உங்களுக்கும் ராஜயோகம் :25

RSS

அண்ணே வணக்கம்ணே !
குரு பலம் இல்லாதவிக ராஜயோகம் பெற என்ன செய்யலாம்ங்கறதை இந்த பதிவுல சொல்லோனம். அல்லாரும் -ஐ மீன் ஜோசியர்கள் எந்த கிரகம் செரியில்லின்னா அந்த கிரகத்துக்குரிய கடவுள் பேர சொல்லி ச்சூ காட்டி விட்டுர்ராய்ங்க. சனம் “கோயிலுக்கு போ -சாமி கும்பிடு வந்துரு”ன்னு சொன்னதை திராட்டுல விட்டுட்டு கோயில்லயே குடித்தனம் பண்ண ஆரம்பிச்சுர்ராய்ங்க. ஆனால் கோயில்-குளம்னு போகனும்னா கூட உங்க ஜாதகத்துல குரு பலம் இருக்கோனம்.

குரு பலம் இல்லாம கோவில் குளம்னு அலப்பறை கொடுத்தா ஆப்புதேன். கோவில்களை 3 க்ரூப்பா பிரிக்கலாம்.

1.மாடர்ன் டெம்பிள்ஸ்
இதெல்லாம் ச்சும்மா பிக்னிக் ஸ்பாட் மாதிரி-போகலாம் -போன மாதிரியே வந்துரலாம் ( ஆனா இங்கே போனாலும் சிம்னி போடாத லாந்தர் விளக்கு போல படபடன்னு அடிச்சுக்கிட்டிருக்கிற குருபலம் செலவழியும்) இதுல ஒரு ஆறுதல் என்னடான்னா இந்த மாடர்ன் டெம்பிள்ஸ் மேல உங்களுக்கு ஏற்படற கவர்ச்சி இத்யாதில்லாம் மேம்போக்கானது .கே டிவியில நல்ல படம் போட்டுட்டான்னா கோவிலுக்கு போறது கேன்சலாயிரும்.

2.மாடர்னைஸ்ட் டெம்பிள்ஸ்
ஒரு காலத்துல சாஸ்த்ரோக்தமா இருந்து மாடர்னைஸ் பண்ணப்பட்ட டெம்பிள்ஸ்ங்கறதை சுருக்கமா சொன்னேன். இங்கே போனாலும் குரு பலம் செலவழியும். அதே நேரத்துல உங்க கான்ஷியஸ் மைன்டை தாண்டி சப் கான்ஷியஸ் லெவலுக்கு கூட உங்களை இதெல்லாம் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணாது .
அதே நேரம் ஒரு கவர்ச்சி ஏற்பட்டுரும். வாழ்ந்து கெட்டவன் /அட ராசபரம்பரையில வந்த கடேசி வாரிசோட அரண்மனைக்கு ஒரு தபா போறிங்கன்னு வச்சுக்கங்களேன். அதே எஃபெக்டுதான்.

3.கைவிடப்பட்ட புராதன கோவில்கள்:
கூடங்குளம் அணு உலையிருக்கு. திடீர்னு ஒரு விபத்தே போல சித்தூர் முருகேசன் (ஹி ஹி நான் தேன் பாஸ்) டைரக்ட் எலீக்சன்ல பிரதமர் ஆயிட்டேன்னு வைங்க. அட போங்கடா உசுரோட இருந்தா உப்பு வித்து பொளைச்சுக்கலாம். உசுரே போயிரும்னா அந்த கருமாந்திரம் எதுக்கு மூடித்தொலைன்னு சட்டம் போட்டுட்டேன்னு வைங்க. இதே நிலை தான் கைவிடப்பட்ட புராதன கோவில்களுக்கு .

அது ரன்னிங்குல இருந்தப்போ சாலக்கா மின்சார உற்பத்தி செய்திருக்கலாம்.ஊருக்கு வெளிச்சம் கொடுத்திருக்கலாம்.ஆனால் இப்போ? உற்பத்தி நடக்கவே இல்லின்னாலும் பரவால்ல. எக்கு தப்பா கூகுள் காரன் விட்ட ட்ரைவர் இல்லாத கார் கணக்கா ஏதோ நடக்குதுன்னு வைங்க.
இதான் ஹை ரிஸ்க்.

ஓஷோ சொல்வாரு.கொய்யால ..வேணம்னா நீ கடவுளா மாறலாம்.ஆனால் கடவுளை பார்க்க மிடியாது.

கோவிலுக்குள்ள “ஏதோ” இருந்தா உள்ளே போன நீங்க பழைய ஆளா நீங்க ரிட்டர்ன் ஆக முடியாது. உங்களுக்குள்ள என்னமோ நடந்துரும். உள்ளே போன ஆள் வெளியே வந்த ஆளை போல இருக்கவே மிடியாது .

விக்கிரக வழிபாட்டை பத்தி ஓஷோ சொல்வார் “இது தப்பான வார்த்தை. விக்கிரகம் இருக்கும் வரை அங்கே வழிபாடு நிகழாது. வழிபாடு துவங்கி விட்டால் அங்கே விக்கிரகம் இருக்காது”

இதெல்லாம் தத்துவார்த்தமா பார்த்தா ஓகே தான். ஆனால் லாஜிக்கலா பார்த்திங்கன்னா கோவிலோ -உள்ளாற இருக்கிற விக்கிரகமோ ஸ்தூல பொருள் தான். ஏதோ ஒரு டெக்னாலஜியை உபயோகிச்சு அதை உயிரோட்டமுள்ளதா மாத்தியிருக்காய்ங்க.

உங்களுக்கு புரியனும்னா சிம்பிளா சொல்றேன். விக்கிரகம் ஒரு ரீசார்ஜபிள் பேட்டரி – அதை தொடர்ந்து சார்ஜ் பண்ணிக்கிட்டே இருக்கோனம். ப்ளஸ் -மைனஸ் மாறப்படாது.பேட்டரி கெப்பாசிட்டிய பொருத்து சார்ஜ் இருக்கனும். ஷார்ட் ஆகப்படாது .

இதெல்லாம் ஒர்க் அவுட் ஆற வரை ஓகே. இதுல எதுனா ஒன்னு பிடுங்கிக்கிட்டா என்னாகும்? பேட்டரி நில் ஆயிரும்.
நில்லான பேட்டரி என்ன செய்யும்? சார்ஜ் ஆகவே பார்க்கும். ஏதோ கிடைக்கும்னு போன மகாசனங்களோட பேட்டரியை அவுட்டாக்கி அது சார்ஜ் ஆக ஆரம்பிச்சிரும்.

(ஏம்பா நான் செரியா பேசறனா?)

குருபலம் இல்லாத ஹ்யூமன் பாடி லோ சார்ஜ்ல உள்ள பேட்டரி மாதிரி – நில் பேட்டரி பக்கத்துல போனா பேட்டரி காலியாயிரும்.
குருபலம் இல்லாதவிக கதையே இதான். ஒரு வேளை குருவோட ராகு /கேது/சனி ஆருனா சகவாசம் வச்சிருந்தா சொல்லவே தேவையில்லை.
இன்னாபா இது கெரகம் செரியில்லன்னுதான் கோயிலுக்கு போக சொல்றாய்ங்க .போறம் .நீ என்னமோ இப்படி பேதியாக்கறியேன்னு புலம்ப ஆரம்பிச்சுராதிங்க.

