செக்ஸ் குறித்த பெண்கள் கருத்து ( வீடியோ )

அண்ணே வணக்கம்ணே !
இந்த வீடியோவோட குவாலிட்டிய பார்த்தா ஏற்கெனவே பெரிய ரவுண்டா வந்திருக்கும்னு தெரியுது .ஆனாலும் பலர் மிஸ் பண்ணியிருப்பிங்க.ஆகவே வீடியோவுக்கான தொடுப்பை கடைசியில தந்திருக்கன்.

அதுக்கு மிந்தி ஒரு சின்ன ஸ்கூப். நம்ம இமிசை தாங்க முடியாம சி.எம்.செல்லுக்கு புதிய பொறுப்பாளரை மம்மி போட்டிருக்கு.

ஆன் லைன் சி.எம்.செல்லுல மனுவோட சாதி அட்மின் ரிஃபார்ம்ஸ்னு கொடுத்திருக்கம். ஆனாலும் மக்கள் மீது பாரம் சுமத்தாம/ அரசு வருவாயை கூட்டி பெட்டர் கவர்னென்ஸ் கொடுக்க உதவ நாம கொடுக்கிற ஆலோசனைகள் மட்டும் மிக சரியா டாஸ்மாக் எம்.டிக்கே போகுதே?

ஏன்டா? ஏன்டா இப்படி ??

டாஸ்மாக்

Tasmac MD 2

ஏற்கெனவே இந்த வேலைய பண்ணதுக்கு தான் கயிவி கயிவி ஊத்தினம். இப்ப மறுபடி மே 26 ஆம் தேதி நாம இதே மேட்டர்ல அனுப்பின மனுவை அதே டாஸ்மாக் எம்.டிக்கு அனுப்பியிருக்கானுவ.

நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஆனர் !

நிற்க ஏதோ கிளுகிளு வீடியோங்கறானேனு ஒரு எட்டு பார்க்க வந்த உங்கள வச்சு செஞ்சதுக்கு சோரி . நீங்க பார்க்க வந்த வீடியோ இங்கே

மோடியின் எதிர்காலம் :பர பர கணிப்புகள்

அண்ணே வணக்கம்ணே !
நாட் நாட்லயே நாம மோடி ஜாதகத்தை நோண்டி நுங்கெடுத்துட்டம். என்னடான்னா அப்போ தெலுங்கானா அஜிடேஷன் காரணமா வரலாறு காணாத மின் வெட்டு. எனவே குரல் பதிவா போட்டிருந்தம்.

கிளி ஜோசிய காரவுக மாதிரி மோடியோட பேர் ராசிய வச்சு சனம் ஆகா ஓகோன்னு புலம்பியிருக்காய்ங்க. கொய்யால ..ஒட்டு மொத்த ஜாதகத்தை வச்சு சொன்னாலே ஒன்னு ரெண்டு தவறிப்போகுது. இதுல பெயர் ராசியாம்.

இதை பார்த்ததும் கடுப்பாயிட்டு நம்ம குரல் பதிவை கேட்டோம். அப்பம் நண்பர் ஒருவர் ஆன்லைன்ல பீராய்ஞ்சு கொடுத்த பர்த் டீட்டெய்ல்ஸை வச்சு ஜாதகம் கணிச்சு சொல்லியிருக்கம். ( 17/10/1950 ,காலை 10.10)

இதன்படி மோடி ஜாதக விவரம்:
விருச்சிக லக்னம்,தனுசு ராசி. லக்னாதிபதி லக்னத்துலயே ஆட்சி. பாக்யாதிபதி சந்திரன் 2 ல் ,2/5 க்கு அதிபதியான குரு 4 ல் , ராகு 5 ல் , 8/11,7/12,3/4 அதிபதிகள் கேதுவுடன் சேர்ந்து 11 ஆமிடத்துல இருக்காய்ங்க. இதுகளுக்குண்டான பலனை சுருக்கமா பார்ப்போம்.

விருச்சிகலக்னம்:
ராசிகளுக்குண்டான சிம்பலை பெரியவுக ஏனோ தானோன்னு ஃபிக்ஸ் பண்ணல. அதுக்குள்ள ஆயிரம் அருத்தம் இருக்கு. விருச்சிகம்னா தேளுன்னு அருத்தம். தேள் இருட்ல இருக்கனும்.சனங்க கண்ல படப்படாது. பட்டா காலி.( ஐ மீன் பப்ளிக் லைஃப்ல வரப்படாது – ராகுல் காந்தி ராசியோ லக்னமோ கூட விருச்சிகம் தான்) ஏன்னா இவிக பேச்சு தேள் கொட்டறாப்ல வந்துரும்.

இதுல போனசா மோடியோட ராசி தனுசு. இவிகளை பத்தி தமாசா ஒன்னு சொல்லுவன். ஒரு பஞ்சாயத்து பத்து நாள் பேசி முடிவுக்கு வந்து டீ சாப்டுட்டு கிளம்ப வேண்டியதுதாங்கற சிச்சுவேஷன்ல ஒரு தனுசு ராசி வாய வச்சா மொதலுக்கு வந்துரும். அந்தளவுக்கு வெகண்டையா பேசிப்புடுவாய்ங்க.
குஜாராத் கலவரங்களை பத்தி பேசும் போது செத்துப்போனவுகளை சாரி கொல்லப்பட்டவுகளை நாய் குட்டின்னு சொல்லிட்டு வாங்கி கட்டிக்கிட்டது ஞா இருக்கலாம்.

லக்னாதிபதி லக்னத்துலயே ஆட்சி. இது பொதுவிதிப்படி நல்லதுதான்.ஆனால் ஆட்சியானது ஆரு செவ். இந்த கேட்டகிரியில உள்ளவுகளை போலீஸுக்கோ ,மிலிட்டரிக்கோ அனுப்பிட்டா பெருசா பிரச்சினை வராது .சிவிலியனா இருந்தா மட்டும் நாஸ்திதான். ஒன்னு அவிகளுக்கு கொட்டும்.இல்லின்னா மத்தவுகளுக்கு கொட்டும்.ரத்தத்தை சொன்னேங்க.

இவரு 7 ஐ பார்க்கிறதால தேன் பொஞ்சாதி மேட்டர் காலி. நாலை பார்க்கிறதால கட்சிக்குள்ளயே பல்பு.எட்டை பார்க்கிறதால ? எதிரிகள் எல்லாம் ஒன்னு சேர்ந்துருவாய்ங்க. பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறவு பா.ஜ.க தவிர்த்த இதர கட்சிகளை ஒட்ட வைக்கப்போற ஃபெவிக்காலே மோடிதானுங்கோ.

பாக்யாதிபதி சந்திரன் 2 ல் ,இதனாலதே ஜஸ்ட் பீலா விட்டே பி.எம் ஆயிரலாம்னு கனவு காணுறாரு. சந்திரனோட எஃபெக்ட் எல்லாம் ரெண்டேகால் நாள் தேன். தேர்தல் இப்பல்லாம் ஒரு நாள்ள எங்கே நடக்குது. எல்லா ஃபேஸும் முடியவே மாசமாயிருது. அதனால இதுவும் பெருசா கை கொடுக்காது.
2/5 க்கு அதிபதியான குரு 4 ல் வக்ரம்.இவரு சாதாரணமா நின்னிருந்தா வாக்கு,புத்திய வச்சு கட்சிக்குள்ள-கூட்டணிக்குள்ள தனக்கு எதிர்ப்பே இல்லாம செய்துக்கிட்டிருக்கலாம்.ஆனால் குரு வக்ரமாச்சே. இதனாலதேன் நித்தீஷ் டாட்டா சொல்லிட்டாரு. மேலும் குரு இதயத்துக்கு காரகன் .எனவே என்.டி.ஆர் கணக்கா ஒரு பை பாஸ் கூட நடக்கலாமுங்கோ..புதன் வக்ரம்ங்கறதால இதயத்தின் இணைப்புகளில் பிரச்சினை வரலாம்.

