2015 குரு பெயர்ச்சி பலன் : மிதுனம்,கடகம்

IMG_0615

அண்ணே வணக்கம்ணே !

மொதல்ல கொஞ்சம் உரத்த சிந்தனை . நாங்களும் ரோசிப்பம்ல?
கால மாற்றமும் -கிரக பலனும்னு ஒரு தொடர் ஆரம்பிச்சம்.அதுக்குள்ள குரு பெயர்ச்சி சீசன் ஆரம்பிச்சிருச்சு. ஊருடன் ஒத்துவாழ் போல அதுல வாய வச்சாச்சு. மேஷம்,ரிஷபம் ஓவர். இன்னம் 10 ராசிக்கு எழுதியாகனும். வீடியோ பதிவுன்னு அள்ளி விட்டம். வர்ர 15 ஆம் தேதிக்குள்ளயாச்சும் பதிவுகளை முடிச்சுட்டா இதை பேஸ் பண்ணிக்கிட்டு -இன்னம் பரிகாரம் அது இது சேர்த்து விலாவாரியா வீடியோ பதிவு பண்ணலாம்.

கட்டண சேவைக்கு கூட்டம் அம்முது. ஆனால் வண்டி ஓடமாட்டேங்குது . கிழவாடி ஆயிட்டா காலை நேரம் மட்டும் தான் மூளை சுறுசுறுப்பா இருக்குமாம். நாப்பத்தெட்டெல்லாம் ஒரு வயசா? லக்னம் தான் வேலை செய்யுதா? ஜன்ம குரு தான் ஆப்படிச்சாரா? அப்போ இந்த குரு அனுகூலம் போல. லேட்டஸ்ட் ட்ரான்ஸ்லேட்டர் “குரு” நாதன்.

ஊர் வேலைக்காக உதவாக்கரை பொம்பளய வேலைக்கு சேர்த்து ஐ நூறு வட்டம். அதுல ரூ.200 வேணம்னா ஒர்த்து . ஆக முன்னூறு வட்டம். குரு காரகம்.

ஜி.எம்.ஆன்லைன் சித்தூர் லைவ் இன் சைட்டுல வேற பத்தி எழுதனும். எம்.ஜி.ஆர் வேலை தான் ஆனால் பரவுதல் நடக்கும். வாரத்துக்கு ரெண்டுன்னு சொன்னம் . ஆரம்பம் ஜூலை 5 .இன்னைக்கு தேதி? ஏழுதான். ரெண்டு சாப்டர் போட்டாச்சு. அப்போ 12 ஆம் தேதிவரை யோசிக்க தேவையில்லை.

குரு பெயர்ச்சி ? எழுதியே ஆகனும்.கு.பட்சம் ரெண்டு ராசி . லேண்ட் என் க்ரோச் மென்ட் கேஸ்? மனு ட்ராஃப்ட் பண்ணியே ஆகனும். கட்டண சேவை ? நாளையிலருந்து ஜரூரா இறங்கிரனும். எங்கே தப்பு நடக்குது? வாஸ்து? தசா புக்தி ? 11/May/2015 => 17/Sep/2015 செவ் தசை சூரிய புக்தி . சுக்கிர புக்தியையே சமாளிச்சுட்டம்.

கோசாரம்? ஜன்ம குரு, அஞ்சுல சனிய விட ரெண்டுல குரு அஞ்சுல சனி பெட்டர் தானே? லேக் ஆஃப் ஃபிசிக்கல் எக்ஸர்சைஸ்? நோ சன் லைட்? என்னடா நடக்குது அங்கே? நான் என்ன அஞ்சு வட்டி யாவாரமா பார்க்கிறேன். கடுப்பாச்சு. இறங்கிருவன். ஞா இருக்கட்டும்.

ட்ரஷரீஸ் அண்ட் அக்கவுண்ட்ஸ் கேஸ்? டைவர்ஸ் கேஸ்? எல்லாமே பொசுக்குன்னு முடிஞ்சுரும்.ஆனால் ஸ்டார்ட்டிங் ட்ரபுள். அல்லது ஸ்விங்ல போகும் போது வெளிய இருந்து பிரச்சினை ? பார்ப்பம். மொதல்ல ரெண்டு ராசிக்கு குருப்பெயர்ச்சி பலன்.உடுங்க ஜூட்டு .

மிதுனம்:
2015,ஜூலை ,14 ஆம் தேதி விடியல் 5.45 மணிக்கு குரு உங்க ராசிக்கு 2ஆமிடமான கடகத்தில் இருந்து மூன்றாமிடமான சிம்மத்துக்கு பெயர்ச்சி ஆகிறார்.

உங்களுக்கு குரு 7,10 பாவங்களுக்கு அதிபதி. இவர் 2 ல் இருந்தார். அங்கிருந்து விலகி 3க்கு வரார். இவர் 2ல் இருந்ததால் தொழில் உத்யோகம்,வியாபாரம் வகையிலயும் ,மனைவி,மனைவி வழி உறவுகள் வகையிலயும் ஓரளவாவது அனுகூலமான சூழல் இருந்திருக்கும்.

இப்போ அவர் 3 ஆமிடத்துக்கு வர்ராரு. இதனால தொழில் உத்யோகம்,வியாபாரம் வகையிலயும் ,மனைவி,மனைவி வழி உறவுகள் வகையிலயும் அல்லல் அலைச்சல் ஏற்படும். இதனால மனசுல ஒரு வித பயம்,திகில் வந்துரும்.திகில் பாண்டி கணக்கா ஆயிருவிங்க.

உங்க ராசி ராசிச் சக்கரத்துல 3 ஆவது ராசிங்கறதால பிறப்புலயே உங்களுக்கு உடன் பிறப்புகளோடு ஹேட் அண்ட் லவ் ரிலேஷன் இருக்கும். இப்போ குரு வேற இதே இடத்துக்கு வர்ரதால விலகிப்போன உ.பி,ர.ரக்கள் நெருங்கி வர அதனால கூட நான் சொன்ன பாதிப்புகள் வரலாம். மேலும் குரு பிரதிகூலமா போறதால வரக்கூடிய ஜெனரல் எஃபெக்ட்ஸ் கூட வரலாம்.

2015, ஆகஸ்ட் 10 முதல் செப் 9 வரை குரு சிம்மத்துலயே அஸ்தமிக்கிறார்.அஃதாவது குருவோட இம்பாக்ட் ஏறக்குறைய ஜீரோ ஆகி இங்கே சூரிய வேலை செய்ய ஆரம்பிச்சுருவாரு. இதனால மனசுல இருந்த பயம்,திகில் எல்லாம் மறைஞ்சு ஓரளவு தகிரியம் பிறக்கும். நீங்க பகல்ல பிறந்தவரா இருந்தா அப்பா,அப்பா வழி உறவுகள் வகையிலயும் உதவிகள் கிடைக்கலாம்.

அனைவருக்கும் மலை பிரதேசங்கள்,ரிமோட் வில்லேஜஸ்,நியூலி டெவலப்பிங் ஏரியாக்காரவிக உதவலாம். ஒன்றியம்,பஞ்சாயத்து தலைவர்கள் உறுப்பினர்கள் உதவி கிடைக்கலாம். இது ஜஸ்ட் ஒரு மாச பலன் தான்.ஆகவே சீக்கிரமே அறுவடை செய்ய ட்ரை பண்ணுங்க. பிறவு அடக்கி வாசிங்க.

2016 ஜனவரி 8 முதல் சிம்மத்துலயே வக்ரமாகிறார் (மார்ச் 15 வரை இதே நிலை -அடுத்த பஞ்சாங்கம் வந்தாதான் எதுவரை வக்ரம்னு சொல்ல முடியும்)
இதனால இந்த காலகட்டத்துல குருவோட லீலைகள் கொஞ்சம் குறையும். அதே சமயம் வயிறு/இதயம் தொடர்பான சிக்கல் முத்திப்போகவும் வாய்ப்பிருக்கு.மனைவி/பங்குதாரர்கள்/ வாடிக்கையாளர்கள்/ஊழியர்கள் போக்கு அதிர்ச்சியை தரும்.

