சலங்கை ஒலி

வெறுமனே ஒருபீஜத்தை ஜெபிச்சதுக்கே இத்தீனி அற்புதம் நடந்ததானு சில ஆன்மீகர்களும் பல விஞ்ஞானிகள் கேட்கலாம். என் பதில் : பெரிய எழுத்துல ஆமாம்.

ஹ்ரீம் ஆச்சும் பீஜம். ராமாங்கற ரெண்டெழுத்து என்னெல்லாம் அற்புதம் செய்ததுன்னு ஆரம்பிச்சு எல்லாத்தயும் சொல்லப்போறதில்லை. ஒன்னே ஒன்னு சொல்றேன்.

நம்முது லவ் மேரேஜுனு ஏற்கெனவே சொல்ட்டேன்னு நினைக்கிறேன். அப்பா பாவம் சின்னவயசுலருந்து நாம பண்ண அழும்பையெல்லாம் சகிச்சுக்கிட்டு எப்டியெல்லாமோ அண்ணன் தம்பியை கன்வின்ஸ் பண்ணிக்கினு தான் வந்தாரு. 1989ல ஒரு காதல்கல்யாணம். அதையும் ஊர் கூடி கும்மியச்சுட்டாய்ங்க. அதையும் மண்ணடிச்சு அப்பா அஜீஸ் பண்டாரு.

19991லரெண்டாவது தாட்டியும் அதே “தப்பை”பண்ண பிறவு ரெண்டு கையையும் தூக்கிட்டாரு. அதுக்கப்பாறம் தான் நாம தனிக்கட்சி ஆரம்பிச்சு உருப்பட ஆரம்பிச்சோம்ங்கறது வேற கதை. நவம்பர் டு மார்ச் 3 மாசம் சுத்தமா கழட்டிவிட்டுட்டாரு. அப்பாறம் வாக்காளருக்கு பணம் கொடுத்த கதையா ரூம் போட்டு யோசிச்சு உதவி பண்ண ஆரம்பிச்சுட்டாரு. 1994 செத்துப்போயிட்டாரு.

நம்ம அண்ணன் தம்பிங்கல்லாம் ரத்ததுல இருந்த டீன் ஏஜ் சூடெல்லாம் ஆறி அவலா போயி பாவம் உருப்படற ரூட்ல இருந்தாய்ங்களா நாம தேன் எங்கம்மா நாலு பெத்தா 3 குடும்பத்துக்கு நாம நாட்டுக்குனு பஞ்ச் டயலாக் அடிச்சிக்கிட்டு இருந்தோம்.

19X64ல ஒரு வீடு டபுள் ஸ்டேர். அப்பாவோட மரணத்துக்கப்பாறம் அந்த வீடு மேட்டரை “உட்கார்ந்து’பேச ஆரம்பிச்சாய்ங்க. நாம பஞ்சாயத்து ஸ்பெஷலிஸ்டாச்சே. ரிலையபிளா நாலஞ்சு பிரப்போசல்ஸ் .கொடுத்தேன்.

1.ஒரு போர்ஷ்ன்ல நானும் குடும்பமும் குடியிருக்கிறது
2.நான் வெளிய வாடகை வீட்ல இருக்க இவிக வாடகை செட்டில் பண்றது
3.மொத்த வீட்டையும் வாடகைக்கு விட்டா என்ன வருமோ அதுல நால்ல ஒரு பங்கை நமக்கு செட்டில் பண்றது

வீட்லயே நாமதேன் ஒரு குறிப்பிடத்தக்க பர்சனாலிட்டி ( மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ்) அம்மா,அப்பா ரெண்டு பேத்துக்கும் நம்ம மேல ஒரு தனி இது. அம்மான்னா அதிர்ஷ்ட சாலி . 1984லயே நம்ம வளர்பிறை காலத்துலயே போய் சேர்ந்துட்டாய்ங்க. அப்பா தேய்பிறை காலத்துல கூட “அல்லாத்தையும்” சகிச்சுக்கிட்டு
உடன் பிறப்புகளோட ” அப்ஜெக்ஷன்ஸை” மீறி நம்மை தாங்கு தாங்குனு தாங்கிக்கிட்டிருந்தாரு.

அடுத்தவுகளை விட நாம தாழ்ந்துட்டா பிரச்சினை இல்லை.போனசா ஆறுதல் கூட கிடைக்கும்.உசந்துட்டா? அவிகளோட ஹிட் லிஸ்ட்ல நம்ம பேர் ஏறிரும். ஏதோ அப்பன் இருந்தவரை காலம் ஓடிப்போச்சு. காபந்தா இருந்த அப்பன் போனதும் , நம்மை கால்பந்தா அடிச்சு விளையாட சனம் முடிவு பண்ணிட்டாப்ல இருக்கு.

படக்குனு என் தம்பிக்காரன் தன் தொடைய தட்டி “வீட்டை விக்கிறப்பத்தேன் விக்க முடியும்.. வித்தபிறவுதான் எது ஒன்னும். அதுவரைக்கும் நீ என்னவேணா பண்ணிக்க .. பேச்சு வார்த்தைல்லாம் இன்னைக்கு தான் கடைசி ஓடிப்போயிரு”ன்னான்.

உலகவங்கி உதவிலயே காலம் கழிச்ச வளரும் நாடு மாதிரி அப்பன் மாச மாசம் தர்ர சப்சிடிலயே சேஃபா வாழ்ந்துட்டு இருந்த நமக்கு இது எப்படியா கொத்த க்ரைசிஸ்.

எப்படி பார்த்தாலும அவிக ஸ்ட்ராங்கு நாம வீக்கு. நமக்கு துணை தெய்வந்தேன்.தெய்வத்தை நம்பித்தேன் பேச்சு வார்த்தைக்கு வந்தோம். ( 1991 டு 1994 நாம அவுட் ஆஃப் ஸ்டேஷன் -சொசைட்டியோட என்னத்தை கம்யூனிகேஷன் இருக்கும் ) ஒன்னுமே புரியலை.

தம்பியோட தொடையையே ஒரு செகண்டு பார்த்தேன் மூலாதார சக்கரத்துலருந்து கிளம்பின ஹூங்காரம் அதை தொடர்ந்து ” ரா…மா” அவ்ளதேன் ஷாட் கட்டு.

அடுத்த சிட்டிங்குல இன்னா சீனுங்கறிங்க? சாயம் போன லுங்கியும், முறிஞ்ச தொடை எலும்பும் – அதுக்கு நிறைவா ஒரு பேண்டேஜுமா காலை டீப்பாய் மேல வச்சிக்கிட்டு தம்பிக்காரரு.

அன்னைக்குத்தேன் ராமாங்கற நாமத்துல படுபயங்கர அழிவு சக்தியும் இருக்கிறதை உணர்ந்துக்கிட்டேன். பயங்கர டர்ராகிட்டேன்.

சரிங்கண்ணா உபகதை போதும். மெயின் லைனுக்கு வந்துருவம். சங்கல்பத்துல இருந்த சின்ன மிஸ்டேக்கால பிச்சையாவே கிடைச்சதையும் பிட்சாந்தேஹிங்கற வார்த்தையை தூக்கிட்டு வரப்ரசாதம் தேஹினு மாத்தின பிறவு நிலைமை மாறினதையும் சொல்லி நிறுத்தினேன்.

சங்கல்பத்தை சொல்லவேண்டியது – அப்பாறம் பீஜத்தை ஜெபிக்க வேண்டியது. இதுதான் அசலான வேலை. சித்தம் போக்கு சிவன் போக்குங்கற மாதிரி போஸ்சரை மாத்திக்கிறது. பத்மாசனம் – கால் வலிச்சா அர்த்த பத்மாசனம் – அப்பாறம் சுகாசனம் – இடுப்பு வலிச்சா சவாசனம்.

பழைய புராண் சினிமா பிரபாவத்தால கை கட்டைவிரல்களோட நுனி -ஆட்காட்டி விரல் நுனிகளை தொட்டுக்கிட்டு இருக்கிறாப்ல வச்சிருக்கிறதுதான் நம்ம ஸ்டைல்.

இந்த மேட்டர்ல ஏதோ சூட்சுமம் இருக்கிறதா ஒரு பார்ட்டி சொல்லிச்சு.

கை கட்டை விரல் இருக்கில்லை. அதுவும் கையும் இணையற ரேகை இருக்குல்ல .ஆட்காட்டி விரலை அங்கன வச்சுக்கிட்டா ஒரு எஃபெக்ட் முதல் அங்குலஸ்தாயில வச்சிக்கிட்டா ஒரு எஃபெக்ட் கிடைக்கும். அதுக்கப்பாறம் தேன் மேற்சொன்ன போஸ்ச்சர்னு சொல்லவே அதையும் ஃபாலோ பண்ணிக்கிட்டிருந்தேன்.

ஒரு நா ஏதோ ஸ்பார்க் ஆச்சு. ஹ்ரீம்ங்கறது சக்தியோட அம்சம். சக்தி மூலாதாரத்துல இருக்குங்கறாய்ங்க. ஓம்ங்கறது சதாசிவனோட அம்சம். (குண்டலி சக்கரங்களை காட்டற படத்துல பார்த்தா உச்சந்தலையில ஓம் பிரகாசிக்கும்) சக்தி சிவனோட சேர்ந்தாதானே முக்திங்கறாப்ல ஒரு ஹஞ்ச் கிடைச்சது.

ஒடனே ஓம் ஹ்ரீம் ரெண்டையும் சேர்த்து ஜெபிக்க ஆரம்பிச்சேன். ஓம் ஜெபிக்கிற போது சஹஸ்ராரத்துல உள்ள சதாசிவர் சக்திக்காக காத்திருக்கிறாபல கற்பனை பண்றது. ஹ்ரீம் ஜெபிக்கிறப்ப மூலாதாரத்துல உள்ள சக்தி சலனம் பெற்று சதாசிவனை நோக்கி பயணிக்கிற மாதிரி கற்பனை பண்றதுமா இருந்தேன்.

இடையிடையில என்னென்னமோ க்ளூ, ஹன்ச், குன்ஸ் . அதையெல்லாம் வச்சு சாதனையில சின்ன சின்ன மாற்றங்கள் செஞ்சுக்கிட்டே இருந்தேன். அவுட்லைன் என்னமோ சங்கல்ப்பம் – பீஜ ஜெபம் தட்ஸால்.

