. இதே விதிதான் பல விஷயங்கள்ளயும் வேலை செய்யுது.

1982ல தானா தேடி வந்த 72 சதவீதத்தை கொண்டாடாம பழைய மாதிரியே இருந்திட்டிருந்தா இன்னும் பல சமாச்சாரங்க கூட என் லைஃப்ல என்னை தேடி வந்திருக்கலாம். ஆனால் சனம் உசுப்பேத்தி விட்டதுல மெய் மறந்துட்டன். (மெய் என்ற வார்த்தைக்கு உண்மை, உடம்புன்னு ரெண்டு அர்த்தம் இருக்கு)

தமிழ் சினிமால ரஜினி ,மாதிரி நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்புனு நினைக்க ஆரம்பிச்சுட்டன்.

1982 ல நான் ஸ்கூல் செகண்ட். முதலா வந்த பார்ட்டி கிறிஸ்துவ குடும்பம். சினிமாபார்க்க மாட்டான். பேசமாட்டான். நாக்கை கடிச்சிக்கிட்டு குண்டு குண்டா எழுதிக்கிட்டே இருப்பான். அந்த காலத்து எம்.ஜி.ஆர் தனமான சிகையலங்காரம்(?) முகத்துல எண்ணெய்.

நாம “ஊரை சுத்தின மாதிரியுமிருக்கனும், அண்ணனுக்கு பொண்ணு பார்த்தமாதிரியும் இருக்கனும் டைப்பு. அதுக்கே “முக்கனிகளில் முதல் கனி, இங்கிலீஷ் மாதத்தில் 5 ஆவது மாதம், தமிழ் மாதத்தில் பத்தாவது மாதம்”னு பட்டம் வந்துருச்சி.

அது வந்தப்ப போடாங்கோ என்று விட்டு நான் என் சுதர்மத்தை பின்பற்றியிருந்தா நாறியிருக்கமாட்டேன். எவனை வெறுத்தேனோ அவன் எதையெல்லாம் இழந்து முதலிடத்தை பிடிச்சானோ அவனோட கருமமெல்லாம் என்னை சுத்திக்க ஆரம்பிச்சுருச்சு. அந்த முதலிடம் எல்லா தளத்துலயும், களத்துலயும் கிடைக்கனும்னு ஆசை பட ஆரம்பிச்சேன். நாறிட்டேன்.

அந்த நாளாவது பரவாயில்லை 72 சதவீதத்துக்கே மாமேதை பட்டம்.இப்ப பாருங்க. 99.99%ன்னா இது போதுமா யோசிக்கிறான்.

எந்த அப்பனை பாரு எம்புள்ள ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரனுங்கறான். ,எந்த அம்மாவ பாரு எம்புள்ள ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரனுங்கறா. அப்ப ரெண்டாவது மூணாவது வரதுக்கெல்லாம் ஆள் வேணாமா?

படி படி …இதைவிட்டா பசங்க கிட்டே வேற வார்த்தையே பேசாத பேரன்ட்ஸ் அதிகமாயிட்டாங்க. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னு படிச்ச நாய்ங்களே பெத்தவுகள நடுத்தெருவுல விடறகாலம்.இதுல ரேங்கு படிப்பு படிக்கிற புள்ளைங்க எங்கே அப்பா அம்மாவ காப்பாத்த போவுது.

நான் படிக்காதிங்கனு சொல்லலே . படிங்க. வேணாங்கல. உங்களை சுத்தி என்ன நடக்குதுனு தெரிஞ்சிக்கிட்டே படிங்க. உங்களுக்கு முன்னாடி படிச்சவன் நிலையெல்லாம் என்னனு தெரிஞ்சிக்கிட்டு படிங்க. உங்க படிப்புக்கு அப்பா அம்மா என்ன செலவு பண்றாங்க? அவிகளுக்கு அந்த பணம் எப்படி வருது? அரசாங்கம் உங்க படிப்புக்காக என்ன செலவு பண்ணுது? அந்த பணம் எப்படி வருது? தெரிஞ்சிக்கிட்டே படிங்க.. படிச்ச பிறகு என்ன பண்ண போறிங்க? அதனால வீட்டுக்கு என்ன லாபம்? நாட்டுக்கு என்ன லாபம்னு தெரிஞ்சிக்கிட்டே படிங்க.

அப்படியா படிக்கிறாய்ங்க? இல்லையே..இவிக படிக்கிற படிப்புக்கும் வாழ்க்கைக்கும் எதுனா சம்பந்தம் இருக்கா? இல்லையே. எத்தனை மேஸ்திரி தேவை, எத்தனை இஞ்சினீர் தேவைனு ஒரு கணக்கு போட்டு பாருங்க. மேஸ்திரிங்க ரேஞ்சுல இஞ்சினீருங்க தயாராகிட்டிருக்காங்க. இவிகளுக்கு என்ன வேலை தரப்போறிங்க. கட்டி முடிக்கிற பாலமெல்லாம் படக் படக்குனு விழுந்துருது.

சரி இஞ்சினீர் ஆனவனெல்லாம் என்ன பண்றான்? லஞ்ச ஒழிப்பு ரெயிட்ல மாட்டறவன்ல நிறைய பேர் இஞ்சினீர்தான்.

மனுஷனுக்கு வர்ர துன்பத்தை விட அது தனக்கு வரக்கூடாத துன்பம்ங்கற அவனோட நினைப்புதான் அவனுக்கு துன்பத்தை தருது.

இந்த படைப்போட பிரம்மாண்டத்தையும் தன்னையும் மனுஷன் ஒப்பிட்டு பார்த்துக்கனும். “இத்தரை கொய்யா பிஞ்சு நாமிதிற் சிற்றெறும்பு”ன்னார் கவிமணி . அது கூட ஜாஸ்திதான். புதுசா கற்பனை பண்ண வேண்டியிருக்கு.

வாத்தியார் ஒரு படத்துல “உலகம் பிறந்தது எனக்காக”ன்னு பாடுவாரு. சனமும் விசிலடிச்சுட்டு மறந்துட்டாங்க. உலகம் நமக்காக பிறந்திருந்தா அது வாஸ்து சாஸ்திரப்படி சதுரமாவோ, செவ்வகமாவோ இருந்திருக்கும்.

உலகம்ங்கற வார்த்தை நாம வாழற இந்த பூமிய மட்டும் குறிக்குதுனு நினைக்கிறேன். விஸ்வம்னா ஓரளவுக்கு இந்த படைப்போட பிரம்மாண்டம் உறைக்கும் போல. அண்ட சராசர பிரபஞ்சங்கள்னும் ஒரு பிரயோகம் உண்டு. இதெல்லாம் நாளுக்கு நாள் ஒரு பக்கம் விரிவடைஞ்சுகிட்டு இன்னொரு பக்கம் சுருங்கிக்கிட்டு வருதாம்.

(ஆமாம் பெண்ணோட முட்டைக்கருவுக்கு கூட அண்டம்னு பேரை வச்சது யாருங்க? ஓகோ ..அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டுங்கறத தாண்டி அண்டமே பிண்டம், பிண்டமே அண்டம்னு கூட தெரிஞ்சு வச்சிருந்தாங்களோ என்னமோ? பெரியாளுங்கப்பா)

இதுல நாம எங்கே கணக்கு எதுல கணக்கு? நான் அனுபவத்துல தெரிஞ்சி,புரிஞ்சி, செரிச்சிக்கிட்டத ரெண்டாம் வாய்ப்பாடு மாதிரி சிம்ப்ளிஃபை பண்ணி சொல்றேன். ஆசையே உலகதுன்பங்களுக்கு காரணம். நீ ஆசைப்படறதால எதுவும் வந்து சேரப்போறதில்லை. சில நேரங்கள்ள ஜஸ்ட் நம்ம வில் பவரால சிலதை சாதிக்க முடியலாம். ஆனால் அது ஹாட் வாட்டர் ஊத்த கழுவி வச்சிருக்கிற ஃப்ளாஸ்க்ல ஊத்தின ஐஸ் வாட்டர் மாதிரி. காலம் தன் ஏற்பாட்டின் படி தன் வேகத்துல ஃப்ளாஸ்கை கவிழ்த்துட்டு தான் ஊத்த நினைச்ச ஹாட் வாட்டரை ஊத்திருது. ஃப்ளாஸ்க் டமாலாயிருது.

நீ தேடிப்போறது கிடைக்காது. கிடைச்சாலும் நாறிப்போயிருவ. தானா வர்ரது கிடைக்காம போகாது. அது கிடைக்காட்டாலும் நஷ்டமில்லே.

