ஜெ’வுக்கு டிசம்பர் 15 வரை கண்டம்

IMG_0615

DSC_0494

அண்ணே வணக்கம்ணே !
எவனாச்சும் புடிச்சு ஜெயில்ல போட்டுட்டாலும் பரவால்லங்கற அளவுக்கு வேலை அழுத்தம் சாஸ்தியாயிட்டே போகுது. உள்ளூர்ல இருந்தாலே 24 மணி நேரம் போதல. இதுல திங்கள் கிழமை வேந்தர் டிவி காரவிகளோட பிரம்மங்காரு மடம் போயாகனும். கால மாற்றம் -கிரக பலன் சீரியல் டீல்ல விட்டாச்சு. குரு பெயர்ச்சி பலன் கன்னியோட நிற்குது. (ஆத்தா ! தெரியாத்தனமா நெல்ல பேரை வாங்கிட்டன் – உள்ளது போயிராம காப்பாத்திரு தாயீ )

ஜெ’வின் உடல் நிலை பற்றி பலரும் பல விதமா பேசிக்கிறாய்ங்க. நாம சொல்றதை ஆரு கேட்பாய்ங்க -ஆரு கேட்க மாட்டாய்ங்கன்னு கணக்கு போட்டு பேசிட்டிருந்தா பிரச்சினையே இல்லை. நமக்கு தேன் மனசு கேட்கமாட்டேங்குதே. நமுக்கு லக்னத்துலயே புதன் – விரயாதிபதி. தோஷமாச்சும் குறையட்டும்னு தேன் இப்டி விஐபிங்களுக்கு பலன் சொல்லி கோர்த்து விடறதை வழக்கமா வச்சிருக்கம்.

கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்துல வெற்றி தோல்வியை கணிக்க சொல்லி சுதேசி காரவிக கேட்டாய்ங்க. கி.பி .2000 த்துல எந்த ஜாதகத்தை வச்சு கணிச்சமோ அதை தேடி பிடிச்சு கணிச்சு சொன்னம். அப்பம் ராகு தசை சந்திர புக்தி . இதுல நம்ம சொந்த ஈகோ கிராஸ் ஆக இன்ஸ்டெபிலிட்டின்னா கூட்டணி ஆட்சிதானேன்னு அடிச்சு விட்டுட்டம். நடந்த கதை என்னன்னு உங்களுக்கே தெரியும். விஜய்காந்த் ஒரு வேளை சரத்குமார் கணக்கா பவ்யம் காட்டியிருந்தா கூட்டணி சர்க்காரே கூட வந்திருக்கலாம். ஓபிஎஸ்ஸுக்கு பதிலா அவர் சி.எம் ஆகியிருப்பாரு . பாஸ்ட் ஈஸ் பாஸ்ட் விடுங்க.

இதை ஏன் சொல்றேன்னா ராகுதசையில நடந்துக்கிட்டிருந்த அந்த சந்திர புக்தி போயி,செவ் புக்தி போயி ,குரு தசை வச்சு-அதுல குரு புக்தி முடிஞ்சு இப்பம் சனி புக்தி நடக்குது. குரு தசை முழுக்க கெடுக்கனும் அதனால குரு புக்தியில யோகம் பிச்சிக்கிச்சி.(2014,அக்டோபர் 9 க்கு இது க்ளோஸ்) இப்ப சனி புக்தி . இது 2014,அக்டோபர் 9 முதல் 2017,பிப்,21 வரை நடக்கும்.

அம்மாவோட லக்னம் மிதுனம். இதுக்கு சனி டூ இன் ஒன். எட்டுக்குடையவரும் இவர் தான். ஒன்பதுக்குடையவரும் இவர் தான்.ஒரே கிரகத்துக்கு ரெண்டு விதமான ஆதிபத்யம் கிடைச்சா அது தன் தசா /புக்தி காலத்துல துஸ்தானாதிபதியா தான் வேலை செய்யும்.

இதன் படி 2014,அக்டோபர் 9 முதல் சனி புக்தியில முதல் பாதி முடியறவரை 2015,டிசம்பர் ,15 வரை சனி அஷ்டமாதிபதியாத்தான் வேலை செய்வாரு. அதன் பிறகு பாக்யாதிபதியா வேலை செய்வாரு. அஷ்டமாதிபதின்னா என்ன தெரியும்ல?

நோய்வாய்ப்படுதல், மரணம்,சிறை,பழி சுமத்தல், சொத்து பறிமுதல் இப்படி பலதுக்கும் வாய்ப்பிருக்கு. நோய் என்றால் சனி தொடர்பானது (கால்,நரம்பு,ஆசனம்) அல்லது குரு தொடர்பானது ( வயிறு,இதயம்) வரலாம். இது மட்டுமா? ஏற்கெனவே உள்ள நோய்கள் விஸ்வரூபம் எடுக்கலாம்.
ஷுகர் இருக்குங்கறாய்ங்க. இன்னய தேதிக்கு இதெல்லாம் வியாதியே இல்லை. கட்டுப்பாட்ல வச்சுக்கிட்டா ஜஸ்ட் ஒரு அசௌகரியம் தான்.இல்லின்னா ஆட் கொல்லி.

மம்மியோட ராசி சிம்மம். எப்பம் அர்தாஷ்டம சனி ஆரம்பமாச்சோ அப்பமே வீட்ல இருக்கிற யோகம் போச்சு .வீடே சிறையா இருந்தாய்ங்கல்ல. இதுல ரெண்டு எட்டுல ராகு கேது வேற சாப்படற சாப்பாடே விசமாயிரனும். வெளி உலக தொடர்பு கட் ஆகனும்.குரு வேற விரயத்துல இருந்தாரா சாக்லெட் அது இதுன்னு வெட்டியிருப்பாய்ங்க போல. இப்பம் குரு ஜன்மத்துக்கு வரப்போறாரு ( ரெண்டு மாசம் மிந்தியே வேலைய ஆரம்பிச்சிருப்பாரு) . குரு =ஹார்ட்.
நம்ம சனம் இந்த மேட்டர்ல கூட நாடகம் -நடிகைனுட்டு விமர்சனம் பண்றாய்ங்க. மனு தர்ம சாஸ்திரம் சொல்றாப்ல அப்பா,புருசன்,மகன்,பேரப்பசங்க பாதுகாப்புல வாழற பெண்களுக்கே என்னென்னமோ வியாதி வருது. அதது காலா காலத்துல நடந்து க்ளாக் வைஸ் லைஃப் லீட் பண்ற பொம்பளைங்களுக்கே என்னென்னமோ வருது. மம்மியோட லைஃப்?

