அனுபவங்கள் ஆயிரம்

IMG_0490

அண்ணே வணக்கம்ணே !
வாழ்க்கையில இதுக்கு மேல என்ன நடந்துரும்னு நினைக்கிற அளவுக்கு பல்லாயிரம் அவமானங்களை, நஷ்டங்களை பிரிவுகளை பார்த்தவன் தான். (ஆருதான் பார்க்கலைன்னு கேட்டுராதிங்க பாஸ் ! பேசிக்கலா நாம ரெம்ப சென்சிட்டிவ் -மேற்சொன்ன ஒவ்வொன்னும் ஒரு மரணம் கணக்கா என்னை வெருட்டியிருக்கு. ஆனால்முழுக்க நனைஞ்ச பிறவு முக்காடு எதுக்கும்பாய்ங்களே அப்படி ஒரு கட்டத்துல படக்குன்னு தலை கீழா மாறிட்டன்.
பேச்சுலயே செமர்த்தியா செல்ஃப் கோல் போட்டுக்க ஆரம்பிச்சுட்டன். என்னையே ஒரு சோர்ஸ் ஆஃப் ஜோக்கா எக்சிபிட் பண்ண ஆரம்பிச்சுட்டன். கான்வர்சேஷன்ல “திகில் பாண்டியா” இருக்கிற எதிராளியோட கருத்தையும் நாமளே எடுத்து விட ஆரம்பிச்சம். ஒவ்வொரு அவமானத்துக்கு பிறவும் அந்த வகை அவமானத்துக்கு நம்ம மைண்ட் இம்யூன் ஆயிரும்.

இப்படி பல மேட்டருக்கு இம்யூன் ஆயிட்டன், டாலரன்ஸ் பவரை சாஸ்தி பண்ணிக்கிட்டன். கிரகங்களோட திருவிளையாடலை எல்லாம் ஒரு கட்டத்துல ரசிக்கவே ஆரம்பிச்சுட்டன். இன்வால்மென்டோட ரசிச்சு கவனிச்சதால அவற்றின் சூட்சுமம் பிடிபட்டுபோக சொந்த பரிகாரங்களை வடிவமைக்க ஆரம்பிச்சுட்டன்.

பரிகார வடிவமைப்பு ஒரு பக்கம்னா பலன்களின் கணிப்புல நம்ம கிரியேட்டிவிட்டியும் -இன்ட்யூஷனும் செமர்த்தியா கை கொடுக்க ஆரம்பிச்சுருச்சு. ஒரு ஜாதகத்துல ரெண்டு எட்டுல ராகு கேது இருந்தா என்ன ஆகும்னு கேட்டா பலரும் பலவித பலனை சொல்வாய்ங்க.

கண்டேன் சீதையை கணக்கா சுருக்குன்னு சொல்லனும்னா “வெட்டி விடும்”னு சொல்லலாம். எதுலருந்து? எல்லாத்துலருந்தும்.

மவளுக்கு பிறந்தவனோட ஜாதகத்துல இந்த அமைப்பு இருக்கு. டெம்ப்ரரியா நம்ம ராசிக்கும் (சிம்மம்) இருக்கு. எல்லாமே வெட்டிக்கனும். மவளுக்கு “அங்கே” வெட்டு, அவ மவனுக்கு இதயத்துல வெட்டு. நமக்கு மனசுல வெட்டு.

எல்லாம் வெட்டுப்பட வேண்டிய சமயத்துல புதுசா ஒரு கனெக்சன் வாங்கினா என்னாகும்? அதை சொல்றேன். ஐடியா நெட் செட்டர்ல மாசத்துக்கு 6 ஜிபி வச்சுக்கிட்டு கதை பண்ணிக்கிட்டிருந்தம். மலேசிய தமிழர் ஒருத்தரு தன் முக நூல் பக்கத்து செய்திகளை தெலுங்கு பக்கத்துல மொழி பெயத்து போட சொன்னாரு. செரி ப்ரொஃபெஷ்னலா ஒரு வேலை செய்றப்போ -அதுக்கு கூலியும் கிடைக்கிறப்போ கொஞ்சம் கூட செலவழிச்சா தப்பில்லேன்னு வி ஃபை க்கு மாறினேன் (மாசத்துக்கு 20 ஜிபி) .

அவ்ளதான் பல்ப் மாட்டிக்கிச்சு. சும்மாதானே வருதுன்னு ஐ ட்யூன்ஸை அப்டேட் பண்ணேன்.ஐ ஃபோன் ஃபணால்.
மாப்ளையும் மவளும் அவிக மவனுக்கு ஒரு மல்ட்டி பர்ப்பஸ் தொட்டில் ஒன்னு ஆன்லைன்ல ஆர்டர் பண்ணியிருந்தாய்ங்க. அது நேத்திக்கு டெலிவரி வந்தது. அந்த மேட்டர்லதான் 2-8 ல் ராகு கேது செம வேலை பார்த்துட்டாய்ங்க.

ஃபணால் ஆயிட்ட ஐ ஃபோனை செட் ரைட் பண்ணிரலாம்னு ஐ ட்யூன் ஓல்ட் வெர்சன் சாஃப்ட்வேர் காப்பி பண்ணிக்கலாமேன்னு மாப்ளையோட ஸ்டுடியோ பக்கம் போனேன். (அந்த நேரத்துல அந்தபக்கம் போனதே கிடையாது). அந்த சமயம் ஸ்டுடியோல மாப்ளை இல்லை. நாம வேலைக்கு வச்ச தடி தாண்டராயன் ஒருத்தன் தான் இருந்தான்.

டீக்கடையில ஒரு கையில லெமன் டீ இன்னொரு கையில சிகரட்டுன்னு ரெம்ப ரிலாக்ஸ்மூட்ல இருக்கன். அந்த செகண்டு ஸ்டுடியோல இருந்து பெரிய பார்சலோட ரெண்டு பேர் இறங்கி போறதை பார்த்தன். (லூஸ்ல விட்டிருக்கலாம் -ராகு ஆரை விட்டாரு?)

போறவிகள கூப்டு கை.எ போட்டு டெலிவரி வாங்கிட்டன். காசு? கல்லா பெட்டி சாவி மாப்ளை வண்டி சாவியில இருக்கும். மவ கிட்ட கேஷ் வச்சிருப்பா. கடையில இதுக்கு மின்ன வேலை பார்த்த பையனை பிக் அப் பண்ணி வீட்டுக்கு அனுப்பி காசு வாங்கியார சொன்னேன்.

காசு குறைவா இருக்குன்னு மவ இண்டியன் பேங்க் ஏடிஎம் கார்ட் கொடுத்தனுப்பினா. கிழவாடி ஆயிட்டம்ல. பொறுப்பு ஓவராயிருச்சு. பத்து ரூவா கொடுத்து பேனா வாங்கி துண்டு காயிதத்துல பின் நெம்பர் கேட்டு எழுதிக்கிட்டன்.

ஐசிஐசிஐ ஏடிஎம் ஹேங் ஆயிருச்சு. கூரியர் காரன் பஜார் தெருவுல ஒரு டெலிவரி இருக்கு.அங்க வந்துருங்கன்னான். செரி கிருஷ்ணா ஜுவல்லர்ஸ் கிட்டே இருங்க வந்துர்ரன்னன். பிறவு எஸ்.பி.ஐ “டைம் அவுட்”னிருச்சு. பிறவு பஞ்சாப் நேஷ்னல் பேங்க் தப்பான பின் 3 தாட்டி அடிச்சுட்ட கார்ட் ப்ளாக் ஆயிருச்சுங்குது.