உங்களுக்கு இந்த ஸ்தூல உலகத்துல நிறைஞ்சிருக்கிற ஸ்தூலமான ஆபத்துகளே முழுசா தெரியாது. ஆனால் சூக்ஷ்ம உலகம் வேற ஒன்னிருக்கு அதுக்கு ஒரு அஜெண்டா இருக்கு.அதுல கை வச்சி திருத்தற கெப்பாசிட்டி ஒரு கடவுளுக்குதான் உண்டு. கடவுள் ஒன்னும் கலைஞர் இல்லே எவனெவன் பாராட்டு விழாவுக்கு வந்தானு கணக்கு போட்டு ஃபேவர் பண்ண.

ஒருத்தன் பசி,பட்டினி,சொறி,சிரங்குமா அவதிபடறான்னா அதுக்கு பின்னாடி ஆயிரம் இருக்கும். அதுவே அவனுக்கு பெட்டர் சாய்ஸ்.

ஒருத்தன் பெண்டாட்டியால இம்சை பட்டு கோர்ட்டு,போலீஸ் ஸ்டேஷன்னு ஏறியிறங்கறான்னா அதுவே அவனுக்கு பெட்டர் சாய்ஸ்.

இதுக்கெல்லாம் வேர் ஜோதிட சாஸ்திரத்துல இருக்கு. வாழ்க்கைல மனுஷங்களுக்கு வர்ர ஏன்?எதுக்கு? எப்படி?ங்கற கேள்விக்கெல்லாம் இதுல பதில் இருக்கு.

ஜோதிஷம் ஆன்மீக பயணத்தின் முதல் படி
இதன் இறுதி இலக்கு ஆன்மீகம்.

ராசிச்சக்கரம் Vs பிறவிச்சக்கரம்

ராசி சக்கரத்துல 12 ராசிகளை கவனிச்சிருப்பிக. ஒன்னொன்னுத்துக்கு ஒரொரு சிம்பல் கொடுத்திருப்பாக.( இந்த சிம்பல்ஸை சூட்சும புத்தியோட பார்த்தாலே அந்த ராசிக்காரக சரித்திரத்தையே சொல்லிரலாம்) தங்களோட ராசிகளை தெரிஞ்சுக்கிட்டு கிளி ஜோசியர்கிட்டேருந்து இன்டர் நெட் வரை ராசிபலனை தெரிஞ்சிக்க தவிக்காத ஜன்மமே கிடயாது. இங்கே நான் சொல்லப்போறது ராசிபலனில்லே. பிறப்பின் ரகசியம். மறு பிறவிகளின் இருண்மையை. ஸ்ருஷ்டியின் ரகசியத்தை.

ரிஷிகள் ,மகரிஷிகள் காலத்துல டெலஸ்கோப் இல்லே.விண்வெளி ஓடங்கள் இல்லே. இருந்தும் அண்டை வெளியை அவதானித்து ஒவ்வொரு நட்சத்திர கூட்டத்தையும் ஐடன்டிஃபை பண்ணி “ஓ இந்த நட்சத்திர கூட்டம் குதிரை முகத்துல இருக்கு இந்த க்ரூப்புக்கு அஸ்விணினு பேரை வைப்போம் (அஸ்வினி என்றால் குதிரைனு அர்த்தம்) மொத்த 27 நட்சத்திர கூட்டங்கள் இருக்கு. இப்படியாக படிப்படியாக முன்னேறி கிரக சஞ்சாரங்களால் ஏற்படும் கிரகணம்,அமாவாசை,பவுர்ணமி இத்யாதிய துல்லியமா கணக்கிட்டாங்கன்னா அது அண்டை வெளிய ஆராய்ச்சி பண்ணித்தான்னு நான் நம்பலை.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு. நமக்குள்ள ஒரு பேரண்டம் இருக்கு. நட்சத்திர கூட்டங்களிருக்கு. கிரகங்கள் இருக்கு. கிரக சஞ்சாரம் இருக்கு. அமாவாசை நடக்குது,பவுர்ணமி நடக்குது. ஈகோ என்பது வலுவுறாத காலம். மக்கள் குழுக்களாய்,குழுவின் நலத்தை மட்டும் நாடி வாழ்ந்த காலம் .எனவேதான் அந்த ரிஷிகள் மகரிஷிகள் தமக்குள் இருந்த பேரண்டத்தை வேறொரு அலைவரிசையில் தரிசித்தே ஜோதிஷ சித்தாந்தங்களை உருவாக்கியிருக்க வேண்டும்.

ராசிச்சக்கரம் என்பது வெறுமனே மக்களை 12 மந்தையா பிரிச்சு பலன் சொல்லத்தான்னு நான் நம்பலை. அதுல சூட்சுமம் இருக்கு. அதை ஊன கண்ணால அகங்காரத்தோட, சுய நலத்தோட பார்த்தா ஒர் ல…வும் புரியாது. ஆனால் அதுல அடங்கியிருக்கு சூட்சுமம். அதை தெரிஞ்சிக்கிட்டா அதனோட நோக்கத்தை புரிஞ்ச்சிக்கிட்டா முக்தி தான். அதுல பரிணாம தத்துவம் அடங்கியிருக்கு. ஆன்மீகத்தின் சாரம் இருக்கு.

ராசிச்சக்கரத்தை பத்தி இத்தனை பில்டப் கொடுத்தாலும் செய்தில வருமே நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல் படினு இந்த பதிவை அந்த கேட்டகிரில வச்சிக்கங்க.

நாடி ஜோசியத்துல உங்க முன் பிறவி,பின் பிறவி பத்தியெல்லாம் வருதுனு பேசிக்கிறாங்க. நான் போன சின்ன காஞ்சிவரத்துல பாவம் என் கிட்டே வசமா மாட்டிக்கிட்டு காசை கூட திருப்பிக்கொடுத்துட்டாக.

என்னை பொருத்தவரை படைப்பு,பிறப்பு, வாழ்க்கையெல்லாத்தயுமே ஒரு மெகா தொடரா உணர்ரேன். இதையெல்லாம் சொல்லி எனக்கு வேட்டியோ இல்லே ஆத்துக்காரிக்கு புடவையோ தானம் கேட்க போறதில்லை. ( சுயலாபமில்லேனு சொல்லவரேன்) இந்த மெகா தொடர் இன்றைய தொடர்கள் மாதிரி டி.ஆர்.பி ரேட்டிங்கை பொறுத்து யு டர்ன் எல்லாம் அடிக்காம நூல் பிடிச்ச மாதிரி போவுது. (அதுவும் கோல்டன் த்ரெட் ).

மேஷம்:
இந்த ராசிக்காரவுக ரொம்பவே சுறுசுறுப்பா இருப்பாக. எதிரி யாரு என்னனு பார்க்கமாட்டாக படக்குனு மோதிருவாங்க. ஒரு ப்ளான் இருக்காது. மளமளனு செயல்பட்டுகிட்டே போவாக ஒரு ஸ்டேஜ்ல திக்குதெரியாம நின்னுருவாக. பணம்,குடும்பம்,பேச்சு,வார்த்தை,சரசம்,சல்லாபம்,ரசனை, தீனி, நொறுக்குதீனி இதுக்கெல்லாம் இவிக லைஃப்ல இடமே இருக்காது. சதா தன்னை பத்தி, தன் முயற்சிகளை பத்தி,தன் முன்னேற்றத்தை பத்தியே சிந்தனை இருக்கும். இந்த சோம்பேறி உலகத்துல சுறுசுறுப்பா துடிப்பா இருந்த ஒரே காரணத்தால எதிரிகளை சம்பாதிச்சு லொள்ளுக்குள்ளாகி நாறியிருப்பாக . இவிக அடுத்த பிறவில ரிஷபராசிலதான் பிறக்க நினைப்பாங்க ஏன்னா………

ரிஷபம்:
இவிகளுக்கு பணம்னா உயிரு. இவிக நட்பு,விரோதம் எல்லாத்துக்கும் பணம்தான் காரணமா இருக்கும். கூடப் பிறந்தவுகளை கூட மறந்து குடும்பம் குடும்பம்னு மாடு மாதிரி உழைப்பாங்க. பேச்சுன்னா வெல்லம். நல்ல ரசனை இருக்கும். தீனின்னா முதல்ல நிப்பாங்க. சமையல் பக்குவம்லாம் மாஞ்சு மாஞ்சு சொல்வாங்க. செக்சுல நிறையவே கிழிக்கனும்னு நினைப்பாங்க ஆனா துரித ஸ்கலிதம் மொக்கையாக்கிரும். இதனால கூட கில்ட்டியால பெண்டாட்டி தாசர்களாயிருவாக. இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் உண்டு. பயம் இருக்கும்.. லேசான மிரட்டல் இருந்தாலே ஒடச்சி திருப்பிக்குவாங்க. ரிஸ்க் எடுக்கமாட்டாங்க. இவிக வாழ்க்கை செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வருமே தவிர வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டாங்க. மாற்றத்தை விரும்பாத ராசி இதான்.