ராகு 5 ல் நின்னதால புத்தி குழப்பம் ,கற்பனை உலகில் சஞ்சரிப்பது,மோடி மஸ்தான் வேலை காட்டி ஜாக்பாட் அடிக்கலாம்னு நினைக்கிறதுதான் நடக்கும். ஜாக்பாட் கிடைக்குமான்னா .. அவமானம்-அவப்பேர் தான் மிஞ்சும்.

அடுத்து 8/11,7/12,3/4 அதிபதிகள் கேதுவுடன் சேர்ந்து 11 ஆமிடத்துல இருக்காங்க. எட்டு மரணத்தை காட்டும்.இவரு 6லயோ 12லயோ இருந்தா சேஃப். ஆனால் இவரு 3 வேளை ஹார்லிக்ஸ் சாப்டாப்ல 11 ஆமிடத்துல வலிமையா உட்கார்ந்திருக்காரு. புதன் தோல்,கீல்,அண்டம் சம்பந்தப்பட்ட பிரச்சினைய கொடுக்கலாம். புத்தி குழப்பத்தை கொடுக்கலாம்.இவ்ள எதுக்கு சுரப்பிகளின் செயல்பாடே கூட மாறுபட்டு மேஜர் பிரச்சினைகள் கூட வரலாம்.
ஒரே கிரகத்துக்கு ரெண்டு ராசி (பாவ)களுக்குண்டான ஆதிபத்யம் கிடைச்சு அவர் ஒரு ராசியில ஆட்சி பெற்றால் அவர் ஆட்சி பெற்ற வீட்டின் பலனை மட்டும் தருவாருன்னு ஒரு விதி இருக்கு. (அப்போ மேற்படி நோய் பிரச்சினை எல்லாம் வராது).

ஆனால் இங்கே புதன் தனிய இல்லை .கூட கேது இருக்காரு. கேது ஆன்மீக வாழ்வுக்கு துணை செய்வாரே தவிர லௌகீக,அரசியல் வாழ்க்கைக்கெல்லாம் ஆப்புதான் அடிப்பாரு.

7+கேது காரணமா பொஞ்சாதி மேட்டர் டப்ஸு. 3/4+கேது சேர்க்கை காரணமாத்தான் தலீவரு அசட்டு தைரியத்தோட வலம் வராரு. கட்சிக்குள்ளயே பெரிய ஆப்பா ரெடி பண்ணிட்டிருக்காய்ங்கன்னு நினைக்கிறேன்.

ஆலமரத்தடி பஞ்சாயாத்துல மோடிக்கு எதிரா தீர்ப்பு வந்தாலும் மோடி கதை கந்தல்தான். கட்சிக்காரவுகளே அவரை வீட்டுக்கு அனுப்பிருவாய்ங்க.
ஏன்னா ஜீவனாதிபதி சூரியன் விரயத்துல கடக்காரு. இதனாலதேன் மோடி தலைக்கு மேல கத்தி தொங்கிட்டே இருக்கு.அவரை தூங்க விடாம பண்ணிட்டிருக்கு. சூரியன் சமத்துவத்தை -அபேத பாவத்தை தரக்கூடியவர்.அவரு விரயம் பெற்று நீசத்துல இருக்கிறதாலதான் மோடி ஒன் சைட் பாலிட்டிக்ஸ் செய்துட்டு வராரு. (இப்பம் கொஞ்சம் போல சைடு வாங்கினாலும் டார்கெட் மட்டும் அதுதான்)

தசாபலன்:
இவர் 2001 ,அக்டோபர்ல தன் இன்னிங்சை துவக்கினப்போ ராகு தசையில சூரிய புக்தி நடந்திருக்கு. (03/May/2002 => 27/Mar/2003) இதுல புக்தி நாதனாகிய சூரியனை தசா நாதன் ராகு டாமினேட் பண்ணதால -அவரு அஞ்சுல நின்னதால “ஒரு பெரிய அவமானம்” நடக்கவே இவருக்கு மேற்படி நாற்காலி கிடைச்சதுங்கோ. இவருக்கு சம சப்தகத்துல கேது 11ல நின்னதால மோடிஜிக்கு ஞானம் கிடைச்சிருக்கனும்.(எத்தனை மி.கி கிடைச்சதுன்னு அவருதான் சொல்லனும்-கிடைச்சதையும் அவரு துடைச்சு போட்டுட்டாருன்னு அவரோட பிற்கால செயல்பாடுகள் காட்டுது)

அடுத்து என்ன.. இவருக்கு இப்போ என்ன தசை ,புக்தி நடக்குது.இவரோட எதிர்காலம் என்ன? இதானே உங்க கேள்வி? உங்க கேள்விகளுக்கான பதிலை இங்கே அழுத்தி இந்த முக நூல் பக்கத்துல படிச்சுருங்க. பிடிச்சிருந்தா ஒரு முக நூல் பக்கத்துக்கு ஒரு லைக் போடுங்க (பிரச்சினை வராதுன்னா) இன்னைக்கு சாயந்தரத்துக்குள்ள 100 லைக் எதிர்பார்க்கிறேன்.

எச்சரிக்கை:
விக்கி பீடியாவுல மோடியோட பர்த் டீட்டெய்ல்ஸ் 17/9/1950ன்னு தந்திருக்காய்ங்க.இன்னொரு ஜோதிட வலைதளம் இந்த தேதிய வச்சு பர்த் டைம் காலை 11னு வச்சு ஜாதகம் கணிச்சிருக்கு. பார்ப்போம்.காசா பணமா இந்த பர்த் டீட்டெய்ல்ஸையும் பேஸ் பண்ணி இன்னொரு பதிவு போடறேன். எனக்கென்னமோ நண்பர் கொடுத்த பர்த் டீட்டெய்ல்ஸ் தான் கரெக்டோ என்னவோன்னு தோனுது,ஏன்னா பலன்லாம் பச்சக்குன்னு பொருந்துது. லெட் அஸ் வெய்ட் அண்ட் சீ

கேது காதல் : லட்சணங்கள்

அண்ணே வணக்கம்ணே !
ஜோதிட ரீதியாக காதல்களை , தாம்பத்ய வாழ்வுகளை 18 வகையா பிரிச்சு இந்த தொடரை எழுதிக்கிட்டு வர்ரம். கிரகங்கள் மொத்தம் ஒன்பது.இவற்றின் பாசிட்டிவ் இம்பாக்டோட 9 வகை, நெகட்டிவ் இம்பாக்டோட 9 வகை காதல்களை பத்தி பிரிச்சு மேஞ்சுக்கிட்டு வர்ரம்.

இந்த தொடரோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா ஜோதிடம்,ஜாதகம்,கிரகங்கள் பற்றிய ஜீரோ நாலெட்ஜ் உள்ளவுக கூட தங்கள் காதல் /தாம்பத்ய வாழ்வின் லட்சணங்களை படிச்சு – அடடே நம்முது பலான வகை காதலா/தாம்பத்யமானுட்டு புரிஞ்சுக்கிட்டு – அது குறிப்பிட்ட கிரகத்தோட நெகட்டிவ் இம்பாக்ட் என்ற புரிதலோட உரிய பரிகாரங்களை ஃபாலோ செய்து மஹிளா ஸ்டேஷன், ஃபேமிலி கோர்ட்டையெல்லாம் அவாய்ட் பண்ணலாம்.

