காலமாற்றமும் -கிரகபலனும் : 8 ஆம் பாவம் (மரணம்)

DSCN0191

அண்ணே வணக்கம்ணே !
காலமாற்றமும் -கிரகபலனும்ங்கற தலைப்புல காலம் மாறினதால கிரகங்களின் பலன் எப்படில்லாம் மாறியிருக்குன்னு சொல்லிட்டு வரேன்.(பாவ வாரியா) ஒவ்வொரு பாவத்துக்கும் சில காரகங்கள் உண்டு. ஒரு பாவம் கெடும்போது அதன் காரகங்களில் பாதிப்பு ஏற்படும். ஒரு பாவம் பலம் பெறும் போது அந்த பாவ காரகங்களில் நல்ல பலன் ஏற்படும். இதான் ஜோதிட விதி.

ஜோதிட நூல்கள் பலவும் ராசாகாலத்துல எழுதப்பட்டது தான். அந்த காலத்து அரசியல் சூழல் ,பொருளாதார சூழல் , அன்றைய சமூக நிலை (வேறென்ன வர்ணாசிரமம்/தீண்டாமை /பெண்ணடிமை -நில பிரபுத்துவம்) இத்யாதியை அடிப்படையா வச்சு எழுதப்பட்டவையே.

நம்மாளுங்க அந்த நூல்களையே பிடிச்சு தொங்கிட்டு இருக்கிறதால – இன்றைய அரசியல்,பொருளாதார,சமூக சூழல்களை கணக்கில் எடுக்காம அதே பலன் களை சொல்லிட்டு போறதால பலதும் பல்பு வாங்கிருது.

உதாரணமா நான் படிச்ச ஒரு புஸ்தவத்துலயே ஒரு கிரக ஸ்திதிய சொல்லி இந்த கிரகஸ்திதியில பிறந்தவன் உத்தம குலஸ்தனா இருந்தா அரசனாவான் – இல்லைன்னா அரசனுக்கு சமமான செல்வம் பெற்று வாழ்வான்னு சொல்லியிருந்தது .

பொதுவிதிப்படி ராஜ கிரகங்கள்னா சூ,செவ்,குரு தான்.சூரியன்,செவ் =சத்திரியர்கள், குரு =பிராமணர்கள். இந்த 3 கிரகங்கள் ஒரு ஜாதகத்துல நெல்ல பொசிஷன்ல இருந்தா ஜாதகன் அரசனாகனும். மேற்படி 2 க்ரூப் மட்டும் ஓட்டுப்போட்டுட்டா ஒருத்தன் அரசனாயிரமுடியுமா? நெவர்.
இப்படி பலதும் மாறிப்போச்சுங்ணா.

இந்த அடிப்படையிலதான் காலம் -கால மாற்றம் கிரகங்களோட பிரபாவத்தை எப்படி மாத்தியிருக்குன்னு சொல்லிட்டு வரேன். போற போக்குல இந்த நவீன யுகத்துல -காலமாற்றத்தை கணக்கில் கொண்டு – கிரகங்கள் தரும் தீய பலனை எப்படி தவிர்ப்பது – நல்ல பலனை எப்படி அதிகரிச்சுக்கறதுங்கற மேட்டரையும் சொல்லிட்டிருக்கன்.

மொத 7 பாவங்களோட கதைய பைசல் பண்ணியாச்சு. இன்னைக்கு அஷ்டம பாவம். மொதல்ல அஷ்டம பாவ காரகங்களை பார்க்கலாமா?
வெல்ல முடியாத‌,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌கூடிய‌சத்ரு, தீராத‌ரோகம், தீர்க்கமுடியாத‌ கடன்,சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல், தலைமறைவாதல் ,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்,பிரிவுகள்,வீண்பழி சுமத்தல்.

நாம சின்ன வயசா இருந்தப்போ ரவுடிங்கல்லாம் ஒரு ரவுண்டு போட்டுக்கிட்டு (வட்டம் பாஸ்)ஒன்டிக்கு ஒன்டி அடிச்சுக்குவாய்ங்கன்னு கதை கதையா கேட்டிருக்கன். ஒரு எஸ்.ஐ – ஆஃப்டர் ஆல் பிக் பாக்கெட்டோடவும் கூட ஒன்டிக்கு ஒன்டி நின்னிருக்காரு .(அந்த பிக் பாக்கெட்டோட பேரு எலிக்குஞ்சு -அவன் கதைய படமா எடுத்தா ஹீரோ வேற யாரு தனுசுதேன்)

கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்ச பிறவு எதிராளி மேல பாம் போட்டுட்டு -அவன் நிலை குலைய -கும்பலா கிட்டக்க போயி தாறுமாறா வெட்டிட்டு ஓடிடறது ட்ரெண்டாச்சு.

பிறவு என்னாச்சுன்னா ரவுடிங்க -ரவுடிங்க மோதிக்கிறதையே விட்டுட்டாய்ங்க. இந்த ஏரியா நாய் அந்த ஏரியாவுக்கு போகாதுங்கறாப்ல ஏரியா பிரிச்சுக்கிட்டு -தன்னோட ஏரியாவுல உள்ள வாய் செத்த சனத்தை வாய்ல போட்டுக்கிறது ட்ரென்டாச்சு.

பிறவு பிறவு அதுவும் போயி ஜஸ்ட் போலீஸ் டிப்பார்ட்மென்டை கையில போட்டுக்கிட்டு குடுமிகளை லாடம் வைக்கிறது ட்ரென்டாயிருச்சு .

