பெண் @ 40 வயசு :எல்லாம் க்ளோஸ் தானா?

பெண் எழுத்தாளர் அமரர் லட்சுமிய தெரியாதவுக இருக்க முடியாது.
குங்குமத்துல(?) இவர் எழுதின  காவிரியை போலனு ஒரு தொடர் கதைய சூட்டோட சூடா படிச்சது ஞா வருது. இதுக்கு தான் சாகித்ய அகாதமி அவார்ட் கிடைச்சுதாம். என்னை பொருத்தவரை “மிதிலா விலாஸ்” சூப்பர். இன்னைக்கும் ஒரு மல்ட்டி ஸ்டார் ஃபேமிலி என்டர்டெய்னரா எடுக்கலாம்.(பாலகுமாரனை இவரது பிள்ளைப்பேறு நூல் கவர்ந்திருக்கிறது.)

எனக்கென்னமோ இந்தம்மா ஒரே கதையை மறுபடி மறுபடி எழுதி அந்த ப்ராசஸ்ல  மிதிலாவிலாஸ் கரீட்டா சிட் ஆச்சுன்னு ஒரு சம்சயம்.
நிற்க “தேடி கொண்டே இருப்பேன்”னு ஒரு கதை .லேசா கிரைம், அடல்ட்ரி, சஸ்பென்ஸ் ,த்ரில்லர்னுல்லாம் ட்ரை பண்ணியிருக்காய்ங்க.
மொதல்ல கதை சுருக்கம்:

தமிழ் சினிமா மாதிரி கிராமத்து பெரியதனக்காரர் மகன் -ஏழை வாத்யார் மகள் லவ்ஸு. ஈரோ வேற பொண்ணை கட்டிக்கிறாரு. ஈரோயின் அவனை இன்சல்ட் பண்ணனும்னுட்டு வேற ஒரு பார்ட்டியோட நெருக்கம் காட்டறாய்ங்க. அவன் ஏற்கெனவே மேரீட்.  இதை மறைச்சு வவுத்துல புள்ளைய கூட கொடுத்து வச்சிருக்கான்.

இன்னொரு பார்ட்டிக்கு கூட்டி வேற கொடுக்கிறான், தான் ஹோட்டல்ல ரூம் போட்டதா தகவல் கொடுத்து அந்த ரூம்ல தேர்ட் பார்ட்டிய வச்சு மாமா வேலை.

அந்த தேர்ட் பார்ட்டிக்கு நிறைய எதிரிங்க.ஆரோ ஆள் வச்சு போட்டு தள்ளிர்ராய்ங்க. அந்த நேரம் பார்த்து ஈரோயின் என்டர் ஆகி வாய்ல கைய வச்சு “கொலை கொலை”ன்னு அலர்ராய்ங்க. போலீஸ் வந்து தூக்கி உள்ள வச்சுருது.

காதலன் உன் பிள்ளைய காப்பாத்தறேன், அப்பனை காப்பாத்தறேன்னு தேர்தல் வாக்குறுதி கணக்கா அள்ளி விட்டு தனக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பே வெளிய வராம பார்த்துக்கறாரு.

ஈரோயின் ஆயுள் தண்டனை அனுபவச்சிட்டு வெளிய வர்ராய்ங்க. ஈரோ இப்பம்  பெரிய பத்திரிக்கையோட அதிபர். பொஞ்சாதி செத்து விடோயர்.மகன்,மகள் எல்லாமே அப்ராட்+ரேஷ்னல். மறுமணம் பத்தி ப்ரஷர் பண்றவுக தன் ரிப்போர்ட்டரை வச்சு ஈரோயினுக்கு  வீடு முதற்கொண்டு எல்லா வசதியும் பண்றாரு.

பிள்ளை அனாதை இல்லத்துல செத்துபோயிட்டான்னு தெரியுது. இந்தம்மா வேற ஒரு சிறுமியை தத்தெடுத்துக்குது. ஈரோ வராரு நாம ஒன்னு சேரலாம்ங்கறாரு .இவிக அக்மார்க் தமிழ் சினிமா ஹீரோயினு மாதிரி நான் களங்கப்பட்டுட்டேன் -பூஜைக்கு உதவாத மலர் அது இதுன்னு வசனம் விட்டு கழட்டி விட்டுர்ராய்ங்க.

அக்கா அக்கான்னு ஒட்டிக்கிட்ட ரிப்போர்ட்டர் பையன் எனக்கு ஆருமில்லை நீங்களே அக்காவா இருங்க .நான் காப்பாத்தறேனு தன் பேச்சிலர் ரூமுக்கு அழைச்சிட்டு போயிர்ரான்.

லட்சுமி அம்மா எழுதின காலத்துக்கு இது சாடிக்கேத்த மூடியா ஒர்க் அவுட் ஆகியிருக்கலாம்.ஆனால் 2014 ல் படிக்கும் போது செம கடுப்பு.
இத்தினிக்கும் ரைட்டர் ஒரு டாக்டர்.பிள்ளைப்பேறு இத்யாதி பத்தி புஸ்தவம்லாம் எழுதியிருக்காய்ங்க. நாட் நாட்லயே கலப்பு திருமணம் பண்ணியிருக்காய்ங்க. தென் ஆப்ரிக்காவுல வாழ்ந்திருக்காய்ங்க.ஆனாலும் பாருங்க என்ன ஒரு ஹிப்பாக்கிரசி.

பொம்பளைக்கு நாற்பது வயசாயிருச்சா எல்லா முடிஞ்சுருமா? அவள் வெறும் கட்டை தானா?புள்ளைக்காக பல்லை கடிச்சுக்கிட்டு தண்டனை காலத்தை கழிக்கனும்.புள்ள செத்துட்டான்னா ஒடனே சிறுமியை தத்தெடுக்கனும். செம கடுப்ஸ்.

