தொழில்-உத்யோகம்-வியாபாரம் (தனிப்பதிவு)

Exif_JPEG_420
Exif_JPEG_420

அண்ணே வணக்கம்ணே !

உங்களுக்கும் ராஜயோகம் தொடர் நிச்சயமா தொடரும். டோன்ட் ஒர்ரி . இன்னைக்கு அன் ஷெட்யூல்டா இந்த தனிப்பதிவு வருது . எல்லா ஜோசியரும் பத்தாமிடத்தை பத்தி சொல்லும் போது “தொழில் -உத்யோகம் -வியாபாரம்”னு குத்து மதிப்பா அடிச்சு விட்டுர்ரம்.

இதுல உத்யோகம்ங்கறது டிஃப்ரன்ட். தொழில்/வியாபாரம் என்பது டிஃப்ரன்ட். ரெண்டாவது கேட்டகிரில சொன்ன தொழில் டிஃப்ரன்ட் வியாபாரம் டிஃப்ரன்ட்.
ஜோதிட விதிகளின் படி பத்தில் (லக்னம் முதல் 10 ஆவது ராசியில்) ஒரு பாவியாவது இருக்கவேண்டும் அ ஒரு பாம்பாவது இருக்கவேண்டும்ங்கறாய்ங்க. பத்துல பாவி இருந்தா அவன் அகிம்சாவாதியாவா இருப்பான்? நோ. பத்துல பாம்பு இருந்தா அவன் சட்டப்படி வியாபாரம் பண்றவனாவா இருப்பான் ? நோ ..

இந்த பூமிக்கு வந்திருக்கிற ஒவ்வொரு உசுரும் கர்மாவ தொலைச்சு – பிறவிச்சக்கரத்துல இருந்து விடுபடத்தான் பிறப்பெடுத்து வந்திருக்கு .
செயல் என்பது கர்மத்தை கூட்டும். செயல் உங்களுக்கே உங்களுக்கானதா இருந்தா கர்மம் ஓவர் ஃப்ளோ ஆகி பிறவிகள் தவுசன்ட் வாலா கணக்கா வளர்ந்துக்கிட்டே போகும்.

செயல் உங்களுக்கானதா இல்லாம -உங்க பாஸ் /உங்க நிறுவனத்துக்கான செயல்னு வைங்க உங்க செயல்களால் கூடும் கர்மங்கள் எல்லாம் உங்கள் பாசையோ /நிறுவனத்தையோ போய் சேரும்.

நிபந்தனை :
ஒவ்வொரு கணமும் உங்க மைன்ட்ல நான் என்ன எனக்காகவா செய்யறேன்ங்கற ஃபீல் இருக்கனும்.காய்தல் ,உவத்தல் இன்றி மேலிடத்தின் ஆணைகளை ஃபாலோ பண்ணனும்.சொந்த சிந்தனை கூடவே கூடாது .

பத்தாமிடத்துல சுப கிரகம் இருந்தா ஜாதகன் செயலையே ப்ரிஃபர் பண்ண மாட்டான். ஆகவே நோ கர்மம் . நோ பிறவிகள். ஒரு வேளை பாவ கிரகம் இருக்கு.பெருசா பலம் பெறல ..அப்போ உத்யோகம் அவனை ஈர்க்கும்.

வேலை பார்க்கிறவங்கள்ளயே ரெண்டு கேட்டகிரி இருக்காய்ங்க இல்லையா? நிறுவனத்தையே தலையில தாங்கி நடத்தறவிக. “எவனோ செத்தான் எனக்கென்ன போச்சு”ன்னு கொடுத்த வேலைய “மட்டும்” செய்துக்கிட்டு கணக்கு பண்றவிக.

இவ்ளோ மேட்டரையும் ஒரே வார்த்தையில கொண்டுவரத்தான் 10 ஆமிடத்தை கர்மஸ்தானம்னு சொல்றாய்ங்க. செரி உத்யோக மேட்டரை விடுங்க.
உங்களுக்கு உத்யோகம் திருப்திய தரலை -மனசு சதா தொழில்/வியாபாரத்து மேல போகுதுன்னா பத்தாமிடம் பாவ கிரகத்தால இன்ஃப்ளுயன்ஸ் ஆகி இருக்குனு அருத்தம்.

ஏற்கெனவே சொன்னபடி பத்துங்கறது கர்ம ஸ்தானம்.அதாவது நீங்க என்………….னா தொழில் செய்தாலும் அது என்ன்ன்னாஆஆஆஆஆ நாணயமான தொழிலா இருந்தாலும் உங்களுக்கு வர்ர ஒவ்வொரு பைசா பின்னாடியும் அதை உங்களுக்கு கொடுத்தவனோட கருமமும் வந்து சேரும்.
மேலும் எந்த தொழிலிலும் வாடிக்கையாளனுக்கு மி.கிராமாச்சும் துரோகம் செய்தே ஆகனும்.அப்பத்தேன் பைசா பார்க்க முடியும். இதனாலதான் வ்யாபாரம் த்ரோஹ சிந்தஹனு ஒரு முதுமொழியே இருக்கு.

தொழில்/வியாபாரத்துல நீங்க சக்ஸஸ் ஆகனும்னா நீங்க செய்யவேண்டியதெல்லாம் ரெண்டுதேன். ஒன்னு எதிராளிய கொல்லனும் (ஃபிசிகலா இல்லிங்க பாஸ்..சைக்காலஜிக்கலா) இல்லை நீங்க சாகனும். தொழில்/வியாபாரத்துல நீங்க எந்த அளவுக்கு உங்களை சனம் கொல்ல அனுமதிக்கிறிங்களோ அந்த அளவுக்கு தொழில் வளரும் .வியாபாரம் செழிக்கும்.

கொல்றதுன்னா எதிராளியோட ஈகோவை கொல்றது கூட கணக்குதேன். நீங்க கொல்ல ஆரம்பிச்சா பணம் சம்பாதிக்கமுடியாது . உங்க ஈகோவை எதிராளிகள் கொல்ல அனுமதிச்சா சுராங்கனிக்கா சேக்கு ( செமை பணம்)

இதுக்கு சின்னதா ஒரு உதாரணம்:

கடைக்காரர்: என்னண்ணே .. ஒரே தாட்டியா நாலணா குறைக்க சொன்னா எப்டி? இதுல எனக்கு வர்ரதே அஞ்சு பைசாதேன்
வாங்க வந்தவர்:யோவ் நான் ட்ராயர் போட்ட வயசுலருந்து இப்படி அஞ்சு பைசா அஞ்சுபைசானு சொல்லியே அஞ்சு காம்ப்ளெக்ஸ் கட்டிட்டே.ஏன்யா இப்படி பீலா விடறே.சரி ஒழி ..இந்தா பணம் , சரக்கை அனுப்பி வை.