வெல்ல முடியாத‌,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌கூடிய‌சத்ருக்கள் இருக்கவே செய்றாய்ங்க. ஆனால் 99.99 சதவீதம் சனம் காசு ,பணம் ,சொத்து ,நிலம் , பொஞ்சாதி ,பெத்த பொண்ணு உட்பட சகலத்தையும் “விட்டுக்கொடுத்து” அஜீஸ் பண்ணி வாழ்ந்துர்ராய்ங்க.

இப்படி வாழமுடியாத சனம் 00.01% தான் கொலைக்கு ஆளாயிர்ராய்ங்க.

அடுத்தது தீராத‌ரோகம். கணிதமேதை ராமானுஜம் ஆஃப்டர் ஆல் டிபிக்கு பலியாயிட்டாரு .இன்னைக்கு? கவுர்மென்டு ஆஸ்பத்திரியில இலவசமாவே மருந்து மாயம் கொடுத்து கியூர் பண்ணிர்ராய்ங்க. சீசனலா இந்த டெங்க்யூ ,சிக்கன் குன்யா மாதிரி வியாதிங்க கிட்டேவிக்கெட்ஸ் டவுன் ஆக காரணம் அரசோட அலட்சிய போக்கு -சனத்துக்கு போதிய விழிப்புணர்வு ஊட்டாதது தான். இல்லின்னா இதுவும் கிடையாது .

காலமாற்றம் கொடுத்திருக்கிற பெரிய சிக்கல் என்னன்னா பொல்யூஷன். பஞ்ச பூதங்களிலும் பொல்யூஷன். எல்லாமே விசம். தண்ணி,காத்து ,பயிர், பச்சை ,ஏன் தாய் பால் விந்துவில் கூட விசமாம். ( ஹேர் டை போட்ட அரைமணி நேரத்துல சிறு நீர்,விந்து ,தாய்ப்பால்ல கூட டை கன்டென்ட் காண கிடைக்குமாம் -படிச்சேங்க)

சின்ன சின்ன நோய் எல்லாம் ஜுஜுபி . ஆன்டிபயாடிக்ஸ் கொடுத்து ஒரே அமுக்கா அமுக்கிரலாம். என்ன.. ஒரு இமிசைன்னா இம்யூனிட்டி செட் அப்பே கோவிந்தா ஆயிரும். இன்னைய தேதிக்கு தீராத நோய்னா எய்ட்ஸ் உட்பட மேல ஒரு 9 ஐட்டம் இருக்கலாம் தட்ஸால்.

செரி ..8 ஆம் பாவ காரகங்கள்ள இந்த ரெண்டும் ப்ளாக் ஆனா மத்தபடி அந்த பாவ பலன் எப்படி வெடிக்கும்னு பார்க்கலாம்.

இன்றைய காலமாற்றங்களால தீர்க்கமுடியாத‌ கடன் என்ற ரூபத்துல இந்த பாவ பலன் வெடிக்குது. அந்த காலத்துல கடன்னாலே சனத்துக்கு பயம்.ஆனமுதலில் முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டு போனதிசை ..எல்லோர்க்கும் கள்வனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு..ன்னு வாழ்ந்தாய்ங்க.

இன்னைக்கு விஜய் மல்லய்யாவுல இருந்து எங்க பக்கத்து சென்ட் ரல் மினிஸ்டர் சுஜனா சவுதரியில இருந்து கடன் வாங்கறதையே தொழிலா வச்சுக்கிட்டு டக்கால்ட்டி வேலைல்லாம் பண்ணிக்கிட்டே இருக்காய்ங்க. ஒலக மகா பணக்காரன்ல இருந்து அன்னாடங்காய்ச்சி வரை கடன் கடன் .

ஆக எட்டாம் பாவம் காலமாற்றம் காரணமா தீரா கடனையும் – ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,கடன் கொடுத்தவனுக்கு அடிமையாத‌ல், கை மீறிப்போனா தலைமறைவாதல் இப்படி தான் வேலை செய்யுது .

செரி பதிவு ரெம்ப நீளமாயிரும் போல இருக்கு .அடுத்த சாப்டர்ல கன்டின்யூ பண்றேன்.உடுங்க ஜூட்டு .

காலமாற்றமும் -கிரக பலனும்: 4

1
அண்ணே வணக்கம்ணே !
காலமாற்றமும் -கிரக பலனும்ங்கற தலைப்புல ஒவ்வொரு பாவமா பலன் எப்டி மாறுதுன்னு அனலைஸ் பண்ணிக்கிட்டிருக்கம்.இதுவரை லக்ன,தன,சகோதர பாவங்களோட பலன் காலமாற்றதால எப்படி மாறுதுன்னு பார்த்தம். இன்னைக்கு நாலாம் பாவம்.

நாலுங்கறது தாய்,வீடு,வாகனம்,கல்வி,இதயம்ங்கற விஷயங்களை காட்டற பாவம். இந்த மேட்டர்ல காலமாற்றத்தால ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் இந்த பாவ பலனை /இந்த பாவத்துல நின்ன கிரகங்களோட பலனை எப்படி மாத்துதுன்னு பார்த்துரலாம்.முக்கியமா யூத்துக்கு வாகன மேட்டர்ல வெறி,ஆண்மைக்குறைவு, திருமண தாமதம், கண்ணாலம் கட்டறதுக்கு மிந்தியே ஐ.எம் .இ ல அப்பார்ட்மென்டு,விகாரத்துக்கள், இதய நோய்கள் இதெல்லாம் காலமாற்றத்தால கிரக பலன்ல ஏற்பட்ட மாற்றங்கள் தான். எப்படின்னு இந்த பதிவுல பார்த்துரலாம்.