இதை விட ரிப்போர்ட்டர் வெர்சஸ் ஈரோயின் மத்தியில அக்கா பிசினஸை கொண்டு வராம, பத்திரிக்கையோட எம்.டி மனிதாபிமானத்துல உதவறாருன்னு நினைச்சு இவன் சின்சியரா உதவிக்கிட்டிருக்க – எம்.டி “காதல் கத்திரிக்காய்னு ஜொள்ளுவிட  நான் என்ன யூத்தா? அவளோட கதையை தொடரா போட்டா சர்க்குலேஷன் எகிறிக்கும் தெரியுமா”ன்னு பிசினஸ் லைக்கா பேச இவன் வேலைய விட்டு வெளிய வந்து  ஈரோயினி கிட்டே “இங்கே இனி ஒரு நிமிட் கூட இருக்க கூடாது  நீங்க வந்துருங்க நண்பர்களா இருப்போம்”னு சொல்ராப்ல பாலிஷ்டா முடிச்சிருக்கலாம். அல்லது ப்ரப்போஸ் பண்றாப்லயும் முடிச்சிருக்கலாம்.

அட ..அந்தம்மா பில்டப் பண்ண மாதிரி பத்திரிக்கை எம்.டி உத்தமர்னே வச்சுக்கிட்டா ரெண்டு கிழத்தையும் சேர்த்து வச்சிருக்கலாம்.
ஓ அந்த காலம் அப்படி போல.. லூஸ்ல விடறா முருகேசா.. இப்பம் மட்டும் என்ன ஈரோயினிக்கு புருசன்/காதலன் செத்தான்னா எல்லாம் போச்சுன்னு தானே படமே எடுக்கிறாய்ங்க.
லட்சுமிம்மா ஐம் சாரி !

ஆண் பெண் வித்யாசம் : 5 ஆம் பாவம்

அண்ணே வணக்கம்ணே ! ஆண்,பெண் வித்யாசம்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு டீல்ல விட்டது ஞா இருக்கலாம். அதை தொடர உத்தேசம். தொடர்ந்து எழுதறதுல ஒரு சிக்கல் இருக்கு. ஒன்னு சுட்டுர்ராய்ங்க. ரெண்டு நமக்கே போரடிச்சுருது. read more

ஒரு செட் வாங்கினால் ஒரு செட் இலவசம்

ஆன்லைன்ல 419 பேர் பணம் கட்டி முன் பதிவு செய்து காத்திருக்கும் 4 நூல்கள் 2014,பிப்ரவரி 7 முதல் விற்பனைக்கு தயார்.
5 வருடங்களில் பத்து லட்சம்+ ஹிட்ஸ் கண்ட “வலையுலக மாத்ரு பூதம்” – “ஜோதிட ஓஷோ ” சித்தூர் முருகேசன் எழுதி வெளியிட்டிருக்கும் இந்த நூல்களை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் “வாழ்விலான சிக்கல்களுக்கு சிக் தீர்வுகள்”
நூல் தலைப்புகள்:
1.பணம் பணம் பணம்
2.ஜோதிடமும் தாம்பத்யமும்
3.ஆண் பெண் வித்யாசங்கள்
4.ஜோதிடம்360(மறுபதிப்பு)
ஒவ்வொரு நூலும் பக்கங்கள்:80, கிரவுன் சைஸ் மல்ட்டி கலர் ரேப்பர் விலை:ரூ.125
ரூ.500 செலுத்தி 4 நூல்களும் செட்டா வாங்கினா இன்னொரு செட் இலவசம் நோ கூரியர் சார்ஜ் ! (இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும்)
ஒரு நூலின் ஒரு பிரதி வாங்கினால் அதே நூலின் ஒரு பிரதி இலவசம் கூரியர் கட்டணம் தனி
நூல் விலையை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு:
Name: Sundaresan Murugan A/C No: 030333022274
Name of the Bank : State Bank of India
Branch Name: GREAMSPET Branch Code: 7083
IFSC Code: SBIN0007083
Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP
Pincode: 517002 Swift Code: N/A RTGS : YES
எம்.ஓ அனுப்புவோர்: சித்தூர் முருகேசன்,17-201,கும்மரா தெரு,சித்தூர் ஆ.பி 517001 முகவரிக்கு அனுப்பவும்.கூப்பனில் உங்கள் முகவரி கட்டாயம்.
நூல்கள் அனுப்பவேண்டிய விலாசத்தை swamy7867@gmail.com மெயில் முகவரிக்கு உடனே தெரிவிக்கவும்.

தல முருகேசன் தாத்தாவாய்டாரு…..

// இந்த சீமாந்திரா லீடர்ஸ் ஒன்னு பண்ணலாம் ” சோனியாஜீ ! ஒங்களுக்கு 11 எம்பி சீட் தானே வேணம் . எங்க பக்கத்துல ஒரு 11 சீட்டுல உங்க வேட்பாளரை எதிர்த்து வேட்பாளரையே நிறுத்தமாட்டோம்.மொதல்ல தெலுங்கானாவை வாபஸ் வாங்குங்கன்னு சொல்லலாம்.//

ஒரு சீட் கூட அதுவும் இந்தியா அளவில் கா கட்சிக்கு கிடைக்காத படி இந்த முறை மக்கள் வாக்களித்தால் … கா கட்சி மட்டுமல்ல ப கட்சிட்யும். மற்ற கட்சிகளும் திருந்தவும் …

வெளி நாட்டினர் சொந்த நாடு திரும்பி டில்லி சுத்தமாகவும் வாய்ப்பு ஏற்படும்…

தல .. பதிவ பார்த்தா .. உங்களுக்கு வயசான் பீலிங்க் ரொம்ப வந்துடுச்சோன்னு யோசனையா இருக்கு…

ஒஷோவோட குரங்கு 7 ரொட்டி கதை படிச்சீருப்பீங்க தானே… எல்லா மனிதர்க்ளும் இயல்பில் ஒன்னேதான்… என்ன அங்க இல்லாது இங்க பார்த்தா இங்க இல்லாதத அங்க பார்க்கலாம்பார்…