இவிக தான் அடுத்த ஜென்மத்துல மிதுன ராசில பிறப்பாங்க. ஏன்னா மிதுன ராசிக்காரவுக பணவிசயத்துல சூதாட்டத்தனமா இருப்பாங்க. சகோதரர்கள்,பயணங்கள் ,செக்ஸ் இதான் முக்கியத்துவம் வகிக்கும். பேச்சு மாறுவாக. குடும்பத்தை விட்டு ஈசியா பிரிவாக. தேவையிருந்தா மானாவரியா பேசுவாக. தேவையில்லன்னா முத்து உதிருமே தவிர பேச்சு வராது. பயங்கர ரிஸ்க் எல்லாம் ஃபேஸ் பண்ணுவாங்க.

இவிக அடுத்த ஜன்மத்துல கடக ராசில பிறப்பாங்க. ஏன்னா கடக ராசிக்காரங்க தாயையே சுத்தி சுத்தி வருவாக.( அன்போ விரோதமோ எதுவா இருந்தாலும் அம்மாக்கிட்டேதான். பெண்டாட்டிய கூட வேலக்காரிதனமாதான் பார்ப்பாங்க. வீடு வீடுனு வீட்டையே கட்டிக்கிட்டு அழுவாங்க. பிடிவாதமிருக்கும். மாற்றத்தை ஆரம்பத்துல எதிர்த்தாலும் பேஷா செட் ஆயிருவாங்க.

இந்த கடக ராசிக்காரங்கதான் அடுத்த பிறவில சிம்மராசில பிறப்பாங்க. ஏன்னா.. சிம்மராசிக்காரன் வீட்டு வேலைய கூட விட்டுட்டு ஊர் வேலைய செய்வான். வீட்ல இருக்கிறவக “அவனா அவன் தண்டத்தீனி தாண்டவராயன்”னுவாங்க. ஊர்ல இருக்கிறவகளோ அந்த தம்பியா நல்ல ஹெல்பிங்க் நேச்சரும்பாங்க. ஆனால் இவிகளுக்கும் செக்ஸ் மேல தணியாத ஆர்வமிருக்கும். அதே சமயத்துல தாய் மேல நல்ல மரியாதை வச்சிருப்பாங்க. தாய் சொல்லை தட்டாத தனயன்னா அது இவிகதான். கடக ராசில பிறந்து அட்ஜஸ்ட் ஆகியே வாழ்ந்த வாழ்க்கைக்கு கொயட் ஆப்போசிட்டா இந்த பிறவில கலகக்காரர்களா இருப்பாங்க. நம்பி வந்துட்டா உசுரை கூட கொடுத்து காப்பாத்துவாக. ஆனால் உலகம் இவங்களோட தன்னம்பிக்கைய ஆணவமாவும், தான குணத்தை திமிராவும், உதவும் தன்மையை இளிச்ச வாய்த்தனமாவும், பொதுவேலைல இறங்கறத உருப்படாத குணமாவும் ட்ரீட் பண்ணி ரொம்பவே நோகடிப்பாங்க. இவிக மனசுல வாரிசுகள் குறித்த அனேக கனவுகள் இருக்கும். ஆனால் இவிகளுக்கு ஆண்வாரிசு இல்லாம போகலாம். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணேனு குழந்தை பிறக்கும் . அதுவும் நாமர்தாவா மாறி கவலைய குடுக்கும்

இப்படி நொந்து நூடுல்ஸ் ஆன பார்ட்டிகள்தான் அடுத்த பிறவில அண்டினவனை எல்லாம் எக்ஸ்ப்ளாயிட் பண்ற கன்னிராசில பிறப்பாங்க. கன்னிராசிக்காரவுக தங்களோட மித்ர துரோகத்தை நினைச்சு அடுத்த ஜன்மத்துல நட்புக்கு முக்கியத்துவம் தர்ர துலா ராசில பிறப்பாங்க. துலா ராசில பிறந்து நட்பு,காதல்,மனைவினு சுத்தி சுத்திவந்து நொந்து போனபிறகு அடச்சீ இந்த மென்மையான உணர்வுகளே வேணாம்னு ராசிச்சக்கரத்துல அஷ்டம ராசியான விருச்சிகத்துல பிறப்பாங்க.

விருச்சிக ராசியோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா.. இவங்களை சேட்டிஸ்ஃபை பண்ண கடவுளால கூட முடியாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைம்பாங்களே அப்படி சுற்றத்துல குற்றம் பார்க்கிறதும் தேள் கொட்டற மாதிரி அந்த குற்றங்களை பட்டியல் போடறதுமே இவிக வேலையா இருக்கும். இவிகளுக்கு வாழ்க்கை சூடும் சுவையுமா நகரனும்னா எதிரி இருக்கனும்.ஒரு எதிரி இருக்கிறவரை ரெம்ப சுறு சுறுப்பா இருப்பாய்ங்க. எதிரி ஒழிஞ்சதுக்கப்பாறம் ரெம்ப டீலாயிருவாய்ங்க.லைஃப்ல சொம்மாவே இருக்கமாட்டாய்ங்க. ரிஸ்க் எடுக்கிறது ரஸ்கு சாப்பிடற மாதிரி. இப்படியே உடம்பு,மனசு எல்லாத்தையும் ரணமாக்கிக்குவாய்ங்க. இப்படி வாழ்ந்த ஒரு பார்ட்டி சாகறச்ச என்ன நினைக்கும்? தூத்தெரிக்க.. இதெல்லாம் வேஸ்டுப்பா.. அடுத்த சான்ஸுனு ஒன்னு கிடைச்சா படிப்பு,வேலை,வெட்டி, பதவி, சொத்து ,சுகம்னு செட்டில் ஆயிரனும். உப்பு ஊறுகாய்க்கு உதவாத விவகாரத்துல இறங்கவே கூடாதுனு தான் நினைக்கும் ,

இவிகளுக்கு தனுசு ராசியில பிறக்கறது தான் பெஸ்ட் சாய்ஸா தோணும். எதிரியை நினைச்சே வாழ்க்கைய வீணாக்கினவுக இந்த பிறவில எதிர்காலத்தை நினைச்சே நாசமா போவாய்ங்க. கிடைச்சதை வச்சு அனுபவிக்காம முதலீடு பண்றது, சொத்தாக்கிறது, அதுல வில்லங்கம், சேமிக்கிறது அதுல வில்லங்கம்னு அல்லாடற பார்ட்டி யாருன்னு பார்த்தா அது தனுசு ராசியா தான் இருக்கும்.

இப்படி வாழ்ந்து எதையுமே அனுபவிக்காத பார்ட்டி சாகறச்ச என்ன நினைக்கும்? தத்.. இந்த தொலை நோக்கு ,தொலையாத நோக்கெல்லாம் பிராணத்துக்கு இம்சைய கொடுக்கிற ஐட்டமா இருக்கு அடுத்த ஜென்மத்துல தாளி “கருமத்தை செய் பலனை எதிர்பாராதே” ரேஞ்சுல வாழ்ந்துரனும்னு தான் நினைப்பாய்ங்க.. அவிகளுக்கு பெஸ்ட் சாய்ஸ் மகரம்.

ஏன் உழைக்கிறோம் எதுக்கு உழைக்கிறோம் நம்ம உழைப்பின் பலன் ஆருக்கு போகுதுன்னு கூட தெரியாம உழைக்கிறவுக ஆருனு பார்த்தா மகர ராசிக்காரவுகதான். இவிக லாபத்தையே நோக்கமா கொண்ட கும்பராசியில பிறக்கிறதும் – ஒவ்வொரு வேலையிலயும் லாபத்தை எதிர்பார்த்தே நொந்து நூடுல்ஸ் ஆன பார்ட்டி இருக்கிற அழிக்கறதுக்குனு பிறக்கிற மீன ராசியில பிறக்கறதும் தர்க பூர்வம் மட்டுமில்லை . இட்ஸ் கொய்ட் நேச்சுரல்.

இங்கத்திக்கி பிறவிச்சக்கரம் முடியுதுனு கேள்விப்பட்டிருக்கேன்..

பி.கு:
ஆன்மீக குரு யாரின் அடுத்த பார்ட் நாளைக்கு

நவகிரகங்களிலிருந்து விடுதலை

விடுதலைன்னதும் ஞா வர்ரது நம்ம பாரதியாரும் -பெரியாரும்தான். பாரதியார் விதேசி அடிமைத்தனத்துலருந்து நாட்டு விடுதலைக்காக பாடினார். பெரியார் சுதேசி அடிமைத்தனத்துலருந்து பெரும்பான்மை மக்களோட விடுதலைக்காக பாட்டா பாடினாரு.

