ஜோதிட பலன் : புதிய பார்வை

2

அண்ணே வணக்கம்ணே !

ஜோதிடம்ங்கறது நூத்துக்கு 99.9% லௌகீகமான ஒரு விஷயமாத்தான் இருக்கு. எப்ப கண்ணாலமாகும் ? எப்ப கொளந்தை பிறக்கும்? அது எப்படி இருக்கும்? அதுக்கு படிப்பு எப்படி ?அதுக்கு எப்படி கல்யாணம் ஆகும்? இதுலயே முடிஞ்சு போகுது .

இல்லின்னா விட்டலாச்சார்யா கணக்கா ஜீபூம்பா கேள்விகள் வந்துரும் . எனக்கு புதையல் எடுக்கிற அமைப்பு இருக்கா? லாட்டரியில பணம் கிடைக்குமா?
ஜோதிடம் ஒரு தெய்வீக கலை. டிஸ்டில்ட் வாட்டரை குண்டி கழுவ உபயோகிச்ச மாதிரி தான் மிஸ் யூஸ் பண்றம்.

என்னோட கடந்த பிறவி என்ன? அப்போ என்னவா இருந்தேன்? என் அடுத்த பிறவி எப்படி இருக்கும்? எனக்கு முக்தி கிடைக்குமா? எந்த ரூட்ல போனா இது ஒர்க் அவுட் ஆகும்? எனக்கு குரு யார்? பூர்வ கர்மங்கள் எப்படி இருக்கு? அதெல்லாம் எப்ப ஒழியும்? எந்த தெய்வம் எனக்கு நல்ல வழிய காட்டும்?
இப்படியா கொத்த கேள்விகளை கேட்டவிக ரேரஸ்ட் ஆஃப் தி ரேர் தான்.

மனுஷ பிறவிங்கறது ஒரு ஜங்சன் பாய்ண்ட். ரிவர்ஸ் கியர் போட்டு மிருகமாகவும் மாறலாம். எக்சலேட்டரை அழுத்தி தெய்வமாவும் மாறலாம்.
என்னைக்கேட்டா ஒவ்வொரு மனுஷனும் தனக்கு கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் லௌகீக தேவைகளை குறைக்கவும் – ஆன்மீக முயற்சிகளை கூர்மை படுத்தவும் தான் உபயோகிக்கனும்.

மனுஷன் தெய்வமா மாறுவானோ இல்லையோ அது வேற கதை .ஆனால் மிருகமாக மாறிராம இருக்கு தெய்வமாக ட்ரை பண்ணிக்கிட்டே இருக்கனும்.
நிற்க. ஜோதிடத்தை லௌகீக மக்கள் லௌகீகமாத்தான் யூஸ் பண்றாங்க. ஜோதிடர்களும் லௌகீகமாத்தான் சொல்றாய்ங்க. இது இதோட நிற்கல.
ஜோதிட விதிகளை உருவாக்கின ரிஷிகளும் கொய்யால ..ஒவ்வொரு கிரக ஸ்திதியையும் இது லௌகீக வாழ்க்கைக்கு நல்லதா -கெட்டதான்னு பார்த்து தான் பலன் சொல்லியிருக்காய்ங்க. அவ்வ்வ்வ்வ்வ்.

இந்த பாய்ண்ட் அப்பப்போ நமக்கு ஸ்பார்க் ஆறது உண்டு. ஆனால் இந்த பதிவு போட காரணம் நம்ம பதிவுக்கு வந்த கமெண்ட்.
இந்த சுக்ரன் மேட்டரையே எடுத்துக்கங்க. இவர் 6-8-12 ல இருந்தா கூட பதறமாட்டாய்ங்க.ஆனால் 7-10 ல இருந்தா பதறிப்போயிர்ராய்ங்க.
அப்படி என்னதான் குடிமுழுகிப்போயிரும்?

சுக்கிரன் =செக்ஸ். 7=கணவன்/மனைவி ,10=தொழில். ஜாதகரோ/ஜாதகரின் வாழ்க்கை துணையோ செக்ஸ் மேல அதிக ஈடுபாடு உள்ளவிகளா இருப்பாய்ங்க.(சுக்.7ல்) அல்லது அதே வேலையா இருப்பாய்ங்க (சுக் .10ல்)

என்ன போச்சு?

காமி கானி வாடு மோட்சகாமி காலேடு .வாழ் நாள்ள செக்ஸ் மேல பிறப்பு முதல் இறப்பு வரை ஒரேவிதமான ஈடுபாட்டோட இருந்தவிக -இருக்கிறவிக கிடையவே கிடையாது .

ஒன்னு அடலசன்ட் ஏஜுல விளையாடி நடுவயசுல தெளிவு வந்து காணாம போயிரும்.அல்லது அடலசன்ட் ஏஜுல ஈர கோவணம் கட்டி அழிச்சாட்டியமா அடக்கி வச்சவன் நடுவயசுல விளையாட ஆரம்பிப்பான்.

