யு.பி.ஏ கோவிந்தா: விரைவில் இடைத்தேர்தல்

அண்ணே வணக்கம்ணே !

ஜோதிஷம் பிறந்ததே இந்தியாவுல. ஆனால் நம்மாளுங்க சுதந்திரம் வாங்கின லக்னம் இருக்கே..கொய்யால 45 வருஷம் இருட்டில தவிக்க வைக்கிற லக்னம் . ஓஞ்சு போவட்டும். கதம் கதம்.

எதிர்காலம் எப்டி இருக்கும்னு பார்ப்போம். நாளைக்கு ( செப்,27,2011) சூரிய தசையில ராகு புக்தி முடியுது. 2012 ஜூலை 12 வரைக்கும் சூரிய தசையில குரு புக்தி நடக்க போவுது.Read More

பாபாவை போட்டு தள்ள காங்கிரஸ் சதி !

பாபாவை போட்டு தள்ள காங்கிரஸ் சதி திட்டம் தீட்டியிருக்கு. அதுக்கான முன்னோட்டம் தான் பாபா உசுருக்கு ஆபத்து. அதனாலதான் உண்ணாவிரத பந்தலை தூக்கினோம்னு பீலா விட்டது. பாபா பின்னாடி பா.ஜ.க இருக்குங்கறது உலகறிந்த ரகசியம் . இப்பம் பூனைக்குட்டியும் வெளியவந்துருச்சு. அதுவேற மேட்டர்.

இது பரபரப்புக்காக போடும் வெத்து குண்டு இல்லிங்ணா. சோசிய கணிப்பு இல்லவே இல்லிங்ணா. ஆனால் பட்சி சொல்லுது. (சாதக பட்சி இல்லிங்ணா சகோர பட்சி ). எதை வச்சு சொல்றிங்கனு கேப்பிக சொல்றேன். தொடர்ந்து படிக்க

செப், 27 க்குள் ஒரு திகீர் நிகழ்வு !

செப், 27 க்குள் ஒரு திகீர் நிகழ்வா? அது என்னப்பான்னு கேப்பிங்க! சொல்றேன். ஜோதிட ரீதியிலான காரண காரியங்களை எதிர்பார்க்கிறவுக இங்கே அழுத்தி ரத்த அழுத்தத்தை கொஞ்சம் ஏத்திக்கங்க.

இப்ப ப்ராக்டிக்கல் மேட்டருக்கு வரேன். நான் சொல்லப்போற மேட்டரோட சாரம் மத்திய அரசு கவிழ்தல் – சந்தடி சாக்குல பாக்,சீன நேரடி தாக்குதல் அ தாஜ் ஹோட்டல் பாணியில உள்ளடி – மக்கள் அல்லாட்டம்.இதுக்கான கிரவுண்ட் இப்பமே ரெடியாயிட்டிருக்கிறதை கோடி காட்ட விரும்பறேன். Read More

லஞ்சம் வாங்கினா காயடிச்சுரனும்

அண்ணே வணக்கணே,
லஞ்சம் வாங்கினா காயடிச்சுரனும்னு நான் சொல்ல என்ன காரணம்னு தெரிஞ்சுக்கறதுக்கு முந்தி கட்ட கடைசில அன்னா ஹசாரே பத்தின டிட் பிட்ஸும் தந்திருக்கேன். பொறுப்புள்ள குடிமகன்கள் கண்ட்ரோல் எண்ட் கொடுத்து படிச்சுருங்க.

இன்னைக்கு இன்னொரு விசேஷம் T.A.கந்தன் சுக்லமும் மோக்ஷமும்னு ஒரு பதிவு போட்டிருக்காரு. அதை படிக்க இங்கே அழுத்துங்க. என்ன.. காயடிக்க போயிரலாமா அடச்சே ஏன் காயடிக்கனு தெரிஞ்சிக்க போவலாமா?

நானும் மனிதம் பேசுறவன் தான். ஹ்யுமேனிஸ்டுனு பெருமையா சொல்லிக்கிறவந்தான். மனித உரிமைன்னு மன்னாடறவன் தான்.ஆனாலும் லஞ்சம் வாங்கினா காயடிக்கனும்னு சொல்றேன்னா இதுக்கு பின்னால ஒரு வலுவான காரணம் இருக்கு.