இந்த செனேரியோல இன்னைக்கு கேது காதலோட லட்சணங்களை பார்க்கனும். மத்த கிரகங்களோட எஃபெக்டுகு லாஜிக் இருக்கும். காரண காரியம் இருக்கலாம்.

ஆனால் கேதுவோட வேலை ஸ்..நினைச்சாலே கண்ணக்கட்டுது. கேதுவோட லீலைகளுக்கு எந்தவித லாஜிக்கும் இருக்காது.

கேதுவோட லீலைகளை பத்தி சொல்லனும்னா மெகா சீரியலா எடுக்கலாம். அந்த அளவுக்கு இந்த மேட்டர்ல உபகதைகள் இருக்கு. ஆனாலும் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு பார்த்துரலாம். ஈரோயின் பேரு? யமுனான்ன் வச்சுக்குவம். இன்னைக்கு வயசு 50 ப்ளஸ் தான். ஆனால் யமுனாவோட கதை பெரிய கதை.

இன்னைக்கும் ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் உள்ள இளவட்டங்கள் திரும்பி பார்க்காம போக மாட்டாய்ங்க.அப்படி ஒரு ஸ்ட்ரக்சர், மாநிறம் தான். ஆனால் செம கட்டை . இனி ஃப்ளாஷ் பேக்.

அப்பங்காரன் ஏதோ தேவஸ்தான ப்ரஸ்ல வேலையில் இருந்தான். எலிக்கு அறுவடை காலத்துல 60 பொஞ்சாதிங்கறாப்ல பல பட்டறைய பார்த்தாச்சு. அந்த பாவமோ என்னமோ கண்ணாலம் கட்டின சில மாசத்துல உத்யோகம் காலி. கேர் ஆஃப் ப்ளாட்ஃபார்ம்.

வரிசையா அஞ்சு பொண்ணு. அதுல மொத பொண்ணுதேன் யமுனா. அம்மாக்காரிக்கு ஒரு தம்பி. அம்மா நெலம், தன் நிலம் எல்லாத்தையும் அந்தாளே பயிர் பண்ணிக்கிட்டிருந்தாரு. யமுனாவ அந்த தம்பிக்கு கட்டிக்ககொடுத்துட்டாய்ங்க.

ரெட்டை சொத்து , சொந்த மாமனே புருசன். லைஃப் ச்சொம்மா ஜில்லுன்னு போகனுமில்லையா? ஊஹூம்.புருசங்காரனை அப்படி என்னதான் டார்ச்சர் பண்ணாளோ நமக்கு தெரியாது. இவளோட பிற்கால பிஹேவியரை வச்சு பார்க்கும் போது அங்கே இங்கே மேய ஆரம்பிச்சிருக்கனும். அந்த மன்சன் பம்ப் செட் ரூமே கதின்னு இருந்துட்டாரு. திருவாசகம்,தேவாரம்லாம் வாய் விட்டு படிச்சிட்டிருப்பாரு.

இதுல ஒரு தலித் பெண் அவருக்கு மனிதாபிமான அடிப்படையில சில உதவிகள் செய்ய நம்ம ஈரோயின் நாயி மேல ஏறி கோலம் வந்து விவாகரத்து வாங்கியாச்சு. அதுவும் எப்போ ஒரு பிள்ளை ரெண்டு பொண்ணு பெத்த பிறவு.

சோம்பலா, உடல் உபாதைகளா, ஜீனா ,திமிரா என்ன இழவோ தெரியாது.ஆனால் பார்ட்டிக்கு பெட் காஃபிலருந்து -சோத்து வரைக்கும் எல்லாமே உட்கார்ந்த இடத்துலயே கிடைக்கனும். இப்படியா கொத்த கேரக்டர் விவசாயத்துல என்னத்த கிழிக்க முடியும்?

ஆனால் புருசங்காரன் பர்ஃபெக்ட் ஜென்டில் மேன். ஹார்ட் ஒர்க்கர். நல்ல விளைச்சல். கிருஷ்ணா ராமான்னு காலத்தை ஓட்டிக்கிட்டிருந்தாரு.

யமுனாவுக்கு இது கண்ணை உறுத்த கோர்ட் மூலமா சொத்தை பிரிச்சது இல்லாம,ஜீவனாம்சம் வாங்கிக்கிறது இல்லாம பிள்ளைய விட்டு பிச்சை எடுக்க வைப்பா. புருசங்காரனும் வஞ்சனை இல்லாம அள்ளிக்கொடுப்பான்.

பிள்ளை தலை எடுக்க ஆரம்பிச்சான். உயிர்மொழியில டாக்டர் ஷாலினி சொல்றாப்ல யமுனாவோடது ஓவராக்சன். எதிர்காலத்துல சொல்லிக்காட்டவே இருக்கிற நிலத்தை எல்லாம் துண்டு போட்டு வித்து பெரிய படிப்பெல்லாம் லக்சரியா படிக்க வச்சா.

இதற்கிடையில புருசங்காரனுக்கு ஒடம்பு சரியில்லாம – ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகி -அவரை கண்டுக்கற நாதி இல்லாம – அவர் ஆஸ்பத்திரி மொட்டை மாடியில நடை பயிற்சியில இருக்க -இவள் ஊரெல்லாம் தேடி ஃபிலிம் காட்டினது பிள்ளை மனசை ரெம்பவே உறுத்திருச்சு போல.

ரெண்டு பெண்கள் இருக்கிறதா சொன்னேன். நோ டீட்டெய்ல்ஸ். இதுல மொத பெண் அச்சு அசல் யமுனா மாதிரி . ஜகத் சோம்பேறி. ரெண்டாவது பொண்ணு யமுனாவோட நெகட்டிவ் கேரக்டர்ஸுக்கு கலர் ஜெராக்ஸ் மாதிரி.

பிள்ளை தலை எடுத்து ரெண்டு பெண்களுக்கும் கண்ணாலம் கட்டி வச்சான்.பிறவு தானும் கல்யாணம் கட்டிக்கிட்டான். அம்மாவையும் சிட்டிக்கு வர சொல்லி கூடவே வச்சுக்கிட்டான்.

ஆனால் பாருங்க.. இங்கயும் நம்ம ஈரோயின் ரிலாக்ஸே ஆகலை. பிள்ளைக்கு கண்ணாலம் ஆன கையோட ஆத்தாக்காரிக்கு ஒரு லவ்ஸ். ஆரம்பத்துல ஆருக்கும் டவுட்டே வரலை.ஆனால் போக போக அகுடாகி நாஸ்தியாயிருச்சு.

இதுல மருமவளை வேற காச்சி எடுக்கிறது. ஒரு சாதா மாமியார் டார்ச்சர் பண்ணாலே மருமவ கடுப்பாயிருவா. இதுல சோதா மாமியார் டார்ச்சர் பண்ணா?

மவனுக்கு அம்மாவா? மருமவளா?னுட்டு முடிவெடுக்கிற ஸ்டேஜ் வந்துருச்சு.மவன் பொஞ்சாதிதான்னு டிசைட் பண்ணிட்டான்.

கொய்யால நீ ஆடின ஆட்டம் போதும். ஒழுங்கு மருவாதியா ஊரை போயி சேரு. உன் வயித்துல பிறந்த பாவத்துக்கு செலவுக்கு மாசா மாசம் ஒரு அமவுண்டு அனுப்பிர்ரன்னுட்டு பார்சல் பண்ணிட்டான்.

இந்த ஸ்டேஜ்லயும் ரிலாக்ஸ் ஆகி – கிருஷ்ணா ராமான்னு வாழ்க்கைய ஓட்டலாம். ஆனால் நம்ம ஈரோயின் அடங்கவே இல்லை.