மொத காரகம் தாய். ஏதோ ஒரு தொ.கா நிகழ்ச்சியில ஆரோ ஒருத்தர் சொன்ன மேட்டர் இது ” அந்த காலத்துல அம்மாங்கள பிள்ளைங்க அது வேணம் இது வேணம்னு கேட்டா இருப்பா நாளக்கு செய்து தரேம்பாங்க. இப்ப உள்ள அம்மாங்க இருப்பா நாளைக்கு வாங்கி தரேங்கறாய்ங்க”
ரெண்டுக்கும் எவ்ளோ வித்யாசம் இருக்கு பாருங்க.

வேலைக்கு செல்லும் தாய்மார் தான் இப்டின்னு இல்லை. ஹவுஸ் வைஃப் மேட்டர்லயும் இந்த இழவுதான். நாம பொறந்தது 1967. அம்மா காலத்துலயே அப்பாவுக்கு 55 வயசு ஆன காலகட்டத்துல வீட்ல டிஃபன் பண்றதை விட்டுட்டாய்ங்க. இட்லிக்காரம்மா வீட்ல இருந்து வாங்கியாந்து வைக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.

எங்கம்மாவோட மேக் அப்னா ஒரு பெரிய பாட்டில்ல ஸ்னோ இருக்கும். கிருஷ்ணர் கால் கட்டை விரலை வாய்ல வச்சிருக்கிற லோகோ போட்ட பவுடர் ஒன்னு போடுவாய்ங்க. அதுவும் அண்டை அசல்னு போறாப்ல இருந்தா தான். தலைக்கு? சாதாரண சீயக்காய் தூள், உடம்புக்கு அரப்பு பொடின்னு நினைக்கிறேன். சோப்பு? லைஃப் பாய்.

கண்ணாலமாகி பல காலம் எங்க அத்தை ,ரெண்டு சித்தப்பன் மார், கொசுறா எங்க பாட்டிக்கு அக்கா பையன் ஒருத்தன் வீட்டோடயே இருந்தாய்ங்க. எங்க பாட்டி ?

சாடிஸ்டுன்னு சொல்ல முடியாது .ஆனால் “இருப்பை” பற்றிய கவலை இருக்கலாமில்லையா? தன் இருப்பை உறுதிப்படுத்திக்க அப்பப்போ சைக்கிள் கேப்ல ஆப்பு வச்சிட்டே இருக்கும்.

அப்பா வாங்கிக்கிட்டு வர்ர புடவை தான் புடவை. திண்ணை டெய்லர் தைச்சு கொடுக்கிற ஜாக்கிட்டு தான் ஜாக்கிட்டு. ஏதோ சர்வீஸ் முடிய போகுது. எல்.டி.சி லாப்ஸ் ஆகுதுன்னு ஒரு தடவை செகண்ட் கிளாஸ் ரயில்ல ஒரு டூர் போய் வந்தாப்ல ஞா.

வீடு? மோல்டிங் போட்டு , சென்டரிங் அவுக்கிறதுக்கு மிந்தி போல இருக்கும் . மேட்டர் என்னடான்னா பழைய ஓட்டு வீடு எல்லா பனங்கழிக்கும் முட்டு கொடுத்து வச்சிருப்பாய்ங்க. வாகனம்னா ? சைக்கிள் தான். கடேசி காலத்துல டிஆர் டிஏ வுல அக்கவுண்ட்ஸ் ஆஃபீசரான பிறவு பிக் அப் பண்ணிக்க ஜீப் வரும் தட்ஸால்

இந்த மாதிரி வீட்ல இருக்கிற வரை அம்மாவும் ஓகே .கல்வியும் ஓகே. வீட்டு உறுப்பினர்களுக்கிடையில் இன்டராக்சன்,பந்தம்,பாசம் எல்லாம் ஓகே.
ஏ.சி நாயக்கர் சிமெண்ட் ஃபேக்டரி இருக்கிற தைரியத்துல சிமெண்ட்ல த்ராய் ,ஸ்லாப் போட்டு , அன் சோல்ட் மொசைக் எல்லாம் போட்டு வீடு கட்னாரு .செம பல்பு . (இடைக்காலத்துல கோழி பண்ணைக்கு போடற லைட் ரூஃப் போட்டது தனிக்கதை .)

யூட்ரஸ் கேன்சருக்கு அடையாளமா அம்மாவுக்கு மார்ல கட்டி . சி.எம்.சி காரவிக கல்லா கட்ட அந்த டெஸ்டு இந்த டெஸ்டுன்னு கோல்டன் செகன்ட்சை எல்லாம் விரயமாக்கி கேன்சர் வவுத்துக்கு பரவி , கேன்சரை விட கொடூரமான கீமோ தெரஃபிக்கு அம்மாவை பலி கொடுத்துட்டம்.

பெரிய அண்ணனுக்கு மாமன் மகளை முடிக்க, அண்ணனுக்கு வெளியூர்ல வேலைங்கற “நியாயமான” காரணத்தால அவிக பொட்டிய கட்ட ரூட்டர் இல்லாத கம்ப்யூட்டர்ங்க மாதிரி அண்ணன் தம்பில்லாம் சுயேச்சையா செயல்பட ஆரம்பிச்சு பொளப்பே நாறிப்போச்சு.

இது நடந்த கதை .இதுக்கான ஜோதிட காரண காரியங்களை சொல்றேன்.