நம்ம பங்குக்கு இந்த விடுதலை கோஷத்தை எடுத்தாச்சு. இத்தினீ நாளு மன்சங்க எல்லாம் ஃபுட் பால் மாரி. நவ கிரகம் எல்லாம் ஃபுட் பால் ப்ளேயர் மாரி. அதுக எப்படி உதைச்சா அந்த பக்கம் போயி உழ வேண்டித்தானு சொல்லிக்கினு இர்ந்த முருகேசு கபால்னு இப்படி ஒரு பதிவை போடறாருன்னு கும் மாயிட்டிங்களா?

இதுக்கே இப்டி டீலாயிட்டா எப்டி இன்னும் நெறய சரக்கு கீது நைனா. இத்னீ நாளு இந்த கிரகம் இங்கே நின்னா இப்டி , அங்கே நின்னா அப்டினு சொல்லிக்கினு கட்ந்தேனா.எனுக்கே பேஜாரா பூட்சிபா. நம்ம பெரியாரு பொறந்த நாட்ல, அவரு சாமியே இல்லே பூடுங்கடான்னு சொன்ன நாட்ல நாம ஜோசியம்,ஜாதகம்னு சொல்லிக்கினு கட்ந்தா கூடொ கேட்க ஆளிருக்கே..இன்னும் எத்தினி ஆயிரம் பெரியார் பொறந்தாலும் இந்த சனத்தை திருத்தவே முடியாதானு ரோசிச்சிக்கினு கட்ந்தேனா அப்போ கப்புனு ஒரு ஐடியா வஞ்சுபா.

சனங்க எதிர்காலத்தை இந்த ஜாதகங்களை வச்சி சொல்ல முடியறதாலதான் நித்யானந்தா சாமி மாரி டுபாகூர் பார்ட்டிங்க இந்தா மாரி ஆட்டமெல்லாம் போடறானுங்கோ கடவுளை கூட மறந்துட்டு இந்த நாத்தம் புட்ச சாமியாருங்களுக்கு சரண்டராவுறாங்கோ. அந்த கெரகத்துக்கே டேக்கா குடுக்க கத்து குடுத்துட்டா எப்டி கீயும்னு ரோசிச்சி ரோசிச்சி புச்சு புச்சா பரிகாரம் எல்லாம் கண்டு புட்சேன் நைனா..

அயிரை மீனுக்கு வேட்டி விரிச்சப்ப கொற மீனு மாட்னாப்ல ஒரு ஜவாப் கெட்சிச்சிப்பா. இப்போ நீ என்னை துரத்திக்கினு வரே. நீ என்னை புடிக்கனும்னா உனக்கு எதோ புடிப்பு கிடைக்கனும். என் அங்கவஸ்திரமோ, வேஷ்டி முனையோ, தலை மயிரோ, கையோ காலோ எதோ ஒன்னு கட்சாதான் உன்னால என்னை புடிக்க முடியும்.

இந்த ஆமை கீதுல்ல ஆமை அந்த மாதிரி கை,காலெல்லாம் உள்ளாற இஸ்துக்கினா எப்டிப்பா புடிக்க முடியும். இந்த கெரகம் எல்லாம் நம்மாளுங்களை எப்போ எஃபெக்ட் பண்ணுது தெரியுமா? அது குடுக்க நென்ச்சத விட மஸ்தா ஆசைப்பட்டு,அலைஞ்சி பறைசாத்தற பாரு அப்பத்தான் எஃபெக்ட் குடுக்குது.

ஒரு பேச்சுக்கு சொல்லிக்கிவம். உனக்கு ஒங்க ஊட்டு வேலைக்காரிதான் பெண்டாட்டியா வரனும்னு கீது. நீ அவளை கட்டிக்கிவியா.ஊஹூம்..பில் குல் கட்டமாட்டே. ஊர்ல கீற குடுமி அய்யருங்கோ, சாஸ்திர காரவுங்க்கோ எல்லாத்தயும் தாலியறுத்து யாகம் கீகம் பண்ணி சுமாரா ஒரு பொண்ணை கட்டிக்கிறேனு வை.

ஜாதகம்னா இன்னா தெரீமா? ஆகாசத்துல கச்சா முச்சானு நட்சத்திரங்க கீதுல்ல. அந்த மேப்பு தாம்பா ஜாதகம். ஆகாசத்துல கோயி முட்டை ஷேப்ல கீரத நம்ம வசதிக்கு சதுர்ரமா போட்டுக்குரோம் அம்புட்டுத்தான்.

அந்த சதுரத்தை 12 டப்பாவா பிரிச்சி வச்சிகிரானுங்கல்லே. அது டப்பா இல்லே மாமு.. ஒரு ஏரியானு வச்சிக்கியேன். மொத்தம் 12 ஏரியா கீது. ஒவ்வொரு ஏரியாவுக்கு
30 டிகிரி. மொத்தம் 12 டப்பா 12X30 = 360 டிகிரி.

நட்சத்திரம் நட்சத்திரம்ன்றாங்களே அது சிங்கிள் நட்சத்திரம் இல்லேமா. ஒரு க்ரூப்பு . இப்போ அஸ்வினின்றானுங்கோ. அஸ்வினின்னா இன்னா குதிரே. குதிரே ஷேப்ல இருக்கிற நட்சத்திர க்ரூப்பை அஸ்வினின்னானுங்கோ. பிரியுதா..

ஒரொரு நட்சத்திரத்தையும்(அதாம்பா க்ரூப்பு) 4 பாகமா பிரிச்சானுங்கோ.இந்தா மாதிரி கீர பாகத்துல 9 பாகம் சேர்ந்தது ஒரு ராசி. ஒரு ராசிக்கு ஒரு டப்பானு 12 டப்பா போடறானுங்கோ. ஒரு ராசிக்கு 9 பாகம் . 12 ராசிக்கு 108 பாகம். இது எங்கயோ ஆகாசத்ல கீதுனு சொன்னேன். அதுல ஒன்னும் மாத்தமில்லே.

ஆனால் அதே செட்டப்பு நம்போ பாடிலே கூட கீதுபா..இந்த டப்பாவுங்களை நெல்லா பாருங்கோ. ரைட்டு ,லெஃப்டு, டாப்பு,டவுனு எப்டி பார்த்தாலும் நாலு நாலு டப்பா தெரியுதா.

இந்த டப்பாவுங்களை அப்டியெ அடிச்சி நிமிர்த்தி நிக்க வை மாமூ.. அத்தான் மன்சன். மொத டப்பா கீது பாரு அதான் தலை. ரெண்டாவது டப்பா கண்ணு,வாயி, இப்டி 12 ஆவது டப்பா பாதத்தை காட்டுது.

அங்கே ஆகாசத்துல எப்டி கிரகம் எல்லாம் ரவுண்ட் அடிக்குதோ அதே மாதிரி இங்கனயும் அதாம்பா நம்ப பாடிலயும் ரவுண்ட் அடிக்குது. இத்த தான் பெரி மன்சனுங்கோ அண்டத்ல கீர்து பிண்டத்துல கீது.பிண்டத்ல கீர்து அண்டத்ல கீதுனு சொல்லி வச்சிருக்கானுங்கோ.

நம்போ ஆகாசத்துக்கு போயி அங்கே இன்னா நடக்குதுனு பார்க்கனும்னா இஸ்ரோ காரன் விடற ராக்கெட்ல தான் போய் பார்க்கனும். ஆனால் நம்ப பாடில இன்னா நடக்குதுனு கொஞ்சம் கான்சன்ட் ரேட் பண்ணா பார்க்கமுடியுமில்லியா? இத்தை கண்ட் ரோலுக்கு கொண்டார முடியுமில்லியா. இதை பத்தி வெவரமா சொல்னும்பா .. நம்ம கண்டு பிடிப்பான நவீன பரிகாரங்கள் மேட்டரை மொத மொதல்ல எழுதினப்ப டங்குவார் அறுந்துது பாரு.

பேதியாகி மொத்தத்தையும் எரிச்சுட்டன் ( வருஷம்: 1994) ஆன்மீகத்துல தொடரா ஆரம்பிச்சம். இது பாப்பாரவுக பொழப்ப கெடுக்கிற வேலையாச்சா எடிட்டரை போட்டு பிசிஞ்சு நிறுத்த வச்சிட்டாய்ங்க.