இது என்னடா கிரகச்சாரம் பஜார் போயி சத்யா கிட்டயாச்சும் காசா வாங்கி கொடுத்துரலாம்னு வண்டிய ஸ்டார்ட் பண்றேன். அது “கைப்பழக்க” இளைஞன் கணக்கா மசாலா தீர்ந்து போயி கிடக்கு. நமக்குள்ள இருந்த யூத்து முழுச்சிக்கிட்டாரு.

கொய்யா எவன் பிரச்சினைக்கு எவன் அல்லாடறதுன்னு சினிமா தியேட்டர் சந்துல வண்டிய தள்ளி லாக் பண்ணிட்டு வீட்டுக்கு வந்துட்டன். மாப்ள வழக்கமா சாவுக்கு வான்னா திவசத்துக்கு வந்துருவாரு. எக்கேடோ கெட்டு போவட்டும்னு மவ மூல்யமா தகவல் அனுப்பியாச்சு. ஆள விடுங்கடான்னு கழண்டுக்கிட்டன்.

மாப்ள அவரோட நேரத்துக்கு வந்து தொட்டிலை டெலிவரி வாங்கிக்கிட்டு வந்தாரு. பையனை தூக்கி படுக்க வைக்கிறாரு . ஒரு அலறல் போட்டான் பாருங்க. வீட்ல இன்னொரு “அடாசு” சேர்ந்துருச்சு. இந்த “ம”னாவுக்கு இவ்ள நாயடி .

என்னடா இது இதுக்கேவான்னு ரோசிச்சன். அப்பத்தேன் ஞா வந்தது.மவளொட லோன் மேட்டர்ல ஹைபோத்கேஷன் அக்ரிமென்ட் பேப்பர்ல ரூ.100க்கான ஸ்டாம்ப் ஒட்டி கொண்டுவரச்சொல்லி மேனேஜர் சொன்னது ஞா வந்தது.

ஓஹோ ரெண்டு எட்டுல ராகு கேதுவ வச்சுக்கிட்டு லட்ச ரூவா லோன் வாங்கனும்னா -அதுவும் கைக்கு வராப்ல இருந்தா இப்டி ஆயிரம் ரூவாய்க்காக அல்லாடனும் போல.
ஸ்..யப்பா மிடியல..

Advertisements

ரூ.200 மதிப்புள்ள ஜோதிட நூல்கள் இலவசம்

IMG_0454

அண்ணே வணக்கம்ணே !
எழுத்தாளர்களுக்கு வர்ர மெனோஃபஸா ? அல்லது லக்னத்துக்கு அஞ்சுல புத்தி ஸ்தானத்துல உள்ள சனியா? அல்லது மவளோட மவனுக்கு நடந்த ஓப்பன் ஹார்ட் சர்ஜரியா ? காரணம் எதுன்னு தெரியலின்னாலும் -இவற்றின் விளைவுகள் இன்னம் என்னென்னனு தெரியலின்னாலும் எழுதனுங்கற துடிப்பு மட்டும் ஃபணால் ஆயிருச்சு. நல்லா புரியுது.

எது எப்படியானாலும் என் சிக்ஸ்த் சென்ஸுக்கு தொடர்ந்து ஸ்பார்க் ஆகற மேட்டர் என்னனா அசலான மேட்டர் எதையோ நாம கேட்ச் பண்ணிட்டம். கேட்ச் பண்ணது மட்டுமில்லாம அதை மைன்ட்ல ஸ்டோர் பண்ணிக்கிட்டதோட ரெகுலரா அப்டேட்டும் பண்ணிக்கிட்டிருக்கம். என்ன தான் இணைய ஜமாவுக்காக டைல்யூட் பண்ணி எழுதினாலும் -கில்மாவ கலந்து நாறடிச்சாலும் ஆரோ பத்து பேர் நெல்லாவே ப்ரிப்பேர் ஆயிட்டிருக்காய்ங்க.

இது கடவுளுக்கோ அல்லது இயற்கைக்கோ எதுக்கோ பிடிக்கல. கொய்யா .. ஒனக்கு அஞ்சு பத்து தானே தேவை. ஒளுங்கா மொழி பெயர்ப்பு செய்ங்கறாப்ல ஆஃபர் வருது. இல்லேனு ஆகிப்போன வங்கிக்கடன் நெருங்கி வருது.

மவளோட மவனுக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரின்னதும் வீட்ல இருந்த சாமான் செட்டையெல்லாம் சகட்டுமேனிக்கு ஒழிச்சதுல மைண்ட் ப்ளாக் எல்லாம் ஒழிஞ்சு அவுத்து வுட்ட மாடு மாதிரி ஒரு ஃபீல். தூக்கம் கண்ணை சுழட்டுது.

திங்க் ஆஃப் எ டெவில் கணக்கா மனசுல நினைச்சதும் –நினைச்சவன்லாம் வந்து கண் முன்னே நிற்கிறான். என்னடா நடக்குது இங்கே?

ஒன்பது வகை மனைவிகள் தொடரை டச் பண்ணா –டச் பண்ணனும்னு நினைச்சா உடனே மைண்ட் ப்ளாக் ஆயிருது. நம்ம ஆசை ரெம்ப சிம்பிள்.மன்சங்க எதை பெற எதை இழக்கறோம்ங்கற ப்ரக்ஞையே இல்லாம வாழ்ந்துக்கிட்டிருக்காய்ங்க.

இழப்புக்கு காரணம் தாங்களேங்கற சொரனை கூட இல்லாம பொஞ்சாதிமேல, அண்ணன் தம்பி மேல,அண்டை வீட்டுக்காரன் மேல பாஞ்சுக்கிட்டிருக்காய்ங்க. இந்த நிலைய லேசா மாத்தினா போதும். அதுக்குத்தேன் இத்தனை பாடு.

ஆனால் கடவுளுக்கு இது கூட சம்மதமில்லை போல. நாம புதுசா ஒன்னும் சொல்லல. சனங்க வாழ்க்கையில நடந்த இழப்புகள் –இழப்புகளுக்கு பின்னான அவர்களது வாழ்க்கை, சனங்க பெற்ற வெற்றிகள் –வெற்றிக்கு பின்னான அவிக வாழ்க்கை –இந்த ரெண்டையும் கொஞ்சம் போல ஜோதிடம் கலந்து சொல்லிக்கிட்டிருக்கம்.

இதை கூட கூடாதுன்னு சொன்னா எப்பூடி?

அப்படியும் இந்த தடை மேட்டரை லேசா ஸ்மெல் பண்ணி கட்டணத்தை எல்லாம் உசத்தி கட்டண சேவை 2015 வரை மட்டும் தான்.பிறவு அம்பேல்னு அறிவிப்பு கூட தந்தாச்சு.ஆனாலும் ஆப்பு வந்தாச்சு.

