உங்களுக்கும் ராஜயோகம் :25

RSS

அண்ணே வணக்கம்ணே !
குரு பலம் இல்லாதவிக ராஜயோகம் பெற என்ன செய்யலாம்ங்கறதை இந்த பதிவுல சொல்லோனம். அல்லாரும் -ஐ மீன் ஜோசியர்கள் எந்த கிரகம் செரியில்லின்னா அந்த கிரகத்துக்குரிய கடவுள் பேர சொல்லி ச்சூ காட்டி விட்டுர்ராய்ங்க. சனம் “கோயிலுக்கு போ -சாமி கும்பிடு வந்துரு”ன்னு சொன்னதை திராட்டுல விட்டுட்டு கோயில்லயே குடித்தனம் பண்ண ஆரம்பிச்சுர்ராய்ங்க. ஆனால் கோயில்-குளம்னு போகனும்னா கூட உங்க ஜாதகத்துல குரு பலம் இருக்கோனம்.

குரு பலம் இல்லாம கோவில் குளம்னு அலப்பறை கொடுத்தா ஆப்புதேன். கோவில்களை 3 க்ரூப்பா பிரிக்கலாம்.

1.மாடர்ன் டெம்பிள்ஸ்
இதெல்லாம் ச்சும்மா பிக்னிக் ஸ்பாட் மாதிரி-போகலாம் -போன மாதிரியே வந்துரலாம் ( ஆனா இங்கே போனாலும் சிம்னி போடாத லாந்தர் விளக்கு போல படபடன்னு அடிச்சுக்கிட்டிருக்கிற குருபலம் செலவழியும்) இதுல ஒரு ஆறுதல் என்னடான்னா இந்த மாடர்ன் டெம்பிள்ஸ் மேல உங்களுக்கு ஏற்படற கவர்ச்சி இத்யாதில்லாம் மேம்போக்கானது .கே டிவியில நல்ல படம் போட்டுட்டான்னா கோவிலுக்கு போறது கேன்சலாயிரும்.

2.மாடர்னைஸ்ட் டெம்பிள்ஸ்
ஒரு காலத்துல சாஸ்த்ரோக்தமா இருந்து மாடர்னைஸ் பண்ணப்பட்ட டெம்பிள்ஸ்ங்கறதை சுருக்கமா சொன்னேன். இங்கே போனாலும் குரு பலம் செலவழியும். அதே நேரத்துல உங்க கான்ஷியஸ் மைன்டை தாண்டி சப் கான்ஷியஸ் லெவலுக்கு கூட உங்களை இதெல்லாம் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணாது .
அதே நேரம் ஒரு கவர்ச்சி ஏற்பட்டுரும். வாழ்ந்து கெட்டவன் /அட ராசபரம்பரையில வந்த கடேசி வாரிசோட அரண்மனைக்கு ஒரு தபா போறிங்கன்னு வச்சுக்கங்களேன். அதே எஃபெக்டுதான்.

3.கைவிடப்பட்ட புராதன கோவில்கள்:
கூடங்குளம் அணு உலையிருக்கு. திடீர்னு ஒரு விபத்தே போல சித்தூர் முருகேசன் (ஹி ஹி நான் தேன் பாஸ்) டைரக்ட் எலீக்சன்ல பிரதமர் ஆயிட்டேன்னு வைங்க. அட போங்கடா உசுரோட இருந்தா உப்பு வித்து பொளைச்சுக்கலாம். உசுரே போயிரும்னா அந்த கருமாந்திரம் எதுக்கு மூடித்தொலைன்னு சட்டம் போட்டுட்டேன்னு வைங்க. இதே நிலை தான் கைவிடப்பட்ட புராதன கோவில்களுக்கு .

அது ரன்னிங்குல இருந்தப்போ சாலக்கா மின்சார உற்பத்தி செய்திருக்கலாம்.ஊருக்கு வெளிச்சம் கொடுத்திருக்கலாம்.ஆனால் இப்போ? உற்பத்தி நடக்கவே இல்லின்னாலும் பரவால்ல. எக்கு தப்பா கூகுள் காரன் விட்ட ட்ரைவர் இல்லாத கார் கணக்கா ஏதோ நடக்குதுன்னு வைங்க.
இதான் ஹை ரிஸ்க்.

ஓஷோ சொல்வாரு.கொய்யால ..வேணம்னா நீ கடவுளா மாறலாம்.ஆனால் கடவுளை பார்க்க மிடியாது.

கோவிலுக்குள்ள “ஏதோ” இருந்தா உள்ளே போன நீங்க பழைய ஆளா நீங்க ரிட்டர்ன் ஆக முடியாது. உங்களுக்குள்ள என்னமோ நடந்துரும். உள்ளே போன ஆள் வெளியே வந்த ஆளை போல இருக்கவே மிடியாது .

விக்கிரக வழிபாட்டை பத்தி ஓஷோ சொல்வார் “இது தப்பான வார்த்தை. விக்கிரகம் இருக்கும் வரை அங்கே வழிபாடு நிகழாது. வழிபாடு துவங்கி விட்டால் அங்கே விக்கிரகம் இருக்காது”

இதெல்லாம் தத்துவார்த்தமா பார்த்தா ஓகே தான். ஆனால் லாஜிக்கலா பார்த்திங்கன்னா கோவிலோ -உள்ளாற இருக்கிற விக்கிரகமோ ஸ்தூல பொருள் தான். ஏதோ ஒரு டெக்னாலஜியை உபயோகிச்சு அதை உயிரோட்டமுள்ளதா மாத்தியிருக்காய்ங்க.

உங்களுக்கு புரியனும்னா சிம்பிளா சொல்றேன். விக்கிரகம் ஒரு ரீசார்ஜபிள் பேட்டரி – அதை தொடர்ந்து சார்ஜ் பண்ணிக்கிட்டே இருக்கோனம். ப்ளஸ் -மைனஸ் மாறப்படாது.பேட்டரி கெப்பாசிட்டிய பொருத்து சார்ஜ் இருக்கனும். ஷார்ட் ஆகப்படாது .

இதெல்லாம் ஒர்க் அவுட் ஆற வரை ஓகே. இதுல எதுனா ஒன்னு பிடுங்கிக்கிட்டா என்னாகும்? பேட்டரி நில் ஆயிரும்.
நில்லான பேட்டரி என்ன செய்யும்? சார்ஜ் ஆகவே பார்க்கும். ஏதோ கிடைக்கும்னு போன மகாசனங்களோட பேட்டரியை அவுட்டாக்கி அது சார்ஜ் ஆக ஆரம்பிச்சிரும்.

(ஏம்பா நான் செரியா பேசறனா?)

குருபலம் இல்லாத ஹ்யூமன் பாடி லோ சார்ஜ்ல உள்ள பேட்டரி மாதிரி – நில் பேட்டரி பக்கத்துல போனா பேட்டரி காலியாயிரும்.
குருபலம் இல்லாதவிக கதையே இதான். ஒரு வேளை குருவோட ராகு /கேது/சனி ஆருனா சகவாசம் வச்சிருந்தா சொல்லவே தேவையில்லை.
இன்னாபா இது கெரகம் செரியில்லன்னுதான் கோயிலுக்கு போக சொல்றாய்ங்க .போறம் .நீ என்னமோ இப்படி பேதியாக்கறியேன்னு புலம்ப ஆரம்பிச்சுராதிங்க.

மறுபடி பேட்டரி உதாரணத்தையே எடுத்துக்குவம். கனெக்சன் கரீட்டா இருக்குன்னா நிதானமா சார்ஜ் ஆகும். நிதானமா டிஸ்சார்ஜ் ஆகும்.
கெரகம் கெட்டுப்போனப்போ எக்குத்தப்பா சார்ஜ் ஆகி தொலைக்கும். ஒலகமே டீ ஜெனரேட்டட் . இதுல நீங்க ஓவர் சார்ஜுல இருந்திங்கன்னா டீம் லீடர் கோயான் இன்சல்ட் பண்ணான்னு ராஜினாமா பண்ணிட்டு அல்லாடுவிங்க. (டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் -கெரகம் கெட்டு போனா நடக்கிறது இதான் -செவ் கெட்டிருந்தா வீரம் அதிகமா இருக்கும்,சூரியன் கெட்டிருந்தா ஈகோ அதிகமா இருக்கும்)

மத்த கெரகம் செரியில்லின்னா கோவிலுக்கு போங்க. எக்கு தப்பா சார்ஜ் ஆனது டிஸ் சார்ஜ் ஆகி நெல்லது நடக்கும்.

ஆனால் குரு செரியில்லின்னா மட்டும் அம்பேல் ஆயிருங்க. கோவிலுக்கு போறதே ஆப்புன்னா கமிட்டியில மெம்பரா இருக்கிறது -அபிசேகம் -பூர்ண கும்ப மரியாதை -யானை கிட்டே மாலை இதெல்லாம் பெரிய ஆப்பா ஆயிரும்.டேக் கேர்.