அப்பாறம் ராஜமண்ட்ரில கொல்லபுடி வீராஸ்வாமி அண்ட் சன்ஸ் னுட்டு சூப்பர் பப்ளிஷர்ஸ். அவிக நம்ம மணி மேகலை பிரசுரம் சாதியில்லை. புராதன புஸ்தவங்களை எல்லாம் நோண்டி எடுத்து – வெரிஃபை பண்ணவச்சு சீப் ரேட்ல புக்கா போடுவாய்ங்க. அவிகளுக்கு நம்ம ஸ்க்ரிப்டை அனுப்பிட்டம். பாவம் DTP எல்லாம் பண்ணி கரெக்சனுக்கு அனுப்பி வச்சாய்ங்க.

மேட்டர் இன்னாச்சுன்னா அதை ஃபைனலா வெரிஃபை பண்ற பார்ட்டியே ( அவிக ஆஸ்தான வித்வான்) டிக்கெட் வாங்கிட்டாரு. போக போக நம்ம கிட்ட சோசியம் கேட்க வர்ர சனம் நம்ம பரிகாரத்தை எழுதி வாங்கிக்கிட்டு ………ல செருகிக்கிட்டு போறதை பார்த்து கடவுளுக்கு தில்லு வந்து அப்பாறம் “ஃப்ரியா உடுமாமே” னு உட்டுட்டாரு.

அந்த நேரத்துலதான் நிலாசாரல்,அந்திமழை,முத்துக்கமலம்,ஜோதிட பூமில எல்லாம் ரிலீஸ் ஆயிருச்சு. அதெல்லாம் பரிகாரம். ஜஸ்ட் உப சாந்தி. இப்பம் எடுத்த சப்ஜெக்டு நெஜமாலுமே விடுதலை. அடுக்குமா இது?

ஆனால் ஒரு வேண்டு கோள். உங்க இஷ்ட தெய்வத்தை ப்ரே பண்ணுங்க. ” சாமி !முருகேசன் சாருக்கு உடல் பலம்,மனோபலம்,பண பலத்தை கொடுங்க. அவர் கொடுக்கிற டிப்ஸ் மூலமா நாங்க இன்னும் ப்ரொடக்டிவா, இன்னும் இன்டிபெண்டன்டா, இன்னும் செல்ஃப்லெஸ்ஸா , இன்னும் ஸ்பிரிச்சுவலா மாற அருள் கொடு”ன்னு வேண்டிக்கோங்க.

புலம்பல்:

இன்னா பண்றது நைனா.. வயித்து பொயப்புக்கு,பொய்து போறதுக்கு இன்னா எய்துனாலும் ஒன்னும் குடி முழுகி போறதில்லை. அட ஜோசியம் (பத்தி ) சொன்னா(எள்தினா) கூட பெரிசா ஒன்னும் ஆவறதில்லப்பா. இந்த பரிகாரம், விடுதலைனு ஆரம்பிச்சா மாத்திரம் சுஸ்தாயிருதுபா. சிக்கன் குன்யா வந்தாப்ல கை,கால் வலி, தூக்கம் வர்ரதில்லை, அதேசமயம் மூதேவி அமுக்குவா. கட்டைல சுறு சுறுப்பே வராது. ரொட்டீன் லைஃபு பயங்கரமா அடி வாங்கிருது.ஆனாலும் விடறதாயில்லை இந்த சமாசாரத்தை ஃபுல்லா குடுத்துட்டுத்தான் சாவேன்.

இந்த மொக்கையை எல்லாம் ஸ்க்ரால் பண்ணிராம படிச்சுட்டு இங்கே வந்த பார்ட்டிகளுக்கு ஒரு நற்செய்தி. இங்கேருந்து இந்த புலம்பலுக்கு இடையில இடையில க்ளூஸ் கொடுத்துக்கிட்டே போறேன்.

விடுதலைக்கான டிப்ஸ்:
ஏழரை சனி,. மங்கு சனி,பொங்கு சனி,மரண சனி. பொங்குசனி, ஜன்ம சனி,கண்ட(கழுத்து) சனி, அர்தாஷ்டம சனி, பஞ்சம சனி, சப்தம சனினு விதவிதமா சொல்றாய்ங்களே. சனி என்னதான் பண்றாரு தெரியுமா? அவர் ஆசனத்துக்கு காரகர். ஆசனம் என்பது மோட்டார் வண்டிக்கு சைலன்சர் மாதிரி. சைலன்சர் அடைச்சிக்கிட்டா பெட் ரோல், டீசல் புகை வெளிய போகாது. வண்டியே ஸ்டார்ட் ஆகாது. இப்போ என்ன பண்ணனும்னா? சைலன்சர் அடைப்பை நீக்கனும். ஃப்யூச்சர்ல அடைப்பு ஏற்பட்டுராம பார்த்துக்கனும்.ஏற்கெனவே அடைப்பு காரணமா ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ரெக்டிஃபை பண்ணிக்கனும்.

எப்படி? எப்பீடி? எப்பூடி?

1.எனிமா எடுத்து வயிறை க்ளீன் பண்ணலாம்.
2.நிறைய தண்ணி குடிக்கலாம்.
3.சனி மலச்சிக்கலை மட்டுமில்லை, பைல்ஸ், நரம்பு பலகீனம் மாதிரி வியாதிகள்ளயும் கொண்டு விட்டுருவார் டேக் கேர். இதுக்கு சொல்யூஷன் கையில ஆயில் கறை,கெரசின் கறை படியற மாதிரி வேலை செய்யலாம். கு.ப் எக்ஸர்சைஸ் செய்யலாம்.
4.காலங்கார்த்தால எண்ணெய்,மசாலா, சீயா,சீச்சி ( நான் வெஜ்) அவாயிட் பண்ணலாம்.இட்லி, தோசை மாதிரி வெறுமனே வேக வச்ச ஐட்டம் தொட்டுக்க பால்,தயிர்
5.சமையல்ல நல்லெண்ணை உபயோகிக்கலாம் ( சனிக்குரியது எள் அதுலருந்து தயாரிச்சது தான் நல்லெண்ணெய்) இது உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
6.சஃபாரி சூட் அணியலாம். வசதி,வாய்ப்பு உள்ளவர்கள் தில்லு துரைகள் காக்கி, நீலம் போன்ற நிறங்களில்யூனிஃபார்ம் அணியலாம். ( எனக்கு ஜன்ம சனி இருந்த போது காக்கிச்சட்டை அணிந்தேன்)
7.தூசு படியற வேலைகள் செய்யலாம். ( ஒட்டடை அடிக்கிறது)
8.க்ளாஸ் ஃபோர் எம்ப்ளாயி வேலைகள் செய்யலாம். காலைல டீ,காஃபி போட்டு ஃபேமிலி மெம்பர்ஸுக்கு தரலாம். பெண்டாட்டிக்கு சமையல் ரூம்ல எடுபிடி வேலை செய்யலாம்.( கரைச்சு குடுக்கிறது,அரைச்சி கொடுக்கிறது.
9.சனி பிடிச்சாலோ/கேது தசா புக்தி நடந்தாலோ நீங்க போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,சுடுகாடு,கோர்ட் ஆகிய பிரதேசங்களுக்கு போய் தான் ஆகனும். யாராச்சு மேற்படி ஸ்தலங்களுக்கு லிஃப்ட் கேட்டா கொடுக்கலாம். சாவு விழுந்தால் சுடுகாடு வரை போய் வரலாம். நோயாளிகளுக்கு துணையா ஆஸ்பத்திரி போகலாம்.
10. சனிக்கு கருப்பு நிற பொருட்கள் மேல கவர்ச்சி அதிகம். ஸோ டை போடற வயசாயிருந்தா டை போடாதிங்க. இளமைல தலை முடி கருப்பா இருக்கிறதால தான் முதல் சனியான மங்கு சனி போட் கழட்டுது . ரெண்டாவது சனில தலைமுடி வெளுக்க ஆரம்பிச்சிர்ரதால பொங்கு சனி பெட்டர்ங்கறாங்க. மூனாவது சனி பெரிசா எஃபெக்ட் தராதுங்கறதுக்கு காரணம் கூட இதுதான்.

டை போட்டுத்தான் ஆகனும்னா தலைக்கு நீல நிற தொப்பி அணியுங்கள் (இப்போ கோடை வேற கொளுத்துதுல்ல . மேச் ஆயிரும். தொப்பிய லைட் ப்ளூ கலர்ல செலக்ட் பண்ணுங்க ..வெயிலுக்கும் நல்லது)). ஹேண்ட் பை ஹேண்ட் கருப்பு நிற பொருட்களை அவாய்ட் பண்ணுங்க. அதுக்கு பதில் ப்ளூ கலர் திங்க்ஸ் உபயோகியுங்க.

11.சனிக்கு உரிய சுவை கசப்பு. ஸோ அகத்தி கீரை,பாகற்காய் மாதிரி கசப்பு ஐட்டங்களை சாப்பாட்ல சேர்த்துக்கங்க.