கடகம்:

2015,ஜூலை ,14 ஆம் தேதி விடியல் 5.45 மணிக்கு குரு உங்க ஜன்ம ராசியான கடகத்துலருந்து 2ஆமிடமான சிம்மத்துக்கு பெயர்ச்சி ஆகிறார்.
உங்களுக்கு குரு6,9பாவங்களுக்கு அதிபதி. இவர் ஜன்மத்துலயே இருந்தார். அங்கிருந்து விலகி 2க்கு வரார்.

ஜன்மத்துலருந்து விலகினதே ஒரு பெரிய திருப்பம். இதனால பொருளாதார நெருக்கடி ,ஊர் பஞ்சாயத்து ,வீண் பழி ,கொய்யால எல்லாத்தயும் விட்டுட்டு எங்கனா போயி நிம்மதியா இருந்திரலாமாங்கற கடுப்புல்லாம் மாறிரும். இதுவரை எஃபெக்ட் பண்ண அஜீர்ணம்,கியாஸ் ட்ரபுள் கூட கட்டுப்பாட்டுக்கு வந்துரும்ங்கோ !

இவரு ரெண்டுக்கு வர்ரதால அனுகூல தசாபுக்திகள் நடப்பவர்கள் கடன் வாங்கி சொத்து / நகை வாங்குவதும், பிரதி கூலமான தசாபுக்திகள் நடப்பவர்கள் கைக்கு வருவனா என்று கண்ணாமூச்சி காட்டிய சேமிப்பை /முதலீட்டை /சொத்தை /நகைகளை பெற்று விற்று/அடகு வைத்து கழுத்தை நெறித்த கடன் தீர்த்து நிம்மதி அடைவார்கள்.

இதில் ஏதோ ஒன்று கமுக்கமா நடந்து முடியும் வரை வெகண்டையா பேசறது ,விவகாரமா பேசறதுன்னு கசப்பை கொட்டுவிங்க. கண்,தொண்டை,வாய் பகுதியில் பாதிப்பு வரலாம். குடும்பத்துல கலகம் வரலாம் . மேலும் குரு அனு கூலமா வர்ரதால வரக்கூடிய பொதுவான பலன் கள் கூட கிட்டலாம்.
2015, ஆகஸ்ட் 10 முதல் செப் 9 வரை குரு சிம்மத்துலயே அஸ்தமிக்கிறார்.அஃதாவது குருவோட இம்பாக்ட் ஏறக்குறைய ஜீரோ ஆகி இங்கே சூரிய வேலை செய்ய ஆரம்பிச்சுருவாரு. இதனால சொந்த செல்வாக்குல -உங்க வாக்கு வன்மைய வச்சு பைசா சம்பாதிக்க வாய்ப்பு ஏற்படும்.

நீங்க பகல்ல பிறந்தவரா இருந்தா அப்பா,அப்பா வழி உறவுகள் வகையிலயும் உதவிகள் கிடைக்கலாம். அனைவருக்கும் மலை பிரதேசங்கள்,ரிமோட் வில்லேஜஸ்,நியூலி டெவலப்பிங் ஏரியாக்காரவிக உதவலாம். ஒன்றியம்,பஞ்சாயத்து தலைவர்கள் உறுப்பினர்கள் உதவி கிடைக்கலாம். முக்கியமா பைசா மேட்டர்ல இது ஒர்க் அவுட் ஆகும். இது ஜஸ்ட் ஒரு மாச பலன் தான்.ஆகவே இது நிரந்தரம்னு மயங்கிராம அடக்கி வாசிங்க.

2016 ஜனவரி 8 முதல் சிம்மத்துலயே வக்ரமாகிறார் (மார்ச் 15 வரை இதே நிலை -அடுத்த பஞ்சாங்கம் வந்தாதான் எதுவரை வக்ரம்னு சொல்ல முடியும்)
இதனால இந்த காலகட்டத்துல உங்கள் வருமானத்துல திடீர் மாற்றம்/ஏற்ற இறக்கம்லாம் ஏற்படும். கடனே வாங்க வேண்டாத நிலை வரலாம். இதே போல செட்டி வச்சு கெட்டது போல கெட்டது போதும் வந்ததை அனுபவிக்கலாம்ங்கற மனப்போக்கும் ஏற்படும். கண்,தொண்டை,வாய் , வயிறு/இதயம் தொடர்பான சிக்கல் முத்திப்போகவும் வாய்ப்பிருக்கு. மனைவி குழந்தைகள் போக்கு அதிர்ச்சி தரும்.

Advertisements

நல்லதுக்கு காலமில்லையே ஏன்?

அண்ணே வணக்கம்ணே !
நான் ஆருக்கும் எந்த துரோகமும் பண்ணலியே எனக்கே ஏன் இவ்ள கஷ்டம் வருது? நான் எவன் வவுத்தெரிச்சலையும் கொட்டிக்கலையே எனக்கு பிறந்தது ஏன் உருப்படாம போகுது? இப்படி சில வில்லங்கமான கேள்விகளை நாமளும் ஃபேஸ் பண்ணி மெர்சலானது உண்டு.

மத்தவிக கதை எப்டியோ நமக்கு தெரியாது. நம்மை பொருத்தவரை கேள்வின்னு ஒன்னு வந்துட்டா அதுக்குண்டான பதிலை ஏழு மலை ஏழு கடல் தாண்டி தேட வேண்டியதில்லை. ஊறுகா பானை கணக்கா மண்டைய குலுக்கினா போதும் மேட்டர் வெளிய வந்துரும்.

லக்னத்துல சூரியன் :
ஈகோன்னா என்னன்னு தெரியாத காலத்துல எம்.ஜி.ஆர் சிவாஜி சண்டை போட்டு முன் பல் மொக்கை. எப்பப்பாரு மண்டையில அடிபட்டு தையல் . மொகத்துல அடிப்பட்டு தையல். அல்லது கண்ல கட்டி வந்துரும்.

எப்போ நாம திமிர் பேச்சு , அகங்கரத்துல நாய் மேல ஏறி கோலம் வர்ரதுன்னு வாழ்ந்து வந்தமோ அப்பல்லாம் ஒன்னமே கிடையாது. (ஆனால் பத்து பத்து ரூவாய்க்கு லாட்டரி) பிறவு இதெல்லாம் வெட்டின்னு பேக் டு தி பெவிலியன் போய் சின்ன பசங்களை கூட ” அண்ணா.. செரிங்ணா..அப்டியேண்ணா. வரங்ணா”ங்கற ரேஞ்சுக்கு வந்துட்டம். பைசா புரள ஆரம்பிச்சுருச்சு .ஆனால் ..

ஆறங்குல கன மரத்துல செய்து வச்சிருந்த அஞ்சுக்கு அஞ்சு அடி சன்னல் விழுந்து நடு நெத்தி ஓப்பன் ஆயிருச்சு.

நீதி: லக்னத்துல சூரியன் இருந்தா அகங்காரத்துல அழியனும். இல்லின்னா மண்டை ஒடையும்.

லக்னத்துல குரு: ( 6-9 க்குடையவர்)
சதா சர்வ காலம் உஞ்ச விருத்தி , அசல் பார்ப்பான் போல ” நல்லது கெட்டது ” சொல்லி வவுறு வளர்த்துக்கிட்டிருந்தம். எப்பவும் பொருளாதார பற்றாக்குறை -குண்டிய சுத்தி கடன்.

எப்படி மாட்டிக்கிச்சு என்னன்னு சொன்னா விடிஞ்சுரும். தூரத்து -பெரீ மன்சனை ஜன்ம விரோதியா பாவிச்சு “லொள்ளு பண்ண ஆரம்பிச்சம்” (ஆருன்னு கேட்கலியே -எங்க ஊரு சந்திர பாபு நாயுடுங்கோ)

என்னாச்சு? தூர தேசத்துலருந்தெல்லாம் காசு பணம் புரள ஆரம்பிச்சுருச்சு . அவரை ரோகாதிபதியா செயல்பட விட்டதால பாக்யாதிபதியாவும் செயல்பட ஆரம்பிச்சாரு.