இது அப்படியே காலத்துக்கும் பொருத்தி பார்க்கலாம்…
2013ல் கசியூமரிசம் இதால தேவையில்லாதத வாங்கி வர்ர மனக்குழப்பம் டிஸ் அட்வான்டேஜ்னா… அட்வான்டேஜும் இருக்கு…

தமிழகத்தின் ஒரு மூலையில் இருக்கும் நான் ஆந்திராவில் இருக்கும் உங்க எழுத்தை சில ரூபாய் செலவுல படிப்பது உடன் ..  பதில் எழுதுவது அதை உடன் நீங்க பார்ப்பதும் என்பது 80/90ல் கனவுல கூட நடக்காதது..ஆனா கன்சியூமரிசமும் ,…10 – 15 வயசுல நினைத்தவுடன் புளு பிலிம் பார்ப்பது என்பதும் நடக்காது

இப்படி சில நல்லதும் கெட்டதும் கலந்துதான் எல்லா காலமும் இருக்கு. என்ன இடம் மாறிகிட்டே இருக்கு..

ஆனா இந்த டி என் சேசன் ரிட்டயர்ட் ஆனவுடன் தி டி ஜெனரேசன் ஆப் இந்தியானு எழுதின மாதிரி. …  எழுதியிருக்கீங்க…எங்க காலத்துல பாலறும் தேனாறும் கரை புர்ண்டு ஓடுச்சு… நாங்க அதில தான் கு .. .கழுவுவோம்ன்னு …

அது ஏன் ரிட்டயர்டு ஆனவங்களுக்கு மட்டும் அப்படி தோணுது எனக்கும் முதலில் புரியல.. ஆனா இப்ப புரியுது.. அவங்களூக்கு தன் காலம் கொஞ்சம் தான்னு இயற்கை உணர்த்தும்போல.. அதுவும் பெரும்பகுதி நோயிலும் பாயிலும் தான்னு…

அதனால இப்படி நினைச்சுபார்க்கிறது … அதாவது முன்னைக்கு இப்ப மோசம்.. இனி இதவிட மோசம் ஆகும் ஆன நம இருக்க மட்டோம் நம இருந்தது தான் ராஜ வாழ்க்கை.. இனி அது யாருக்குகும் கிடக்காதுன்னு …. நினைச்சு பார்க்கிறது ஒரு வித திருப்திய தருது..

70/80/90களில் துருக்கிய ஆலிவ் எண்ணைனு ஒண்ணு இருக்கு வேண்ண படிச்சவங்களூகு  தெரிஞ்சிருக்கலாமே தவிர அத கண்ணல பார்க்க கூட வாய்ப்பு இருந்திருகாது .. ஆன இன்னக்கு அத டிப்பர்ட்மெண்டல் ஸ்டோரில் 60 ரூபாய்க்கு வாங்க முடியுது.  காரணம் போக்கு வரத்தில் வந்த முன்னேறம்.

உங்களுடன் நான் பகிர்ந்துகொண்ட மின்சார கனவு போல என்னோட இன்னொரு கனவு (ICE) Inter Continental Express , அதாவது சுற்றுபுர சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் மணிக்கு 25000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் மின் காந்த ரயில் .

அதை நாம் செய்யாவிட்டாலும் வேததிரி மகரிஷி சொன்னதுபோல் எண்ணம் யாராலாவது செயலாக்கப்படும். அதுக்கும் முன்னோட்டமா நேற்றைய டைம்ஸ் அப் இந்தியாவில் முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் பஸ் கொரியாவில் கண்டுபிருச்சிருக்காங்க.  கிட்டத்டட்ட என்னோட எண்ணம் போலவே இருக்கு.

அப்படி வரும்போது நீங்க சென்னை வந்து போவது போல 2 மணிநேரத்தில்  நியூயார்க் போய் திரும்பலாம். அமரிக்காவில் வேலை கிடைத்தால் காலை 7 மணிக்கு பையில் சோற்றை எடுத்துகொண்டு போய் வேலை முடித்து மாலை 7 மணிக்கு உங்க சித்துரில் மனைவி குழந்தைய கொஞ்ச வீட்டுக்கு வந்துடலாம்.

உண்மையான தகுதி திறமை இருந்தா உலகின் எந்த பகுதியிலும் தொழில் /வேலை இருக்கும். அதேபோல் நம்ம தேவைக்கும் உலகின் எந்த பொருளும் அடுத்த 2 மணியில் கையில் இருக்கும். டூரிசம்ன்னு ஒரு தொழிலே இருக்காது எல்லாமே பிக்னிக் ஆகிவிடும்.

இப்படியெல்லாம் நினைச்சு பார்த்தா.. அதையெல்லாம் பார்க்க நம இருக்கமாடேமே நம்மை விட நமக்கு பின்னால் வருபவர்கள் சுகமா இருப்பங்களென்னு தோனும்.

ஆனால் வருவது தான் இந்த ரிட்டர்டுமெண்டு வியாதி.

விலை ஏற்றத்துகு முக்கிய கரணம் வியாபரிகளூம் , தொழிலதிபர்களூம் , அரசும் தான். டெக்னலஜியின் தலை நகரான ஜப்பானில் 10 வருசமான் விலை உயர்வே இல்லைன்னு படிச்சேன் … மக்கள் வாங்குவதால் விலைன்னா அங்க தான அதிக விலை இருக்கணும் ? வாங்கும் சக்தி இருக்குற நாட்டில் தான விலை ஏறனும் ?