இந்தலிஸ்ட் ரொம்ப பெரிசுப்பா.. ச்சொம்மா அப்படி அப்ளை பண்ணி பாருங்க. உங்க அனுபவத்தை எழுதுங்க .இன்னொரு தாட்டி டீட்டெயில்டா மீள் பதிவு போட்ருவம்

புலம்பல் தொடர்கிறது:

நவகிரக,ஜாதக பாதிப்புலருந்து வெளிவர,விடுதலை பெற டிப்ஸை அள்ளி வழங்கற இந்த விஷயத்துல நமக்கு ஸ்ரீராமானுஜர்தான் இன்ஸ்பிரேஷன்.அவர் தனக்கு கிடைச்ச அஷ்டாட்சரி மந்திரத்தை ( ஓம் நமோ நாராயணாய) கோபுர உச்சில ஏறி கூவிட்டு குதிச்சுர்ரார்.( மேற்படி மந்திரத்தை கத்துக்கொடுத்த குரு இதை சூத்திரப்பசங்களுக்கு குடுத்துராதே நரகத்துக்கு போவேனு வார்ன் பண்றார். இவரோ தத் இத்தினி பேரு ஸ்வர்கம் போறதுக்காக நான் ஒருத்தன் நரகத்துக்கு போனா என்னனு மேற்படி காரியத்தை பண்ணிர்ரார்.)

நம்மளுதும் அதேகேஸ்தான். நம்ம ஜாதக மகிமை+ பஞ்சாட்சரி ஜபம்+ராம நாம ஜபம்+ ஹ்ரீங்கார மந்திர ஜபம் + 20 வருச நாயடி பலனா கிடைச்ச இந்த நவ கிரக பாதிப்பிலிருந்து விடுதலை சப்ஜெக்டை இப்படி போட்டு உடைக்கிறதுல நிறைய பார்ட்டிங்களுக்கு அப்ஜெக்சன் இருக்கு.( மூவர்,தேவர்) அதுக்கான சிம்ப்டம்ஸ் எல்லாம் நல்லாவே தெரியுது.

தாளி ..விவேகானந்தரே சொல்லியிருக்காரு.. தன்னை சேர்ந்தவங்க முன்னேற்றத்துக்கு பாடுபடற முயற்சில நம்மளோட ஆன்மீக முன்னேற்றம் லேட் ஆனா கூட டொண்ட் கேர்

இத்தினிக்கும் இந்த மாதிரி தேவ ரகசியத்தை எல்லாம் எள்தறப்ப ஆத்தாள பயங்கரமா கன்வின்ஸ் பண்ணிட்டுத்தான் எள்தறேன்.

ஆத்தா.. ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னாப்ல நீ தாய்புலி, நான் குட்டிப்புலி. நான் உனுக்கு பயந்துகினு கடந்தா அது உனுக்குதானே அகுமானம். ஒன்னோட இதர பிள்ளை,பொண்ணுக எல்லாம் தங்களை ஆட்டுக்குட்டிங்கற நினைப்புல இருக்காக. அவிகளோட என்னைய சேர்த்து கணக்குபோடாதே. எனக்கு கொஞ்சம் சைடு கொடுத்தா அவிக எல்லாரையும் யப்பா யம்மா நீங்களும் புலிங்கதான். ஆட்டுக்குட்டி இல்லப்பானு ருசு பண்ணிர்ரன்.

ஒனக்கு “சர்வ ஸ்வந்த்ராயை நமஹ”ன்னு ஒரு ஸ்துதி கூட கீதுல்லே. சுகந்திரமானவளா இருக்கிற நீ படைச்ச மன்சா மாத்ரம் இப்படி கெரகங்க பிடில சிக்கி தவிக்கிறது நல்லாவா கீது. இம்மாத்தூண்டு விசியம் தெரியாம சனம் இப்பிடி கட்ந்து அல்லாடுதேனு ஒரு ரூட்டு போட்டுக்குடுக்கலாம் பார்த்தா ரொம்பத்தான் அழும்பு பண்றே..

சரி சரி நீ இதுக்கு எதிரா சொல்ல வர்ர பாயிண்டு புரியுது. கெட்டவனுக்கு கெரகம் கெட்டுப்போற நேரம்னு வர்ரப்ப தான் நல்லவங்களுக்கு ரிலீஃப் கிடைக்குது. தர்மத்து மேலயே நம்பிக்கை வருது. நீ பாட்டுக்கு சுப்ரமணிய பாரதி கணக்கா விடுதலை விடுதலை அல்லாத்துக்கும் விடுதலைனு துள்ளி குதிச்சா எப்படின்னு தானே கேழ்க்கற.

ஆத்தா உனக்கு தெரியாதது இன்னா கீது சொல்லு. விதி வழியே மதின்னுவான். அப்பால பார்த்தா மதியால விதிய வெல்லலாம்னுவான். இன்னொரு ஸ்டெப்பு மின்னாலே போய் இன்னாதான் சொல்றபான்னா விதி வழி விட்டு விலகினா மதி வேலை செய்யும்னுவான்.

நான் பாட்டுக்கு ஜாதக பாதிப்புலருந்து விடுதலைன்னிட்டு டைப்படிச்சு ப்ளாக்ல போட்ட மாத்திரத்துல ஒலக மக்க எல்லாம் கெரகங்க பிடிலருந்து ரிலீஸாயிர போறாங்களா. ஒரு ம………..ரும் கிடையாது. மிஞ்சி மிஞ்சி போனா 230 பேர் படிப்பாங்கோ. அதுல பட்டா சூப்பரா கீதுபா இதை எப்டினா ஃபாலோ பண்ணிரனும்னு 23 பேர் நினைப்பாங்கோ. நாலு நாள் கழிச்சு அவிகளை இத்த பத்தி கேட்டா அப்டியா நான் கூட பட்சேன்பா ஆனா மேட்டர் கியாபகம் இல்லேனுவாங்க.

இதுக்கு போயி பயந்துகினு என்னை சுஸ்தாக்கிறியே. இன்னா..து நீ இன்னா வேணா எள்திட்டு போ.. அதை எவனும் ஃபாலோ பண்ணமுடியாம நான் பண்றேங்கறியா. சரி சரி உன்னிஷ்டம். ஒன் ஸ்டெப் அட் ஒன் மூவ்மெண்ட். என்னை மட்டும் பேஸ்தடிக்க வச்சிராத. சனத்துக்கு நம்ம கிட்டே கொஞ்சம் வேலை கீது தாயி. என் மண்டைல கீறதெல்லாம் காயித்துல வச்சி, காய்த்தல கீரதெல்லாம் ப்ளாக்ல வச்சிட்டா அப்பாறம் நீ எப்டி விட்றியோ அப்டி ..ஓகேவா உடு ஜூட்டு
விடுதலைக்கான டிப்ஸ்:
சரிபா விசயத்துக்கு வரேன்.போன தபா(ல்)ல இன்னா சொன்னேன்? கெரகம் ஆகாசத்துல மட்டுமில்லே நம்ப பாடிலயும் கீது. அங்கே கீர சந்திரனை ஒன்னும் பண்ணமுடியாது. ஆனால் இங்கே நம்ப பாடில கீர வாட்டர் கன்டென்டோட கெமிக்கல் காம்பினேஷனை மாத்த முடியும்.இந்த பாடில கீர தண்ணியும், கடலோட தண்ணியும் ஒரே கெமிக்கல் காம்பினேஷன்ல கீதாம்பா. அதனாலதான் பவுர்ணமி அன்னைக்கு சந்திரன் சமுத்திரதண்ணிய ஐஸ்காந்தம் இரும்பு தூளை இசிக்கிறா மாரி இசிக்கிறானாம். பாடில 70% இந்த வாட்டர் கண்டென்ட் தான் கீது.

இந்த கெமிக்கல் காம்பினேஷனை எப்டி மாத்தறது? மாத்திபுட்டா வேற எதுனா பிரச்சினை வருமா?

சரக்கடிக்கறப்போ ஒரு பார்ட்டி மூனு அவுன்ஸுக்கு ஒரு சோடா கலந்துக்கறான். இன்னொரு பார்ட்டி ஆறு அவுன்ஸுக்கு ச்சொம்மா சோடாவ காம்ச்சிட்டு உள்ள தள்ளிர்ரான். ரண்டு பேரும் ஒரே சரக்குதான் அடிக்கிறான். ஆனால் டைல்யூட் பண்ணி அட்சா லிவர் இன்னொரு அஞ்சாறு வருசத்துக்கு தாங்கும். ராவா அட்சா சீக்கிரம் பட்த்துக்கும் அதான் வித்யாசம்.