நாம சாதாவா இருந்தப்போ கியாஸ் ட்ரபுள்,அஜீர்ணம்,பிச்சைக்கார பொளப்பு. கொஞ்சம் சோதாவா மாறினதும் எல்லாமே மாறிப்போச்சு.

ரெண்டுல சுக்ரன்:(பாதகாதிபதி)
ஆரம்ப காலத்துல செக்ஸ் அதுவும் முக்கியமா இந்த சுய இன்பம்னா செம ஷை ஆயிருவம்,ஜென்மமே செத்துப்போயிரும். அதுக்குன்னு ஒரு பார்ட்டி கிராஸ் ஆனான். எல்லா பிரமையும் போச்சு . புரட்சி கவிஞர் பாரதி தாசன் கணக்கா பச்சை பச்சையா பேச ஆரம்பிச்சம். தோஷம் போச்சு. பைசா புரள ஆரம்பிச்சுருச்சு.

ரெண்டுல சந்திரன்: (லக்னாதிபதி)
பத்தாங்கிளாஸ் சமயத்துல ஷேவிங்குக்கு போனா நாவிதர் உற்சாக மிகுதியில பையனுக்கு நெல்லா வளரட்டும்னு மீசையையும் எடுத்து விட்டுட்டாரு. அது மறுபடி வளர்ர வரை அஞ்ஞாத வாசம் செய்தம். பேச்சும் அப்டித்தான் .ஒரு பேச்சுன்னு கொடுத்தா அதுக்கு கமிட் ஆகி நாறிப்போறது வழக்கம்.
ஆருனா ஏம்பா நேத்திக்கு இப்டி சொன்னே இன்னைக்கு இப்டி சொல்றியேன்னு கேட்டா ” கடந்த கணத்தோடோ -அடுத்த கணத்தோடோ எனக்கு எந்த தொடர்புமில்லை. நான் அந்தந்த கணத்தில் வாழ்பவன்”னு சொல்ட்டு போயிக்கினே கீறம். சைன்ஸ்,வீசிங், சஞ்சலம், டெப்ரஷன், ஸ்ட் ரெஸ் எல்லாம் போயே போச்.

இப்டி எல்லா கிரகத்தை பத்தியும் டீட்டெய்லா சொல்ல முடியும். நான் என்ன சொல்லவரேன்னா நாம கெட்டவன்னு முத்திரை குத்தற பார்ட்டி அவன் விதி வழியே போயிட்டே இருக்கான். கெட்டதை நடக்க அனுமதிக்கிறான். ஆகவே அடுத்து நல்லதும் நடந்துருது.

நெல்லவன் விதிக்கு எதிரா போராடறான். கடவுளே தொங்கல்ல விட்டுர்ராரு .லக்னத்துல சனின்னா கஞ்சனா இருக்கனும்.அழுக்கா இருக்கனும். நாத்தம் பிடிச்சு கிடக்கனும்.புதுப்பொஞ்சாதி சொல்றாளேன்னு “சொந்த தர்மத்தை “விட்டுட்டா நொண்டி ஆகலாம்,பைல்ஸ் வரலாம், நெர்வஸ் ப்ரேக் டவுன் ஆகலாம்.
லக்னத்துல ராகுன்னா சதி செய்யனும்.இல்லின்னா அடுத்தவன் சதிக்கு பலியாயிருவான். ரெண்டுல ராகுன்னா பாம்பு விசம் மாதிரி பேசனும். ஏமாத்தனும்.இல்லின்னா எவனாச்சும் ஏமாத்திருவான்.

மாத்தி ரோசிங்க. கணக்கு கரீட்டா வரும். இன்னொரு சந்தர்ப்பத்துல டீடெய்லா பார்ப்பம். உடுங்க ஜூட்டு.

நாளென் செய்யும் வினைதான் என் செய்யும்?

அண்ணே வணக்கம்ணே !
தமிழ் திரட்டிகளுக்கு என்ன ஆச்சு? டஜன் கணக்கா இருந்தாய்ங்க. நெல்லவிகளுக்கு அருத்தம் சொல்லாம போறதுன்னு போயிட்டாப்ல இருக்கு. தற்சமயம் இன்ட்லி தவிர வேற ஏதும் ஒர்க் ஆவறாப்ல இல்லை. நாம மாங்கு மாங்குனு அடிச்சு போடறம். ஏதோ காலி பெருங்காய டப்பா கணக்கா சனம் ஸ்மெல் பண்றாய்ங்க. இல்லின்னா என்ன ஆகும்?

ப்ளாக்ல இருந்து சனம் ட்விட்டர்,ஃபேஸ் புக்னு நகர்ந்துட்டாய்ங்க. கொஞ்சம் லேட்டானாலும் நாமளும் அஃதே. பிறவு பார்த்தா அல்லாரும் வாட்ஸ் அப்ல கும்மியடிக்கிறாப்ல இருக்கு. ஆத்தா ப்ளூ ஸ்டாக்ஸ் மூலமா கோர்த்து விட்டாளே கண்டி நமுக்கு கொடுத்து வைக்கல.
பல காலமா நானும் ஸ்கெட்ச் பண்ணிக்கிட்டே தான் இருக்கன். ஒன்னும் பேரல. இந்த புலம்பல் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.ஆதியோடந்தமா ஒரு பதிவு போட்டு பல காலம் ஆயிருச்சு. நேத்திக்கு அந்த நேரம் வந்தாப்ல இருக்கு. நேத்திக்கு அடிச்சு வச்சதுல கொஞ்சம் மசாலா சேர்த்து போடறேன். படிச்சுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

நாளென் செய்யும் வினைதான் என் செய்யும்னு முருக பெருமானுக்கு சொம்படிக்கலாமோ என்னமோ ? ஆனால் நாளும் கோளும் வேலை செய்ற விதம் செம.

ஜெனரல் மேத்ஸ்,காம்போசிட் மேத்ஸ்னு சொல்வாய்ங்க. அதை போல ஒரு சம்பவம் நடக்க எது காரணம்னு தனியா தனியாவும் தேடலாம். ஒட்டுமொத்தமாவும் தேடலாம். இது ஜோதிடத்துலயும் சாத்தியம் தான்.

மவளுக்கும்- அவ மவனுக்கும் என்னெல்லாம் நடந்ததுன்னு அல்லாருக்கும் தெரியும் தானே ! வேலூர்ல ( நமக்கு தென் கிழக்கு -அதிபதி சுக்ரன்) ,சி.எம்.சில ( பிறமத நிறுவனம் என்பதால் ராகு ) அறுத்து (செவ்) செப்டிக் ஆகி, ( ராகு) வீங்கி (கேது) நாயடி.

ஸ்பாட்ல கைக்கு கிடைச்சது நம்ம ஜாதகம்,மவளோட ஜாதகம் , அவ மவனோட ஜாதகம். இந்த மூனையும் வச்சு கதை பண்ணிக்கிட்டு வந்துட்டம்.ஆத்தா புண்ணியத்துல ஏதோ ஓடிக்கிட்டிருக்கு.

நாம சோசியம் கத்துக்கிட்டு ஆஃபீஸ் போட்டது 1990 மார்ச். கண்ணாலம் கட்னது ? 1991 நவம்பர். பொஞ்சாதி ஜாதகத்தை நோண்டி நுங்கெடுத்துரலாம்னு பாய்ஞ்சம். ஆனால் பர்த் டீட்டெய்ல்சே கிடையாதுன்னு அடிச்சு விட்டுட்டா. நாம விடுவமா என்ன?

கிடைச்ச க்ளூவை எல்லாம் வச்சு சதாப்தி பஞ்சாங்கத்தை புரட்டி புரட்டி டேட் ஆஃப் பர்த் டிகோட் பண்ணிட்டம். பர்த் டைம் தெரியும்ங்கறதால நோப்ராப்ஸ். ஜாதகம் கணிச்சாச்சு. ரிசல்ட்டும் கொடுத்தாச்சு. கொய்யா ஒனக்கும் சுக்ர தசை எனக்கும் சுக்ர தசை இது முடிஞ்சாதான் கதி மோட்சம்.