மறுபடி பேட்டரி உதாரணத்தையே எடுத்துக்குவம். கனெக்சன் கரீட்டா இருக்குன்னா நிதானமா சார்ஜ் ஆகும். நிதானமா டிஸ்சார்ஜ் ஆகும்.
கெரகம் கெட்டுப்போனப்போ எக்குத்தப்பா சார்ஜ் ஆகி தொலைக்கும். ஒலகமே டீ ஜெனரேட்டட் . இதுல நீங்க ஓவர் சார்ஜுல இருந்திங்கன்னா டீம் லீடர் கோயான் இன்சல்ட் பண்ணான்னு ராஜினாமா பண்ணிட்டு அல்லாடுவிங்க. (டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் -கெரகம் கெட்டு போனா நடக்கிறது இதான் -செவ் கெட்டிருந்தா வீரம் அதிகமா இருக்கும்,சூரியன் கெட்டிருந்தா ஈகோ அதிகமா இருக்கும்)

மத்த கெரகம் செரியில்லின்னா கோவிலுக்கு போங்க. எக்கு தப்பா சார்ஜ் ஆனது டிஸ் சார்ஜ் ஆகி நெல்லது நடக்கும்.

ஆனால் குரு செரியில்லின்னா மட்டும் அம்பேல் ஆயிருங்க. கோவிலுக்கு போறதே ஆப்புன்னா கமிட்டியில மெம்பரா இருக்கிறது -அபிசேகம் -பூர்ண கும்ப மரியாதை -யானை கிட்டே மாலை இதெல்லாம் பெரிய ஆப்பா ஆயிரும்.டேக் கேர்.

முக்கியமா பஜனை மண்டலி /திருவிழா சமயத்துல வாலண்டியரா இருக்கேங்கறதுல்லாம் நெருப்போட விளையாடற மாதிரி.
அதே சமயம் குரு+கேது சேர்க்கை இருந்தா தியானம் பண்ணுங்க. குரு+ராகு சேர்க்கை இருந்தா வீட்டோட இருந்து துர்கையை தியானம் பண்ணுங்க. குரு+சனி சேர்க்கை இருந்தா கொல தெய்வத்தை தியானம் பண்ணுங்க.

கோயில் நோட்டீஸ்ல பேரை போடறது /பேனர் வைக்கிறதுல்லாம் வேண்டாம் வாத்யாரே. குரு செரியில்லையா?
நலம்.ஃபைனான்ஸ்/ என்டோன்மென்ட் போர்ட்/ நீதி/ஆசிரியதுறைகளில் இருந்தால் சீக்கிரமே கழண்டு கொள்வது நல்லது
.
பிராமணர்கள்,பூணூல் அணியும் வகுப்பினர்,அரசு அலுவலர்கள், நீதித்துறை,அரசியல்வாதிகள் ஆகியோரிடம் எச்சரிக்கை தேவை.
இருக்கும் தங்க நகைகள் அனைத்தையும் காசாக்கி -வந்த பணத்தை கரண்ட் அக்கவுண்ட்ல போட்டுருங்க.

வயிறு-இதயம் தொடர்பான விஷயங்களில் ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க.ப்ரிக்காஷன்ஸ் எடுத்துக்கோங்க.
கல்யாணம்,திருமண வாழ்வு ,குழந்தை பிறப்புக்கு டாப் பிரியாரிட்டி கொடுங்க .பணம் பண்ண துடிக்காதிங்க. (தப்பித்தவறி சக்ஸஸ் ஆயிருச்சுன்னா முன் சொன்னதெல்லாம் புடுங்கிக்கும்)

கையில் காசு ரூ.30 க்கு மேல் வச்சுக்கப்படாது .கோவில் குளம்,யாகம்/ஹோமம்,சுப காரியம்லாம் போகப்படாது
எளிமையான லைஃப் ப்ளான் பண்ணுங்க. பொஞ்சாதி/கொளந்தைகளையும் கன்வின்ஸ் பண்ணி இதே ரூட்டுக்கு கொண்டுவாங்க.

முக்கியமா சவுண்டு விடாதிங்க .ஐ மீன் அதிகாரம் பண்ணாதிங்க. அரசு வகை வருமானங்களை டச்சு பண்ணாதிங்க வட்டி ?? விஷம் மாதிரி.ஆளையே காலி பண்ணிரும்.

ஆருக்கும் ஐடியா தராதிங்க/அட்வைஸ் பண்ணாதிங்க. சொந்த பந்தம்/நட்பு வட்டத்துல சாவு நடந்தா போய் வாங்க.
ஓகேவா .. அடுத்த பதிவுல பெரியவரை பத்தி சொல்றேன்.அதான் பாஸ் ..சனி பகவான்.

Advertisements

உங்களுக்கும் ராஜயோகம் : 23

4 இன் ஒன்

அண்ணே வணக்கம்ணே !
உங்களுக்கும் ராஜயோகம் தொடர் தொடர்கிறது . குருபலம் அவாளோட கூட்டுறவில் எப்படி ஒர்க் அவுட் ஆகும். அவா உங்களுக்கு உதவனும்னா நீங்க எப்படி இருக்கனுமோ அப்படி குரு உங்களை மாத்திருவாருன்னு சொல்லியிருந்தேன். குரு தர்ர ராஜயோகம் ஒர்க் அவுட் ஆகனும்னா அவாளுக்கு “எல” எடுத்தே ஆகனுமான்னு பயந்துக்காதிங்க.

ஒவ்வொரு கிரகத்துக்கும் 1008 காரகத்வம் இருக்கு . ஒரு கிரகம் உங்க ஜாதகத்துல கரீட்டா உட்கார்ந்தாச்சுன்னா தன்னோட 1008 காரகத்வத்துல ஏதோ ஒரு வகையில உங்களுக்கு லிஃப்ட் கொடுத்தே தீரும். ராஜயோகத்தை கொடுத்தே தீரும்.

அதை வச்சி வாழறதா அல்லது எவனோ முத மந்திரி தூக்கு போட்டு செத்தானே அப்படி சாகறதாங்கறத முடிவு பண்றது நீங்க தேன்.

நல்ல நினைவாற்றல் குரு காரகம் . கலைஞர் பொதுப்பணித்துறை மந்திரியா இருக்கும் போது சண்முக நாதனை பார்க்கிறார் . படக்குனு “ஓன்” பண்ணிக்கிறாரு. ச. நாதன் பேசிக்கலா ஒரு குறுக்கெழுத்தாளர் . என்னதான் குறுக்கெழுத்தாளரா இருந்தாலும் பேச்சை எழுத்துக்கு எழுத்து ரிட்டனா கொண்டு வரனும்னா நினைவாற்றல் கட்டாயம்.

திட்டமிடல் குரு காரகம். ( போட்டு தள்றது /வச்சு செய்றது /செஞ்சுர்ரது இதுக்கான திட்டமிடல் எல்லாம் செவ் காரகம். அதையும் இதையும் குழப்பிக்காதிங்க.

குருவை தெய்வீக கிரகம்னு சொல்றாய்ங்க.கெரகத்துல என்னய்யா தெய்வீகம்னு கேப்பிங்க.மனிதன்னாலே சுய நலம் தான். அந்த சுய நலத்தை ஒரு மனுஷன் தாண்டி யோசிச்சான்னா அவன் தெய்வமாயிர்ரான். குரு கிரகம் இந்த அற்புதத்தை செய்யும்.

இரக்கம் -கருணை இந்த ரெண்டுக்கும் இடையில் நிறைய வித்யாசம் உண்டு. இரக்கம் இன்ஸ்டன்டா வரும். போயிரும். இது சந்திர காரகம். வாத்யார் போட்ட சத்துணவு இந்த சாதிதான்.