வாங்க வந்தவரோ கொல்லும் இச்சை நிறைவேறிட்டதால உபரியா காசை கொட்டி கொடுத்ததை மறந்து போயிட்டே இருப்பாரு .மறுபடி மறுபடி உங்க கடைக்கு வந்துக்கிட்டே இருப்பாரு .

இதையே கொஞ்சம் மாத்தி யோசிங்க.
நீங்களே ஈகோயிஸ்ட் .வந்தவனை ..இதான் ரேட்டு -பிடிச்சா வாங்கு -பிடிக்காட்டி போயிட்டே இருன்னுட்டா? தொழில்/வியாபாரம் ஊத்திக்கும்.(என்னமோ தெரியல பதிவு அந்தரத்துல தொங்குது -சனம் கேள்வி கீள்வி கேட்டா உபரியா பல தகவல்களை /விளக்கங்களை தரலாம் -நான் ரெடி ..நீங்க ரெடியா?)

ஜோதிட மர்மங்கள்: 8

அண்ணே வணக்கம்ணே !

எச்சரிக்கை :
இந்த தளத்துக்கான ஸ்டோரேஜ் முடிந்து விட்டதால் புதிய பதிவுகள் இங்கு பிரசுரமாகி வருகின்றன.

கடந்த பதிவுல பத்துல இன்னின்ன சுபகிரகம் இருந்தா இன்னின்ன மாதிரி பல்பு வாங்கறோம்னு விலாவரியா சொல்லியிருந்தேன். இந்த பதிவுல இதை எப்படி சமாளிக்கிறதுன்னு பார்க்கலாம்.

ஹய்யா என் ஜாதகத்துல பத்துல சுபகிரகம் இல்லேன்னு துள்ளி குதிக்காதிங்க. பத்தாமிடத்துக்கு சுபகிரகம் ஆதிபத்யம் பெற்றாலும் இதே எஃபெக்டு வர்ரதுக்கு சான்ஸ் இருக்குங்கோ.

சுபகிரகங்களின் பட்டியல்:
வளர்பிறை சந்திரன்
குரு (அதிலும் தனித்து நிற்கற குருவால பெரீ தலைவலிங்ணா)
இதரபாவிகளுடன் சேராத புதன்
சுக்கிரன்

மேற்படி கிரகங்கள் பத்துல இருந்தாலோ -பத்துக்கு ஆதிபத்யம் பெற்றாலோ வர்ர எஃபெக்டை எப்படி சமாளிக்கிறது?
தொடர்ந்து படிக்க இங்கே அழுத்துங்க. உதிரியா போட்டிருக்கன். இந்த தகவல்கள் மட்டுமில்லை .சூடு -மணம் -குணம் -காரம் நிறைந்த ஜோதிட தகவல்கள் இனி இங்கே வெளிவரப்போகுதுங்கோ

அப்படியே கையோட கையா இந்த முக நூல் பக்கத்துக்கு ஒரு லைக்கும் போட்டுருங்க..

ஜோதிட மர்மங்கள்: 7

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு ஜோதிட மர்மங்கள் வரிசையில அல்லாருக்கும் அன்ன தாதாவா இருந்து ஜீவனம் நடத்த தொழில் உத்யோகம் வியாபாரங்களில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கிற பத்தாமிடத்து பலனை எப்படில்லாம் மிஸ்யூஸ் பண்றோம். மேற்படி ஜீவனபாவம் ஜாதகத்துல பல்பு வாங்கியிருந்தாலும் அந்த பாதிப்புகளை எப்படி சமாளிக்கிறது இத்யாதி மர்மங்களை ப்ரேக் பண்ண போறோம். நிற்க.

2009 வாக்குல நம்ம சைட்டுக்கு 400+ ஹிட்ஸ் வந்தா ஒரே குஜிலி. ஆனா இன்னைக்கு பதிவு போட்டு பத்தாவது நாள் கூட 700+ வருது. பதிவு போட்ட ரெண்டு நாள் 1000 ஐ தாண்டுது. ஆரம்பத்துல புரியலைங்கற கம்ப்ளெயிண்ட் மஸ்தா வரும்.

இப்பல்லாம் அப்படி ஒன்னும் காணோம். ஒன்னு சனம் நம்ம ஒக்காபிலரிக்கு பழக்கப்பட்டு போயிருக்கனும்.இல்லின்னா தாளி இவன் திருந்த போறதில்லை. என்ன ம.. னாவுக்கு கமெண்ட் போடறதுன்னு விட்டிருக்கனும்.

இதை ஏன் இங்கே சொல்றேன்னா “பத்தில் ஒரு பாம்பாவது இருக்கவேண்டும் -ஒரு பாவியாவது இருக்கவேண்டும்”னு சொல்றாய்ங்களே அதுக்கான விளக்கத்தை கொடுக்கத்தேன்.

2000 முதல் 2009 வரை ஒழுங்கு மருவாதியா -இலக்கண தமிழ்ல சாஸ்திரோக்தமா-பவித்ரமா எழுதிக்கிட்டிருந்தம். ஆனால் கிடைச்ச ஹிட்ஸ் ஜஸ்ட் 2006 தேன்.

ஆனால் அங்கன ஆரோ ஒரு தம்பி சொல்லுச்சுன்னு இந்த ஸ்லாங்கை பிடிச்சு எழுத ஆரம்பிச்சம். இந்த 4வருசத்துல பத்து லட்சம் ஹிட்ஸை தாண்டியாச்சு.

பத்துல சுபகிரகம் இருந்தா நாம 2000 முதல் 2009 வரை என்ன செய்தோமோ அதைத்தான் செய்ய முடியும்.
இதுவே ஒரு பாவ கிரகமோ – ஒரு பாம்பு கிரகமோ இருந்தா எப்படி இருக்கும்?

