மன்மத பீடாதிபதியின் மாயாஜாலம்

seminar 4அண்ணே வணக்கம்ணே !
சமீபத்துல வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர் சங்கம் நடத்திய கருத்தரங்கத்துல நாம ஸ்பீச் கொடுத்தம். அதை அப்படி ஆடியோ வீடியோ ரிக்கார்ட் பண்ணிரம்னு தான் ப்ளான். லேப் டாப்ல வெப் காம் மூலம் வீடியோ -சவுண்ட் ரிக்கார்டர் மூலம் ஆடியோ ரிக்கார்ட் பண்ணலாம்னு தேன் ட்ரை பண்ணோம்.ஆடியோ பல்பு வாங்கிருச்சு.
(ரெண்டையும் ஒன்னா பண்ண வேண்டியதுதானேனு கேப்பிக. வீடியோவும் ஆடியோவும் கலைஞர்-ஜெ மாதிரி கோ இன்சைட் ஆகாது அதனாலதேன்)
வீடியோ மட்டும் என்ன வாழுது.மெகா ஃபைலா ஸ்டோர் ஆய்ருச்சு. ப்ளே ஆக ஆரம்பிக்கவே அரை மணி நேரம். மேலும் ஏதோ கரப்ட் வேற ஆயிட்டாப்ல இருக்கு.
செமினாருக்கு மிந்தி  நெட் ப்ராக்டிஸ் கணக்கா ச்சொம்மா பேசி பார்த்தம்ல அந்த ஆடியோ கிடைச்சது. அதை தான் இப்ப கேட்க போறிங்க.
ஆடியோ ஸ்டோர் ஆன பக்கத்துக்கு போக இங்கே அழுத்துங்க.

யாருக்கு யார் கையால சாவு?

அண்ணே வணக்கம்ணே !
லக்னத்துலருந்து எட்டாவது ராசிக்கு ஆரு அதிபதியோ அவரை அஷ்டமாதிபதிங்கறோம். அவரு எங்கன நின்னாரு,ஆரோட சேர்ந்தாரு,லக்னாத் சுபரா அசுபரா , நைசர்கிக சுபரா பாபரா ,அஷ்டமஸ்தானம் ஸ்திர ராசியா,சர ராசியா, ஆயுள் காரகரான சனி என்ன ஆனாரு, செவ்,சர்ப்ப தோஷங்கள் எதுனா இருக்கா? முக்கியமா லக்னாதிபதி மினிமம் கியாரண்டின்னா தராரா இல்லையா? லக்னாதிபதிக்கும் -அஷ்டமாதிபதிக்கும் உள்ள டிஸ்டன்ஸ் என்னங்கற விலாவரியெல்லாம் பார்த்து ஆருக்கு ஆர் கையால எப்பம் எங்கன சாவுன்னு சொல்லிரலாமுங்கோ.

( ஆனா நாம இந்த மேட்டரை டச் பண்றதில்லிங்கோ-இது ஆத்தா டிப்பார்ட்மென்ட் -அவள் நினைச்சா சந்திராஷ்டமத்துலயே அடிச்சு தூக்கிருவா -இல்லின்னா அஷ்டம சனியில கூட சேவ் பண்ணிருவா)

ஆக இந்த பதிவுல அந்தளவுக்கெல்லாம் டீப்பா போறதாயில்லை. அஷ்டமாதிபதி எங்கன நிக்கிறாரோ அதை வச்சு மட்டும் பலன் சொல்லப்போறோம்.அதனால இந்த பலன் எல்லாம் ஆலமரத்தடி பஞ்சாயத்து தீர்ப்பு மாதிரி. எவன் வேணம்னா “நாட்டாமை ..தீர்ப்பை மாத்து”ங்கலாம். டேக் கேர் !

மேலும் மரணம்ங்கற பல வகையில நடக்கலாம்னு ஏற்கெனவே ஒரு தாட்டி சொன்னாப்ல ஞா. மனதளவில் மரிக்கலாம், பொருளாதார ரீதியில் சாகலாம், சமூக அளவில் சாகலாம்,அரசியல் அளவில் சாகலாம். அல்லது தலைமறைவாகிவிடலாம். இதெல்லாம் மரணத்துக்கு இயற்கை கொடுக்கிற சாய்ஸ்.

அஷ்டமாதிபதி லக்னத்துல இருந்தா:
ஆளே நசுங்கின மாதிரி இருக்கலாம். ஒரு வேளை ஆள் நெல்லா இருந்தா மைண்டே இழவு வீடு மாதிரி இருக்கும். நெகட்டிவ் தாட்ஸ் யதேஷ்டம். தற்கொலை எண்ணங்கள் வரலாம்.

அஷ்டமாதிபதி ரெண்டில் இருந்தா:
ஒவ்வொரு பைசாவுக்கும் அல்லாட வேண்டியிருக்கும். அல்லது எல்.ஐ.சி போன்ற மரண சம்பந்த இழப்பீடுகள் கிடைக்கலாம். ஊமையாகலாம். அல்லது திக்குவாய்க்கு வாய்ப்பு.வாய்,தொண்டை ,கழுத்து ரணமாகலாம். குடும்பத்தை பிரியலாம். குருடாகலாம்.

அஷ்டமாதிபதி 3 ல் இருந்தால்
இளைய சகோதரம் நஷ்டமாகலாம். அவென்சர் பண்றேன்னு ஆபீச்சுரில வந்துருவாய்ங்க.வித் இன் தி சிட்டி ஜர்னி பண்ணும்போது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். ஹேம்லெட் நாடகத்துல ஹேம்லட்டோட அப்பாவுக்கு காதுல விஷம் ஊத்தி கொன்னுருவாய்ங்க. அவர் ஜாதகத்துல இந்த கிரக ஸ்திதி இருந்திருக்கலாம்.

அஷ்டமாதிபதி 4 ல்:
தாய்க்கு கண்டம். தாயை பிரியலாம். ஜாதகர் பிறந்த வீடு ,ஊரை விட்டு குடும்பம் வெளியேறலாம். வாகன விபத்துக்கு வாய்ப்பு. யதார்த்த வாழ்க்கைய விட்டுட்டு சகட்டு மேனிக்கு படிப்பு படிப்புன்னு மாரடிச்சு திடீர்னு ஒரு நாள் யதார்த்தம் இடி மாதிரி இறங்க தற்கொலைக்கு போகலாம்.பரீட்சையில தவறினதுக்கும், மார்க்கு குறைவா வாங்கிட்டதுக்கும் தற்கொலை பண்ணிக்கிறவுக ஜாதகங்கள்ள இந்த கிரகஸ்திதி இருக்கலாம். ஹார்ட் அட்டாக் வரதுக்கும் , நிராகரிப்புகளால் இதயம் நொறுங்கவும் வாய்ப்பிருக்கு.

அஷ்டமாதிபதி 5 ல்:
நெகட்டிவ் தாட்ஸ்,தற்கொலை எண்ணம்,பிறருக்கு சதா தீங்கு எண்னும் பாங்கு. வாரிசின்மை, ஃபெர்ட்டிலிட்டி ட்ரீட்மென்ட் எசகு பிசகாகி உயிருக்கே ஆபத்தாய் முடிதல். ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வருதல், சித்தபிரமை. மறதி,அவமானம், நிராகரிப்பு.