பிள்ளை கை மீறி போயிட்டான்.கு.பட்சம் பொண்ணுங்களையாச்சும் நம்ம கண்ட் ரோல்ல கொண்டு வந்துரனும்னு கண்ணாலமான பொண்ணுங்களோட வாழ்க்கையில விளையாட ஆரம்பிச்சா.

சந்தோசத்துல உள்ளவுக அடுத்தவுகளையும் சந்தோசப்படுத்தி பார்ப்பாய்ங்க. துக்கத்துல உள்ளவுக? ஊஹூம். பொண்ணுங்களோட வாழ்க்கையில கும்மியடிச்சுட்டா.

பெரிய பொண்ணாச்சும் பரவால்லை. ஒரு ஆறு மாசத்துலயே அலார்ட் ஆயி- வாழ போயிட்டா. ரெண்டாவது பொண்ணு நிலைமாதான் மோசம் ஆயிருச்சு.

புருசன் காரன் சுத்தமா கழட்டி விட்டுட்டு வேற பொண்ணை கண்ணாலம் கட்டிக்கிட்டான். இந்த பொண்ணு இப்பம் வரைக்கும் நாலு கை மாறிருச்சு.

இன்னைக்கும் யமுனா தன் ஸ்டைலை மாத்திக்கவே இல்லை. இன்னைக்கும் காஃபிலருந்து -ராத்திரி சோறு வரைக்கும் பெட்லயே நடக்கனும்.

வயசா ஆயிட்டே போகுது. ஒரு காலத்துல இவளுக்கும் இவ சொத்து சுகத்துக்கும் பயந்து நடந்த அக்கா,தங்கச்சிங்கள்ளருந்து – வீட்டுக்கு வாட்டர் கேன் போடற பையன் வரைக்கு ஆரும் மதிக்கிறதில்லை.

நடமாட்டம் இருக்கிற வரை சரி. வாழ்க்கையில வழுக்கி விழுந்தாப்ல பாத்ரூம்லயும் வழுக்கி விழுந்தா ? நாலு கை மாறின சின்ன பொண்ணுக்கு நெல்லவன் ஒருத்தன் கிடைச்சு அவளும் கழண்டுக்கிட்டா ?

இதான் கேது காதல்/தாம்பத்யோட லட்சணங்கள் ..லாஜிக்கே இருக்காது. காரணமே கிடைக்காது. எல்லாம் நெல்லா இருக்கும். ஆனால் சுகம் ? நிம்மதி ? ஊஹூம்..

லவ் மூட் ஸ்டார்ட் ..அவ்வ்வ்வ் : 3

அண்ணே வணக்கம்ணே !
நேத்திக்கு லவ்ஸுக்கு கேரக்டர் தெரிஞ்சிருக்கிறது முக்கியம் ஜோதிடத்துல உங்க +உங்க லவ்வரோட கேரக்டரை நிர்ணயிக்கிறதுல நட்சத்திரம் முக்கிய பங்கு வகிக்கும். நட்சத்திராதிபதிய பொருத்து நட்சத்திரங்களை 9 க்ரூப்பா பிரிக்கலாம்னு சொல்லி 3 க்ரூப்புக்கான பொதுகுணங்களை சொன்னேன்.
இன்னைக்கு மத்த 6 குரூப்பையும் விஜாரிச்சுரலாம். 2013 குரு பெயர்ச்சி பலன் பதிவை மீள் பதிவா போட்டிருக்கேன். அப்பம் படிச்சு மறந்தவுக -இதுவரை படிக்காதவுக இப்பம் படிக்கலாம். உடுங்க ஜூட்டு
4.ரோகிணி,ஹஸ்தம்,திருவோணம்:
மனம் போன போக்கிலே கால் போகலாமான்னெல்லாம் கேள்வி கேட்க மாட்டாய்ங்க. ரிட்டர்ன் டிக்கட் கூட புக் பண்ணாம கிளம்பிக்கிட்டே இருப்பாய்ங்க. ஸ்தூலமான விஷயங்களுக்கு பெருசா முக்கியத்துவம் தரமாட்டாய்ங்க (சைஸு ,கலர் ,சில்லறை,பேக் கிரவுண்டு) மாசத்துல 14 நாள் செமை லவ் மூட்ல இருப்பாய்ங்க. அடுத்த 14 நாள் கடுப்படிப்பாய்ங்க.மதர்லி ஃபிசிக், மதர்லி டச் உள்ள குட்டிகள் மேல ஜொள்ளு விடுவாய்ங்க
5.மிருக சீர்ஷம்,சித்திரை,அவிட்டம்:
ட்ரெய்ன் பைப் பிடிச்சு மாடிக்கு வந்து லெட்டர் கொடுக்கிறது, காம்பவுண்ட் ஏறி குதிச்சு வந்து பார்க்கிறது மாதிரி அட்வென்சர்லாம் செய்வாய்ங்க. படக்கு படக்குன்னு கோவிச்சுக்குவாய்ங்க. ப்ளேட்ல பேரை அறுத்துக்கறதை -கைய சுட்டுக்கறது மாதிரி பை.தனம்லாம் கூட செய்யலாம். மேட்டர் ஸ்டேஷன் வரைக்கும் கூட போகலாம். சாக்கிரதை. லவ்வரோட கச்சா முச்சான்னு சுத்தி சுத்தி வேளைக்கு சோத்தை திங்காம , ஜங்க் ஃபுட்,டின் ஃபுட்னு பசிய கொல்றதால உஷ்ண கோளாறுகள் வரலாம் ஜாண்டிஸ் வரலாம், ரத்த சோகை வரலாம்.
6.திருவாதிரை, ஸ்வாதி,சதயம்:
லவ்வருக்கு ஸ்வீட் ஷாக் கொடுக்கிறதுன்னா ரெம்ப இஷ்டப்படுவாய்ங்க. திடீர்னு லட்ச ரூவா பைக்ல வருவாய்ங்க, திடீர்னு ஸ்டார்ஹோட்டல்ல பார்ட்டி கொடுப்பாய்ங்க. சினிமா,டாஸ்மாக் ,ஏற்றுமதி,இறக்குமதி ,ஷேர் மார்க்கெட் பின்னணி இருக்கலாம், ரகசியத்துக்கு ரெம்ப முக்கியத்துவம் தருவாய்ங்க.அதுக்காவ படுக்கையில பாஞ்சுரமாட்டாய்ங்க. ஜஸ்ட் கட்டிப்புடி வைத்தியம்னா ரெம்ப பிடிக்கும். வெஸ்டர்ன் கல்ச்சர் பிடிக்கும். புதுமைக்கு வெல்கம் சொல்வாய்ங்க. பப் கல்ச்சர் டெவலப் ஆனதே இவிகளாலத்தான். போதை மேலயும் விருப்பம் இருக்கலாம்.
7.புனர்வசு,விசாகம்,பூரட்டாதி:
ரெம்ப ஆர்த்தடாக்ஸா இருப்பாய்ங்க. காதலியும் அதே போல இருக்கனும்னு ஆசைப்படுவாய்ங்க. சாதி பார்த்து ,பின்னணி பார்த்து , லவ்ஸு கண்ணாலத்துல முடியுமான்னு ரோசிச்சு லவ் பண்ணுவாய்ங்க. வங்கி,அரசியல்,ஜுடிஷியல் பின்னணி இருக்கலாம். சிக்கன வாதிகளா இருக்கலாம். சேமிப்புக்கு முக்கியத்துவம் தருவாய்ங்க. எதிர்ப்பு கிளம்பினா பக்காவா ப்ளான் பண்ணி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி,அதையும் ரகசியமா வச்சு எதிர்ப்பு உச்சத்துக்கு போகும்போது ரெஜிஸ்திரார் சர்ட்டிஃபிகேட்டை காட்டி பெத்தவுகளுக்கு குடைச்சல் கொடுப்பாய்ங்க.
8.பூசம், அனுஷம்,உத்திரட்டாதி:
தம்மை விட பல படிகள் தாழ்ந்து இருக்கும் பெண்ணை கூட லவ்ஸ்பண்ணுவாய்ங்க. கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலருன்னு லவ்வலாம். காதலி யூனிஃபார்ம் போடற தொழில்/உத்யோகம்/வியாபாரத்துல இருக்கலாம். எட்டுவருசம் லவ்ஸ் பண்ணி தீர்ப்பாட்டா கண்ணாலம் கட்டலாம். அட லவ்வை ப்ரப்போஸ் பண்றதுல கூட ரெம்ப சூதானமா இருப்பாய்ங்கன்னா பார்த்துக்கங்க. இவிக மொதல் சந்திப்பு வீட்டின் பேக் யார்டில் / தொழிற்பேட்டை/ துர் நாற்றம் விசும் இடங்களில் நடக்கவும் சான்ஸ் இருக்கு.
9.ஆயில்யம்,கேட்டை,ரேவதி:
லவ்ஸுக்கு ஹெல்ப் பண்ண சந்தானம் மாதிரி கேரக்டரை தேடுவாய்ங்க. நேரடியா ப்ரப்போஸ் பண்ணாம சகட்டுமேனிக்கு ஹிட் கொடுத்து சுத்தி வளைப்பாய்ங்க. ஒரு கார்ப்போரேட் கம்பெனி புது ப்ராஜக்டை லாஞ்ச் பண்றதுக்கு எப்படி எல்லா கோணத்துலயும் ரோசிப்பாய்ங்களோ அந்த ரேஞ்சுல லவ்வரை ச்சூஸ் பண்றதுலயும் ப்ரப்போஸ் பண்றலயும் ரோசிச்சு ரோசிச்சு கடுப்பேத்துவாய்ங்க. ஓவராலா ஒரு வித வியாபார கண்ணோட்டம் இருக்கும்.

ஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் – காமக்கலையும்: 2

Imageஅண்ணே வணக்கம்ணே !
சுக்கிரனுக்கும் செக்ஸுக்கும் என்ன சம்பந்தம்னு ஆருனா சோசியரை கேட்டா புஸ்தவத்துல இருக்கும்பாரு. இல்லின்னா எங்க குரு அப்படித்தான் சொன்னாருன்னு சொல்லிருவாரு.ஆனால் நாம விதிவிலக்காச்சே. அதே பதிலை நம்மகிட்டே எதிர்ப்பார்க்க முடியாதே.

குழந்தைகள் துவக்கத்துல தம் ஆசனத்து மேல கவனம் வைப்பாய்ங்கன்னு சொன்னேன். இந்த கேட்டகிரி குழந்தைகள்  திங்கறதும் -கழியறதுமாவே இருக்கும்.பேச்சு வந்த  பிறகு ஓயாம பேசும் அவ்வளவுதான். ( நிறைய பேரு குடு குடு கிழமான பிறவும் இப்படியே வாழ்ந்து போய் சேர்ந்துர்ராய்ங்க. அது வேற கதை – இதுல ஹோமோவா மாறிர்ரதும் உண்டு)

ஒரு குறிப்பிட்ட வயசுக்கப்புறம் கவனம் இன உறுப்பு மேல திரும்பும். அப்போ ஆட்டோமெட்டிக்கா   பேச்சு குறைஞ்சுரும். திங்கறது மேல கவனமிருக்காது.மலச்சிக்கல் கூட ஏற்படும். டீன் ஏஜ் வயதுள்ள  மகன் அல்லது மகள் பத்தி நிறைய பேரன்ட்ஸ் இதே கம்ப்ளெயின்ட் தான் .
எப்போ கவனம் இன உறுப்பின் மேல் திரும்பிருதோ அங்கே வாய்க்கும் -ஆசனத்துக்கும் முக்கியத்துவம் குறைஞ்சு போகுது.

நம்ம கவனம் எந்த உறுப்பின் மேல் இருக்கிறதோ அதனோட  எஃபிஷியன்ஸி அதிகமாகும். மத்ததெல்லாம் சோர்ந்து படுத்துக்கும்.

எப்போ இன உறுப்பின் மீது கவனம் திரும்புதோ  அவன் இயற்கையின் பிடிக்குள்ள வந்துர்ரான். இயற்கையின் ஒரே அஜெண்டா ” உயிர் வாழனும் -இனப்பெருக்கம் செய்யனும் -பரவனும்” ஒரு மனிதன் இந்த அஜெண்டாவுக்கு உட்பட்டு வாழ்ந்தான்னா இயற்கையின் கொடையை அவன் முழுக்க முழுக்க அனுபவிக்கிறான்.

காதலிக்கிறவன்  தற்கொலை பண்ணி செத்துப்போகலாம். ஏன்னா காதல் என்பது மனிதனின் படைப்பு.  இது அனியற்கை .

ஆனால் எவனாச்சும் எவளையாச்சும் படுக்கப்போடனும்னு நினைச்சா ( ஐ மீன் அது அவன் சப் கான்ஷியஸ்ல கூட அதிர்வுகளை ஏற்படுத்தனும்) அவன் தற்கொலை பண்ணிக்கிறதில்லை.

நடிகைகள் மேட்டர்ல பார்த்திங்கனா அவிக கிழவியான பிறவும் கூட இளமையில வசதியில்லாம இருந்த  – நடுவயசுல வசதி வந்த  புண்ணாக்கு வியாபாரி – மிளகாய் வியாபாரில்லாம் படம் எடுத்தாச்சும் படுக்க போடுவான்.
ஏன்னா அவனோட கோரிக்கை இயற்கையானது.

ஆகவே இன உறுப்பின் மீது கவனத்தை திருப்பியவனுக்கு இது பாதி – இன்னொரு பாதி எங்கே என்ற தேடல் வந்துரும். எதிர்பாலினரை தொடர்பு கொள்ள தவிப்பான்.

அவனுக்கு “அது” கிடைக்க எதெல்லாம் தேவையோ அதையெல்லாம் இயற்கை இயற்கையாவே அவனுக்கு வழங்க ஆரம்பிக்குது. இதுல அழகு ,அலங்காரம்,ஆடை ,அணி கலன் ,வண்டி வாகனம் எல்லாமே அடங்கிருது.
இன்னம் சொல்லப்போனா அவன் எதுக்கு இதையெல்லாம் சேர்க்கிறான் -ஏன் இதெல்லாம் அவனை தேடிவருதுன்னு  அவனுக்கே  தெரியாது . இதெல்லாம் இயற்கையின் அஜெண்டா. அவன் ரசிகனாகிறான். ரசனை அவனை கலைஞனாவே மாத்திருது.  கலை பெண் தன்மையை தரும் .அது பெண்ணின் ஆண்மை குறித்த அச்சத்தை விலக்கும்.

சுக்கிரனோட காரகத்தை எல்லாம் பார்த்திங்கன்னா எல்லாமே எதிர்பாலினரை கவருவதாவே இருக்கும்.  இதுல சிக்கல் என்னடான்னா இந்த காரகங்கள் தானா வந்து அமையனும். இவனா அலைஞ்சு பறைசாத்தி  சேர்த்துட்டே போனா உபயோகமில்லை.

வேணம்னா சின்னதா சர்வே எடுக்க சொல்லுங்க. வண்டி வண்டின்னு கனவு கண்டவுக -வண்டி வாங்கின பிறகு தங்கள் செக்ஸ் பவர் குறையறதை உணர முடியும். வீடு மேட்டர்னா சொல்லவே தேவையில்லை. வீடு கட்டி முடிக்கிறதுக்குள்ளள இவன்ல இருந்த உருவாக்கும் சக்தி (இதான் செக்ஸ் பவர்) ஃபணாலாயிருக்கும்.