மொதல்ல காயடிக்கிறதுன்னா என்ன அர்த்தம்னு தெரியாதவுகளுக்கு ஒரு வரி. விதைகளை நீக்கிர்ரது. அப்பால மேற்படி சிறப்பு அங்கத்தை வெறுமனே அல்ப்ப சங்கியைக்கு தான் உபயோகிக்கமுடியும்.

லஞ்சத்துக்கும் அதுக்கும் என்ன லிங்க்? லஞ்சம் வாங்கறவன்லாம் எதுக்கு வாங்கறான்னு ரோசிச்சுபார்த்திங்களா? நான் இட்டுக்கட்டி சொல்றதெல்லாம் ஒன்னுமில்லை. பக்கா சைக்காலஜிய சொல்றேன்.

மன்சனா பொறந்தவன்லாம் எந்த காரியத்தை செய்தாலும் அதும்பின்னாடி இருக்கிற துடிப்புகள் ரெண்டுதேன். ஒன்னு கொல்லும் துடிப்பு ரெண்டு கொல்லப்படும் துடிப்பு. இது ரெண்டுமே செக்ஸ்ல நிறைவேறிர்ரதாலதான் “கில்மா”ன்னா அல்லாருக்குமே ஒரு இது.

நம்ம நாட்ல தாளி அவனவன் 12 அ 13 வயசுல இருந்து அதுக்காக தவிச்சு தவிச்சு 30 முடிஞ்சாத்தேன் கண்ணாலத்துக்கே குவாலிஃபிகேஷன் வருது. அதுக்குள்ளாற இழந்த சக்தி வைத்தியரு கிட்டே போகற தகுதி வந்துருது..

ஒரு இயலாமை, சீக்கிரமே முடிஞ்சு போறது , காரியத்துல இறங்கறதுக்கு மிந்தியே தளர்ச்சி,ஆயாசம், இடையில காத்து போயிர்ரதுன்னு இவன் அல்லாடற நேரம் பார்த்து கண்ணாலம் நடக்குது. நம்மாளா ஆடி முடிச்சவன்,

எக்ஸ் பார்ட்டி ட்ரிபிள் எக்ஸ் பார்ட்டியா இருந்து அங்கே இங்கே விழுந்து எழுந்து வந்திருந்தா ..சரி விடு ” எல்லாம் பார்த்தாச்சு ” இனி பார்த்தா என்ன பார்க்காட்டா என்ன “இல்லத்தரசி”ங்கற சோஷியல் ஸ்டேட்டஸ் கிடைச்சதே போதும்னு இருந்துருவாய்ங்க. ஒரு வேளை வீட்டம்மா குஷ்பு சொன்ன கற்பு கணக்குல அடங்காத பார்ட்டியா இருந்தா பாவம் .. செமை கடுப்பாயிருவாய்ங்க.

உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் உணர்வுகள் வன்முறையா,சேடிசமா மாறுது. புருசங்காரனை அட்டிகை கொண்டா, ஒட்டியானம் கொண்டா அதை கொண்டா இதை கொண்டானு இமிசை பண்ண ஆரம்பிச்சுருவாய்ங்க.

இந்த பிக்காலியும் நம்மால “அதான்” முடியலை இதையாவது செய்துருவம்னு “கைய நீட்ட” ஆரம்பிச்சுர்ரான்.

இவன் ஏறக்குறைய தீர்ந்து போன பேட்டரி. குடும்ப விளக்குக்கு பவர் ஏத்த அவ ஓடிப்போயிராம இருக்க ஊருக்குள்ள மாஃப் காட்ட பணத்தை அள்ளிவிடறான். எப்படி? லஞ்சம் வாங்க ஆரம்பிச்சுர்ரான்.

இவனோட ஆண்மை குறைவு வெளிய தெரிஞ்சுரக்கூடாதுன்னு தானே லஞ்சம் வாங்கறான். தாளி லஞ்சம் வாங்கி மாட்டினா காயடிச்சுருவாய்ங்கனு தெரிஞ்சா வாங்குவானா?

என்னைக்கோ ஓடிப்போவான்னு பயந்த பொஞ்சாதி காயடிச்ச மறு நாளே கழண்டுக்குவான்னு பயப்படுவான்.