கருணைங்கறது வேற . இது குரு காரகம்.பல காலமா ஒதுக்கி/தள்ளி/அழுத்தி வைக்கப்பட்ட மக்களுக்காக -அந்த மக்களே தன்னை புறக்கணிச்சாலும் விடாப்பிடியா அவியளுக்காவ உழைக்கிறது .மறுபடி கலைஞரையே இதற்கும் உதாரணம் காட்டனும்னா அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆறதுக்கு அவர் ஒர்க் அவுட் பண்ணதை சொல்லலாம்.

அவரோட ஜாதக ராசி என்னடான்னா திருமாவின் போர்வாளே அவாளே ஓப்பனா பாராட்ட தயங்கற சமயத்துல மோடிக்கு போட்ட ஜால்ரா. இதை கண்டிக்க கூட மனம் வராத திருமா .

குரு பலன் தரும் காலம் பற்றி ஒரு விதி உண்டு. சமீபத்துல முக நூல்ல கூட சொல்லியிருந்தன். குரு தன் தசை /கோசாரத்தில் மத்திய காலத்தில் பலன் தருவார்.

குருன்னாலே திட்டமிடல் தான்.வாத்யாரு இரக்கம் காரணமா சத்துணவு கொடுத்தாரு .இதுவே கருணை உள்ளவன் என்ன செய்வான்?
யார் யாருக்கெல்லாம் உண்மையிலயே சத்துணவு தேவையோ கறாரா வடிக்கட்டி “தகுதி” உள்ளவிகளுக்கு மட்டும் கொடுப்பான். அதுவும் எப்படி ? இருபது இருபத்தஞ்சு பள்ளிகளுக்கு மையத்துல இருக்காப்ல ஒரு குக்கிங் ஸ்பாட் வச்சு -கைப்படாம சமைச்சு இன் டைம் சப்ளை கொடுப்பான்.

சோத்தை போட்டாச்சுன்னு தூங்காம அந்த பிள்ளைகளோட பெற்றோர்கள் பற்றிய விவரங்களை திரட்டி அவியளுக்கு தொழிற்பயிற்சி /கவுன்சிலிங்/வங்கிக்கடன்/மானியம்னு கொடுத்து அவியளே சத்துணவு கொடுக்கிறாப்ல செய்வான்.கு.பட்சம் சில பல வருஷங்களுக்குள்ள டார்கெட் ரீச் பண்ணி “சோத்துக்கடைய “மூடிருவான்.

இதை இம்ப்லிமென்ட் பண்ணும் போது ஆரம்ப காலத்துல எல்லா பயலும் வண்டை வண்டையா திட்டுவான். திட்டம் சரியா இம்ப்லிமென்ட் ஆக ஆரம்பிச்சதும் “பரவால்லப்பா”ம்பான்.பிறவு? ஆங்..இதென்ன பிரமாதம் அப்படி ..அப்படி செய்திருந்தா இன்னம் பக்காவா செய்திருக்கலாம்னு உடையல் விட ஆரம்பிப்பான்.

குருவின் மத்யகாலம் பலன் கொடுப்பதோட சூட்சுமத்தை புரிஞ்சுக்கிட்டியளா?

இதயம்ங்கறது பம்பிங் ஸ்டேஷன். ரத்தத்தை உடல் முழுக்க பாய செய்வது இதயத்தோட வேலை.ரத்தத்தோட வேலை என்ன? உடலின் எல்லா பாகங்களுக்கும் க்ளூக்கோஸ்/ஆக்சிஜனை கொண்டு போறது.இதுல லயன்ஸ் ஷேர் மூளையோடது .மூளைக்கு 70% க்ளூகோஸ் தேவைப்படுதாம். மண்டைக்கு ரத்தம் பம்ப் ஆகலின்னா கண்ணெல்லாம் ப்ளாக் அவுட் ஆகி சொத்துன்னு விழுந்து வைப்பம். மூளை செல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா செத்துப்போக ஆரம்பிச்சுரும். டிக்கெட்டே கூட போட்டுருவம்.

குரு நெல்லாருந்தா இதயம் நெல்லா இருக்கும்.பம்பிங் பர்ஃபெக்டா நடக்கும். மூளைக்கு தேவையான க்ளூகோஸ் முழுமையா கிடைக்கும். அது பர்ஃபெக்டா வேலை செய்யும். பதட்டம் இத்யாதி இல்லாம கூலா வேலை பார்க்கும். எதையும் ப்ளான் பண்ணி செய்யற கப்பாசிடி வரும்.
இதயத்துலயே தகராறு இருந்தா என்னாகும்?

இது ஒரு வ்யூ .இன்னொரு பக்கம் வயிறுக்கும் குரு தான் காரகம்ங்கறாய்ங்க. எதையும் ப்ளான் பண்ணி செய்யனும்னா குரு பலம் தேவை .
வயிறுக்கும் -கில்மாவுக்கும் ஒரு லிங்க் இருக்கு . சாப்டதும் கண்ணை சொழட்டுதே காரணம் என்ன? சீரணம் நடந்தேற ரத்தம் வயிற்றுப்பகுதிக்கு பாயுது .இதனால மூளைக்கு போக வேண்டிய க்ளூக்கோஸ் குறையுது .

ஒரு கட்டிங் போட்டு -முட்ட முட்ட பிரியாணியை ஒரு கட்டு கட்டின கையோட ஒரு குட்டியும் வந்து பெல்லடிக்குதுன்னு வைங்க.
அப்ப என்னாகும்? மூளைக்கு போக வேண்டிய ரத்தமே டெஃப்சிட்ல இருக்கு .இதுல இடுப்புக்கு கீழவேற ரத்தம் பாய வேண்டிய நிலை .அப்ப என்னாகும்னா உயிர்களோட பேசிக்கல் இன்ஸ்டிங்டே கில்மா தானே . இயற்கையின் பார்வையில டாப் ப்ரியார்ட்டி இனப்பெருக்கம் தான். அதுக்கு வழி கில்மா தான்.ஆகவே சீரணத்தை ஒத்திப்போட்டுட்டு உடம்பு வேற வேலைக்கு ப்ரிப்பேர் ஆகுது .அப்ப என்னாகும்?

வவுத்துல உள்ளது செரிச்சு செரிக்காம -அழுகியும் அழுகாம -கியாஸ் ஃபார்ம் ஆக ஆரம்பிக்கலாம். உணவை செரிக்க சுரந்த அமிலம் இரைப்பையை புண்ணாக்கலாம்.

ஒரு ஜாதகத்துல குரு நெல்லா இருக்காருன்னு வைங்க. அவன் எதையும் ப்ளான் பண்ணி செய்வான். எது முன்னே எது பின்னேன்னு பார்த்து பார்த்து செய்வான்.

கரப்பான் பூச்சில்லாம் எடுத்ததுமே கில்மா தானாம். பிறவு தான் தண்ணிய தேடி குடிக்குமாம். அதுக்கு பிறவுதான் உணவு .ஏதோ ஒரு கிழம் கெட்ட காரியம் செய்யாம இருந்தா 100 வயசு வாழலாம்னு சொன்னதா முக நூல் எல்லாம் பேச்சா கிடக்கு .

அந்த எண்ணமே இல்லாம வாழ்ந்திருந்தா ஓகே. வாய்ப்பு இல்லாம வாழ்ந்திருந்தா மூளை செப்டிக் டேங்கை விட கேவலமா இருக்குமே.
இதயத்தை வவுத்துக்கும் – மூளைக்கும் – இடுப்புக்கு கீழவும் அல்லாட விட்டா என்னாகும்? நாளாவட்டத்துல பம்ப் ரிப்பேரா போகவும் வாய்ப்பிருக்கு. நான் ஏதோ பீலா விடறேனு நினைக்காதிங்க.