முக்கியமா பஜனை மண்டலி /திருவிழா சமயத்துல வாலண்டியரா இருக்கேங்கறதுல்லாம் நெருப்போட விளையாடற மாதிரி.
அதே சமயம் குரு+கேது சேர்க்கை இருந்தா தியானம் பண்ணுங்க. குரு+ராகு சேர்க்கை இருந்தா வீட்டோட இருந்து துர்கையை தியானம் பண்ணுங்க. குரு+சனி சேர்க்கை இருந்தா கொல தெய்வத்தை தியானம் பண்ணுங்க.

கோயில் நோட்டீஸ்ல பேரை போடறது /பேனர் வைக்கிறதுல்லாம் வேண்டாம் வாத்யாரே. குரு செரியில்லையா?
நலம்.ஃபைனான்ஸ்/ என்டோன்மென்ட் போர்ட்/ நீதி/ஆசிரியதுறைகளில் இருந்தால் சீக்கிரமே கழண்டு கொள்வது நல்லது
.
பிராமணர்கள்,பூணூல் அணியும் வகுப்பினர்,அரசு அலுவலர்கள், நீதித்துறை,அரசியல்வாதிகள் ஆகியோரிடம் எச்சரிக்கை தேவை.
இருக்கும் தங்க நகைகள் அனைத்தையும் காசாக்கி -வந்த பணத்தை கரண்ட் அக்கவுண்ட்ல போட்டுருங்க.

வயிறு-இதயம் தொடர்பான விஷயங்களில் ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க.ப்ரிக்காஷன்ஸ் எடுத்துக்கோங்க.
கல்யாணம்,திருமண வாழ்வு ,குழந்தை பிறப்புக்கு டாப் பிரியாரிட்டி கொடுங்க .பணம் பண்ண துடிக்காதிங்க. (தப்பித்தவறி சக்ஸஸ் ஆயிருச்சுன்னா முன் சொன்னதெல்லாம் புடுங்கிக்கும்)

கையில் காசு ரூ.30 க்கு மேல் வச்சுக்கப்படாது .கோவில் குளம்,யாகம்/ஹோமம்,சுப காரியம்லாம் போகப்படாது
எளிமையான லைஃப் ப்ளான் பண்ணுங்க. பொஞ்சாதி/கொளந்தைகளையும் கன்வின்ஸ் பண்ணி இதே ரூட்டுக்கு கொண்டுவாங்க.

முக்கியமா சவுண்டு விடாதிங்க .ஐ மீன் அதிகாரம் பண்ணாதிங்க. அரசு வகை வருமானங்களை டச்சு பண்ணாதிங்க வட்டி ?? விஷம் மாதிரி.ஆளையே காலி பண்ணிரும்.

ஆருக்கும் ஐடியா தராதிங்க/அட்வைஸ் பண்ணாதிங்க. சொந்த பந்தம்/நட்பு வட்டத்துல சாவு நடந்தா போய் வாங்க.
ஓகேவா .. அடுத்த பதிவுல பெரியவரை பத்தி சொல்றேன்.அதான் பாஸ் ..சனி பகவான்.

Advertisements

உங்களுக்கும் ராஜயோகம் :24

ஓபாமா

அண்ணே வணக்கம்ணே !
உங்களுக்கும் ராஜயோகம் தொடர் தொடர்கிறது .கடந்த பதிவுல குருவின் காரகங்கள் எப்படில்லாம் ராஜயோகத்தை தரக்கூடும்னு ச்சூ காட்டியிருந்தேன். அந்த பட்டியல் தொடர்கிறது .

குரு என்பவர் எப்பவுமே ஒரு வித சுயக்கட்டுப்பாட்டை தரக்கூடியவர். இடுப்புக்கு கீழே அடிக்கிறதெல்லாம் முடியாது .இதனால எதிரிகள் கூட ஒரு வித மருவாதிய வச்சிருப்பாய்ங்க.ஆஸ் பெர் ரூல்ஸ் விளையாடறவனை அவுட் பண்றது ரெம்ப கஷ்டம் ( நான் சொல்றது வாழ்க்கை/அரசியல் விளையாட்ல)

இங்கே ரூல்ஸ்ங்கறது ரெண்டு விதம் ஒன்னு அமல்ல இருக்கிற சட்டம் . அடுத்தது நேச்சுரல் லா. ஏன் நேச்சுரல் ஜஸ்டிஸ்னு கூட வச்சுக்கலாம். குரு பலம் உள்ளவன் ஆஸ் பெர் லா தான் ஃபைட் பண்ணுவான்னு கன்ஃபார்மா சொல்ல முடியாது.ஆனால் அவன் அவுட் ஆஃப் லா போனாலும் நேச்சுரல் ஜஸ்டிஸ் தான் அவன் நோக்கமா இருக்கும்.
இந்த தன்மை உலகின் 8/9 வகை மனிதர்களிடம் இருக்காது .ஆகவே அவிக எல்லாமே இவர்களின் பால் ஈர்க்கப்படுவார்கள்.

அடுத்தது இவிக பேச்சு . வாமனன் வந்து த பாருப்பா உன் நாட்ல பலான இடத்துல பலான ஏரியாவுல பலான கிராமத்தை விட்டு உன் அதிகாரத்தை விலக்கிக்கனும்னிருந்தா ராசா “போடா கொய்யால”ன்னிருப்பான்.ஆனால் வாமனன் கேட்டது தானம்.

இவிக கோரிக்கையில சுய நலம் இருக்காது .அப்படியே இருந்தாலும் அது பொது நலத்தோட கலந்ததா இருக்கும். இவிக பேச்சு நீ இதை செய்வே -உன்னால தான் செய்ய முடியும் -இதை செய்தா உனக்கு புண்ணியம் கிடைக்கும். செய்யலின்னாலும் பரவால்ல. என்ன உனக்குத்தான் கிடைக்கவேண்டிய புகழ் கிடைக்காம போயிரும் -ரேஞ்சுல இருக்கும்.எதிராளி என்ன ஆவான் பாருங்க?

இவிக குடும்பமும் ஓரளவுக்கு இவிகளோட ஒத்துப்போவாய்ங்க. (பிள்ளைங்க ஜாதகம் வேற மாதிரி இருந்தா காந்தியோட மவன் இஸ்லாமுக்கு தாவின கதை தான்)

தங்கள் செயலில் ஒரு வித தெய்வீகம் இருக்கிறதா நினைக்கிற வரை எதுக்கு பயப்பட மாட்டாய்ங்க. ஒரு வேளை அதுல சுய நலம் இருக்கிறதா இவிகளுக்கே ஸ்பார்க் ஆச்சுன்னா மட்டும் பம்மிருவாய்ங்க.

உங்களுக்கும் குடும்பம் இருக்குங்க அதையும் பாருங்கன்னா அட .நமக்காவது நிற்க நிழல் இருக்கு. பசியில்லாம இருக்கம். மத்தவிகளை பாருங்கம்பாய்ங்க.

ஏற்கெனவே சொன்னதை போல இரக்கம் -கருணை இத்யாதி இருந்தாலும் அதையும் ப்ளான் பண்ணி லாங் டெர்ம்ல ஒர்க் ஆவறாப்ல செய்வாங்க.

மோதறது பெரிய்ய இடமா பார்த்து மோதுவாய்ங்க. ஏரியா கவுன்சிலர்லாம் இவிக பார்வையில படவே மாட்டாய்ங்க.
ரெம்ப தொலை நோக்கோட ரோசிப்பாய்ங்க. பத்து வருசத்துக்கப்பறம் ,இருபது வருசத்துக்கப்பறம்னு யோசிச்சு செயல்படுவாங்க. உடனடி லாட்டரி கணக்கா ஆதாயம் தேடி செயல்படறவிக இவிகளை கணக்குல வச்சுக்காம விட்டுருவாய்ங்க. சந்தடி சாக்குல இவிக வளர்ந்துக்கிட்டே போவாய்ங்க.

இந்த கல்யாண குணங்கள் தற்காலிகமா கொஞ்சம் சிக்கல் /பின்னடைவுகளை தந்தாலும் லாங் டெர்ம்ல இயல்பாவே ஒரு வித செல்வாக்கு இவியளுக்கு வந்திரும். அதையும் பொது நலத்துக்காகவே செலவழிக்க ஆரம்பிச்சா அரசியல்ல ஒரு நல்ல இடம் கியாரண்டி.

மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்களோட தொடர்பு ஏற்பட்டுரும். இந்த தொடர்பின் வழியே பெரிய மனிதர்களின் அறிமுகம் /அவிக சிபாரிசுல்லாம் கிடைக்கவும் வாய்ப்புண்டு.