இது ஒரு ஆழமான சதி.. நம் உழைப்பை நமக்கு தெரியாமல் பிடுங்கும் சதி. கா கட்சி., பா கட்சி மட்டுமல்ல எல்ல கட்சியும்… ஏன் எல்லா அரசும் செய்யும் விஷயம் தான் இது. விலை ஏற்றி மக்களை கொக்ள்ளையடிக்கலைன்ன ஏசி கார், விமானம் , ஏசி லட்ஜுன்னு ஸ்டார் ஓட்டல்னு தின்னு கொழுக்க முடியாது …இதை பற்றி விபரமா பணம் ஒரு சிறு விளக்கம்னு ஒரு புத்தகத்தில் இருக்கு. இது மொழி பெயர்ப்பு புத்தகம், ஆங்கிலத்தில் அவுட்லைன் ஆப் மணீன்னு இருக்கும் . உங்களும்மு துடி மன்னனுக்கும் அனுப்பி இருந்தென் படிச்சு பாருங்க..

அமரிக்க அரசு ஒன்றும் அமரிக்க மக்களுக்காக இல்லை நம்ம ஊர் மாதிரியே வியாபரிலூக்கும் தொழில் அதிபர்களுக்கும் தான். அங்கும் 2008 மந்தத்தால் வீடிழந்து தெருவில் வந்தவர் எத்தனை பேர்னு பாருங்க… அமரிக்க மக்களையும் அந்த அரசு ஏமற்றதான் செய்யுது..

மக்கள் எப்பவும் சுய நலமாத்தான் இருந்திருக்காங.. இப்பவும் அப்படிதான், இனிமேலும் அப்படி தான்.

80களில் வெளீயீடுகளை பார்த்தால் பெண் கல்வி பற்றி பேசினவங்க.. பெண்கள் பெருமளவு வேலைக்கு வந்தால் நாடு முன்னேரும், , குடும்பம் முன்னேறும்…லஞ்சம் இருக்காது .. அப்படி இப்படின்னு பேசினாங்க… ஆன இப்ப அப்படி நடக்கலை சட்டப்படி 33% கூட கிடைக்காவிட்டாலும் பெண்களூம் லஞ்சத்தில் சம உரிமை எடுத்துகிட்டாங்க..
சுய சார்பு அடைஞ்சதால விவாரகத்து அதிகமாகி இருக்கு. பெண்கள் முன்னேறினால் நாடு சொர்க்கமும்னு பேசினது என்ன ஆச்சு ? பேசினவங்க ஒரு விஷயத்த விட்டுடாங்க..  என்னானா..

ஆண் லஞ்சம் வாங்கினபோது அதை ஊக்கப்படுத்தியது வீட்டில் இருந்த பெண் தான். இப்பொ வாய்ப்பு கிடைக்குபோது நேரரா வாங்கிறாங்க. லஞ்சம் கூடாது என்பது தான் பெண்களீன் நிலைன்னா.. கணவன் / அப்பா வாங்ம்பொது தடுத்திருந்தாலே பெரும்பகுதி லஞ்சம் இல்ல்லாம போய் இருக்குமே..

பெண்ணும் ஆணும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம். இன்னம் பொதுவா சொன்னா மக்கள் அப்படி தான்.

எனக்கென்னவோ நீங்க தாத்தாவய்ட்டதா தான் தோணுது…
(அப்பாடா தலைப்பை  ஜஸ்டிபை பண்ணியாச்சு)

நிஜத்தில் ஏதாவது விஷேசம் உண்டா தல ?

புத காதல் பரிகாரங்கள்: 18 வகை காதல்

அண்ணே வணக்கம்ணே !
இந்த தொடர்ல 9 கிரகங்களின் பாசிட்டிவ்/நெகட்டிவ் இம்பாக்டுடன் கூடிய 18 வகை காதல்களை பற்றி பார்த்துட்டிருக்கம். இந்த வரிசையில் புதனோட பாசிட்டிவ் -நெகட்டிவ் இம்பாக்ட்டுடனான காதலையும் பார்த்துட்டம். கடந்த பதிவுல புத காதலுக்கு உதாரணமா ஒரு உபகதைய பார்த்தோம். இன்னைக்கு புத காதலோட அவலட்சணங்களுக்கு பரிகாரங்களை கொடுத்தே உடறேன்.

புதனை பத்தின சீக்ரெட் ஒன்னு – ஏற்கெனவே சொன்னதா ஞா -இருந்தாலும் -புதிய வாசகர்களுக்காக ஆக்சன் ரீப்ளே.கலெக்டிங் -ஸ்டோரிங் -ப்ராசசிங் – ஆஃப் இன்ஃபர்மேஷன் பர்ஃபெக்டா இருக்கனும்னா புத பலம் தேவை.

இதை விட முக்கியமா இடம்,பொருள் ,ஏவல் பார்த்து இன்ஃபர்மேஷனை டெலிவரி பண்றதுக்கும் புத பலம் தேவை.இதுகளுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக. சொல்றேன்.

கலெக்டிங் இன்ஃபர்மேஷன்:
ஒரு குட்டிய கணக்கு பண்ணனும்னா அந்த குட்டிய பத்தின விவரங்களை இன்ஃபர்மேஷன் ஆக்ட் படியா கலெக்ட் பண்ண முடியும்? அந்த ஏரியால நம்ம பசங்க ஆரு இருக்காய்ங்க? அதுல குட்டி வீட்டு எதிர்த்தாப்ல இருக்கிற டீக்கடைக்காரனுக்கோ,மளிகை கடைக்காரனுக்கோ ஃப்ரெண்டு ஆருனா இருக்கானா பார்த்து சலூன்,சலவை நிலையம், ஃபேன்சி ஸ்டோர்,இன்டர்னெட் சென்டர், கம்ப்யூட்டர் சென்டர்னு லோ லோனு அலைஞ்சாத்தேன் இன்ஃபர்மேஷன் பெயரும்.இதுக்கு புத பலம் தேவை.