அஷ்டமாதிபதி 6 ல்:
சில காலம் வாங்கின கடனை எல்லாம் எகிறடிச்சுக்கிட்டு, விரோதிகளையெல்லாம் க்ளெவர்ஃபுல்லா டாக்கிள் பண்ணிக்கிட்டு ,பொய் கேஸே போட்டாலும் ஜெயிச்சுக்கிட்டு இருப்பாய்ங்க. தீர்க்க ரோகங்கள் இருக்கலாம். கட்டுப்பாட்டில் இருந்த நோய் ஒரு கட்டத்துல படக்குன்னு சங்கிலிய அறுத்துக்கிட்டு ஆளை அடிச்சுரும். தாய்மாமனுக்கு கெண்டம்.

அஷ்டமாதிபதி 7 ல் :
காதலன் கையால் ஆசிட் வீச்சு வாங்கி,உயிரை விட்ட பெண் குழந்தைகள் ஜாதகத்துல இந்த அமைப்பு இருக்கலாம். இளவயதில் விதவையாகும் பெண்கள், மனைவியை இழக்கும் ஆண்கள் ஜாதகமும் இந்த கேட்டகிரி. வாழ்க்கை துணை கையால் உயிரை விடும் ஆண் பெண் ஜாதகத்துல இந்த அமைப்பு இருக்கலாம். பார்ட்னரால டிக்கெட் போட்டவுக – நடுத்தெருவுக்கு வர்ரவுகளும் இந்த கேட்டகிரிதான். தொப்புள் பகுதியில பிரச்சினை வந்து சர்ஜரி வரை போறவுக ஜாதகத்துலயும் இந்த கிரக நிலை இருக்கலாம். புண்ணிய சேத்திரங்களில் சோடியா தற்கொலை பண்றவுகளும் இந்த சாதிதான்.

அஷ்டமாதிபதி எட்டில்:
லக்னாதிபதி உச்சத்துல இருந்தா சேஃப்டி. இல்லின்னா கடும் உடலுழைப்பு தேவைப்படும். அதுவும் இல்லின்னா என்னதான் டயட்டீஷியன்ஸ் க்ரூப்பே சஜஸ்ட் பண்ணி திங்க வச்சாலும் பாடி காட்பாடியாத்தான் இருக்கும். தீர்க்க முடியாத கடன்,வெல்ல முடியாத சத்ரு,தீர்க ரோகங்கள் லொள்லு பண்ணும்.

அஷ்டமாதிபதி 9 ல்:
அப்பாவுக்கு கெண்டம். அப்பா,அப்பா வழி உறவுடன் விரோதம், அப்பா வழி சொத்துக்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாகலாம் அ நஷ்டத்துக்கு விற்க வேண்டி வரலாம். ஈமு முதலீட்டாளர்கள் ஜாதகத்துல இந்த கிரக நிலை இருக்கலாம். தூர பயணங்களில் விபத்து நடக்கலாம். போலி ஏஜெண்டுகளை நம்பி நடுக்கடலில் அ வெளி நாட்டில் அவதிபடலாம். தொடை பகுதியில் எலும்பு முறிவு அ பிரச்சினை வரலாம்.

அஷ்டமாதிபதி 10 ல்:
ஒர்க்கஹாலிக்கா இருப்பாய்ங்க. வேறு கிரகங்களின் எஃபெக்ட் காரணமா சோம்பேறிகளா இருந்தா தொழிலகத்தில் விபத்து நடக்கலாம். வாரிசு உரிமை அடிப்படையில் வேலை கிடைக்கலாம். (எங்க பக்கத்துல இதை 007னு சொல்றாய்ங்க) மரண சம்பந்த தொழில்களில் ஈடுபடலாம். (அமரர் ஊர்தி,ஆம்புலன்ஸ், செத்தவுக படங்களை வரையறது,ஃப்ரேம் பண்றது.

அஷ்டமாதிபதி 11 ல்:
மூத்த சகோதரத்துக்கு கண்டங்கள், ஜெனரேட் ஆன இன்கம்,லாபத்தை கூட அனுபவிக்க முடியாம போறது. பாதத்துக்கும் -முழங்காலுக்கும் இடையிலான பாகத்தில் பிரச்சினை /எலும்பு முறிவு . ஒரே நேரத்துல ரெண்டு மரண செய்திகள். எல்.ஐ.சி போன்ற மரணம் தொடர்பான இழப்பீடுகள் கிடைக்கலாம்.

அஷ்டமாதிபதி 12 ல்:
தீர்க்க முடியாத கடனை எல்லாம் தீர்ப்பாரு. வெல்ல முடியாத சத்ருக்களை எல்லாம் ஜெயிப்பாரு. பிறந்ததுலருந்து நோய் நொடி இல்லாம இருந்தாருங்க. பொட்டுன்னு பூட்டாருங்கங்கற கேட்டகிரி. இன்சோம்னியா இருக்கலாம், உணவு பழக்கம் கோழியை போல இருக்கும். (அடிக்கடி -குறைந்த அளவில்)

பம்பர் ஆஃபர்:
இந்த தொடரை ஆரம்பிச்சதுலருந்து ஹிட்ஸ் வகையில ஒன்னும் பிரச்சினை இல்லை. இன்னம் நான்கு பாவாதிபதிகளை பத்தி எழுதிட்டா இந்த தொடர் ஓவர் ஆயிரும். இந்த தொடரை எத்தீனி பேரு படிச்சாய்ங்க.
இதுல சொல்லப்பட்ட தீய பலன் கள் எத்தீனி பேருக்கு நடந்திருக்குங்கற டேட்டா நம்ம கிட்டே இல்லை. ஜா.ரா புண்ணியத்துல ஆரும் கமெண்ட் போடறதில்லை.ஆத்திரம் அவசரத்துக்கு கூட மெயில் மட்டுமே பண்ணவேண்டிய நிலை.

ஆகவே இந்த தொடரிலான தீய பலன்களை ஃபேஸ் பண்ணிக்கிட்டிருக்கிறவுக அட்லீஸ்ட் 100 பேரு kavithai07.yahoo.com என்ற மெயில் முகவரிக்கு எழுதினால் இந்த தொடரில் குறிப்பிட்ட கிரகஸ்திதி -தீய பலன்களுக்கு நவீன பரிகாரங்களை ஒரு தொடரா எழுதுவம். உடுங்க ஜூட்டு..

ஆயுள் பாவம் : நெஜமாலுமே பரிகாரங்கள்

அண்ணே வணக்கம்ணே !
எட்டாம் பாவத்தோட எந்த கிரகம் சம்பந்தப்பட்டிருந்தா என்ன மாதிரி பிரச்சினை வரும்னு ஏற்கெனவே தந்ததை மறுபடி இங்கே தந்திருக்கேன்.

சூட்டோட சூட்டா குறிப்பிட்ட சிம்ப்டம்ஸ் இருந்தா நீங்க செய்துக்க வேண்டிய பரிகாரங்களையும் தந்திருக்கேன்.

1.சூரியன்:
அப்பாவுக்கு டிக்கெட்/அப்பாவோட பேச்சு வார்த்தை இல்லாம போகலாம்.அல்லது அவர் நொடிச்சு போயிரலாம். பல் கொட்டிப்போகலாம். மண்டை உடையலாம். ஸ்பைனல் கார்டுல பிரச்சினை வரலாம்.

பரிகாரம்:

1.அப்பா/அப்பா வழி உறவுகள் ஆருனா இருந்தா தேவை உள்ளவுகளுக்கு முடிஞ்ச உதவியை செய்ங்க.

2.ப்ரிஃபரப்ளி ஃபிசிக்கல் ஸ்ட்ரெய்ன்.