பதிவு நம்ம சோதிடம் பலிச்சதை பீத்திக்க இல்லை. மவ மேட்டரும் இவ ஜாதகப்படி தான் நடந்திருக்குங்கோ. ( நமக்காச்சும் கோசாரம். லக்னத்துக்கு அஞ்சுல சனி -மவ குளிக்கப்படாது / நொண்டனும்/பிரியனும்) போது போகாம இவ ஜாதகத்தை போட்டு பார்த்து அசந்துட்டன்.

லக்னம் தனுசு . லக்னாதிபதி குரு எட்டுல (புத்ர -பௌத்ர காரகனும் இவர் தானே -பேரன் பாஸ் ! ) எட்டு =மரணம்/விபத்து/அறுவை சிகிச்சைல்லாம் வருது.

4 க்குட்டையவர் குரு .குரு வுக்குடைய ருசி இனிப்பு . 4 = தாய், அவிக அம்மாவுக்கு சுகரு . லக்னாத் மூன்றாமிடத்துல சனி .(ஆனால் வக்ரம்) தம்பி காரன் ஆரம்பத்துல “யூத்தா” வாழ்ந்தாலும் இடையில பொறுப்பு வந்து அஞ்சு அக்காமாருக்கும் ஏறப்போட்டுக்கிட்டு தான் இருந்தான். இப்பம் கொஞ்சம் பேஸ்தடிச்ச மாதிரி இருக்கான் ( சொந்த வீடு கட்ன எஃபெக்டா இருக்கலாம்)

3 ல் சனி நின்றால் தம்பியே கூடாது.அவர் வக்ரம்ங்கறதால ஓகே. (அவன் ஃபீல்டு கிரானைட்ஸு -கிரேட் எஸ்) .ரெண்டுக்குடையவர் 3 ல் .காசுக்காக லோலோன்னு அலையனும் (கொஞ்ச நாள் அலைஞ்சம்ல) ஆனால் அவர் வக்ரம்ங்கறதால காசு தேடி வந்துருது)

அஞ்சுல ராகு .அஞ்சு = மவள் . இங்கன ராகு. உலக விவகாரங்கள்ள நம்மை விட கெட்டி தான். ஆனால் படிப்பு ஃபணால். ஜஸ்ட் 2 வயசுலயே காணாம போயி கிடைச்ச சரித்திரம்லாம் உண்டு. ராகு = பிற மத நிறுவனம் .

ஏதோ ராகு நின்ற இடத்ததிபதி 9 ல் நின்றதால மவ எஸ்கேப். மவ மிச்சம் பிடிச்சு கொடுத்த காசுல சாமான் செட்டுன்னு சேர்த்துக்கிட்டா .(கண்ணாலத்துக்கு மிந்திங்கோ)

அஞ்சுக்குடையவர் செவ் என்பதால் மவளுக்கு கோவம் சாஸ்தி ,உஷ்ண கோளாறெல்லாம் உண்டு. குழந்தையா இருக்கும் போதே வாட்ச் பண்ணி சமாளிச்சுட்டம். இல்லின்னா செம நாஸ்திதேன். போதாகுறைக்கு இப்ப அறுத்து வேற போட்டாச்சு.
ஒன்பதுல செவ் . அவ அப்பாவுக்கு சோதர வர்கத்தோட நில விவகாரம். அந்தாளு போய் சேர்ந்த பிறவு தான் பைசல் ஆச்சு. (செவ்=சோதர வர்கம்/ நில விவகாரம்)

11 ஆமிடத்தை பார்த்திங்கனா
ஒன்பதுக்குடைய சூரியன் 11 ஆமிடத்துல 6 க்குடைய சுக்ரனோட சேர்ந்தாரு. போதாக்குறைக்கு கேது வேற. அப்பன் சொத்துன்னு ஒரு சைட் இருந்தது . அதை வித்த காசு அவரோட கான்சர் சிகிச்சைக்கே சரியா போச்சு .அன்னாருக்கு அஞ்சும் பொண்ணு. (சுக்ரன் =பெண்கள்) இந்த ராகு கேதுக்கள் உயிருள்ள பாவங்களில் நிற்கும் போது அல்லது அந்த பாவாதிபதிகளோடு சேரும் போது கான்சர் கிராஸ் ஆயிருதுங்கோ. (ராகு கேது வக்ர கதியில் சஞ்சரிப்போர் – கேன்சர்ங்கறதே வக்ர வளர்ச்சி தானே)

நம்ம ஜாதகத்துல நான் கில் செவ்+கேது அம்மாவுக்கு கேன்சர் ( 4 =தாய் ) அண்ணனுக்கு ப்ளட் கான்சர் (செவ்=சகோதர காரகன்)

12 ஆமிடம்:
இங்கே 8 க்குடைய சந்திரன் நின்னாரு. (லக்னாதிபதியான குரு எட்டில் -கடகத்தில் ,கடகத்துக்குரியவன் சந்திரன் விரயம்) எப்டியோ ஆட்டு பிரச்சினை வராது போல, அஞ்சு பைசா பத்து பைசா மாத்திரை சகட்டுமேனிக்கு போடறதால கிட்னி அல்லது “என்னை ஆரு கேட்கிறிங்க.. எனக்கு என்னா செய்திருக்கிங்க” பாணி எண்ணங்களால் மனம் பாதிக்கப்படலாம் போல (பார்ப்பம்)

இப்ப இந்த ஜாதகத்தை பொருத்தவரை நம்ம மேட்டரை பார்க்கலாம். ஏழுக்குடையவர் புதன் .இவர் 12 ல் (பிரிஞ்சிருக்கனும் போல – நெல்ல வேளையா இவர் வக்ரமானதால நிரந்தர பிரிவெல்லாம் நடக்கல) புதன் =ஜோதிடம்,ஜர்னலிசம்.

செரி மவ மேட்டருக்கு வரேன். இவ ஜாதகத்துல அஞ்சுல ராகு . செரியா ஜனவரி 28 ஆம் தேதி சந்திர தசையில ராகு புக்தி ஸ்டார்ட். பிப்ரவரி அஞ்சாம் தேதி செக்கப்பு போறா மவ. பிடிச்சு அறுத்துர்ராய்ங்க. இந்த ராகு புக்தி இன்னம் 2016 ஜூலை 28 வரை இருக்கு.

ஹ்ம் சமாளிடா முருகேசா சமாளி !

இவ ஜாதகத்துல லக்னாத் ஏழாமிடத்தை லக்னமா வச்சு பார்த்தேன்.லைஃப் சைஸ்ல சித்தூர் முருகேசன் தெரிஞ்சான். பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே .. அப்பப்போ கொஞ்சம் டிப்ஸ் கொடுங்க. பிக் அப் பண்ணிக்கறேன்.

மன்மத ஆண்டு பலன் (2015 மார்ச் முதல் 2016 மார்ச் வரை)

PMO2

அண்ணே வணக்கம்ணே !
சொந்த வாழ்க்கையிலான சிக்கல்கள் நம்மை பாதிக்கிற அளவுக்கெல்லாம் நாம வீக் இல்லை . வெளி உலகத்துல என்னதான் இழவெடுத்து கிடந்தாலும் நம்ம மனோராஜ்ஜியம் கரீட்டா நடந்துக்கிட்டிருக்கிற வரை ஆயிரம் யானை பலம் நமக்குண்டு. எப்பயாச்சும் தப்பு பண்ணிட்டமோன்னு ஞம ஞமங்கும் பாருங்க அப்பத்தேன் படா பேஜாரா பூடும்.

நாம கடந்து வந்த இமிசைகளோட ஒப்பிட்டா இதெல்லாம் ஒன்னமே இல்லை. நம்ம வாழ்க்கை பல முறை ஜீரோ லெவல்ல இருந்து ஆரம்பிச்சிருக்கு. வாழை போல வெட்ட வெட்ட முளைச்சு வந்துக்கிட்டே தான் இருக்கம்.

ஸ்தூல பிரச்சினைகளுக்கு சம்பந்தமே இல்லாம ஒரு தேக்கம். பார்ப்பம்.. இது இந்த தேதியோட ஒழிஞ்சுருச்சா பார்ப்பம்.