ஸ்டோரிங் இன்ஃபர்மேஷன்:
கலெக்ட் பண்ண இன்ஃபர்மேஷனை கரீட்டா கியாபகம் வச்சுக்கனும். குட்டிக்கு ஒரு அண்ணன் இருந்தான். குடிச்சே குடலு வெந்து செத்தாங்கற இன்ஃபர்மேஷனை ஸ்டோர் பண்ணி வச்சிருந்தாதான் சரக்கடிச்சு அலம்பல் பண்ற பார்ட்டிகளோட அவளுக்கு மாட்டாம உசாராயிக்க முடியும்.இதுக்கு புத பலம் தேவை.
இதெல்லாம் வெறும் லவ் மேட்டர்ல மட்டுமில்லிங்னா தாம்பத்யத்துலயும் ரெம்ப தேவைங்ணா.

பொஞ்சாதிக்கு தம்பிக்காரன் தறுதலை. போலீஸ்ல வாயை கொடுத்து எஸ்ஸை புண்ணாக்கிக்கிட்டவங்கற இன்ஃபர்மேஷன் கை வசம் இருந்தாலும் அதை ப்ரசன்ஸ் ஆஃப் மைண்டோட இந்த மேட்டரை டெலிவரி பண்ணனும். தம்பிக்காரன் பொஞ்சாதிக்கு நாலணா மூக்குத்தி வாங்கி கொடுத்து போன செகண்டு இதை எடுத்து விட்டா பூரிக்கட்டைக்கெல்லாம் பதில் சொல்லவேண்டி வந்துரும்.

இதுவே அவனுக்கு ஒரு வாழ்வு வந்து வீட்டை கட்டி கிரகபிரவேசத்துக்கு அழைப்பு அனுப்பலின்னு வைங்க. .அப்பம் இந்த இன்ஃபர்மேஷனை எடுத்துவிட்டா பாதிப்பும் இருக்காது. வீட்லயும் கொஞ்சம் கூல் ஆவாய்ங்க.

மேட்டருக்கு போயிருவமா ?

1.உங்களுக்கு தேவையில்லாத மேட்டரை /இன்ஃபர்மேஷனை கலெக்ட் பண்ணாதிங்க, ஸ்டோர் பண்ணாதிங்க, எங்கயும்,ஆரு மின்னயும் டெலிவரி கொடுக்காதிங்க
உ.ம் இந்தியாவின் மொத்த கடன்
2.உங்க துறைக்கு தொடர்பில்லாத ஆட்களோட டீலிங்கே வச்சுக்காதிங்க. உங்க துறைய சேர்ந்தவுகளாவே இருந்தாலும் நோ காசிப்ஸ் அதுவும் ஆஃபீஸ் பத்தின வதந்திகளுக்கு தடா போட்டுருங்க.
3.டயரி எழுதறது ,செலவுக்கணக்கு எழுதறது, காதலிக்கு , பொஞ்சாதிக்கு நீட்டி முழக்கி கடிதம் எழுதறது,குறிப்பு எழுதி வைக்கிறதுல்லாம் வேண்டவே வேண்டாம்.
4.பேசும் போது கூட பாய்ண்ட் டு பாய்ண்ட் பேசுங்க.பழமொழி, பொன் மொழி,உவமானம்,உவமேயம்லாம் உபயோகிக்கவே வேண்டாம்.
5.எந்த மேட்டரையும் மூன்றாம் நபர்கள் மூலமா சொல்லி அனுப்பறதோ – சொந்த விஷயத்தை சொல்லி ரிலாக்ஸ் ஆகலாம்னு நினைக்கிறதோ வேண்டாம்.
6.நீங்க அக்கவுண்ட்ஸ்,ஆடிட்டிங்,டெஸ்பாட்ச்,மெடிக்கல், டீலர்ஷிப்,ஏஜென்சி,கல்வித்துறை மாதிரி ஃபீல்டுல இருந்தா ரெம்ப எச்சரிக்கையா இருக்கனும்.
7.ஸ்கின் ப்ராப்ளம் வரும்.வராம இருக்க என்னெல்லாம் பண்ணனுமோ அறிஞ்சு தெரிஞ்சு ஃபாலோ பண்ணுங்க. வந்து தொலைச்சா அல்லோபத்தி ட்ரீட்மென்ட் மட்டும் வேண்டாம்.
8.ஆண்கள் பெண் போலவும்,பெண்கள் ஆண் போலவும் தங்கள் ஹேர் ஸ்டைல்,உடைகளை ப்ளான் பண்ணிக்கோங்க.
9.போஸ்டாஃபீஸ்,வங்கி,கவர்ன்மென்ட் ஆஃபீஸ் பக்கம் போனா அங்கன படிக்காதவுக வில்லங்கமில்லாத மேட்டர் எதுனா ஃபில் அப் பண்ண சொன்னா, எழுதித்தர சொன்னா செய்ங்க.
10.பச்சை நிற ஆடை அணிகலன் அதிகம் யூஸ் பண்ணுங்க.
11.வீட்ல முன்னே,பின்னே,மாடியில,பால்கனியில இடம் இருந்தா சின்னதா பூச்செடிகளை வச்சு மெயின்டெய்ன் பண்ணுங்க.
12.வசதியில்லாத பிள்ளைகளுக்கு பேனா,பென்சில் ,நோட்டு,புஸ்தவம் வாங்கி கொடுங்க.
13. யாருக்காகவும், யாரிடமும் தூது செல்லாதீர்கள்.
14. வியாபாரம் வேண்டாம்.
15. கூரியர், தபால் சர்வீஸ்சை நம்பாதிங்க
16. க்ளப்புகள், சங்கங்கள், யூனியன்கள், உங்களுக்கு உதவாது. விலகியே இருங்கள்.
17. தாய்மாமன்கள், மாமனார்கள் விசயங்களில் எச்சரிக்கை தேவை.
18. ஜோதிடர்கள்,ஜோதிட நூல்களை விட்டு விலகியே இருங்கள்
19.மாணவர்கள் கணிதம், விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
20.ஜாதகத்துல குரு+சனி/ராகு/கேது சேர்க்கை இல்லாத பட்சம் பிரதி புதன் கிழமை கண்ணனைத் துளசி மாலைப்போட்டு வணங்கவும்,
21.லெஃப்ட் ஸ்மால் ஃபிங்கருக்கு மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும்.
22.ஆயில்யம், கேட்டை,ரேவதி நட்சத்திரங்கள் லீவ் நாள்ள வந்தா மவுன விரதம் இருங்க.