ஜெபம் -அஜபம் – தியானம்னு 1 , 2, 3னு மாறும் கொஞ்ச நாழிக்கு பிறகு 3, 2, 1 ன்னு மாறும். பாடியோட ரெஸ்பான்ஸ் வித விதமா இருக்கும். அங்கங்கள் துடிக்கிறது – முதுகெலும்பு ரிஜிட் ஆயிட்டாப்ல ஃபீலிங், புது புது வாசனைகள் , திடீர்னு கோவில் மணி சத்தம் கேட்கிறது. முதுகெலும்பை ஒரு நீளமான டெஸ்ட் ட்யூபா கற்பனை பண்ணிக்கிட்டா அதுல உள்ள திரவத்துல ஒரு குமிழி மேல் நோக்கி ஊர்ந்து போறாப்ல ஒரு ஃபீலிங். திடீர்னு உடம்பெல்லாம் சொல்ல முடியாத அளவு வெப்பம். ஒவ்வொரு நாளும் இன்னைக்கு ஒன்னில்லை ஒன்னு தீர்த்துரனும்னு இறங்குவேன். ஆனால் ஏமாத்தத்துல முடிஞ்சதா நினைச்சுக்கிட்டு பால்காரன் வர்ர சமயம் தூங்கிப்போயிருவன்.

என் சாதனை ஏமாற்றத்துல முடியலை – சின்ன சின்ன மாற்றங்களோட ஒரு மிஸ்டிக் பாத்ல தொடர்ந்துக்கிட்டே தான் இருந்ததுன்னு அப்பால தேன் உறைச்சது.

சில மாதங்களுக்கு பிற்பாடு ட்ரான்ஸ்ல இருக்கிறச்ச பிறந்த குழந்தையோட குவா குவா சத்தம் கேட்கும்.
ஆரம்பத்துல அடடா மறுபடி பிறக்கறதுன்னா இதாம்போலனு நினைச்சேன். அப்பாறம் ஒரு நா இதுக்கான விடை கிடைச்சது.ஆத்தா இந்த அராத்துக்குள்ள ஜனனமாயிட்டா. இன்னம் ஒன்னு ரெண்டு மாசம் கழிச்சு சலங்கை சத்தம் கேட்க ஆரம்பிச்சது.

அது முதல் நாம சிட்டிங் போட்ட அஞ்சு பத்து நிமிசத்துக்கு ( அப்பத்துக்கே நேரம் ராத்திரி 12 ஐ நெருங்கியிருக்கும் -சனம் ஆழ்ந்த உறக்கத்துல இருப்பாய்ங்க) அக்கம்பக்கத்துல எதுன பெரிய ஜாமான் செட்டு எதுனா கீழெ விழுந்து உருளும்.

எனக்குள்ள ஜனிச்ச ஆத்தா தன் சின்னப்பாதங்கள் நோக நோக என்னையே ஃபாலோ பண்ணிக்கிட்டிருந்ததையும் கருப்பு பூனை படைகணக்கா காப்பாத்த நானிருக்கேண்டானு உணர வச்ச சம்பவங்களையும் அடுத்தடுத்த பதிவுகள்ள பகிர்ந்துக்கறேன்.

பாம்பு விடறான்யா!

தமிழ்ல PA , BA ரெண்டுத்துக்கும் ஒரே “பா” தான். தலைப்பில் உள்ள மேற்படி வார்த்தைக்கு ஒன்னு வில்லங்கமான அர்த்தம். அடுத்தது அசூயையான அர்த்தம். வில்லங்கம்னு சொன்னேனே தவிர செக்ஸுக்கும் பாம்புக்கும் நிறைய சம்பந்தமிருக்கு. கில்மா குறித்த கற்பனைகள் உள்ளவுகளுக்கு பாம்புகள் கனவுல வரும். ஜோதிடத்துல ரெண்டு பாம்பு இருக்கு. ஒன்னு கரும்பாம்பு (ராகு) அடுத்தது செம்பாம்பு (கேது) பாம்பு கனவுல வந்தா கில்மாதான்னு அர்த்தமில்லை. தேடல் -தியானம்-யோகம்னு பித்துப்பிடிச்சு அலையறவுக கனவுல கூட பாம்புகள் வரும். (அது சேப்பா இருக்குமா ?)

அசூயையான அர்த்தம்னு சொன்னேன்.ஆனால் அந்த அசூயையான “வாயு”வெளியேறலைன்னா வவுத்த வலிக்கும்,முதுகுல வலிக்கும், நெஞ்சுல வலிக்கும் . டூ வீலர்ல ஏர் ஃபில்டர் வச்சாப்ல கடவுளும் வச்சிருந்தா பெட்டரா இருந்திருக்கும்.

வாயு உருவாக சில பல காரணங்கள் இருக்கு. உணவு சமயத்துல செரிக்காம இருந்தா / உண்ட உணவே வாயு குணம் கொண்டதா இருந்தா /ச்சொம்மா குந்தி தின்னுட்டிருந்தா/தின்னும் போது பேசிக்கிட்டே தின்னா . நான் மேற்படி தலைப்பை வச்சது பீலா விடறான்யாங்கற அர்த்தத்துலதான்.

சரண் சார் சொன்னாப்ல ஒக்காபிலரி மாறிக்கிட்டே வருது. பொய்ங்கற ஒரு வார்த்தைக்கு குண்டு,ரீலு,பிட்டு,பீலா,பாம்புன்னெல்லாம் மாறிட்டே வருது. அவன் அவள் அது தொடர்பதிவுல மாயா பீஜத்தை சான்ட் பண்ணிக்கிட்டிருந்த சமயம் பாம்பு வந்துருச்சுன்னு சொன்னேன். அதை படிச்சுட்டு மஸ்தா பேரு பாம்பு விடறான்யானு நினைச்சிருக்கலாம்.

ஒரு காலத்துல பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான் நாம. ஆனால் ஒரு கட்டத்துல “ங்கொய்யால எவனுக்கோ பயந்து நாம ஏன் இப்படி பீலா விட்டு எதை விட்டோம்னு ஞா வச்சுக்கிட்டு சாகனும். இந்த சொசைட்டியே பொய் – இந்த மனிதர்களே பொய் -இவிக நம்மை பார்த்து டர்ராகனும்னா தாளி உண்மைய சொல்றதுதான் வழிங்கற முடிவுக்கு வந்துட்டு சொல்ல ஆரம்பிச்சுட்டேன்.

அட அட அட.. சத்யமேவஜெயதேன்னு சொன்னவுக எந்த அர்த்தத்துல சொன்னாய்ங்களோ சனத்தை விரட்டறதுல மட்டும் ஜெயம் தேன். ஆரம்ப காலத்துல (1987) எப்படியும் தமிழை காப்பத்தியே தீர்ரதுங்கற சங்கல்பத்துல எழுத ஆரம்பிச்சப்ப எவனும் மாட்டமாட்டானான்னு (தனிய) காத்திருந்தது ஒரு காலம்.( நம்ம எழுத்தை அறிமுகம் செய்யவேணாவா பாஸ்) .அப்பாறம் 1989ல ஜோதிட ஆராய்ச்சிக்கு எலி,முயல் கணக்கா உபயோகிக்க பார்ட்டிய தேடி காத்திருந்தது ஒரு காலம்.

ஒரு கட்டத்துல வாழ்க்கையோட யதார்த்தம் – சமூகம் -நட்பு -உறவுகளோட நிஜ சொரூபம்லாம் தெரிஞ்ச பிறவு – அது தெரியாம அல்லாடற சனத்துக்கு சாக்ரடீஸ் கணக்கா ஞானம் புகட்ட முயன்றது ஒரு காலம்.

நல்ல வேளை வறுமை என்னை தனிமைப்படுத்தி இனிமைப்படுத்தியது. கூட்டத்துல காணாம போயிராம காப்பாத்திருச்சு. வெறும்பயலாகிராம பெரும்புயலாக்கியது என் வறுமை தான். வறுமைய போக்க துணிஞ்சது கூட நமக்காக இல்லிங்கண்ணா..சனங்க மேல கருணை காரணமாத்தான். இவிக என்னை ஏத்துக்கனும்னா நான் இவிக இவிக ரேஞ்சுக்கு என்னை ஏத்துக்கற ரேஞ்சுல இருக்கனும்.

என்னைவிட பல கோடி மடங்கு “சரக்கு” உள்ள பார்ட்டி குப்பை தொட்டி பக்கத்துல துண்டு பீடி பொறுக்கி அடிச்சிக்கிட்டுப்பான். ஆனால் சனம் அவனை சீண்டாது. சனம் நம்மை அணுகின மாத்திரத்துல நாம புலினு நினைச்சுரக்கூடாது. அவனை இவிக அணுகாத மாத்திரத்துல அவன் செத்த எலினு தூக்கிப்போட்டுர கூடாது.

மனித வாழ்க்கையில எல்லாமே ஆக்சிடென்டல் தேன். எவனுக்கும் -எவளுக்கும் – எதுக்கும் கியாரண்டி கிடையாது. மியூசிக்கல் சேர்ல சேர் கிடைச்ச மாதிரி தேன்.மியூசிக் ஸ்டார்ட் ஆனா மறுபடி ஓடனும். சேர் கிடைக்கும்ங்கற கியாரண்டி கிடையாது.

அரிது அரிது மானிடராதல் அரிதுன்னு ஒரு கிழவி பினாத்தி வச்சிருக்கு. தாளி இந்த இயற்கையிலயே இயற்கையோட தொடர்பை முற்றிலும் இழந்த அனாதைபயல் ஆருன்னா மன்சன் தேன். மன்சங்களோட டீலிங் இருக்கிற வரை மகேசனோட லேண்ட் நெம்பர் கூட கிடைக்காது.

இவிக விரட்டனும். பராசக்தியில கல்யாணி கணக்கா நாம ஓடனும். அப்பத்தேன் சத்தியம் எதுனு குன்சாவாச்சும் புரியும். சனம் என் ஏழ்மை கண்டு என்னை விரட்ட – நான் இவிக மடமை கண்டு பொய்மை கண்டு இவிகளை விரட்ட..

நம்ம வாழ்க்கைங்கற நாடக மேடையே காலியாயிருச்சு. நம்ம தனிமைக்கு ஏழ்மையே வேலியாயிருச்சு. நமக்குள்ள இருந்த உலகம் காலியாயிருச்சு. TO LET போர்டு மாட்டிக்கிட்டு தேன் பீஜத்தை ஜெபிக்க ஆரம்பிச்சோம்.