ஃபைனான்ஸ் மேட்டர்னு வந்திங்கனா சொந்த விஷயத்துல சொதப்பினாலும் ஊர்ப்பணம்/நிதி நிர்வாகம்னா பக்காவா இருப்பாய்ங்க. ஆரம்ப காலத்துல ட்ரஷரர் மாதிரி செயல்படவும் வாய்ப்புண்டு.

இப்படியாக ஒரு ஜாதகத்துல குரு பலம் ஜாதகனுக்கு ராஜயோகத்தை கொடுக்கும். செரி ஜாதகத்துல குரு பலமே இல்லை . ஆனாலும் ராஜயோகம் கட்டாயம் வேணம்னா என்ன பண்ணனும்? அதுக்கு சில தியாகங்களை செய்யனும்.
உதாரணமா திருமணத்தை தள்ளிப்போடலாம்.அப்படியே செய்தாலும் “வளர்ப்பு மகன்”திருமணம் மாதிரி இல்லாம எளிமையா சீர்திருத்த திருமணம் செய்யலாம். அடுத்து குழந்தை பிறப்பு/வளர்ப்புலயும் எளிமையை கடைபிடிக்கலாம்.
தனியார் பள்ளிக்கு லட்சக்கணக்குல டொனேஷனை அள்ளி விடறதை விட அருகாமையில உள்ள அரசு பள்ளிக்கு நம்மால முடிஞ்ச கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரலாம்.

இப்படி நிறைய குறுக்கு வழி இருக்கு.அதெல்லாம் அடுத்த பதிவுல தரேன். உடுங்க ஜூட்டு .

உங்களுக்கும் ராஜயோகம் : 23

4 இன் ஒன்

அண்ணே வணக்கம்ணே !
உங்களுக்கும் ராஜயோகம் தொடர் தொடர்கிறது . குருபலம் அவாளோட கூட்டுறவில் எப்படி ஒர்க் அவுட் ஆகும். அவா உங்களுக்கு உதவனும்னா நீங்க எப்படி இருக்கனுமோ அப்படி குரு உங்களை மாத்திருவாருன்னு சொல்லியிருந்தேன். குரு தர்ர ராஜயோகம் ஒர்க் அவுட் ஆகனும்னா அவாளுக்கு “எல” எடுத்தே ஆகனுமான்னு பயந்துக்காதிங்க.

ஒவ்வொரு கிரகத்துக்கும் 1008 காரகத்வம் இருக்கு . ஒரு கிரகம் உங்க ஜாதகத்துல கரீட்டா உட்கார்ந்தாச்சுன்னா தன்னோட 1008 காரகத்வத்துல ஏதோ ஒரு வகையில உங்களுக்கு லிஃப்ட் கொடுத்தே தீரும். ராஜயோகத்தை கொடுத்தே தீரும்.

அதை வச்சி வாழறதா அல்லது எவனோ முத மந்திரி தூக்கு போட்டு செத்தானே அப்படி சாகறதாங்கறத முடிவு பண்றது நீங்க தேன்.

நல்ல நினைவாற்றல் குரு காரகம் . கலைஞர் பொதுப்பணித்துறை மந்திரியா இருக்கும் போது சண்முக நாதனை பார்க்கிறார் . படக்குனு “ஓன்” பண்ணிக்கிறாரு. ச. நாதன் பேசிக்கலா ஒரு குறுக்கெழுத்தாளர் . என்னதான் குறுக்கெழுத்தாளரா இருந்தாலும் பேச்சை எழுத்துக்கு எழுத்து ரிட்டனா கொண்டு வரனும்னா நினைவாற்றல் கட்டாயம்.

திட்டமிடல் குரு காரகம். ( போட்டு தள்றது /வச்சு செய்றது /செஞ்சுர்ரது இதுக்கான திட்டமிடல் எல்லாம் செவ் காரகம். அதையும் இதையும் குழப்பிக்காதிங்க.

குருவை தெய்வீக கிரகம்னு சொல்றாய்ங்க.கெரகத்துல என்னய்யா தெய்வீகம்னு கேப்பிங்க.மனிதன்னாலே சுய நலம் தான். அந்த சுய நலத்தை ஒரு மனுஷன் தாண்டி யோசிச்சான்னா அவன் தெய்வமாயிர்ரான். குரு கிரகம் இந்த அற்புதத்தை செய்யும்.

இரக்கம் -கருணை இந்த ரெண்டுக்கும் இடையில் நிறைய வித்யாசம் உண்டு. இரக்கம் இன்ஸ்டன்டா வரும். போயிரும். இது சந்திர காரகம். வாத்யார் போட்ட சத்துணவு இந்த சாதிதான்.

கருணைங்கறது வேற . இது குரு காரகம்.பல காலமா ஒதுக்கி/தள்ளி/அழுத்தி வைக்கப்பட்ட மக்களுக்காக -அந்த மக்களே தன்னை புறக்கணிச்சாலும் விடாப்பிடியா அவியளுக்காவ உழைக்கிறது .மறுபடி கலைஞரையே இதற்கும் உதாரணம் காட்டனும்னா அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆறதுக்கு அவர் ஒர்க் அவுட் பண்ணதை சொல்லலாம்.

அவரோட ஜாதக ராசி என்னடான்னா திருமாவின் போர்வாளே அவாளே ஓப்பனா பாராட்ட தயங்கற சமயத்துல மோடிக்கு போட்ட ஜால்ரா. இதை கண்டிக்க கூட மனம் வராத திருமா .

குரு பலன் தரும் காலம் பற்றி ஒரு விதி உண்டு. சமீபத்துல முக நூல்ல கூட சொல்லியிருந்தன். குரு தன் தசை /கோசாரத்தில் மத்திய காலத்தில் பலன் தருவார்.

குருன்னாலே திட்டமிடல் தான்.வாத்யாரு இரக்கம் காரணமா சத்துணவு கொடுத்தாரு .இதுவே கருணை உள்ளவன் என்ன செய்வான்?
யார் யாருக்கெல்லாம் உண்மையிலயே சத்துணவு தேவையோ கறாரா வடிக்கட்டி “தகுதி” உள்ளவிகளுக்கு மட்டும் கொடுப்பான். அதுவும் எப்படி ? இருபது இருபத்தஞ்சு பள்ளிகளுக்கு மையத்துல இருக்காப்ல ஒரு குக்கிங் ஸ்பாட் வச்சு -கைப்படாம சமைச்சு இன் டைம் சப்ளை கொடுப்பான்.

சோத்தை போட்டாச்சுன்னு தூங்காம அந்த பிள்ளைகளோட பெற்றோர்கள் பற்றிய விவரங்களை திரட்டி அவியளுக்கு தொழிற்பயிற்சி /கவுன்சிலிங்/வங்கிக்கடன்/மானியம்னு கொடுத்து அவியளே சத்துணவு கொடுக்கிறாப்ல செய்வான்.கு.பட்சம் சில பல வருஷங்களுக்குள்ள டார்கெட் ரீச் பண்ணி “சோத்துக்கடைய “மூடிருவான்.

இதை இம்ப்லிமென்ட் பண்ணும் போது ஆரம்ப காலத்துல எல்லா பயலும் வண்டை வண்டையா திட்டுவான். திட்டம் சரியா இம்ப்லிமென்ட் ஆக ஆரம்பிச்சதும் “பரவால்லப்பா”ம்பான்.பிறவு? ஆங்..இதென்ன பிரமாதம் அப்படி ..அப்படி செய்திருந்தா இன்னம் பக்காவா செய்திருக்கலாம்னு உடையல் விட ஆரம்பிப்பான்.

குருவின் மத்யகாலம் பலன் கொடுப்பதோட சூட்சுமத்தை புரிஞ்சுக்கிட்டியளா?

இதயம்ங்கறது பம்பிங் ஸ்டேஷன். ரத்தத்தை உடல் முழுக்க பாய செய்வது இதயத்தோட வேலை.ரத்தத்தோட வேலை என்ன? உடலின் எல்லா பாகங்களுக்கும் க்ளூக்கோஸ்/ஆக்சிஜனை கொண்டு போறது.இதுல லயன்ஸ் ஷேர் மூளையோடது .மூளைக்கு 70% க்ளூகோஸ் தேவைப்படுதாம். மண்டைக்கு ரத்தம் பம்ப் ஆகலின்னா கண்ணெல்லாம் ப்ளாக் அவுட் ஆகி சொத்துன்னு விழுந்து வைப்பம். மூளை செல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா செத்துப்போக ஆரம்பிச்சுரும். டிக்கெட்டே கூட போட்டுருவம்.

குரு நெல்லாருந்தா இதயம் நெல்லா இருக்கும்.பம்பிங் பர்ஃபெக்டா நடக்கும். மூளைக்கு தேவையான க்ளூகோஸ் முழுமையா கிடைக்கும். அது பர்ஃபெக்டா வேலை செய்யும். பதட்டம் இத்யாதி இல்லாம கூலா வேலை பார்க்கும். எதையும் ப்ளான் பண்ணி செய்யற கப்பாசிடி வரும்.
இதயத்துலயே தகராறு இருந்தா என்னாகும்?