பத்துல சுப கிரகம் உள்ளவுக அய்யோ பாவம் பார்ப்பாய்ங்க (ரஜினி ஐயோ பாவம்னு நினைச்சா 38 வருசம் தமிழ் நாட்ல வாழ்ந்த பிறவும் மாறாத அவரோட கன்னட உச்சரிப்பை கிழிக்க முடியுமா?)

பத்துல சுப கிரகம் உள்ளவுக ஒரு வேலையை ஒரே அட்டெம்ப்ட்ல பக்காவா – முழுசா செய்துருவாய்ங்க.

நாம போடற பதிவுகளை எல்லாம் பார்த்தா அப்படியா கீது. இல்லை. ஏதோ அந்த நேரத்துக்கு உங்கள்ள மஸ்தா பேரு நான் எழுதனும்னு நினைக்கிறிங்களோ அது ஸ்பார்க் ஆகும் அதை டச் பண்றதுக்குள்ளயே பதிவு முடிஞ்சுரும். அப்பத்தேன் மறுபடி மறுபடி பதிவெழுதற வெறி வரும். உங்களுக்கும் படிக்கற ஆர்வம் தொடரும்.

பத்துல சுப கிரகம் உள்ளவுக நெல்லவுகளா இருப்பாய்ங்க. நெல்லதையே செய்வாய்ங்க. எதையும் அல்லாரையும் நெல்லவுகளா நினைச்சு ப்ளான் பண்ணுவாய்ங்க.பல்பு வாங்குவாய்ங்க.

நாம அப்படியா நோ ..? நாட்ல உள்ள நத்தம், நாடோடி, புறம்போக்கு, அரை டிக்கெட்டு ,கால் டிக்கெட்டு ,பிக் பாக்கெட்டு ,அடுப்பூதி,அன்னக்காவடி,திண்ணத்தூங்கி எல்லாத்தையும் பார்த்திருக்கம். இதனாலத்தேன் நம்ம பதிவுகள் ஹிட் ஆகுது. உங்க ஹார்ட்டை டச் பண்ணுது.
இப்பம் புரியுதா? பத்துல ஏன் பாவியிருக்கனும்னு?

அடுத்து இந்த பாம்பு கிரகங்களை பார்ப்போம். இவை நிழல் கிரகங்கள் . நிழலுக்கும் நகலுக்கும் கொஞ்சம் போல வித்யாசம் இருக்கும்னு நினைக்கேன். ஆனால் நீங்க ஆருக்கு நிழலா இருக்கிங்கங்கறது முக்கியம். அதே போல எதை நகல் எடுக்கறிங்கங்கறதும் முக்கியம்.
அல்லா கிரகமும் க்ளாக் வைஸ் சஞ்சரிக்க இவிக ஆன்டி க்ளாக் வைஸ் சஞ்சரிக்கிறாய்ங்க. இதனால புதுமை -புரட்சி -வெரைட்டி – டிஃப்ரன்ஸ்லாம் யதேஷ்டமா வந்துரும்.

இதுமட்டுமில்லிங்ணா நீங்க ஒரு பெரமுடா முக்கோணம் மாதிரி இருப்பிங்க. உங்களுக்கு நுழைஞ்சவுக வெளிய போகவே மாட்டாய்ங்க.
நமக்குள்ள என்.டி.ஆர்,ஒய்.எஸ்.ஆர் ( ரஜினியை எவ்ள விரட்டினாலும் – இந்த ஃபோட்டோ ஷூட்ல ஏதோ ஒரு கோணத்துல வெளிப்பட்டுர்ராரு -அதுவும் சனம் ஐடென்டிஃபை பண்ணிர்ர அளவுக்கு )

பத்துல பாம்பு இருந்தா நீங்க வாலி மாதிரி -எதிரியோட பலத்துல பாதி உங்களுக்கு வந்துரும். இதுமட்டுமா? ராகு கேதுக்களுக்கு இரவில் பலம் அதிகம். இரவு -மனிதர்கள் தூக்கம்ங்கற மரணத்துல இருக்கிற நேரம்.

யாரோட வில் பவரும் – யாரோட வைப்ரேஷனும் வேலை செய்யாது – நீங்க மட்டும் வேலை செய்விங்க. எதிரிங்களுக்கும் -போட்டியாளர்களுக்கு கிழிஞ்சுரும்.

போட்டியாளர்களே இல்லாத சமயம் ட்ராக்ல நீங்க ஓடிக்கிட்டிருப்பிங்க. மேலும் மற்ற கிரகங்கள் தர்ரது முறையான முறை. ராகு கேதுக்கள் தர்ரது முறையற்ற முறை.

எவ்ளோ பெரிய ராணுவம் கூட கொரில்லா தாக்குதல்ல பல்பு வாங்கிருது. புலிகள் ராணுவமா மாறின பிறகுதான் பின்னடைவே ஏற்பட்டது.
ஓகே ஓகே ..பத்துல பாம்பு இருந்தா என்ன லாபம்? பத்துல பாவி இருந்தா என்ன லாபம்னு பார்த்தோம். அடுத்த பதிவுல பத்துல சுப கிரகம் உள்ளவுக – பத்தாமிடத்துக்குண்டான ஆதிபத்யம் நைசர்கிக சுபர்களுக்கு கிடைச்சவுக அந்த வேக்குவத்தை எப்படி குறைச்சுக்கறதுங்கற விஷயங்களை பார்ப்போம்.
கடேசியா பத்தாம் பாவம் பலமாவே இருந்தாலும் அந்த பலத்தை நம்மில் பலரும் எப்படில்லாம் மிஸ்யூஸ் பண்ணி எப்டில்லாம் நாசமா போறோம்னு பார்க்கலாம்.
ஓகேவா உடுங்க ஜூட்

தொழிலும் கில்மாவும்

அண்ணே வணக்கம்ணே !
“ல்வ் மூட் ஸ்டார்ட் ..அவ்வ்”ங்கற தலைப்புல ஒரு தொடரை கடந்த மே மாதம் 24 ஆம் தேதி ஆரம்பிச்சு ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஒரு வழியா முடிச்சுட்டம். ஒரு காலத்துல ஆனந்த விகடன் காரவுக படக்குன்னு விலைய லம்ப்பா ஏத்திட்டாய்ங்க. நாம இந்த பாடாவதி தமிழ் பத்திரிக்கைகளை துட்டு கொடுத்து வாங்கிறது ரெம்ப ரேர். இப்பம்லாம் ஞா கிழமைன்னா ஏதோ ஒரு இழவை வாங்கிர்ரம் அது வேற கதை .