இருக்கிறது ஒரு கக்கூஸு.அதுக்குள்ள எவனோ உட்கார்ந்திருக்கான்னு வைங்க. நம்ம நிலைமை என்ன?
உள்ளாற நுழைய முடியுமா? அப்படித்தேன் தெய்வம் நமக்குள்ள இருக்கிற உலகத்தை பார்த்து தயங்கி தயங்கி அடுத்த கக்கூஸை தேடிப்போயிருது.

நாம மாயா பீஜ தியானத்துல இருந்தப்ப பாம்பு வந்தது நிஜம். சனம் அலறியடிச்சு ஓடினது நிஜம். (கோ டெனன்ட்ஸ் தேன்.) அவிக என்ன நினைச்சிருப்பாய்ங்கங்கறது நமக்கு சம்பந்தமில்லாத மேட்டர். நம்ம கான்செப்ட் என்ன ? வீரமணி பாடல்கள்ள ஒரு வரி வரும்.

“சக்தியின் வடிவம் பாம்பு
இதை . சத்தியமாய் நீ நம்பு”

இதான் நம்ம கான்செப்ட். அப்பாறம் முக்கியமான மேட்டர் சொல்ல மறந்துட்டன். மேற்படி மந்திரத்தை சொல்றதுக்கு மிந்தி சொல்லியாகனும்னு ஒரு பத்திய அந்த நண்பர் தந்திருந்தார். அதை சொல்லி முடிச்சு ஒரு அரைமணி கழிந்த பிறகுதான் பாடில ரெஸ்பான்ஸ் ஆரம்பமாகும். இது ஒரு கட்டம். அதை இங்கே தந்திருக்கேன் பாருங்க. மேட்டர் கடைசி வார்த்தையிலதான் இருக்கு.

ஹ்ரீங்கார பீஜாக்ஷரி ஹ்ரீம் மயீ தேவி அபய வரத ஹஸ்தினி பாசாங்குச தாரிணி
ஸ்ரீ சக்ரவாசினி, பால பீட அதிரோஹிணி
மாதா மாத்ருமயீ,அம்ருதமயீ, ஆனந்த மயீ அனந்த மயீ
மாதா காலகரணி தேஹீ தக்ஷணம் அஷ்ட ஐஸ்வர்யம்
மாதா தேஹீ தக்ஷணம் த்ரிகால க்னானம்
மாதா தேஹீ தக்ஷணம் யத்ன கார்ய சித்தி
மாதா தேஹீ தேஹீ வர ப்ரசாதம் தேஹி

//தேஹீ தேஹீ வர ப்ரசாதம் தேஹி// இது நாமளா பார்த்து எடிட் பண்ணிக்கிட்ட வார்த்தை. அவிக சொன்ன பத்தியில பிக்ஷாந்தேஹினு வருது. ஆத்தா இந்த ஒரு வரியை மட்டும் கேட்ச் பண்ணிக்கிட்டு பிச்சை கணக்காவே செட்டில்மென்ட் பண்ணிக்கிட்டிருந்தாளா ஒரு நா ஸ்பார்க் ஆச்சு.

தாளி..நான் பண்றது தவம். நீ தர்ரது வரம். இதுல பிச்சையென்ன பிச்சைன்னு கடுப்பாகி வார்த்தைய மாத்திட்டேன். அதுக்கப்பாறம் தேன் எல்லாமே ஒரு ரூட்டுக்கு வந்தது.

பாடி ரெஸ்பாண்ட் ஆக ஆரம்பிக்கும்னு திருப்பதியா சொல்லியிருக்கேன்.அடுத்த பதிவுல இதை விலாவாரியா பார்ப்போம்.

அவன் -அவள்-அது :5

ஹ்ரீம் என்ற பீஜத்துக்குரியவளான புவனேசியின் அந்தப்புறம் வரை முன் அனுமதி இன்றி சென்று வரும் சுகரின் (கிளி உருவம் படைத்த ரிஷி) மறு உருவான கிளி நம்ம ஊட்டுக்குள்ள வந்து பூஜை ஸ்டாண்ட்ல கேம்ப் அடிச்சுருச்சுனு சொல்லி நிறுத்தியிருந்தேன். அது ஏன் வந்தது? சிறகு சரிவர முளைக்காத ,பறக்க பழகாத குஞ்சா ? தான் போக வேண்டிய தி சைய கூகுல் மேப்ஸ்ல வெரிஃபை பண்ணிக்க முடியாத சந்தர்ப்பத்துல லேண்ட் ஆச்சான்னெல்லாம் நமக்கு தெரியாதுண்ணே. கிளி வந்தது நெஜம். ஏதோ ஒரு வாரம் போல நம்ம உபசாரத்தையெல்லாம் ஏற்று கன்டின்யூ பண்ணது நெஜம்.

மன்சனை தவிர மத்த எல்லா ஜீவராசிக்கும் இயற்கையோட நல்ல ஒத்திசைவு இருக்கு. ஆராச்சும் நல்ல காரியம் செய்ய ஆரம்பிச்சா ஒரு விதமா கெட்ட காரியத்தை ஆரம்பிச்சா இன்னொரு விதமா ரெஸ்பாண்ட் ஆகுதுங்க. உ.ம் கவுளி சொல்றது, ஆந்தை அலறுவது . அதுகளுக்கு தெரிஞ்சது மன்சாளுக்கு தெரியாம போக காரணம் இன்னாடான்னா ஈகோ.

நம்ம சாதனை தொடருது. சாதனைன்னா என்ன சாதனை மேற்படி மந்திரத்தை ஜெபிக்கிறதுதேன். என்னென்னமோ குருட்டு கணக்கெல்லாம் போட்டு (அறிவுப்பூர்வமா செயல்படறதுங்கற நினைப்புல) வித விதமான ஆசனங்கள்ள உட்கார்ந்து ஜெபிக்கிறது. பத்மாசனத்துல உட்கார்ந்து கூப்பின கைய அனாஹத சக்கரத்தண்டை வைச்சு, பின்னாடி விசுத்தி, அடுத்து ஆக்னா அடுத்து சஹஸ்ராரத்துல ஒட்டி வச்சு ஜெபிக்கிறதுண்டு.

இதுக்கெல்லாம் காரணம் தெரியாது. முந்தா நாள் மின் நூலா கிடைச்ச க்ரியா யோகத்துல சிபாரிசு செய்யப்படும் சூரிய நமஸ்காரத்துல இந்த ஸ்டெப்ஸ் எல்லாம் வருதுங்கண்ணா.ஆனா அன்றைய தேதிக்கு நமக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது.

பத்மாசனத்துல உட்கார்ந்து ஜெபிக்கிறச்ச முதுகெலும்பு அப்படியே முறுக்கு கம்பி கணக்கா ஆயிட்டாப்ல வலிக்கும் – அப்ப அப்படியே தரையில சாஞ்சு (கால்கள் மட்டும் பத்மாசனத்துலயே ) மந்திர ஜெபத்தை கன்டினியூ பண்றதுண்டு. ( இந்த ஸ்டெப்பையும் மேற்படி மின் நூல்ல படிச்சேன்) கழுத்துவரை தனிமை கிடைக்கும்போது கழுத்துவரை தண்ணியில உட்கார்ந்தும் ஜெபிக்கிறது உண்டு.

எனக்கு ரெம்ப பிடிச்சது சவாசனம்.( டெட் பாடி கணக்கா மல்லாந்து படுத்துர்ரது) இந்த போஸ்சர்ல நடு நெற்றியில் ஆட்டோ மெட்டிக்கா ஒரு அழுத்தம் ஏற்படும். அங்கன நினைவை நிறுத்தறது ஈஸி. இப்படித்தேன் கண்டமேனிக்கு விடியல் 3 வரையோ நாலு வரையோ மிட் நைட் மசாலா கணக்கா புகுந்து விளையாடிட்டு படுக்கறேன். உறக்கம் (களைச்சுப்போன பாடிக்கு) விழிப்பு ( நினைவுக்கு) கலந்த நிலை.

திடீர்னு வலது காதுல “விஜயவாடா நித்யானந்தம்”னு ஒரு பெண்குரல் கேட்டுது.ரா முழுக்க தூங்காததால தூக்கம் கேட்டு உள்ளுக்கு இழுக்கிற கண்களை பலவந்தமா திறந்து சுத்தும்முத்தும் பார்த்துட்டு மறுபடி ஜெபத்தை தொடர்ரேன். மறுபடி உறக்கம் (களைச்சுப்போன பாடிக்கு) விழிப்பு ( நினைவுக்கு) கலந்த நிலை.மறுபடி இடது காதுல “விஜயவாடா நித்யானந்தம்”னு ஒரு பெண்குரல்.

அதுக்கு மேல பேட்டரி லோ ஆகி ஆஃப் ஆயிருச்சு. பெரியார் உரையெல்லாம் ஞா படுத்திக்கிட்டு தாளி இதேதோ ஆடிட்டரி ஹெலூசினேஷனுங்கற வியாதி பேசாம தூங்கிருவம்னு தூங்கிட்டன். மறு நாள் மேற்படி மந்திர பேட்சோட பேட்டைக்கு போனேன். அந்த பேட்ச் மெம்பர் ஒருத்தரு (அதுவரை நமக்கு அறிமுகமில்லே) அவர் விஜயவாடா போய் துர்கையை தரிசிச்சுட்டு கழுத்துல டாலர் துலங்க வந்திருந்தார்.

அப்பத்தேன் ஒரு முடிச்சு அவிழ்ந்தது. இந்த பேட்ச் டோட்டலா வேற ஒரு பார்ட்டியோட க்ரூப்புன்னு தெரிய வந்தது. .இடையில அந்த பார்ட்டி வேற ஒரு ரூட்ல போயிருச்சு . ( அதாவது சாதனைக்கெல்லாம் டாட்டா சொல்லிட்டு குருவேடம் தரிக்க ஆரம்பிச்சுருச்சு) – இந்த பேட்ச் கழண்டுக்கிச்சு.

இந்த பேட்ச் கழண்டுக்கிட்டது ஆருக்கிட்டேருந்துன்னு பார்த்தா அந்த ஆசாமியோட ஜாதகத்தை நாம 1990 வாக்குலயே பார்த்திருக்கம்.ஜாதகத்தை கையில கொடுத்து எனக்கு முக்தி கிடைக்குமான்னு கேட்ட மொதல் க்ளையண்டு அந்தாளுதேன்.

அப்பமே ” நைனா .. உனக்கு இன்னம் கில்மா மேல கவர்ச்சி குறையல, குறையாது ,பேசாம கண்ணாலம் கட்டிக்க தங்க விக்கிரகம் மாதிரி ஒரு பெண் குழந்தை பிறக்கும். அதுக்கப்பால முக்திக்கு ட்ரை பண்ணா கிடைக்கும்”னு சொன்னேன்.