ஒவ்வொரு கட்டத்துலயும் போராட்டத்தையே வாழ்வா கொண்டிருந்த மவராசிக்கு எந்தெந்த பார்ட் எல்லாம் பாதிச்சிருக்கோ? மக நட்சத்திரம்,சிம்மராசி அது இதுன்னு ஏத்தி விட்டுட்டானுவ போல. எல்லாரும் தனக்கு ஒபிடியன்டா இருக்கனுங்கற எண்ணம் எப்டியோ வந்துருச்சு.

கொய்யா .. ஆட்டைய போட அரசியலுக்கு வந்த கட்சிக்காரன் பயப்படுவான். (பயந்த மாதிரி நடிப்பான்) சொந்த உடம்பு பயப்படுமா என்ன? அதுவும் எத்தினின்னு தாங்கும். மெழுகு வர்த்திய ஒரு பக்கம் ஏத்தினா எவ்ள நேரம் எரியும். ரெண்டு பக்கம் ஏத்தினா எவ்ள நேரம் எரியும்.

கூட்டி கழிச்சு பார்த்தா குரு தசை,சனி புக்தியோட முதல் பாகம் கம்ப்ளீட் ஆற வரைக்கும் கியாரண்டி இல்லைன்னு தான் சொல்லனும். ஒரு வேளை சுப்ரீம்ல ஜட்ஜ்மென்ட் மாறி ஜெயிலுக்கு பூட்டா தோஷம் பரிகாரம். இல்லின்னா ரெம்ப கஷ்டம்.

புதுசா நம்ம சைட்டுக்கு வந்த பார்ட்டிகளுக்காக மம்மியின் ஜாதகம் :(பழைய கதை -புதுசா நோய் மேட்டரை ஜூம் பண்ணியிருக்கன்)

மிதுனலக்னம், மக நட்சத்திரம்,சிம்மராசி. லக்னத்துக்கு ரெண்டாவது வீட்ல சனி, 3ல சந்திரன் செவ், அஞ்சுல கேது, 7ல குரு,9ல சூரிய,புதன், பத்துல சுக்கிரன், 11ல ராகு.

பொதுப்பலன்:
சனி ரெண்டுலருந்து எட்டை பார்க்கிறதாலயும், கேது அஞ்சுல இருக்கிறதாலயும் தான் அந்த நாள் முதல் இந்த நாள் வரை மம்மிக்கு திடீர் அவமானங்கள் ,தனிமைச்சிறைல்லாம் நடக்குது. அது வேற மேட்டர். மூன்றாமிடத்துல சந்திரன் இருக்கிறதால திடீர்னு தைரிய லட்சுமி கணக்கா பொங்குவாய்ங்க, திடீர்னு டர்ராகிருவாய்ங்க.

நோய்கள்:
சனி ரெண்டுலருந்தா ஆறிப்போனதை -மிச்சம் மீதிய திங்கனும். அப்படியா தின்னிருப்பாய்ங்க? இல்லையே. ஆகவே தான் இப்ப அறுவை சிகிச்சை வரை மேட்டர் போயிருக்கு ( சனி =ஸ்டீல் /சர்ஜிக்கல் ஐட்டம்ஸ்லாம் ஸ்டீல் தானே)

கேது அஞ்சுல இருந்தா மைன்ட் கராப் ஆயிரும். மூட் செரியில்லன்னதுமே எதையாவது தின்ன ஆரம்பிச்சுருவாய்ங்க போல .ஷுகருக்கு இதுவும் ஒரு காரணம்.

மூன்றாமிடத்து சந்திரன் திடீர் தைரியம்,திடீர் பயம்னு கொடுக்கிறதால டோட்டல் பயோ கெமிஸ்ட் ரியே மாறிரும்ங்கோ. மெட்டஃபாலிசமே மாறிரும்.
ஒரு ஃப்ளாஸ்க்ல திடீர்னு வென்னீரை ஊத்தி திடீர்னு ஐஸ் வாட்டரை ஊத்தினா என்னாகும்? (இங்கே ஃப்ளாஸ்க் = பாடி ). ஆங்சைட்டியால வரக்கூடிய எல்லா வியாதியும் வரும்.

பொதுப்பலன்:
மம்மி பவருக்கு வர்ரப்பல்லாம் ஒரு பிராமண லாபி மம்மியை ரவுண்ட் அப் பண்ணி ஆப்படிக்கவும் – லாஜிக்கே இல்லாம சசி கும்பலை தாங்கு தாங்குறதுக்கும் ஏழுல குரு தான் காரணம். ஏழு நண்பர்களை காட்டும். குரு லக்னாத் சுபனா இருந்திருந்தா வேற கதை .பாபியாச்சே .அதான் ஆப்பு.

வியாதிகள்
குரு =இனிப்பு , குரு = எதிர்கால திட்டங்கள் . மைன்ட் பரபரன்னு வேலை செய்யும் போது அதிக க்ளூக்கோஸ் தேவைப்படறாப்ல ஒரு ஃபீல் வரும். ஒரு சாக்லெட். ஃபிசிக்கலா ஸ்ட் ரெய்ன் பண்ணா க்ளூக்கோஸ் பர்ன் ஆயிரும்.ஆனால் ஆகாய கோட்டைதானே.எப்டி செலவாகும்? அதனால ரத்தத்துல அதிகரிக்கிற க்ளூக்கோஸை க்ளைக்கோஜனா மாத்தற அளவுக்கு இன்சுலின் சுரக்கனும்ல. போதுமான இன்சுலின் சுரக்கலின்னா அதான் ஷுகர்.

பொதுப்பலன்:
மூன்றுக்குரிய சூரியன் 9 ல இருக்கிறதால தான் மத்திய அரசோட எப்பவும் மோதல் போக்கு .லக்னாதிபதியான புதனே இங்கே சூரியனோட சேர்ந்திருக்கிறதால தான் ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி இருக்கு. (லைஃப்ல எப்பவாச்சும் ரிஸ்க் எடுக்கலாம். தினம் தினம் எடுத்தா?)