3.மலையேற்றத்தில் ஆர்வம் ஏற்படுத்திக்கங்க

4.மாசம் ஒரு தாட்டின்னா ரிமோட் வில்லேஜ்ல உள்ள நண்பர்கள்/உறவினர்களை பார்க்க போங்க. காலை/மாலை வெயில்ல சகட்டு மேனிக்கு அலைங்க.

5.முடிஞ்சவரை செல்ஃப் ட்ரைவ் வேண்டாம். மு.ப ப்ராண்டட் ஹெல்மெட்டா போடுங்க.

6.சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ, யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச் சிகிச்சையைத் துவக்கவும்.
7.காலாட்டும் பழக்கம் இருந்தா விட்டுருங்க. உட்காரும் போது முதுகெலும்பை நேர வச்சி உட்காருங்க.

2.சந்திரன்:
ஆஸ்மா,டிபி,வீசிங் பிரச்சினை வரலாம். ஜலகண்டம் ஏற்படலாம். அஃதாவது ஏரி குளத்தில் தவறி விழுதல், தண்ணீர் லாரி மோதுதல். பைத்தியம் பிடிக்கலாம். கிட்னி ப்ரேக் டவுன் ஆகலாம்.

பரிகாரம்:
1.வீட்டு முன் புறம்/பின் புறம்/பால்கனி/மொட்டை மாடியில சின்னதா தோட்டம் போடுங்க.

2.ஓவர் ஹெட் டாங்கை க்ளீன் பண்ண பாருங்க(முடிஞ்சா)

3.அருகில் உள்ள அரசுப்பள்ளி/ அனாதைகள் விடுதி இத்யாதிக்கு குடி தண்ணீருக்கு எதுனா கான்ட்ரி ப்யூட் பண்ணுங்க.

4.ஸ்விம்மிங் க்ளப்ல சேருங்க ( நீந்தும் போது தலை நனையாம பார்த்துக்கங்க) ,

5.புகை,பகை,மன அழுத்தம் கூடாது. ஊக வணிகம் வேண்டாம். வ்ரவு எட்டணா செலவு பத்தணா கதை கூடாது.

6.மனசுக்கு பிடிக்காத வேலைய செய்யவே செய்யாதிங்க.

7.தியானம் செய்ங்க

3.செவ்:
விபத்து,தீவிபத்து,லாக்கப் டெத் நடக்கலாம். எதிரிகளோட கொலை வேறி தாக்குதலுக்கு இலக்காகலாம். ஆடு,மாடு முட்டலாம், மின் விபத்து நடக்கலாம். ஒசரமான இடத்துலருந்து விழலாம். ரத்தம் கெட்டுப்போகலாம், கட்டி கொப்புளம் வரலாம்.
பரிகாரம்:

1,ரத்த தானம் கட்டாயம்.

2.மார்ஷல் ஆர்ட்ஸ்

3.பள்ளி மாணவர்கள் என்.சி.சில சேருங்க

4.சமைக்க கத்துக்கங்க .முக்கியமா நான் வெஜ் ( நீங்க சாப்பிடப்படாது)

5.அரசுப்பள்ளி/ அனாதைகள் விடுதி இத்யாதிக்கு மின் உபகரணங்கள்/இன்வெர்ட்டர் எதுனா கான்ட்ரி ப்யூட் பண்ணுங்க.

6.வேல் பூஜை

4.ராகு:
ஆல்க்கஹாலிக் ஆகலாம். வாந்தி பேதி,விஷப்பூச்சி கடி,பாம்பு கடி, லாட்டரி,சூது,ஸ்மக்ளிங், ஷேர் மார்க்கெட்ல இறங்கி ஜீரோ பாலன்ஸுக்கு வந்துரலாம். இடுப்புக்கு கீழ் பாகத்தில் டாக்டருக்கே புரிபடாத பிரச்சினைகள் வரலாம். ஃபிட்ஸ் வரலாம். விஷம் சாப்பிடலாம்.

பரிகாரம்:

1.பரமபதம்/சீட்டாட்டம்
2.ஃப்ரெண்ட்ஸுக்கு சினிமா டிக்கெட் வாங்கி கொடுங்க
3.ஹாபியா படம் பிடிங்க
4.குல தெய்வ்ம்/கிராம தேவதைக்கு குவார்ட்டர் நைவேத்யம் பண்ணி பெருசுகளுக்கு கொடுத்துருங்க
5.எந்த சினன வேலையா இருந்தாலும் லீகலா/பட்டப்பகல்ல/நாலு பேருக்கு சொல்லிட்டு செய்ங்க
6.விசம் குடிச்சவுக /பூச்சி பொட்டு கடிச்சவுக /மெடிக்கல் ரியாக்சன் நடந்துவுகளுக்கு உங்களால முடிஞ்ச உதவியை செய்ங்க.
7.கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்

5.குரு:
கண்ணாலமே ஆகாது போகலாம். மனைவி டிக்கெட் போடலாம். அவிகளே உங்களை கொல்ல முயற்சி பண்ணலாம். நீங்க அவிகளை கொல்ல முயற்சி பண்ணலாம். பணம் ,நகை கொள்ளை போகலாம். உங்க சொத்தை அரசாங்கம் கையகப்படுத்தலாம்.கோர்ட்டு ஜப்தி ஆர்டர் தரலாம்.

பரிகாரம்:
1.கொடுக்கல் வாங்கல் அதுவும் வட்டிக்குன்னா வேண்டவே வேண்டாம்.
2.முதலீடு இத்யாதி கூடாது. சேமிப்புமீதான வட்டியை கூட தொடப்படாது
3.மாதர் போகம் மாதமிருமுறை
4.கட்டாய உடற்பயிற்சி.
5.வேளையறிந்து உணவு.அரை வயிறே சாப்பிடுங்க.
6.தங்கம் : வங்கி லாக்கருல மட்டும் இருக்கட்டும்.
7.தேவையில்லாத நிகழ்ச்சிகளுக்கு தம்பதி சமேதரா போற வேலை வச்சுக்காதிங்க.
8.கோர்ட்டுக்கு மட்டும் போயிராதிங்க.

6.சனி:
பைல்ஸ் வரலாம், பக்கவாதம் (லக்குவான்) தாக்கலாம், நொண்டியாகலாம்.சிறைப்படலாம். கொத்தடிமையாகலாம்.

1.சஃபாரி ட்ரஸ் போடுங்க
2.கு.ப காக்கி சட்டை/பேண்ட்
3.ஒரு டூல் பாக்ஸ் வாங்கி வச்சுக்கிட்டு கண்டதை கழட்டி மாட்டிக்கிட்டிருங்க
4.வீட்டுக்கு போன பிறவு மட்டும் குளிங்க
5.சமையலுக்கு நல்லெண்ணெய் மட்டும்
6. அவாய்ட் நான் வெஜ்
7.நஷ்டப்படவே தோட்டம் போடுங்க

7.புதன்:
ஸ்கின்ப்ராப்ஸ் வரலாம், ஆண்களுக்கு விதைகள்,பெண்களுக்கு ஓவரிஸ் பாதிக்கப்படலாம்.கீல் வாதம் வரலாம். தாய்மாமனே எமனாகலாம்.

1.தபால் ஆஃபீஸ் போயி மணியார்டர் ஃபார்ம் ஃபில் அப் பண்ணி கொடுங்க

2.தாசில்தார் ஆஃபீஸ் போயி மனு எழுதி கொடுங்க

3.ஏழை மாணவர்களுக்கு ஸ்டேஷ்னரி,பேனா,பென்சில் வாங்கி கொடுங்க.