நாட்பட்ட வயிற்று கோளாறுகள் இதய நோய்ல முடியுதாம் .விறைப்பு தன்மையில் குறைபாடு இதய நோய்க்கான அறிகுறியாம்.
மனித உடல்ல ரெண்டு டிவிஷன் .ரீ ப்ரொடக்டிவ் /டைஜஸ்டிவ். ஒன்னு வேல செய்யும் போது அடுத்தது வேலை செய்யாது.ஆனால் டைஜஸ்டிவ் விங்கை ஃப்ரீஸ் பண்ணி ரீ ப்ரொடக்டிவ் விங்கை வேலை செய்ய வைக்கலாம்.ஆனால் நாளாவட்டத்துல ரெண்டுமே நொண்டியடிக்கும்.

அடுத்து குரு பலம் சாதியளவில் பிராமணர்களாய் இருப்பவர்கள் மூலமாத்தான் ராஜயோகத்தை கொடுக்கனும்னுல்ல.

பிராமணன் என்றால் பிரம்மத்தை அறிந்தவன். இன்னைக்கு எத்தனை பார்ப்பானுக்கு பிரம்மம்னா என்னனு தெரியும்? அன்னமய்யா பிரம்மம் ஒக்கட்டே பரபிரம்மம் ஒக்கட்டேனு பாடி வச்சிருக்காரு . பெரியார் கணக்கா “சமத்துவ”த்தை பத்தி கடைசி காலத்துல கச்சாமுச்சான்னு எழுதி விட்டுட்டாரு . இந்த கடுப்புலதான் அவரோட கீர்த்தனைகள் பொறிச்சு வச்சிருந்த செம்பு தகட்டையெல்லாம் குடுமிகள் உருக்கி ஒழிச்சுட்டானுவன்னு ஒரு சம்சயம்.

தன்னை உடலாக உணர்பவன் பல வருட சாதனைகளின் பலனாய் ஃப்ராக்சன் ஆஃப் செகண்ட்ல தன்னை ஆத்மாவாக உணர்ந்தால் அப்போது உணர்கிறான் . தனக்கும் பரமாத்மனுக்கும்/கடவுளுக்கும்/பிரம்மத்துக்கும் இடையில் எந்த வித்யாசமும் இல்லை என்பதை .

அப்படி உணர்ந்தவனே பிராமணன். இந்த அளவுகோலை வச்சு பார்த்தா எவனோ போட்ட ஸ்டேட்டஸை லாஜிக் கூட பார்க்காம குருட்டுத்தனமா ஷேர் பண்ணி விட்ட எஸ்.வி.சேகர்/ஒய்.ஜி.மகேந்திரா எல்லாம் பிராமணாளா? நோ நெவர்.

பஸ்ஸையோ ரயிலையோ பிடிச்சு லோ லோன்னு லொங்களிச்சு என்னை சித்தூர்ல வச்சும் பார்க்கலாம். அல்லது இந்த பதிவுலயும் பார்க்கலாம். அப்படித்தான் கடவுளும் . இந்த படைப்பிலும் பார்க்கலாம். உங்களிலும் பார்க்கலாம். உணரலாம்.

படைப்பில் படைத்தவனை உணரும் தன்மை இருப்பவன் “வாடிய பயிரை காணும் போதெல்லாம் “வாடுவான். கோர்ட்ல கேஸ் போடறம்னு வக்கணை பேசமாட்டான்.

அடிச்சு பிடிச்சு எதிர்கட்சி தலைவர்களை கூட்டி மோடியை பிடிச்சு காவிரியில தண்ணி விட சொல்லி தாலியறுப்பான்.
வள்ளுவன் கூட அந்தணர் என்போர் அறவோர்னு சொல்லியிருக்காரு . என்னை கேட்டா அறவோர் என்போர் அந்தணர்னு சொல்வேன்.
நிற்க இப்படியா கொத்த அறவோர் கண்ல நீங்க பட்டா லபக்குதான். இதைத்தான் ராஜயோகம்னு சொல்றது .

அடுத்த பதிவுல தொடர்ரேன்.

எச்சரிக்கை:

நம்ம நூல் விற்பனையில் அதிரடி சலுகைய அறிவிச்சது ஞா இருக்கும்னு நினைக்கேன். சலுகை தொடருதான்னு நேத்திக்கும் இன்னைக்கும் கூட மெயில் வருது .மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் ராசா..பிடிச்சாதான் காசு -பிடிக்காட்டி அன்புப்பரிசு . தூள் பண்ணுங்க..

உங்களுக்கும் ராஜயோகம் :22

4

அண்ணே வணக்கம்ணே !
கிரகங்களை வரிசைப்படுத்தறதுல சில முறைகள் இருக்கு சூரியன், சந்திரன்,செவ்,ராகு,குரு,சனி,புத,கேது,சுக்ரன். இது ஒரு முறை.

சூ,சந்திரன்,செவ்,புதன்,குரு,சுக்கிரன்,சனி,ராகு,கேது இது ஒரு முறை.ஆனால் நான் முடிஞ்சவரை முதல் முறையையே ஃபாலோ பண்றேன். ஏன்னா மேற்படி வரிசையில தான் தசைகள் வரும்.

இந்த தொடர்ல சூ,சந்திரன்,செவ்,ராகு என்ற 4 கிரகங்களை பற்றி அனலைஸ் பண்ணியாச்சு. இந்த சாப்டர்ல குருவை பத்தி தான் எழுதனும்னு கன்ஃபார்ம் பண்ணிக்க பழைய பதிவையெல்லாம் ஸ்க்ரால் பண்ண வேண்டியதாயிருச்சு. அப்பத்தேன் இந்த வரிசை படுத்தும் முறை பத்தி யோசனை வந்தது .

ஓகே இந்த பதிவுல குரு தரும் ராஜயோகத்தை பார்ப்போம்.

ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு வர்ணம் உண்டு. இதன் படி குருவுக்குரிய வர்ணம் பிராமண வர்ணம்.
பிராமணாள் எப்படி ராஜயோகத்தை தரமுடியும்? நேத்திக்கு முக நூல் பதிவு ஒன்னை பார்த்தேன்.அமுகவாம் .அஃதாவது அந்தணர் முன்னேற்ற கழகம். தமிழ் நாட்ல 40 லட்சம் பிராமணால் இருக்காய்ங்களாம்.

இந்த 40 லட்சம் பேர் ஓட்டுப்போட்டு ஒரு ஆள் முதல்வராயிர முடியுமா? நிச்சயமா முடியாது . அப்ப ஜாதகத்துல குரு புஷ்கலமா இருந்தாலும் ராஜயோகம் கிடையாதான்னு கேட்டுராதிங்க.

அவா ஓட்டு போட்டு செயிக்க முடியாதுதான்.ஆனால் “லாபி” பண்றதுல அவா தான் புலிகள். கல்கி வார இதழ்ல கல்கியும் நானும்னு ஒரு தொடர் வருது. அதை படிச்சவிகளுக்கு தெரியும். தெறமை கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் நூலாடும் அவாளை எல்லாம் எப்படி ப்ரமோட் பண்ணியிருக்காய்ங்கன்னு.

அந்த தொடர்லயும் கலைஞருக்கு பயந்து இ.ஒ பின்பற்றியிருந்தாலும் “அவா” தான் சாஸ்தி. கலைஞர் மொத முறை தேர்தல்ல செயிச்சும் -எமர்ஜென்சி எதிர்ப்பு காரணமா பல்பு வாங்கி -அடுத்த தேர்தல்ல எம்.ஜி.ஆர் கிட்டே ஆட்சியை இழந்த எப்பிசோட்ல அவா ரோல் ரெம்ப முக்கியம்.

எம்.ஜி.ஆர் உலகம் சுற்றும் வாலிபன் ஷூட்டுக்கு வெளி நாடு போக அந்த ப்ராஜக்டுக்கு பி.ஆர்.ஓ இதயம் பேசுகிறது மணியன்.