என்னை கேட்டா கொல்லுதல் -கொல்லப்படுதல் என்ற ரெண்டு அடிப்படை கோரிக்கையும் உடனடி லாட்டரி தனமா நிறைவேத்தற ஆபத்தற்ற,ஐபிசி படி குற்றம்னு தீர்மானிக்க முடியாத ஒரே செயல் செக்ஸ். அது கிடைக்காத குறைக்குத்தேன் மன்சன் வன்முறை – பணம் -லஞ்சம் -பதவி-பவிசுன்னு அல்லாடறான். .பாலியல் தொழிலுக்கு மட்டும் சட்ட அங்கீகாரம் வழங்கட்டும். அப்பாறம் லஞ்சமும் இருக்காது லாவண்யமும் இருக்காது.

என்னை கேட்டா மன்சன் நெஜமாலுமே மன ரீதியா வளரனும்னா – அவன்ல தேடல் ஆரம்பிக்கனும்னா அவன் செக்ஸை தாண்டித்தான் ஆகனும். செக்ஸை எட்டிப்பிடிக்கவே நடுவயதாயிட்டா அதை தாண்டி வர்ரது எப்ப?

அன்னா ஹசாரே டிட் பிட்ஸ்:

1. ஏழாம் கிளாஸ் டிஸ்கன்டின்யூ
2.ராணுவத்துல ட்ரக் ட்ரைவரா வேலை
3.ஒரு தாட்டி ட்ரக் மேல பாக் விமானம் குண்டு வீச கூட வந்தவுகல்லாம் அவுட். அன்னா ஹசாரே மட்டும் எஸ்கேப்
4.இன்னொரு தாட்டி கூடாரத்து மேல நாகா தீவிரவாதிகள் அட்டாக் பண்ண உச்சா போக வெளிய போயிருந்ததால ஹசாரே எஸ்கேப். கூடாரத்துல தங்கியிருந்தவுகல்லாம் பிணமாயிட்டாய்ங்க
5.ஒரு கட்டத்துல வாழ்க்கைய வெறுத்து தற்கொலை எண்ணத்துல உண்ணாவிரதமெல்லாம் இருந்திருக்காரு.
6.கட்டை பிரம்மசாரி

.

அசத்தல் அமீர்கானும் சவ சவ ரஜினிகாந்தும்

அண்ணே வணக்கம்ணே,
லஞ்ச ஊழலுக்கு எதிரா பெரியவரு அன்னாஹசாரே சாகும் வரை உண்ணாவிரதம் ஆரம்பிச்சிருக்கிற மேட்டர் தெரியும்னு நினைக்கிறேன்.

பெரியவரோட போராட்டத்துக்கு அமீர்கான் ஆதரவு தெரிவிச்சிருக்காரு.ஆனால் நம்ம ரஜினி சார் அடக்கி வாசிக்கிறாரு.

ஏன்? இதுக்கு அவரோட ஜாதகம் எநத அளவுக்கு காரணம்னு ஆருனா சொல்லமுடியுமா? சொம்மா சின்ன டெஸ்டுதேன்.

இந்த மேட்டர்ல கவிதை07 ப்ளாக்ல ஒரு பதிவு போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க

விரைவில் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும் !

அண்ணே வணக்கம்ணே,
2011 ஏப்.15 முதல் செப்.27 க்குள் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்ங்கற திகீர் கணிப்பை தரத்தான் இந்த பதிவை போடறேன்.

என்னடா இது நம்ம ஆற்காட்டார் ஸ்டேட்ல தானே மினிஸ்டர். நம்மாளு சென்ட்ரல்ல மின்சாரத்துறை மந்திரியாயிருவாரோன்னு பய்ப்படாதிங்க.

இந்த நகரங்கள் இருட்ல மூழ்கற மேட்டர்ல ஏன் எதுக்கு எப்படினு நான் பண்ணப்போற ஆராய்ச்சில உங்கள்ள பாதி பேர் சோசியர்களாகவே மாறிடப்போறிங்க. விஷ் யு ஆல் தி பெஸ்ட்.