4.மருந்து வாங்க சக்தியில்லாத நோயாளிகளுக்கு உதவுங்க ( ப்ரிஸ்க்ரைப்ட் மெடிசின்ஸ் வாங்க மட்டும்)

5. நீங்க காமர்ஸ் படிச்சிருந்தா ஏழை மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுங்க

6.நண்பர்களுக்கு கமர்ஷியல் டாக்ஸ் /இன் கம் டாக்ஸ் ஆஃபீஸ்ல வேலையிருந்தா கூட போயி உதவுங்க.

8.கேது:
போலி மந்திரவாதிகளிடம் ஏமாறலாம். (தப்பித்தவறி) உண்மையான மந்திரவாதிகள் இருந்து அவிக மந்திர பிரயோகத்துக்கு பலியாகலாம். உடலில் புண்கள் வரலாம். இடுப்புக்கு மேல் பாகத்தில் டாக்டருக்கே புரிபடாத பிரச்சினைகள் வரலாம்.

1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 180 டிகிரியில் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

9 சுக்கிரன்:
அளவுக்கு மீறிய சுகபோகங்களே உங்களுக்கு எமனாகலாம்.கைனகாலஜிக்கல் பிரச்சினைகள் வரலாம்.ஆண்மை இழப்பு ஏற்படலாம்.

1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும். 2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும். 6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல). 8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும். 9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும்.

எச்சரிக்கை:

1.ஆண்களுக்கு:
இந்த பரிகாரங்களை நீங்க மட்டும் பக்காவா செய்தா போதும். உபரியா ராம நாமம் சொல்லுங்க, சனி /செவ் கிழமைகளில் ஆஞ்சனேயர் கோவிலுக்கு போங்க.

நீங்க திருமணமானவரா இருந்தா உங்க மனைவியை லட்சுமி பூஜை பண்ண சொல்லுங்க. ஆஃபீஸ் கோயரா இருந்தா பாப் பண்ணிக்க சொல்லுங்க. பொட்டு சி்ன்னதா வச்சுக்க சொல்லுங்க. ப்ளெய்ன் புடவை/ஆடைகளை மட்டும் அணிய சொல்லுங்க.

2.பெண்களுக்கு:

இந்த பரிகாரங்களை கட்டாயம் செய்ங்க. இல்லின்னா வைதவ்யம் கூட ஏற்படலாம்.

நீங்க திருமணமானவரா இருந்தா உங்க கணவர் ராம நாமம் சொல்லனும். சனி /செவ் கிழமைகளில் ஆஞ்சனேயர் கோவிலுக்கு போகனும்.

நச் பரிகாரம்:ஆயுள் பாவம் தொடர்ச்சி(2)

null

அண்ணே வணக்கம்ணே !
நச் பரிகாரங்கள்னு ஒரு தொடரை ஆரம்பிச்சோம். இந்த வரிசையில நவகிரகங்கள் கெட்டா என்ன பரிகாரம்னு சொன்னோம். அடுத்து 12 பாவங்கள் கெட்டா என்ன பரிகாரம்னு பார்த்துக்கிட்டிருக்கோம்.
இந்த வரிசையில நேத்திக்கு எட்டாம் பாவத்தோட எந்தெந்த கிரகம் சம்பந்தப்பட்டா என்னமாதிரி பிரச்சினைகள் வரும் – டிக்கெட்டு எந்த ரூட்டுல வரும்னு பார்த்தோம்.

அந்த மரணத்துக்கு எப்டி பாச்சா காட்டறது -டேக்கா கொடுக்கிறதுன்னு இன்னைக்கு பார்ப்போம். இதையெல்லாம் உங்களுக்கு ஒளிவு மறைவில்லாம சொல்ல ஒரு காரணம் இருக்கு. ஒரு நாளில்ல ஒரு நாள் இந்தியாவுல டைரக்ட் எலீக்சன் வரும். அப்பம் கு.ப சுயேச்சையாவாச்சும் இந்திய ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவம். அப்பம் நீங்க அல்லாரும் எனக்கு ஓட்டுப்போடனும். போடுவிங்கல்ல.

கீழே ஒவ்வொரு கிரகம் ஆயுள் பாவத்தோட சம்பந்தப்பட்டா என்ன மாதிரியான எஃபெக்ட் வரும்னு ஒரு பட்டியல் தந்திருக்கேன். ( ஹி ஹி நேத்திக்கு தந்ததுதேன்)

இந்த பட்டியல்ல உள்ள பிரச்சினைகள் இல்லாத மன்சனே கிடையாது. இதுல ஒன்னு ரெண்டு பிரச்சினைகள் லேசா பாதிச்சிருந்த மாத்திரத்துல அரண்டு போயிராதிங்க. கொஞ்சம் பெரிய சைஸ்ல பல்பு வாங்கியிருந்தா அசால்ட்டா இருந்துராதிங்க.

பெரிய சைஸுல பல்பு வாங்கியிருந்தா மட்டும் நான் தந்திருக்கிற பரிகாரங்களை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க. நமக்கு ஓட்டுப்போடவாச்சும் உசுரோட இருக்கனுமில்லை?

ஸ்பெசிஃபிக் பரிகாரங்களை பார்க்கிறதுக்கு மிந்தி பொதுவாக மரண பயம் உள்ளவுக என்னெல்லாம் பரிகாரம் பண்ணிக்கறது பெஸ்டுன்னு ஒரு பாரா பார்த்துருவம்.

1.உங்க வயசு ,உடல் வாகுக்கேற்ற கட்டாய உடற்பயிற்சி கட்டாயம்.

2.தினசரி 1 மணி நேரம் – வாரத்துல ஒரு நாள் மவுன விரதம் இருங்க

3.தினசரி 1 மணி நேரம் – வாரத்துல ஒரு நாள் கண்களுக்கு துணிய கட்டிக்கிட்டு -காதுல பஞ்சடைச்சுக்கிட்டு இருங்க

4.தினசரி 1 மணி நேரம் – வாரத்துல ஒரு நாள் ஒரு அறையில உட்புறம் தாளிட்டுக்கிட்டு இருட்டுல இருங்க

5.மேற்சொன்ன 2 முதல் 4 வரையிலான நிபந்தனைகளை ஏக் தம் ஹெவி ஒரே நேரத்துல ஃபாலோ பண்ணிங்கன்னா நீங்க புலி

6.பிரச்சினை ஓவரா இருந்தா குடும்பம் ,நட்பு,உறவு சர்க்கிள்ளருந்து சுத்தமா காணாம போயிருங்க (அதுக்குன்னு சொல்லாம கொள்ளாம போயிராதிங்க. -கன்வின்ஸ் பண்ணிட்டே போங்க -கையில பையில உங்க அடையாளங்கள வச்சுக்கங்க – அதுக்குன்னு போன இடத்துலயும் அரை டஜன் செல் ஃபோன்ஸ வச்சுக்கிட்டு பேசி மாயாதிங்க)

7.சொந்த வீட்ல இருந்தா (அவசியமே இல்லின்னாலும்) வாடகை வீட்டுக்கு போயிருங்க.

8.வேலை வெட்டி பார்க்க வேண்டிய அவசியமே இல்லாத பார்ன் வித் சில்வர் ஸ்பூன் கேசாயிருந்தாலும் எதாவது ஒரு வேலையில சேருங்க.செய்ங்க.

9.உங்க வயசு ,உடல் வாகு,இன்ன பிற உடல் தொந்தரவுகளை பொருத்து வாரத்துல ஒரு நாளாச்சும் இயற்கை வைத்திய முறைப்படி உண்ணாவிரதம் இருங்க.