என்னா ஒரு தகிரியம்னா ஆத்தா நீ என் வீட்டை பார்த்துக்க நான் இந்த நாட்டை பார்த்துக்கறேன்னு கெத்தா சொல்றமில்லை. நம்ம பார்ட்டை ஓரளவு இன்னைக்கு ஒர்க் அவுட் பண்ணிட்டம்.

மோதிக்கு அனுப்பின யோசனைகளை தெலுங்குல ஒரு பாக்கெட் புக்கா போட்டு சனத்துக்கு வினியோகம் பண்ணிட்டம். மறுபடி ஷெட் ஆயிட்ட ஐ ஃபோனை வச்சுட்டு சிங்கியடிச்சிருக்கனும்.என்னமோ ஆத்தா தயவுல அதை அட்மிட் பண்ணிட்டு வந்துட்டன்.

21 நாளா நொண்டியடிச்ச ப்ராட்பேண்ட் கனெக்சனும் பறக்க ஆரம்பிச்சிருக்கு. கைவசம் ஸ்டாக் இருந்த ஃபோட்டோக்களை ஸ்லைட் ஷோவாக்கி யு ட்யூப்ல போட்டிருக்கன். இந்த பாதி ராத்திரி 1.44 க்கு வென்னீர் போட்டு வச்சிருக்கன்.ஒரு குளியல் போடனும். ஓகே மேட்டருக்கு போயிரலாமா?

வருடம் பிறக்கும் நேரத்து லக்னம்,கிரகஸ்திதியை ஜகலக்னம்னு சொல்றாய்ங்க. இதை நம்ம ஸ்டைல்ல அனலைஸ் பண்ணி மேக்ரோ லெவல்ல சில பலன் எல்லாம் சொல்றன்.

லக்னம் கடகம் -லக்னாதிபதி 7 ல் :
மன்மத வருடத்தை பற்றி ஒரே வரியில சொல்லனும்னா “ஏறினா ரயிலு இறங்கினா செயிலு” ஷேர் மார்க்கெட் முதல் விலைவாசி வரை எல்லாமே சகட்டுமேனிக்கு லாஜிக்கே இல்லாம தூக்கும் ,படுத்துக்கும். ரெண்டே கால் நாளைக்கொரு ஷஃப்லிங் இருக்கும். ரெண்டே கால் மாசத்துக்கு ஒரு கரெக்சன் இருக்கும்.தாஜ் ஹோட்டல் சம்பவம் கணக்கா கடல் வழியே சனியன் வரலாம்.இந்த தாட்டி வட இந்தியா சேஃப். சவுத் இந்தியாவுக்கு பல்பு மாட்டலாம். கடற்படையில எதுனா ஊழல் வெடிக்கலாம். அணைகளுக்கு ஆபத்து , நதி நீர் தகராறுகளின் உச்சம், வெள்ள அபாயம், அழிவுகளுக்கும் வாய்ப்பிருக்கு. அடுத்த 12 மாசத்துல ஒரு தாட்டி சந்திர சேகர் அரசு மாதிரி தங்கத்தை அடகு வைக்கிற நிலையும் வரும். அதே சமயம் உலக வங்கிக்கோ -அமெரிக்காவுக்கோ கடன் கொடுக்கிற நிலையும் வரும்.

பத்துல சூ+செவ் , மூன்றில் ராகு:
இதை பார்க்கும் போது மோதி அரசு எதுனா அதிரடியில இறங்கி யுத்தம் போல கூட எதுனா அரங்கேறலாம். சூ+செவ் சேர்க்கை சர ராசியில இருக்கிறதால உள் நாட்டு கலகம்னு சொல்ல மிடியல. அண்டை நாடுகளோட எதுனா முட்டிக்கலாம்.

பலன் இருக்குமா?
வாய் பேசா பிள்ளை வாய திறந்து மொத வார்த்தையா அம்மாவை நீ எப்ப தாலியறுப்பேன்னு கேட்டாப்ல மேற்படி அதிரடியால மீள முடியாத நஷ்டம் தான் ஏற்படும். ஏன்னா சூ+செவ்வாயோட விரயாதிபதியான புதன் சேர்ந்திருக்காரே.
என்ன செய்யலாம்?

ஒளுங்கு மருவாதியா குக்கிராமங்களை உற்பத்தி கேந்திரங்களா மாற்றி (சூரியன்) சீனா போல எலக்ட் ரானிக்ஸ் தொழிலை குடிசை தொழிலா டெவலப் பண்ணலாம் ( செவ்) இங்கே விரயாதிபதி சேர்க்கை இருக்கிறதால சேல்ஸ் பிச்சுக்கும்.

சுக்கிரன் 11 ல் ஆட்சி:
கலைஞர்களுக்கு , பெண்களுக்கு வலிமை பெருகும். ஹவுசிங்,ஆட்டோமொபைல்ஸ்,அழகு ,அலங்கார ,உணவு துறைகள் முன்னேற்றம் காணலாம். (இதனால நாட்டுக்கு நன்மையான்னா ஊஹூம்)

9 ல் கேது:
நாட்டின் சேமிப்பு,முதலீடுகள் ப்ளாக் ஹோல் கணக்கா உறிஞ்சப்படலாம். பொருளாதார தடைகள் வரலாம். பெரியண்ணன் கூட முட்டல் மோதல் வரலாம். இந்துக்கள் தவிர்த்து இதர மதத்தவர்களுக்கு நடக்கும் அக்கிரமங்களால் கூட மேற்படி நிலை ஏற்படலாம்.

7 க்குடைய சனி 5 ல் வக்ரம்:
நேரு காலத்துல சைனாகாரன் ஆப்படிச்சாப்ல நட்பு நாடுகளே ஆப்படிக்கலாம். மத்தியில் ஆளும் என்.டி.ஏ கூட்டணியில், பா.ஜ.கவில் கூட பிளவுகள் வரலாம்.மத்தியிலயே இப்படின்னா மானிலத்துல சொல்லவே தேவையில்லை.

சூ,செவ் சேர்க்கை மேஷத்துல ஏற்பட்டதால தென்னிந்திய தலைகள் உருள நேரலாம் (பதவி இழப்பு/மரணம் இத்யாதி)

6-9 க்குடைய குரு லக்னத்தில் ஆட்சி:
முதல் 6 மாதம் உலக நாடுகளுடன் ,எதிர்கட்சிகளுடன் மக்களுடன் மோதல் போக்கு தொடரும். உச்சமும் பெறலாம். ஆனா 7 ஆவது மாதம் முதல் அடக்கி வாசிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க.

2014சனிப்பெயர்ச்சி பலன்+பரிகாரம் (துலாம் டு மீனம்)

5

அண்ணே வணக்கம்ணே !
மொதல்ல சனி பெயர்ச்சி பலன் 12 ராசிக்கும் சுருக்கமா போட்டம். பிறகு மொதல் 6 ராசிகளுக்கு கொஞ்சம் விரிவான பலன்+பரிகாரம் தந்தம். இன்னைக்கு துலாம் டு மீனம் போட்டாகனும்.இன்னைக்கே இப்பமே போட்டுருவம். டோன்ட் ஒர்ரி .

காலையில ஒன்னு ரெண்டு வெடி சத்தம் கேட்டதோட க்ளோஸ். சனம் கிட்ட காசு இல்லையா? கொண்டாடற மூட் இல்லையா? புரியல.வாழ்க.ஒழுங்கா ஜோதிட பலன் பதிவுக்கும் போயிரலாம்.

நிற்க..நாம போடும் அரசியல் பதிவுகளுக்கும், வர்ணாசிரம தர்ம விரோத பதிவுகளுக்கு லைக் கிடைக்குமே தவிர ஆரும் அப்போஸ் பண்ண மாட்டாய்ங்க. அப்படியே பண்ணாலும் நாகரீகமா ஒன்னு ரெண்டு வார்த்தை சொல்லி பார்த்துட்டு கழண்டுக்குவாய்ங்க.