அது நாள் வரை குற்றம் சொல்ல முடியாத குணாளனா இருந்த வாத்யாரை அன்னிய செலாவணி மோசடிங்கற வலையில சிக்க வச்சு -சென்டர்ல கொண்டு போய் சரண்டர் பண்ணி -ஊரை ரெண்டாக்கி -இடையில கெடா வெட்டி பொங்கல் வச்சது அவா தான்.

பதிமூனு வருசமா கலைஞர் வனவாசம் அனுபவிக்க காரணம் தில்லியில ஒரு லாபி இல்லாததுதான். இதை புரிஞ்சுக்கிட்டு தான் கலைஞர் சென்டர் ரிலேஷன்ஸ்ல அடக்கி வாசிக்க ஆரம்பிச்சாரு .

தமிழ் நாட்லயாச்சும் பெரியார் பயத்துல பிராமண லாபி அடக்கி வாசிக்கும்.ஆனால் வட நாட்டு பக்கம் போனா சீன் ரிவர்ஸ். இப்ப எங்க பக்கமும் ரெம்ப பவர் ஃபுல். ரெண்டு தெலுங்கு மானிலத்துக்கும் சி.எம் என்னமோ சூத்திராள் தான்.ஆனால் கவர்னர் அவா. பலன் ? பிராமண வாரியம்.ரெண்டு ஸ்டேட்லயும்.

அவா உங்களுக்காவ எப்ப லாபி செய்வாங்க?

நீங்க பார்க்கவாச்சும் அவா மாதிரி இருக்கோனம். பிராமண லட்சணம்.அய்யராத்து மாமிய தாயா / பொண்ணை தங்கையா பார்த்து நடக்கனும். கடவுள் நம்பிக்கை உள்ளவரா இருக்கனும். வேதங்களை ஏத்துக்கனும்.கோவில் /குளம்/யாகம்/ஹோமம்/புராணம் /இதிகாசம் இதை எல்லாம் கேள்வி கேட்காம ஏத்துக்கறவரா இருக்கனும். அவாளுக்கு வர்ணாசிரம (அ)தர்மமும் ,மனு (அ)தர்மமும் கொடுத்திருக்கிற ப்ரிவெலெஜஸை அப்படியே ஏத்துக்கற கிராக்கியா இருக்கோனம்.

இதெல்லாம் எப்ப அமையும்? குரு உங்க ஜாதகத்துல பவர் ஃபுல் பொசிஷன்ல உட்கார்ந்திருக்கனும்.அப்பத்தேன் அமையும்.

சேரிப்பிள்ளைக்கு உப நயனம் பண்ணது கூட ஒரு அவா தான் (பாரதி) ஆனால் அந்தாளு கெட்டுப்போன பார்ப்பான். மாமூல் வாழ்க்கையில இருக்கிற அவா “செயிக்கிற குதிரை மேல “தான் காசு கட்டுவோ.

நெல்ல ஞா சக்தி ,பெரியவான்னா கவுரதை ,ப்ளானிங்லாம் உங்களுக்கு இருக்கோனம். முக்கியமா வேதம்,புராணம் ,இதிகாசம் இத்யாதியில இருந்து பொருத்தமான நேரத்துல பொருத்தமான கோட்ஸை வாந்தி பண்ணனும்.

குடும்பத்துல அப்பன் குடிகார நாயா இருந்தாலும் -அம்மாக்காரி அவுசாரியா இருந்தாலும் ரெபல் ஆகாம கமுக்கமா இருக்கோனம். தெருவுல கொலையே நடந்தாலும் ஓடி வந்து வீட்டுக்குள்ள தாப்பா போட்டுக்கோனம், சோத்துக்கு இருக்கோ இல்லையோ மந்திரவாதி கணக்கா செண்டு செண்டா பூவாங்கி பூஜை பண்ணனும்.

வீட்டு பொம்பளைங்களுக்கு ஆஸ்மா இருந்தாலும்,ப்ராங்கட்டிஸ் இருந்தாலும் வாரத்துக்கு 3 தபா வீடு பூரா அலம்பி விடனும். அப்பப்போ கணபதி ஹோமம் ,திவசம்னு அய்யரை வீட்டுக்கு கூப்டு செலவழிக்கனும்.

உங்களை போல “உருப்படற ” பசங்களோட மட்டும் சகவாசம் வச்சுக்கனும். பசி,பட்டினிய கூட சகிச்சுக்கிட்டு கிடக்கனும். எல்லாத்தையும் அம்பாள் பார்த்துப்பா. எங்க குடும்பத்துக்கும் ஒரு நல்ல நேரம் வரும் மாமான்னுக்கிட்டு கிடக்கனும்.

அஞ்சு வட்டி பத்து வட்டிக்கு வாங்கியாவது நவகிரக ஸ்தலம், அறுபடை வீடு,திருப்பதின்னு எங்கெங்கும் இருக்கும் அவாளுக்கு படியளந்துட்டு வரனும். மொதலாளி உங்களை /உங்க உழைப்பை சுரண்டோ சுரண்டுன்னு சுரண்டினாலும் அவனுக்கு ஜல் ஜக் போட்டுக்கிட்டு அரசு தேர்வுகளுக்கு ப்ரிப்பேர் ஆயிட்டிருக்கனும்.

இந்த கருமாந்திரத்தை எல்லாம் மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டு அவா ஆத்துக்கு ஒட்டடை அடிச்சு ,கக்கூஸு அடைச்சுக்கிட்டா அடைப்பை நீக்கி “பிரமணை” தூக்கோனம்.

இந்த நிபந்தனைகளை எல்லாம் பூர்த்தி பண்ணா எட்டு இடமும் குளிர்ந்து இருக்கும் போது -அவா சொந்தம் /பந்தம்/ஒன்னு விட்ட உறவு / கசின் இப்படி யாரும் சூட்டபிள் கேண்டிடெட் இல்லின்னா உங்களை லாபி பண்ணி ரெக்கமெண்டேஷன்ல ஒரு இடத்துல செருகி விடுவோ.

குருபலம் இந்த கேடு கெட்ட வாழ்க்கைய வாழ்ந்தாதான் ராஜயோகத்தை கொடுக்குமான்னு நீங்க பல்லை கடிக்கிறது கேட்குது.

டோன்ட் ஒர்ரி குரு பலத்தை வச்சு எப்படி ராஜயோகத்தை கரெக்ட் பண்றதுங்கற சூட்சுமத்தை அடுத்த பதிவுல சொல்றேன்.

உங்களுக்கும் ராஜயோகம் : 18

mythryi

அண்ணே வணக்கம்ணே !
நம்ம வாழ்க்கையில எதுவுமே சில காலம் தான். ஒரு கட்டத்துல அதுவே வாழ்க்கை போல இருக்கும்.ஆனால் அடுத்த கட்டம் வரும் போது அப்படி ஒன்னு இருந்ததாங்கற ஞாபகமே இருக்காது .

இந்த பட்டியல்ல இந்த வலைப்பதிவும் சேர்ந்துருமோன்னு ஒரு சந்தேகம் வந்துக்கிட்டே இருக்கு . வலைப்பூ காலத்துலயே ஒரு நாளைக்கு ரெண்டு மூனு பதிவெல்லாம் போட்டிருக்கம்.

இப்ப என்னடான்னா..

உதிரியா எழுதினா தான் தொடர முடியறதில்லைனு தொடர்பதிவு போட்டுக்கிட்டிருக்கம்.இதுவும் ரெம்ப ரப்சர் பண்ணுது .