ஆனா அந்தாளு கேட்டுக்கலை. தன்னோட கோக்கு மாக்கான சாதனைகள் மூலம் கிடைச்ச காலணா அரையணா ஷக்திய கூட விரயம் பண்ணி லோ பேட்டரி ஆகி இன்னம் ஒரு வாரத்துல டிக்கெட் வாங்கிரப்போறாருங்கற சமயத்துல நம்மை வேடிக்கை பார்க்க வந்து போற ஒரு சோடாபுட்டி கிராக்கி நாம அந்த காலத்துல சொல்லிட்டிருந்த செவ்வாய்க்குரிய நவீன பரிகாரத்தை மேற்படி ஆசாமிக்கு ஊத அந்தாளு அப்படியே அப்ளை பண்ண கூத்தெல்லாம் நடந்தது.

இதற்கிடையில அந்தாளோட தம்பி நமக்கு டச் ஆனான். ( விஜய்காந்த் டைப் ஜாதகம்) ” உங்க அண்ணன் சாக பிழைக்க கிடக்கானாமே ஒரு தாட்டி கூட்டிட்டு போ “ன்னு தலைபாடா அடிச்சிக்கிட்டேன். இன்னைக்கு நாளைக்குன்னு வாயிதா போட்டுக்கிட்டே போக ஒரு நா அந்தாளு செத்தே போயிட்டான்.

அன்னைக்கு ராத்திரி மனசு ரெம்ப சங்கடமா இருந்தது. செத்தவனுக்கு இன்னா வயசுங்கறிங்க ? 30+ தட்ஸால். அடங்கொய்யால என்னடா இது லைஃபு. அப்படி என்னதான் சாதனை செய்துட்டு இருந்தே? என்னத்தை தான் தேடினே? அல்பாயுசுல பூட்டியே நைனா.. உனக்கு என் மேல நம்பிக்கையிருந்தா அந்த ரூட் மேப்பை எனக்கு கொடு. உன் சார்பா உன் பிரதி நிதியா அதை நான் கன்டின்யூ பண்றேன். தாளி உன் ஆத்மாவுக்கும் சாந்தி கிடைக்கும்னு கண்டமேனிக்கு மனசுக்குள்ள புலம்பிக்கிட்டே இருந்தேன். அந்தாளு செய்துட்டிருந்தது துர்கைக்கு சம்பந்தப்பட்ட சாதனைன்னு அப்பால தெரிஞ்சிக்கிட்டேன்.

அன்னைக்கிருந்த ப்ரெட் ஹன்டிங் லைஃப்ல உணர்வுகள் கூர்மையா இருந்ததே தவிர கன்டின்யுட்டிங்கறது துர்லபம்.ஸ்தூல பிரச்சினைகள் சுனாமி மாதிரி ஒரு ரவுண்டு வந்துபோனா மேற்படி உணர்வு வழி முடிவுகள் ,சபதங்கள்,ஆஃபர்ஸ் எல்லாம் சுத்தமாயிரும்.

சரி எப்படியோ குருவை காட்டும் ஒன்பதாமிடத்து சனி ( பிரேதாத்மா) தன் வேலையை செய்துட்டாரு. செத்துப்போனவன் போட்ட ரூட்டுல சொம்மா அப்படி தள்ளி விட்டுட்டாரு போலன்னு அனலைஸ் பண்ணிக்கிட்டேன்.

ஒரு தாட்டி தியானம் பண்ணிக்கிட்டிருந்தப்ப ஏழு அடி பாம்பு வந்துருச்சுங்கண்ணா( சொம்மா ஒரு பில்டப்புக்காக ..அதென்னவோ மெனோஃபஸை எட்டின ஆன்டியோட கூந்தல் சைஸுக்குத்தேன் இருந்ததா நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்)

( அடுத்த பதிவில் தொடரும்)

அவன்-அவள்-அது :4

அவன் என்றாலும், அவள் என்றாலும் ,அது என்றாலும் மூன்று வார்த்தையும் ஒரே கேரக்டரைத்தான் குறிக்குது. ஒவ்வொரு ரஜினி ரசிகனோட பாடி லேங்குவேஜ், பார்வை, பிஹேவியர்ல ஒரு சதவீதமாவது ரஜினியோட ஜாடை தெரியறாப்ல நம்ம எல்லாருக்குள்ளயும் அந்த கேரக்டர் கொஞ்சம் போல தெரியுது.

நான் மொதல்ல அவள்னு தான் இந்த தொடர்பதிவுக்கு டைட்டில் வச்சேன். அது என் ஆண்மனத்தோட எஃபெக்ட். எல்லாமே ஒன்னுதானு புரிஞ்சாலும் அவள்னு சொல்றதுலதான் ஒரு குஜிலி. கடந்த பதிவுல எங்கன விட்டேன்?

ஆங்.. மந்திரம் -உச்சாடனம். ஓஷோ சொல்வாரு.. ஒரு மனிதன் ஞானம் எய்தினால் அவனோட வாழ்க்கையில எடிட்டர் டேபிள்ள துண்டு பிலிம் மாதிரி தொடர்பற்று கிடந்த எல்லா மேட்டரும் எடிட்டட் ஃபிலிம் மாதிரி ஆயிருமாம். நம்ம லைஃப்லயும் அப்படித்தான் ஆச்சு. மந்திரத்தை ஜெபிக்க ஜெபிக்க அம்மன் பிசினஸ்ல சின்னவயசுலருந்து என்னெல்லாம் கேள்விப்பட்டிருப்பமோ மொத்தம் ஞா வந்துர ஆரம்பிச்சிருச்சு. ஞாபகம் வந்ததையெல்லாம் அப்ளை பண்ற வாய்ப்பும் ஏற்பட ஆரம்பிச்சது.

அப்போ நாம குடியிருந்த வீடு தெற்கு பார்த்த வீடு. வடக்கே ஆறு. (ஆக்யுரேட்டா சொன்னா ட்ரெய்னேஜ்) வீட்டுலருந்து வெளிய வந்து நின்னா லாங் ஷாட்ல சூலம் தெரியும். நம்ம போர்ஷனுக்குள்ள ஒரு தண்ணி தொட்டி. ஏரியா டவுனை விட்டு கொஞ்சம் தள்ளி இருந்ததால வழியில பச்சை தெரியும். சாலையின் ஒரு பக்கத்திலயாவது மரம் தெரியும்.

பழைய மேட்டர் எல்லாம் ஞா வந்ததுனு சொன்னேனே ..அதை எல்லாம் அப்ளை பண்ண ஆரம்பிச்சென். மொதல் ஆட் ஆன். மஞ்ச தண்ணி . ஒரு மாசம் ஏதும் பிரச்சினை இல்லை. அப்பாறம் ஆரம்பிச்சது ஆத்தாளோட லீலைகள். ம.த வைக்க தாமதமானாலோ அ வைக்க மறந்துட்டாலோ பயங்கர பல்பு வாங்க வேண்டி வந்துரும்.

இன்னைக்கு ஒரு ஆயிரம் ரூபா தேறிரும்னு புறப்பட்டா கடைசி பீடி கூட செலவழிஞ்சு வீடு திரும்பவேண்டி வந்துரும்.பயங்கர கோவம் வரும். ரத்த காயம் ஏற்படும். நெருக்கத்துல கத்திக்குத்தெல்லாம் பார்க்க வேண்டி வந்துரும்.

எப்படியோ ஒரு நாள் பொறி தட்டி நாம வெளிய வரணும்னா நெத்தியில சந்தனபொட்டு கியாரண்டி இருக்கனும். அதனால ஆத்தாளுக்கு வைக்கிற (புது) மஞ்ச தண்ணிய விட்டுத்தான் சந்தனம் குழைக்கிறதுன்னு ஒரு புது விதியை ஏற்படுத்திக்கிட்டேன். ( வீட்டம்மா ரெம்ப சுறுசுறுப்புங்கோ)

அப்பாறம் கோவம்,ரத்தக்களறி எல்லாம் அவாய்ட் ஆயிருச்சு. கொஞ்ச நாள் கழிச்சு வீட்டு சமையல்ல பயங்கர காரம். நம்ம சாதி மொதலியார் சாதியா இருந்தாலும் உணவுப்பழக்கம்லாம் அய்யர் வீடு மாதிரி தான் இருக்கும் (மனைவி மகள் தவிர) . மேலும் பொஞ்சாதி மேலுக்காச்சும் நமக்கு பயந்து நடக்கிற சாதி. ஒரு நாள் திட்டு.மறு நாள் பயங்கர அர்ச்சனை. ஒரு நா தட்டு வீச்சு எல்லாம் நடந்தும் காரத்துல மட்டும் குறைவில்லை.

நம்முதுதான் கடக லக்னமாச்சே சந்திரன் நல்லாருந்தா நாள்ள படக்குனு ஸ்பார்க் ஆச்சு. ஆத்தாளுக்கு வச்ச மஞ்ச தண்ணிய ஒரு துளி வாய்ல விட்டு பார்த்தேன். தாளி காரம் மண்டைக்கேறுது.அடடா இதானா மேட்டருன்னு மஞ்சள் தூளை பொட்டலமா வாங்காம சாஷேல வாங்க ஆரம்பிச்சோம். ( மொளகா அரைச்ச மெஷின்ல அப்படியே மஞ்சளை போட்டு அரைச்சிருக்கானுவ)

மந்திர உச்சாடனம் மட்டும் நிக்கலை. அதுபாட்டுக்கு ஒரு ட்ராக்ல ஓடிக்கிட்டே இருக்கு. கூடவே தினசரி வேப்பிலைய கிள்ளி பையில வச்சுக்கறது, வெள்ளிக்கிழமையான ரெண்டு எலுமிச்சம்பழம் வாங்கி பையில போட்டு வச்சிக்கிறது. இப்படி சாங்கியங்களோட நெம்பர் ஏறிட்டே போகுது.

இந்த பதிவுல மந்திரம் மந்திரம்னு திருப்பதி கணக்கா சொல்லிட்டிருக்கேன். பேட்டைக்கு புதுசா வந்தவுக திணறுவிங்க. அந்த மந்திரம் வருமாறு: ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் வஷக் வஷக் வஷக். இதுல ஹ்ரீம்ங்கறது புவனேஸ்வரி பீஜம். இவிகளை மதர் ஆஃப் காட்ஸ்னு சொல்றாய்ங்க.