10.பையில பணம் வச்சுக்காதிங்க. பீரோவுல உள்ளதையும் உங்க கஸ்டடியில வச்சுக்காதிங்க. சொந்த காரவுக சர்க்கிள்ள முக்கியமான கல்யாணம் ,காதுகுத்துக்கெல்லாம் அட்டெண்ட் ஆகாதிங்க.

11.நட்பு உறவு சர்க்கிள்ள ஆரு செத்தாலும் எல்லா வேலையையும் மூட்டை கட்டி வச்சுட்டு அட்டெண்ட் பண்ணுங்க கடைசி வரை ( அதாங்க கண்ணம்மா பேட்டை சுடுகாடு) போய் இருந்துட்டு வாங்க.

இப்பம் எந்த கிரகம் ஸ்பாட் வைக்கிறாப்ல இருந்தா என்ன பரிகாரம்னு ஸ்பெசிஃபிக்கா பார்க்கனும். ஹி ஹி இதை நாளைக்கு பார்ப்போமா?

நச் பரிகாரம் : ஆயுள் பாவம் (தொடர்ச்சி)

அண்ணே வணக்கம்ணே !

இந்த எட்டாமிடம் ரெம்ப சென்சிடிவ் பாவம். இங்கன நின்ன கிரகம், இந்த பாவத்துக்கு அதிபதியான கிரகம், இதை பார்க்கிற கிரகம் எல்லாமே நமுக்கு டிக்கெட் போடத்தான் பார்க்கும். இந்த கிரகங்கள் 6 ல நின்னா எதிரிகள் நாசம். கடன் ஒழியும்,வழக்கு விவகாரம் ஜெயமாகும். இந்த கிரகங்கள் 12ல் நின்றால் செலவு குறையும் (எப்டி குறையும்னு கேட்காதிங்க.மனசு நொந்துரும்) ,தூக்கம் கெடும், திங்க முடியாது.

மேற்சொன்ன கிரகங்களுக்கு இன்னம் வேற ஏதாச்சும் பாவத்துக்குண்டான ஆதிபத்யம் கிடைச்சிருந்தா 6,12 ல நின்ன காரணத்தால் மேற்படி ரிலீஃபோட , அதன் ஆதிபத்யத்தை பொருத்து தீயபலனையும் அனுபவிக்க வேண்டி இருக்கும்.

மேற்சொன்ன கிரகங்களில் 6,12 ல் நிற்காத இன்ன பிற கிரகங்கள் எப்டியெல்லாம் அழும்பு பண்ணும்னு இப்பம் பார்த்துரலாம்..

1.சூரியன்:
அப்பாவுக்கு டிக்கெட்/அப்பாவோட பேச்சு வார்த்தை இல்லாம போகலாம்.அல்லது அவர் நொடிச்சு போயிரலாம். பல் கொட்டிப்போகலாம். மண்டை உடையலாம். ஸ்பைனல் கார்டுல பிரச்சினை வரலாம்.

2.சந்திரன்:
ஆஸ்மா,டிபி,வீசிங் பிரச்சினை வரலாம். ஜலகண்டம் ஏற்படலாம். அஃதாவது ஏரி குளத்தில் தவறி விழுதல், தண்ணீர் லாரி மோதுதல். பைத்தியம் பிடிக்கலாம். கிட்னி ப்ரேக் டவுன் ஆகலாம்.

3.செவ்:
விபத்து,தீவிபத்து,லாக்கப் டெத் நடக்கலாம். எதிரிகளோட கொலை வேறி தாக்குதலுக்கு இலக்காகலாம். ஆடு,மாடு முட்டலாம், மின் விபத்து நடக்கலாம். ஒசரமான இடத்துலருந்து விழலாம். ரத்தம் கெட்டுப்போகலாம், கட்டி கொப்புளம் வரலாம்.

4.ராகு:
ஆல்க்கஹாலிக் ஆகலாம். வாந்தி பேதி,விஷப்பூச்சி கடி,பாம்பு கடி, லாட்டரி,சூது,ஸ்மக்ளிங், ஷேர் மார்க்கெட்ல இறங்கி ஜீரோ பாலன்ஸுக்கு வந்துரலாம். இடுப்புக்கு கீழ் பாகத்தில் டாக்டருக்கே புரிபடாத பிரச்சினைகள் வரலாம். ஃபிட்ஸ் வரலாம். விஷம் சாப்பிடலாம்.

5.குரு:
கண்ணாலமே ஆகாது போகலாம். மனைவி டிக்கெட் போடலாம். அவிகளே உங்களை கொல்ல முயற்சி பண்ணலாம். நீங்க அவிகளை கொல்ல முயற்சி பண்ணலாம். பணம் ,நகை கொள்ளை போகலாம். உங்க சொத்தை அரசாங்கம் கையகப்படுத்தலாம்.கோர்ட்டு ஜப்தி ஆர்டர் தரலாம்.

6.சனி:
பைல்ஸ் வரலாம், பக்கவாதம் (லக்குவான்) தாக்கலாம், நொண்டியாகலாம்.சிறைப்படலாம். கொத்தடிமையாகலாம்.

7.புதன்:
ஸ்கின்ப்ராப்ஸ் வரலாம், ஆண்களுக்கு விதைகள்,பெண்களுக்கு ஓவரிஸ் பாதிக்கப்படலாம்.கீல் வாதம் வரலாம். தாய்மாமனே எமனாகலாம்.

8.கேது:
போலி மந்திரவாதிகளிடம் ஏமாறலாம். (தப்பித்தவறி) உண்மையான மந்திரவாதிகள் இருந்து அவிக மந்திர பிரயோகத்துக்கு பலியாகலாம். உடலில் புண்கள் வரலாம். இடுப்புக்கு மேல் பாகத்தில் டாக்டருக்கே புரிபடாத பிரச்சினைகள் வரலாம்.

9 சுக்கிரன்:
அளவுக்கு மீறிய சுகபோகங்களே உங்களுக்கு எமனாகலாம்.கைனகாலஜிக்கல் பிரச்சினைகள் வரலாம்.ஆண்மை இழப்பு ஏற்படலாம்.

எச்சரிக்கை:
இந்த தீயபலனிலிருந்து தப்ப செய்துக்கவேண்டிய பரிகாரங்களை நாளைக்கு பார்ப்போம். இந்த பதிவை குறைஞ்சது ஆயிரம் பேராச்சும் படிச்சபிற்காடுதான் பரிகாரம்..ஆமாம் சொல்ட்டன்..

சாகாமல் சாக 6 வழிகள்

அண்ணே வணக்கம்ணே !

உங்கள் ஆயுள் பலம் எப்படிங்கற சீரியல் சாகாவரம் – சாகாமல் சாக 12 வழிகள்னு மாறிக்கிட்டே வர்ரது தெரிஞ்ச கதை. 12 வழிகள்ள மொதல் ஆறு வழிகளை இப்ப பார்ப்போம்.

1989, பிப்ரவரியில பாரதிராஜா சினிமா மாதிரி நாம ஒரு ப்ளாக் ப்யூட்டியோட ஓடிப்போன கதைய – அந்த விவகாரத்துல ஃபேமிலி மெம்பர்ஸ் -ஃப்ரெண்ட்ஸ் ரியாக்ட் ஆன விதத்தை மறுபடி சொல்லவேண்டிய அவசியமில்லை. அதெல்லாம் இன்னம் வலிக்கிற நினைவுகளாவே இருக்கிறதால – அந்த நினைவுகளை ஃபோக்கஸ் செய்யும் போது ஒரு ஸ்டாண்ட் எடுத்துக்கற ஆபத்து இருக்கிறதால தாவிரலாம்.