நம்ம ப்ளஸ்,மைனஸ் ரெண்டும் ஒன்னு தான் “அய்யோ பாவம் பார்க்கிறது”. (லக்ன குரு) .இதனால பச்சை துரோகம் பண்ணவிகளையும் அட விடுறா..முருகேசா! அவனவன் பாவத்துல அவனவன் போறான்னு இருந்துர்ரம். இந்த ஒரு பாய்ண்டு நம்ம மூளைக்குள்ள ஸ்லீப்பிங்ல இருந்த நியூரான்ஸை சகட்டுமேனிக்கு உசுப்பி விட்டுட்டாப்ல இருக்கு.

எதிர்காலம்ங்கறது பெல்லி டான்ஸ் ஆடுது .இடையில என்னாச்சுன்னா கட்டண ஆலோசனை பேர்ல சனங்களோட பணம் வந்து போனதுல ஒரு வித பெரும்போக்கு வந்துருச்சு.

சைனீஸ் வாஸ்துல்லாம் ஆட்டோமெட்டிக்கா தானா அப்ளை ஆயிட்டிருந்த காலம் போயிருச்சு. எட்டு வருசமா குப்பைங்க சேர்ந்து சேர்ந்து மைண்ட் குப்பை ஆயிருச்சு போல.

சைனீஸ் வாஸ்துல என்ன சொல்றான்னா போன வருசத்து ஃபோன் புக் கூட வச்சுக்கப்படாது. தேவையான நெம்பரை காப்பி பண்ணிக்கிட்டு தூக்கியெறி.
ரவுண்ட் தி க்ளாக் வேலை இருந்ததா.. ஒழிக்கிறது விட்டுப்போச்சு. ஈசானத்துல ஒரு உபரி பாத்ரூம். வீட்டம்மா பத்து தேய்க்கிறதே நாலு நாளைக்கு ஒரு தபா தான்.சமையலறை சுத்தமா இருக்கனும்னு ஈசானத்தை நாறடிச்சுக்கிட்டே இருந்தாய்ங்க.
ஈசானம்= குரு ,குரு =புத்திர,பௌத்திர காரகன்.

லோக்கல்ல நாம ஒரு பத்திரிக்கை நடத்திக்கிட்டிருந்தம் . யாவாரிங்க விளம்பர உதவில நடக்கிற பத்திரிக்கை. (புதன்) .ப்ரிண்ட் பண்ணி ஃப்ரீ டிஸ்ட் ரிப்யூஷன் பண்ணிருவம். புதன் நமக்கு விரயாதிபதி.

இடையில ரெம்ப பிசியாயிட்டமா ..பத்திரிக்கை மேட்டரை டீல்ல விட்டுட்டம். புதன்=மருத்துவமாச்சே அவர் வேலை கொடுத்துட்டாரு.
கொஞ்சம் லேட்டா முழுச்சுக்கிட்டு வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு கவுன்டர் சேல்ஸுக்கு போயி ரிட்டர்ன் வந்த பிரதிகளை இலவசமா வழங்க முடிவு செய்து இருக்கம்.

வீழ்வது நாமா இருந்தாலும் வாழ்வது தமிழா இருக்கனும்னு ஒரு ஸ்லோகன் இருக்கு. அதை போல இந்த ரகசியங்களை எல்லாம் வெளியிடறதால அழியறது நாமா இருந்தாலும் வாழ்வது சோதிடமா இருக்கனும்.

என்னைக்கேட்டா கொடுப்பின இல்லாதவன் – கொடுப்பினை இல்லாத களத்துக்கு வராம இருந்தாலே நாடு உலகம் எல்லாமே உருப்பட்டுரும்.
அரைகுறைங்க வந்து ஆலவட்டம் போடறதாலதான் இத்தனை சிக்கல். நமக்கு பாஸ் இல்லாத மேட்டர்ல இறங்கினா எல்லாமே டப்பாஸுதான்.
எது பாஸு ,எது டப்பாஸுன்னு தெரிஞ்சுக்கறது ரெம்ப சிம்பிள். கேட்டா சொல்றேன்.

செம மேட்டருப்பா!

2

அண்ணே வணக்கம்ணே !
இப்படி ஒரு தலைப்பு வச்சு ஒரு மேட்டர் போடலாம்னா ..பயம்மா இருக்கு. நம்ம ஜாதகத்துக்கு புதன் பயங்கர பல்பு கொடுக்க வேண்டிய பார்ட்டி.நவாம்சத்துல மிதுனத்துல இருக்கிறதாலயோ என்னமோ சைடு கொடுக்கிறாரு. சைக்கிள் கேப்ல கன்டெய்னர் ஓட்ட முடியுமா பாஸ்?
லோ ஓல்ட்டேஜ்ல இருக்க சொல்லோ எத்தீனி மேட்டரை ஆஃப் பண்ணி வச்சா அவ்ளோ பெட்டர். ஆனால் நம்ம லைஃப்ல எல்லாமே புத காரகம் வந்து மாட்டுது.(இப்ப வாச்சும் தினத்தந்தி இல்லை)

சோதிடம்,வலைப்பதிவு,முக நூல்,ட்விட்டர் இது போதாதுன்னு பெரிய ம ..னா மாதிரி மோடிக்கு-லேடிக்கு காயிதம் போட்டுட்டு அதுக்கு பதில் வரனும்னு மன்னாடறது வேற.

இப்டி ஓவரா போயி போயி தான் ஸ்கின் ப்ராப்ளம் மாட்டிக்கிச்சு. இப்பவும் இந்த பதிவுல என்னத்த செம மேட்டரு தரப்போறெனோ இந்த செகண்ட் வரை ஐடியா இல்லை.

டாட்டா ஸ்கை செட் டாப் பாக்ஸ் புட்டுக்குச்சின்னு மெக்கானிக் சொன்ன பிறவு -ஏற்கெனவே டிசம்பர் 25 வரை கட்டண சேவைக்கு தடா போட்ட பிறவு தகிரியமா ரிஸ்க் எடுத்து இந்த பதிவை ஆரம்பிச்சிருக்கன்.

யாகம் பண்ணி சூனியம் வச்சு ஒரு ஆளை தீர்த்துரலாம்னு பீலா விடுவாய்ங்க. நம்பாதிங்க. ஆனால் ஜோசியத்துல பேசிக் தெரிஞ்சவன் பேசிக் தெரியாதவனை தீர்த்துக்கட்டிரலாம். ரெம்ப சிம்பிள். விட்டு கொடுக்க தெரிஞ்சவன் பேராசைக்காரனை ஒழிச்சே கட்டிரலாம் ரெம்ப சிம்பிள்.
அவன் ஜாதகத்துல எந்த கிரகம் பல்பு வாங்கியிருக்கோ அந்த கிரக காரகத்வத்துல அவனுக்கு நிறைய பைசா வராப்ல செய்துட்டா போதும்.
செய்வினை செய்து புருசன்பொஞ்சாதிய பிரிச்சுட்டாய்ங்கனு சொல்வாய்ங்க.நம்பாதிங்க.ஆனால் சுக்ர பலம் இல்லாத தம்பதிக்கு ஒரு ஏசியோ -ஒரு ஃப்ரிட்ஜோ ப்ரசன்ட் பண்ணி பிரிச்சுரலாம்.

கூலிப்படைல்லாம் வச்சு எதிரியை தீர்த்து கட்டறாய்ங்க. எதிரியோட ரேஞ்சுக்கு 9 ஏக்கரோ ,9 சென்டோ நிலத்தை இலவசமா கொடுத்துட்டா போதும்.ஆள் காலி.