இது ஒரு வ்யூ .இன்னொரு பக்கம் வயிறுக்கும் குரு தான் காரகம்ங்கறாய்ங்க. எதையும் ப்ளான் பண்ணி செய்யனும்னா குரு பலம் தேவை .
வயிறுக்கும் -கில்மாவுக்கும் ஒரு லிங்க் இருக்கு . சாப்டதும் கண்ணை சொழட்டுதே காரணம் என்ன? சீரணம் நடந்தேற ரத்தம் வயிற்றுப்பகுதிக்கு பாயுது .இதனால மூளைக்கு போக வேண்டிய க்ளூக்கோஸ் குறையுது .

ஒரு கட்டிங் போட்டு -முட்ட முட்ட பிரியாணியை ஒரு கட்டு கட்டின கையோட ஒரு குட்டியும் வந்து பெல்லடிக்குதுன்னு வைங்க.
அப்ப என்னாகும்? மூளைக்கு போக வேண்டிய ரத்தமே டெஃப்சிட்ல இருக்கு .இதுல இடுப்புக்கு கீழவேற ரத்தம் பாய வேண்டிய நிலை .அப்ப என்னாகும்னா உயிர்களோட பேசிக்கல் இன்ஸ்டிங்டே கில்மா தானே . இயற்கையின் பார்வையில டாப் ப்ரியார்ட்டி இனப்பெருக்கம் தான். அதுக்கு வழி கில்மா தான்.ஆகவே சீரணத்தை ஒத்திப்போட்டுட்டு உடம்பு வேற வேலைக்கு ப்ரிப்பேர் ஆகுது .அப்ப என்னாகும்?

வவுத்துல உள்ளது செரிச்சு செரிக்காம -அழுகியும் அழுகாம -கியாஸ் ஃபார்ம் ஆக ஆரம்பிக்கலாம். உணவை செரிக்க சுரந்த அமிலம் இரைப்பையை புண்ணாக்கலாம்.

ஒரு ஜாதகத்துல குரு நெல்லா இருக்காருன்னு வைங்க. அவன் எதையும் ப்ளான் பண்ணி செய்வான். எது முன்னே எது பின்னேன்னு பார்த்து பார்த்து செய்வான்.

கரப்பான் பூச்சில்லாம் எடுத்ததுமே கில்மா தானாம். பிறவு தான் தண்ணிய தேடி குடிக்குமாம். அதுக்கு பிறவுதான் உணவு .ஏதோ ஒரு கிழம் கெட்ட காரியம் செய்யாம இருந்தா 100 வயசு வாழலாம்னு சொன்னதா முக நூல் எல்லாம் பேச்சா கிடக்கு .

அந்த எண்ணமே இல்லாம வாழ்ந்திருந்தா ஓகே. வாய்ப்பு இல்லாம வாழ்ந்திருந்தா மூளை செப்டிக் டேங்கை விட கேவலமா இருக்குமே.
இதயத்தை வவுத்துக்கும் – மூளைக்கும் – இடுப்புக்கு கீழவும் அல்லாட விட்டா என்னாகும்? நாளாவட்டத்துல பம்ப் ரிப்பேரா போகவும் வாய்ப்பிருக்கு. நான் ஏதோ பீலா விடறேனு நினைக்காதிங்க.

நாட்பட்ட வயிற்று கோளாறுகள் இதய நோய்ல முடியுதாம் .விறைப்பு தன்மையில் குறைபாடு இதய நோய்க்கான அறிகுறியாம்.
மனித உடல்ல ரெண்டு டிவிஷன் .ரீ ப்ரொடக்டிவ் /டைஜஸ்டிவ். ஒன்னு வேல செய்யும் போது அடுத்தது வேலை செய்யாது.ஆனால் டைஜஸ்டிவ் விங்கை ஃப்ரீஸ் பண்ணி ரீ ப்ரொடக்டிவ் விங்கை வேலை செய்ய வைக்கலாம்.ஆனால் நாளாவட்டத்துல ரெண்டுமே நொண்டியடிக்கும்.

அடுத்து குரு பலம் சாதியளவில் பிராமணர்களாய் இருப்பவர்கள் மூலமாத்தான் ராஜயோகத்தை கொடுக்கனும்னுல்ல.

பிராமணன் என்றால் பிரம்மத்தை அறிந்தவன். இன்னைக்கு எத்தனை பார்ப்பானுக்கு பிரம்மம்னா என்னனு தெரியும்? அன்னமய்யா பிரம்மம் ஒக்கட்டே பரபிரம்மம் ஒக்கட்டேனு பாடி வச்சிருக்காரு . பெரியார் கணக்கா “சமத்துவ”த்தை பத்தி கடைசி காலத்துல கச்சாமுச்சான்னு எழுதி விட்டுட்டாரு . இந்த கடுப்புலதான் அவரோட கீர்த்தனைகள் பொறிச்சு வச்சிருந்த செம்பு தகட்டையெல்லாம் குடுமிகள் உருக்கி ஒழிச்சுட்டானுவன்னு ஒரு சம்சயம்.

தன்னை உடலாக உணர்பவன் பல வருட சாதனைகளின் பலனாய் ஃப்ராக்சன் ஆஃப் செகண்ட்ல தன்னை ஆத்மாவாக உணர்ந்தால் அப்போது உணர்கிறான் . தனக்கும் பரமாத்மனுக்கும்/கடவுளுக்கும்/பிரம்மத்துக்கும் இடையில் எந்த வித்யாசமும் இல்லை என்பதை .

அப்படி உணர்ந்தவனே பிராமணன். இந்த அளவுகோலை வச்சு பார்த்தா எவனோ போட்ட ஸ்டேட்டஸை லாஜிக் கூட பார்க்காம குருட்டுத்தனமா ஷேர் பண்ணி விட்ட எஸ்.வி.சேகர்/ஒய்.ஜி.மகேந்திரா எல்லாம் பிராமணாளா? நோ நெவர்.

பஸ்ஸையோ ரயிலையோ பிடிச்சு லோ லோன்னு லொங்களிச்சு என்னை சித்தூர்ல வச்சும் பார்க்கலாம். அல்லது இந்த பதிவுலயும் பார்க்கலாம். அப்படித்தான் கடவுளும் . இந்த படைப்பிலும் பார்க்கலாம். உங்களிலும் பார்க்கலாம். உணரலாம்.

படைப்பில் படைத்தவனை உணரும் தன்மை இருப்பவன் “வாடிய பயிரை காணும் போதெல்லாம் “வாடுவான். கோர்ட்ல கேஸ் போடறம்னு வக்கணை பேசமாட்டான்.

அடிச்சு பிடிச்சு எதிர்கட்சி தலைவர்களை கூட்டி மோடியை பிடிச்சு காவிரியில தண்ணி விட சொல்லி தாலியறுப்பான்.
வள்ளுவன் கூட அந்தணர் என்போர் அறவோர்னு சொல்லியிருக்காரு . என்னை கேட்டா அறவோர் என்போர் அந்தணர்னு சொல்வேன்.
நிற்க இப்படியா கொத்த அறவோர் கண்ல நீங்க பட்டா லபக்குதான். இதைத்தான் ராஜயோகம்னு சொல்றது .

அடுத்த பதிவுல தொடர்ரேன்.

எச்சரிக்கை:

நம்ம நூல் விற்பனையில் அதிரடி சலுகைய அறிவிச்சது ஞா இருக்கும்னு நினைக்கேன். சலுகை தொடருதான்னு நேத்திக்கும் இன்னைக்கும் கூட மெயில் வருது .மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் ராசா..பிடிச்சாதான் காசு -பிடிக்காட்டி அன்புப்பரிசு . தூள் பண்ணுங்க..

உங்களுக்கும் ராஜயோகம் :22

4

அண்ணே வணக்கம்ணே !
கிரகங்களை வரிசைப்படுத்தறதுல சில முறைகள் இருக்கு சூரியன், சந்திரன்,செவ்,ராகு,குரு,சனி,புத,கேது,சுக்ரன். இது ஒரு முறை.

சூ,சந்திரன்,செவ்,புதன்,குரு,சுக்கிரன்,சனி,ராகு,கேது இது ஒரு முறை.ஆனால் நான் முடிஞ்சவரை முதல் முறையையே ஃபாலோ பண்றேன். ஏன்னா மேற்படி வரிசையில தான் தசைகள் வரும்.

இந்த தொடர்ல சூ,சந்திரன்,செவ்,ராகு என்ற 4 கிரகங்களை பற்றி அனலைஸ் பண்ணியாச்சு. இந்த சாப்டர்ல குருவை பத்தி தான் எழுதனும்னு கன்ஃபார்ம் பண்ணிக்க பழைய பதிவையெல்லாம் ஸ்க்ரால் பண்ண வேண்டியதாயிருச்சு. அப்பத்தேன் இந்த வரிசை படுத்தும் முறை பத்தி யோசனை வந்தது .