நேற்றைய சந்திராஷ்டமம் பற்றிய பதிவை 945 பேர் படிச்சிருக்கிங்க. நன்றி. ஜோதிஷ சாஸ்திரத்துல சந்திராஷ்டமம்லாம் ஜுஜுபி. பலான பலான மேட்டர் எல்லாம் எடுத்து விட்டா கஸ்டடில எடுத்து விஜாரிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க.

நமக்கு புகைப்பழக்கம் வேற இருக்கா..தூக்கி உள்ளாற வச்சுட்டு கை.எ போட்டா தான் சிகரட்டுன்னா படக்குனு கை.எ போட்டுத்தொலைச்சுருவமோன்னு தான் அடக்கி வாசிக்கிறேன். ஆனாலும் அதுக்காக நம்ம மம்மிய ஐ மீன் பாரத மாதாவை டீல்ல விட்டுர முடியாதே.

அதனாலதான் இந்த திகீர் பதிவு. தூக்கி உள்ள போட்டுட்டா ஏட்டுக்கு கையூட்டு கொடுத்து ஒரு கட்டு பூபால் பீடி மட்டும் அனுப்பி வச்சுட்டா போதும். (எத்தீனி பேரு ரெடி ..கைய தூக்குங்குண்ணா)

நம்ம இந்திய திரு நாட்டோட ஜாதகம் “அவாளால” எப்படியா கொத்த கேடுகெட்ட ஜாதகமா அமைஞ்சுருச்சுன்னு ஏற்கெனவே விலாவாரியா சொல்லியிருக்கேன்.

சுதந்திர இந்தியாவின் ஜாதகம் :

லக்னம் ரிஷபம். 1-7 ல ராகு கேது , ரெண்டுல செவ்( ராணுவ செலவு கழுத்தை நெறிக்க இதுவும் ஒரு காரணம்) 3ஆம் பாவத்துல சுக்கிரன் சூரியன் , சனி ,புதன்,சந்திரன், 6ல குரு,

மேற்படி பதிவை போட 3 காரணங்கள் இருக்கு.

1.ஜாதகத்துலயே 1-7 ல ராகு கேது:
ராகு நின்ற இடத்ததிபதியான சுக்கிரன் சூரியனோட சேர்ந்து மொக்கை. சூரியன் சனியோட சேர்ந்து மொக்கை.

கேது நின்ற இடத்ததிபதி செவ் இவரு ரெண்டுல உட்கார்ந்து எட்டை பார்க்கிறாரு. ( செவ்வாய் மீன்ஸ் யுத்தம் -மின்சாரம்) எட்டு மீன்ஸ்: ஆப்பு.

2. இப்ப நடப்பு சூரியதசை ராகு புக்தி:
இது 03/Nov/2010 ஆம் தேதி ஆரம்பம். இதுவரைக்கும் ஏன் இந்திய நகரங்கள் இருட்ல மூழ்கலைனு கேப்பிக சொல்றேன்.

பாய்ண்ட் நெம்பர் ஒன் , ராகு புக்தியோட செகண்ட் ஹாஃப் தான் ஆக்டிவா ஒர்க் ஆகும். இதனோட மொத்த டென்யூர் 10 மாசம் 24 நாள். ஆக இதனோட செகண்ட் ஹாஃப் 2011 ஏப்ரல் 15 ஆம் தேதிதான் ஆரம்பமாகுது.

3.மே 16 முதல் 1-7 ல் கேது ராகு: (கோசாரம்)

இது ஏறக்குறைய சுதந்திர இந்தியாவின் ஜாதகத்துல உள்ள அதே கிரக நிலை. ஜாதகத்துல 1 ல ராகு ஏழுல கேது. இப்ப கோசாரத்துல 1 ல கேது 7ல ராகு.

ஆக மொத்தத்துல 2011 ஏப்.15 முதல் செப்.27 க்குள் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்க வாய்ப்பிருக்கு. இருட்டுக்கும் ராகு கேதுக்கும் என்னா லிங்குன்னு கேட்டா நீங்க இந்த பேட்டைக்கு புதுசுன்னு அர்த்தம். ரெண்டு பேருமே கிரகங்கள் கிடையாது. ஜஸ்ட் நிழல்கள். வேணம்னா நிழல் கிரகம்னு சொல்லிக்கலாம்.