இந்த எப்பிசோட்ல அப்பன்,ஆயி,அண்ணன் தம்பி குடும்பம் செத்துப்போச்சு. இழந்த ஸ்வர்கத்தை மீட்க நாம அல்லாட அந்த பக்கம் டேக் இட் ஈஸி கணக்கா இருக்கிற பார்த்து மனசு செத்துப்போச்சு – “கொய்யால .. நீ டேக் இட் ஈசின்னா நானும் டேக் இட் ஈஸிதான்னு ஸ்டெடி பண்ணிக்கிட்டம்.

1991, நவம்பர்ல இன்னொரு அட்வென்சர் செய்ததும் -லவ் பண்ணி கண்ணாலம் கட்டினதும் கூட உங்களுக்கு தெரிஞ்ச கதையே தான். கண்ணாலமான பிற்காடு 1992 மார்ச் வரை தேசாந்திரம் போயிருந்தம். அதெல்லாம் பெரிய்ய சோக கதை . மெகாசீரியல்லாம் பிச்சை எடுக்கனும்.

இந்த காலகட்டத்துல தேவைகளை ரெண்டு வகையா பிரிக்கிற டெக்னிக் புரிஞ்சது. ஸ்தூல தேவைகள்.மானசிக தேவைகள். ஸ்தூல தேவைகள் கழுத்தை நெறிக்கிறச்ச மானசிக தேவைகள் கழண்டுக்குது.

மேலும் எப்பமோ எக்கனாமிக்ஸ்ல படிச்ச எசென்ஷியல், கம்ஃபர்ட்டபிள்,லக்சரி ப்ராடக்ட்ஸ்னா என்னங்கறதும் புரிஞ்சது. ஆனால் ஈகோ பயங்கரமா சீண்டப்பட்டது. அதை காப்பாத்திக்க சொந்த ஊருக்கு ஓடியாந்துட்டம்.

முக்கியமா அந்த சமயம் கர்பமா இருந்த பொஞ்சாதிக்கு தடுப்பூசி போட கும்மிடிப்பூண்டி ஆஸ்பத்திரில ரேஷன் கார்டு கேட்டாய்ங்க. தடுப்பூசிக்கே ரேஷன் கார்டுன்னா பிரசவத்துக்கு இன்னம் என்னெல்லாம் கேப்பாய்ங்களோங்கற பீதியும் முக்கிய காரணம்.

மறுபடி 1993 மார்ச்சுக்கே மறுபடி தேசாந்திரம் .ஆனால் 1994 வரை பேட்ச் ஆப் ஆயிட்ட அப்பா உலகவங்கி கணக்கா உதவிக்கிட்டிருந்தாரு. ஈகோ மறுபடி துளிர்த்துருச்சு.ஈகோவுக்கு தீனி போடற மாதிரி வாத்தியாரு வேலை வேற . இது 1994 வரை தொடர்ந்தது.

1994 ல அப்பா டிக்கெட் போட்டுட்டாரு. காரியம் நடந்த தினம் பாகப்பிரிவினைங்கற பேர்ல ஒரு 16 ஆயிரம் வேலீட் நகை, பீரோ மேசை,நாற்காலின்னு ஒரு மினி லாரி நிறைய கொடுத்தாய்ங்க, ஊட்டை 3 மாசத்துல வித்துட்டு கேஷா ஷேர் கொடுத்துர்ரதா சொன்னாய்ங்க.

நமக்கு ரெண்டு அண்ணா,ஒரு தம்பி . எல்லாம் வவுறு ரொம்பின கேஸுங்க. வீட்டை விக்கிறதுங்கறது அவிகளுக்கு ஆயிரத்தெட்டு வேலைகள்ள ஒன்னு.அனால் நாம அன்னாடங்காய்ச்சி. அதுக்கேத்தாப்ல க்ளூக்கோஸ் வியாபாரத்துல இறங்கி செமை நாஸ்தி. கடன் பிரச்சினை வேற. ஒரு வழியா மினி லாரியில கொண்டு போன சாமான் செட்டையெல்லாம் வித்து கடனுக்கு ஒழிச்சுட்டு கலைஞர் சென்னைக்கு வந்த கணக்கா ரயில்ல ஊரு திரும்பினம்.

1997 ஆம் வருசம் புரட்டாசி மாசம்னு நினைக்கிறேன். நமக்கு குடக்கூலிக்கு கிடைச்ச குடிசை இருந்த சைட்டு மகிமையா ( வடக்கு கிழக்குல சாலை) அல்லது அப்பம் நடந்த கேது புக்தி எஃபெக்டா, அல்லது 3 ஸ்டேட்ல – லோக்கல்ல -நான் லோக்கல்ல ஃபெயில் ஆனதால வந்த விரக்தியா என்னன்னு தெரியலை.

என்ன மாற்றம்னு கெஸ் பண்ண முடியலை. ஆனால் ஈகோ கழண்டுக்கிச்சு. லக்னத்துல உச்சமா இருக்கிற குரு நம்மை சாட்சாத் பிராமணனாவே மாத்திட்டாரு. (கா-கூட்டி கொடுக்கிற பிராமணன் இல்லிங்ணா. இதையெல்லாம் செய்துட்டு அவிக க்ளெய்ம் பண்றாய்ங்க அந்த சத் பிரமாணனா) .

திங்கிங், டாக்கிங் , டேக்ளிங் இப்படி ஒன்னுல்ல ரெண்டுல்ல மொத்தமா லைஃப் ஸ்டைல் மாறிருச்சு. அவமானம்,அவமதிப்பு, எள்ளல்,எதேச்சதிகாரம் இப்படி எதுக்கும் நம்ம சைட்லருந்து எதிர்ப்புங்கறதே இல்லை.

“யோவ் உன்னை மாதிரி முட்டாள் எவனும் இருக்கமாட்டான்யா”
” எனக்கும் அப்பபோ இதே பாய்ண்ட் ஸ்ட்ரைக் ஆகுதுப்பா. நீ தொலைவில இருந்து பார்க்கிறதால கரீட்டா சொல்ட்ட .. ரெம்ப க்ளோஸா இருக்கிறதால லேசா சந்தேகம் இருந்தது.”

இந்த ரேஞ்சுக்கு வந்த பிற்காடு தேன் நாம எந்த வித முயற்சியும் எடுக்காமயே ஊட்டை வித்து நம்ம ஷேரா லட்சத்து ரெண்டாயிர ரூவா கொடுத்தாய்ங்க.

வேதாளம் மறுபடி முருங்கை மரம் ஏறிருச்சு. ஆனால் இந்த தாட்டி ரெம்பவே டிஃபென்ஸ் தான் ஆடினேன்.ஆனாலும் ஃபுட் பால்ல சொல்வாய்ங்களே அப்டி நம்ம சனமே சேம் சைட் கோல் போட்டு ஃபினிஷ் பண்டாய்ங்க.

1997 நவம்பர் 10 லருந்து 1998 பிப்ரவரி 23 க்கே ஞானோதயம் ஆயிருச்சு. ( தாளி ..அரிசிக்கு பணமில்லை ) அங்கருந்து மறுபடி பாண்டவ வனவாசத்துல அர்ச்சுனன் போட்ட கணக்கா ப்ருஹன்னளை வேஷம் கட்டிக்கிட்டன்.