ஓகே இந்த பதிவுல குரு தரும் ராஜயோகத்தை பார்ப்போம்.

ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு வர்ணம் உண்டு. இதன் படி குருவுக்குரிய வர்ணம் பிராமண வர்ணம்.
பிராமணாள் எப்படி ராஜயோகத்தை தரமுடியும்? நேத்திக்கு முக நூல் பதிவு ஒன்னை பார்த்தேன்.அமுகவாம் .அஃதாவது அந்தணர் முன்னேற்ற கழகம். தமிழ் நாட்ல 40 லட்சம் பிராமணால் இருக்காய்ங்களாம்.

இந்த 40 லட்சம் பேர் ஓட்டுப்போட்டு ஒரு ஆள் முதல்வராயிர முடியுமா? நிச்சயமா முடியாது . அப்ப ஜாதகத்துல குரு புஷ்கலமா இருந்தாலும் ராஜயோகம் கிடையாதான்னு கேட்டுராதிங்க.

அவா ஓட்டு போட்டு செயிக்க முடியாதுதான்.ஆனால் “லாபி” பண்றதுல அவா தான் புலிகள். கல்கி வார இதழ்ல கல்கியும் நானும்னு ஒரு தொடர் வருது. அதை படிச்சவிகளுக்கு தெரியும். தெறமை கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் நூலாடும் அவாளை எல்லாம் எப்படி ப்ரமோட் பண்ணியிருக்காய்ங்கன்னு.

அந்த தொடர்லயும் கலைஞருக்கு பயந்து இ.ஒ பின்பற்றியிருந்தாலும் “அவா” தான் சாஸ்தி. கலைஞர் மொத முறை தேர்தல்ல செயிச்சும் -எமர்ஜென்சி எதிர்ப்பு காரணமா பல்பு வாங்கி -அடுத்த தேர்தல்ல எம்.ஜி.ஆர் கிட்டே ஆட்சியை இழந்த எப்பிசோட்ல அவா ரோல் ரெம்ப முக்கியம்.

எம்.ஜி.ஆர் உலகம் சுற்றும் வாலிபன் ஷூட்டுக்கு வெளி நாடு போக அந்த ப்ராஜக்டுக்கு பி.ஆர்.ஓ இதயம் பேசுகிறது மணியன்.

அது நாள் வரை குற்றம் சொல்ல முடியாத குணாளனா இருந்த வாத்யாரை அன்னிய செலாவணி மோசடிங்கற வலையில சிக்க வச்சு -சென்டர்ல கொண்டு போய் சரண்டர் பண்ணி -ஊரை ரெண்டாக்கி -இடையில கெடா வெட்டி பொங்கல் வச்சது அவா தான்.

பதிமூனு வருசமா கலைஞர் வனவாசம் அனுபவிக்க காரணம் தில்லியில ஒரு லாபி இல்லாததுதான். இதை புரிஞ்சுக்கிட்டு தான் கலைஞர் சென்டர் ரிலேஷன்ஸ்ல அடக்கி வாசிக்க ஆரம்பிச்சாரு .

தமிழ் நாட்லயாச்சும் பெரியார் பயத்துல பிராமண லாபி அடக்கி வாசிக்கும்.ஆனால் வட நாட்டு பக்கம் போனா சீன் ரிவர்ஸ். இப்ப எங்க பக்கமும் ரெம்ப பவர் ஃபுல். ரெண்டு தெலுங்கு மானிலத்துக்கும் சி.எம் என்னமோ சூத்திராள் தான்.ஆனால் கவர்னர் அவா. பலன் ? பிராமண வாரியம்.ரெண்டு ஸ்டேட்லயும்.

அவா உங்களுக்காவ எப்ப லாபி செய்வாங்க?

நீங்க பார்க்கவாச்சும் அவா மாதிரி இருக்கோனம். பிராமண லட்சணம்.அய்யராத்து மாமிய தாயா / பொண்ணை தங்கையா பார்த்து நடக்கனும். கடவுள் நம்பிக்கை உள்ளவரா இருக்கனும். வேதங்களை ஏத்துக்கனும்.கோவில் /குளம்/யாகம்/ஹோமம்/புராணம் /இதிகாசம் இதை எல்லாம் கேள்வி கேட்காம ஏத்துக்கறவரா இருக்கனும். அவாளுக்கு வர்ணாசிரம (அ)தர்மமும் ,மனு (அ)தர்மமும் கொடுத்திருக்கிற ப்ரிவெலெஜஸை அப்படியே ஏத்துக்கற கிராக்கியா இருக்கோனம்.

இதெல்லாம் எப்ப அமையும்? குரு உங்க ஜாதகத்துல பவர் ஃபுல் பொசிஷன்ல உட்கார்ந்திருக்கனும்.அப்பத்தேன் அமையும்.

சேரிப்பிள்ளைக்கு உப நயனம் பண்ணது கூட ஒரு அவா தான் (பாரதி) ஆனால் அந்தாளு கெட்டுப்போன பார்ப்பான். மாமூல் வாழ்க்கையில இருக்கிற அவா “செயிக்கிற குதிரை மேல “தான் காசு கட்டுவோ.

நெல்ல ஞா சக்தி ,பெரியவான்னா கவுரதை ,ப்ளானிங்லாம் உங்களுக்கு இருக்கோனம். முக்கியமா வேதம்,புராணம் ,இதிகாசம் இத்யாதியில இருந்து பொருத்தமான நேரத்துல பொருத்தமான கோட்ஸை வாந்தி பண்ணனும்.

குடும்பத்துல அப்பன் குடிகார நாயா இருந்தாலும் -அம்மாக்காரி அவுசாரியா இருந்தாலும் ரெபல் ஆகாம கமுக்கமா இருக்கோனம். தெருவுல கொலையே நடந்தாலும் ஓடி வந்து வீட்டுக்குள்ள தாப்பா போட்டுக்கோனம், சோத்துக்கு இருக்கோ இல்லையோ மந்திரவாதி கணக்கா செண்டு செண்டா பூவாங்கி பூஜை பண்ணனும்.

வீட்டு பொம்பளைங்களுக்கு ஆஸ்மா இருந்தாலும்,ப்ராங்கட்டிஸ் இருந்தாலும் வாரத்துக்கு 3 தபா வீடு பூரா அலம்பி விடனும். அப்பப்போ கணபதி ஹோமம் ,திவசம்னு அய்யரை வீட்டுக்கு கூப்டு செலவழிக்கனும்.

உங்களை போல “உருப்படற ” பசங்களோட மட்டும் சகவாசம் வச்சுக்கனும். பசி,பட்டினிய கூட சகிச்சுக்கிட்டு கிடக்கனும். எல்லாத்தையும் அம்பாள் பார்த்துப்பா. எங்க குடும்பத்துக்கும் ஒரு நல்ல நேரம் வரும் மாமான்னுக்கிட்டு கிடக்கனும்.

அஞ்சு வட்டி பத்து வட்டிக்கு வாங்கியாவது நவகிரக ஸ்தலம், அறுபடை வீடு,திருப்பதின்னு எங்கெங்கும் இருக்கும் அவாளுக்கு படியளந்துட்டு வரனும். மொதலாளி உங்களை /உங்க உழைப்பை சுரண்டோ சுரண்டுன்னு சுரண்டினாலும் அவனுக்கு ஜல் ஜக் போட்டுக்கிட்டு அரசு தேர்வுகளுக்கு ப்ரிப்பேர் ஆயிட்டிருக்கனும்.

இந்த கருமாந்திரத்தை எல்லாம் மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டு அவா ஆத்துக்கு ஒட்டடை அடிச்சு ,கக்கூஸு அடைச்சுக்கிட்டா அடைப்பை நீக்கி “பிரமணை” தூக்கோனம்.

இந்த நிபந்தனைகளை எல்லாம் பூர்த்தி பண்ணா எட்டு இடமும் குளிர்ந்து இருக்கும் போது -அவா சொந்தம் /பந்தம்/ஒன்னு விட்ட உறவு / கசின் இப்படி யாரும் சூட்டபிள் கேண்டிடெட் இல்லின்னா உங்களை லாபி பண்ணி ரெக்கமெண்டேஷன்ல ஒரு இடத்துல செருகி விடுவோ.

குருபலம் இந்த கேடு கெட்ட வாழ்க்கைய வாழ்ந்தாதான் ராஜயோகத்தை கொடுக்குமான்னு நீங்க பல்லை கடிக்கிறது கேட்குது.

டோன்ட் ஒர்ரி குரு பலத்தை வச்சு எப்படி ராஜயோகத்தை கரெக்ட் பண்றதுங்கற சூட்சுமத்தை அடுத்த பதிவுல சொல்றேன்.