பத்துல சுக்கிரன் தான் சொத்துக்குவிப்புக்கு காரணம். வாகன ஊர்வலம்,ஆடம்பரம்,படாடோபம் இத்யாதியும் இவரோட கைங்கரியம் தான் . (உ.ம், தத்து புத்திரரோட கண்ணாலம்)

நோய்கள்:
சுக்கிரன் கைனகாலஜிக்கல் செட்டப்புக்கு காரகர். இவரு உச்சமானது ஓகே தான்.ஆனால் எங்கேன்னு பார்க்கனும்ல? பத்துல. இதான் ஆப்பு. செரியா திங்க முடியாத, செரியா தூங்க முடியாத வியாதி வரனும்.

பொதுப்பலன்:
ரெண்டாமிடத்து சனி தான் அப்பப்போ வெகண்டையா பேச வச்சுர்ராரு (ஜானகி எம்.ஜி.ஆருக்கு மோர்ல விசம் கொடுத்துட்டாய்ங்க, கலைஞர் என்னை லாரி ஏத்தி கொல்லப்பார்த்தாரு , ஆமா நான் பாப்பாத்திதான் -இதெல்லாம் ஒரு சில உதாரணங்கள்)

Advertisements

ஜெ'வுக்கு டிசம்பர் 15 வரை கண்டம்

ராகுகேது பெயர்ச்சி பலன் :2014 (2)

Pass 5

அண்ணே வணக்கம்ணே !

நேத்திக்கு மேஷம் முதல் கன்னி வரையிலான ஆறு ராசிகளுக்கு பலன் சொல்லியிருந்தேன். இன்னைக்கு துலாம் முதல் மீனம் வரை . முதல் பகுதியில சொன்னதை போல குரு-சனி இருப்பையும் டச் பண்ணியிருக்கன். ராகு கேது காரகம் -பரிகாரம்லாம் இந்த பதிவின் முதல் பாகத்துலயே இருக்கு.

பலனை கீழே உள்ள ப்ளேயர்ல உள்ள ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுக்கங்க.

மோடி ஜாதகம் : பாய்ண்ட் டு பாய்ண்ட்

அண்ணே வணக்கம்ணே !
ஆதி காலத்துலயே ஆடியோவா போட்ட மேட்டருதான் விகடன் டாட் காம்ல ஆரோ ஜூரி மோடியோட ஜாதகத்தை வச்சு அவரு கிளிச்சுரப்போறாருன்னு எளுதியிருந்தாப்ல.
நம்ம சனத்துல பேர் பாதி பேரு ஆஃபீஸ்ல படிக்கிறவுகளாச்சா ..ஆடியோவ விட டெக்ஸ்டா போட்டா நிறைய பேரு படிப்பாய்ங்கன்னு டெக்ஸ்டா போடறேன். ( ஃப்ரெஷ்ஷா அனலைஸ் பண்ணியிருக்கன்)
லக்னம் ராசி விருச்சிகம்:
இதுல சந்திரன் நீசமாறதால பப்ளிக் சப்போர்ட் கிடைக்கிறது ரெம்ப கஷ்டம், ஷார்ட் கட்ல தான் வரனும் ( நரசிம்ம ராவ் மாதிரி) இவிக  நெல்லது பண்ணாலே ஆப்புதான் வரும். மோடி கதைய  புதுசா சொல்லனுமா என்ன?
விருச்சிக லக்னத்துக்கு லக்னாதிபதி செவ். இவரே தான்  சத்ரு ரோக ருணாதிபதி. இதனால இவிகளே கஷ்டப்பட்டு சத்ரு,ரோக ,ருண உபாதைகளை ஏற்படுத்திக்குவாய்ங்க.
லக்னத்துல சந்திர செவ்:
ஒவ்வொரு லக்னத்துக்கும் பாதகாதிபதினு ஒருத்தர் உண்டு. இவர் நின்ன இடம்,பார்த்த இடம், சேர்ந்த கிரகம்லாம் உருப்படாது.
மோடி ஜாதகத்துல  லக்னாதிபதியான செவ் பாதகாதிபதியான சந்திரனோட சேர்ந்தே உட்டாரு.  இதனாலதேன் ஒரே ஒரு நாள் கூட நிம்மதியா தூங்க முடியாத கிடக்கு பார்ட்டி.
அதுவும் லக்னாதிபதியோட சந்திரன் சம்பந்தப்பட்டா  இந்த மாதிரி ஜாதகர்கள் வாழ்வில் 14 வருசம் ஏறுமுகம், 14 வருசம் இறங்குமுகத்தை பார்க்கலாம். மோடி மேட்டர்ல ஏறுமுகம் ஓவர்.
அதுல வேற பாக்யாதிபதி சந்திரங்கறதால கட்சித்தலைமை எப்பம் ரிவர்ஸ் ஆகும்னு சொல்லமுடியாது. என்னதான் ஹெலிகாப்டர்ல பறந்தாலும் ஏரி,குளத்தை தாண்டாம இருக்க முடியுமா?
குரு 4 ல இருக்காரு.இவர் தான் நின்ன இடத்தை நசிக்க செய்வாரு. இதனால  ஸ்தான நாசம். சுக நாசம். கல்வி நாசம்.
அதே சமயம்  சொந்த கட்சிய வச்சு ரெவின்யூ இன் கம்,கேப்பிடல் இன் கம் ரெண்டையும் ரைட் பண்ணிக்கலாம்.
அடுத்து ராகு அஞ்சுல. இதனாலதான் சந்தானமின்மை,அவப்பெயர்.அதுவும் ராகு இதர மதங்களை குறிப்பவர்.
பத்தை பாருங்க. இங்கே 7/12 க்குடையவர் 3/4 க்குரியவரோட சேர்ந்தார். 7+3 மனைவிக்கு மாரகம் (நெல்லவேளையா பிரிஞ்சுட்டதா சொல்றாய்ங்க.மவராசி நெல்லா இருக்கட்டும்) .12+4 இவர் சார்ந்த கட்சி நாசமா போயிரும். (இந்த தடவை பல்பு வாங்கினா கட்சி ஒரு ஏழெட்டு பீசா உடையறது கியாரண்டி)
பத்துல சுக்கிரன். இதனாலதேன் விளம்பரமாடல் கணக்கா அலங்காரம், சின்னபொண்ணுங்க பின்னால போலீஸை அனுப்பி துப்பறியறது.
பதின்னொன்னை பாருங்க.இங்கே 10+8 காம்பினேஷன் இருக்கு. பொதுவா இது ஒர்க்கஹாலிக்கா மாத்தும்.அதே சமயம் பத்துன்னா தொழில் எட்டுன்னா மரணம். ஆன் டியூட்டி டிக்கெட் போடவும் சான்ஸிருக்கு.
கூட மோட்சகாரகன் வேற. ஏதோ தியானம் யோகம்னு இருக்கிறவுகளுக்கு பரவால்ல. மோடிக்கு மோட்சம்னா என்ன சொல்றது?
இந்த இழவெடுத்த ஜாதகத்தை வச்சு பிரதமர்னு சொல்றாய்ங்க. எங்க போயி முட்டிக்கிறது?