2007 ஏப்ரல் கடைசி வாரத்துல தினத்தந்தில வாய்ப்பு. கொஞ்ச நாளைக்கு தான் ..கொஞ்ச நாளைக்குதான்னு மனசுக்குள்ள அலாரம் அடிச்சிக்கிட்டே இருந்ததால ஃப்ரீ டைம் – எக்கனாமிக்கல் பேக் அப் எல்லாத்தையும் ப்ளாக் மேல இன்வெஸ்ட் பண்ணேன்.

கடவுள் புண்ணியத்துல 2009 மே மாசம் தினத்தந்தியை விட்டாச்சு. அன்னைலருந்து இன்னைக்கு வரைக்கும் எப்பவாச்சும் ஒரு சில எம்.ஜி.ஆர் வேலைகள் தவிர தினசரி 30 + 30 ரூவாய்க்கு மேல பட்ஜெட்டே போடறதில்லை.ஏன்னா நம்ம பத்தா பணம் இதான். ஏடிஎம்லருந்து ,ஆர்.பி,எம்.ஓ வாங்கறது வரை எதுவா இருந்தாலும் மேடம் தான் பார்த்துக்கறாய்ங்க (மகள்) .

அவுத்து வுட்ட மாடு மாதிரி ஆயிட்டதால பல வகையில இறந்தவனாயிட்டம். சிங்கத்துக்கு நோய் பிடிச்சுட்டா அதனோட நடமாட்டம் இருக்கக்கூடிய எல்லை எப்படி கொஞ்சம் கொஞ்சமா சுருங்கிக்கிட்டே வருமோ அப்படி சுருங்கிக்கிட்டே வந்துருச்சு.

அரைலிட்டர் பெட்ரோல் ஒரு வாரத்துக்கு வருதுன்னா பார்த்துக்கங்களேன்..

இப்படி பல வகையில செத்துப்போயிட்டதாலயோ என்னமோ எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்கு.. கெரகம், வாஸ்து இப்படி எந்த மேட்டரும் பெருசா பாதிக்கிறதே இல்லை.

எப்பயாச்சும் கொஞ்சமா இர்ரிட்டேட் ஆயிர்ரது மட்டும் தொடருது. இர்ரிட்டேட் ஆயிட்டா படக்குனு அங்கருந்து கிளம்பிர்ரது. இது கூட இல்லின்னா மார்ச்சுவரில போட்டு போஸ்ட் மார்ட்டம் ஆரம்பிச்சுருவானுவ.

நம்ம கையில லைஃப் லைனை பார்த்தா நொந்துருவாய்ங்க.குத்து மதிப்பா பார்த்தா இந்த வயசுக்கு இருக்கவே வாய்ப்பில்லை.ஆனால் மேற்படி நாயடிகளால , மனசால செத்து, பொருளாதார ரீதியில செத்து ,மானசிகமா செத்து , சமூக ரீதியில செத்துக்கிட்டு வாழ்ந்ததாலயோ என்னமோ கீழே இருந்து ஒரு லைன் லைஃப் லைனை நோக்கி போகுது -ஆயுள் ரேகையும் வளர்ந்துக்கிட்டே வருது.என்னடான்னா ரெண்டும் ஒன்னை ஒன்னு முட்டிக்கலை சைடு வாங்கிருச்சு.

தலீவரு சொல்லி வச்சிருக்காரு ” ங்கோத்தா.. எத்தீனி நாள் வாழ்ந்தோங்கறது முக்கியமில்லை. .. எப்டி வாழ்ந்தோங்கறதுதான் முக்கியம்” நான் வாழ்ந்த வாழ்க்கைய பொருத்தவரை..மெகாசீரியலா எடுத்தா தாளி 5 வருசத்துக்கு இழுக்கலாம்.

ஆயுள் கூடனும்னா இப்டில்லாம் நாறனுமான்னா ஆமாம் ஜாதகத்துல ஆயுள் பங்கமிருந்தா . நாறித்தான் ஆகனும். இல்லாட்டி டிக்கெட் போட்டுர வேண்டியதுதான் .எப்படி வசதி?

உங்கள் ஆயுள் பலம் எப்படி?

அண்ணே வணக்கம்ணே ! என்னடா இந்தாளு என் கனவு தேசம்னு பெருஸ்ஸா ஆரம்பிச்சான். இப்பம் என்னடான்னா ஆயுள்பலத்தை பத்தி ஆரம்பிச்சுட்டான்னு பேஜார் படாதிங்ணா. எவ்ரி டாக் ஹேஸ் இட்ஸ் ஓன் டைம்.

என்னதான் நம்ம நாடு கேடு கெட்ட நிலையில இருந்தாலும் ஒரு நாளில்லை ஒரு நாள் நல்லரசு ஏற்படும். இந்தியா வல்லரசாகும். அதுல நம்ம கனவுகள் எல்லாம் நனவாகும். அதுவரை நாம இருப்பமான்னு தெரிஞ்சுக்கனும் இல்லியா? அதனாலதேன் ஆயுள்பலத்துக்கு டைவர்ட் ஆனேன். ( அசலான மேட்டர் இன்னாடான்னா அலெக்ஸா ரேங்க் கொஞ்சமா துவளுது) ரெண்டு நாள்ள மறுபடி கனவு தேசத்துக்கு போயிரலாம். உடுங்க ஜூட்

சாதாரணமா ஆயுள் பலம் பார்க்க ஆயுள் காரகனான சனி, லக்னாதிபதி, ஆயுளை காட்டும் அஷ்டம பாவாதிபதி, நோய்களை காட்டும் 6 ஆம் பாவாதிபதி, செலவழிக்கும் முறை,கில்மா,தூக்கம் இத்யாதியை காட்டும் விரயாதிபதியை தான் பார்ப்பாய்ங்க.

இதுல சனியோட முக்கியத்துவம் என்ன? சனியின் முக்கிய காரகங்களில் மூன்று அம்சங்கள் இருக்கு. கால் நரம்பு,ஆசனம்.

இதுக்கும் ஆயுளுக்கும் என்ன சம்பந்தம்? வண்டிக்கு சைலன்சர் எப்படியோ மன்சனுக்கு ஆசனம் அப்டி.சைலன்சர் அடைச்சிக்கிட்டா பெட் ரோல், டீசல் புகை சரி வர வெளிய போகாது. மைலேஜ் குறையும் – ஒரு கட்டத்துல வண்டியே ஸ்டார்ட் ஆகாது. இதே இழவுதான் கக்கா மேட்டருக்கும் ஒர்க் அவுட் ஆகுது.

மன்சனுக்கு பொறுமையை – கடுமையான உடல் உழைப்புக்கான பலத்தை (இதை சகிப்புத்தன்மைன்னு கூட சொல்லலாம்) தருபவர் சனி. அவர் ஜாதகத்துல பலஹீனமா இருந்தா பொறுமை இருக்காது. டென்ஷன் இருக்கும். உடல் உழைப்பு இருக்காது.இதன் விளைவு கடுமையான மலச்சிக்கல். நோய்களின் பிறப்பிடமே இதான். இதனாலதான் சனியை ஆயுள் காரகன்னு சொல்லியிருக்காய்ங்க.

அடுத்த பாய்ண்ட் நரம்பு கடுமையா உழைக்கிறவன் -. பொறுமையா இருப்பான். பொறுமை உள்ளவன் கடுமையா உழைப்பான். இது ரெண்டும் இல்லாதவன் பொறுமையில்லாம பதை பதைப்பான். என்னமோ நாளைக்கே செத்துப்போறாப்ல அலட்டிக்குவான். வெற்றி வந்தா பொங்குவான். தோல்வி கண்டா பொசுக்குன்னு ஆயிருவான். இதனால இவனோட நரம்பு மண்டலமே “தொள தொள”ன்னு ஆயிரும். நரம்பு செத்தவன் சர்வைவ் பண்றது கஷ்டம். ரெம்ப காலம் வாழமுடியாது.