வயசு 16. வாலைச்சிறுமி போன்ற தோற்றம். ரெசிடன்ஸ் : மணி த்வீபம் (தீவு) – பாலபீடத்துல -ஸ்ரீசக்கரத்து மையத்துல இருப்பாய்ங்கனு கேள்வி.

தேவிபாகவதம்னு ஒரு தலையணை சைஸ் புஸ்தவம். அதுல இன்னம் கவைக்குதவாத நிறைய மேட்டர்லாம் கொடுத்திருந்தாய்ங்க. நாம தான் அன்னப்பறவையோட கசின் ப்ரதராச்சே. நமக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கிட்டம்.

அதுல ஒரு பாய்ண்ட் ரெம்ப பிடிச்சிருந்தது. அதாவது மேற்படி புவனேசிய தவிர மத்த தேவர்கள், மூவர்கள் ஆரும் நிரந்தரமில்லை. ஒவ்வொரு யுகம் முடியும்போதும் புவனேசி அல்லாரையும் ஒழிச்சு கட்டிட்டு புதுசா படைப்பாய்ங்க. அம்மாவோட அந்தப்புரத்துக்கு போகனும்னா சிவனாரே தகவல் சொல்லி அனுமதி கிடைச்சாத்தான் போகமுடியும்னா பார்த்துக்கங்க.

ஆனா முன் அனுமதி இல்லாம நினைச்ச நேரத்துல அம்மாக்கிட்டே போய் பேசிட்டி வர்ர அதிகாரம் ரெண்டே பேருக்குத்தேன் உண்டு. அதுல ஒருத்தரு சுகர் ( கிளி மூக்கோட ஒரு ரிஷி – நாடி ஜோசிய விளம்பரங்கள்ள பார்த்திருப்பிங்க) இன்னொருத்தரு…டட்டடாய்ங்க்.. வேற யாரு நம்ம பாஸ்தான்.ஆஞ்சனேயரு.

மத்தபடி பெருசா பீத்திக்கிற துர்கை,சண்டி,பார்வதினு உள்ள அம்மனுக்கெல்லாம் என்ன ரோல்னு கேளுங்க. அவிகல்லாம் புவனேசியோட தோழிகளாம். அப்பாறம் உங்க ஊரு ஆத்தா,எங்க ஊரு ஆத்தால்லாம் வேணா சொன்னா அடிக்க வருவிக. புஸ்தவத்துல உள்ளதை சொன்னேன்.அம்புட்டுதேன்.

மேலும் சில மாசம் கழிஞ்ச பிற்பாடு வீட்லருந்து போறச்ச, திரும்பி வரச்ச மரத்துல உள்ள கிளிகள் ( நெஜமாலுமே இருந்துச்சுப்பா -இப்ப இருக்கோ இல்லியோ -காக்காயையே காணோம் -கிளிங்க எங்க இருக்கப்போவ்து) வரான் பாரு வரான் பாரு – போறான் பாரு போறான் பாருன்னு ஒன்னுக்கொண்ணு கம்யூனிக்கேட் பண்ணிக்கறாப்ல கத்த ஆரம்பிச்சுரும்.

நாமதான் பெரியார் சிஷ்யனாச்சே.அப்படியே ஓரங்கட்டிக்கிட்டு வேற ஆருனா போறச்ச கூட கத்துதான்னு நிதானிச்சு பார்ப்பேன்..பே பே..

அப்படியே சிலிர்த்துப்போயிரும். அடடா.. ஆத்தாளோட அந்தப்புறத்துக்குள்ள முன் அனுமதியில்லாத நுழையற சுக மகரிஷியோட மறு உருவங்கள் ரெஸ்பாண்ட் ஆறதுன்னு தமாசான்னுட்டு பொங்கிப்போயிருவன். ஈது இப்படியிருக்க ஒரு நா ஒரு கிளி நம்ம பூஜை ஸ்டாண்டுலயே வந்து கேம்ப் அடிச்சுருச்சுங்கோ.. அந்த கூத்தை அடுத்த பதிவுல சொல்றேன்..

மந்திரோபதேசம் நடந்தது 2000, டிசம்பர் 23 ஆம் தேதி. 20/Sep/2000 => முதல் 20/Mar/2002 வரை சந்திர தசையில ராகு புக்தி நடக்குது. சூரியன் சிவனை, சந்திரன் அவர் மனைவியை குறிக்கும் கிரகங்கள். ரெண்டு பேரும் பரிவர்த்தனம். சந்திரன் லக்னாதிபதியாகி வாக்கில். ராகு பத்தில் அவருக்கு சமசப்தகத்தில் கேது 4 ல் (பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாயோடு சேர்ந்து )

4ங்கறது வித்யா ஸ்தானம். கேதுங்கறவர் ஞான காரகன். தியானம்,யோகம் மந்திரம் இத்யாதிக்கு காரகர்.ராகுன்னாலும் துர்கை தான். எது எப்படியோ .. 1986 ல ராம நாமத்துல துவங்கின சாதனை 2000 டிசம்பர் 23 ஆம் தேதி ஒரு யு டர்ன் எடுத்து ட்ராக்ல கொண்டு போய் சேர்த்துருச்சு.

ராமா- வுக்கும் ஆத்தாளுக்கும் என்ன தொடர்பு தெரியுமா?

ஹரா என்றால் சிவன். உமா என்றால் ஆத்தா. ஹராவிலான கடைசி எழுத்தையும் ( ரா) உமாவிலான கடைசி எழுத்தையும் ( மா) கொண்டு உருவானதே ராமா எனும் நாமம் ( இதை நாம சொல்லலிங்கண்ணா ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்றாரு.

இன்னொரு விதி என்ன சொல்லுதுன்னா ஒருத்தன் முக்தி பெற (முழு மூச்சா ட்ரை பண்ணால்) 3 பிறவிகள் தேவையாம். ஒரு பிறவி முழுக்க ராம நாமம் சொன்னால் அடுத்த பிறவில பஞ்சாட்சரியை (ஓம் நமசிவாய) ஜெபிக்கிற தகுதி ஏற்படுமாம். ரெண்டாவது பிறவி முழுக்க பஞ்சாட்சரி ஜெபிச்சாத்தேன் சாக்தேயம் சாத்தியப்படுமாம்.

மூன்று பிறவிகள் தேவைப்படும் ஒரு ப்ராசைசை ஒரே பிறவில கம்ப்ளீட் பண்ண (?) வச்சிருக்கான்னா ஆத்தா எம்மாம் பெரிய ஏமாந்த சோனகிரியா இருக்கனும்? கொஞ்சம் போல சின்சியாரிட்டி,கொஞ்சம் நம்பிக்கை, கொஞ்சம் பிடிவாதம், கொஞ்சம் சென்சிட்டிவிடி, கொஞ்சமே கொஞ்சம் நன்றி உணர்விருந்தா போதும் இந்த ரூட்டு சூப்பர் ஹிட்டு..

(தொடரும்)

அவன்-அவள்-அது :3

அண்ணே வணக்கம்ணே,(அப்பாடா சலாம் போட்டாச்சு – என்ன டவுசரு கரீட்டா)

அவள்ங்கற தலைப்புல ஒரு தொடரை ஆரம்பிச்சது ஞா இருக்கலாம். அவள்னா ஆருன்னு கேட்கறிங்கன்னா நீங்க பேட்டைக்கு புதுசுனு அர்த்தம். நீங்க கீழே உள்ள முதல் ரெண்டு அத்யாயங்களை ஒரு ஓட்டு ஒட்டிட்டு வந்துர்ரது பெஸ்ட்..

அவன்-அவள்-அது : 1

அவன்-அவள்-அது :2

என்ன படிச்சாச்சா.. அடங்கோ இது என்னமோ ஏ.பி.நாகராஜன் ஆதிபராசக்தி சினிமால கிளைக்கதை மாதிரி இருக்கேன்னு சப்புனு போயிருச்சா? இதை படிக்கிறதால என்ன லாபம்னு தோணுதா?

அவளை சக்திங்கறது வழக்கு.” சக்தி இருந்தா செய்.. இல்லாட்டி சிவனேன்னு கிட” னுட்டு கேள்விப்பட்டிருப்பிங்க. நீங்க வாழ்க்கையில எதையாவது சாதிக்கனும்னு நினைக்கிற சாதியா இருந்தா சக்தி ஸ்வரூபிணியான அவளை பத்தி தெரிஞ்சுக்கிட்டே ஆகனும். அவளை நினைச்சே ஆகனும். அவளை தெரிஞ்சிக்க தெரிஞ்சிக்க புரிஞ்சிக்க புரிஞ்சிக்க யத் பாவம் தத் பவதிங்கற மாதிரி உங்களுக்குள்ள சக்தி ஊற்றெடுக்கும்.

அந்த சக்தி வெறுமனே செலவாயி எக்ஸாஸ்ட் ஆயிர்ர சக்தியில்லே. உலகத்தையே உங்க பக்கம் ஈர்த்துவிடக்கூடிய ஆகர்ஷண சக்தி.

உலகத்துல உள்ள சக்தியையெல்லாம் ஆராச்சும் அ எதுவாச்சும் ஸ்விட்ச் ஆன் பண்ணா தான் இயங்கும். ஆனால் தன்னை தானே ஸ்விட்ச் ஆன் பண்ணிக்கிட்டு இயங்கற சக்தி அவள் ஒருத்திக்குத்தான் உண்டு.

அவள் எனக்குள் கருக்கொண்டு – உருக்கொண்டு பிறந்து – தளிர் நடை இட்டு – வளர்ந்து பெரியவளாகி – இன்று வேலை கொடு வேலை கொடுன்னு என்னை பிச்சு பிடுங்கறா. பெரிய வேலையா கொடுத்து வச்சிருக்கன். அது எந்தளவு மெட்டீரியலைஸ் ஆகுதுன்னு போக போகத்தான் தெரியும்.

அவள் எப்படி தன்னைஎனக்கு அறிமுகப்படுத்தினா(ள்), எப்படி கருக்கொண்டா(ள்)ங்கற மேட்டரையெல்லாம் ஒளிவு மறைவில்லாம இந்த தொடர்ல வெளிப்படுத்த இருக்கேன். ஆருக்கெல்லாம் அவள் கடன் பட்டிருக்காளோ அவிகளுக்கெல்லாம் இந்த தொடர் தரிசனமளிக்கும். கரிசனமா ஒரு ரூட் மேப்பை கொடுக்கும். இந்த பதிவுல நான் ஒன்னும் சம்பவங்களை,அற்புதங்களை பட்டியலிடப்போறதா இல்லை. வேணம்னா இது ஒரு வித ஸ்ருதி கூட்டல்னு வச்சுக்கங்க.