நம்ம ஜாதகத்துல நாலாமிடத்துல செவ் +கேது சேர்க்கை (இத்தனைக்கும் கடகலக்னம் தான் -செவ் எங்கிருந்தாலும் தோஷமில்லேன்னு ஒரு ப்ரொவிஷன் இருக்கு )

நாலாமிடம் நாஸ்தின்னா தாய் காலி ஆகனும் (பாட்டி தீர்காயுசா இருந்தா செஞ்சுரிக்கு கொட்டு வாய்ல தான் டிக்கெட் ),வீடு சென்டரிங் அவுக்காத கணக்கா இருந்த வரை ஓகே. அதை கட்னதுமே பல்பு. வாகனம்? சைக்கிளா இருந்தவரை ஓகே.அது கெவுர்மென்டு ஜீப்பா மாறினதுமே பல்பு . கல்வி? பத்தாங்கிளாஸுல 72 % ,இன்டர்ல 50% ,டிகிரியில ஒரு சப்ஜெக்ட் தவிர்த்து (ஃபெயிலுங்கோ) 35 %.

செரி ..சொந்த கதை போதும்.மேட்டருக்கு வரேன்.

இன்னைக்கு இதய நோய்கள் சாஸ்தியாயிட்டே இருக்கு. இதுக்கு என்ன காரணம்னு பார்ப்பம். மொத பாய்ண்ட் தாய்.குழந்தைகளுக்கு முதலும்-முழுமையுமான புகலிடம்.

ஆனால் ஆஃபீஸ் கோயர்ஸ்,ஹவுஸ் வைவ்ஸ் எல்லாருமே தங்களை ஜஸ்ட் பெண்களா முன்னிறுத்திக்கறதுல தான் ஆர்வமா இருக்காய்ங்க. அதுவும் நிறைய பெண்கள் தங்களை உடலாகவே உணர்ராய்ங்க. உடலாவே வெளிப்படுத்தறாய்ங்க. அதை கட்டிக்காக்கவே துடிக்கிறாய்ங்க.

ஆண் ,பெண் யாரா இருந்தாலும் பேசிக்கலா ஒரு உயிர் தான். உயிருக்கு உணர்வு முக்கியம். உடலின் செயல்பாடு உங்கள் உணர்வு வழிதான் நடக்கும்.
அந்த காலத்துல ஒவ்வொரு ஆண் குழந்தையும் ஒரு கணவனாக -ஒரு தந்தையாக வடிவமைக்கப்பட்டது . ஒவ்வொரு பெண் குழந்தையும் மனைவியாகவும் -தாயாகவும் வடிவமைக்கப்பட்டது .

இப்பல்லாம் ஆண் ஒரு பொருளீட்டும் இயந்திரமாகவும்,பெண் அந்த இயந்திரத்தின் எக்ஸ்டென்ஷனாவும் தான் வடிவமைக்கப்படறாய்ங்க.
கணவன் -மனைவிங்கறதையாவது மேல் ஷேவனிஸ்ட் சொசைட்டியின் வெளிப்பாடுன்னு தள்ளிரலாம்.ஆனால் தாய்மை?இப்பல்லாம் இது பெண்ணோட ஆரோக்கியத்துக்கான சவால் போலவும் , அவளது ஃபிட்னெஸ்,அழகுக்கு ஆபத்தாவும் போதிக்கப்படுது.

இயற்கை விதியின் படி ஒரு ஆணோ -ஒரு பெண்ணோ உரிய காலத்துல உடலுறவுக்கோ – குழந்தை பிறப்புக்கோ இலக்காகலின்னா அவிக நாட் ஒன்லி சைக்கலாஜிக்கலி, ஃபிசிக்கலா கூட நார்மலா இருக்கவே முடியாது . இவிக சமூகத்துக்கே பேராபத்து.

இதை எல்லாம் ஆரு சொல்றது? செரி ஆரோ சொன்னாலும் கேட்க ஆரிருக்கா? இதன் விளைவு என்னாச்சுன்னா அனைத்து ஜாதகர்களுக்கும் தாய்ங்கற ஒரு கொடை மறுக்கப்படுது . உள்ளடக்கப்பட்ட செக்ஸ் எப்படி வன்முறையா வெடிக்குதோ அப்படி மறுக்கப்பட்ட தாயன்பு வாகன வெறியாவும் ,அப்பார்ட்மென்ட் வெறியாவும் மாறுது.இது ஆண்மைக்குறைவு , திருமண தாமதம், விவாகரத்து இத்யாதிக்கு காரணமாகி இட் லீட்ஸ் டு டிசாஸ்டர்ஸ்..
(தொடர்ந்து பேசலாம்)

காலமாற்றமும் -ஜோதிட பலனும் :4

DSC_9123 - Copy

அண்ணே வணக்கம்ணே !
கம்ப்யூட்டர்ல அதுவும் இணையத்துல தமிழ்ல எழுதமுடியுங்கறதே தெரியாத ஒரு கால கட்டம். இதுவும் சாத்தியம் தான்னு அந்தி மழை டாட் காம் மூலமாத்தான் தெரிஞ்சுக்கிட்டன்.

நாமதேன் இப்போ ராமசாமி ஆச்சே. படக்குன்னு நினைவில் இருந்து ஒரு கவிதைய தட்டி விட்டம்.

கலைவாணியின் கைகளில் கித்தார்
மாற வில்லையே கவிஞர்கள்

இதான் அந்த கவிதை .லைஃப்ல மாற்றம் என்பது கட்டாயம். அதை ஏற்பவர்களுக்கு அது ஜஸ்ட் ஒரு மாற்றம் தான்.ஏற்காதவர்களுக்கு? அது ஒரு மரணம்.