இன்னைக்கு ஜாதகத்துல செவ்வாய் பல்பு வாங்கியிருந்தா என்ன பரிகாரம் பண்ணா ராஜயோகம் பெற முடியும்னு சொல்லோனம்.

என் லேப்ல நான் தான் முதல் எலிங்கற நம்ம பஞ்ச். ஆகவே என்னை வச்சே தொடருவம். நம்ம ஜாதகத்துல நான்கில் செவ். கூடவே கேது (லக்னம் கடகம் ஞா இருக்குல்ல)

நான்கு என்பது தாய்,வீடு,வாகனம் ,கல்வி இதை எல்லாம் காட்டும்.செவ் கடகலக்னத்துக்கு 5 ,10 க்குடையவர்.
அஞ்சுன்னா புத்தி/புத்ர /பூர்வபுண்ணியஸ்தானம் .பத்து ?தொழில்/உத்யோகம்/வியாபாரத்தை காட்டற இடம்.

மொதல் 17 வருசம் வரை நம்ம படிப்பு சிறப்பா கன்டின்யூ ஆச்சு . பிறவுதான் ஆப்பு மேல ஆப்பு . `1984ல் இன்டர்ல அக்கவுண்ட்ஸ் புட்டுக்கிச்சு (23 மார்க்) மறுபடி கட்டி எழுதினம் 72.அம்மாவுக்கு யூட் ரஸ்ல கேன்சர். டிக்கெட்டு.

அம்மா இருக்கும் போதே ஒரு தரம் (வயசு ஞா இல்லை.ரெம்ப சின்ன வயசு ) பல் தேய்க்காம டிஃபன் சாப்டதுக்கு அண்ணன் திட்ட வீட்டை விட்டு போயிட்டம். கையில ரெண்டு ரூவா இருந்தது .வேலூர் போயாச்சு .டிக்கெட்டு ரூ.1.90. (4=வீடு)

அம்மாவுக்கு பிறகு வீடே நரகமாயிருச்சு .1989லயே லவ்ஸ் பண்ணி கண்ணாலம் கட்டி பிரிச்சுட்டானுவ. இல்லின்னா அன்னைலருந்தே உஞ்ச விருத்தி பண்ணியிருக்கனும்.பிரிச்சு போட்டதால அதுல இருந்து எஸ்கேப் .ஒரு ரெண்டு வருஷம் எக்ஸ்டென்ஷன் கிடைச்சது

ஆனாலும் என்ன 1991ல மறுபடி லவ்ஸ் . கண்ணாலம் .இந்த முறை எவனும் பிரிக்கல. 1994 வரையாவது அப்பாவோட மறைமுக ஆதரவு இருந்தது .அவரும் காலி .பிறவு என்ன? பூர்விக வீட்டை வித்து காசு கொடுக்கிறவரை உஞ்ச விருத்திதான்.

வறுமைன்னா தமிழ் சினிமா மாதிரி தொடர்ச்சியான வறுமைல்லாம் கிடையாது .இடையிடையே ஓயாசிஸ்களும் உண்டு .

வருமானம் இருந்ததே தவிர -நிரந்தரவருமானம் கிடையாது .பட்டுக்கோட்டையாரை விட அதிகமான வேலைகள் செய்த பார்ட்டின்னா பார்த்துக்கங்களேன் ( 10= தொழில்ஸ்தானம்) மணி மேனேஜ்மென்ட் தெரியாது -உலகம் தெரியாது -கற்பனைகள் அதிகம்.

1997 நவம்பர் 10 ஆம் தேதி ஒரு லட்சத்து ரெண்டாயிரம் ரூவா வருது . 1998 பிப்.23 ஆம் தேதி அரிசி வாங்க பணமில்லை .வீட்ல அரிசி இல்லை.
மறுபடி இங்கேருந்து 2007 வரை இதே நிலைதான்.(இடையிடையே ஓயாசிஸ்கள் உண்டு) .இந்த 2007 தான் நமக்கு டர்னிங் பாய்ண்ட்.

தினத்தந்தில வேலை .அன்னைய தேதிக்கு நம்ம வயசு 40.கொய்யால இந்த நாற்பது வயசுல கூட லைஃப்ல செட்டில் ஆகலின்னா பொளப்பு நாறிரும்னு கிரிமினல் தனமா ப்ளான் பண்ணேன்.

கரெக்டா ரெண்டே வருஷம் . இனி வேலை இல்லைன்னாலும் புவ்வாவுக்கு பயமில்லைங்கற நிலையை கொண்டு வந்துட்டன்.

கூடவே இந்த ரெண்டு வருஷத்துல நாம போட்ட பதிவுகள் கபாலி தீம் சாங் மாதிரி “நெருப்புடா”ரகம். ஹிட்ஸ் பிச்சுக்கிச்சு . கட்டண ஆலோசனையை ஆரம்பிச்சிருந்தம்.அதுவும் பத்திக்கிச்சு . -வேலைய விட்டுட்டன்.

இடையில என்ன ஆச்சு? என்னதான் பரிகாரம் செய்து தொலைச்சன்? எப்படி ஒர்க் அவுட் ஆயிருச்சுன்னு கேப்பிக சொல்றேன்.

1.கடந்த 24 வருசமா தொடர்ந்து ரத்த தானம் பண்ணிக்கிட்டிருக்கன். ஆரம்பிச்சப்ப உடல் எடை 48 கிலோ .இப்ப கு.பட்சம் 60 கிலோ .(ரத்தத்துக்கு காரகன் செவ்)

2.அம்மா போயாச்சு.வீடும் போயாச்சு. அரை டஜன் சைக்கிள் போயாச்சு. மூனு வண்டி போயாச்சு.இதுல மொத ரெண்டு வித்து மசூதிக்கு நன் கொடையா கொடுத்துட்டன்.கொசுறு ஒரு வாஷிங் மிஷின்.( எலக்ட் ரிக்கல் =செவ்) இப்பம் மவளுக்காவ ஒரு டிவி எஸ் எக்செல் செகண்ட் ஹேண்டி வாங்கி தந்திருக்கன் . ராத்திரி 7 மணிக்கு மேல அஞ்சு நிமிட் ஓட்டினா சாஸ்தி .

மொபைல் புக்ஸ்டோர் பண்றேன்னு நெல்லா இருந்த ரெண்டு டூ வீலரை இணைச்சு நாஸ்தி பண்ணி அது மேல ஒரு டப்பா வச்சு அதுக்கு கதவு வச்சு ..ஒரு பத்தாயிரம் ரூவா வரை வட்டம். ( நல்ல டைம் பாஸ்.மவளுக்கு கண்ணாலமான புதுசு – இந்த ப்ராஜக்ட் செம பிசியாக்கிருச்சு – பூமுடிப்பு /சீமந்தம் தவிர மவ வீட்டுபக்கம் அடியெடுத்து வைக்கலின்னா பாருங்க)

3.இருந்ததெல்லாம் வாடகை வீடு (இருப்பதும்) . கரண்ட் பில்லுக்கு வூட்டுக்காரன் சொல்ற அமவுண்டை படக்குனு எடுத்து வச்சுர்ரது . தனி மீட்டர் இருந்தா ஃபைன் போட்டுதான் கட்டறது .

4.மவ லவ் பண்ண ஆரம்பிச்சதுமே கொய்யால இதுவும் போச்சான்னு டிசைட் ஆயிட்டன் ( 5=புத்ரஸ்தானம்)

5.ஒரு சீசனல் ஃபீவர் போல திடீர்னு கார்ப்பென்டரிங்குல இறங்கிருவன்.அமெச்சூர்ங்கறதால செமயா ஏமாத்துவானுவ. பல நேரம் செய்த உருப்படி எதுக்கும் உபயோகமில்லாம போகும்.அல்லது திடீர்னு ஆருமேலனா அன்பு பொங்கி தூக்கி கொடுத்துருவன்.