அவாளை பொருத்தவரை ரஜினி,ஜெ ,மோடி கும்பலை பொருத்தவரை அவிகளுக்கு ஒரு நெட் ஒர்க் இருக்கு. ஆரை கண்டுக்கனும் -ஆரை கண்டுக்க கூடாதுன்னு ஒரு முடிவோட செயல்படறாய்ங்க. இதை நான் எப்பமோ ஸ்மெல் பண்ணிட்டன்.

கண்டுக்கப்படாதுங்கற அவா லிஸ்டுல நாம இருக்கம். ஏன்னா நமக்கு பின்னாடி ஒரு நீண்ட நெடிய சரித்திரம் இருக்கு. நமக்குன்னு ஒரு விஷன் இருக்கு. நம்ம விஷனை எழுத்தாக்கி அவிக கதவுகளை தட்டிக்கிட்டே இருக்கமா – திருடனுக்கு தேள் கொட்டின கணக்கா தான் அவிக இருக்க முடியும்.
இந்த நெட் ஒர்க்ல இல்லாத சில அரைகுறைகள் வருசத்துக்கு ஒன்னோ ரெண்டோ பாயும். நெட் ஒர்க்ல இல்லியா பாஸுன்னு கேட்டதும் ஓயும். செரி ஊர்பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்கட்டும் மேட்டருக்கு வந்துர்ரன்.

7.துலா:
இவிகளுக்கு சனி 4-5 க்குடையவர் .இவர் இரண்டில் வருவதால் விற்க முடியாம தவிச்ச பூர்வீக வீடு/லொடக்காணி வண்டி,வாகனத்தை விக்க முடியலாம். அல்லது இடிஞ்சு விழ தயாரா இருக்கிற வீடு,எடைக்கு போட்டாக வேண்டிய வண்டி வாகனம் வாங்கவும் கூடும். உங்களையும் அறியாம பேச்சு நிஷ்டூரமா வந்துரலாம்,கொடுக்கல் வாங்கல்ல தாமதம் ஏற்படலாம். குடும்பத்துல ஒருவித வறுமை நிலை ஒத்துழையாமை கடுப்பேத்தலாம்.கண் பாதிக்கலாம்.
தாய்/தாய் வழி உறவுகள் தாராளமா உதவி பிற்காலத்தில் சிக்கல் ஏற்படுத்துவர். கருப்பா பயங்கரமா அல்லது பயங்கர கருப்பா இருக்கிற பார்ட்டி அடிமாட்டு ரேட்டுக்கு ஒரு பழைய சொத்து குறித்த ஆஃபர் கொடுப்பார். ஆனால் அதனோட பலன் கைக்கு வர 2014 நவம்பர் 2 முதல் ஒன்னேகால் வருசம் ஆகலாம்.டேக் கேர்.

பரிகாரம்:
கழுத்துல ஸ்டீல் செயின் போடுங்க. அதுல அச்சாணியமான டாலர் எதுனா இருந்த நல்லது.உ.ம் கபாலம்/எருமை .சென்னை தமிழ்/கொச்சை தமிழ் பேச ட்ரை பண்ணுங்க.தாய்,வீடு,வண்டி ,வாகன வகையறாவுல ரெம்ப அலார்ட்டா இருங்க.செலவழிக்க வேண்டிய நேரத்துல உடனே செலவழிச்சுருங்க. தள்ளி போடாதிங்க. முதலீடுன்னு வந்தா அது உங்க எஸ்டிமேஷனை மீறி / லாங் டெர்ம் இன்வெஸ்ட்மென்டா மாறும்.ஆகவே கைக்காசை மட்டும் போடுங்க. கடனை உடனை வாங்கி போட்டு மாட்டிக்காதிங்க.

8.விருச்சிகம்:
இவிகளுக்கு சனி 3-4 க்குடையவர். இவர் ஜன்மத்துல வர்ரதால சகோதரம்,பயணங்கள்,தாய்,வீடு,வாகனம் குறித்த கவலை தூக்கத்தை கெடுக்கும். தொழிலில் கவனம் சிதறும். அகால போஜனம்,அகால நித்திரை காரணமா கடுமையான மலச்சிக்கல் (பைல்ஸ் வரை கூட போகலாம்) தலை முடி உதிர்தல், முகத்தில் எண்ணெய் .மனசுல தகிரியம் பொங்கும் கொஞ்சம் தாமதமா. அதனால உபயோகம் இருக்காது.மேற்கு திசை பயணங்கள் உடனடி பலனை தராது.தொடர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். வீட்ல சாக்கடை அடைச்சுக்கறது/செப்டிக் டேங்க் லீக்/நிரம்பிர்ரது இத்யாதி நடந்து வீட்டை நாறடிக்கும்.
பரிகாரம்:
சமையலுக்கு நல்லெண்ணெய். நடை பயிற்சி, மனசுக்கு விருப்பமில்லாத வேலைகளுக்கு குட் பை. காக்கி, நீல நிற ஆடைகள் -கு.பட்சம் உள்ளாடைகள் அணியலாம்.ஸ்டீல் ஆர்னமென்ட்ஸ் யூஸ் பண்ணுங்க. கோர்ட்,போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி சுடுகாட்டை ஒட்டின பகுதியில ஒரு டீ சாப்டுங்க. பழக்கமிருந்தா தம் போடுங்க.பயணங்களில் லக்சரி வேண்டாம்.வீட்டை வாகனத்தை அழகு படுத்த பார்க்காதிங்க.வண்டியோட சைலன்சர் ப்ளாக் ஆகலாம்.

9.தனுசு:
இவிகளுக்கு சனி 2-3 க்குடையவர் இவர் விரயத்தில் வருவதால் வாய கொடுத்து மாட்டிக்காதிங்க.கொடுக்கல் வாங்கல்ல மன்னிக்க முடியாத/சகிக்க முடியாத தாமதம் ஏற்படும். குடும்ப செலவுகள் திணறடிக்கும். இளைய சகோதரத்தால்/ தேவையற்ற பயணங்களால் வீண் விரயம்,அல்லல்,அலைச்சல் ஏற்படும். பாதம் பாதிக்கலாம். படுக்கையறையில் எலி செத்து நாறலாம்.ஆறின சாப்பாட்டை திங்க வேண்டி வரலாம். பணப்பற்றாக்குறை,குடும்ப நிலை,சகோதரம் இத்யாதியால் தூக்கம் கெடலாம். சிக்கனம் என்பது கஞ்சத்தன அளவுக்கு போயி ஒத்திக்கு ரெட்டியா செலவழிக்க வேண்டி வந்துரும்.
பரிகாரம்:
கட்டிலை அப்புறப்படுத்தி தரையில படுக்க பாருங்க.அலுமினயதட்டுல சாப்பிடுங்க.படுக்கையறையில் வாசனாதி திரவியங்கள்,டிவி இத்யாதி அவாய்ட் பண்ணுங்க. சனிக்கிழமை , பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி இந்த 3 நட்சத்திரத்துல ஒரு நட்சத்திரலயாச்சும் (லீவு நாள்ள வரும் போது) மவுன விரதம் இருங்க. பர்ஸ்/கேஷ் பேக் நீல நிறந்துல இருக்கனும். ஆராச்சும் யூஸ் பண்ணி வீசி எறிஞ்சதா இருந்தா சிரேஷ்டம்.

10.மகரம்:
இவிகளுக்கு சனி லக்னம் மற்றும் தன பாவாதிபதி. இவர் 11 ல் வருவது நல்லதே. ஆனால் இருமனப்போக்கு அதிகரிக்கும், பேச்சை புரட்டி பேசி அதனால் லாபம் அடைய பெறலாம். ( இதனால் சமூகத்தில் நம்பகத்தன்மை குறையும்) இன்னொரு ஃபேமிலியை சப்போர்ட் பண்ணவேண்டி வரலாம். ரெம்ப கணக்கு பார்ப்பிங்க, ரெம்ப சிக்கனமா இருக்க பார்ப்பிங்க. மனித உறவுகள் பாழ்படாம பார்த்துக்கங்க. உங்கள் இயல்புக்கு மாறாக ஆடை,ஒப்பனை இத்யாதிக்கு முக்கியத்துவம் தருவிங்க. பெரிய இரும்பு பொருள் வந்து சேரும் (வண்டி வாகனம்/ஐரன் சேஃப்)
பரிகாரம்:
தேவையில்லை. மூத்த சகோதரம் இருந்தால் அவர்களை விருச்சிகத்துக்கு சொன்ன பரிகாரங்களை பின்பற்ற சொல்லுங்கள்.