இதே ஃபார்முலாவ அப்ளை பண்ணா ஹ்யூமன் பாடி வாட்டர் கண்டென்ட்டை கூட டைல்யூட் பண்ண முடியும். நீ எந்தளவுக்கு டைல்யூட் பண்றியோ அந்த அளவுக்கு சந்திரனோட எஃபெக்டை குறைக்க முடியும்.( கடல் நீருக்கு சமமான கெமிக்கல் காம்பினேஷன் மாறிட்டா சந்திரனால நம்ம பாடில இருக்கிற வாட்டர் கண்டென்டை இன்ஃப்ளுயன்ஸ் பண்ண முடியாதுப்பா.

இந்த சந்திரந்தாம்பா நம்ம மனசை கச்சா முச்சானு கலைச்சி உட்டுட்டு டீச்சருக்கு லவ் லெட்டர் குடுக்க வைக்கிறான். ஃபீஸ் கட்டறதுக்கு குட்த பணத்துல லவ்வுக்கு ஃபலூடா வாங்கி குடுக்க வைக்கிறான்.

இந்த ஆள் பிடில இருந்து வெளிய வந்தா போதும் . மன்சாளுக்கு வர்ர பிரச்சினைல முக்கா வாசி ஃபணாலாயாரும். எப்டிங்கறியா சனத்தோட பிரச்சினைல முக்காவாசி சைக்கலாஜிக்கல் தான்.

ஸ்தூலமான பிரச்சினைகளை எல்லாம் தூர தள்ளிட்டு ,ப்ராக்டிக்கல் சொல்யூஷனுக்கு முயற்சி பண்றத விட்டுட்டு சாமியார்ங்க பின்னாடி பூட்றது, கட்சி கொடிய புட்சிக்குனு கோஷம் போடறது,ஆகாச கோட்டை கட்டறது, மனக்கோட்டை கட்டறது இதுக்கெல்லாம் சந்திரன் தான் காரணம்.

அது சரிபா வாட்டர் கன்டெண்டை டைல்யூட் பண்றது எப்படி? முதல் கட்டமா அதுல இருக்கிற சுத்த தண்ணிரோட சதவீதத்தை அதிகரிக்கனும்.அது எப்படி? நிறைய தண்ணி குடிக்கனும். வாட்டர் தெரஃபிங்கறாங்களே அதுமாதிரி. இதே தெரஃபிய உண்ணாவிரதம் இருந்துகிட்டு எடுத்துக்கிட்டா இன்னும் சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்.
(முதல்ல உங்க ஃபேமிலி டாக்டரை கன்சல்ட் பண்ணீட்டு அப்புறமா இதுல இறங்குங்க நைனா.. ஜாஸ்தி கம்மியாயிர போவுது)

கையோட கையா மறு நாள் காலைல ஒரு செம்பு வென்னீர்ல ரெண்டு டீ ஸ்பூன் சோத்து உப்பை போட்டு கரைய விட்டு வெறும் வயித்துல குடிச்சா அதான் எனிமா . நீங்க அடிஷ்னலா உள்ளாற அனுப்பின உப்பு உடம்புக்குள்ள போய் சேருது. உடம்பு ஏற்கெனவே சேர்த்துவச்சிருக்கிற வித விதமான உப்புகளோட ஸ்டாக் லெவல் அதிகமாகுது. இதை சமப்படுத்த வயித்தை கலக்கி கூடுதலா சேர்ந்த உப்பை வெளியேத்தற முயற்சில இறங்குது. ஒன்னு ரெண்டு தடவை மோஷன் ஆகும். பயபடாதிங்கோ.. என்ன ரத்த மாமிசமா போகுது மஷ்டெல்லாம் கழியுது. கழியட்டும். உடம்பெல்லாம் துவைச்சி போட்ட துணியாட்டம் இருக்கும். இருக்கட்டும். உடனே சுஸ்தா கீது ஆட்டுக்கால் பாயாவோட அரை டஜன் தோசைய உள்ள தள்ளுவோம்னு கிளம்பிராதிங்க. சவாலே சமாளிதான்.

காரம்,மணம்,குணம் நிறைஞ்ச வாட்டர் கண்டென்ட் தான் உங்களை எப்படியெல்லாமோ ஆட்டி வச்சிருது. இந்த உண்ணாவிரதம், வாட்டர் தெரஃபி, எனிமா மூலமா அதுல இருக்கிற காரம்,மணம்,குணம்லாம் ஆட்டோமேட்டிக்கா குறைஞ்சிரும். ஆமா இதெல்லாம் குறைஞ்சு போயிட்டா எதுனா பிரச்சினை வருமானு கேட்கிறிங்க அப்டிதானே.

வராது குரூ..! இந்த உடம்போட நேச்சர் அப்படி. இது சுடாத களி மண் பொம்மை மாதிரி. கொஞ்சம் முயற்சி பண்ணா இதை நம்ம விருப்பப்படி ஷேப் அப் பண்ணிக்கலாம் மறுபடி ஆல்க்கஹாலையே உதாரணத்துக்கு எடுத்துக்குவம். அடிப்படைல ஹ்யூமன் பாடில ஆல்க்கஹால் இருக்கா இல்லியா தெரியலை. (லாஜிக் படி பார்த்தா இருக்கனும்.கு.ப மிக மிக குறைஞ்ச அளவுல. ஏன்னா ஏற்கெனவே இருக்கிற ஐட்டத்தை வெளியயிருந்து அனுப்பினாதான் பாடி ஏத்துக்கும். இல்லனா அலர்ஜிட்டிக் ஆயிரும்)

லாலா பார்ட்டிங்க என்ன பண்றாய்ங்க. வெளியயிருந்து குவார்ட்டர் குவார்ட்டரா உள்ள விடறாங்க. ரத்தத்துல ஆல்க்கஹால் பர்சண்டேஜ் அதிகமாகுது. ஆனால் அது ஸ்திரமா இருக்குதா இல்லே. லிவர்,கிட்னி எல்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டு ஆல்க்கஹாலை வெளியேத்துதுங்க. ப்ளட்லஆல்க்கஹால் பர்சண்டேஜ் குறைஞ்சதும் பார்ட்டிக்கு மறுபடி குடிக்கனுங்கற எண்ணம் வருது. குடிக்கலன்னா கை கால் எல்லாம் உதறுது,தொண்டையெல்லாம் ட்ரை ஆயிருது. குடி அடிமைகள் விஷயத்துலன்னா இப்ப குடிக்கலன்னா செத்தே போயிருவமோங்கற அளவுக்கு பயம்,திகில் வந்துருது. தன்னை தடுக்கிறவங்க மேல கொலை வெறி வருது. குவார்ட்டர் வாங்க பணம் புரட்ட பெண்டாட்டியையே நாயடி பேயடி அடிக்க வைக்குது.

ஆனால் உண்மை நிலவரம் என்ன? ப்ளட்ல ஆல்க்கஹால் பர்சண்டேஜை அதிகரிச்சது இவன். அதை குறைக்கிறது சரீர தர்மம். மறுபடி அதை அதிகப்படுத்தலன்னா செத்து போயிருவானா ஊஹூம்.

இதே ஃபார்முலாதான் வாட்டர் கன்டென்டோட கெமிக்கல் காம்பினேஷன் விஷயத்துலயும் ஒர்க் அவுட் ஆகுது. அதனோட அடர்த்திய கூட்டினது நீங்க.
போதிய தண்ணீர் குடிக்காம, செரிக்காம, பசிக்காம, காரம்,மணம்,குணம் நிறைஞ்ச உணவுகளை உள்ளாற தள்ளி, மலச்சிக்கல் இத்யாதிய கண்டுக்காம விட்டு வாட்டர் கன்டென்டை நாறடிச்சது நாம. மலச்சிக்கல்ல இருக்கிற சிக்கல் என்னடான்னா. வெளியேற்றப்படாத மலத்துல உள்ள நீர்சத்தை உடம்பு மறுபடி க்ராஸ்ப் பண்ணிக்கிறது.அது என்ன அமுதமாவா இருக்கும்?

அதனாலதான் தகிரியமா சொல்றேன். எந்த பிரச்சினைக்கும் மனமிருந்தால் மார்கமுண்டு. அந்த மனமே பிரச்சினையாயிருந்தா என்ன செய்ய ? அதனால முதல்ல சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸ்லருந்து வெளிய வரனும்.

என்னையே எடுத்துக்கங்க .