ஆமாம் இன்னைக்கு சுக்கிரன் 2 ல் இருந்தால் என்னபலன்னு சொல்லனுமே .. சொல்லிருவம்ல. அதுக்கு மிந்தி இந்த பதிவை அனுபவஜோதிடா ப்ளாக்ல போடலாமா – ஒரு விபத்து மாதிரி முடக்கத்துல இருந்து மீண்டு வந்த அனுபவஜோதிடம் டாட் காம்ல போடலாமானு ஒரு தர்ம சந்தேகம். கெட்ட நேரத்துல உதவியான்னு கூட சொல்ல முடியாத ஒரு ஆக்சிஜன் குழாய் போல  இருந்த அனுபவஜோதிடாவை அலட்சியப்படுத்தறது தர்மம் கிடையாது.

அதே சமயம் ஆத்தா உத்தரவில்லாம எந்தவித ப்ரொஃபெஷ்னல் எக்செலன்ஸியும் இல்லாம  முடங்கியிருந்த அனுபவஜோதிடம்  தளத்தை நானே செயல்பாட்டுக்கு கொண்டுவந்திருக்க முடியாது. இதை அலட்சியப்படுத்தினா ஆத்தா கோவிச்சுக்கவும் வாய்ப்பிருக்கு.
இப்ப  என்ன பண்ணலாம்?  அனுபவஜோதிடாவா? அனுபவஜோதிடமா?
ஒன்னு பண்ணுவம். எவ்ள டைம் பிடிச்சாலும் சரி அனுபவஜோதிடம் வலைதளத்தை  ஒரு ப்ரொஃபெஷ்னல் டச்சோட கொண்டுவரனும். பதிவுகளை சாதி பிரிச்சு – தொடர்களை தொகுத்து  சூப்பரா ரெடி பண்ணனும். அதுவரை புதிய பதிவுகளை அனுபவஜோதிடாவுலயே போடலாம். வேணம்னா பழக்க தோஷத்துல அனுபவஜோதிடம் பக்கம் வர்ரவுகளுக்கு புதிய பதிவுகளோட தொடுப்புகளை அன்னன்னைக்கு கொடுத்துரலாம்.ஓகேவா?

சுக்கிரன் இரண்டில் நின்றால்:
லக்னாத் சுபராகி பலம் பெற்று  நின்றால் அழகான கண்கள் ,சிறந்த கண் பார்வை இருக்கும். ஒப்பற்ற  பேச்சாளர்கள் ,பாடகர்கள் ஆகலாம்.எதிர்பாலினரால் தனலாபம் ஏற்படும் (ஜாதகர்  பெண்ணா இருந்தா பைசா வரதட்சிணை இல்லாம கண்ணாலமாகும்,பெரிய மருமகளா போயி கணவன் வீட்டை ரூல் பண்ணுவாய்ங்க-சொத்துக்களை நிர்வாகம் பண்ணுவாய்ங்க -ஆணா இருந்தா மாமனார்சொத்து வரும் -இல்லின்னா கேணச்சி எவளாச்சும் மாட்டுவா அவளோட உழைப்புல மஞ்ச குளிப்பாய்ங்க). குடும்பத்துல உறுப்பினர்கள் கூடிக்கிட்டே போவாய்ங்க.

சைட் எஃபெக்ட்:
ஹய்யா.. இத்தனை யோகமான்னு துள்ளிக்குதிக்காதிங்க. இரண்டில் உள்ள கிரகம் எட்டையும் பார்க்கும். சீக்கிரமே பேட்டரி அவுட். தம்பதிகளிடையில் பிரிவு வரலாம். வேறு பெண் சகவாசம் ஏற்பட்டு உசுருக்கே கூட ஆபத்து வரலாம், வழக்கு வில்லங்கம் , சிறை செல்ல  கூட வாய்ப்பிருக்கு.
லக்னாத் பாபராகி பலம் பெற்று நின்றால்… கெட்ட கெட்ட வார்த்தையா பேசுவாய்ங்க(அதுலயும் எல்லாமே எவர் கிரீனா இருக்கும்)  பேச்சுல இருக்கிற வேகம் செயல்ல இருக்காது. (கில்மால கூட)  பல கப்பல்கள் காணாம போன – எத்தனை பேர் தொட்ட முலை –  எத்தனை பேர் நட்ட குழியில இவிகளுக்கு காணாம போவாய்ங்க. சொத்து சுகம்லாம் அதுலயே போயிரும்.

ஆரோ ஒரு  நடிகர். பெண் குழந்தைகள் .வீட்டுல ஒரு ஹால் . ஹாலுக்கு மேல கல்யாண மண்டபம் போல அறைகள் இருக்குமாம் . ஹால்ல பார்ட்டி நடக்குமாம். வந்தவுக ஆரு புடிச்சிருக்கோ அவிகளோட மேல ரூமுக்கு போயிருவாய்ங்க. இவரோட மகள் ,மனைவி உட்பட.
இப்படியும் சில பிரகிருதிகள் இருக்கு. நம்மால ஆகாத வேலை -அவியளால ஆகுது ஆகட்டுமேங்கறவுக.

நாளைக்கு சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானங்களான 3-7 ல் நின்றால் என்ன பலன்னு பார்ப்போம். உடுங்க ஜூட்டு.

மரணத்தை வெல்ல மரணமே வழி : செவ் தோஷ பரிகாரம்

அண்ணே வணக்கம்ணே !

நாங்கல்லாம் 1987 லயே காலேஜை விட்டு வெளிய வந்துட்டமா .. இதுல 1986 லருந்தே பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டமா அதுலயும் எட்டாங்கிளாஸ் படிக்கறச்சயே படம் வரைஞ்சு கெட்ட பாடங்க எல்லாம் நடத்தின பார்ட்டி நாம. ( ஹி ஹி .. தோஸ்துங்களுக்குத்தேன்.அதும் கடா குட்டிகளுக்கு தேன்) புதுசா எதையாச்சும் மண்டையில ஏத்தனும்னா ரெம்ப கஷ்டமா கீது. பாடம் நடத்தறது ஒரு வித அவுட்லெட்டுதான் இல்லேங்கலை.

புது மேட்டருன்னா அது ஏற்கெனவே நம்ம மைண்டுல ஸ்டோர் ஆகியிருக்கிற மேட்டருக்கு தொடர்ச்சியா இருந்தாகனும் – அல்லது நெஜமாலுமே மன்சங்க வாழ்க்கைய புரட்டி போடற மேட்டரா இருக்கனும் அப்பத்தேன் அது மண்டைக்குள்ளாற போகுது.

அது சரி திடீர்னு ஏன் இந்த புலம்பலுன்னு கேப்பிக சொல்றேன். நம்முது கடகலக்னமாச்சா நாலுல சனி வந்தப்பத்துலருந்தே தாளி எப்படியாச்சும் வீட்டை விட்டு வெளியேறனும். ஊர் ஊரா சுத்திக்கிட்டு வரனும்னு ஆசை வந்துருச்சு. லேப் டாப்பு – டேட்டா கார்டுன்னு புலம்பிக்கிட்டே இருந்தம். ஒன்னும் வேலைக்காகலை.