#18 வகை காதல் : புத காதல் – லட்சணங்கள்

அண்ணே வணக்கம்ணே !
நாட்ல எத்தனையோ கிரிட்டிக்கலான பிரச்சினைல்லாம் பத்தி எரியது. நீங்க ஏன் இப்படி காதல்,காதல்னு மாரடிக்கிறிங்கன்னு கேப்பிக. சொல்றேன்.
ஒரு காலத்துல நாமெல்லாம் ஒரே உசுரு -ஒரே உடலா இருந்தம் (அமீபா) ஏதோ காலப்போக்குல பிரிஞ்சுட்டம் -ம்யூட்டேஷன் காரணமா புது புது உயிர்களா மாறிட்டம்.ஆனாலும் நம்ம எல்லாருக்கும் இடையில ஒரு “லிங்க்” இருக்கு. செல்ஃபோன் எந்த மேக்கா இருந்தாலும் ஒன்னு மத்ததை தொடர்பு கொள்றாப்ல நாமளும் தொடர்பு கொள்ள முடியும்.

அந்த கப்பாசிட்டி நமக்குள்ள நிச்சயமா இருக்கு. அதை ஈகோ நாசமாக்குது. இந்த ஈகோ மட்டும் இல்லின்னா ஒவ்வொரு உசுரும் உலக உயிர்கள் அனைத்தோடும் தொடர்பு கொள்ள முடியும்.இதுவே லவ்ஸுன்னா – அது ஆப்போசிட் செக்ஸோட ஏற்படுது. கில்மாவுக்கான வாய்ப்பு பிரகாசமாகுது.

கில்மாங்கறது இயற்கையோட அஜெண்டா.இயற்கை வழியில நீங்க போறச்சே அது ஆத்தோட போறாப்ல சுமுகமா இருக்கும்.அதுவும் காதல் வெளிப்படுத்தப்படாத சமயம் காதலன்/லி சம்பூர்ண சரணாகதி நிலையில இருப்பாய்ங்க.

இந்த நிலை ஏறக்குறைய ஒரு தியானம், யோகத்துக்கு ஒப்பானதாக இருக்கும். இந்த நிலையில் ஆண்/காதலன் , பெண்ணை சக்தி வடிவமாகவும், இந்த படைப்பின் மறு உருவமாகவும்

பெண்/காதலி , ஆணை சிவ ரூபமாகவும் படைப்பின் பிரதி ரூபமாகவும் கருதி

தங்கள் காதல் இந்த படைப்போடு இரண்டற கலப்பதற்கான முஸ்தீபு என்ற உணர்வோடு தொடர்ந்தால் அவர்களின் மனதிலான சகல காம்ப்ளெக்ஸும் ஃபணால் ஆயிரும்.
அவிக வாழ்க்கை மட்டுமில்லை – அவிக நட்பு உறவுகளின் வாழ்க்கையும் எதிர்காலத்தில் பிறக்கும் அவர்களின் வாரிசுகளின் வாழ்க்கையும் ஃபென்டாஸ்டிக் ஆயிரும்.
ஆனால் இந்த காதல் விவகாரத்துல எங்கே தப்பு நடக்குதுன்னா ஒருவரை ஒருவர் தனிமனிதர்களாகவே பார்க்கிறாய்ங்க (படைப்பின் பிரதி ரூபமா பார்க்கிறதில்லை)மேலும் தங்களோட ப்ரப்போசல் ஒப்ளைஜ் ஆனதுமே ஈகோ சிலிர்த்து எந்திரிச்சுருது. எல்லாம் நாசமா போயிருது.

தத்துவம் போதும்.தொடருக்கு போயிரலாம். 18 வகை காதல்ல இன்னைக்கு புத காதலை பார்க்கலாம்.

கூட படிக்கிற பெண்ணை காதலிக்கிறது, டாக்டர் பேஷண்டை லவ் பண்றது, மிக்சட் செக்டர், கார்ப்பரேஷன்,கோ ஆப்பரேட்டிவ் சொசைட்டியில வேலை பார்க்கிறவுக சக ஊழியரை லவ்ஸ் பண்றதுல்லாம் புத காதல். தயாரிப்பாளர் டீலரை லவ் பண்றது ,டீலர் ஏஜென்டை லவ் பண்றதுல்லாம் புத காதல். ஆடிட்டர் யாவாரிய லவ் பண்றது,கன்சல்ட்டன்ட் தன் க்ளெய்ண்டை லவ் பண்றது புத காதல்.

பத்திரிக்கை ,தனியார் டிவியில (மீடியா)வேலை பார்க்கிறவுக பரஸ்பரம் காதலிக்கிறது புத காதல். தூது விட்டு லவ் பண்றது, லெட்டர்/மெயில்/எஸ்.எம்.எஸ் மூலமே காதலை வளர்த்தா அது புத காதல்.ஒரு அல்லயன்ஸை பத்தி விஜாரிக்க போயி போன இடத்துல ஒரு பார்ட்டி பிக் அப் ஆனா அது புத காதல்.
நிரந்தரமா இருக்கக்கூடிய மீட்டிங் பாய்ண்ட்ஸ்ல லவ் ஏற்பட்டா அது புத காதல் (உ.ம் பீச்,பார்க்) .கருத்தரங்கம்,பட்டிமன்றம்,கவியரங்கத்துல ஏற்படற காதலும் புத காதல் தான். புத்தக கண்காட்சி,நூலகத்துல ஏற்படற காதலும் புத காதல் தான். பேனா,பென்சில்,எரேசர்,நோட்ஸு வாங்க போயி வாங்கிட்டு வர்ர காதலும் புத காதல் தான்.