என்னடா நம்ம பத்திரிக்கைய காசு கொடுத்து வாங்கனம்னாலும் காசு தேவையில்லியா? ரீடர்ஸுக்கு பணம் பத்தின பேசிக்கல் நாலெட்ஜையாவது கொடுக்கனுமில்லையான்னு நமக்கு தோனுச்சு. உடனே எடுத்தோம் காகிதத்தை .தீட்டினோம் மடலை. வந்தது நாணயம் விகடன் பக்கங்கள் பிறகு நாணயம் விகடன். நமக்கு? நன்றி சொல்லி நாலணா கார்டு கூட எழுதலை மவனுங்க. சரி உடுங்க. ராகதேவனுக்கே டெஸ்ட் வச்சு ஃபெயில் ஆக்கின பரம்பரையாச்சே..
சரீ. இ இந்த மொக்கயெல்லாம் இப்பம் எதுக்குன்னு கேப்பிக சொல்றேன்.

ஜோதிடங்கறது வாழ்க்கையோட நேரடி தொடர்பு கொண்ட சமாசாரம். நம்ம சைட்டை படிக்கிறவுகளுக்கு தினசரி ஒரு டிப்பாவது கட்டாயம் கிடைக்கும். உ.ம் கோபம் காரணமா ரெம்ப அவதியா செய்யுங்கள் ரத்ததானம்.

இருந்தாலும் நீங்க உங்க தொழில் உத்யோகம் வியாபாரத்துல ஹிட் அடிச்சாதேன் நம்ம சைட்டும் ஹிட் அடிக்கும். நீங்க பத்து காசு கூடுதலா சம்பாதிச்சு – இன்னம் கொஞ்சம் நிம்மதியா இருந்தா நம்ம எழுத்துக்களை இன்னம் நாலு பேருக்கு சொல்விங்களே. அதனாலதேன் இன்னைக்கு தொழிலும் -கில்மாவுங்கற இந்த தொடரை ஆரம்பிச்சிருக்கன்.

ஒரு ஆண் பெண் என்ன செய்தாலும் அடி மனதில் “அதை” செய்வதாக ஒரு உணர்வு இருக்கும். அல்லது “அதை” எப்போது துவங்கலாம் என்ற திட்டமிடலோ – எப்போது துவங்கும் என்ற எதிர்ப்பார்ப்போ இருக்கவே இருக்கும்.

ஆண் பெண் சேர்ந்து செய்யும் வேலைக்கு மட்டுமல்ல தனித்து செய்யும் செயலுக்கும் ஒரு விதி இருக்கிறது.
1.”அது” கிடைக்காததால் செய்யப்படுவது
2.”அது” கிடைக்கும் என்று செய்யப்படுவது
3.”அது” கிடைத்துவிட்டது போன்ற பிரமையில் செய்யப்படுவது
4.”அது” கிடைத்துவிட்டது இனியும் கிடைக்கும் என்ற நிறைவுடன் செய்யப்படுவது
5.”அது” கிடைக்காது. இனியும் கிடைக்கவே கிடைக்காது என்ற முடிவுடன் செய்யப்படுவது

இதுவரை நான் சொன்னது தனிப்பட்ட செயல்கள் குறித்தே. செய்தொழில்,உத்யோகம், வியாபாரம் என்று பார்த்தால் இந்த விதிகள் இன்னும் பக்கா.
இதில் ஜோதிடம் எங்கண்ணே வருதுன்னு என்று எரிச்சல் கிளம்புதுல்ல? வரும் நிச்சயம் வரும்.

ஜாதகத்தில் 10 ஆமிடம் செய்தொழில்,உத்யோகம், வியாபாரம் ஆகியவற்றை காட்டும். எட்டு என்பது இன உறுப்பை காட்டும் பாவம். எட்டும் பத்தும் தொடர்பு கொண்டால் தொழில் ஓங்கும்-செழிக்கும் என்று ஒரு விதி உண்டு.

ஏதோ ஒரு படத்தில் சிவாஜி டாக்டர். சரோஜாதேவி நர்ஸ். இருவருக்கும் லவ்ஸ். அதை எம்.ஆர் ராதா ” மேஸ்திரி சித்தாளை கண்ணாலம் கட்டறாப்ல” என்று நக்கலடிப்பார்.

எட்டு பத்து பாவங்களுக்குகிடையில் /8-10 அதிபர்களுக்கிடையில் தொடர்பு ஏற்பட்டால் தான் ஈடுபட்டுள்ள துறை சார்ந்த நபரிடம் காதல் /கில்மாவுக்கு சான்ஸ் ஏற்படும்.தம் தொழிலை உடலுறவே போல் கருதி ஆர்வமுடன் ஈடுபடலாம். பலன் இத்துடன் முடிந்துவிடவில்லை.

எட்டு மரணத்தை விபத்துக்களை காட்டும். பேரிழப்பு,தனிமை உணர்வு ,வீண் பழி ,சிறை செல்லுதல் இத்யாதி பலனையும் தரவல்லது.

மரணம், விபத்து,தனிமை உணர்வு ,வீண்பழி,சிறை இத்யாதிக்கும் செய்தொழில்,உத்யோகம், வியாபாரங்களுக்கும் என்ன தொடர்பு ? இதுக்கும் கில்மாவுக்கும் என்ன லிங்க்? எல்லாத்தையும் விரிவா பார்க்கத்தான் போறோம். அடுத்தடுத்த பதிவுகளில். ஓகேவா உடுங்க ஜூட்டு..

“அதுவே” தொழிலா ?

பெரியவுக அதுவும் அந்த காலத்து பெருசுங்க கில்மாவை “கில்” பண்ண சொன்னதே இல்லை. அததுக்கு ஒரு வயசு. பிரம்மச்சரியம் ,கிருஹதாஸ்ரமம், வானப்ரஸ்தம்,சன்னியாசம்னு வச்சாய்ங்க.

பிரம்மச்சரியத்தை கரீட்டா மெயின்டெய்ன் பண்ணா கிருஹதாஸ்ரமத்துல (கில்மா) விளையாடலாம். கில்மால ஆடி முடிச்சுட்டா பொளப்பை பார்க்கனும்டானு தோனிரும். ஒழுங்கா தொழில் செய்தா செட்டில் ஆயிருவம்.