மோடியின் எதிர்காலம் :பர பர கணிப்புகள்

அண்ணே வணக்கம்ணே !
நாட் நாட்லயே நாம மோடி ஜாதகத்தை நோண்டி நுங்கெடுத்துட்டம். என்னடான்னா அப்போ தெலுங்கானா அஜிடேஷன் காரணமா வரலாறு காணாத மின் வெட்டு. எனவே குரல் பதிவா போட்டிருந்தம்.

கிளி ஜோசிய காரவுக மாதிரி மோடியோட பேர் ராசிய வச்சு சனம் ஆகா ஓகோன்னு புலம்பியிருக்காய்ங்க. கொய்யால ..ஒட்டு மொத்த ஜாதகத்தை வச்சு சொன்னாலே ஒன்னு ரெண்டு தவறிப்போகுது. இதுல பெயர் ராசியாம்.

இதை பார்த்ததும் கடுப்பாயிட்டு நம்ம குரல் பதிவை கேட்டோம். அப்பம் நண்பர் ஒருவர் ஆன்லைன்ல பீராய்ஞ்சு கொடுத்த பர்த் டீட்டெய்ல்ஸை வச்சு ஜாதகம் கணிச்சு சொல்லியிருக்கம். ( 17/10/1950 ,காலை 10.10)

இதன்படி மோடி ஜாதக விவரம்:
விருச்சிக லக்னம்,தனுசு ராசி. லக்னாதிபதி லக்னத்துலயே ஆட்சி. பாக்யாதிபதி சந்திரன் 2 ல் ,2/5 க்கு அதிபதியான குரு 4 ல் , ராகு 5 ல் , 8/11,7/12,3/4 அதிபதிகள் கேதுவுடன் சேர்ந்து 11 ஆமிடத்துல இருக்காய்ங்க. இதுகளுக்குண்டான பலனை சுருக்கமா பார்ப்போம்.

விருச்சிகலக்னம்:
ராசிகளுக்குண்டான சிம்பலை பெரியவுக ஏனோ தானோன்னு ஃபிக்ஸ் பண்ணல. அதுக்குள்ள ஆயிரம் அருத்தம் இருக்கு. விருச்சிகம்னா தேளுன்னு அருத்தம். தேள் இருட்ல இருக்கனும்.சனங்க கண்ல படப்படாது. பட்டா காலி.( ஐ மீன் பப்ளிக் லைஃப்ல வரப்படாது – ராகுல் காந்தி ராசியோ லக்னமோ கூட விருச்சிகம் தான்) ஏன்னா இவிக பேச்சு தேள் கொட்டறாப்ல வந்துரும்.

இதுல போனசா மோடியோட ராசி தனுசு. இவிகளை பத்தி தமாசா ஒன்னு சொல்லுவன். ஒரு பஞ்சாயத்து பத்து நாள் பேசி முடிவுக்கு வந்து டீ சாப்டுட்டு கிளம்ப வேண்டியதுதாங்கற சிச்சுவேஷன்ல ஒரு தனுசு ராசி வாய வச்சா மொதலுக்கு வந்துரும். அந்தளவுக்கு வெகண்டையா பேசிப்புடுவாய்ங்க.
குஜாராத் கலவரங்களை பத்தி பேசும் போது செத்துப்போனவுகளை சாரி கொல்லப்பட்டவுகளை நாய் குட்டின்னு சொல்லிட்டு வாங்கி கட்டிக்கிட்டது ஞா இருக்கலாம்.

லக்னாதிபதி லக்னத்துலயே ஆட்சி. இது பொதுவிதிப்படி நல்லதுதான்.ஆனால் ஆட்சியானது ஆரு செவ். இந்த கேட்டகிரியில உள்ளவுகளை போலீஸுக்கோ ,மிலிட்டரிக்கோ அனுப்பிட்டா பெருசா பிரச்சினை வராது .சிவிலியனா இருந்தா மட்டும் நாஸ்திதான். ஒன்னு அவிகளுக்கு கொட்டும்.இல்லின்னா மத்தவுகளுக்கு கொட்டும்.ரத்தத்தை சொன்னேங்க.

இவரு 7 ஐ பார்க்கிறதால தேன் பொஞ்சாதி மேட்டர் காலி. நாலை பார்க்கிறதால கட்சிக்குள்ளயே பல்பு.எட்டை பார்க்கிறதால ? எதிரிகள் எல்லாம் ஒன்னு சேர்ந்துருவாய்ங்க. பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறவு பா.ஜ.க தவிர்த்த இதர கட்சிகளை ஒட்ட வைக்கப்போற ஃபெவிக்காலே மோடிதானுங்கோ.

பாக்யாதிபதி சந்திரன் 2 ல் ,இதனாலதே ஜஸ்ட் பீலா விட்டே பி.எம் ஆயிரலாம்னு கனவு காணுறாரு. சந்திரனோட எஃபெக்ட் எல்லாம் ரெண்டேகால் நாள் தேன். தேர்தல் இப்பல்லாம் ஒரு நாள்ள எங்கே நடக்குது. எல்லா ஃபேஸும் முடியவே மாசமாயிருது. அதனால இதுவும் பெருசா கை கொடுக்காது.
2/5 க்கு அதிபதியான குரு 4 ல் வக்ரம்.இவரு சாதாரணமா நின்னிருந்தா வாக்கு,புத்திய வச்சு கட்சிக்குள்ள-கூட்டணிக்குள்ள தனக்கு எதிர்ப்பே இல்லாம செய்துக்கிட்டிருக்கலாம்.ஆனால் குரு வக்ரமாச்சே. இதனாலதேன் நித்தீஷ் டாட்டா சொல்லிட்டாரு. மேலும் குரு இதயத்துக்கு காரகன் .எனவே என்.டி.ஆர் கணக்கா ஒரு பை பாஸ் கூட நடக்கலாமுங்கோ..புதன் வக்ரம்ங்கறதால இதயத்தின் இணைப்புகளில் பிரச்சினை வரலாம்.