1987 ல சனி என் ராசியான சிம்மராசிக்கு அஞ்சாவது இடத்துக்கு வந்தாரு. அந்த ரெண்டரை வருஷதுல இமேஜுக்கு ஆன டேமேஜை இன்னி வரைக்கும் கூட கம்ப்ளீட்டா பேலன்ஸ் பண்ண முடியலை. ஆனால் இப்ப பாருங்க போன ரெண்டரை வருஷம் ஜன்ம சனி. இப்போ 2009 செப்டம்பர் 16 லருந்து வாக்குல சனி ..சிம்ம ராசியெல்லாம் நாறிக்கிடக்கு. ஆனால் நான் மட்டும் ஜாலாக்கா சைடு கொடுத்துக்கிட்டே காலத்தை கடத்தறேன். இது எப்படி சாத்தியமாச்சுன்னா?

1994 ல அப்பா காலி. என்னதான் இன்டர் காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டு தனியே அவதி பட்டாலும் ரெண்டாமறம் தெரியாம ஏறத்தள்ளிக்கிட்டிருந்த பார்ட்டி காலியானதுமே பக்கு ஆயிட்டாலும் ,சரி சொத்திருக்கில்லயா பங்கு தராத போயிருவானுகளானு தைரியமா இருந்தேன். பப்பு வேகலை.

மொதல்ல தெரிஞ்சு வச்சிருந்த ஜோதிஷம் உதவியால காலகதி தெரிஞ்சாலும், சம்பவ கண்ணிகளோட முடிவு பெரு வெற்றியில முடியறது புத்திக்கு உறைச்சாலும், என் முயற்சியே, வெற்றியை ஆக்சிஜன் சிலிண்டர் தனமாய் எண்ணி தவிக்கும் தன்மையே வெற்றியை எட்டிப்போக செய்வதை உண்ர முடிஞ்சாலும் ஈகோ ஒப்புத்துக்கலை. தோல்வி வெறியை கிளப்ப அதை ஒப்புத்துக்க ஈகோ முன் வராம யுத்தம், வெற்றி வேல் ,வீர வேல்னு முழங்கி ஜீரோ பேலன்ஸுக்கு வந்துட்டன்.

ஆனால் எந்த குருவும் கத்து தராத வித்தைகளை ஏழ்மை கத்து கொடுத்தது. இந்த படைப்பில் நான் தனியோ தனியானவன் என்ற நிஜம் உறைத்தது. என் சர்வைவலே கேள்வியாயிட்ட க்ஷணத்துல உயிர் வாழும் இச்சை பல ஜாலக்குகளை கற்றுத்தந்தது.

அன்றாட பிரச்சினைகள் காரணமா அசலான பிரச்சினைக்கு லீவு விட்டது, நடக்கவிருந்ததை அனுமதிச்சது 2400 சதுர அடி வீடு இருந்தும் ஓட்டை குடிசைல வாழ்ந்தது. இதெல்லாம் கிரகங்களோட பாதிப்பின் வீரியத்தை வெகுவா குறைச்சிட்டதால அம்பேல் வச்சுட்டு ஆட்டத்துல ஒதுங்கிட்டதால, வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சதால நிறைய புரிஞ்சிக்கிட்டேன்.

1997லருந்து ப்ரேக் ஃபாஸ்டை கட் பண்ணிட்டேன். காரம்,சாரம்,மணம்,குணம் நிறைஞ்ச சமையலுக்கு பேர் போன வன்னியர் குலத்து நங்கையான என் மனைவிக்கு உப்பு ,காரம்,புளிப்பு குறைவா போட்டு சமைக்க கத்துக்கொடுத்தேன். மேல் தீனி, நொறுக்கு தீனி,ஜங்க் ஃபுட், டின் ஃபுட் இதெல்லாம் பக்கத்துல சேர்க்கவிடறதில்லை.

( அன்னைக்கு நான் ஏழை தான்.ஆனால் பத்து நாளைக்கு ஒரு தரமாச்சும் பம்பர் லாட்டரி மாதிரி காசு கொட்டும். ஏக் தின் கா சுல்தான் மாதிரி வாழ்ந்து மறு நாள்ளருந்து மறுபடி பழைய குருடிகதவை திறடிவாழ்க்கைக்கு போயிருக்கலாம். ஆனால் ஒட்டகம் கணக்கா மாறிட்டேன்)

என் ஈகோவுக்கு அடிக்கு மேல அடி. தியாகய்யர் உஞ்ச விருத்தி பண்ண மாதிரி, ஷீர்டி சாயிபாபா பிச்சை எடுத்த மாதிரி ஆயிருச்சு கதை. பசி பட்டினி,சொறி சிரங்கு எல்லாம் பார்த்தாச்சு. ஆனால் உடல் எவ்வளவுக்கெவ்வளவு தேஞ்சதோ அந்த அளவுக்கு மூளை தீட்டப்பட்டுருச்சு. கையில ஜோதிஷ ஞானம் இருந்தது, தர்கத்துக்கு ஒத்துவராத சம்பவங்களா சரமாரியா நடந்தது. ரெண்டையும் பொன் வறுவலா வறுத்து அரைச்சி ஓ சாரி சாரி ரெண்டையும் அப்சர்வ் பண்ணி அனலைஸ் பண்ணினதுல ஒரு சில தேவரகசியங்கள் வெளிப்பட்டுது.
தேவ ரகசியம்:

அது என்னடான்னா காலம்ங்கறது ஒரு பைப் லைன். இதுல நல்லது ,கெட்டது நல்லது ,கெட்டதுனு யாரோ பேக் பண்ணி வச்சிருக்காங்க.. முன்னாடி இருக்கிற கெட்டது வெளிய வந்து விழுந்தாதான் ( நடந்தாதான்) பைப் லைன்ல அடுத்து இருக்கிற நல்லது வெளிய வரும்.(நடக்கும்.)

அதே மாதிரி பைப்லைன்ல முன்னாடி நிக்கிற நல்லது நடந்தாதான் பின்னாடி நிக்கிற கெட்டதும் வெளிய வரும் ( நடக்கும்).

சிம்பிளா சொன்னா ஒரு பாட்டுல முதல் சரணம் சூப்பரா இருக்குனு வைங்க. ஃபாஸ்ட் ஃபார்வோர்ட் பட்டன் வேலை செய்யலை . அப்போ என்ன செய்யனும் ? எடுப்பு, தொகையறா,அனுபல்லவி,பல்லவிகளை சகிச்சிக்கிட்டாதான் முதல் சரணத்தை கேட்க முடியும். அதான் வாழ்க்கை

விடுதலைக்கு முக்கிய டிப்:
கொஞ்சம் சூட்சும புத்தியோட யோசிச்சா சூழ் நிலை நம்மை ஒரு புள்ளிய நோக்கி அழுத்தி தள்றத நம்மால புரிஞ்சிக்க முடியும். அந்த புள்ளிய நோக்கி ஏதோ ஒரு சக்தியால தள்ளப்படறத விட அந்த புள்ளி எதுன்னு ஜட்ஜ் பண்ணி கொஞ்சம் முன் கூட்டியெ நாமே ஒழுங்கு மரியாதையா போயிரலாம். அப்படி போகவும் முடியும். இது இறைவனின் ஆணைக்கு கீழ்படியறதா ஆகுமே தவிர புரட்சி ஒன்னும் கிடையாது. கிரக பாதிப்பிலிருந்து விடுபட முக்கிய டிப் இதுதான்.

சொந்த வியாபாரத்துல நஷ்டத்துக்கு மேல நஷ்டம் வருது, தமிழ்சினிமால ஹீரோவோட அப்பாவுக்கு வர்ர மாதிரி போட் கழட்டுது. இந்த சம்பவங்கள் எந்த புள்ளிய நோக்கி அழுத்தி தள்ளுதுனு சிந்திக்க மூளை கூட தேவையில்லை. கிட்னி போதும்.

இந்த சந்தர்ப்பத்துல என்ன பண்ணனும் ? படக்குனு எல்லாத்தயும் வைண்ட் அப் பண்ணிட்டு ப்ளே கிரவுண்டை விட்டு வெளிய வந்துரனும். வேணம்னா அங்கயே பாப் கார்ன் விக்கலாம். புக்கியாகலாம். அம்பயராகலாம். அட உள்ளாற சமாளிக்க முடியாதுன்னா சைக்கிள் ஸ்டாண்ட் காண்ட் ராக்டரா மாறிடலாம். அதை விட்டுட்டு பேட்ஸ் மேனாதான் இருப்பேன்னா டக் அவுட் ஆக வேண்டியதுதான்.

தானா நடக்கறது நல்லதோ ,கெட்டதோ லாங் ரன்ல நமக்கு நல்லதாவே முடியும். நாமா அலைஞ்சு பறை சாத்தி நடக்க வைக்கிறோமே அதான் ஆப்பா முடியுது.
தோல்வி உறுதிங்கறப்போ எதிரிக்கு தோல்விய பரிசா கொடுத்துர்ரது பெட்டரில்லயா?