ஆனால் ஒன்னு நீங்க இந்த மாதிரில்லாம் கூட தியாகம் பண்ணவே தேவையில்லை. அடுத்தவனை இம்சை பண்றவன் மட்டுமில்லை.. ரெம்ப நல்லவன்னு பேர் வாங்கினவன்லாம் கூட அவனவன் ஜாதகப்படி எதெல்லாம் கிடைக்க கூடாதோ அதுக்காகவே அல்லாடறான்.மேட்டர் என்னடான்னா அது கிடைச்சா டிக்கெட்டு தேன்.

எதையாவது பெறனும்னா எதையாவது இழந்தே தீரனும் -இது நிதர்சனம்.எதை இழந்தா எதை பெறலாம்னு சொல்றது நம்ம ஸ்டைல்.
நான் நான் நான்னு பேசுவான்.குந்த குடிசை இருக்காது. அரண்மனை மாதிரி வீடே இருந்தாலும் திறந்தவெளியில வெயில்லயும்-மழையிலயும் அல்லாடுவான்.

அந்த நான் நானை விட்டா உருப்படுவான்.

மனசு மனசுன்னு புலம்புவான்.ஆனால் எதிராளி மனசை ரணமாக்கிக்கிட்டே இருப்பான்.நுரையீரல்,சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் வந்துரும். சீன் போடாம ஒரிஜினலா வாழ்ந்தா சேஃப் ஆயிரலாம்.

என்ன பண்றேன் பாருன்னு பொங்குவான் -பேச்சுக்கு முன்னே கை நீளும். ப்ளட் ஷுகர் வந்துரும், இவன் நிலத்தை எவனோ வித்து பைசாவ பாக்கெட்ல போட்டுக்கிட்டு போயிட்டே இருப்பான்.சொந்த அண்ணன் தம்பியே இவன் கதைய முடிச்சுருவாய்ங்க.

யாரை பார்த்தா வேலை ஆகும்,எவ்ள கொடுத்தா வேலை ஆகும்னு தேடிக்கிட்டு இருப்பான். எங்கயோ லம்பா கொடுத்து வேலையும் ஆகாம பைசாவும் ரிட்டர்ன் ஆகாம அல்லாடுவான். ஆல்கஹாலிக் ஆயிருவான்.

அவனை தெரியும் -இவனை தெரியும்னு குதிப்பான்.நெஞ்சு வலி வந்துரும் அல்லது பொஞ்சாதி டிக்கெட்டு,புள்ள குட்டி இருக்காது.இருந்தாலும் உருப்படாது.
பாக்கெட்ல கரன்சி இருக்கும்.ஆனால் ஃபெவிக்கால் போட்டு ஒட்டின மாதிரி வெளியவே வராது.இவனுக்கெல்லாம் பைல்ஸ்,நெர்வஸ் ப்ரேக் டவுன் அல்லது கால் ஊனம் ஏற்படும்.

கண்டவனை பத்தி அவதூறா எழுதுவான் -பேசுவான் -பேச்செடுத்தா மொட்டை பெட்டிஷன் போடுவான். குஷ்டம் வரும் அல்லது ஹைட்ராசில்ஸ்.
இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

நான் சொல்ற குன்ஸு ரெம்ப சிம்பிள்.தானா எது நடக்குதோ அது நன்மைக்கே.தானா நம்மை எது தேடி வருதோ அது நன்மைக்கே. நாமளா எதை நடக்கவைக்கிறமோ அது நமக்கு ஆப்பே. எதை நாமா தேடி ப்போறோமோ அது நமக்கு ஆப்பே.

நடக்கிறத ஏத்துக்கிட்டா பிரச்சினை ஒன்னோட முடிஞ்சுரும். ரெபல் ஆனா தவுசன்ட் வாலாதான்.

நல்ல காலம் பொறந்துருச்சு !

7

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு கமல் கிட்டே கேள்வி கேட்கிறாய்ங்க.அரசியலுக்கு வருவிங்களா? நான் அத்தனை பெரிய நடிகனில்லைனுட்டாரு.
ஜோதிடம்னா பலருக்கும் அது ஏதோ கம்ப சூத்திரம்னு ஒரு நினைப்பு. இல்லையா அதெல்லாம் குடும்பத்துக்கு நல்லதில்லிங்க.தரித்திரம் பிடிச்சுக்கும்பாய்ங்க.மொத்தத்துல கழண்டுக்குவாய்ங்க. ஏதோ நாட்ல நாலு பேருக்கு தெரிஞ்சிருக்குல்ல -கொஞ்சம் சில்லறை விட்டெறிஞ்சா கிடைக்குதுங்கற எண்ணம்.

தம்பிக்கு எந்த ஊரு படத்துல ரஜினி சொல்றாப்ல வானத்துல அம்மாம் பெரிய கடிகாரம் இருக்கு (சூரியன்) ஆனால் எதுக்கு கையில கடியாரம் கட்ட ஆரம்பிச்சாய்ங்க? செல்ஃபோன்லயே டைம் தெரியுது.ஆனால் வாட்ச் கட்டற சனம் இன்னம் இருக்காய்ங்க.

அவுட் டோர்னாலும் பரவால்லை .இண்டோர்ல இருப்பான்.சுவத்துல பெரிய கடியாரம் இருக்கும்.ஆனாலும் தன் வாட்சை பார்ப்பான்.
நேரம் என்னனு தெரிஞ்சுக்கறதுலயே இவ்ள அக்கறை காட்டற சனம் நேரம் நல்லாருக்கானு தெரிஞ்சுக்கறதுல காட்டறதில்லை. எவனையோ (அது நானாவே இருந்தாலும்) நம்பி -தங்கள் வாழ்க்கையை பணயம் வச்சு முடிவெடுக்கிறாய்ங்க.

இது நல்லதான்னா இல்லைன்னு தான் சொல்வேன். ஒவ்வொருத்தரும் ஜோதிட மா நாட்ல கலந்துக்கிட்டு உபன்யாசம் பண்ற அளவுக்கு இல்லின்னாலும் சில முக்கிய திருப்பங்களை முன் கூட்டி தெரிஞ்சுக்கறது நல்லதுன்னு தான் சொல்வேன்.

1990 மார்ச் முதல் ஒரு நாளைக்கு ஒரு ஜாதகம்னாலும் எத்தனை ஜாதகம் பார்த்திருப்பேன்னு சின்னதா ஒரு கணக்கு போட்டு பாருங்க. ஆனாலும் வருசத்துக்கு ஒரு ஜாதகம்/ஜாதகர் பயங்கர பல்பு கொடுத்துர்ராரு. சுத்தமா பொருந்தல போயான்னிர்ராரு.

என்னங்கடா இது 364 நாளா சொன்னதும் அதே சோசியம் தான் இன்னைக்கு சொன்னதும் அதே சோசியம் தான். தப்பு எங்கே நடந்து போச்சுன்னு மண்டைய உடைச்சிக்கிட்டு ரோசனை பண்ணாலும் பதில் “நோ”

எந்த ஜாதகத்தை யாரு பார்க்கனும்னு இருக்கோ அவன் பார்த்து பலன் சொன்னா தான் ஒர்க் அவுட் ஆகும். இது மட்டுமில்லை எந்த ஜாதகத்தை எந்த நேரத்துல பார்க்கனும்னு இருக்கோ அந்த நேரத்துல பார்த்தாதான் ஒர்க் அவுட் ஆகும்.