11.கும்பம்:
இவிகளுக்கும் சனிதான் லக்னாதிபதி +விரயாதிபதி. இவர் 10 க்கு வருவது நல்லதே. உடல் உழைப்பு அதிகம் தேவைப்படலாம். சேல்ஸ் லைன்ல இருந்தா இன்னம் நல்லது. அது ஐரன் ஸ்டீல் ஆயில் அக்ரிகல்ச்சர் மாதிரி சனி காரகமா இருந்தா இன்னம் நல்லது. வேலை நிதானமாத்தான் நடக்கும். கூலி/லாபம் கைக்கு வர தாதமதமாகலாம்.
பரிகாரம்:
சேல்ஸ் லைனை பிடிங்க

12.மீனம்:
இவிகளுக்கு சனி 11,12 க்குடையவர் .இவர் 9 க்கு வராரு. இதனால அப்பாவின் செயல்பாடுகளில் ஒரு வித மந்தத்தன்மை ஏற்பட்டுரும். அவரு டபுள் மைண்டடா இருப்பார். தூர பயணங்கள் லாபத்தையும் -நஷ்டத்தையும் மாத்தி மாத்தி தரும். ரெம்ப நாளா நிலுவையில் இருந்த பெருந்தொகை /பழைய சொத்து கைக்கு வந்து படக்குனு செலவாயிரும். சொத்து,முதலீடு,சேமிப்பு கரையும். மேற்கு திசை நோக்கிய தொலை தூர பயணம் பயன் தராது. அடுத்த டேக்ல ஓகே வாகலாம்.
பரிகாரம்:
அப்பா விருச்சிகத்துக்கு சொன்ன பரிகாரங்களை பின்பற்றவும். சொத்து,முதலீடு,சேமிப்பு தொடர்பான டாக்குமென்ட்ஸை பழைய காக்கி/நீல நிற பையில் போட்டு வைக்கவும்.உயர் அதிகாரிகள்,ஊர் பெரியவர்களிடம் சூதானமா நடக்கவும்.

சனிப்பெயர்ச்சி பலன் (2014-2017)

ஜெயா

அண்ணே வணக்கம்ணே !
ராசியும் வாழ்வும் தொடர் ஒரு ஓரமா வந்திட்டிருக்கு. சிம்மம் டு கும்பம் ஃபினிஷ் ஆச்சு. மீனம் டு சிம்மம் பெண்டிங். இந்த ராசி பலன்,சனி பெயர்ச்சில்லாம் மெட் ராஸ் ஐ மாதிரி வர வேண்டிய நேரத்துல கரீட்டா வரனும்.

எனக்கென்னமோ ஏற்கெனவே ஒரு தபா எழுதினதாவே ஞா . இருந்தாலும் நீங்கள் கேட்டவை ஸ்டைல்ல சனி பெயர்ச்சி பலன் இந்த பதிவுல தந்திருக்கன்.

1.மேஷம்:
இவிகளுக்கு சனி 10,11 க்குடையவர். சனி எட்டில் வருவதால் வேலை அழுத்தம் அதிகரிக்கும். இதனால் கால்,நரம்பு,ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். மூத்த சகோதரம் பாதிக்கும். பெரிய/சிறிய இரும்பு பொருள் காணாமல் போய் அதனால் பெரும் சிக்கல்கள் வரலாம். விபத்து/தாக்குதலுக்கும் வாய்ப்பு .வீண் பழி விழலாம்.
2.ரிஷபம்:
இவிகளுக்கு சனி 9,10 க்குடையவர் . சனி ஏழுக்கு வருவதால் அன் மேரீட் சனத்துக்கு அப்பா வழி உறவில் திருமணம் நடக்கலாம். மேரீட் சனம் வயதில் மூத்த பெண்ணுடன் நெருக்கம் காட்டலாம். சிலர் பார்ட்னர் ஷிப்ல எதையாவது செய்ய போயி முட்டிக்கிட்டு அவதிப்படலாம்.
3.மிதுனம்:
இவிகளுக்கு சனி 8,9 க்குடையவர் .இவர் ஆறில் வருவதால் சத்ரு ஜெயம்,ரோக நிவர்த்தி,ருண விமுக்தி நடக்கும். அப்பா/அப்பாவழி உறவு நோய் வாய்படலாம்/அல்லது அவருக்கு சிக்கல்/அல்லது அவருடன் தங்களுக்கு முட்டல் மோதல் ஏற்படும். மேற்கு திசை நோக்கிய தூர பயணத்தில் சிக்கல் வரலாம்.
4.கடகம்:
இவிகளுக்கு சனி 7-8 க்குடையவர் இவர் ஐந்தில் வருவதால் அவமானம்,அவப்பெயர்,குழந்தைகளுக்கு உடல் நலக்கேடு வரலாம். கடந்த பிறவியின் காதலி /மனைவி தற்சமயம் லாஜிக் இல்லாம லைஃப்ல என்டர் ஆகி பல்பு வாங்கலாம். இதை உலகம் நீச ஸ்த்ரீ சகவாசம்னு பார்க்கும். அன் மேரீட் சனம் தங்கள் தகுதிக்கு மிக குறைந்த பெண்ணை மணக்க வேண்டிய கட்டாயம் வரலாம்.
5.சிம்மம்:
இவிகளுக்கு சனி 6-7 க்குடையவர். இவர் 4 ல் வருவதால் தாய்க்கு நோய், வீட்டுக்கடன்,வாகன கடன் சிக்கல் தரலாம். அன் மேரீடா இருக்கிற சிலருக்கு தாய் வழி உறவில் வரன் அமையலாம். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர வாய்ப்பு. டூ வீலர்ல டபுள்ஸ் ஏத்தாதிங்க. வீட்டு ஓனர் கிட்டே சூதானமா நடந்துக்கங்க.
6.கன்னி:
இவிகளுக்கு சனி 5-6 க்குடையவர். இவர் 3 ல் வருவதால் அட்வென்சரஸா,அக்ரசிவா ரோசிப்பிங்க. செயல்படுவிங்க. அதனால அல்லல் அலைச்சல் ஏற்படும்.இளைய சகோதரம் நோய் வாய்படலாம்/அல்லது அவர்களுடன் /அல்லது அவர்களுக்கு சிக்கல் வரலாம். உங்க காது டமாரம் ஆகலாம்.

எச்சரிக்கை:

அந்தோ பரிதாபம் -ஜெ நிலை இந்த தலைப்புல ஒரு வில்லங்க பதிவு . அம்மா பதவியில இருந்தா என்ன மருவாதி.பதவியில இல்லின்னா என்ன மருவாதின்னு தனிப்பிரிவு அதிகாரிகள் பட்டவர்த்தனமா காட்டியிருக்காய்ங்க.பதிவை படிக்க இங்கு அழுத்தவும்