மொதல்ல தாயின் கருப்பை.பிறகு தாய்மடி. அப்டியே தந்தையின் தோள்,அக்கம் பக்கம்,ஸ்கூல்,காலேஜு ,வேலை பொஞ்சாதி இப்டி மாறிட்டே இருக்கும்.

மாற்றத்தை ஏற்காதவன் பொளப்பு நாய் பொளப்பாயிரும்.

மாற்றம் தீங்கே விளைவிப்பதாய் இருந்தாலும் அதை கொஞ்சம் ஜாலக்கா யூஸ் பண்ணி (வித் மினிமைஸ்ட் டேமேஜஸ்) பயனடைய தான் பார்க்கனும்.

காலமாற்றம்ங்கற தலைப்புல மொத ரெண்டு பாவங்களை அனலைஸ் பண்ணிட்டம். இன்னைக்கு 3 ஆம் பாவத்தை பார்ப்பம்.

இதுக்கு சகோதர ஸ்தானம்னு பேர். ஒரு காலத்துல பெரியப்பா சித்தப்பா பையனை கூட எங்க அண்ணாத்தன்னு சொன்ன நம்ம தமிழ் இனம் தான் இப்போ கூட பொறந்த அண்ணனை கூட ப்ரதர்னு தள்ளி வைக்குது.

அண்ணன் தம்பி பாசம்லாம் போயே போச் (மொதல்ல அப்டி ஒரு கேரக்டர் இருந்தாதானே? நாமிருவர் நமக்கிருவர்னு ஆரம்பிச்சு நாம் இருவர் நமக்கொருவர்னு வந்துட்டாய்ங்க. இப்போ நாமே இருவர். நமக்கேன் இன்னொருவர்னு ஆரம்பிச்சாலும் ஆச்சரிய படறதுக்கில்லை.)

அந்த காலத்துலயும் வெட்டி மடிஞ்ச அண்ணன் தம்பி உண்டு.இல்லேங்கல.ஆனால் அதெல்லாம் விதிவிலக்கு தான். ஆனால் இன்னைக்கு? ஆக இந்த மாற்றத்தால் 3 ஆம் பாவத்துக்குண்டா தீயான பலன் கொஞ்சம் குறையும்.

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு ஒரு பழமொழி. தம்பின்னு ஒருத்தன் இருந்தால் அண்ணனுக்கு பிரச்சினைன்னா ஃபீல்டுக்கு வந்துருவான்னு அருத்தம்.

மவளுக்கு கண்ணால ஏற்பாடு நடக்குது. கல்யாண பத்திரிக்கை ப்ரூஃப் பார்க்கிறேன். பையன் வீட்டுக்காரவிக பத்திரிக்கையோட கடேசியில இப்படிக்குன்னு அரைடஜன் பேர் போட்டிருந்தாய்ங்க.

செரி நமக்கும் தம்பின்னு ஒரு கேரக்டர் இருக்கில்லையா கேட்டுப்பார்ப்பம்னு ஃபோன் போட்டேன். ” நான் வெளியூர் ல இருக்கேன். என் பேரெல்லாம் எதுக்குப்பா”ன்னுட்டான்.

அண்ணன் தம்பின்னா மோர் ஆர் லெஸ் ஈக்வல் ஏஜ்ல இருப்பாய்ங்க. அந்த காலத்துல முக்கிய தொழில் விவசாயம். ஒரு மரத்து பறவைகள் கணக்கா ஒன்னா போயி ஒன்னா வந்து கூட்ல அடையனும். இன்னைக்கு அப்படியா? வர்க போராட்டம் இன்னைக்கு ஒரே வீட்ல நடக்குது.

ஆக மொத்தத்துல 3 ஆம் பாவம் சகோதர ஸ்தானமா டப்ஸாயிருச்சு.

அடுத்ததா இந்த பாவம் குறுகிய தூர பயணங்களை காட்டும். வித் இன் தி சிட்டி? இன்னைக்கு மோஸ்ட்லி எல்லாருமே தங்கள் வாழ் நாளின் குறிப்பிட்ட பங்கை பிரயாணத்துல தொலைக்கிறாய்ங்க. ( நெல்ல வேளையா நாம கிரேட் எஸ்கேப்)

என்னை பொருத்தவரை பயணம்ங்கறதே ஒரு நரகம். (இலக்கு சொர்கமா கூட இருக்கலாம்.அது வேற மேட்டர்) அதையும் அதுவும் தினம் தினம்னா? அதுவும் அடிச்சு பிடிச்சுன்னா? ஸ் ..யப்பா மிடியல.

ஆக இந்த பயணங்களாலும் 3 ஆம் பாவத்தின் தோஷம் பெருமளவு குறைகிறது. இதுவே பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டுன்னா சுத்தமா இல்லாமலே போயிரும். தோஷத்தை சொன்னேன். சொந்த வாகனம்னா ஓரளவு குறையும். டிரைவர்/ஏசி.கார்னா பலன் தலை கீழா மாறும்.

மேற்படி காரணங்களால் தோஷம் குறைந்து என்ன நற்பலன் ஏற்படுகிறதுன்னா மனோ தைரியம் குறையுது. ( ஹி ஹி 3 என்பது மாரக ஸ்தானம்.ஆகவே இந்த பாவம் கெட்டு குட்டிச்சுவரா போகனும். அப்பத்தேன் மனோ தைரியம் கூடும். )

பஸ்ஸுல நம்ம பக்கத்துல இருக்கிறவனை கத்தியால செருகிட்டு போனா கூட ஒன்னும் நடக்காத மாதிரி முன் ஸ்டாப்ல இறங்கி அடுத்த பஸ்ல ஏறிப்போயிர்ரம்.