ராகு 5 ல் நின்னதால புத்தி குழப்பம் ,கற்பனை உலகில் சஞ்சரிப்பது,மோடி மஸ்தான் வேலை காட்டி ஜாக்பாட் அடிக்கலாம்னு நினைக்கிறதுதான் நடக்கும். ஜாக்பாட் கிடைக்குமான்னா .. அவமானம்-அவப்பேர் தான் மிஞ்சும்.

அடுத்து 8/11,7/12,3/4 அதிபதிகள் கேதுவுடன் சேர்ந்து 11 ஆமிடத்துல இருக்காங்க. எட்டு மரணத்தை காட்டும்.இவரு 6லயோ 12லயோ இருந்தா சேஃப். ஆனால் இவரு 3 வேளை ஹார்லிக்ஸ் சாப்டாப்ல 11 ஆமிடத்துல வலிமையா உட்கார்ந்திருக்காரு. புதன் தோல்,கீல்,அண்டம் சம்பந்தப்பட்ட பிரச்சினைய கொடுக்கலாம். புத்தி குழப்பத்தை கொடுக்கலாம்.இவ்ள எதுக்கு சுரப்பிகளின் செயல்பாடே கூட மாறுபட்டு மேஜர் பிரச்சினைகள் கூட வரலாம்.
ஒரே கிரகத்துக்கு ரெண்டு ராசி (பாவ)களுக்குண்டான ஆதிபத்யம் கிடைச்சு அவர் ஒரு ராசியில ஆட்சி பெற்றால் அவர் ஆட்சி பெற்ற வீட்டின் பலனை மட்டும் தருவாருன்னு ஒரு விதி இருக்கு. (அப்போ மேற்படி நோய் பிரச்சினை எல்லாம் வராது).

ஆனால் இங்கே புதன் தனிய இல்லை .கூட கேது இருக்காரு. கேது ஆன்மீக வாழ்வுக்கு துணை செய்வாரே தவிர லௌகீக,அரசியல் வாழ்க்கைக்கெல்லாம் ஆப்புதான் அடிப்பாரு.

7+கேது காரணமா பொஞ்சாதி மேட்டர் டப்ஸு. 3/4+கேது சேர்க்கை காரணமாத்தான் தலீவரு அசட்டு தைரியத்தோட வலம் வராரு. கட்சிக்குள்ளயே பெரிய ஆப்பா ரெடி பண்ணிட்டிருக்காய்ங்கன்னு நினைக்கிறேன்.

ஆலமரத்தடி பஞ்சாயாத்துல மோடிக்கு எதிரா தீர்ப்பு வந்தாலும் மோடி கதை கந்தல்தான். கட்சிக்காரவுகளே அவரை வீட்டுக்கு அனுப்பிருவாய்ங்க.
ஏன்னா ஜீவனாதிபதி சூரியன் விரயத்துல கடக்காரு. இதனாலதேன் மோடி தலைக்கு மேல கத்தி தொங்கிட்டே இருக்கு.அவரை தூங்க விடாம பண்ணிட்டிருக்கு. சூரியன் சமத்துவத்தை -அபேத பாவத்தை தரக்கூடியவர்.அவரு விரயம் பெற்று நீசத்துல இருக்கிறதாலதான் மோடி ஒன் சைட் பாலிட்டிக்ஸ் செய்துட்டு வராரு. (இப்பம் கொஞ்சம் போல சைடு வாங்கினாலும் டார்கெட் மட்டும் அதுதான்)

தசாபலன்:
இவர் 2001 ,அக்டோபர்ல தன் இன்னிங்சை துவக்கினப்போ ராகு தசையில சூரிய புக்தி நடந்திருக்கு. (03/May/2002 => 27/Mar/2003) இதுல புக்தி நாதனாகிய சூரியனை தசா நாதன் ராகு டாமினேட் பண்ணதால -அவரு அஞ்சுல நின்னதால “ஒரு பெரிய அவமானம்” நடக்கவே இவருக்கு மேற்படி நாற்காலி கிடைச்சதுங்கோ. இவருக்கு சம சப்தகத்துல கேது 11ல நின்னதால மோடிஜிக்கு ஞானம் கிடைச்சிருக்கனும்.(எத்தனை மி.கி கிடைச்சதுன்னு அவருதான் சொல்லனும்-கிடைச்சதையும் அவரு துடைச்சு போட்டுட்டாருன்னு அவரோட பிற்கால செயல்பாடுகள் காட்டுது)

அடுத்து என்ன.. இவருக்கு இப்போ என்ன தசை ,புக்தி நடக்குது.இவரோட எதிர்காலம் என்ன? இதானே உங்க கேள்வி? உங்க கேள்விகளுக்கான பதிலை இங்கே அழுத்தி இந்த முக நூல் பக்கத்துல படிச்சுருங்க. பிடிச்சிருந்தா ஒரு முக நூல் பக்கத்துக்கு ஒரு லைக் போடுங்க (பிரச்சினை வராதுன்னா) இன்னைக்கு சாயந்தரத்துக்குள்ள 100 லைக் எதிர்பார்க்கிறேன்.

எச்சரிக்கை:
விக்கி பீடியாவுல மோடியோட பர்த் டீட்டெய்ல்ஸ் 17/9/1950ன்னு தந்திருக்காய்ங்க.இன்னொரு ஜோதிட வலைதளம் இந்த தேதிய வச்சு பர்த் டைம் காலை 11னு வச்சு ஜாதகம் கணிச்சிருக்கு. பார்ப்போம்.காசா பணமா இந்த பர்த் டீட்டெய்ல்ஸையும் பேஸ் பண்ணி இன்னொரு பதிவு போடறேன். எனக்கென்னமோ நண்பர் கொடுத்த பர்த் டீட்டெய்ல்ஸ் தான் கரெக்டோ என்னவோன்னு தோனுது,ஏன்னா பலன்லாம் பச்சக்குன்னு பொருந்துது. லெட் அஸ் வெய்ட் அண்ட் சீ

தொடை அழகும் சொத்து சுகமும்

அண்ணே வணக்கம்ணே !
எதை எழுதலாம்னு ஆரம்பிச்சாலும் ஏற்கெனவே சொன்னாப்லயே இருக்கு. அப்பாறம் அரைச்ச மாவை அரைக்கிறான்னுருவிங்க. கணிணி புழக்கத்தால ஞா சக்தி வேற பஜ்னு ஆயிருச்சு. சரி சரி மேட்டருக்கு வந்துர்ரன்.