இந்த காதல் ஜோடியில பெண் கொஞ்சம் மேன்லியாவும் -ஆண் கொஞ்சம் ஃபிமெலிஷாவும் இருக்க வாய்ப்பிருக்கு.
இதுல ஒருத்தருக்காச்சும் நெல்ல கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் /நியூமரிக்கல் எபிலிட்டி இருக்கும்.இவிக கண்ணாலத்தை மோஸ்ட்லி நண்பர்கள்/தோழிகள் நடத்தி வைப்பாய்ங்க.

ஆருக்காகவோ தூது போயி அவிகளே காதலராவறதும் – நாம ஆருக்கு தூதுபோனமோ அவிகளோடயே பத்திக்கிறதும் புத காதல்.
இந்த புதகாதல் சுமுகமா முடிஞ்சா பரவால்லை. ( ரெண்டு பேர் ஜாதகத்துலயும் புதன் பெட்டர் பொசிஷன்ல இருந்தா முடியும்) இல்லின்னா மட்டும் பெரிய தலைவலி. தொடர் பஞ்சாயத்துக்கள் பயங்கரமா கடுப்பேத்தும்.

ரெண்டு பார்ட்டியுமே பிரச்சினைய காம்ப்ளிக்கேட் பண்றதுலதான் குறியா இருப்பாய்ங்க. ஸ்டேஷன் பஞ்சாயத்து, ஹால் பஞ்சாயத்துலருந்து ஃபேமிலி கோர்ட் பஞ்சாயத்து வரை நீண்டுக்கிட்டே போகும்.

தகராறு வந்துட்டா அதை மேலும் சிக்கலாக்க பக்கம் பக்கமா வரிஞ்சு வரிஞ்சு லெட்டர் எழுதிக்குவாய்ங்க,நோட்டீஸ் விட்டுக்குவாய்ங்க.
நடுவில வர்ரவன் போறவன் பேச்சையெல்லாம் கணக்குல வச்சுக்கிட்டு ஒருத்தரை ஒருத்தர் செமர்த்தியா சொரண்டிக்குவாய்ங்க.

இந்த மன அழுத்தத்துல தோல் பிரச்சினையே வந்துரும்னா பாருங்க. ஒரு வேளை ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு புத பலம் இருந்து – ஒருத்தருக்கு இல்லாமகதை சுமுகமா முடிஞ்சு தொலைச்சா புத பலமில்லாதவுகளுக்கு கீல்,அண்டம் தொடர்பான வியாதிகள் வரலாம்.

யாவாரத்துல,ஏஜென்சியில பயங்கர நஷ்டம் வரலாம்.தாய்மாமன் வகையில பெரிய ஆப்பா வரலாம்.
புத காதலோட பாசிட்டிவ் ஆஸ்பெக்ட்ஸ் -நெகட்டிவ் ஆஸ்பெக்ட்ஸ் இன்னம் நிறைய இருக்கு அதை எல்லாம் அடுத்த சாப்டர்ல பார்த்துட்டு அப்பாறம் பரிகாரங்கள் பார்க்கலாம்.ஓகேவா ..உடுங்க ஜூட்டு

சனி காதல் :பரிகாரம் ( 18 வகை காதல்)

அண்ணே வணக்கம்ணே ! ” லவ்மூட் ஸ்டார்ட் .. அவ்வ்”ங்கற தலைப்புல ஜோதிட ரீதியா 18 வகை காதல்கள் இருக்கிறதை விவரிச்சுக்கிட்டு வந்தேன். மொத்தம் 9 கிரகம். இதுல ஒவ்வொரு கிரகத்துக்கும் நெகட்டிவ்,பாசிட்டிவ்னு ரெண்டு வித இம்பாக்ட்ஸ் உண்டு. இத வச்சு 18 வகை காதல்கள் பற்றியும் சொல்லிக்கிட்டு – இதுலயே ஒவ்வொரு கிரகத்தின் நெகட்டிவ் இம்பாக்டுடனான காதல்/கண்ணால வாழ்க்கைக்கு பரிகாரங்களும் கொடுத்துக்கிட்டு வந்தேன்.

இந்த தொடரை நீங்க பயன்படுத்தி உங்க காதல்/கண்ணால வாழ்க்கையை டக்கரா ஓட்டிரலாம். இதுக்கு நீங்க என்ன செய்யனும்னா ஒவ்வொரு கிரகத்தின் பாசிட்டிவ்/நெகட்டிவ் இம்பாக்டுடனான காதல்/கண்ணால வாழ்க்கை பற்றி படம் வரைஞ்சுபாகங்கள் குறிச்சிருக்கன். இப்போதைக்கு 6+6 ஆக 12 வகை காதல்களுக்கு இலக்கணம் வகுத்திருக்கன்.

இதுல உங்க காதல்/கண்ணால வாழ்க்கை எந்த காதலுடன் ஒத்துப்போகுதுன்னு பாருங்க. பாசிட்டிவ் இம்பாக்ட் மட்டும் இருந்தா பரிகாரம்,பலகாரம்லாம் தேவையில்லை.ஒரு வேளை நெகட்டிவ் இம்பாக்ட் இருந்தா அந்த காதலுக்கு நாம கொடுத்திருக்கிற பரிகாரங்களை ஃபாலோ பண்ணுங்க.
மேட் ஃபார் ஈச் அதரா மாறிருவிங்கன்னு பீலா விட தயாரா இல்லை.அதே சமயம் மஹிளா ஸ்டேஷன்,ஃபேமிலி கோர்ட் எல்லாம் ஈசியா அவாய்ட் ஆயிரும்.இட்ஸ் ஓகே..