இருட்டுன்னா வெறும் இருட்டுத்தானானு சொல்லிரமுடியாது.ராகு கேதுக்கள்னா ஆன்டி சோஷியல் எலிமென்ட்ஸ். ஆன்டி கவன்மென்டல் எலிமென்ட்ஸ். மொத்தத்துல அரசாங்கத்துக்கு எதிரானவுக. மாஃபியா-தீவிரவாதிகள் -முகமூடி கொள்ளையர்கள் -கடத்தல்காரர்கள் இப்படி சொல்லலாம். எஸ்பெஷலி கேதுன்னா சன்னியாசிகளை காட்டும்.

மேற்படி சமயத்துல அரசாங்கம் தன் பிடியை நழுவ விட்டுட்டு கைய பிசைய வேண்டி வந்துரலாம். மேற்படி ஆன்டி சோஷியல் எலிமென்ட்சோட கை ஓங்கிரலாம். அவிக ஆணையிட அரசாங்கம் செயல்பட வேண்டி வரலாம்.

இருட்டுங்கறது துக்கத்தோட ஐடென்டிட்டி. ஸோ நாடே துக்கத்துல மூழ்கலாம். இன்னாபா நீ இபி காரவுக பவர் கட்டுங்கற மாதிரி இஷ்டாத்துக்கு சொல்ட்டு பூட்டா எப்டி எந்த ஏரியா எத்தீனி நாளுனு சொல்லலாமில்லையானு கேப்பிக சொல்றேன்.

பிரச்சினைங்கறது ரிஷபம் + விருச்சிகத்துலதான். ரிஷபம் தெற்கு திசையையும்,விருச்சிகம் வடக்கு திசையையும் காட்டும்.

ராகு கேதுக்களுக்கு ஒரிஜினால்லிட்டி கிடையாதுங்கறதால தாங்கள் நின்ற ராசியாதிபதியின் காரகத்தை பெற்று செயல்படுவாய்ங்க.

ரிஷபத்துக்கு அதிபதி சுக்கிரன் .இவருக்குரிய திசை தென் கிழக்கு
விருச்சிக்கத்துக்கு அதிபதி செவ் இவருக்குரிய திசை தெற்கு

திசைய சொல்ட்டா எந்த நாளுன்னு கேப்பிக .சொல்றேன் ராகு,கேது,சுக்கிரன் அ செவ்வாய்க்குரிய நட்சத்திரங்களில் நடக்கலாம். தேதியோட டோட்டல் 4,7,6,அல்லது 9 வரலாம்.

எங்க பாஸ் கிளம்பிட்டிங்க? கேண்டில் வாங்கவா.. ஓகே உடு ஜூட்

பி.கு:

இதே சூரிய தசையில 27/Sep/2011 =>முதல் 15/Jul/2012 வரையிலான குரு புக்தி டாப்ல கொண்டு போகும். அரசாங்கம் தன் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்று நல்லாட்சி வழங்கும்.

2011, மே 8 க்கு மேல் மத்திய அரசு கவிழும்?

மொதல்ல இந்த பதிவுக்கு இந்தியாவின் ஜாதகம் ஊழல்வாதிகளுக்கே சாதகம்னுதான் தலைப்பு வச்சேன். அப்பாறம் ஆதித்தனார் எழுத்தாளர் கையேடு மாதிரி கடைசில உள்ளதை தூக்கி டாப்ல கொண்டு வந்தேன்.

நான் வைக்க நினைச்ச தலைப்பு 100% கரீட். இந்தியாவின் ஜாதகம் ஊழல்வாதிகளுக்கே சாதகமா இருக்கு. இதுக்கும் அவாளோட சதிதான் காரணம். விஐபிங்களுக்கு சின்ன வீட்டை கர்பப்படுத்தறதுக்கு கூட பக்காவா டைம் வச்சு கொடுக்கிற அவாள் நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்க குறிச்சுக்கொடுத்த டைம் இருக்கே . வயிறு எரியுதுங்க.