அடுத்து இசை . இதுக்கும் இந்த பாவம் தான் காரகம். ஹெட் செட்ல பாட்டு கேட்டு சுகம் காணுகிறோம். சவுண்ட் பாக்ஸ் அவுட் ஆயிருது ( சுப -அசுப பலன் பேலன்ஸ் ஆயிருது)

காலமாற்றமும்-கிரக பலனும்: 3

1

அண்ணே வணக்கம்ணே !
காலம் மாறிப்போச்சு.இதனால கிரக பலனும் எக்கு தப்பா மாறிப்போச்சுங்கற தலைப்புல ஒரு தொடர் (போல) ஆரம்பிச்சு எழுதிக்கிட்டிருக்கம். ஒரு கொயர் பேப்பரும் இங்க் பேனாவும் -ஒரு பாய் தலையணையும் கொடுத்துட்டா மாருக்கு தலைகாணிய வச்சுக்கிட்டு எழுதிதள்ளிரலாம். (அதை டைப் பண்ண ஒரு ஆள தேடனும்ங்கறது வேற கதை) .

கம்ப்யூட்டர் மின்னே உட்கார்ந்தா மஹிளா ஸ்டேஷனுக்கு போன புருசன் கணக்கா சகலமும் ஒடுங்கிப்போயிருது.ஆனாலும் விடறதா இல்லை. மேட்டருக்கு வந்தே உடுவன்.

இப்பம் தர்ம சந்தேகம் என்னடான்னா ஒன்னுக்கொன்னு சம்பந்தமில்லாத நாலு மேட்டர் மைண்ட்ல சக்கர் அடிக்குது. ஆனால் நாலு மேட்டருக்கும் இடையில ஒரு லிங்க் இருக்கு.

மோதி-ஜெட்லி-மம்மி-குமார சாமில்லாம் வேற வேற பார்ட்டி தான் .ஆனால் அண்டர் கிரவுண்ட்ல கனெக்ட் ஆயிருச்சுங்கறாய்ங்கல்ல.அதை போலத்தான்.
ஒரு வாசகர் கிளி ஜோசியம் உண்மையான்னு கேட்டுக்கிட்டே இருக்காரு.அதை வேற தீர்த்து வைக்கனும். போதாக்குறைக்கு பேக் யார்ட்ல இருக்கிற தகர கொட்டகைக்கு கட்டிவிட்டிருந்த கற்றாழை தானா சுழல ஆரம்பிச்சுது. காத்தடிக்கிற ஃபீலே இல்லை. ஆனா பாருங்க அதை அடிச்சு பார்த்துக்கிட்டிருந்த சமயம் பாத்ரூம் கதவு ஆரோ அடிச்சு சாத்தின கணக்கா மேல் உதடு மேல பட்டுது.

கொய்யா பிச்சுக்கிச்சுடான்னு நினைச்சுட்டன். நெல்ல வேளையா இல்லை. முன் பல் சிவாஜி எம்.ஜி.ஆர் சண்டையில அடிபட்டு மொக்கையாகி -பல காலமா லொள்ளு பண்ணிக்கிட்டிருக்க போன வருசமோ அதுக்கு மிந்தின வருசமோதான் அந்த பக்கம்+இந்த பக்கம் பற்களை கூராக்கி கப் கணக்கா 3 போலி பல்லை பொருத்தி விட்டிருக்கு.அதுவும் போச்சுடானு நினைச்சேன் . நெல்ல வேளையா இல்லை.

இதுமட்டுமில்லிங்ணா மாப்ளை நேத்திக்கு ஒரு மேட்டர் சொன்னாரு . பார்ட்டி பக்கா மெட்டீரியலிஸ்டுதான்.ஆனால் மவனுக்கு பிறந்த 3 ஆவது நாள் ஆறரை மணி நேரம் ஓப்பன் ஹார்ட் சர்ஜரி நடந்து டாரா கிளிஞ்சு கிடக்காரா -கொஞ்சமா நம்ம ஸ்கூல் பக்கம் திருப்பியிருக்கன்.

அவர் சொன்னதோட சாரம் விழிப்பு நிலையில வலது கை சொல் பேச்சு கேட்காமா பாம்பா நெளியுது.காலம் மாறிப்போச்சுங்கறது அல்லாருக்கும் தெரிஞ்ச மேட்டருதான். நேத்திக்கு வெளிவந்த பத்தாங்கிளாஸு ரிசல்ட்டுலயே எவ்ளோ மாற்றம்.போன பத்துவருசத்துக்கும் இந்த பத்துவருசத்துக்கும் எம்மாம் வித்யாசம் இருக்கு?

இந்த மாற்றங்கள் கிரக பலனில் எப்படியெல்லாம் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்குன்னு பார்க்கலாம். கடந்த பதிவுல தலை,முகம் பத்தி சொல்லிக்கிட்டிருந்தன்.

எங்கப்பா மாவட்ட கருவூல அதிகாரி .ஆனால் வீட்ல நமுக்கு மட்டும் தான் பேஸ்டு. பல் நோவு இருந்தாதான்யா பேஸ்ட் அப்பல்லாம். இப்போ?
தாத்தா பங்க் கடை வச்சிருந்தப்போ வாங்கின தகர டப்பா முன் பக்கம் கண்ணாடி இருக்கும்.அது நிறைய சீயக்காய் அரைச்சு வச்சிருவாய்ங்க.தலைக்கு அதான். இன்னைக்கு எங்க பாத்ரூம்ல நாலு ரகம் ஷாம்பூ தொங்குது. நாய்க்கு ஒன்னு,நமுக்கு ஒன்னு,பொஞ்சாதிக்கு ஒன்னு,மவளுக்கு ரெண்டு.
தலை சொட்டையா போனதாலயோ என்னமோ எங்க அப்பா 6 மாசத்துக்கு ஒரு தரம் சலூன் போறது கூட டவுட்டுதான். நமுக்கு மாடியில தனி அறை. அப்பா கையகல கண்ணாடி வச்சுக்கிட்டு பித்தளை ரேசர்ல மொன்னை ப்ளேடு போட்டு வரட்டு வரட்டு.