6.ஒரு காலத்துல திடீர் திடீர்னு லைம் லைட்டுக்கு வந்துருவம். ( அஞ்சு = பெயர் புகழ்) வார்த்தா மாதிரி மேஜர் டெய்லில அரைப்பக்கம் ஸ்டோரில்லாம் வந்திருக்குண்ணே. இப்பம்? ஒரு ம..னாவும் கிடையாது .மோடி /ஜெ மேட்டர்ல பல்புல்லாம் செம பரிகாரம்ணே.அதுவும் கலைஞர் ஆதரவு நிலையை எடுத்த பிறவு செம பரிகாரம். (ஒரு சீக்ரெட் சொல்லவா .. கலைஞர் தான் முதல்வர்னு நாம சொல்லி -அது நடக்காம போன பிறவு தான் நம்ம கிராஃப் இன்னொரு பீக்குக்கு போயிருக்கு )

இத்தீனி இழவும் இழவெடுத்து போனதால தான் பொளப்பு ப்ரேக் இல்லாம ஓடுது .

அதுவும் இப்பம் இருக்கிற வீட்டை பத்தி சொல்லனும்னா தெற்கு பார்த்த வீடு (வாஸ்துப்படி இது நல்லதில்ல.ஆனால் தெற்கு செவ்வாய்க்குரிய திசை ) ஹால்ல போட்டிருக்கிற கிரானைட் பாக்கு நிறம்.

ஜாய்ன்ட் மீட்டர் இருந்தப்போ ஒரு கோ டெனன்ட் அச்சானியமா நான் 150 ரூ தான் கொடுப்பேன்னு அழிச்சாட்டியம் பண்ண அ நி யாயத்துக்கு அவன் உபயோகிச்ச உபரி கரண்டுக்கும் நானே கட்டி தொலைச்சன் (இப்பம் தனி மீட்டர் தான்)

அழிச்சாட்டியம் பண்ண கேஸு வேலை போயி /சொந்தமா கிளிக்கிறேன்னு இறங்கி ஷெட் ஆகி மறுபடி எங்கயோ வேலைக்கு போயிட்டிருக்கு . ( நம்ம கருமத்தை எல்லாம் இப்படி கழிச்சதுக்கு/ட்ரான்ஸ்ஃபர் பண்ணிக்கிட்டதுக்கு அன்னாருக்கு நன்றி )

இத்தனை பரிகாரத்துக்கு பிறவு நம்ம புத்தி சரியான ரூட்ல வேலை செய்யுது .லாஜிக்கலா திங்க் பண்றம்.தில்லா கருத்து சொல்றம் ( டாக்சி வரும் /ஆட்டோ வரும்னுல்லாம் எக்ஸ்பெக்ட் பண்ணினானும் எதுவும் நடக்கல. தொழில் ஜரூரா நடக்குது .மவளும் கீழேயே வந்து சேர்ந்துட்டா.

ஒரு வேளை ஆத்தா நம்மை தூக்கி உள்ள வச்சாலும் பொஞ்சாதிக்கு மவ -மாப்ள துணை . பேரன் ? நல்ல பொழுது போக்கு.

இதெல்லாம் தானா நடந்த மேட்டரு தான். ஏதோ 1989 ல ஜோசியம் கத்துக்க ஆரம்பிச்ச பிறவு பல ஆயிரம் ஜாதகங்கள் -அந்த ஜாதகர்களின் வாழ்க்கைகளை பார்த்த பிறவு நானா மைண்டுல தொகுத்து வச்சிருந்தது ..இப்ப வெளிய வருது .

தானா நடந்ததை ப்ளான் பண்ணியும் நடத்திக்கலாம்ல? அதைத்தான் இன்னைக்கு சொல்ல நினைச்சேன்.இப்படி ஒரு பதிவு சொந்த கதையில பாழா போயிருச்சு .சாரிங்ணா..அடுத்த பதிவுல பாய்ண்ட் டு பாய்ண்ட் பரிகாரம் தான்.உடுங்க ஜூட்டு ..

உங்களுக்கும் ராஜயோகம் : 8

அண்ணே வணக்கம்ணே !
ஏரியா கவுன்சிலர்லருந்து இந்த நாட்டுக்கு பிரதமர் ஆறது வரை -அரசு வேலை /அரசு ஒப்பந்தம் இத்யாதி மூலமா பைசா பார்க்கிறது வரை எல்லாத்துக்கு ராஜயோகம் இருக்கோனம். கடந்த பதிவுல சூரியபலம் தரக்கூடிய சில கல்யாண குணங்கள் -அவை அரசியல் எதிர்காலத்துக்கு எப்படி உதவுதுன்னு சொல்லியிருந்தேன்.கடேசியில அபேத பாவம் – ஆன்ம உரையாடல்னு சப் டைட்டில் போட்டு தொடரும் போட்டாச்சு .

சூரிய பலம் தரக்கூடிய குணம் அபேத பாவம். பேதம் =வேறுபாடு ,அபேதம் = வேறு பாடு இன்மை . பாத்திரமறிந்து பிச்சையிடு -கோத்திரம் அறிந்து பெண்ணை எடுன்னு ஒரு சொலவடை இருக்கு .இதை சொல்லி வச்சவன் ஜாதகத்துல சூரிய பலம் மைனஸ்ல இருந்திருக்கனும்.அதனாலதேன் இந்த பேத பாவம் -பேத பாவத்துலருந்து வந்ததுதேன் இந்த சொலவடை .

கொய்யால பிச்சையிடனும்னு டிசைட் பண்ணிட்டா இட்டுட்டு போயிட்டே இருக்கோனம். பெண்ணை எடுக்கிறதுன்னு டிசைட் பண்ணிட்டா அடிடா மேளம் , கட்டுறா தாலின்னு மேட்டரை பைசல் பண்ணிரனும். இதான் சூரிய பலம் கொடுக்கிற ஆட்டிட்யூட்.

நம்ம தங்கச்சி மட்டும் எவனையும் லவ் பண்ண கூடாது -ஊரான் தங்கச்சி மட்டும் நமக்கு மடிஞ்சுரனும்னு நினைக்கிறது பேதபாவம்.
நம்ம மவ மக்கா இருந்தாலும் மெடிசின் பண்ணனும். அடுத்தவன் மவ எவ்ள க்ளெவரா இருந்தாலும் கவர்ன்மென்ட் காலேஜ்ல கம்ப்யூட்டர்ஸ் பண்ணா போதும் -இதான்யா பேதபாவம்.

இந்த பேதபாவம் உள்ளவனுக்கெல்லாம் ,அது உள்ளவரை ஜாதகத்துல பல்பு கொடுக்கிற நிலையில உள்ள எல்லா கிரகமும் ஆப்பு அடிச்சிக்கிட்டே தான் இருக்கும்.
இந்த பேதபாவம் மட்டும் ஒழிஞ்சு போச்சுன்னா அல்டிமேட் ஃப்ரீடம் ஃப்ரம் ப்லேனடஸ். இதைகொடுக்கிறது சூரியன் தான். என்.டி.ஆர் மகன் ஹரிகிருஷ்ணா.இவர் ரெண்டாவதா ஒரு முஸ்லீம் பெண்ணை மணந்துக்கிட்டாரு . என்.டி.ஆர் விலக்கி வச்சுட்டாரு .அந்த பெண்மணிக்கு ஆண் குழந்தை பிறக்குது .குழந்தைய பார்த்த எல்லாரும் “தலைவரே ..பையன் உங்க மாதிரியே இருக்கான் உங்க மாதிரியே இருக்கான்”னு வேப்பிலை அடிக்கிறாய்ங்க. ஏதோ ஷூட்டிங்ல இருக்கிறச்ச “வரச்சொல்லுய்யா”ங்கறாரு .பார்க்கிறாரு .