அவள் அவள்னு பினாத்தறே. அவள் எங்கன இருக்கானு இரண்யன் மாதிரி ஆராச்சும் கேட்கலாம்.

அவளை சந்திரமண்டல வாசினிங்கறாய்ங்க. த பார்ரா அப்ப நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனுக்கு போனச்ச அவளை மீட் பண்ணியிருக்கனுமேனு நக்கலடிப்பாய்ங்க. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு. ஆகாயத்துல உள்ள சூரிய சந்திரர்கள் நம்ம பாடிலயும் இருக்காய்ங்க. ஆணோட உடல்ல வலது பக்கத்தை சூரியன். இடதுபாகத்துல சந்திரன் ரூல் பண்றதா ஒரு விதி இருக்கு.

சிவசக்தி, சிவசங்கரினு அர்த்தனாரிங்கறாய்ங்களே அதெல்லாம் ஆரோ ஒரு சிவனை குறிக்கிறது மட்டுமில்லை. இந்த சீவர்களையும் குறிக்குது.

நம்முது மேல் சேவனிஸ்ட் சொசைட்டிங்கறதால / சிவனை ஆணா உருவகிச்சதால ஆத்தாள லெஃப்ட்ல ஃபிட் பண்ணிட்டாய்ங்க.இதுவே பெண்ணோட உடல்ல இடது சிவனாவும் ,வலது சக்தியாவும் இருக்கும்ல. அதை ஏன் எக்சிபிட் பண்றதில்லைனா அதான் மேல்சேவனிசம்.

சீன பராம்பரியத்துல யிங் -யாங்னு சொல்றாய்ங்க. எலக்ட்ரானிக்ஸ்ல பாசிட்டிவ் நெகட்டிவ்
ங்கறாய்ங்க.மொத்தத்துல ரெண்டு ஃபேக்டர்ஸ் இருக்கு.நம்முது கடகலக்னமாச்சா அதிபதி சந்திரங்கறதால லெஃப்ட் ரெம்ப எஃபெக்டிவா வேலை செய்துருச்சு போல.

ஒவ்வொரு ஆணிலும்,ஒவ்வொரு பெண்ணிலும் சிவசக்திகள் இருக்காய்ங்க. ஒவ்வொரு ஆணும் சிவன் தான். என்ன இடகலை பிங்கலையில நடக்கிற ஸ்வாசம் சூக்ஷ்ம்ணாவுக்கு பைபாஸ் ஆகனும். குண்டலி விழிக்கனும். இரு புருவங்களுக்கிடையில உள்ள ஆக்னா சக்கரத்துல போய் முட்டிக்கிட்டு நெற்றிக்கண் திறக்கனும். திறந்தா எல்லாரும் சிவம் தான். திறக்கலேன்னா……………சந்தேகமென்ன சவம்தேன்.

ஓஷோ இந்த ஆக்னாவை பத்தி ஒரு மேட்டர் சொல்வாரு. இது ஆக்டிவேட் ஆகாத பார்ட்டி ஏதோ ஒரு மேட்டருக்கு அடிமையாவே இருப்பானாம். எத்தனாம் பெரிய பொசிஷன்ல உள்ள விவிஐபி நிலைமையெல்லாம் கூட இதுதானே.

ஆக்னா ஆக்டிவேட் ஆனா கிடைக்கிற மொதல் பரிசு சுதந்திரம். சரி இந்த பதிவு ரெம்பவே உபதேச மஞ்சரி கணக்கா போயிருச்சு மேட்டருக்கு வந்துர்ரன்.இதை ஒரு முன் கதை சுருக்கம் மாதிரி வச்சுக்கங்க பாஸு!

நாம வாணியம்பாடியில வசிச்ச சமயம் பாய் ஒருத்தர் நம்ம மேல ஜின்னை ( தேவதை) ஏவினது -அது பூட்டின அறைக்குள்ளாற வந்து தட்டி எழுப்பினது ஒரு அத்யாயத்துல ஆரம்பிச்சேன். ( அந்தரத்துல விட்டாச்சு) பாய் என்னமோ அசால்ட்டா ” நீங்க எதுக்கு பிறந்திங்களோ அதை நோக்கின பயணம் ஆரம்பிச்சுரும்”னு சொல்ட்டாரு.

சித்தூர் திரும்பியாச்சு. வேற ஒரு க்ரூப் டச் ஆச்சு. அவிக உலகமெல்லாம் மந்திரங்கள் வியாபிச்சு இருந்தது. நான் கிண்டலா கேட்டேன்.பைசா வர ஒரு மந்திரம் சொல்லுங்கப்பு.

சொன்னாய்ங்க.விவரம் பத்தாத டாக்டர் கண்டமேனிக்கு ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதறாப்ல அவிக சொன்ன மந்திரம் வெறுமனே பைசாவுக்கு பதிலா ஆல் இன் ஆல் அழகுராசா கணக்கா அமைஞ்சு போச்சு.பெருசா வேலை வெட்டியில்லாத காரணத்தால ஃபுல் டைமா மந்திர உச்சாடணம்,பார்ட் டைமா ஜோதிடம்னு காலம் ஓட ஆரம்பிச்சது. ( 23/12/2000). அதுக்கப்பாறம் நடந்த விட்டலாசார்யா மேட்டர்லாம் அடுத்த பதிவுகளில் தொடரும்..

அவள்அவன்-அவள்-அது :1

எவளுக்குள்ளயும் ஆணினம் அவளைத்தான் தேடுது. எவளுக்குள்ளும் அவள் தான் இருக்கிறாள்.

அவளைபத்தி சொன்னா பீலா விடறதா தோணும். லாலா போட்டு பினாத்தறதா தெரியும். மோகத்தை உண்டாக்குபவளும் அவளே மோகினி. பின் மோகத்திலிருந்து யோகத்துக்கு இழுத்து செல்பவளும் அவளே. யோகினி.

எல்லா எழுத்தும் அவளையே குறிக்கும். ஒன்னுக்கொண்ணு முரண்பட்ட எல்லா வார்த்தையும் அவளையே குறிக்கும். காலாயை நமஹான்னாலும் அவதான். காலாதீதாயை நமஹான்னாலும் அவள் தான்.

“அனாமிகா”ம்பாய்ங்க ( பேரில்லாதவள்) .அப்பாறம் பார்த்தா சஹஸ்ர நாம அர்ச்சனைம்பாய்ங்க. அவளே ஒரு புதிர். தர்கத்துக்கு எதிர்.

நம்ம ஈகோ ஒரு அல்பம். எதையெடுத்தாலும் லாஜிக் பார்க்கும். லாஜிக் பார்த்துதானே ஓட்டுப்போடறாய்ங்க. பின்ன ஏன் நம்ம ஆட்சியாளர்கள் எல்லாம் இப்படி இழவெடுக்கிறாய்ங்க.

முரண்பாடுகளின் மொத்த உருவம் அவள் .

சூர்ய ப்ரகாசாயை நமஹாம்பாய்ங்க. படக்குனு சந்திரமண்டல வாசினிம்பாய்ங்க. மஹோதர்யைம்பாய்ங்க ( பெரிய வயிறு படைச்சவள் – இல்லாட்டி இத்தீனி ட்ரில்லியன் குட்டிகளை போட்டிருக்கமுடியாதே) டக்குனு நித்ய கன்னிம்பாய்ங்க. சிண்டை பிச்சுக்க வேண்டியதுதேன்.

அவளுக்கு ஷண்மதப்ரியேன்னு ஒரு பேருண்டு . ஷண் என்றால் 6 ன்னு அர்த்தம். ஷண்முகன் – ஆறுமுகன். அதை போல ஆறு மதங்கள் உண்டு. ஆறுமதங்களும் பரஸ்பரம் வெட்டுப்பழி,குத்துப்பழின்னு அலைஞ்சாலும் அந்த ஆறு மதங்களும் கொண்டாடற தெய்வம் அவள். அவளை முன்னிலைப்படுத்தும் மதத்துக்கு சாக்தேயம்னு பேரு.

அவளுடனான , 2000 டிசம்பர் 23 முதலான என் அனுபவங்களை சொல்ல உத்தேசிச்சு ஆரம்பிச்ச தொடரோட முதல் பதிவு இது. நாம எதைத்தான் முழுக்க செய்தோம். எல்லாம் அரை குறைதேன்.

அவள்னா யாருனு கேட்கமாட்டிங்கனு நினைக்கிறேன். அவள் பிக்காசாவோட ஓவியம் மாதிரி . பார்க்கிறவுக எண்ணத்துக்கு ஏத்தாப்ல ஒரு புது அர்த்தத்தை தந்துருவா. வெளிய வந்து நாக்கு வறள வாதாடிக்கிட்டே எக்சிபிஷன் ஹால்ல இருந்து வெளிய வந்து பஸ்ஸை தவற விடவேண்டியதுதேன்.

ஏ.பி நாகராஜன், தேவர் மாதிரி பார்ட்டிங்க எத்தீனி படம் எடுத்திருந்தாலும் 2000 டிசம்பர் 23 வரை நமக்கு சாக்தேயத்துல ஆர்வம் ஏற்படலை.

அவனருளாலே அவன் தாள் வணங்கி கணக்கா ஜோதிஷம் கத்துக்கிட்ட புதுசுல ( 1990) நம்ம ஜாதகத்துல சிவசக்தி யோகம் இருக்கிறதா படிச்சதுல லெட்டர் பேட்,கவர்ல யெல்லாம் சிவ சக்திகள் சைட் ஃபோஸ்ல இருக்கிற படத்தை லோகோ கணக்கா உபயோகிச்சது உண்டு. என்னோட ஆதர்ச தலைமையகத்துக்கு சிவசக்தி நகர்னு பேரை கூட கனவு கண்டதுண்டு. ஆர்ச் தாண்டினதும் ஒரு சிலை . ஒரு ஆணோட கையும், பெண்ணோட கையும் க்ளோபை தூக்கி பிடிச்சிட்டிருக்கும்.

இந்த நகர்ல லேபர் ரூம்ல இருந்து மின் இடுகாடு வரை இருக்கும். இது பழமை+ புதுமையின் பாசிட்டிவ் கலவை. மண் பாணையில சமைப்போம். ஆனால் காட்டை அழிச்சு இல்லை. கியாசோ,சோலார் பவரோ உபயோகிப்போம்.

நாடு /உலக முழுக்க உள்ள உன்னத படைப்பாளிகளை இங்கன இன்வைட் பண்ணி ஒரு வருஷம் தங்க வைச்சு அவிக படைப்புகளை லாஞ்ச் பண்ணுவம்.