சாமுத்ரிகாலட்சணம்னு ஒரு சப்ஜெக்டு இருக்கு. ஒருத்தன்/ஒருத்தி எந்தளவுக்கு அளகா இருந்தா அந்தளவுக்கு அதிர்ஷ்டசாலின்னு சொல்லுது. இதுல தொடை அழகும் சேர்த்தி. அழகுக்கும் அதிர்ஷ்டத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக சொல்றேன்.

லக்னம்: தலை,முகம் ,இரண்டாமிடம் வாய் ,கழுத்து ,கண்களை காட்டுது. இப்படியே இறங்கிப்போனா எட்டாமிடம் பலான இடத்தை காட்டுது. ஒன்பதாமிடம்? தொடை .

இந்த ஒன்பதாமிடம் தான் அப்பா,அப்பாவழி உறவு, சொத்து ,முதலீடு,சேமிப்பு,தூர தேச தொடர்பு,புக்,வெப் பப்ளிஷிங் எல்லாத்தையும் காட்டுது. ஜாதகத்துல இந்த 9 ஆமிடம் சுப பலமா இருந்தா தொடையழகு சூப்பரோ சூப்பரா இருக்கும். மேலே சொன்ன விஷயங்களும் அனுகூலமா இருக்கும்.
ஆனா ஆண்கள் பெண்களின் தொடைய ரசிக்கிறதுல மட்டும் ரெண்டுவிதமான கருத்து இருக்கு.( நமக்கு) ஒன்னு அம்மாவுக்கு பிறவு இவ மடியில கண்ணசரலாம்ங்கற எண்ணம். அடுத்தது ..

வேற ஒரு சின்ன மேட்டரை சொல்லிட்டு இதையும் சொல்லிர்ரன். நமக்காகவே -அதாவது உங்களுக்காகவே ஒரு வலைதளம் ஆரம்பிச்சிருக்கேன்.
இதனோட உள்ளடக்கம் ……..ஒரு வரியில சொன்னா உங்களுக்கு பிடிச்ச வலைதளங்களை பற்றிய குறிப்புகள் .இந்த குறிப்புகளையும் நீங்களே தான் தரப்போறிங்க. முழு விவரத்துக்கு இங்கே அழுத்துங்க.