லக்னம் ரிஷபம்:
ரிஷப லக்னம் ராசி சக்கரத்துல ரெண்டாவது ராசி. இதனோட குணம் என்னன்னா சுருக்கமா சொன்னா செக்கு மாடு. நம்ம தலைவருங்க நாட்டை முன்னேற்ற பாதையில கொண்டு போகாம இருக்க காரணம் இதான். நம்ம நாடு செக்கு மாடாட்டம் ஒரே வட்டத்துக்குள்ள சுத்தி சுத்தி வரவும் , அசலான பிரச்சினையை விட்டுட்டு ஜல்லியடிக்கவும் இதான் காரணம். மேலும் தங்களோட செல்வம்,செல்வாக்கு,சொல்வாக்கு,
பணம், குடும்பம்னு அவிக இருக்கவும் இதான் காரணம்.நம்ம தலைவருங்க உசரு போற நேரத்துல கூட “விகட வினோத பரிகாச பிரசங்க பிரியர்களா” இருக்க காரணம் இதான்.

இது ஸ்திர ராசி. தாளி இஞ்சி முரபா விக்கறதுக்கு கூட சரலக்னமா பார்த்து வையின்னு ஜோதிஷம் சொல்லுது. ஆனால் இவ்ளோ பெரிய எஸ்டாப்ளிஷ்மெண்டுக்கு ஸ்திர லக்னத்தை வச்சிருக்கானுவ.

ராசிய பாருங்ககடகம். இதனோட அதிபதி யாரு சந்திரன். இவரு ரெண்டே கால் நாளைக்கொருதரம் ராசி மாறுவாரு. 24 மணி நேரத்துக்கொருதரம் நட்சத்திரம் மாறுவாரு. 6 மணிக்கொருதரம் பாதம் மாறுவாரு. 15 நாள் வளர்பிறை, 15 நாள் தேய் பிறை. இந்த ராசிக்காரவுகளுக்குனு ஒரு “சுயம்” இருக்காது. எடுப்பார் கைப்பிள்ளைகள்னா அது இந்த ராசிக்கரவுகதான்.

ரஷ்யா இருந்தவரை அவிக அழிச்சாட்டியத்துக்கெல்லாம் சால்ரா போட்டுக்கிட்டிருந்தம். இப்ப அமெரிக்கா.
சரி இதுவாச்சும் ஒழிஞ்சு போவட்டும்னு விட்டுரலாம். சனத்தொகை படபடனு எகிறுது (ரிசபத்துக்கு அதிபதி சுக்கிரன் – கில்மாவுக்கு இவர் தான் அதிபதி) உலகம் போற போக்குல இன்னைக்கும் ஒரு சமயம் இல்லாட்டியும் ஒரு சமயம் சென்டிமென்ட் பார்க்கிற சனம் இந்தியாவுலதான் இருக்காய்ங்கனு ஆறுதல் பட்டுக்கலாம்.

லக்னத்தை பாருங்க ராகு -ஏழைப்பாருங்க கேது. ராகு கேதுக்களிடையில எல்லா கிரகமும் சிக்கி பிதுங்கிக்கிட்டிருக்கு. இதனோட பலன் என்னடான்னா 45 வருசம் வரை சொல்லிக்கிறா மாதிரி டெவலப் மென்டே இருக்காது. மேலும் ஊழல்வாதிகள் + சாமியார்களிடையில நாடாள்வோரும், நாடும், நாட்டு மக்களும் சிக்கி சீரழியனும்.( ஞா இருக்கா திரேந்திர பிரம்மச்சாரி, சந்திராசாமி)

ஜோசியத்துல ஏபிசிடி தெரிஞ்சவன் கூட இந்த மாதிரி ஒரு நேரத்தை ரெக்கமெண்ட் பண்ணமாட்டான். நேரு மாமாவுக்கு நாள் குறிச்சு கொடுத்த பன்னாடை பரதேசி ஆருனு விசாரிக்கனும்ணே.

சரி லக்னமும் – (சொந்த பலம்) ஏழாமிடமும் ( நட்பு நாடுகள்) தான் நாறிப்போச்சு . ரஷ்யா சிதறிப்போகவும் அமெரிக்கா இப்படி அல்லாடவும் நம்ம சங்காத்தமும் ஒரு காரணமுங்கோ.