அடுத்த பாய்ண்ட் கால். மனித உடலின் மொத்த எடையையும் தாங்கறது கால். சரியான உழைப்பு இருக்கிறவனுக்கு உடல் எடை கரெக்டா இருக்கும். கால்கள் வலிமையோட இருக்கும். உழைப்பு இல்லாம தின்னு தூங்கறவனுக்கு உடல் எடை கூடிக்கிட்டே போகும். கால் வளைஞ்சு போறது, முட்டி வலி எல்லாம் சகஜம்.

மேலும் கால் என்பது தன்னம்பிக்கைய தர்ர மேட்டர். 90 வயசு கிளவாடிக்கு கூட கை,கால் நல்லா இருந்தா ” கொய்யால .. எனக்கு கை கால் நல்லா இருக்கு ..நான் எவனையும் நம்பி வாழவேண்டியதில்லம்பான்” இதுவே யூத்தா இருக்கிறவனுக்கு கூட கை,காலுக்கு எதுனா பிரச்சினை வந்தா அவனும் ஒரு தொண்டு கிழத்தை போல அடுத்தவுகளை எதிர்பார்த்து வாழவேண்டியதாயிருது.

தான் அடுத்தவுகளுக்கு பாரமோங்கற எண்ணம் பாடியோட மெட்டஃபாலிசத்தையே மாத்திரும். ஆயுள் குறைய ஆரம்பிச்சுரும். கை,காலை கம்பைண்டா பார்த்தோம். காலை சோலோவா பார்ப்போம்.

எனக்கு 1991 நவம்பர் கண்ணாலமாச்சு. தாளி ஜனவரிக்கெல்லாம் எல்லா சோர்ஸும் காலி. “போங்கடா நீங்களும் ஆச்சு ஊரும் ஆச்சுன்னு சத்யவேடு கிளம்பினேன். அங்கிருந்து கும்மிடி பூண்டி 1992 மே வரைக்கும் வெளி உலகத்தை பார்த்தேன்.

அடடா.. இங்கன வாலை சுருட்டி பாக்கெட்ல வச்சுக்கிட்டு “அறுவா” பொளச்சதை நம்ம ஊருலயே பொளைச்சிருக்கலாமேங்கற ஞானோதயம் ஆச்சு. நம்ம மைண்ட் செட்டே மாறிருச்சு.

இதுவே கால் ஒடிஞ்சு கிடக்கு, கால்ல நடக்கிற சக்தி இல்லைன்னு வைங்க மூத்திரக்குட்டையில மீன் பிடிச்சுக்கிட்டு இங்கனயே நாறியிருக்க வேண்டியதுதான்.

அதுலயும் லட்சக்கணக்கான கி.மீ பாதயாத்திரைகள் செய்த (பூதான் மூவ்மென்ட்)வினோபாவே சொல்றாரு” பூமி ஒரு பவர் ஜெனரேட்டர். நான் நடக்கும்போது என் ரெண்டு கால்களின் வழியா எனக்குள்ள சக்தி ஏறுது”

ஆக சனி ஆயுள்காரகன்னு ஸ்தாபிச்சுட்டம். ஆயுள் பலம் கூட இந்த சனி ஜாதகத்துல எப்டி இருக்கோனம்?
நம்ம லக்னத்துக்கு சுபனா இருந்தா பலம் பெறனும். பாவியா இருந்தா பலம் இழக்கனும்.

இன்னொரு முக்கியமான மேட்டர் இவரு ஆயுள்காரகன்ங்கறதால கொல்லமாட்டார். ஆனா இவருக்கு இதரபாவிகளோட தொடர்போ -பார்வையோ ஏற்பட்டா டிக்கெட்டுதேன்.

ஆயுள் பலத்துக்கு அடுத்து பார்க்கவேண்டிய கிரகம் ஆயுள்ஸ்தானாதிபதி. இவர் மேட்டர்ல முக்கியமான கண்டிஷன் லக்னாதிபதியை விட இந்த ஆயுள் ஸ்தானாதிபதி பலம் குறைஞ்சு இருக்கனும். உ.ம் லக்னாதிபதி உச்சம்னா ஆயுள் ஸ்தானாதிபதி ஆட்சியில இருந்தாலும் பரவால்லை. ஒரு வேளை லக்னாதிபதி ஆட்சின்னா ஆயுள் ஸ்தானாதிபதி நட்பு வீட்ல இருக்கலாம்.

அடுத்தது நோய்களை காட்டும் 6 ஆம் பாவாதிபதியை பார்க்கனும்,இவரும் லக்னாதிபதியை விட பலம் குறைஞ்சிருக்கனும். லக்னத்துல நிற்கிறதோ ,லக்னாதிபதியோட சேர்ரதோ கூடாது.

சில சமயம் இவருக்கு இன்னொரு சுபஸ்தானாதிபத்யம் கிடைச்சிருக்கும். உ.ம் கடகலக்னம் விஷயத்துல பார்த்திங்கனா குருவே ரோகாதிபதி -இவர் தான் பாக்யாதிபதியும் கூட.
ஒரு ஜாதகத்துல இப்டி ஒரு நிலைமை இருந்தா அதாவது ஒரே கிரகத்துக்கு இப்படி ரெண்டுவித ஆதிபத்யம் ஏற்படும் போது அது முதல் பாதியில் (ஆயுளில்/ தன் தசையில்) தீமையையும் அடுத்த பாதியில் நன்மையையும் செய்கிறது.
இதற்கு தங்கள் ஆயுள் எவ்வளவு என்று பார்க்க வேண்டும். நான் ஆயுர்தாயம் செய்வதில்லை. பின்னே எப்படிங்கறிங்களா? எந்த வயசுல துஸ்தானாதிபதியா அந்த கிரகம் பெருசா ஆப்படிக்குதோ அதுக்கப்பாறம் சுஸ்தானாதிபதியா வேலை செய்யும்.

இந்த ரோகாதிபதியும் லக்னாதிபதியை விட பலம் இழந்து இருக்கனும். இல்லாட்டி சத்ரு,ரோக ,ருண உபாதைகள் ஆயுளுக்கு ஆப்படிச்சுரும்.

அடுத்து வர்ரது நீங்க செலவழிக்கும் முறை,கில்மா,தூக்கம் இத்யாதியை காட்டும் விரயாதிபதி. இவரும் லக்னாதிபதியை விட பலமிழந்திருக்கனும். இல்லாட்டி வரவுக்கு மிஞ்சிய செலவு, கும்ப கர்ண தூக்கம் , ஓய்வு ஒழிச்சல் இல்லாத கில்மாவே ஆயுளை குறைச்சுரும்.

இப்பம் நான் சொன்ன கிரகங்கள் மட்டுமில்லிங்ணா மத்த கிரகங்களும், மத்த பாவாதிபதிகளும் கூட ஆயுளுக்கு ஆப்படிக்கலாம்.அதெல்லாம் எப்டின்னு அடுத்தடுத்த பதிவுகள்ள பார்ப்போம்.

எச்சரிக்கை:
இதுல நான் சொன்ன 6,8,12 பாவங்களுக்கான ஆதிபத்யம் நைசர்கிக சுபர்களுக்கு கிடைச்சா ஆளை அடிச்சுரும். பாவிகளுக்கு கிடைக்கிறதே பெட்டர். ஏதோ படுத்த படுக்கையாவாச்சும் எஃப் டிவி பார்க்கலாம்.