பிரபலம்னு இல்லே . மசாலா இருந்தா ஒடனே அட்மிஷன். ஏதோ சிகரட் வரை அனுமதி. மத்த சமாசாரம்னா வெளிய போய் வரலாம். அவிகளுக்கு எல்லா உதவியும் நகர் செய்யும். ( பார்த்துங்கண்ணா ஒடனே சி.வியை அனுப்பிரப்போறிங்க.இதெல்லாம் ஒரு கற்பனை தேன் )

ஆனால் அதெல்லாம் ஜஸ்ட் சினிமா ஸ்லைடு மாதிரி. படம் என்னவோ 2000 டிசம்பர் 23 க்கு அப்பாறம் தான் துவங்குச்சு. அதுக்கு முந்தி சின்ன ட்ரெய்லர்.

வாணியம்பாடில அக்பர் கவுசரோட பத்திரிக்கைல உதவி ஆசியரா குப்பை கொட்டிக்கிட்டிருந்த காலத்துல ஒரு முஸ்லீம் நண்பர் அறிமுகமானார். அவர் தனக்கு மந்திர தந்திரங்கள்ள கமாண்ட் இருக்கிறதா சொல்வாரு. ஆவிகள்,செய்வினை பத்தியெல்லாம் எங்களுக்குள்ளாற நீண்ட விவாதங்கள் நடக்கும் . ஒரு நா நான் அவரை ரெம்ப கடுப்படிச்சிட்டாப்ல இருக்கு. அவர் நீங்க ரூமுக்கு போங்க நான் ஒரு ஐட்டத்தை அனுப்பறேன். அது என்ன பண்ணுச்சுன்னு நாளைக்கு சொல்லுங்கன்னாரு.

நான் ரூமுக்கு வந்துட்டன். மதிய நேரம் தான். அந்த ரூம் கதவுக்கு உள் தாப்பா கிடையாது. பாட் லாக் தான். குறுக்கால ஒரு ஸ்க்ரூ ட்ரைவரை விட்டுட்டு படுத்து படிச்சிக்கிட்டிருந்தேன். திடீர்னு யாரோ தோள்ள தட்டி எழுப்பினாப்ல இருந்தது. விதி விதிர்த்து போச்சு. உள்ளுக்குள்ள டர்ராகிட்டேன்.

இருந்தாலும் பெரியார் எழுத்தையெல்லாம் படிச்ச பார்ட்டி .ராம பக்தன், வீராஞ்சனேயரோ சிஷ்யன் இந்த பிரமைக்கெல்லாம் பயந்துரலாமா அது இதுன்னு என்னை நானே தேத்திக்கிட்டு ராம நாமம்லாம் சொல்லிட்டு இந்த பக்கம் திரும்பி படுத்தேன். மறுபடி யாரோ தோள்ள தட்டி எழுப்பினாப்ல இருந்தது. நம்முது கல்லு குடல்ங்கறதால ஒன்னுமாகலை .இல்லைன்னா நிச்சயம் பேதியாயிருக்கும்.

ஒடனெ எந்திரிச்சு சட்டைய போட்டுக்கிட்டு பாயை தேடிப்போனேன். “இன்னா பாய் நீங்க.. நானேதோ விளையாட்டுக்கு பேசினா இப்படி டர்ராக்கிட்டிங்களே”ன்னு புலம்பினேன்.

அவரு யாரோ “பேயி”ங் கஸ்டை அனுப்பிட்டு ஃபோன்ல கேட்கிறாப்ல ” என்னதான் பண்ணுச்சு சொல்லுங்க”ன்னாரு. நான் மேட்டரை சொன்னேன்.

உ.வசப்பட்டுட்டாரா. அப்படியா தோள்ள தட்டுச்சா தோள்ல தட்டுச்சானு மறுபடி மறுபடி கேள்வி. நான், “அய்யோ விஷயத்தை ஓப்பன் பண்ணுங்க பாய்!”னுட்டு துடிச்சேன்.

அதுக்கு அவரு ” முருகேசன்! நீங்க எந்த பாதையில பயணிக்க பிறந்திங்களோ அதுக்கான பாதை சித்தமாயிருச்சு. நீங்க புறப்பட வேண்டியதுதான்”னாரு.

அவர் சொன்னதைப்போலவே திமிர் காரணமா கவுசருக்கு டாட்டா சொல்லிட்டு ஊர் வந்தேன்.
அதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கையின் முதல் பாகம் ( லலிதா டீச்சர் செய்த வஸ்திராபரணம்ங்கற தலைப்புல கொஞ்சமா சூ காட்டியிருக்கேன் .படிச்சு பாருங்க) அதுக்கு கொய்ட் ஆப்போசிட்டான இரண்டாவது பாகம். ரெண்டுக்கும் உள்ள வித்யாசம் என்னனு அப்ஜெக்டிவ் டைப் ஆன்சராவாச்சும் சொல்லியாகனும்.

முக்கியமா இரண்டாவது பாகத்துல இருந்து ஒரே ஒரு எப்பிசோடை யாச்சும் , சுருக்கமாவாச்சும் சொன்னாத்தான் அந்த வாழ்க்கையோட அவலம் , என் ஜப,தபங்களுக்கான உந்துதல் , என் சாதனையை மெச்சி ஆத்தா கொடுத்திருக்கிற இந்த வாழ்க்கை (ரெண்டுத்துக்கும் உள்ள வித்யாசம்) இதெல்லாம் உங்களுக்கு புரியும்.

மனைவி முழுகாம இருக்கா. நிறை மாசம். ஜூன்ல பிரசவம் நடக்கப்போவுது. மே மாசம் கங்கையம்மன் திருவிழா நடக்குது. அதுக்கு ஒரு வாரம் முன்னே இருந்து பயங்கர நெருக்கடி.

ஷீரடி பாபா ரேஞ்சுல இமேஜ் இருக்கிறதால பீடி சிகரட்டுக்கு பஞ்சமில்லைதான். நாம தன்மான சிங்க மில்லையா. கை மாத்து,கடன் எல்லாத்துக்கும் நமக்கு நாமே ஒரு சீலிங் வச்சிருப்பம். அது தாண்டிட்டா தாளி உயிரே போனாலும் அந்த ஜோலிக்கு போக மாட்டோம். அந்த மாதிரி ஒரு நிலை.

திருவிழா கத்திரிலதான் நடக்கும். ஜோசியத்தொழிலுகு அன் சீசன். ஒரே ஒரு டீக்கடைல சீலிங் முடியலை. அதனால அங்கன போய் ஒரு டீ அடிச்சுட்டு ஒரு கப் பால், ஒரு ப்ரெட் வாங்கிட்டு வந்து பொஞ்சாதிக்கு கொடுத்துட்டு முயற்சிகளை தொடர்ரதும் மதியம் மறுபடி ஒரு டீ அடிச்சுட்டு ஒரு கப் பால், ஒரு ப்ரெட் வாங்கிட்டு வந்து பொஞ்சாதிக்கு கொடுத்துட்டு முயற்சிகளை தொடர்ரதுமா இருந்தன். மறுபடி ராத்திரிக்கும் அதே ப்ராசஸ்.

கர்பமா இருந்தப்போ பொஞ்சாதிக்கு போதுமான நியூட் ரிஷன் இல்லாமத்தான் என் மகள் மண்ணாந்தையாயிட்டாளோன்னும் ஒரு சம்சயம் உண்டு. ( அகடமிக்ல மட்டும்தான் தொத்தல். அவளும் இப்போ அடோப் ஃபோட்டோஷாப்ல புலியாகி என்னைவிட அதிகம் சம்பாதிக்கிறது வேற விஷயம்)

ஒரு வார கொலைப்பட்டினிக்கப்பாறம் தூரத்து சொந்தமான மாமனுக்கு ரத்ததானம் கொடுத்ததும் இதை கேள்விப்பட்டு எங்கப்பன் “அடடே நாம நினைச்ச ரேஞ்சுல நம்ம பையன் அராத்துல்ல போலிருக்கேன்னு வந்து பேட்ச் அப் ஆனதும் வேற கதை.

இந்த ஒரு வார கதைய வச்சு இப்படியேத்தான் வாழ்ந்தாராக்கும் நினைச்சுராதிங்க. நம்முது கடகலக்னமாச்சா ஏறினா ரயில்,இறங்கினா ஜெயிலுன்னு தாளிச்சிக்கிட்டிருந்தமில்லை. உடுப்பில சர்வருக்கு கொடுத்த டிப் பணத்துல சாப்பாட்டை முடிச்சதும் உண்டு. உடுப்பில ஒரு குடும்பம் சாப்பிட்டா ஆகிற பில்லை ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுத்து ஒரு வாரத்துக்கு பிச்சையெடுக்காதேனு சொன்னதும் உண்டு.

கவுசர் வேலைய நம்பி என் பொஞ்சாதி ஐ நூறு ரூபா வாடகைல வீட்டை பிடிச்சு வச்சிருந்தாளா.. நான் பாட்டுக்கு வேலைய விட்டுட்டு ஊரை பார்க்க வந்துட்டனா .. ஊர்ல இல்லாததால தொழில் வேற படுத்துப்போயிருந்ததா எத்தை தின்னா பித்தம் தெளியும்ங்கற நிலை.

அப்பத்தான் ஒரு க்ரூப் டச் ஆச்சு. அந்த க்ரூப்போட செனேரியோவை விவரிச்சன்னா மூட நம்பிக்கைய பரப்பறான்னு வேட்டியை உருவிருவிங்க. அவிக உலகம் மந்திரத்துல மாங்கா விழற உலகம். ஆவிகள்,தேவதைகள் மார்னிங் வாக் பண்ற உலகம்.

அந்த க்ரூப்ல ஒரு பார்ட்டிய மெல்ல ஓரம் கட்டி ஏம்பா என்னென்னமோ பேசறிங்க. பைசா புரள்ற மாதிரி எதுனா மந்திரம் ஒன்னு சொல்லிகொடுங்களேன்னேன். அந்த ஆளும் எதையோ சொன்னான். எழுதிக்கிட்டேன்.

இதுல ரகசியம் என்ன? அந்த மந்திரம் இதான் :
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் வஷக் வஷக் வஷக்

நமக்கு ஏற்கெனவே பரிச்சயமான பீஜங்கள் தான். என்.டி.ஆர் வீரபிரம்மேந்திர சுவாமி சரித்ரா படம் எடுத்தாரு. அந்த இன்ஸ்பிரேசன்ல பிரம்மங்காரு தொடர்பான புத்தகங்கள் எல்லாம் நிறைய படிச்சேன் . அவரு ஒரு மூல மந்திரம் உபதேசிச்சிருக்காரு.