நாம பார்க்க வேண்டிய ஜாதகம் மட்டும் நம்ம கிட்டே வரனும் – அதுவும் நாம பார்க்கவேண்டிய நேரத்துலயே வரனும்னா – அதுக்கு நம்மை சுத்தி இருக்கிற நூஸ்ஃபியர் (எண்ணங்களால் ஏற்படும் சூழல்) பர்ஃபெக்டா இருக்கனும்.

கொஞ்சம் அசந்தாலும் பல்பு வாங்க வேண்டியதுதான். நம்முது சிம்ம ராசியாச்சா வருசத்துக்கு ஒரு தபா வர்ர இந்த மாதிரி ஜாதகங்களை மறக்கவே முடியறதில்லை.

நம்ம ஜாதகத்துல குரு உச்சம் தான். நாம நிர்வாகபுலி தான். ஜாதக பலன் சொல்றது இன்னைக்கு என்ன கிழமைப்பான்னு கேட்கிறவனுக்கு பதில் சொல்ற மாதிரி தான். (பயக்கம் ஆயிருச்சு பாஸ்!) ஆனாலும் வருசத்துக்கு ஒரு கிராக்கி இப்படி மாட்டுது.

என்னமோ கடைசியா இந்த சைட்ல பதிவு போட்டு எவ்ள நாளாச்சோ ஞா இல்லை. வாரா வாரம் பதிவு போட்டப்போ அலெக்ஸாவுல ரேங்க் 64 லட்சம் பதிவு போட்டே பலகாலம் ஆச்சு இன்னைக்கு பாதிக்கு பாதி குறைஞ்சிருக்கு (முன்னேறிட்டம் பாஸ்) என்னடா நடக்குது இங்கே?
ஜெயாவுக்கு ஜெயிலுக்கே லெட்டர் அனுப்பின மேட்டர் தெரியும் தானே . ஒரு ஆன்லைன் பிரபலம் நம்ம நச்சரிப்பு தாங்காம கிவ் மீ டீட்டெய்ல்ஸ்னு மெசேஜ் பண்ணாரு.

உ.வ பட்டு படபடன்னு அடிச்சு அனுப்பினமா – மூளையில தூங்கிக்கிட்டிருந்த தட்டச்சான் நியூரான் எல்லாம் முழிச்சுக்கிச்சு . அதான் இதை இப்படி காமா சோமானு அடிச்சுக்கிட்டிருக்கன்.

எல்லாமே பயக்க தோசம் தான் பாஸ்! நல்லவனா இருக்கிறது கெட்டவனா இருக்கிறது சோம்பேறியா இருக்கிறது எல்லாமே பயக்க தோசம் தான் போல.
ராசியும் வாழ்வும்னு ஒரு தொடர் ஆரம்பிச்சம். சிம்மத்துலருந்து ஆரம்பிச்சம் .மீனம் வரை முஞ்சுது போல. அதை தொடர வேண்டி இருக்கு.
ஒரு பக்கம் அரசியல் -இன்னொரு பக்கம் சினிமா ரெண்டுமே நம்மை இழுக்குது . கலர் கலரா பலூன் தெரியுது, ரிப்பன் தெரியுது. மெட்டீரியலைஸ் ஆகலின்னாலும் ஒரு வித சூழல் ஏற்பட்டுருச்சு.

ஒரு சினிமா பிரபலம் என் ஸ்க்ரிப்ட்ல வர ஒரு கேரக்டருக்கு நீதான் சரியா வருவேன்னு யாரோ சொன்னாங்கய்யா.. அவிக பேரை மறந்துட்டன். அதான் டைரக்டா மெசேஜ் பண்றேன். உன் ஃபோட்டோ நாலு அனுப்புங்கறாரு.

இன்னொரு ஆன்லைன் நண்பர் ஒரு தலைவருக்கு உன் மேட்டரை ஃபார்வார்ட் பண்ணிட்டன். நெம்பர் கொடுன்னு கேட்கிறாரு.

ஒரு மன்சன் எத்தனாம் பெரிய அதிர்ச்சிய தான் தாங்கறது? எழுதும் போது பேலன்ஸ்டா எழுதனும்னு தான் இத்தனை நாள் கேப் விட்டுட்டன்.
இப்பம் அதிர்ச்சி பழகி போச்சு. புதிய தலைமுறையின் உரக்கச்சொல்லுங்கள் நிகழ்ச்சியில நம்ம பெர்ஃபார்மென்ஸ் இன்னம் என்னென்ன அதிர்ச்சிகளை எல்லாம் தரப்போகுதோ தெரியல.

அத்தனை பேர்ல ஆரும் டச் பண்ணாத மூலத்தை பிடிச்சு உலுக்கிட்டம்ல . ஞா கிழமை காலை 10.30 க்கு வரும் பாருங்க.ஆமா இந்த சோசியத்தை பத்தி எதையோ சொல்ல ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டன் போல. நமக்கு கூட வயசாகுதுப்பா..ஆச்சரியம்!

எப்படியோ ஷெட்ல இருந்த வண்டிக்கு ட்ரெய்ல் ரன் மாதிரி இந்த பதிவு . இனி ஃபுல் ஸ்விங்ல வண்டி ஓட ஆரம்பிக்கும். ஓகேவா.உடுங்க ஜூட்டு ..

ஜோதிட வினா விடை

Rasi chakraஅண்ணே வணக்கம்ணே !

ஜோதிட வினா விடைங்கற இந்த பதிவோட நோக்கம் .. உங்களை கேள்வி கேட்க விட்டு – எந்த சுற்றி வளைப்பும் இல்லாம பாய்ண்ட் டு பாய்ண்ட் பதில் சொல்றதுதேன்.

கேள்வி நேரிடையா இருக்கனும். பதில் தெரிஞ்சவுக பதிலும் தரலாம். உ.ம் ராசி என்றால் என்ன? லக்னம் என்றால் என்ன? இப்படி ஆரம்பிக்கலாம். ஓகேவா உடுங்க ஜூட்டு .

அவசரமா ஜோதிடம் கத்துக்கனும்னு நினைச்சா இங்கே அழுத்துங்க . swamy7867 னுட்டு தேடுங்க. ஆடியோ ஃபைலா நிறைய ஸ்டஃப் கிடைக்கும். மேலும் இங்கே அழுத்தி உங்களுக்கு தேவையான விஷயத்தை அடிச்சு தேடுங்க. உதாரணமா:ஜோதிட பால பாடம், நீங்களும் ஜோதிடராகலாம்

நிச்சயமா கிடைக்கும்

 

 

ஜோதிட பாடம் : 14

kick 2

அண்ணே வணக்கம்ணே !
கடந்த பதிவுல 6-8-12ங்கற துஸ்தானாதிபதிகளை பத்தி சொன்னேன். ஒரு வகையில இந்த பாவாதிபதிகள் -இவிகளோட இம்பாக்டை தெரிஞ்சுக்காம சோசியம் சொன்னா அது சோசியமே கிடையாதுங்கோ.