உங்களுக்கும் ராஜயோகம் : 21

dad 50

அண்ணே வணக்கம்ணே !
நான் என்ன செய்யனும்னு என்னை விட “ஆத்தாவுக்கு” பர்ஃபெக்டா தெரியும். நான் என்ன செய்துக்கிட்டிருக்கேங்கறது ஒரு குன்ஸா புரிஞ்சாலும் நாமளும் ஆஃப்டர் ஆல் மன்சன் தானே! இந்த தொடரை டீல்ல விட்டுட்டு குரு பெயர்ச்சி அது இதுன்னு டைவர்ட் ஆகி ஏறக்குறைய ஒரு மாசம் ஆயிருச்சா..

சனம் யாரும் என்ன பாஸ் ..இந்த தொடரையும் ஊத்தி மூடிட்டிங்களானு கேட்கவே இல்லை. படக்குனு ஒரு டவுட் வந்திருச்சு. ஒரு வேளை ராஜயோகம்ங்கறதெல்லாம் சாமானிய சனத்துக்கு எட்டாத மேட்டரா? வெட்டியா எழுதிக்கிட்டிருக்கமானு சந்தேகம் வந்துருச்சு. எதுக்குனா நல்லது க்ளியர் பண்ணிக்குவம்னு ஒரு பதிவே போட்டு கருத்து கேட்டன்.

பத்து பேராச்சும் கருத்து சொன்னாதான் தொடர் தொடரும்னு பயம் கூட காட்டினேன். ஒன்னம் பேரல.ஆனால் நண்பர் சக்தி வேல் நான் ஒருத்தன் சொன்னா அந்த சக்தியும் -வேலவனும் ஒரே குரல்ல சொன்னாப்லனு ஒரு கமெண்ட் போட்டிருந்தாரு . சுஜாதா ஒக்காபிலரியில சொன்னா “சுஸ்தாயிட்டன்” (ஸ்வஸ்த் =ஆரோக்கியம் )

கடந்த சாப்டர்ல ராகு எப்படியெல்லாம் ராஜயோகத்தை தரக்கூடும்னு சொல்லியாச்சு. இந்த சாப்டர்ல ஜாதகத்துல ராகு பல்பு வாங்கியிருந்தா ராஜயோகம் பெற என்ன செய்யனும்?னு சொல்லோனம்.

நான் எல்லாம் ஆளை பார்த்ததுமே “பார்ட்டி ஜாதகத்துல ராகு பல்பு போல “னு கரெக்டா கெஸ் பண்ணிருவன். விவரம் தெரிஞ்சவிக ஜாதகசக்கரத்துல ராகு எங்க இருக்காருன்னு பார்த்து டிசைட் பண்ணிரலாம்.

இது ரெண்டுமே கைவராதவிக என்ன செய்ய?

1.உங்க நிறத்தை பாருங்க. கருப்புன்னதும் பயந்துக்காதிங்க. கருப்புல எத்தனையோ விதம் இருக்கு. சூட்சுமமா பார்த்தா கொஞ்சம் நீலம் கலந்தாப்ல தெரியும்.
2.உங்க ஃபிசிக்கை பாருங்க. ஒன்னு வயசுக்கேத்த வளர்ச்சி இருக்காது .அல்லது தாறுமாறா சதை போட்டிருப்பிங்க
3.அன் வாரன்டட் மோஷன்ஸ்/ வாமிட்டிங் சென்சேஷன்
4.பிறமதத்தவர் மேல இனம் புரியாத கடுப்பு/துவேஷம்
5.ஈசிமணி மேல கவர்ச்சி – சட்ட விரோதமான வழியில சம்பாதிக்கிறவன்லாம் நல்லாத்தானே இருக்காங்கற ஃபீல் -நாமளும் செய்தா என்ன என்ற எண்ணம்

6.சினிமா மேல ஒரு கவர்ச்சி /போதை / சினிமாவுக்காக அதிகம் செலவழிக்கிறது /அதீத முக்கியத்துவம் தர்ரது .
7.பிக் பாக்கெட் /செயின் அறுப்பு /கதவை உடைத்து கொள்ளை இத்யாதி சம்பவத்துல விக்டிமா இருக்கிறது
8.நல்லா போயிட்டிருக்கும். திடீர்னு ஒரு அவமானம் /அவப்பெயர் ,விதவை பெண் ஒருவரால் பல்பு
9.ஓரப்பார்வை பார்க்கிறவிக ,பூனைக்கண் கொண்டவிகளால நஷ்டம்/கஷ்டம்
10.லைஃப் பார்ட்னரோட செயல்பாடுகள் சந்தேகாஸ்பதமா தோன்றது – ஒரு நாளில்லை ஒரு நாள் கையும் களவுமா பிடிக்கனுங்கற எண்ணம்
11.பாம்பு /பூச்சி பொட்டு கடிச்சுர்ரது / ஃபுட் பாய்சன்/மெடிக்கல் ரியாக்சன்

மேற்படி 11 விஷயத்துல பாதி சூட் ஆனாலும் உங்க ஜாதகத்துல ராகு பல்பு வாங்கியிருக்காருனு அருத்தம்.

ஆனாலும் இந்த சமயம் பார்த்து எலீக்சன் வருது .கு.பட்சம் கவுன்சிலரா நின்னே ஆகனும்னா என்ன பண்ணனும்?

1.நோட்டிஃபிகேஷன் வரதுக்கு மிந்தியே அன்னிய மதத்தார் வாழும் பகுதிகளை விசிட் அடிச்சு உங்களால முடிஞ்ச அடிப்படை வசதிய செய்து கொடுங்க.
2.மதராசா ,மெஷினரிகள் நடத்தும் பள்ளிக்கு உங்களால முடிஞ்ச நன் கொடைய கொடுங்க.
3.இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை.
4.எலீக்சன் முடிஞ்சு ரிசல்ட் வர்ர வரைக்கும் லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது.
5.இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.எலீக்சனுக்கு மிந்தின ராத்திரி ஆப்பரேஷன்ல டைரக்டா இன்வால்வ் ஆகாதிங்க.

6.சொந்த முதலீட்டில் / நீங்களே டெசிஷன் மேக்கர் என்ற நிலை இருந்தால் மேற்சொன்ன தொழில்கள் கூடவே கூடாது. இதுவே நீங்கள் ஒரு ஊழியர் மட்டுமே என்றால் பரவாயில்லை.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது.
7.பையில எப்பவும் க்ளூக்கோஸ்/ எலக்ட் ரால் பாக்கெட்லாம் வச்சுக்கோங்க. டீ ஹைடரேஷன் ஆயிராம பேலன்ஸ் பண்ணிக்கிட்டே இருங்க.
8.மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. சொந்த ட்யாக்னைஸ்/ சொந்த ப்ரிஸ்கிரிப்ஷன் வேண்டாம். ரியாக்ஷன் நடக்கலாம்.
9.வெளி இடங்களில் உணவு உண்பதை தவிர்க்கவும். குடி நீர் கூட கம்பெனி மாத்தாதிங்க.
10.கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு/முக்கியமா சட்ட விரோத வியாபாரம் செய்றவிக சங்காத்தம் வேணாம் .ஷேர் மார்க்கெட் வேண்டவே வேண்டாம்)

11. கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.
12.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.
13.உலக மகா கொள்ளைகள், கொள்ளைக்காரர்கள் ,உலக மகா சதிகள் போன்ற புத்தகங்கள் படித்தல்.
14.மேஜிக் கற்றுகொள்ளுதல், அன்னிய மொழி கற்றல்.
15.தியானம் யோகம் பயிலுதல், யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படித்தல் இவை நல்ல பரிகாரங்களாகும்.

16,மேலும் தனித்திருக்கும் போது அறையில் குறைவான வெளிச்சத்தை மெயின்டெய்ன் பண்ணலாம். நைட் ஷிஃப்ட் ட்யூட்டி வந்தா தாராளமா ஏத்துக்கலாம்.
17.தினசரி ஒரு மணி நேரம்-வாரம் ஒரு தினம் காவி உடை அணியவும் . இயன்றவரை சன்யாசி போலவே வாழ வேண்டும். எளிமையிலும் எளிமையான வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளவும்.
18.பிரச்சார வாகனத்து டேஷ் போர்ட்ல மும்மதங்களின் அடையாளங்களையும் வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு:
ராகு பல்பு வாங்கியதன் லட்சணங்கள் இல்லாதவர்களும் இந்த பரிகாரங்களை பின்பற்றலாம். ராகுவின் பலம் சேமிக்கப்பட்டு ஓட்டுகள் குவியும்.

dad

உங்களுக்கும் ராஜயோகம் :20

Exif_JPEG_420
Exif_JPEG_420

அண்ணே வணக்கம்ணே !