இப்போ பலான மேட்டருக்கு வந்துருவம். ஆண்கள் பெண் தொடையை ரசிக்கிறார்கள்னா அதுக்கான இன்னொரு காரணம் ..ஹ்ம்.. சொல்லிரலாமா? வேணாம் .. வேணாங்ண்ணா ரெம்ப ஏ வா போகும். ஆளை விடுங்க.
ஸ்..அப்பாடா எப்படியோ கவர்ச்சியான தலைப்பையும் கொடுத்து தலைப்புல உள்ள தொடையை ஜஸ்டிஃபையும் செய்துட்டம். இன்னைக்கு பாக்யாதிபதி எந்த எந்த பாவங்களில் நின்னா என்ன பலன்னு பார்ப்போம்.
1.லக்னத்தில்:
இவர் நைசர்கிக சுபரா-லக்னாத் சுபரா இருந்தா அப்பாவோட நல்ல குணங்கள் ஜாதகரில் ஏற்படும். அப்பா -பிள்ளை உறவு பெட்டரா இருக்கும். சின்ன வயசுலருந்தே சிக்கனம்,சேமிப்பு,மணி மேனேஜ்மென்ட்ல ஆர்வம், தூர தேசங்களை பற்றி தெரிந்து கொள்ளும் விருப்பம் இருக்கும்.எழுத்தாளரா கூட ஆகலாம். வெளி நாடு சென்று பொருளீட்ட வாய்ப்பு.
2.தனபாவம்:
பண விஷயத்துல அப்பாவை சார்ந்திருக்கலாம். அப்பா வழி சொத்துக்களை “அனுபவித்து”விடலாம். அப்பாவோட பஞ்ச் டயலாக்ஸை மிமிக்ரி பண்ணலாம் அ ரிப்பீட் பண்ணலாம்.அப்பா வீட்டோடு தொழில் செய்பவராக அ வீட்டோடு இருப்பவராக மாறலாம்.
3.சகோதர பாவம்:
அப்பா வேறிடம் -ஜாதகர் வேறிடத்தில் வசிக்கலாம். சந்திப்புக்காக பயணங்கள் தொடரலாம். அப்பா தில்லு துரையா இருக்கலாம். ஜாதகர் வெளி நாட்டு சங்கீதங்களை ரசிக்கலாம். சொத்து,முதலீடு,சேமிப்பு மேட்டர்ல அல்லல் அலைச்சல் நஷ்டம் ஏற்படலாம்.
4.மாத்ருபாவம்:
அப்பா கொஞ்சம் ஃபெமிலிஷா இருக்கலாம். ஹி மே பீ தி ஹோம் மேக்கர். அம்மா கமாண்டர் ஆஃப் தி ஃபேமிலியா இருக்கலாம். ஆனால் ஜாதகர் இதயத்துல அப்பாவுக்கு பிரத்யேகமான இடம் நிச்சயம்.ஜாதகருக்கு அம்மா,அம்மா வழி உறவுகளால் வீடு,நிலம்,சொத்து சுகம் ஏற்படலாம்.கல்வியே செல்வமா மாறும். ஜாதகர் போக்கு வரத்து, டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் துறையில முன்னேறலாம்.
5.புத்ரபாவம்:
அப்பா ஜாடையில பிள்ளை பிறக்கும். சிலருக்கு அப்பா இறந்த அதே வருடம். ஜாதகரின் பூர்வ ஜென்ம பாப புண்ணியங்களுக்கான பலன் எல்லாம் அப்பா மூலமாகவே கிடைக்கும். தூர தேசங்களில் இருந்து உதவி கிடைக்கும்( கணிதமேதை ராமானுஜத்துக்கு கிடைச்சாப்ல) அப்பா வழி சொத்துக்கள் கிடைக்கும். ஜாதகர் தம் புத்தி பலத்தால் இன்னும் சொத்து சேர்ப்பார். செட்டாக வாழ்வார்,தர்ம காரியங்களும் செய்வார். புத்தக வெளியீட்டில் சாதனை படைக்கலாம். ஸ்தூல பூஜைகளை விட மனோ பூஜைக்கு அதி முக்கியத்துவம் தருவார்.
6.ரோகபாவம்:
இங்கு பாக்யாதிபதி நின்றால் அப்பா நோய்,கடன்,வழக்கு,எதிரிகளால் பாதிக்கப்படுவார். அல்லது ஜாதகருக்கு அப்பாவுடன் விரோதம் ஏற்படும். சொத்துக்கள்,முதலீடு,சேமிப்புகள் மீது வில்லங்கம் ஏற்படும்.சிலர் கடன் வாங்கி சொத்து வாங்குவர். மெடிக்கல் ரீ இம்பர்ஸ்மென்ட் கிடைக்கும். தூர தேச தொடர்புகளால் கடன் ஏற்படும். ஓடாத பத்திரிக்கைய நடத்தறவுகல்லாம் இந்த கேட்டகிரிதான்.
7.களத்ர பாவம்:
இங்கு பாக்கியாதிபதி நின்றால் அப்பாவுடன் நல்ல தோழமை ஏற்படும். அப்பா வழி உறவில் மனைவி அமைவார். மனைவி வழியில் சொத்து கிடைக்கும். வெளி நாடு செல்வார். என்னடா வில்லங்கம்னா அங்கன ஒரு கிராக்கி மாட்டிக்கலாம். பார்ட்னர்ஷிப்ல முதலீடு சேமிப்பு தொடர்பான தொழில் செய்யலாம். தம்பதி சமேதரா தீர்த்தயாத்திரை போவார்.
8.ஆயுள்பாவம்:
இங்கு பாக்கியாதிபதி நின்றால் அப்பாவுக்கு கெண்டம்,அவர் மறைந்து வாழ வேண்டி வரலாம்,சிறை செல்லலாம்,ஜாதகரை பிரியலாம். ஜாதகர் கொலைத்தொழிலுக்கும் துணியலாம். ( சிக்கன் சென்டர்?) .தூர தேச பயணம் செல்கையில் விபத்து நேரலாம் அல்லது வெளி நாட்டில் உயிர் பிரியலாம். ஒரு மரணத்தால் ஜாதகர் தம் சொத்து,முதலீடு ,சேமிப்பு அனைத்தையும் இழக்க வேண்டி வரலாம். சகட்டு மேனிக்கு எழுதி கிளிச்சு செயிலுக்கு போற பார்ட்டியெல்லாம் இந்த கேட்டகிரி .
9.பாக்யபாவம்:
பாக்கியாதிபதி பாக்யபாவத்துலயே ஆட்சி பெற்றால் அப்பாவுக்கு நெல்லது. அவர் முன்னேற்றம் வேகம் பெறும். ஜாதகருக்கு பூர்விக சொத்து கிடைக்கும் . சேமிப்பு ,முதலீடுகளி ஆர்வம்,அனுகூலம் இருக்கும்.ஆனால் ஜாதகரின் ஜாதகத்தில் லக்னாதிபதி உச்சம் பெறாவிட்டால் அப்பா கோண்டுவாகி பெண்டாட்டிக்கும் -அப்பாவுக்கும் மத்தியில மாட்டி முளிக்கனும். கிட்னி வித்து வெளி நாடு போறதெல்லாம் இந்த கேட்டகிரிதான்.ஜாதகர் பப்ளிஷிங்,வெப் பப்ளிஷிங்ல பெயர் பெறுவார். ( உத்யோகஸ்தராவே முடிஞ்சுருவாரு)
10.ஜீவனபாவம்:
சுற்றுலா, சிறு சேமிப்பு துறை, வருவாய்த்துறை, செய்தி மக்கள் தொடர்பு அல்லது அற நிலைய துறைகளில் வேலை செய்யலாம். தொண்டு நிறுவனம் துவங்கி செயல்படலாம். ஃபுல் டைம் ஆன்மீக ,மத பிரச்சாரம் .ஜனக மகரிஷி போல இக,பர சுகங்களுக்கு மினிமம் கியாரண்டி உண்டு.
11.லாப பாவம்:
அப்பாவின் அன்போடு ,ஒரு காட் ஃபாதர் அல்லது ஃபாதர்லி பர்சனோட அன்பு ஆதரவு கிடைக்கும். சகோதர நஷ்டத்தால் அல்லது அவர் வேண்டாம் என்று சொல்லிவிடுவதால் பூர்விக சொத்து உபரியாகவே கிடைக்கலாம்.மூத்த சகோதரர் தந்தை ஸ்தானத்தில் இருந்து ஜாதகரை சம்ரட்சிப்பார்.
12.விரயபாவம்:
பூர்விக சொத்துக்கள் இரா. இருந்தாலும் வீண் விரயமாகிவிடும். அப்பா ? இருந்தாலும் இல்லாதது போலத்தான். ஓடிப்போன சிட் ஃபண்ட் முதலாளிகளிடம் பணம் போட்டவர்கள் இந்த கேட்டகிரிதான். சிவில் வழக்குகளுக்காக கோர்ட்டில் குடித்தனம் இருப்பவர்களும் இவர்களே. பொஞ்சாதி தாலிய அடகு வச்சு கவிதை தொகுப்பு போட்டு தெரிஞ்சவுகளுக்கு ஓசியில கொடுக்கிறவுகளும் இவிகதான்.

இலவசம்: 100 பேருக்கு தலா 10 கேள்விகளுக்கான பதில்கள்

null

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு நவகிரகங்களுடன் பேட்டி தொடர்ல செவ்வாயுடனான பேட்டி வெளியாகியிருக்கனும். இடையில ஏற்பட்ட இடைவெளி காரணமா எல்லாமே “பஜ்”னு இருக்கு. கொஞ்சம் சூடு தேவைப்படுது. அதனால இந்த அறிவிப்பை வெளியிடவேண்டியதா போச்சு.