ஒரு பாவம்,பாவாதிபதி (கிரகம்) எவ்ளதான் பலம் பெற்றிருந்தாலும் இந்த 3 கிரகங்களின் பார்வை/தொடர்பு ஏற்பட்டா எல்லாமே ஊத்திக்கும்.
உங்களுக்கு துவாதச பாவ காரகங்கள்,நவகிரக காரகங்கள் தெரியும்ல. அந்த காரகங்கள் எல்லாமே அடி வாங்கிரும்.

ஆறுக்குடையவர் சம்பந்தப்பட்டா குறிப்பிட்ட பாவ/கிரக காரகங்களில் சத்ரு,ரோக ,ருண பீடைகள் ஏற்படும்.

எட்டுக்குடையவர் சம்பந்தப்பட்டா மரணம்,பேரிழப்பு ,பிரிவு ஏற்படலாம். 12க்குடையவர் சம்பந்தப்பட்டா அந்த காரகங்கள் இருந்தும் இல்லாத மாதிரி தான்.அவற்றால் எவ்வித பலனும் ஜாதகருக்கு கிடைக்காது.

ஏற்கெனவே டச் பண்ண மேட்டருதான்.ஆனாலும் இங்கே மறுபடி சொல்லித்தான் ஆகனும். மிதுன ,கடக லக்னங்களை உதாரணமா காட்டி சொல்லியிருக்கன். அதாங்க..ஒரே கிரகத்துக்கு ரெண்டு வித ஆதிபத்யம்.

கடகத்துக்கு குரு 6-9 க்குடையவர். தனக்கு கோணாதிபத்யம் இருக்கேன்னு குரு ரோக ஸ்தானாதிபதியா வேலை செய்யாம விடமாட்டாரு.
மிதுனத்துக்கு சனி 8-9 க்குடையவர் தனக்கு கோணாதிபத்யம் இருக்கேன்னு சனி அஷ்டமாதிபதியா வேலை செய்யாம விடமாட்டாரு. அதும்பாட்டுக்கு அது -இதும்பாட்டுக்கு இது பேர்லலா நடந்துக்கிட்டே வரும்.

ஆனா மேற்படி நல்லது கெட்டது ரெண்டுக்குமிடையில் ஒரு ஒத்திசைவு இருக்கும். நம்ம கடகலக்னத்தையே எடுத்துக்கங்க. குரு மொதல்ல ரோகாதிபதியா வேலை செய்தாரு. அரசு அதிகாரிகள் முத கொண்டு -மானில முதல்வர் வரை சகட்டுமேனிக்கு டிஷ்யூம் டிஷ்யூம்.
ஆனால் அதுவே குரு பாக்யாதிபதியா (தூரதேச தொடர்புகளுக்கான ஸ்தானம்) வேலை செய்ய ஒரு ரூட்டை போட்டு விட்டது. தூரதேச தொடர்புகள் அதிகமாச்சு. (ஹி ஹி வித் இன் தி ஸ்டேட்டுதான்)

சரி 46 வயசாச்சும் இப்பமாச்சும் டிஷ்யூம் டிஷ்யூம் குறைஞ்சுதான்னா இல்லை. நாம புத்ரகாமேஷ்டி யாகத்துலருந்து -பலதையும் மறந்து அசால்ட்டா இருக்கச்சொல்லோ எவனோ ஒருத்தன் வந்து ஞா படுத்திட்டு போயிர்ரான். இதனால என்ன ஆகுது ஒத்த சிந்தனையுள்ளவுக தொடர்புக்கு வர்ராய்ங்க.
சரி ..ராசிச்சக்கரம், 12 ராசிகள்,இந்த ராசிகளுக்குண்டான அதிபதிகள் , துவாதசபாவ காரகம்,நவகிரக காரகம்லாம் தெரிஞ்சுக்கிட்டிங்க. இயல்பான சுபகிரகங்கள் எது பாபகிரகங்கள் எது , ஒவ்வொரு லக்னத்துக்கும் சுபர் யார் பாபர் யார் தெரிஞ்சுக்கிட்டிங்க.

ஒரு கிரகம் ஒரு ஜாதகத்துல ஒரு ராசியில நின்னிருக்குன்னா அங்கன அந்த கிரகத்துக்கு என்ன பலம்னு பார்க்கனுமில்லையா?

இது எதுக்குன்னா நல்லது செய்ற கிரகங்கள் வீக் பொசிஷன்ல இருந்தா நல்லது நிதானமா நடக்கும். ஸ்ட் ராங் பொசிஷன்ல இருந்தா பக்காவா நடக்கும்.
கெட்டது செய்ற கிரகங்கள் வீக் பொசிஷன்ல இருந்தா கெட்டது பட்டு பட்டுன்னு நடக்கும். செம ஸ்ட் ராங்கா இருந்தா நல்ல பலன் நடக்காட்டாலும் கெட்ட பலன் குறையும்.

ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியில உச்சம் பெறும்.அதுக்கு ஏழாம் ராசியில நீசமாயிரும்.இதான் விதி. இதன் படி
சூரியன் -மேஷம்
சந்திரன்-ரிஷபம்
செவ் -மகரம்
ராகு-கேது -விருச்சிகம்
குரு -கடகம்
சனி -துலா
புதன்-கன்னி
சுக்கிரன்-மீன ராசிகளில் உச்சம்.

இப்பம் சின்னதா வீட்டுப்பாடம் . ஏற்கெனவே சொன்ன விதிப்படி கிரகங்கள் உச்சம் பெறும் மேற்படி ராசிகளுக்கு ஏழாம் ராசிகள் யாவை? இதான் கேள்வி.இதுக்கான பதிலை கூகுள்ள தேடாம கணக்கு போட்டு கமெண்டுல சொல்லுங்க. ஏன்னா கிரகங்கள் இங்க தானே நீசமாகனும்.

பாடம் தொடரும். உடுங்க ஜூட்டு.

ஜோதிட பாடம்: 13 (சுபர் -பாபர்)

sexy astrology

அண்ணே வணக்கம்ணே !
ஏட்டு சுரைக்காய்ங்க,ஈயடிச்சான் காப்பிங்க, குதிரைக்கு குர்ரம்னா யானைக்கு யர்ரம்ங்கற மேதாவிங்கல்லாம் விலகலாம். ஜோதிடம்ங்கறது ரிஷிகளும்,மகரிஷிகளும் தங்கள் உசுரை பணயம் வச்சு,ஒட்டு மொத்த வாழ் நாளையும் அர்ப்பணிச்சு உருவாக்கின சப்ஜெக்ட். இது ஒட்டு மொத்த மனித குலத்துக்கானது.

அவனவன் நாலு மேட்டரை வச்சுக்கிட்டு -ஒளிச்சு வச்சுக்கிட்டு கதை பண்ணிக்கிட்டிருந்தாய்ங்க. இதனாலயே ஒரு அப்டேஷன் இல்லாம அவுட் டேட் ஆயிருச்சு இந்த சப்ஜெக்ட்.

நம்மை பொருத்தவரைக்கும் நம்ம கிட்ட 1008 வித்தைங்கள ஆத்தா கொடுத்திருக்கா. நாம கரப்பான் பூச்சி மாதிரி எப்படியாச்சும் எங்கயாச்சும் பிழைச்சுக்க நம்மால முடியும்.