செட்டில் ஆயிட்டா கொய்யால போதும் ..அல்லாடினதுன்னு அக்கடான்னு இருக்க பார்ப்போம்.
( வானப்ரஸ்தம்) இந்த லைஃப்ல சரவணபவன் அண்ணாச்சி மாதிரி ஜொள்ளு விட்டுத்தொலைச்சா நாஸ்தி.கரீட்டா இந்த லைஃபை கொஞ்சா நாள் வாழ்ந்தா சன்யாசம் ஆட்டோமெட்டிக்கா ஒர்க் அவுட் ஆயிரும்.

இதை விட்டுட்டு பிஞ்சுலயே பழுத்துட்டா – நாம இழந்த சக்தி வைத்தியர்களையும் -பொஞ்சாதிங்க கோவில் குளத்தையும் கட்டிக்கிட்டு அல்லாடனும். இந்த டிஸ்டர்பன்ஸ் இருக்கிறச்ச ஒன்னு தொழில் மேல புத்தி போகாது. இல்லின்னா “இயலாமையை” மறக்க சகட்டுமேனிக்கு ராத்திரி பகலா வேலை வேலைன்னு மாரடிப்போம். ஹார்ட் அட்டாக்ல போய் சேருவம்.

முதல் கோணல் முற்றிலும் கோணம். ஓட்டப்பந்தயத்துலருந்து ஃப்ளைட் வரைக்கும் டேக் ஆஃப் தான் ரெம்ப முக்கியம். அந்த டேக் ஆஃப் கரீட்டா செட் ஆகனும்.

நம்ம கூட படிச்சவுகள்ள படிப்புல புலியா இருந்தவுக கூட பின்னாடி அகரமுதலி தெரியாத அராத்துங்க கிட்டே பொய்க்கணக்கு எழுதி பொளைக்கிறதை பார்க்கிறோம். ஏன் இப்படி?

அவிக எங்கே கோட்டை விட்டோம்னு திரும்பி பார்க்கோனம். உதாரணத்துக்கு சுக்கிரன் பத்துல இருக்காருன்னு வைங்க அதுவே தொழிலா இருந்துருவாய்ங்க. வாழ்க்கையில அதுவும் தேவை தான். ருசிக்கு உப்பு தேவைதான்.அதுக்காக அதை கரண்டி கரண்டியா அள்ளி வாய்ல போட்டுக்கிட்டா என்னாகும். உடனடி ரிசல்ட் .உச்சா வராது. போக போக காம்ப்ளிகேஷன் சாஸ்தியாகி பி.பி எகிறிப்போயி ஹார்ட் அட்டாக் வந்தோ , கிட்னி ப்ளாக் ஆகியோ டிக்கெட் போட்டுர வேண்டியதுதான்.

ஆக லக்னாத் பத்தாமிடம் பல்பு வாங்கிட்டா டோட்டல் லைஃபே கொலாப்ஸ். இன்னைக்கு ஆக்சுவலா பத்தாமிடத்து அதிபதி எங்க இருந்தா என்ன பலன்னு சொல்லோனம்.

ஜாதக வரத்து ஓவரா போயி -பெண்டிங் சாஸ்தியாயிருச்சு. அதனால உங்களை முழுக்க ஏமாத்தாம ஒவ்வொரு கிரகமும் தரக்கூடிய தொழில் அமைப்பை இந்த பதிவுல தரேன். நாளைக்கு அசலான மேட்டரு.ஓகேவா?

null

அண்ணே ..மேற்கண்ட வலைதளத்தை நாம எல்லாரும் சேர்ந்து நடத்தனும்னு ஆசை. நீங்க செய்யவேண்டியதெல்லாம் உங்களுக்கு ரெம்ப பிடிச்ச அல்லது பிடிக்காத தமிழ் தளங்களை பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதனும். எழுதுவிங்கல்ல. மேலதிக விவரங்களுக்கு இங்கு சொடுக்கவும்.

ஜாதகத்துல பலமா இருக்கிற கிரகத்தை பொருத்து தொழில் அமைஞ்சா ( அமைச்சுக்கிட்டா) , அந்த தொழிலை பொருத்து வரக்கூடிய நோய்கள் வராது.கடன் வாங்க தேவையில்லை. போட்டியை சமாளிக்கலாம். கோசாரம் சரியில்லாம எவனாச்சும் சப்ஜாடா திருடிட்டே போயிட்டாலும் பக்கத்து ஜில்லா போலீஸ் கிட்டே மாட்டிக்குவான். நம்ம சொத்து ரிக்கவரி ஆயிரும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அது மேல கான்சன்ட் ரேட் பண்ணா போதும். தூள் கிளப்பலாம் 24 மணி நேரம் அதை கட்டி மாரடிக்க தேவையிருக்காது.

ஆனால் நம்ம சனம் தங்கள் ஜாதகப்படி தங்களுக்கு எந்த தொழில் அமைஞ்சிருக்குன்னெல்லாம் பார்க்க மாட்டாய்ங்களே. ஊரெல்லாம் டாக்டர் ,இஞ்சினீருன்னா தாங்களும் டாக்டர் , இஞ்சினீராயிரனும், ஊரெல்லாம் சாஃப்ட் வேர்னா தாங்களும் இஞ்சினீராயிரனும்னு தவிப்பாய்ங்க.

அதுக்குண்டான அமைப்பு இருக்கா இல்லியான்னு பார்க்கமாட்டாய்ங்க. சிக்ஸ் ஓல்ட் பல்புக்கு சிக்ஸ் ஓல்ட் கரண்டுதான் கொடுக்கனும். அதிகமா கொடுத்தா என்ன ஆவும்? பல்பு ஃப்யூசாயிரும். தொழில் மேட்டர்லயும் அதான் நடக்குது.

நம்ம ஜாதகத்துல எந்த கிரகம் வலிமையோட இருக்கோ அந்த கிரகத்தின் காரகத்வம் உள்ள தொழிலை தேர்வு செய்து செய்ய ஆரம்பிச்சா தொழில்ல டெவலப்மெண்டும் நல்லாருக்கும். மேற்சொன்ன மாதிரி தொழிலை பொருத்து வர்ர நோய்களும் வராது.