7.துலா:
இவிகளுக்கு சனி 4-5 க்குடையவர் .இவர் இரண்டில் வருவதால் விற்க முடியாம தவிச்ச பூர்வீக வீடு/லொடக்காணி வண்டிய விக்க முடியலாம். தாய்/தாய் வழி உறவுகள் தாராளமா உதவி பிற்காலத்தில் சிக்கல் ஏற்படுத்துவர். கருப்பா பயங்கரமா அல்லது பயங்கர கருப்பா இருக்கிற பார்ட்டி அடிமாட்டு ரேட்டுக்கு ஒரு பழைய சொத்து குறித்த ஆஃபர் கொடுப்பார். ஆனால் அதனோட பலன் கைக்கு வர 2014 நவம்பர் 2 முதல் ஒன்னேகால் வருசம் ஆகலாம்.டேக் கேர்.
8.விருச்சிகம்:
இவிகளுக்கு சனி 3-4 க்குடையவர். இவர் ஜன்மத்துல வர்ரதால சகோதரம்,பயணங்கள்,தாய்,வீடு,வாகனம் குறித்த கவலை தூக்கத்தை கெடுக்கும். தொழிலில் கவனம் சிதறும். கடுமையான மலச்சிக்கல் (பைல்ஸ் வரை கூட போகலாம்) தலை முடி உதிர்தல், முகத்தில் எண்ணெய் .
9.தனுசு:
இவிகளுக்கு சனி 2-3 க்குடையவர் இவர் விரயத்தில் வருவதால் வாய கொடுத்து மாட்டிக்காதிங்க.கொடுக்கல் வாங்கல்ல மன்னிக்க முடியாத தாமதம் ஏற்படும். குடும்ப செலவுகள் திணறடிக்கும். இளைய சகோதரத்தால்/ தேவையற்ற பயணங்களால் வீண் விரயம்,அல்லல்,அலைச்சல் ஏற்படும்.
10.மகரம்:
இவிகளுக்கு சனி லக்னம் மற்றும் தன பாவாதிபதி. இவர் 11 ல் வருவது நல்லதே. ஆனால் இருமனப்போக்கு அதிகரிக்கும், பேச்சை புரட்டி பேசி அதனால் லாபம் அடைய பெறலாம். இன்னொரு ஃபேமிலியை சப்போர்ட் பண்ணவேண்டி வரலாம். ரெம்ப கணக்கு பார்ப்பிங்க, ரெம்ப சிக்கனமா இருக்க பார்ப்பிங்க. மனித உறவுகள் பாழ்படாம பார்த்துக்கங்க.
11.கும்பம்:
இவிகளுக்கும் சனிதான் லக்னாதிபதி +விரயாதிபதி. இவர் 10 க்கு வருவது நல்லதே. உடல் உழைப்பு அதிகம் தேவைப்படலாம். சேல்ஸ் லைன்ல இருந்தா இன்னம் நல்லது. அது ஐரன் ஸ்டீல் ஆயில் அக்ரிகல்ச்சர் மாதிரி சனி காரகமா இருந்தா இன்னம் நல்லது. வேலை நிதானமாத்தான் நடக்கும். கூலி/லாபம் கைக்கு வர தாதமதமாகலாம்.
12.மீனம்:
இவிகளுக்கு சனி 11,12 க்குடையவர் .இவர் 9 க்கு வராரு. இதனால அப்பாவின் செயல்பாடுகளில் ஒரு வித மந்தத்தன்மை ஏற்பட்டுரும். அவரு டபுள் மைண்டடா இருப்பார். தூர பயணங்கள் லாபத்தையும் -நஷ்டத்தையும் மாத்தி மாத்தி தரும். ரெம்ப நாளா நிலுவையில் இருந்த பெருந்தொகை /பழைய சொத்து கைக்கு வந்து படக்குனு செலவாயிரும்.
எச்சரிக்கை:
நம்ம பெசல் பரிகாரம் தான். அந்தந்த ராசிக்காரவுக கமெண்ட்ல வந்து கேட்டா சொல்ல உத்தேசம்

கிரகங்கள் நின்ற பலன்: 4-10 ல் ராகு கேது

Foto effect 4அண்ணே வணக்கம்ணே !

கிரகங்கள் நின்ற பலன் வரிசையில 4-10 ல் ராகு கேதுவுக்கான பலனை சொல்லோனம்.  நாலுங்கறது தாய்,வீடு,கல்வி ,வாகனம் ஆகியவற்றை காட்டும் பாவம். இங்கே ராகு இருந்தால் இந்த மேட்டருக்கு எல்லாம் பாதிப்பு வரும்.ஆனால் இந்த பாதிப்பு தான் யோகம். அது எப்படின்னு கவிதையில சொல்லியிருக்கன்.

புரியாதவுகளுக்கு (கமெண்ட்ல வந்து சொல்லோனம்) மறுபடி ஒரு பதிவு போடறேன். இந்த விசப்பரீட்சை இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும் தான். வலையுலகத்துல மஸ்தா பேருக்கு நம்ம முருகேஸுக்கு தமிழ் போதாதுப்பான்னு நினைக்கிறாய்ங்களாம். அவிக வாயை மூடனும் இல்லை. (இதை தொடர நான் மூடனும் இல்லை -வார்த்தை விளையாட்டு ) அதுக்காவத்தான்.

எச்சரிக்கை:

சிகப்பு நிற வரிகளின் அர்த்தம் விளங்க கொஞ்சம் முக்கனும்.

 

குடியிருந்த கோவில் என்றும் அன்னை ஓர் ஆலயம் என்றும் சால பகர்ந்திட்டார்
ஆயின் தாய் மடி விட்டிறங்கினோரே முன்னேற்ற திசை நோக்கி நகர்ந்திட்டார்
முன்னேற்றம் என்றே நான்  நவில்வது உள்ளார்ந்த வளர்ச்சியாகும்.
அன்னை முலை மறவாதோர் புகை என்றும் மதுவென்றும் சிக்கிவிட நாடி தளர்ச்சியாகும்
அன்னை விட்டவனே பின்னை கன்னிக்கு நகர்தல் வேண்டும்
காதல் பகிர்தல் வேண்டும்.
அன்னைக்கே அடிபணிவேன் -எந்த கன்னிக்கும்  நான் பணியேன் என்றே அவனிருக்க -மனம்
பண்ணை போலாகும்.முடிச்சுகள் மட்டும் தான் அங்கே பயிராகும்
கருப்பை தரும் புகல் ஐயிரண்டு மாதம் தான் உயிர் காக்கும்
பிறப்பை நோக்கி அது நகராக்கால் அதுவே உயிர் தாக்கும்
அன்னை முலைச்சூடு சில காலம் தெம்பு தரும்
அதிலவனே தங்கி விட்டால் ஊறு தரும் வம்பு வரும்.
அவள் கருவிலே இருந்த நாளை இவன் மனம் மறவாதே மருவ தவித்திடுமாம்.
கருவிலே தங்கி விட்டால் காலன் முத்தமன்றி அன்னை மடி கிட்டிடுமோ?
அவள் மடி வேண்டுமென்று அதிலே தங்கி விட்டால் தந்தையவன் தோள் மார்பு  கிட்டுமோ?
அவன் தோளோடு தங்கி விடின் வேற்று  ஆளோடு தொடர்பு எது?
சிற்றடி கொண்டே தான் வீடெங்கும் அளந்திருந்தால் மூவுலகம் அளந்திடவே கால்கள் பலம் பெறும்.
வீடெனக்கு சொர்கம் என்றே சொக்கி நீ நின்றால் மனிதக்காடுனக்கு அச்சம் தரும்
கல்வியில் சிறந்திடவே கல்வி சாலை ஏகிடவே தந்தை தோள் மறந்து இறங்கவேண்டும்.
எண்ணும்-எழுத்தும் கற்றே உன் அறிவு துலங்க வேண்டும்.
கல்விக்கண்ணிருப்பின் உலகம் உனை நோக்கும்
தொழில் கற்றே எழில் பெறின் பசித்தழல் சுட்டிடலாம்.
காடெங்கும்  நீ அலைய வேட்டை தொழில் கற்றே தந்தைக்கு தோள் கொடுப்பின்
வீடெங்கும் ஒளியாகும் வாழ்வில் களி சேரும்.
காலால் நடந்திட்டால் காலம் முந்தும்  என்று வேட்டைக்கு உதவி என்றே வாகனம் ஏறிட்டால் -வாழும்
காலமெலாம் போதாது உலகிதனை அளந்திடவே
வாகனம் இறங்கி வந்தால்  வீடு வரவேற்கும்.
பெற்றவரோடு உந்தன் உற்றவர்  முகம் பார்க்க
பட்டபாடெல்லாம் பாட்டாகும்
தோற்றோடும் காட்டாறும்.
வாழ்க்கையின் அடி நாதம் ஒன்றே தான் அது  நகர்தலாகும்
நகர்வு நலிந்திட்டால் இருப்பு சலிப்பாகும்
வாழ்வின் சலிப்பில் உன் வாழ்வு பதராய் விளிப்புறும்