லக்ன,சப்தமாதிபதிகளாவது பலம் பெற்று உருப்பட வைக்கிற நிலைல இருக்காய்ங்களானு பார்த்தா லக்னாதிபதியான சுக்கிரன் ஆறாமிடத்து( சத்ரு ரோகம் ருணம்) ஆதிபத்யமும் பெற்று 3 ஆவது பாவத்துல உட்கார்ந்தாரு.ஆறுன்னா கடன் ..தீராக்கடன். எதிரி (பாக்,சீனா, அட நாம சுதந்திரம் வாங்கிக்கொடுத்த வங்காளம் கூட தாலியறுக்குதே)

3ங்கறது அல்லல் அலைச்சலை காட்டற இடம். (இங்கன சுக்கிரன் நின்னதாலதான் நாடு பத்தி எரியறச்ச கூட மன்மோகன் மாதிரி ரப்பர் ஸ்டாம்ப் பிரதமர் லக்சரியா உலகம் சுத்தபோறாருபோல) இங்கன லக்னாதிபதி நின்னா என்னாகும்? மேலும் அது சுக்கிரங்கறதால சாப்பிடற சோறு, கட்டற துணி,இருக்கிற ஊட்டுக்கும் கூட சனம் அல்லாடவேண்டியதுதேன்.

காலம் காலமா நிலை கொண்ட ஏழ்மை, உணவு தானிய பற்றாக்குறைக்கும், சமீப காலமா பெருகி வரும் ஆண்மையின்மை,செக்ஸ் குற்றங்கள்,பெண்கள் மீதான வன்கொடுமை ,பெண் சிசுக்கொலை இத்யாதிக்கும் இதான் காரணம்.

லக்னாதிபதியான சுக்கிரனோட ஆரெல்லாம் சேர்ந்தாய்ங்கனு பாருங்க. கண்ல ரத்தம் வரும்:

சந்திரன்:
நம்ம நாடு சுதந்திரம் வந்து 63 வருஷம் முடிஞ்சும் அன்னாடங்காய்ச்சியாவே இருக்கவும் எழுவதும்,விழுவதுமா இருக்கவும் இந்த கிரகசேர்க்கை தான் காரணம். ஆறுதல் என்னன்னா ஒரு 15 வருஷம் ஸ்டெபிலிட்டி, நல்ல வளர்ச்சி இருக்கும், அடுத்த 15 வருஷம் இன்ஸ்டெபிலிட்டி, தேக்கம் இருக்கும்.நம்ம தலைவர்கள் மூட நம்பிக்கைகள் நிறைந்தவர்களாக இருக்கவும் இதான் காரணம். கடல் வழியா வந்து மும்பை தாஜ் ஹோட்டலை தாக்கற அளவுக்கு கொண்டு போனது இந்த கிரக நிலைதான்.

சூரியன்:
இவர் வீர , தீரத்தை தந்தாலும் இவர் நான்காமிடத்துக்கு அதிபதியாக உள்ளதால நம்ம தலைவருங்க நாட்டை பார்த்துக்கறதை விட தங்களோட வீட்டைத்தான் பார்க்கிறாய்ங்க. (4- வீடு) லக்சரியா பயணம் போகவும், ஏற்கெனவே பளபளக்கும் தங்கள் வீட்டை அரசு நிதி கொண்டு “மராமத்து”பண்ணிக்கிறதுலயும் , விமானபயணங்கள், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் வாகன வசதிகளை ஏற்படுத்திக்கிறதுலயும் கான்சன்ட்ரேட் பண்ணிக்கிட்டு கடமைய கோட்டை விட்டுர்ராய்ங்க. நம்ம நாடு வீரத்தை காட்டினா ஏழை இந்தியனோட ஓட்டைக்கூரையும் பொத்தலாயிருமுங்கோ. அரைப்பட்டினி முழுப்பட்டினி ஆயிரும்.

புதன்:
இவர் 2/5க்கு அதிபதி 3ல் மாட்டினாரு. ரெண்டுன்னா ரெவின்யூ இன் கம், அஞ்சுன்னா இன்டலக்சுவல் ப்ராப்பர்ட்டி. 3ன்னா பயணம் போறது. பாருங்க நம்ம காசு பணம்லாம் பயணம் போயிருச்சு. நம்ம இன்டலக்சுவல் ப்ராப்பர்ட்டியெல்லாம் கடல் கடந்து போயி அவிகளுக்கு பொருளீட்டி கொடுக்குது.
புதன்னா கல்வி,மருத்துவம், தொலைதொடர்பு (இதையும் விளக்கனுமா என்ன?)