அந்த காலத்துல சலூன்ஸ் தான் நமுக்கு கேர் ஆஃப். நமக்குத்தான் கண் பார்த்தா கை செய்யுமே ரெண்டு பக்கமும் காது மேல வாரி விட்டு குன்ஸா கட் பண்ணி ,பின்னாடி ரவுண்ட் எடுத்து விடுவன்.

இன்னைக்கு? சோத்துக்கில்லாத காலத்துல தான் சலூனுக்கு நிறைய செலவழிச்சிருக்கன். இப்பவாச்சும் ஆத்திரம் அவசரத்துக்கு செல்ஃப் .

இதெல்லாம் என்ன பண்ணுதுன்னா? லக்ன பாவத்தோட சுபபலனை எல்லாம் எக்ஸாஸ்ட் பண்ணிருது. அடுத்து ரெண்டாமிடம் . இது தன,வாக்கு,குடும்ப நேத்திர ஸ்தானம். குடும்பத்துக்குள்ள ஏறக்குறைய பேசிக்கிறதே இல்லை.(ரெண்டுல அஷ்டமாதிபதி இருந்தாலும் தோஷம் காம் கர்த்தே நஹீ) வெளிய ஜமாவுல பேசறதெல்லாம் தமிழே கிடையாது (ரெண்டு எட்டுல ராகு கேது இருந்தாலும் தோஷம் போயே போச்)

இருபத்து நாலு மணி நேரம் டிவி/கம்ப்யூட்டர்/லேப் டாப்/ஸ்மார்ட் ஃபோன்.ரெண்டு கண்ணும் டப்ஸு. இதனால ரெண்டாமிடத்து தோஷம்லாம் பரிகாரமாகி பீசா,பர்க்கர்னு அடிச்சு தள்றாய்ங்க.காசு பணம் தாராளமா புழங்குது.

இதுல சிக்கல் என்னன்னா ரெண்டுல உள்ள பாப கிரகம்/அஸ்தங்கத கிரகங்களை/ராகு/கேதுவை மீறி மேற்படி மேட்டரை எல்லாம் எஞ்சாய் பண்றதால அந்த கிரகம் வேலை செய்றதை நிறுத்திராதிங்கோ?

அப்டியே எட்டை பார்க்குமுங்கோ. இதனால ஆவிசு குறைஞ்சு அல்பாயுசுங்கோ ! பொட்டுனு போயிரவும் சான்ஸ் இருக்கு.

இப்டியே முக்கி முக்கி 12 பாவத்தையும் – 9 கிரகங்களையும் பத்தி பார்க்கலாம்.

இப்பம் கிளி ஜோசிய மேட்டருக்கு வந்துரலாம். மன்சனுக்கு ஆறு அறிவுங்கறாய்ங்க. மிருகங்களுக்கு அஞ்சாம், அப்பம் கிளிக்கெல்லாம் எத்தனைனு தெரியல. மன்சனுக்கு ஆறாவதா இருக்கிற அறிவால என்ன நன்மைன்னு புரியல. நாய்க்கு அஞ்சுதானே .
கில்மா மேட்டருக்கு மின்னே பெண் நாயோட உறுப்பை முகர்ந்து பார்க்குமாம்.அதனோட கருப்பை ஏற்கெனவே லோட் ஆகியிருந்தா கழண்டுக்குமாம்.
ஆனால் நம்மாளுங்க அப்டியா? பொஞ்சாதி கன்சீவ் ஆயிருக்கான்னு லேடி டாக்டர் கன்ஃபார்ம் பண்ணதுமே ஃபேமிலி லைஃப் வச்சுக்கலாம்லனு கேட்கிறாய்ங்க.
ஜெ மேட்டரையே எடுத்துக்கங்க. சோத்தாங்கை பக்கம் அவிக சொத்துக்கள்,செலவு -பீச்சாங்கை பக்கம் வருமானம்னு ஒரு லிஸ்டு போட்டாலே மேட்டர் அவுட் ஆயிரும்.

ஆனால் குன்ஹா என்னடான்னா கணக்கு தப்புன்னு டிஃபென்ஸ் தரப்பு கூக்குரலிட்ட உடனே தள்ளுபடி கொடுக்கிறாரு – குமார சாமி என்னடான்னா விண்ட் ஃபால் கெயின்ஸை எல்லாம் நிலத்துல இருந்து வந்ததா ட்ரீட் பண்ணி போனஸ் கொடுக்கிறாரு. வருமானத்துக்கும் சொத்துக்கும் 10% கூடுதலா இருந்தா பரவால்லையாம்.

அப்பம் இனி நாட்ல உள்ளவன் பொஞ்சாதி எல்லாம் 10% அப்டி இப்டி இருந்தாலும் பரவால்லன்னு விளக்கு பிடிச்சுக்கிட்டிருக்க வேண்டி வந்துரும் போல. முப்பது நாள்ள 10% எவ்ள பாஸ்? நாம கணக்குல வீக்கு.