உங்களுக்கும் ராஜயோகம்ங்கற தலைப்புல ஒவ்வொரு கிரகமும் எப்படி ராஜயோகத்தை தரக்கூடும் ஒரு வேளை குறிப்பிட்ட கிரகம் உங்க ஜாதகத்துல பல்பு வாங்கியிருந்தா என்ன மாதிரி பரிகாரங்களை செய்துக்கலாம்னு எழுதிக்கிட்டு வரன்.

தேர்தல் காலத்துலயே ஆரம்பிச்சு தேர்தல் முடிவு வரதுக்குள்ள பைசல் பண்ணிரனும்னு நினைச்சுதான் ஆரம்பிச்சம். ஏனோ இப்படி இழுக்குது .
ராகு எப்படிங்காணும் ராஜயோகத்தை தருவார்னு சனாதனிகள் பொங்கி எழலாம். அவியள திருவண்ணாமலை போலீஸ் வெளுக்கட்டும் .
நாம மேட்டருக்கு போயிரலாம். ஒவ்வொரு கிரகத்துக்கும் சில காரகங்கள் உண்டல்லவா? அந்த காரகங்கள் வழியே ராஜயோகம் வர்ரதை பார்த்துக்கிட்டுதானே இருக்கம்.

1.சினிமா
அந்த நாள்ள ரீகன், எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் முதல் இன்றைய ஜெ வரை . எதிர்காலத்துல இந்த சீனா மூனாவும் லிஸ்டுல வரலாம். ஏன் இந்திய பிரதமராவே கூட ஆகலாம்.ஆரு கண்டா?

2.லாட்டரி
லாட்டரி டிக்கெட் வித்த மார்ட்டின் என்னவோ இளைஞன் படத்துக்கு கலைஞரை புக் பண்ற அளவுக்கு தான் வளர்ந்தாரு . இங்கே மேட்டர் லாட்டரி விற்கிறதில்லை.லாட்டரி போல. அரசியல் வாய்ப்பு லாட்டரி போல வர்ரது. வந்துர்ரது பெருசுல்ல. அதை தக்க வச்சுக்கிறதுதான் ராஜயோகம்.
என்.டி.ஆர் அரசியலுக்கு வந்த புதுசுல எத்தனயோ டாக்டர்/லாயர்/டாக்ஸி ஓனருக்கு எல்லாம் வாய்ப்பை அள்ளி விட்டாப்ல ( அவிக ஜாதகத்துல ராகு செமயா இருந்தாப்ல இருக்கு )இன்றைய அதிமுகவுலன்னா சொல்லவே தேவையில்ல . ராகு நல்லாருந்தா தான் வாய்ப்பே.
எங்க பக்கத்துல சந்திரபாபுவோட மவன் ஜல்லியடிச்சுக்கிட்டிருக்காப்ல .அவிக அப்பா அந்த பதவில இருக்கிறவரை கதை பண்ணலாம். பிறவு?

3.சாராயம்:
இந்த ஃபீல்டுல இருந்து அரசியலுக்கு வந்த கேரக்டர் தொகுதிக்கு ஒன்னு நிச்சயமா உண்டு . ஆனால் ஊரை சொன்னாலும் பேரை சொல்லப்படாதில்லையா? (ஆட்டோ வந்துரும் பாஸ்)

4.ரகசியம்:
ராகுன்னாலே ரகசியம் தான். அன்றைய இந்திரா முதல் இன்றைய சோனியா வரை சோப்ளாங்கிகளை கூட வைத்துக்கொண்டிருக்க காரணம் அந்த சோ’ங்களுக்கு இவிக ரகசியங்கள் தெரியும். இன்னும் ஒரு படி மேல போனா ரகசிய உறவுகளே கூட ராஜயோகத்தை தந்துர்ரதா பேசிக்கிடறாய்ங்க. உ.ம் கன்ஷிராம் -மாயாவதி

5.மாஃபியா:
இன்னைய தேதிக்கு கூட மாஃபியா தொடர்புள்ள எம்பிக்கள் கு.பட்சம் அரை சதமாவது இருப்பாய்ங்க. இல்லேனு சொல்ல முடியுமா?

6.சூதாட்டம்:
அந்த பக்கம் எப்படியோ தெரியாது .ஆந்திராவுல சீட்டாட்ட க்ளப் நடத்தியே எம்.பி,எம்.எல்.ஏ ஆகி பழைய கெத்துக்காவ இன்னைக்கும் தொடர்ராய்ங்க.

7.கள்ளக்கையெழுத்து:
க.கை மட்டுமில்லை ,குரலை மாத்தி பேசறது ?இதுவும் ராகு காரகம் தான். உதாரணங்கள் டக்குனு ஸ்பார்க் ஆகல. உங்களுக்கு ஸ்பார்க் ஆனா கமெண்ட்ல சொல்லுங்க.

8.ஷேர் மார்க்கெட் :
அரசியல் வாதிகளோட பணம் ஷேர் மார்க்கெட்ல புழங்கும் .தேர்தல் சமயம் அவிய கைக்கு போய் சேரும்.இதெல்லாம் தெரிஞ்ச கதை தானே.
9.வரிஏய்ப்பு /கடனை எகிறடிக்கிறது

10.கள்ளத்தோனி :
பாவம்..வைகோ, சீமான் ஜாதகத்துல எல்லாம் ராகு சரியில்லை போல .இல்லின்னா முதல்வராகி மக்களை டர்ராக்கியிருப்பாய்ங்க.
ராகு காரகம்னு இன்னம் என்னெல்லாம் இருக்கோ எல்லாமே ராஜயோகத்துக்கு வழி வகுக்குதுங்கோ. இயற்கைக்கு புறம்பானது ,சமூக வழக்கங்களுக்கு புறம்பானது எல்லாமே ராகு காரகம் தான்.

மக்களை ஒரு இடத்துல கூட்டி பேசிட்டு போறது ரொட்டீன். இது குரு காரகம் . மக்கள் இருக்கிற இடத்துக்கே போறேன்னு என்.டி.ஆர் கிளம்பினாரு .அது ராகு காரகம்.

இங்கே ஒரு ஜெனரல் ரூல் ஒன்னை ஞா படுத்தனும். சுபகிரகங்களுக்கு பகலில் பலம் .பாப கிரகங்களுக்கு இரவில் பலம். ராகு பாம்பு கிரகம் +பாவ கிரகம்.
ஒரு ஜாதகத்துல ராகு பெட்டர் பொசிஷன்ல இருந்தா சனம் தூங்கும் போது இவிக விழிச்சிருப்பாய்ங்க. சனம் விழிச்சிருக்கும் போது இவிக தூங்குவாய்ங்க.
நம்மை டிஸ்டர்ப் பண்றது பக்கத்து வீட்டு ஹோம் தியேட்டர், கீழ் போர்ஷன் குழந்தையின் அழுகை ,வீட்டம்மா போடற மிக்சி/கிரைண்டர் மட்டுமில்லிங்கோ ..சக மனுஷங்களோட எண்ண அலைகளும் தான்.

உதாரணத்துக்கு நம்ம ” என் தேசம் -என் கனவு ” மேட்டரையே எடுத்துக்கங்க. பகல்ல விழிச்சு -ராத்திரியில தூங்கி போற சனம் என்ன நினைக்கும்?
கொய்யால இவர் லெட்டர் போடுவாராம் .ஒடனே பி.எம்,சி.எம்.லாம் உடனே அலறியடிச்சு இவர் யோசனைகளை அமலாக்கிருவாய்ங்களாம்னு தான் நினைக்கும்.

இது தொடர்பான வேலைகளை பகல்ல செய்றத விட – அல்லாரும் தூங்கின பிறவு செய்தா? மேற்படி சனங்களோட எண்ண அலைகள் டிஸ்டர்ப் பண்ணாதில்லையா?

ராகுங்கறவர் இந்துமதம் அல்லாத பிறமதங்களுக்கு காரகம். இந்துக்கள் மெஜாரிட்டிங்கறதால அவிக செக்யூர்டா ஃபீல் பண்ணுவாங்க. மதம்ங்கற கோட்டை தாண்டி ரோசிச்சு ஓட்டு போடுவாய்ங்க.

இப்பல்லாம் இலங்கையில போல மெஜாரிட்டி மக்களுக்கு இன்செக்யூரிட்டிய ஊட்டற வேலைய பா.ஜ.க செய்துக்கிட்டிருக்கு . இந்த ஃபார்முலா உ.பில ஒர்க் அவுட் ஆகிப்போச்சுன்னா கோவிந்தா கோவிந்தா ..

மேட்டருக்கு வரேன் .இந்துக்களல்லாதவர்கள் கொஞ்சம் இன்செக்யூர்டா ஃபீல் பண்ணுவாய்ங்க.ஆகையால் தங்களுக்குள்ள சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மதங்கற கோட்டை தாண்டாம ஓட்டு போடுவாய்ங்க. பல்க்கா போல் பண்ணுவாய்ங்க.