சமீபத்துல சனி வக்ரமானாரே அப்பம் நம்ம எண்ணம் கொஞ்சம் கொஞ்சமா செயலாக ஆரம்பிச்சிருச்சு. என்னென்னமோ நடந்து நேத்திக்கு மவ சென்னையில இருந்து புத்தம் புது லேப் டாப் வாங்கியாந்துட்டா. அது என்னா கம்பெனி என்னா இழவு எதையும் இன்னம் பார்க்கலை.( கேட் வேன்னு ஒரு கம்பெனி இருக்கா? – ஏமாந்துட்டமா? )

நம்ம ஆஸ்தான கம்ப்யூட்டர் காரரு கிட்டே ஓ.எஸ் போடச்சொல்லி அனுப்பினேன். அவரு யூத்தாச்சா. விண்டோஸ் 7 போட்டு விட்டுட்டாரு. நாம ஆதிகாலத்துலருந்தே எக்ஸ்பி தேன். கொய்யால கலர் கலரா இருக்கே தவிர கண்ணை கட்டுது.

லேப் டாப்லயா இந்த கீ போர்டுல என்னென்னமோ மாற்றம்லாம் செய்து விட்டிருக்காய்ங்க. நெட் கனெக்ட் ஆகி – நாம வழக்கமா பார்க்கிற சைட்டுங்களை பார்த்தாலும் கொஞ்சம் போல பழகும்னு பார்த்தா ரெம்பவே பே பே காட்டிருச்சு.

அப்பாறம் பொட்டு வச்ச பிறவு ஸ்பார்க் ஆகி லேப் டாப்போட கொடுத்திருந்த டிவிடியில இருந்த ஹார்ட் வேர்ஸ் எல்லாத்தையும் கொத்தா போட்ட பிறவு “கட்டின பசு” (சுஜாதா?)

பொஞ்சாதி முறுக்கிக்கிட்டா கூட சமாளிச்சுரலாம். இந்த கம்ப்யூட்டர் சமாசாரம் மட்டும் லொள்ளு பண்ணா செமை கடுப்பாயிருது.

( ஸ் ..அப்பாடா பந்தா பண்ணாம நாம லேப் டாப் வாங்கின கதைய சொல்லியாச்சு )

இப்பம் பதிவுக்கு போயிரலாமா/

நேத்திக்கு செவ் 7 ல இருந்து பண்ற அழும்பையெல்லாம் சொன்னேன்.அதுக்கு பரிகாரமும் ஓரளவுக்கு சொல்லியாச்சு.

இன்னைக்கு செவ் 8 ல் என்னா மாதிரி அலப்பறை கொடுப்பாருன்னு பார்ப்போம். லேடீஸ் ஃபர்ஸ்ட். இவிகளுக்கு 8 மாங்கல்ய ஸ்தானமாச்சா (அதே நேரம் ஆயுள் ஸ்தானமாவும் ஒர்க் அவுட் ஆகுதுங்கோ. என்னய்யா குழப்பறேன்னு கடுப்பாயிராதிங்க. வேணம்னா இதே வலைதளத்துல ஆண் பெண் வித்யாசம்னு ஒரு தொடர் எழுதியிருக்கேன். அதுல எட்டாம் பாவத்தை தேடி படிங்க புரியும்).

ஆக பெண் ஜாதகத்துல எட்டுல செவ் இருந்தா அவிக உசுரை மட்டுமல்லாது – அவிக ஆத்துக்காரர் உசுரையும் காப்பாத்தியாகனும். 8 = மரணம் ; செவ் = உடனடி மரணம். தெரியும்ல. காதலில் ரெண்டு வகை சைவம் ஒன்னு அசைவம் ஒன்னுன்னு ஒரு பாட்டு இருக்குது.

ஆனால் மரணத்துல மட்டும் அரை டஜனுக்கு மேலான ரகம் இருக்கு. இந்த மேட்டரை ஏற்கெனவே ஒரு தாட்டி செமை ஓட்டு ஓட்டினாப்ல ஞா. இருந்தாலும் புதுவரவுகளுக்காக சுருக்கமா ரிப்பீட்டு.

மரணத்தின் வகைகள்:

1.மன ரீதியிலான மரணம் 2.பண ரீதியிலான மரணம் 3.சமூக ரீதியிலான மரணம் 4.அரசியல் ரீதியிலான மரணம் 5.குடும்ப ரீதியிலான மரணம்.

1.மன ரீதியிலான மரணம்:

இதை எதிராளிகளின் துரோகங்கள் மட்டுமல்ல – நாம செய்ற குடி கெடுக்கும் வேலைகளும் தரலாம். ஒருவன் அடுத்தவனை கொல்லும் போது அவனிலும் ஏதோ செத்துப்போகிறது.

2.பண ரீதியிலான மரணம் :

நம்ம ஊர்ல ஒரு பார்ட்டி . ஏழை பாழைங்க கிட்ட தினசரி அஞ்சு பத்து சேகரிச்சு 100 ஆவது நாள் அதுக்கு உரிய மதிப்பிலான பொருட்களை தருவாரு. தம்மிடம் புரளும் ஊர் பணத்தை பெருக்க ஒரு தடவை ரியல் எஸ்டேட்ல போட்டுட்டாரு. (அது அந்தக்காலமுங்கோ) பணம் டம்ப் ஆயிருச்சு. அதுக்கப்பாறம் எத்தனை குரு -எத்தனை சனி மாறினாலும் மாற்றம்? ஊஹூம்.. நவகிரக தோசங்களுக்கும் அது அல்ட்டிமேட் பரிகாரமாயிருச்சு போல.

கடேசி காலத்துல ஊர் பணத்துல வாங்கி வச்சிருந்த நிலத்தை காசாக்கி அல்லாருக்கும் கொடுத்துட்டுத்தான் போனாரு மன்சன் இல்லேங்கலை. ஆனால் இடைப்பட்ட காலத்தில் அன்னாருக்கு நிகழ்ந்தது பண ரீதியிலான மரணம் .

3.சமூக ரீதியிலான மரணம்

ஒரு அரசியல்வாதிக்கும் -பத்திரிக்கையாளனுக்கும் இடையில என்ன மாதிரி உறவு இருக்கலாம்னு ஒங்க மைண்டுல ஒரு ஐடியா இருக்கலாம்.

ஆனால் ஒரு பார்ட்டி தலீவரு வெளி நாடு போனா தன் பொஞ்சாதியோட கிளம்பிருவாரு. அவிக தங்கற கெஸ்ட் ஹவுஸ்ல வாஸ்து விவகாரமா இருக்குமுங்கோ.. தலீவர் ரூமுக்கும் – பத்திரிக்கையாளர் ரூமுக்கும் இடையில ஒரே ஒரு கதவு இருக்கும். அதை அவிகவிக தாள் போட்டுக்க வேண்டியதுதேன்.

ராத்திரியில .. அந்த கச்சாடால்லாம் நமக்கெதுக்கு. தலீவரு என்னவோ கலக்கிட்டு போய் சேர்ந்துட்டாரு. அவரு ரேஞ்சு அப்படி. ஆனால் அந்த பத்திரிக்கையாளனோட சமூகம்? அதை பொருத்தவரை ஹி ஈஸ் டெட்.அப்படித்தானே

4.அரசியல் ரீதியிலான மரணம்

கலைஞரு தீர்காயுசா இருக்கிறது சிலருக்கு இமிசை .சிலருக்கு ஆறுதல் .ஆனால் இந்த மேட்டர்ல ஒரு சொலவடை இருக்கு .அருத்தம் சொல்லமாட்டேன் “பாபி சிராயு”

ஈழத்துல தமிழின படுகொலை நடந்தப்போ தலைவரு அடக்கி வாசிச்சு ..கொய்யால வயசுல இருந்தப்போ வீணா உ.வ பட்டு ரெண்டு தாட்டி ஆட்சியை இழந்தோம் இப்பம் முதிர்ச்சி வந்துருச்சு போலன்னு தன்னை தானே பாராட்டி கூட இருக்கலாம்.