மன்சனோட 6 ஆவது அறிவால என்ன லாபமோ என்ன இழவோ? ஆனால் ஜெ வருமானத்துக்கும் சொத்துக்கும் இடையில “கேப்” கணக்கா இயற்கைக்கும் மன்சனோட மைண்டுக்கும் இடையில பெரிய “கேப்” வந்துருச்சு.

இந்த கேப் மட்டும் இல்லின்னா காலதேவனின் மூவ் எல்லாம் மூவ் ஆயின்ட்மென்ட் ட்யூப் மாதிரி நம்ம கைவசமே இருக்கும். நாம என்ன செய்யனும் -செய்யக்கூடாது நமக்கு என்ன நடக்கப்போகுதுங்கற மேட்டர் எல்லாம் ஷகீலாவோட மலையாள சினிமா குளியல் காட்சியில போல பளிச்சுன்னு தெரிஞ்சுரும்.

இந்த ஸோ கால்ட் பகுத்தறிவு வந்து ப்ளாக் அவுட் பண்ணிருச்சு.

இந்த ஆறாவது அறிவு இல்லாத மிருகங்கள்,பட்சிகளுக்கெல்லாம் எதிர்காலம் பெசல் தரிசனம் போல காட்சி கொடுத்துருது போல.
ஒரு வீட்ல ஒரு டிக்கெட் விழப்போகுதுன்னா அது அந்த வீட்டு நாய்,பூனை,மாடு,கன்னு எல்லாத்துக்கும் ஒரு மாசம் ,15 நாள் முன்னாடியே தெரிஞ்சுருது.
உங்களுக்கு உங்க எதிர்காலம் தெரியலின்னாலும் நீங்க போயி உட்கார்ந்தப்போ -உங்க எதிர்காலம் தண்ணியில எண்ணெய் கணக்கா உங்க மூளையில மிதக்க ஆரம்பிச்சுரும். சோசியர் மைண்ட்ல சொந்த பிரச்சினைகள் முண்டியடிக்காம இருந்தா அவரால ரெம்ப ஈசியா கேட்ச் பண்ண முடியும்.உங்களுக்கு சொல்லவும் மிடியும்.

இந்த கிளி மேட்டருக்கு வந்துருவம். அறிவு எண்ணிக்கை குறைவு (அதாவது இயற்கைக்கும் அதுக்கும் இடையில கேப் இல்லை) இதனால வந்தவனோட எதிர்காலம் பச்சக்குன்னு அது மைண்ட்ல போயி ஒட்டிக்கும்.

கிளி அட்டை பொறுக்கும் போது கிளி சோசியக்காரர் தரைய தட்டறது இத்யாதி சிக்னல் /மேனிப்புல்லேஷன் இல்லாம லூஸ்ல விட்டா அது செரியான அட்டைய எடுக்கும்.

இது ஒரு கண்டம்.அடுத்தது கிளி சோசியக்காரரோட இன்டர்ப்ரிட்டேஷன். ஈகோ கலக்காம , காசு பிடுங்க ஸ்கெட்ச் பண்ணாம அட்டைய பார்த்து தனக்கு தோனினத்டை சொன்னாலே போதும்.

(ஸ்..அப்பாடா கிளி மேட்டர் ஓகே )

அடுத்து மாப்ளை மேட்டருக்கு வருவம். விழிப்பு நிலையில இருக்கும் போது திடீர்னு கை சுதந்திரம் பெற்று தானா இயங்குது. இதுக்கு என்ன அருத்தம்?
பாடி -மைண்ட் இதுல மைண்டோட கம்பேர் பண்ணா இயற்கையில இருந்து டிஸ்கனெக்ட் ஆகாம இருக்கிறது பாடிதான். மழை வருவது மயிலுக்கு தெரியும்னு பாட்டு இருக்கில்ல. மன்சனுக்கு தெரியாதா? நிச்சயமா தெரியனும்.ஆனால் தெரியறதில்லை. என்ன காரணம் ஈகோ . தனக்குன்னு ஒரு உலகம்.அந்த உலகத்துல தானே மையப்புள்ளியா இருக்கிறதுதான்.

நெல்ல வேளையா பாடி கொஞ்சம் கனெக்டடாவே இருக்கு. பாடிக்கு ஈகோல்லாம் கிடையாது. ஏரியா ரவுடியோட பொஞ்சாதி -அவளை பார்த்தாலே முழிய பிதுக்கிருவான்னு தெரிஞ்சாலும் கண் பார்க்கும். வீரியம் புரளும்.எழுச்சி கூட நடக்கலாம்.

இதே போல நான் வெஜ் பிரியர்களுக்கு பிரியாணி சாப்டு நாலு நாள் ஆச்சுன்னா பிச்சைக்காரன் தட்ல இருக்கிற பிரியாணி கூட எச்சி ஊற வைக்கும்.
ஆகவே இயற்கை மைண்டை விட -பாடிய ரெம்ப ஈசியா அப்ரோச் பண்ண முடியுது.அங்கம் துடிக்கிறது ,கண் துடிக்கிறது இதெல்லாம் இந்த கேட்டகிரி தான்.
இது நல்லதுக்கா கெட்டதுக்காங்கற மேட்டரை டிசைட் பண்ண கொஞ்சம் போல சோசிய அறிவும் இருந்தாகனும். அது வேற மேட்டர்.

அடுத்து இந்த கத்தாழை _காத்து _ பாத்ரூம் கதவு மேட்டருக்கு வந்துரலாம். ஒரு அறிவு குறைஞ்சாலே பவிஷ்ய தரிசனம்னு சொல்லியாச்சு. இதுல “சுயமே” இல்லாத மேட்டர்ல என்னத்தை சொல்ல. புரியுதுல்ல?

உடுங்க ஜூட்டு ..