எந்த கிரகம் கெட்டு குட்டிச்சுவராகியிருக்கோ அதே கிரகத்தோட காரகத்வம் கொண்ட தொழிலை செய்யும்போது என்னாகுதுன்னா லோ ஓல்ட்டேஜ் சமயத்துல பக்கத்து வீட்டுக்கு பவர் சப்ளை கொடுத்த கணக்கா எல்லாமே மங்கலாயிருது. இதே நிலை தொடர்ந்தா மோட்டர் காய்ல் எல்லாம் புகையும், பல்புங்க ஃப்யூஸ் போகும். ஏன் அந்த ஏரியா ட்ரான்ஸ்ஃபார்ம் கூட வெடிச்சுரலாம்.

(சில சமயம் ஒவ்வொரு ஜாதகத்துல லக்னாதிபதி மட்டும் கொஞ்சம் போல வலிமையோட இருப்பாரு – இவிக அவரோட காரகத்வம் கொண்ட தொழில்லயே இறங்குவாய்ங்க. இதனால லக்னாதிபதியோட பலம் எக்ஸாஸ்ட் ஆகி அதே கிரகம் தொடர்பான வியாதிகள் வரும்.) பலான கிரகத்தாலே எனக்கு யோகம்னாய்ங்களே இப்ப அதே கிரகத்தால நோய் வந்துருச்சுங்கறிங்களேனு புலம்புவாய்ங்க.

இப்போ நவகிரகங்களோட தொழில் காரகத்வத்தையும் அந்த கிரகத்தோட பலம் இல்லாம அந்த தொழில்கள்ள இறங்கினா வரக்கூடிய பிரச்சினைகள் வியாதிகளை பத்தி பார்ப்போம்.

கிரகங்கள் தரும் தொழில் அமைப்பு

சூரியன் தரும் தொழில் அமைப்பு :
தந்தையின் தொழிலை தொடர்தல், விளம்பரம், மோட்டிவேஷன், ஸ்போக்ஸ் மேன், சேல்ஸ் ரெப்,சூப்பர் வைசர், கடியாரம்,டைம் ஆஃபீஸ், பகல் நேரத்தில் திறந்த வெளி யில் செய்யற தொழில், ஷெட்யூல்ட் பயணங்களுடன் கூடிய தொழில்(லாட்ஜு வைத்தியர் மாதிரி) கிராம நிர்வாகம்,மலை, தலை,எலும்பு,பல் தொடர்பான தொழில்கள் யாவும் சூரிய காரகத்வம் கொண்டவை.

சூரியன் கெட்டிருப்பின் வரக்கூடிய நோய்கள் பிரச்சினைகள் :
ஜாதகத்துல சூரியன் கெட்டிருந்தும் சூரியனோட காரகத்வத்துல வர்ர தொழிலையே செய்தாங்கனா மண்டை உடையும்,பல் கொட்டிப்போகும், பேக் போன் அடிவாங்கும் ( இளையதளபதி விஜய் கதையில இதான் நடந்திருக்கும்) ஃப்ரேக்சர்ஸ் நடக்கும்,அப்பா டிக்கெட் வாங்கிருவாரு, அப்பாவோட விரோதம் வரும். வில்லேஜ் பாலிடிக்ஸ்ல மாட்டுவாய்ங்க. லாஸ் ஆஃப் கால்ஷியம் இருக்கலாம். தன்னம்பிக்கை இருக்காது. செல்ஃப் ரெஸ்பெக்ட் மெயிண்டெய்ன் பண்ணமாட்டாய்ங்க

சந்திரன் தொடர்பான தொழில்கள் :
தண்ணீர்,திரவ பொருட்கள், படகு,கப்பல்,ஆறு,ஏரி,குளம்,கடல்,மீன்,இறால்,முத்து தொடர்பான தொழில்கள்,மனம் தொடர்பான தொழில் (சைக்கிரியாட்ரிஸ்ட்) மிமிக்ரி, வெண்முத்து, பிரமுகர்களின் மனைவியர், தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவுளின் துணை அ தயவில் செய்யும் தொழில்கள், தண்ணீர்த் தொடர்பான இடங்கள், தொழில்கள், யார் எவ்வளவு நேரம் இருப்பார்கள் என்று சொல்ல முடியாத இடங்கள் தொடர்பான தொழில்கள் (உம்) நீச்சல் குளம், கல்யாண மண்டபம், காய்கறி மார்க்கெட், பேருந்து, ரயில் நிலையங்கள் முதலியன. திடீர்ப் பயணங்கள் நிறைந்த தொழில் ,சிக்ஸ்த் சென்ஸை நம்பி செய்யும் தொழில், சீஸனல் வியாபாரங்கள், மக்களுடன் நேரடித் தொடர்புள்ள வேலைகள் இவற்றிற்கெல்லாம் சந்திர பலம் தேவை .

சந்திரன் கெட்டிருப்பின் வரக்கூடிய நோய்கள் பிரச்சினைகள்:
மனம், நுரையீரல், கிட்னி தொடர்பான வியாதிகள், சீதள ரோகங்கள், மன பிரமை, நிலையில்லாத வாழ்வு, மூட நம்பிக்கைகள், சபலசித்தம், அசுத்த குடி நீரால் வரும் நோய்கள், நா வறட்சி, அதி மூத்திரம்,சொட்டு மூத்திரம்

செவ்வாய் தொடர்பான தொழில்கள்:
பாடி பில்டிங்,ஜிம்,மார்ஷன் ஆர்ட்ஸ், போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், கெமிக்கல்,எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், பட்டாசு வெடி பொருட்கள், நெருப்பு, தர்க்கத்துக்கு முக்கியத்துவம் உள்ள தொழில், சகோதரர்கள்,வயதில் இளையோர், சத்ரிய குலத்தினருடன் சேர்ந்து செய்யும் தொழில்கள், சர்ஜன், மெட்டல் ஃபோர்ஜிங், ஹோட்டல் ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. மாட்டுப்பண்ணை, பால் பொருள், காரமான பொருட்கள், மாமிசம் தொடர்பான தொழில்கள்.

செவ்வாய் கெட்டிருப்பின் வரக்கூடிய நோய்கள் பிரச்சினைகள்:
எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜை தொடர்பான வியாதிகள்( போன் மேரோ), ரத்த சோகை, வெள்ளை அணுக்கள் குறைதல், நோய் எதிர்ப்பு சக்தி ஃபணாலாகி கண்ட நோய்களும் வாட்டுதல், அல்சர் (முக்கியமா பெப்டிக் அல்சர்) ரத்த வாந்தி,ரத்த பேதி, கட்டிகள்,ரத்த மூலம், மாதவிலக்கு தொடர்பான வியாதிகள், நிலதகராறுகள், அரிவாள் வெட்டு, குண்டு காயம்,சாலை விபத்து,தீ விபத்து, சகோதரர்களே ஆப்பு வைக்கறது,ஆயுதம் தாங்கிய வாடகை கொலையாளிகளால் ஆபத்து.