அந்த மூலமந்திரம் இதான்:

ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் சிவாய ப்ரம்ஹனே நமஹ

இதை ஏற்கெனவே சில லட்சமாச்சும் ஜெபிச்சிருப்பேன். ( இதெல்லாம் இப்ப எடிட் பண்ணி சொல்லிட்டிருக்கிற விஷயம். அந்த சமயத்துக்கு எடிட்டர் டேபிள் மாதிரி குப்பையா இருந்திருக்கும்)

மந்திரத்தை ஒரு பிடி பிடிச்சேன். அப்பத்துல ஜோசியம் தான் முழு நேரத்தோழில். அதோட டைமிங் ரெம்ப குறைச்சல்.ஊர் ஊரா தேசாந்திரம் போயிட்டு வந்ததால க்ளையண்ட்ஸும் குறைச்சல். அதனால 1986 ல ராம நாமத்தை ஒரு பிடி பிடிச்சாப்ல மேற்படி மந்திரத்தை விடாம ஜெபிச்சிட்டிருந்தேன்.

எப்படியோ மந்திரம் வேலை செய்ய ஆரம்பிச்சுருச்சு. அம்மனுக்கு சம்பந்தப்பட்டு நம்ம லைஃப்ல நடந்த மேட்டர் எல்லாம் மாண்டேஜ் ஷாட்ஸ் கணக்கா மைண்ட்ல மின்ன ஆரம்பிச்சுது.

அந்த ஆளு ஏதும் சாங்கியம் சம்பிரதாயம்லாம் சொல்லலை. நானா சிலது ஏற்படுத்திக்கிட்டேன். சிலது காலப்போக்குல சேர்ந்துக்குச்சு. மந்திரம், மந்திரத்துக்குரிய மகராசி, எல்லா (ரு) மா சேர்ந்து என்னெல்லாம் நடத்தி வச்சாய்ங்கனு வரப்போற பதிவுகள்ள விவரிக்கிறேன். ஒரு ஆன்மீக பயணத்துக்கு தயாராயிருங்க. உடு ஜூட்

கடவுள் – ஒரு புதிய பார்வை


இறைவா !

நீ அழுத்தக்காரன் .
உன்னை நீ வெளிப்படுத்திக்கொள்வதே இல்லை

நான் நெஞ்சழுத்தக்காரன் .உன்னை நான் வெளிப்படுத்தாது விடுவதாயில்லை

நீ ராமனிலும் ராவணனிலும்

ஒரே நேரத்தில் செயல்பட்ட பொறி நீ

உன்னை பொறி வைத்து பிடிப்பதே எனது ஐம்பொறிகளுக்கு

நான் கொடுத்துள்ள செயல் திட்டம்

புராண புருடாக்களையும் மீறி படைப்பின் ஒரே புருஷன் நீ என்று உணர்கிறேன்

பௌராணிகர்கள் புராண புருஷன் என்றாலும்

ஜோதிடர்கள் கால புருஷன் என்றாலும்

நீ சிங்கிளாக இருக்கும் சிங்கம் என்று அவதானிக்கிறேன்
என் கள்ள புருஷனாய் எண்ணி தியானிக்கிறேன்.

ஒரே சத்தியத்தை வெவ்வேறானதாய்,புதிதே போல்

வெவ்வேறு ஆசாமிகளுக்கு வெளிப்படுத்திய உன் கற்பனை வளம் பேஷ் !

அதானால் ஆனது உலக அமைதி ஸ்மாஷ் !

“பிட்டா பிடி” என்று நீ அவ்வப்போது கொடுத்த சூசகங்களை

சூட்டிகை தனத்துடன் செட்டாக்கி படித்தவன் நான்

இறைவா ! எங்கும் உறைபவா !

உன் முக விலாசத்தை எம் அக விலாசத்தில் ஒளித்தவா !

ஓருயிராய் இறங்கி வந்து பல்லுயிராய் பிரிந்து எம்மில்

ஒளிர்ந்தவா !

நீ இவ்வுலகச்சிறையில் ஜெயிலராக இருக்கிறாய்

ஆயுள் தண்டனை கைதிகளுக்கு

ஆர்டர்லி பதவி கொடுத்து என் போன்ற

பிக்பாக்கெட்டுகளுக்கு டின் கட்ட வைக்கிறாய்

இது உனக்கு ஃபன் !
இதன் பின்னான காரணம் எங்கள் ஸின் !

நீ ஒரு நல்ல தகப்பனை போல் இருக்கிறாய்

கெட்ட குமாரர்கள் வீடு திரும்பும்போது விருந்து வைக்கிறாய்

உன்னை அண்டியே வாழ்ந்த எம்மை உண்டியில்லை உனக்கு

பட்டினியே மருந்து என்கிறாய்

நீ என் கப்பலின் தலைவன்

ஓட்டை வழியே கடல் நீர் குபு குபுக்கும்போது

கப்பலையே காலி செய்கிறாய்

நான் உன்னை மெட்ராஸ் பாஷையில் வைதாலும்

செவிடனாய் நடிக்கிறாய்

ஆம் நீ ஒரு செவிடன்

உனக்காக எத்தனை எத்தனை கச்சேரிகள்

நீ ஒரு ஊமை

உன் மவுன மொழிக்குத்தான் எத்தனை எத்தனை அகராதிகள்

நீ ஒரு அம்பயர்

விளையாட்டு வீரர்கள் உன்னை பணியும்போது

பாப்கார்ன் சாப்பிடுகிறாய்

அவர்கள் உன்னை புகழ்ந்து பாடும்போது

காது குடைகிறாய்

இவர்கள் எதையேனும் ஆட முற்படும்போது

ஆயிரம் கண்களுடன் பார்க்கிறாய்

இறைவா !

நீ ஒரு நல்ல செவிலித்தாய்

ஒவ்வொரு முறையும் நான் பிரச்சினைகளால்

பிரசவிக்கப்படும்போது

தலை கீழாய் தொங்க விட்டு

புட்டத்தில் அறைகிறாய்

இறைவா !

நான் அனுபவப்பள்ளிக்கு போக மறுத்து அடம் பிடிக்கும்போதெல்லாம்

என் சட்டைப்பையில் ஒரு ASA சாக்லெட்டை திணித்து ஆசை வாகனத்தில் ஏற்றுகிறாய்

மரணத்தின் நிழல் கூட மனிதர்களை விரட்டுவது போல்

உன் குறித்த கற்பனைகள் கூட சிதறிக்கிடக்கும் என் சிந்தனைகளை

திரட்டுகின்றன

நீ நழுவும் காலமானாய். ஒரு நாள் நானும் காலமாவேன்

என்று புரிவித்தாய்

காதலியர் விழி மொழியறியவே அகராதி தேடிய எனக்கு

உன் மொழியற்ற மொழியும் புரியும் நிலை தந்தாய்

என்னில் நிகழும் ரசவாதத்தை கணிணிக்கு ரைட் செய்யும்

கலை தந்தாய்

கனவாய் கலைந்தாலும் விடியல் கனவாய் நாள் முழுக்க இதம் தந்தாய்

உன் பாதம் பணிதலும்

உனை ஏற்றி புகழ்தலும் வெற்று என்று ஒற்றறிந்த பின்னும்

நன்றி என்ற வார்த்தையின் கனம் போதாதோ என்ற தலைகனத்தில் கர்த்தாவே

உன்னை கவிதையில் கனம் பண்ணுகிறேன்

நான் தட்டாமலே திறந்தாய்

நான் கேளாமலே தந்தாய்

அதற்கொரு நன்றியுரைக்கும் மடமையையும் தந்தாய்

நீ ஒரு ஆசிரியன் .

கடைசி வரிசைக்காரர்களை கண்டு கொள்வதே இல்லை

முன் வரிசையில் இருக்கும் என்னை முட்டிக்கு முட்டி தட்டுகிறாய்

நீ ஒரு பொற்கொல்லன்

தகரங்களை புறந்தள்ளி தங்கங்களைத்தான் சுடுகிறாய்

நீ ஒரு ரசவாதி இரும்புகளை தங்கமாக்குகிறாய்

தங்கங்களை தள்ளி வைத்து தகரங்களின் முன்
தலை சொறிந்து பல் இளிக்க வைக்கிறாய்

நீ ஒரு சதிகாரன்

உன்னை மறக்கடிக்கும் பலதையும் எமக்கு நினைவூட்டி

உன்னை நினைவுறுத்தும் சிலதையும் மறக்கும் அம்னீஷியாவுக்கு

அடிகோலுகிறாய்

நீ ஒரு நல்ல நடிகன்.

நயவஞ்சகர்களிடம் இளித்தவாயனாய் நடந்து கொள்கிறாய்

அவர்களை அழிவுப்பள்ளத்தாக்கை நோக்கி செலுத்துகிறாய்

நீ ஒரு சாமர்த்தியமான சலவை தொழிலாளி!
துவைத்த துணிகளை வெள்ளாவியில் வைத்து
சுடுகிறாய்

அழுக்கு துணிகளையோ வெள்ள நீரில் நனைக்கிறாய்

நீ ஒரு விவரமான சவரத்தொழிலாளி

ஒருவனுக்கு உபயோகித்த அனுபவ ப்ளேடை மற்றொருவனுக்கு

உபயோகிப்பதே இல்லை

நீ ஒரு நல்ல வங்கி காசாளன்

எம் கணக்கில் காசு இருந்தால் நீ கொடுக்காதிருப்பதில்லை

உனக்கு முகமன் கூறாவிட்டாலும்

நீ ஒரு நல்ல இயக்குனன்

கடந்த பிறவியில் பூத உடலிழந்து

ஆன்ம வடிவில் அழுது அரற்றி

நாங்கள் முக்தியே நோக்கமாய் எழுதிக்கொடுத்த

கதைக்கு தான் திரைக்கதை எழுதி இயக்குகிறாய்

இன்றோ புக்தியை நோக்கமாய் கொண்டு உன்னை

சகட்டு மேனிக்கு சவட்டுகிறோம்

நீ ஒரு நல்ல நீதிபதி

நீ வழங்கும் பிறருக்கான தீர்ப்புகள்

பத்தாம் வாய்ப்பாடு தனமாய் புரிந்து விடுகின்றன

நீ மோசமான நீதிபதி (?)

எனக்கான உனது தீர்ப்புகள் மட்டும் புரிவதே இல்லை

அல்ஜீப்ரா கணக்காய்