நேத்திக்கு வரைக்கும் கதை எப்படியோ ஆனால் இன்னைக்கு முடிவு என்னனா இந்த ஜோதிட பாடத்தை முடிச்சே தீர்ரது.

நம்ம மண்டையில இருக்கிற சரக்கை எல்லாம் அள்ளி அள்ளி கொடுக்கப்போறேன். “கண்ணுள்ளவர்கள் பார்க்கக்கடவர்.செவியுடையவர்கள் கேட்க கடவர்” மற்றவர்கள் அடுத்தவன் ஆசனத்தை நோண்டியே நாசமா போவட்டும்.

இதுவரை பாவாதிபதிகள் -அவர்களுக்கான கிரேடிங்கை பற்றி பார்த்தோம்.ஏற்கெனவே இந்த கிரக காரகங்கள் பற்றி சொல்லியாச்சு. அடுத்து சொல்லவேண்டியது சுபத்வ பாபத்வம்.

வாழ்க்கையில நாம பார்க்கிற மன்சங்கள்ள எப்டி பாவி அப்பாவி இருக்காய்ங்களோ அப்படியே சோசியத்துலயும் பாவி – அப்பாவில்லாம் உண்டு. இந்த மேட்டர்லாம் ஏற்கெனவே பேசினதுதேன். நைசர்கிகம் -லக்னாத்.

நைசர்கிக பாவி லக்னாத் சுபனாகும்போது என்னவிதமான பலன் ஏற்படும். நைசர்கிக சுபன் லக்னாத் பாவியாகும் போது என்ன விதமான பலன் ஏற்படும்னு இந்த பதிவுல பார்ப்போம். ஐ மீன் பலன்ல வித்யாசத்தை இன்னைக்கு பார்ப்போம்.

நைசர்கிக பாவி லக்னாத் சுபனாகும்போது:

இவர் தரும் நன்மை/ நற்பலன் ஜாதகருக்கும் – அப்பலன் யாரால் ஏற்படுகிறதோ அவர்களுக்கும் துன்பம் தருவதாக இருக்கும். சில சமயம் சட்டவிரோதமானதாக -பல சமயம் நியாயமற்றதாக இருக்கும்.
ஜாதகனுக்கு இந்த நற்பலன்கள் கிட்டும்போது நாடு,மானிலம்,ஊரு சனம்லாம் யுத்தம்,கர்ஃப்யூ,தொற்று நோய்னு அவதிப்பட்டுக்கிட்டிருப்பாய்ங்க. பாபர்கள் தரும் சொத்து தாமதமா கிடைக்கும் -அது ஏலத்துல வர்ர சொத்தாவோ – சோற்றுக்கில்லாத நிலையில் விற்கப்படும் சொத்தாவோ -கொலை /தற்கொலை நடந்த சொத்தாவோ -லாக் அவுட்ல இருந்த தொழிற்சாலையாவோ இருக்கலாம். இவற்றை ஜாதகர் விரட்டி விரட்டித்தான் “கைப்பற்ற”வேண்டியிருக்கும்.

நைசர்கிக சுபன் லக்னாத் பாபியாகும் போது:

இவர் தரும் தீமைகள் உடனடி லாட்டரி மாதிரி உசுருக்கே உலை வச்சுர்ர ரேஞ்சுல இருக்கும். இவர் நாம அவதி படறதை பார்க்க முடியாத அளவுக்கு நல்ல மனசு கொண்டவர் .அதனால “காரியத்தை” பட்டுன்னு முடிச்சுருவார்.

ஒரே நாள்ள திவாலாறது – என் கவுண்டர்ல போயிர்ரது – தூங்கறச்ச ஹார்ட் ஸ்ட்ரைக் பண்ணிர்ரது மாதிரியான வேலைகள்ளாம் இவரோடதுதேன்.

அதின்னா பாஸு .. நைசர்கிக்கம், லக்னாத்துன்னு புச்சா கீதுன்னு கேட்கிற கேஸுங்களுக்காக கீழ் கண்ட பாராக்கள் (மீள் பதிவு)

நைசர்கிக சுபத்வ பாபத்வம்:

குரு, சுக்கிரன், தீய கிரகங்களுடன் சேராத புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியோர் நைசர்கிக சுபகிரகங்கள்.சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது, தீய கிரகங்களுடன் சேர்ந்த புதன், தேய்பிறைச் சந்திரன் ஆகியோர் நைசர்கிக பாப கிரகங்கள்.

லக்னாத் சுபத்வ பாபத்வம்:
அவிகவிக லக்னத்தை பொருத்து கிரகங்களோட சுபத்வம் -பாபத்வம் டிசைட் ஆகும். இதைத்தேன் லக்னாத் சுபத்வ பாபத்வம்னு சொல்றோம்.

இப்பம் ஒவ்வொரு லக்னத்துக்கும் சுபர் ஆரு ..பாபர் ஆருன்னு பார்ப்போம்.

1.மேஷம்:
சூரியன் ,குரு நன்மை செய்யும் கிரகங்கள்.ஆனால் இவர்களுக்கு சனியோட தொடர்பு ஏற்பட்டால் பல்பு தேன். சூரிய குரு சேர்க்கை யோகத்தை தரும். 5க்கதிபதியான சூரியன் 9 க்கு அதிபதியான குருவோட சேரும்போது குரு மங்கி போயிருவாரு. அதாவது பல மேட்டர்ல அப்பாவை பீட்பண்ணிருவிங்கன்னு அருத்தம். ( நிபந்தனை: சேர்க்கையில ரெண்டு பேருக்கும் ஓரளவுக்காவது பலம் இருக்கனும் – இந்த சேர்க்கை 6,8,12 போன்ற *துஸ்தானங்களில் ஏற்பட்டிருக்கக்கூடாது)

புதன்,சுக்கிரன்,சனி பாபிகள். சனி ,புதன் மாரகர்கள். ரெண்டாம் பாவாதிபதியானாலும் சுக்கிரன் டிக்கெட் போடமாட்டாரு. சனி புதன் போட்டுருவாய்ங்க. இவிக மாரக ஸ்தானங்களான 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கொப்பான கெண்டம்.

2.ரிஷபம்:
சூரியனும்,சனியும் நல்லவர்கள். சனி நெல்லவருன்னா லாஜிக் இருக்கு .( 9-10 க்கு அதிபதிங்கறதால) சூரியன் எப்படி நல்லவருனு கேப்பிக.சொல்றேன். இவரு நாலுக்கு அதிபதி. வித்யாஸ்தானாதிபதி. சூரியன் உதிச்ச பிற்பாடு கயிறா பாம்பாங்கற சந்தேகமே வராதுல்லியா.அதைப்போல இவிகளோட அறிவு சூரியனை போல பிரகாசிக்கும்.அந்த வெளிச்சத்துல நெல்லது -கெட்டதுல்லாம் பக்காவா புரிஞ்சி சாலாக்கா நடந்துப்பாய்ங்க.

சனி யோக காரகன். சந்திரனும் வியாழனும் ,சுக்கிரனும் பாபிகள். இது இன்னாடா இது அக்குறும்பா இருக்குது. லக்னாதிபதியே பாபியான்னு கேப்பிக.