இந்த சூரியபலம் உள்ள ஆட்கள்கிட்டே ஒரு மைனஸ் என்னன்னா ஆரம்பத்துல / ரன்னிங்குல இருக்கிறச்ச கொஞ்சம் பேத பாவம் இருக்கும். உச்சத்துக்கு போயிட்டாலோ அல்லது பெருசா பல்பு வாங்கிட்டாலோ இந்த பேத பாவம் ஃபணால் ஆயிரும்.

அரசியலுக்கு வராரு .டாக்சி ட்ரைவர்லருந்து ,அரசு பேருந்து கண்டக்டர் வரை யதேஷ்டமா சீட்டு கொடுக்கிறாரு .உசுர கொடுத்து செயிக்க வைக்கிறாரு (உச்சம்)
இதே என் டி ஆருக்கு (ஏற்கெனவே பைபாஸ் ) பெராலிசிஸ் ஸ்ட்ரோக் வருது .சனத்துக்கு ஆயிரத்தெட்டு வேலை .குடும்பத்துல அவனவன் பிசி .அந்த நேரம் பார்த்து லட்சுமி பார்வதி இவர் வாழ்க்கை வரலாறை எழுதறேன்னு வராங்க. இவரை கொளந்தைய கவனிச்சிக்கிட்ட கணக்கா கவனிச்சிக்கிறாய்ங்க கண்ணாலம் கட்டிக்கிறாரு .(பெருசாபல்பு வாங்கினப்போ வர்ர அபேத பாவம்)

இந்த ரெண்டுவித அபேதபாவமும் டுபுக்கு .க்ளாக் வைஸ் லைஃப்ல இருக்கிறச்சயே – சோத்துக்கு அல்லாடற சமயத்துலயே வர்ர அபேத பாவம் தான் கிரேட் .சூரிய பலம் தர்ர வரபிரசாதம். தலீவருக்கு ஹார்ட் பல்பு வாங்குதுன்னாலே சூரியன் வீக்குன்னு தானே அருத்தம் (சூரியன் =ராஜகிரகம் இதயம் =ராஜ உறுப்பு )
ஆத்ம காரகனான சூரியன் ஒரு ஜாதகத்துல பவர் ஃபுல்லா இருக்காருன்னா அந்த ஜாதகனுக்கு அபேத பாவம் நிச்சயமா இருக்கும். பி.ஜனார்தன் ரெட்டின்னு ஒரு காங்கிரஸ் தலைவர் . ஃபைவ் ஸ்டார் ஹோட்டலை திறந்து வைக்கவும் இவரைத்தான் கூப்டுவாய்ங்க. சலூன் திறந்து வைக்கவும் இவரைத்தான் கூப்புடுவாங்க.இவரும் சலிக்காம போயிட்டே இருப்பாரு . இதான் பாஸ் அபேத பாவம்.

ஒரு சினிமாவ த்ரீ டில பார்க்கவே மஜாவா இருக்குல்ல. இது த்ரீ டைமன்ஷன். இன்னம் எத்தனையோ டைமன்ஷன்ஸ் இருக்கிறதா எங்கயோ படிச்சன்.
மன்சனோட உடம்பு -இது ஒரு டைமன்ஷன் ,மனசு -இது ஒரு டைமன்ஷன் ,புத்தி -இது ஒரு டைமன்ஷன் . நீங்க உடம்பையோ ,மனசையோ ,புத்தியையோ வச்சு பார்த்தா நிச்சயமா பேதம் இருக்கும். இதை தாண்டி இன்னொரு டைமன்ஷன்ல ரோசிக்க ஆரம்பிச்சுட்டிங்கன்னா பேதமே இருக்காது .அதை ஆத்மானு நான் சொன்னா பகுத்தறிவாளர்கள் பாயலாம். ஆனால் உண்மை இதான்.

இந்த சூரியன் ஆத்ம காரகன்ங்கறதால ஃபோர்த் டைமன்ஷன்ல பார்க்கிறது சாத்தியமாயிருது .பேதபாவம் ஃபணாலாயிருது . நாடு,இனம்,மதம்,சாதி ,மானிலம்,மொழி வேறு பாடெல்லாம் உடம்புக்குதான்,மனசுக்கு தான்,புத்திக்கு தான்.ஆனால் ஆத்மாவுக்கு ? கடியவே கடியாது .

மன்சனோட உடல் -மனம் இந்த ரெண்டுல மனித உடல் ரெம்ப அப்பாவி. இன்னைக்கும் இயற்கையோட ஓரளவு கனெக்சன் வச்சிருக்கு. மனிதமனம் தான் வில்லங்கம் புடிச்சது . என்விரானென்டல் ஃபேக்டர்ஸ் பாடிய விட மைன்டை சீக்கிரமா எஃபெக்ட் பண்ணிருது .

உடம்பு சொல்றதை மட்டும் கேட்டாலே பல மன அழுத்தங்கள்/மன நோய்களை தவிர்க்க முடியும். செரி ஒழியட்டும் மனசு சொல்றதையாவது கேட்கிறமா இல்லை . புத்தி சொல்றதை ? ஊஹூம். இந்த மூனு மேட்டரும் தலா ஒரு திசைக்கு இழுக்க ஆத்மா அம்போன்னு ஆயிருது .

சூரியபலம் உள்ளவிகளுக்கு இந்த 3 மேட்டரையும் ஆத்மா கண்ட்ரோல் பண்ண ஆரம்பிச்சிருது .காந்தி தாத்தாவின் பாடி காட்பாடி .அவருக்குள்ள இருந்த முரண்கள் அதிகம் .பெரிய புத்திசாலியும் கிடையாது .ஆனால் ஒரு நாட்டோட மனசாட்சியையே உலுக்க முடிஞ்சது . இன்னொரு நாட்டோட மனசாட்சியை தட்டி எழுப்பி சுதந்திரம் கொடுக்க வைக்க முடிஞ்சது .இது எப்படி சாத்தியமாச்சு?

ஆன்ம பலம்.
உலகத்துல /நாட்ல எது எப்ப நடக்கும்/நடக்கனும்னு ஆத்மாவுக்கு தெரியும். உள்ளுக்குள்ள இருந்து டிரிகரை ஆன் பண்ணி விட்டுருச்சுன்னா ரைட் ரைட்டுதேன்.
அடிப்படையில பரமாத்மாவுக்கும் ஆத்மாவுக்கும் டிஃப்ரன்ஸே கிடையாதாம். அஹம் பிரம்மஸ்மி. தத்வமசின்னா இதான் பாஸ் !ஒரு மன்சனுக்கு இது சாத்தியமாயிருச்சுன்னா ஓஷோ சொல்றாப்ல மலர் மலர்ந்ததும் வண்டுகளுக்கு ஆரும் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுக்க தேவையில்ல. அந்த மணமே வண்டுகளை இழுத்துக்கிட்டு வந்திரும்.

ஒரு தனிமனிதனில் அபேத பாவம் முளை விட்டாலே போதும் – லாஜிக்கே இல்லாம ஒரு கூட்டம் அவனை நோக்கி கவரப்படும்.அவன் விரும்பினால் தலைவனாகலாம்.அல்லது தலைவர்களுக்கே தலைவனாகலாம்.

ஓகே பாஸ் ! அடுத்த பதிவுல சந்திரபலம் எப்படி ராஜயோகத்தை கொடுக்கும்னு சொல்றேன்.உடுங்க ஜூட்டு ..