ஒருத்தன் ஜாதகத்துல ராகு நெல்லா இருந்தா அவனுக்குள்ள நேச்சுரலாவே ஒரு ரிலிஜியஸ் ஹார்மனி இருக்கும். எண்ணம் செயலானா இன்ன பிற மதத்தினரின் ஆதரவு அவனுக்கு சாலிடா கிடைக்க வாய்ப்பிருக்கு.

மத துவேஷம் உள்ளவன்லாம் நூத்துக்கு 99.99% சர்ப்பதோஷ கேஸாதான் இருப்பாங்கறது என் ஹஞ்ச்.

ஓகே ராகுவுக்கும் ராஜயோகத்துக்கும் உள்ள லிங்க் புரிஞ்சிருக்கும்னு நினைக்கேன். உங்க ஜாதகத்துல ஒரு வேளை ராகு பல்பு வாங்கியிருந்தா அவரை எப்படி டைவர்ட் பண்ணி ராஜயோகத்தை அனுபவிக்கிறதுங்கற மேட்டரை அடுத்த பதிவுல சொல்லிர்ரன். உடுங்க ஜூட்டு .

டெய்ல் பீஸ்:
நேத்திக்கு “பக்தி ஒரு தோஷம் -நாத்திகம் ஒரு பரிகாரம்”னு முக நூல்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன். சனம் மேல விழுந்து பிடுங்க போவுதுனு நினைச்சேன்.ஆரும் கண்டுக்கிடல. அனுபவஜோதிடம் வாசகர்களாவது கண்டுக்கிறாய்ங்களா பார்ப்பம்னு இங்கே தட்டிவிட்டிருக்கன்.

உங்களுக்கும் ராஜயோகம் :19

Gopalapuram

அண்ணே வணக்கம்ணே ! ராஜயோகம்னா தெரியும்ல? ஆட்சி/அதிகாரம். இந்த ராஜயோகத்தை ராஜகிரகங்கள் மட்டும் தர்ரதில்லை . எல்லா கிரகங்களும் தரமுடியும். ஏன்னா காலமாற்றம் அப்படி இதை எல்லாம் ஏற்கெனவே சொல்லி தொலைச்சுட்டதால ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்டு.

கடந்த பதிவுல செவ் பல்பு வாங்கியிருந்தா என்னெல்லாம் நடக்கும்? நடக்கறதை நடக்க விட்டா அதுவே எப்படி பரிகாரமா ஒர்க் அவுட் ஆகுதுன்னு சொல்லியிருந்தேன் ( நம்ம வாழ்க்கையில இருந்தே )

இந்த பதிவுல பாய்ண்ட் டு பாய்ண்ட் பரிகாரங்கள் தான். பதிவுக்கு போயிரலாமா?

1.போலீஸ் ஆஃபீசர் போன்ற கெட் அப்,ஹேர் ஸ்டைல் ,மீசை என்று மாறவும். சஃபாரி சூட் அணியலாம்.(பாக்கு நிறம்) கூலிங் க்ளாஸ் அணியும் வழக்கம் இருந்தால் பிரவுன் கலர் .தொப்பி அணியும் வழக்கம் இருந்தால் பிரவுன் கலர் .மார்ஷல் ஆர்ட்ஸ் பழகவும்.கு.பட்சம் ட்ராக் சூட் போட்டு நடை பயிற்சி .

2.கழுத்தில் முருகன் கையில் உள்ள வேல் டாலர் /பாக்கு நிற கயிற்றில் கோர்த்து அணிதல்.கந்தர் சஷ்டி கவசத்தில் “குத்து குத்து கூர்வடிவேலால் என்று துவங்கும் பகுதியை மட்டுமாவது மனப்பாடம் செய்து அவ்வப்போது சொல்லி வரவும்.ரத்த தானம் செய்க. பிரவுன் கலர் பர்சில் 12 கைகளிலும் ஆயுதம் தாங்கிய முருகன் படம். மொபைல்/பிசி/லேப்டாப்ல எரிமலை,தீவிபத்து ,யுத்தம் தொடர்பான ஸ்க்ரீன் சேவர் வச்சுக்கங்க.
4.வீட்டு ஹாலில் போர்க்கள காட்சி கொண்ட போஸ்டர்.போர் வீரன் சிலை .ஹாலில் உள்ள சோஃபா கவர் /ஸ்க்ரீன்ஸ் எல்லாமே பிரவுன் நிறம். இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை தாயும் செய்தல் நலம்.கூட்டு தொகை 9 வர்ர வாகனங்களை தவிர்க்கவும்.வண்டி நிறம் பிரவுன் எனில் நல்லது . வண்டியில் எங்கேனும் ஏதேனும் ஒரு ஆயுத வடிவத்தை ஸ்டிக்கரிங் செய்து கொள்ளவும்.

5.முதல் குழந்தையை உடனே பெற்றுக்கொள்ளவும் (ப்ளான் பண்றது /தள்ளி போடறதுல்லாம் வேண்டாம்) .மனைவி கருவுற்றிருக்கிறார் என்று தெரிந்த பின் டேக் ஆல் ப்ரிக்காஷன்ஸ்.ஒரு வேளை முதல் கரு அபார்ட் ஆயிட்டாலும் பொஞ்சாதிக்கு நல்ல பூஸ்ட் கொடுத்து அடுத்த முயற்சியில் குழந்தை பெற்றுக்கொண்டு விடவும்.முருகன் கை வேலை தியானிக்கவும்.வேல் பூசை செய்யவும்.குழந்தைகளுக்கும் முருகன் பெயர்களையே சூட்டவும்.இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை குழந்தைகளும் செய்தல் நலம்.

7.சமையலுக்கு நல்லெண்ணெய் (செக்கு) உபயோகிக்கவும்.ரத்த விருத்தி -ரத்த சுத்திகரிப்புக்காக ப்ராக்டிக்கலாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்.(மருத்துவர் ஆலோசனை பெற்று) உ.ம் சிகப்பு நிற காய்கறிகள் அதிகம் சேர்ப்பது ,ரேப்பிட் ப்ரீத்திங்,பிராணயாமம், வியர்வை வெளிப்படும்படி நடை பயிற்சி ,யோகா இப்படியாக. இடுப்பில் ஏதேனும் ஆயுதம் ( ஃபேன்சி ஸ்டோர்ல கிடைக்கும் -கழுத்துல போட்டுக்க விற்பாங்க. அதை இடுப்புல அரை ஞான் கயிற்றில் கட்டி கொள்க)இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை மனைவி/கணவரும் செய்தல் நலம்.

8.வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், சத்ரிய குலத்தினர், சமையல் , போட்டி, ஸ்போர்ட்ஸ், , பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம் ஆகிய விஷயங்களில் முடிந்தவரை விலகி இருங்கள் தவிர்க்க முடியாத பட்சம் அலார்ட்டா டீல் பண்ணுங்க.

வருடம் ஒரு முறை / தேர்தலுக்கு 45 நாட்களுக்கு முன் ஒரு சேவல் ஒன்றை விலைக்கு வாங்கி முருகன் கோவிலுக்கு சென்று 9 சுற்று சுற்றி -9 ஆவது சுற்றில் அந்த சேவலை அங்கேயே விட்டு விட்டு /அல்லது கோவில் மேலாளரிடம் ஒப்படைத்து விட்டு வந்துவிடவும்.

9.சொத்து, சேமிப்புக்க‌ள்,முதலீடு ,தூர‌பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்தொடர்பான டாக்குமென்ட்ஸ் பாக்கு நிற ஃபைல்ல போட்டு ஃபைல் மேல வேல் ஸ்டிக்கர் ஒன்னு ஒட்டி வைங்க. தூரப்பயணத்தின் போது பிரவுன் கலர் ஏர் பேக் . கூட்டு தொகை 9 வர்ர வாகனங்களை தவிர்க்கவும்.இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை தந்தையும் செய்தல் நலம்.

12.படுக்கையறையில் போர்க்கள காட்சி உள்ள போஸ்டர், போர் வீரன் சிலை .படுக்கை அறையின் பெயிண்ட்,பெட் ஸ்ப்ரெட்,பில்லோ கவர் அனைத்தும் பாக்கு நிறம். செருப்பும் இதே நிறம்.

(குறிப்பு: என்னடா சீரியல் நெம்பர் எகிறியிருக்கேனு கன்ஃபீஸ் ஆயிராதிங்க. இது சீரியல் நெம்பர் இல்லிங்ணா செவ் ஜாதகத்துல லக்னாத் எத்தனையாவது வீட்ல நிற்கிறாருனு காட்டுதுங்ணா)
ஸ்..அப்பாடா அடுத்த பதிவுல ராகு ஜாதகத்துல வலிமையா இருந்தா எப்படி ராஜயோகம் கொடுப்பாரு..பல்பு வாங்கியிருந்தா எப்படி ஆப்படிப்பாருன்னு பார்ப்பமா?
உடுங்க ஜூட்டு