இந்த அறிவுப்பு டுபாகூருன்னு நினைச்சுரப்போறிங்க. நெஜமாலுமே 100 நாளைக்கு 100 பேருக்கு தலா 10 கேள்விகளுக்கான பதில்களை இலவசமாவே தரப்போறோம். என்ன திடீர்னு இவ்ள நெல்ல எண்ணம்னு கேப்பிக சொல்றேன்.

அடியேன் 2009,மே முதல் ஆன்லைன் ஜோதிட ஆலோசனை வழங்கி வருவது தெரியும்.இதுக்கான கட்டணம் ரூ.250ன்னு பேரு.ஆனால் பல சந்தர்ப்பத்துல பாங்குகாரவுக ரூ25 ஐ ஆட்டை போட்டுர்ராய்ங்க. நமக்கு நெட் ரூ225 கியாரண்டி.

இந்த கட்டணத்தை உயர்த்த சொல்லி நிறைய சோசியர்கள் கண்ணீர்கடிதமே எளுதியிருக்காய்ங்க.ஆனாலும் உசத்தலை. கடந்த 3 வருசமா இப்படியே ஓடிப்போயிருச்சு. உசத்தித்தான் பார்த்தா என்னங்கற கெட்ட எண்ணம் வந்துருச்சு.

அதுக்காவ ரூ250 டாரிஃபை எடுத்துரப்போறதில்லை. இந்த டாரிஃபுக்கு முன்னோட்டம் -பரிகாரம் -தசாபலன்னுட்டு 3 ஆடியோ அனுப்பிட்டிருக்கோம். இனி ஸ்ட்ரிக்டா அவிக எதிர்காலம் குறித்த 10 கேள்விகளுக்கான பதில்களை மட்டும் தர்ரதுன்னு முடிவு பண்ணியிருக்கம்.

முன்னோட்டம் -பரிகாரம் -தசாபலன்னுட்டு முழுப்பலன் வேணம்ங்கறவுக மட்டும் இனி ஒரு ஜாதகத்துக்கு ரூ.500 செலுத்த வேண்டியிருக்கும். ( 31/12/2012 க்குள்ள கட்டணத்தை செலுத்திர்ரவுகளுக்கு பழைய கட்டணமே )

கட்டணத்தை செலுத்த வேண்டியஅக்கவுண்ட் விவரம்:
Name: Sundaresan Murugan A/C No: 30333022274
Name of the Bank : State Bank of India
Branch Name: GREAMSPET Branch Code: 7083
IFSC Code: SBIN0007083
Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP
Pincode: 517002
Swift Code: N/A RTGS : YES
கட்டணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்து விட்டு / அக்கவுண்டில் பணம் கட்டிவிட்டு அதன் விவரத்தை ஒரு மெயில் மூலம் தெரிவித்தால் நல்லது. பர்த் டீட்டெயில்ஸ் ஒரு மெயிலில், கட்டணம் செலுத்திய விவரம் ஒரு மெயிலில் அனுப்பாது ஒரே மெயிலில் அனுப்பினால் நல்லது.
எம்.ஓ அனுப்புவோர்:
எஸ்.முருகேசன் ( S.MURUGESAN ) என்ற பெயருக்கு # 17-210,Kummara st, சித்தூர் ஆ.பி 517001 , என்ற விலாசத்துக்கு அனுப்பலாம்
வெளி நாட்டு அன்பர்கள் மட்டும் எம்.ஓ அனுப்ப முயற்சி பண்ணாதிங்க. ( அது வந்து சேர அரை மாசம் ஆகுங்கண்ணா)
பே பால்:
கீழ் காணும் மெயில் முகவரி பே பால் மெயில் முகவரியாகும்.
swamy7867@gmail.com
எனவெ வெளி நாட்டு அன்பர்கள் பேபால் மூலம் காசு அனுப்பலாம்.
எம்.ஓ கூப்பனில் (ப்ளேஸ் ஃபார் கம்யூனிகேஷன்) பர்த் டீட்டெயில்ஸ், தங்கள் இமெயில் முகவரியை குறிப்பிட்டால் மிக நல்லது. மேலதிக விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்.

வருமானம் பெருகும்போது சேவையும் பெருகனும்லியா? இதுக்கு மிந்தி இலவச ஜோதிட ஆலோசனைன்னுட்டு பிசினாரித்தனமா ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் தந்துக்கிட்டிருந்தோம். இனி 2013, ஜனவரி 1 ஆம் தேதி முதல் 100 நாளைக்கு தினசரி ஒருத்தருக்கு 10 கேள்விகளுக்கான பதில்களை இலவசமா தர்ரதா முடிவு பண்ணியிருக்கம்.

இதுக்கு நீங்க செய்யவேண்டியது என்னன்னா ஒரு ஐம்பது காசு போஸ்ட் கார்டு வாங்கி . அதுல உங்க பர்த் டீட்டெய்ல்ஸ் , உங்கள் எதிர்காலம் குறித்த 10 கேள்விகள் , பதில் அனுப்பவேண்டிய மெயில் ஐடி, நீங்க போஸ்ட் கார்டு எழுதற தினம் நம்ம வலைதளத்துல வெளியான பதிவோட தலைப்பை எழுதி அனுப்பனும்.

போஸ்ட் கார்டை அனுப்பவேண்டிய விலாசம்: சித்தூர்.முருகேசன், 17-201,கும்மரா தெரு,சித்தூர் ஆ.பி 517001. நீங்க அனுப்பற போஸ்ட் கார்டுகளை ஆத்தா முன்னாடி வச்சுர்ரன். தினசரி காலையில கண்ணை மூடிக்கிட்டு , கைய விட்டு துழாவி கையில கிடைக்கிற ஒரு கார்டை எடுத்து ஜாதகம் கணிச்சு பத்து கேள்விகளுக்கு பதில் சொல்லிர்ரன். பதில்கள் ஆடியோ ஃபைலா உங்க மெயில் ஐடிக்கு வந்துரும்.

இந்த டீலுக்கு நான் ரெடி .. நீங்க ரெடியா?

எச்சரிக்கை:
போஸ்டு கார்டு கிடைக்கலின்னா இன்லண்டு ,அதுவும் கிடைக்கலின்னா கவர்ல எழுதுங்க வேணாங்கலை. தயவு செய்து இலவச ஆலோசனைக்கு மெயில் மட்டும் அனுப்பிராதிங்க ப்ளீஸ்..