ஆனால் அது அரசியல் ரீதியிலான மரணம்னு அரசியல் அரிச்சுவடி படிச்சவன் கூட சொல்லிருவான். அப்படி அவரு பொலிட்டிக்கலா டிக்கெட் போட்டுட்டதாலதான் தீர்காயுசா இருக்காரு.

5.குடும்ப ரீதியிலான மரணம்.

பொஞ்சாதி செத்து பிழைச்சு பெத்து போட்டு கிழிஞ்ச நாரா படுத்து கிடக்கா. வீட்டுக்காரரு ஒரு நாலணா பார்ட்டிய தள்ளிட்டு வந்து தெரு நடையில வேலை எடுக்கிறாரு. இதை பார்த்துட்டு அந்த மகராசி நல்ல தங்காள் கணக்கா எல்லா குழந்தைகளையும் இழுத்துக்கிட்டு பச்சை மண்ணை தூக்கிட்டு கிணத்தை தேடி போறா. நல்ல வேளையா சாகலை தான்.

ஆனால் அந்த ஆசாமிய பொருத்தவரைக்கு அந்தாளு குடும்ப ரீதியா செத்து போயிட்டாரு. பிள்ளைங்க தலை எடுத்து அந்தாளுக்கு உட்ட ரவுசை எல்லாம் சொன்னா சிரிச்சு சிரிச்சு வவுறே புண்ணா போவும்.
அதெல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்துல ..

இது மட்டுமில்லிங்கனா மரணமே போன்றவைன்னு ஒரு பட்டியல் இருக்கு. அதை கீழே பாருங்க..

1.சிறைப்படுதல் 2.தலைமறைவாதல் 3. நிராகரிப்பு 4.பிரிவு 5.அங்கீகாரமின்மை 6.இருட்டு 7. நெருங்கியவர்களை விட்டு வெகு தொலைவில் இருத்தல்

மேற்படி பட்டியல்ல ஏதேனும் ஒன்னு ரெண்டை வாலண்டியரா சூஸ் பண்ணிக்கிட்டு ஓன் பண்ணிக்கிட்டா போதும் செவ்வாய்க்கு டேக்கா கொடுத்துரலாம். இப்பயும் எரியாதவுக நாளை வரை காத்திருங்க.விளக்கி சொல்றேன்.

ஓகேவா ..உடுங்க ஜூட்டு ..

செவ் தோஷம்: ஆண் பெண் வித்யாசம் 2

நான்: மார்ஸ் அண்ணே ..வணக்கம்
செவ்வாய்: மேட்டருக்கு வாப்பா ..

நான்:
நேமாலஜில நமக்கு பெரிய பிடிப்பு கிடையாது.ஆனால் மார்ஸ் –மார்க்ஸ்ங்கற வார்த்தைகளை பார்க்கிறப்போ நேமாலஜில கூட மேட்டர் கீதுப்பான்னு தோனுது

செவ்:
இல்லியா பின்னே.. நான் தான் புரட்சிகளுக்கு காரகன். கார்ல் மார்க்ஸ் இல்லின்னா புரட்சிகள் ஏது?

நான்:
அண்ணா.. உங்களுக்குரிய கடவுள் முருகன். முருகனுக்கும் புரட்சிக்கும் என்ன லிங்கு?
செவ்:
ஒரு மேங்கோவுக்காக டாடியையே போடின்னு வந்துட்ட பார்ட்டி ஆச்சே

நான்:
இது கோவத்தை தானே காட்டுது..இதுல புரட்சி என்ன இருக்கு?

செவ்:
ஒரு தாட்டி பிரம்மா தன்னை ஹானர் பண்ணலின்னு தூக்கி ஜெயில்ல போட்டுட்டு படைப்புத்தொழிலையே அண்டர் டேக் பண்ணவராச்சே..

நான்:
இது சுயமரியாதை மற்றும் துணிச்சலைத்தானே காட்டுது.

செவ்:
அட நீ இப்படி வர்ரியா.. எல்லா கடவுளும் விதிக்கு சைடு கொடுத்துத்தான் டீல் பண்ணுவாய்ங்க. ஆனா முருகன் அப்டி கிடையாது ..கீழே உள்ள பாட்டுல கடைசி லைனை மட்டும் பாரு..
சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயல்பொழில், தேங் கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம், மா மயிலோன்

வேல்பட்டு அழிந்தது வேலையும், சூரனும், வெற்பும்! அவன்
கால்பட்டு அழிந்தது இங்கு, என் தலை மேல், அயன் கையெழுத்தே!

கவிஞர் முருகனோட கால் பட்டா தலைமேல இருக்கிற அயன் (பிரம்மன்) கையெழுத்து (விதி) அழியும்ங்கறாரு .. புரட்சி இல்லியா இது..1

செவ்:
நிச்சயமா புரட்சி தான்..

நான்:
ஹி ஹி .. நம்ம பேரு கூட முருகன் தானே நம்ம லைஃப்ல இந்த புர்ச்சிக்கு எதுனா ஸ்கோப் இருக்குதா பாஸூ..

செவ்:
நிச்சயம் இருக்கும். ஜீவனாதிபதிங்கறதால செய்தொழில்ல புரட்சி, புத்ர ஸ்தானாதிபதிங்கறதால மவள் மேட்டர்ல புரட்சி , புத்தி ஸ்தானங்கறதால சிந்தனையில புரட்சி , அவரு நாலாமிடத்துல இருக்கிறதால தாய் மேட்டர்ல புரட்சி ஊடு,வாகனம், கல்வி மேட்டர்ல புரட்சில்லாம் ஏற்கெனவே ஸ்மால் ஸ்கேல்ல நடந்திருக்கு.லார்ஜ் ஸ்கேல்லயும் நிச்சயமா நடக்கும் நைனா .. டோன் ஒர்ரி

நான்:
தேங்க்யூண்ணா..தலைப்புக்கும் மேட்டருக்கு ம் லிங்கே இல்லாம போயிட்டிருக்கு. இந்த செவ் தோஷ மேட்டர்ல ஆணுக்கு பெண்ணுக்கும் என்ன வித்யாசம்னு நேத்தய பேட்டில ஆரம்பிச்சம்..

செவ்:
நோ ப்ராப்ளம் .. இன்னைக்கு முடிச்சுருவம்.

நான்:
மொதல்ல லக்னத்துல நிக்கிறச்ச ஆண் பெண்கள் விஷயத்துல என்ன நடக்கும்னு சொல்லுங்க ?

செவ்: கோபம்,ரத்தம் எரிச்சல் தொடர்பான வியாதி,உஷ்ண வியாதிகள் ,மின்சாரம்,ஆயுதம்,நெருப்பு,வெடி பொருட்கள்,ஆயுதம் தாங்கிய நபர்கள் ,காவல்,ராணுவ துறையினரால் ஆப்பு. 4 ஐ பார்க்கிறதால தாய் வீடு வாகனம் கல்வி விஷயங்கள்ள பிரச்சினையும் வரலாம். அதே போல ஏழை பார்க்கிறதால ஆண் ஜாதகர்னா மனைவிக்கு,பெண் ஜாதகர்னா கணவருக்கும் இதே பிரச்சினைகள் வரலாம். எட்டை பார்க்கிறதால மேற்படி பிரச்சினைகள் உயிருக்கே உலை வைக்கலாம். இதெல்லாம் இருபாலுக்கும் ஜெனரல். ஆனா பெண் ஜாதகத்தை பொருத்தவரை எட்டுங்கறது மாங்கல்ய ஸ்தானம் கூட. எனவே வைதவ்யம் (விதவையாதல்) என்பது அடிஷ்னல் எஃபெக்ட்.

நான்: தொடர்ந்து பேசலாம் .. 24 மணி நேரத்துக்கு பிறகு..