ராகு தரும் தொழில் அமைப்பு:
சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல்( ஜெராக்ஸு,காப்பி ரைட்டிங்) , இருட்டில் செய்யும் வேலைகள் ( சினிமா ப்ரொஜக்சன் முதல், கள்ளக்காதலியுடன் அஜால் குஜால் வரை) , திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், ரகசிய போலீஸ், உளவாளி, ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்புக்கு உதவுதல், விஷம், ஆங்கில மருந்துகள், பொய்யே முதலீடாய் நடக்கும் அனைத்து தொழில்களும் ராகு தொடர்பானவையே.( அரசியல்? லாயர்?) கருப்பு மார்க்கெட், மாஃபியா,ஏற்றுமதி,இறக்குமதி , பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள் தொடர்பான தொழில்கள், கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் , அனுப்புதல் ஆகிய தொழில்களும் ராகு தொடர்பானவையே

ராகு கெட்டிருப்பின் வரக்கூடிய நோய்கள் பிரச்சினைகள்:
இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, மெடிக்கல் ரியாக்சன் அ அலர்ஜி அ விஷபிராணிகளின் கடியால் நிறம் கருத்து போதல், அன் வாரண்டட் மோஷன்ஸ், வாமிட்டிங்ஸ், களவு போதல், மாயமாய் மறைதல் ( தலை மறைவுங்கோ) ,தனிமை, தன்னவர் சதிக்கு பலியாதல், காதல் தோல்வி, மனைவியுடன் பிரிவு, மலட்டுத்தன்மை, அல்லது தொடர் கருச்சிதைவு,

குரு:
தங்கம்,அடகு வியாபாரம், சட்டரீதியிலான சட்டப்படியான வட்டியுடன் கூடிய பைனான்ஸ், அரசியல், நிர்வாகம், அரசு துறை, அரசு காண்ட்ராக்டுகள்,ஓய்வு தொகைகள், முதியோர் இல்லங்கள், அரசு வீட்டுவசதி வாரியம், வாத்தியார், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், நீதிமன்றம், கரூவூலம், தொடர்பான தொழில்கள் , புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, காசாளர், கண்டக்டர், திட்டத்துறை, ஆலோசனை வழங்கும் துறையிலான வேலைகள்

குரு கெட்டிருப்பின் வரக்கூடிய நோய்கள் பிரச்சினைகள்:
இதயம் ,வயிறு பாதிக்கும். வாரிசுகள் இல்லாது போகலம்/அவர்கள் எதிரிகளாகலாம்/அவர்களது முன்னேற்றம் ஃபணாலாகலாம்.
திருமணம் தாமதமாகலாம் , மனைவி பிரியலாம். அரசியல் வாதி/உயர் அதிகாரி ஒருவரால் அசலுக்கே மோசம் வரலாம்.

சனி தரும் தொழில் அமைப்பு :
நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் வாரிய, தொழிலாளர் துறை, தொழிற் பேட்டை, இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், கருப்பு நிற பொருட்கள், மரணம் தொடர்பான தொழில்கள், அமரர் ஊர்தி, ஃப்ரீசர் பாக்ஸ், எல்.ஐ.சி க்ளாஸ் ஃபோர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள்,அடிமைத்தொழில், சிறைத்துறை இதெல்லாம் சனியால் அமையும் தொழில்களாகும்.

சனி கெட்டிருப்பின் வரக்கூடிய நோய்கள் பிரச்சினைகள்:
நரம்பு,கால்,ஆசனம் தொடர்பான வியாதிகள். தலித்துகள், வேலைக்காரர்களால் நட்டம். லாங் டெர்ம் ப்ராஜக்ட்ஸ்ல மாட்டி முளிக்கிறது. சிறை செல்லுதல் ,அவமானம்

புதன் தரும் தொழில் அமைப்பு:
ரெப், ப்ரமோட்டர், விளம்பரத்துறை பேச்சாளர்,ட்யூட்டர், போஸ்டல், எஸ்.டி.டி. கூரியர், ஜோதிடம், ஏஜென்சி, கன்சல்டன்ஸி கணிதம், மருத்துவம், வியாபாரம், முன்பின் அறிமுகமில்லாத இருவரைச் சேர்த்து வைக்கும் எந்த தொழிலும் கூட்டுறவு அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், கூட்டு வியாபாரங்கள், பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் ஒருங்கிணைத்தல், சிச்சுவேஷன் மேனேஜ்மென்ட், காண்ட்ராக்ட் ,லீஸ்,சப் லீஸ்
கேது தரும்தொழில் அமைப்பு:
ஏறக்குறைய ராகு காரகத்தொழில்களே அமையலாம். அவற்றில் ஏகத்துக்கும் புதுமை -புரட்சியை புகுத்தி அவதிப்படுதல் – பின்னொரு சமயம் உலகத்தின் அங்கீகாரத்தை பெறுதல் .
கேது கெட்டிருப்பின் வரக்கூடிய நோய்கள் பிரச்சினைகள்:
தர்க்கமே இல்லாத அல்லல்,அலைச்சல்,சுற்றல் ஏற்படும்.அவப்பெயர்,வில்லங்கம்,போலீஸ் பிரச்சினை,சிறைவாசம் கூட ஏற்படலாம்.ஊரு நாட்டை விட்டே வெளியேற வேண்டி வரலாம். பேன் அடிக்கலாம், புண்கள் ஏற்படலாம். யாரோ எதுவோ (செய்வினை) செய்துவிட்டார்கள் என்ற ஃபீல் ஏற்படும்.
சுக்கிரன் தரும் தொழில் அமைப்பு:
ஹவுசிங்,ஆட்டோமொபைல்ஸ், ஃபேன்சி,காஸ்மெடிக்ஸ்,இன்டிரியர், கேட்டரிங், டெக்ஸ்டைல்ஸ்,டிசைனிங், ஃபுட் டெக்னாலஜி, உணவகம், லாட்ஜுகள், கார் பார்க்கிங், ஸ்வீட்ஸ் ஸ்டால்,பேக்கரி. சங்கீதம்,நடனம்,சிச்சுவேஷன் மேனேஜ்மென்ட், அழகு,கவர்ச்சி,பெண்கள் தொடர்பான எந்த தொழிலும் சுக்கிர காரகமே.
சுக்கிரன் கெட்டிருப்பின் வரக்கூடிய நோய்கள் பிரச்சினைகள்:
ஆண்மை இழப்பு,பொருந்தா காதல்,கள்ளக்காதல், திருமண தாமதம், தம்பதிகளிடையில் பிரச்சினை,கைனகாலஜிக்கல் இஷ்யூஸ் .