அடுத்து ரெண்டாவது இடத்தை பாருங்க சப்தமாதிபதி ( நட்பு நாடுகள்) விரயாதிபத்யம் பெற்று ( வேறென்ன ஆப்புதேன்) இங்கு உட்கார்ந்தாரு. அதுவும் ஆரு? செவ்வாய். பாக்கிஸ்தான் பங்காளி நாடு (செவ் -சகோதரகாரகன்) ஆப்பு வைக்கவும் சீனாக்காரன் “இந்தோ சீனா பாய் பாய்னிக்கிட்டேதானே ஆப்பு வச்சதுக்கும் இதான் காரணம்.

உள்ளார்ந்த ஒற்றுமை குலையவும், ஒரு மொழி காரன் இன்னொரு மொழிகாரனோட – இந்த ஸ்டேட்டு
அடுத்த ஸ்டேட்டோட வெட்டி மடிய இதான் காரணம்.

இன்னம் இங்கன ஆரிருக்கானு பார்த்தா சனி. ரிஷபலக்னத்துக்கு யோககாரகனான சனி மாரகஸ்தானங்கற 3ஆவது இடத்துல மாட்டினாரு.இத்தீனி ஓட்டையிருந்தும் இந்தியா சிதறாம இருக்க காரணம் என்னனு கேப்பிக சொல்றேன்.

அஷ்டமாதிபதியான குரு சத்ரு ரோகஸ்தானத்துல உட்கார்ந்தாரு. இவர் மட்டும் இங்கே இல்லேன்னா துண்டு துண்டா பீஸ் பீஸா சிதறிப்போயிருக்கும்.

நம்ம நாட்டை இன்னைக்கு ஒரு விதேசி ஆளவு 1-7ல இருக்கிற ராகு கேது தான் காரணம்.அதுவும் ராகுன்னா விடோயருனு அர்த்தம்.

நம்ம நாட்டை அதிக காலம் ஆண்டவுக எல்லாம் ஒன்னு வெஸ்டர்ன் ஸ்டைல் (நேரு,ராஜீவ்), அல்லது விடோயர்ஸ்/ பேச்சிலர் தான் .இதுக்கு காரணம் கூட 1-7ல இருக்கிற ராகு கேது தான்.

ஆன கண்ணாலத்துக்கு ஆர்கெஸ்ட்ரா எதுக்கு? எதிர்காலம் எப்படி இருக்கும்னு கேப்பிக. சொல்றேன்.

இப்ப 03/Nov/2010 => முதல் 27/Sep/2011 வரை சூரிய தசை ராகு புக்தி நடக்குது. ஆட்சியாளர்களுக்கு கெண்டம்தேன். அரசாங்கம்னு ஒன்னிருக்கானு நினைக்கிறாப்ல ஊழல்வாதிகளும், விதேசிகளும் தூள் கிளப்புவாய்ங்க.

அடுத்து வரப்போற குரு புக்திதான் ஒரு நல்ல அரசை அமைக்கனும். அது 27/Sep/2011 => முதல் 15/Jul/2012 வரைதான் நடக்கும். அப்பாறம் மறுபடி சனிபுக்தி மாட்டிக்குது. அரசு திண்டாட வேண்டியதுதான். இந்த சந்தடில தலித் அமைப்புகள், தொழிலாளர் யூனியன்கள், கம்யூனிஸ்டுகளோட பிராபல்யம் அதிகமாகலாம்.

சூரியதசை முழுக்க (09/Sep/2009 முதல் 09/Sep/2015 )அல்லாட்டமாதான் இருக்கும் அடுத்து வர்ர சந்திர தசையும் (09/Sep/2015 முதல் 08/Sep/2025) ஒன்னும் கழட்டற மாதிரி தோனலை.

2011, மே 8 ஆம் தேதி ராசிக்கு பத்துல குரு வர்ராரு. இப்ப ஆள்றவுகளுக்கு பதவி பறிபோகலாம்.

எச்சரிக்கை:
ஆமாம் முருகேசன் பரிகாரம் அதுஇதுன்னு அவுத்துவிடறிங்களே நம்ம நாட்டை காப்பாத்த எதுனா பரிகாரம் வச்சிருக்கிங்களானு கேப்பிக. சொல்றேன்.அடுத்த பதிவுல.