சுக்கிரன்னா கில்மா. லக்னம்னா மனம்,உடல் பார்ட்டியோட உடல் ,மனம் பூரா கில்மா மயமா இருந்தா முன்னேற்றம் பாதிக்கப்படுமா இல்லியா?மேலும் சுக்கிரன் 6 க்கு அதிபதி. அதுனாலதேன் சுக்ரன் பாபின்னு சொல்லிப்புட்டாங்கோ.

மேலும் சந்திரன் ஏன் பாபி? சந்திரன் 3 ஆமிடத்துக்கு அதிபதியாறாரு. மூணுங்கறது மாரகஸ்தானமாச்சே .அதனால பாபி. மேலும் சந்திரன் நிலையில்லாத கிரகம். 3ங்கறது தைரியஸ்தானம். தைரியம் பர்மனன்டா இருந்தாலே மவனுங்க பல்பு குடுத்துர்ரானுங்கோ. இதுல சந்திரன் அப்பப்போ லீவு போட்டுட்டா பேதியாயிரும்ல.குரு ஏன் பாவின்னா இவரு அஷ்டமாதிபத்யம் வாங்கிக்கிறாரே.அதனாலதேன்.

சந்திரன் குரு செவ் மாரகர்கள்.புதன் கொல்லார். வியாழன் முதலானோர் கொல்வர். 2,3,7,8,12 பாவங்களில் பாபி/மாரகர்கள் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

குறிப்பு:
மேஷம் ரிஷபம் லக்னங்களுக்கு விளக்கியதை போல மத்த ராசிகளுக்கும் விளக்க ஆசைதான்.ஆனால் பவர் கட் நேரம் நெருங்குதே. அதனால அடக்கி வாசிக்கிறேன்.

3.மிதுனம்:
சூரியன்,செவ்,குரு கொடிய பாபிகள்.குரு செவ் சேர்க்கை நல்லதில்லை.( நோட் திஸ் பாய்ண்ட் . குரு செவ் சேர்க்கையை பொத்தாம் பொதுவா குருமங்கள யோகம்னு ஊத்தி விட்டுருவாய்ங்க. நம்பாதிங்க) சுக்கிரன் யோககாரகர்.. சந்திரன் தனபாவாதிபதியானாலும் மாரகம் கொடுக்கமாட்டார். சூரியன்,செவ்,குரு 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம் ஏற்படும்.

4.கடகம்:
குரு,செவ் சுபர்கள், செவ் யோககாரகன். செவ்வாயும் குருவும் சேர்ந்தால் யோகம்.சூரியன் கொல்லான்.சுக்கிரன்,புதன் பாபிகள்.புத சுக்கிரன் சனி மாரகர்கள். இவர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

5.சிம்மம்:
சூரியன் செவ் சுபர்கள்.புதன்,சுக்கிரன் பாபிகள்.செவ் சுக்கிரன் யோககாரகர்கள். ஆனால் செவ் சுக்கிரன் கூடியிருந்தால் தீயபலன். சனி சுக்கிரன் மாரகர்கள்.புதன் கொல்லான். மாரகர்கள் மாரகஸ்தானமாகிய 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

6.கன்னி:
சுக்கிர,சனி சுபர்கள், சந்திரன் செவ் குரு பாபிகள்.புத சுக்கிரர்கள் யோககாரகர். இவர்கள் கூடினால் யோகம். சந்திரன்,செவ்,குரு மாரகர்கள்.சுக்கிரன் தனபாவாதிபதியானுலும் கொல்லார். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

7.துலா:
சனி,புத,சுக்கிரன் சுபர்கள்.சூரி,செவ்,குரு பாபி.சந்திர,புதர்கள் யோககாரகர்கள் இவர்கள் கூடினால் யோகம்.சூரியன்,குரு மாரகர்கள். செவ் சப்தமாதிபதியானாலும் கொல்லான். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம் தருவார்.

8.விருச்சிகம்:
சூரியன்,சந்திரன்,குரு சுபர்கள்,செவ் ,புத ,சுக்கிரன் பாபிகள்.( செவ் லக்னாதிபதியானாலும் பாவிங்கறாய்ங்க.ஏன்னு கேப்பிக. செவ் யுத்த காரகர். வாழ்க்கையில எப்பயோ ஒரு தாட்டி ஃபைட் பண்ணா பரவால்லை. வாழ்க்கை முச்சூடும் போராடினா நாஸ்திதானே)

சூரி,சந்திரர்கள் யோககாரகர்கள். இவர்கள் கூடினால் யோகம். ( சந்திரனால் வரும் யோகம் என்பதால் நிலைத்த ,நீடித்த பலன் கிடைக்காது.) புதன்,செவ்,சுக்கிரன் மாரகர்கள். குரு சனி கொல்லார்.புதன் முதலானோர் கொல்வர். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

9.தனுசு:
சூரிய,செவ் சுபர். சுக்கிரன் ஒருவனே பாபி. சூரியனும் புதனும் கூடினால் யோகம். (இது எப்டி ஒர்க் அவுட் ஆகும்? சூரியன் 9 க்கு அதிபதி. புதன் 7 ,10 க்கு அதிபதி – 9+10 அதிபதிகள் சேரும்போது தர்ம கர்மாதிபதி யோகம் வரும் போல..ஆனால் இந்த யோகம் ஒர்க் அவுட் ஆகிற விஷயத்துல நமக்கு சில சம்சயங்கள் உண்டு) சுக்கிரன் புதன் மாரகர்கள். சந்திரன் ,சனி கொல்லார்.சுக்கிரன் முதலானோர் கொல்வர். மாரகர்கள் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

10.மகரம்:
செவ் புதன் சுக்கிரன் சுபர்கள்.சந்திரன் குரு பாபிகள்.சுக்கிரன் ஒருவனே யோககாரகன்.சுக்கிரனும் புதனும் கூடினால் ராஜயோகம். சூரி,சனி கொல்லார்.சந்திரன் வியாழன் மாரகர்கள்.2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

11.கும்பம்:
சுக்கிரன் புதன் சனி சுபர்கள். சந்திரன் செவ் குரு பாபிகள்.சுக்கிரன் யோககாரகன். சுக்கிரன் செவ் கூடினால் யோகம்.( சுக்கிர செவ் சேர்க்கை
ய பற்றி தனி சாப்டரே இருக்குங்கோ – அதையும் ஒரு மூச்சு படிச்சுருங்க -கும்ப லக்னத்துக்கு மட்டும் ஓரளவு நன்மைய தந்தாலும் அவிகளுக்கும் சேர்த்து ஆப்படிக்க கூடிய கிரக ஸ்திதி இது ) குரு தனபாவாதிபதியானாலும் கொல்லான்.சந்திரன் செவ் கூடினால் யோகம்.சந்திரன் செவ் 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.

12.மீனம்:
சந்திரன் செவ் சுபர். சூரியன் புதன் சுக்கிரன் புதன் சனி பாவிகள்.செவ் குரு யோககாரகர்கள்.செவ்வாய் குரு கூடினால் யோகம் சூரியன் புதன் சுக்கிரன் சனி மாரகர்கள்.செவ் கொல்லார்.சூரியன் முதலானவர்கள் கொல்வார்கள் .மாரகர்கள் (செவ் தவிர) 2,3,7,8,12 பாவங்களில் இருந்தால் மரணத்துக்கு சமமான கெண்டம்.