பொளப்ப பாருங்கப்பு

1997 ல கூட ஒரு அஞ்சு ரூபாய்க்கு அரை கிலோ நெல்லூர் நொய் -100 கிராம் வறுத்த கடலை கிடைச்சது. என்னதான் மதியம் 2 மணிக்கு மேல அந்த அஞ்சு ரூவா கிடைச்சாலும் நொய்யை வெண் பொங்கல் கணக்கா பொங்கி வறுத்த கடலை சட்னி அரைச்சு வச்சுக்கிட்டு 3 மணிக்கு ஒரு கட்டு கட்டிட்டா டிஃபன், லஞ்ச்,டின்னர் எல்லாத்துக்கும் சரியா போயிரும்.

ஆனால் இன்னைக்கு ? செலவு கணக்கை பார்த்தாலே எல்லாம் ஒடுங்கி போயிருது. அதனால தேன் பொளப்ப பாருங்கப்புங்கறேன். மன்மோகனார், சிதம்பரம் மறுபடி சோடி கட்டி ஆப்படிக்க போறாய்ங்க.எதுவும் மாறப்போறதில்லை. இன்னம் சொல்லப்போனா நாறிரும்.

ரிட்டெய்ல் துறையில வெளி நாட்டு முதலீடுன்னு ஒரு கேசட் ஓடிக்கினு இருக்குது. கொய்யால.. நம்ம நண்பர் ஒருத்தரு மோர்ல ஒரு மிக்சி வாங்கினாரு. வாங்கி வச்ச 3 ஆவது நாளே உட்கார்ந்துக்கிச்சு. அதை கொண்டு போயி கொடுத்து 3 மாசம் ஆகுது. இன்னம் ஒன்னும் பேரலை.

இதுல கறிவேப்பிலை,கொத்தமல்லில்லாம் வித்தானுங்கனா கிளிஞ்சுரும்.

இன்னைக்கு காத்தை தவிர எல்லாத்தையும் காசு கொடுத்துதான் வாங்க வேண்டியதா இருக்கு. சித்தூருல கூட வர்ஜியா வர்ஜியமில்லாம எல்லா தெருவுலயும் ட்ராஃபிக் ஜாம். இதுல நாம ஒரு ஆட்டோ பின்னாடி மாட்டிக்கிட்டா அது விடற புகை மண்டலத்துல லங் கான்சர் வந்துருமோன்னு பயம்மா இருக்கு.

அதனால தான் சொல்றேன். ஒதகாத செலவையெல்லாம் நிப்பாட்டிட்டு அடக்கி வாசிச்சாக வேண்டிய கால கட்டம் இது. என்னதான் நாம சிக்கனம் தேவை இக்கணம்னு கோதாவுல இறங்கினாலும் ரூவாய்க்கு அறுவது பைசாவாச்சும் செலவழிச்சே ஆகனுமே. அந்த அறுவது காசை சம்பாதிச்சாகனுமே அதுக்கு நம்ம ஜாதகப்படி ஒரு தொழிலை அமைச்சுக்கறது முக்கியம்.

இங்கன ஒவ்வொரு கிரகமும் தரக்கூடிய தொழில் அமைப்பையும் – ஒரு வேளை அந்த கிரகம் சரியில்லாம நாம அந்த கிரக காரகம் உள்ள தொழில்ல இறங்கினா வரக்கூடிய நோய்கள்,பிரச்சினைகளையும் அனுபவஜோதிடம் முக நூல் பக்கத்துல தந்திருக்கேன். இங்கே அழுத்தி குன்ஸா பார்த்துருங்க.

நோய் பிரச்சினை ஏதுமில்லின்னா அப்படியே கன்டின்யூ பண்ணிக்கங்க. ஒரு வேளை நோய் பிரச்சினை இருந்தா ஒங்க ஜாதகத்தை உங்க ஃபேமிலி அஸ்ட்ராலஜருக்கு காட்டி பெட்டர் பொசிஷன்ல இருக்கிற வேற ஏதாச்சும் ப்ளானட்டை சொல்ல சொல்லுங்க.

ஆனால் அது லக்னாதிபதியா இருக்கக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமா நோய் -பிரச்சினைய கொடுத்துக்கிட்டிருக்கிற கிரகம் தொடர்பான தொழிலை விட்டுட்டு ஆல்ட்டர்னேட்டிவுக்கு மாற பாருங்க. இந்த விவரங்களை அனுபவ ஜோதிடம் முக நூல் பக்கத்துல பக்காவா கொடுத்திருக்கன். இங்கே அழுத்தி அங்க வந்துருங்க. அப்டியே ஒரு லைக் போடுங்க

லக்னாத் 10 ஆமிடத்தை தொழில் ஸ்தானம் கர்மஸ்தானம்னு சொல்றோம். அதுக்கு முந்தின பாவத்தை தர்மஸ்தானம்ங்கறோம். இது ரெண்டையும் தொட்டு தருமமும் -கருமமும்னு இன்னொரு பதிவும் போட்டிருக்கேன். இங்கே அழுத்தி அதையும் ஒரு ஓட்டு ஓட்டிருங்க.

ஆண் பெண் வித்யாசங்கள்: தொழில் உத்யோகம்

அண்ணே வணக்கம்ணே !
ஆண் பெண் வித்யாசங்கள்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு அடிச்சு பிடிச்சு 9 பாவம் முடிச்சு இப்பம் பத்தாம் பாவத்துக்கு வந்திருக்கம். இது ஜாதகரோட தொழில்,உத்யோகம் இத்யாதிய காட்டும் பாவம். இந்த பாவத்தை பொருத்தவரை ஆண் பெண்ணுக்கு இடையில் என்ன வித்யாசம்னு பார்ப்போம்.Read More