இன்னைக்கு சனியோட நெகட்டிவ் இம்பாக்டுடனான காதலுக்கு பரிகாரங்களை பார்ப்போம்.

மத்தவுக எப்படினா சோம்பிக்கிடக்கட்டும், ஷோக்கா ட்ரெஸ் பண்ணி வெட்டியா திரியட்டும், அலுங்காம கதை பண்ணட்டும், நலுங்காம நலங்கு வச்சுக்கட்டும். பெண்களுக்கு போட்டியா தங்கமகனா பில்டாப் கொடுக்கட்டும்.

நீங்க மட்டும் உங்களை அந்த கால ரஷ்ய கூட்டுறவு பண்ணை உறுப்பினராவோ அல்லது இந்த கால வட இந்திய கட்டிட தொழிலாளியாவோ நினைச்சுக்கங்க. ரவுண்ட் தி க்ளாக் வேலை செய்ங்க. உங்க வயசுக்கு 20 வயசு கூடுதலான ஆளு எப்படியா கொத்த ட்ரஸ்ஸை விரும்பி போடுவாரோ அது மாதிரியான ட்ரஸ் போடுங்க. (ப்ளெய்ன் / சீப் ), நோ காஸ்மெடிக்ஸ், நாவல்ட்டீஸ்.

அல்லாரும் குளிச்சுட்டு வேலைக்கு போவாய்ங்க. நீங்க வேலையிலருந்து வந்த பிறவு(மட்டும்) குளிங்க. தலையில வெள்ளை முடி இருக்கா டை போடாதிங்க.
உங்களுக்கு வர்ர கான்சிட்டிப்பேஷன் பைல்ஸ்,ஃபிஸ்டுலா,ஆனல் கான்சர் வரை கொண்டு போயிரும். ஆகவே டேக் கேர்.

உங்க கேரியருக்கு தொடர்பே இல்லைன்னாலும் ஒரு டூல் பாக்ஸ் வாங்கி வச்சுக்கிட்டு சீலிங் ஃபேனை,பொஞ்சாதியோட டெய்லர் மிஷினை கழட்டி துடைச்சு ,எண்ணெய்/கிரீஸ் போடுங்க. ஸ்டீல் ஆர்னமென்ட்ஸ் யூஸ் பண்ணுங்க. பிரச்சினை ரெம்ப சிவியரா இருந்து -உங்களுக்கு இடவசதி /வாய்ப்பு இருந்தா எருமை வளருங்க.

சமையலுக்கு நல்லெண்ணெய் யூஸ் பண்ண சொல்லுங்க. சென்னை தமிழை ட்ரை பண்ணுங்க.க்ளோஸ் சர்க்கிள்ள தமாசுக்கு பேசுங்க.
காதலி/ பொஞ்சாதி தவிர இனி எல்லாமே செக ண்ட் ஹேண்டுதான்னு டிசைட் ஆயிருங்க. சின்னதா தோட்டம் போடுங்க. ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வீட்டை ஸ்கான்பண்ணி உங்களுக்கு தேவையில்லாத குப்பைகளை எல்லாம் சார்ட்டவுட் பண்ணி ஆருனா தலித்/ உடல் ஊனமுற்றவர் இருந்தா அவருக்கு கொடுத்து கூடவே கொஞ்சம் காசும் கொடுத்து டிஸ்போஸ் பண்ணிர சொல்லுங்க.

அரத பழசான /கருப்பு கலர் கூலிங் கிளாஸ் போடுங்க.பர்ஸுல வராக ஸ்வாமி /வாராஹி அல்லது உங்க குல தெய்வத்தோட படம். வீடு கொஞ்சம் தூசும் தும்புமா,ஒட்டடையுமா இருக்கட்டும். வண்டி வாகனமும் இப்படியே இருக்கட்டும் .அழகுப்படுத்தாதிங்க.மாசத்துக்கு ஒரு சனிக்கிழமையாச்சும் தலித் நண்பரோட ஸ்பென்ட் பண்ணுங்க.

ஆருனா கோர்ட்,போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திருக்கு லிஃப்ட் கேட்டா கொடுங்க. வயசான கண்டக்டர்,டிரைவருங்க கட்டவே காக்கி வேட்டிகள் வருது. அதை வாங்கி உபயோகிங்க.

சனிக்கிழமை காகத்துக்கு சோறு வச்சுட்டு சாப்பிடுங்க. ஒவ்வொரு அமாவாசை தினமும் ஆருனா உடல் ஊனமுற்றவருக்கு (கால் தொடர்பான ஊனம்னா இன்னம் நல்லது) உங்க முன்னோர்களே அவர் வடிவத்தில் வந்திருக்கிறதா இமாஜின் பண்ணிக்கிட்டு ஹை க்ளாஸ் வெஜ் மீல் ஏற்பாடு பண்ணுங்க.
மேற்கு திசை நோக்கிய தூரபயணங்களை ,ஆதாய தேடி செய்யும் பயணங்களை அவாய்ட் பண்ணுங்க. வீட்டு குளியலறை ,கழிவறையை அசூயை பார்க்காம நீங்களே சுத்தப்படுத்துங்க. செல்ஃப் ஷேவ் பெஸ்ட்.

நீல நிற நைட் லாம்ப், நீல நிற பெட் ஸ்ப்ரெட்,பில்லோ கவர் யூஸ் பண்ணுங்க. கசுப்பு சுவையுடைய காய்,கறிகள்,கீரைகளை உணவுல சேர்த்துக்கங்க.
காதலை சொல்ல சனிக்கிழமை , எட்டு டோட்டல் வரக்கூடிய தேதிகளை ச்சூஸ் பண்ணாதிங்க. பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்களையும் அவாய்ட் பண்ணுங்க.

நாளை புத காதலை பார்ப்போம் .. இது ரெம்ப லொள்ளு பிடிச்ச காதலுங்கோ .. கொஞ்சம் அசால்ட்டா இருந்தா விபசாரமா கூட மாறிரும்..