ஏதோ ஒரு குறிப்பிட்ட காலம் டிஸ்டர்ப் பண்ற சின்ன மேட்டர் இது . ஐ மீன் தி நார்மல் பீப்பிள். சைக்கோ/மனவியாதி கொண்டவனை எல்லாம் இதுல கொண்டு வரல.

கொஞ்சம் விளையாடிட்டு தான் கடந்து வரட்டுமே. சுக் 7-10 ல இருந்தா இன்னம் தீவிரமா விளையாடப்போறான். அதுலயே நிற்க முடியாதுல்ல. பயாலஜிக்கல் ரூல்ஸ் படியே கூட இது அசாத்தியம் தான். பின்னே ஏன் இதை காட்டி பயமுறுத்தறாய்ங்க?

இங்கே பயம் செக்ஸ் பத்தினது கிடையாது . டபுள் ட்யூட்டி பார்த்துட்டு திடீர்னு கழண்டுக்குவான். ஆன்மீகத்துக்கு தாவிருவான். இது லௌகீக வாழ்க்கைக்கு ஆப்பு .

சூரியனை எடுத்துக்குவம் 3-6-10-11 தவிர எங்கேயும் இருக்க கூடாது .இதுவிதி. லக்னத்துல இருந்தா என்ன ஆயிரும்? ஆன்மாவின் குரல் ஒலிக்க ஆரம்பிக்கும். இவன் லோகாயதமா உதவமாட்டான்.ரெண்டுல இருந்தா என்ன ஆயிரும்? தான் உணர்ந்ததை உபதேசிக்க ஆரம்பிச்சிருவான்.
இப்படியாக ஜோதிட விதிகளே லோகாயத வாழ்வைத்தான் டார்கெட் பண்ணுது .ஆகவே ஜோசியர் அவர் ஆப்பு -இவர் ஆப்புன்னா பயந்துக்காதிங்க. ஆப்பு லௌகீக வாழ்க்கைக்கு தான். ஆன்மீக வாழ்வு டாப்பா இருக்கவும் வாய்ப்பிருக்குங்கோ..

Advertisements

8 thoughts on “ஜோதிட பலன் : புதிய பார்வை

  1. உண்மையா என்னன்னு தெரில. ஓஷோ க்கு ராசிகட்டத்தில் 5கிரகங்கள் எட்டாவது இடத்தில் இருப்பதாக ஓஷோ ஜாதகத்தை தேடிய போது நிறைய websiteல் பார்த்தேன்

    • வாங்க கணேசன் !
      விஐபிக்கள் அதுவும் நாட் நாட்ல பிறந்த வி ஐ பிக்கள் ஜாதகம்/பிறப்பு விவரம்லாம் சந்தேக கேஸ் தான்.பிறந்த தேதியையே பிற்காலத்துல அவிக குன்ஸா சொல்லியிருப்பாங்க போல. பர்த் டைம்??

      நீங்க ஓஷோ டீட்டெய்ல்ஸ் தாங்க . நானும் பார்த்து வைக்கிறேன்.

      • அவருடைய பேச்சில் அவருடைய ஜாதகத்தை பத்தியும் அவருடைய ஜாதகத்தை பற்றிய அவருடைய சிறு வயதில் அவருக்கு ஜோதிடம் பார்த்த ஜோதிடரை பத்தியும் பேசியிருக்கிறார் சார். அவருடைய சில புத்தகங்களில் படித்திருக்கிறேன் ஆனால் அப்போதெல்லாம் எனக்கு ஜோதிட ஆர்வம் இல்லாததால் என் நினைவகத்தில் store ஆகவில்லை.நான் தேடிய வகையில் கிடைத்த தகவல் dob=11December1931 birth time 5.15pm to 5.45pm(ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்று உள்ளது ) birth place : kutchwada (bhopal ) madhya pradesh

      • வாங்க கணேசன் !
        பார்க்கலாம். ஜாதகத்துல ஓஷோ தெரியறாரா பார்க்கனும்ல?

  2. மேச லக்னத்தில் சுக்கிரன் சனி சேர்க்கை சார்,இவங்களுக்கு நெற்றிப் பொட்டில் அடித்தார்போல பலன் ஏதாவது சொல்ல முடியுமா சார்

    • சிவா!
      எலிக்கும் தவளைக்கும் கயிறு கட்டி விட்ட கதையா லைஃப் இருக்கும். ஒரு பக்கம் லக்சரி -இன்னொரு பக்கம் கஞ்சத்தனம்.

      இப்படியே சனி -சுக்ர காரகங்கள் ஒவ்வொரு பக்கம் இழுத்துக்கிட்டு இருக்கும். இதுல க்ரூயல் ஜோக் என்னன்னா ரெண்டு பக்கமும் ஆப்பு தான்.

      நியூட்ரலா வாழ முடிஞ்சா ஓகே.

  3. அது ஒரு அழகிய குளம். அந்த குளத்திற்கு அருகில் ஒரு மரபொந்து ஒன்று இருந்தது. அந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த தவளையும் எலியும் சந்திப்பது வழக்கம்.
    ஒரு நாள் எலி, தவளை நீரில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தது. உடனே எலி தவளையிடம், ” எனக்கும் நீச்சல் கற்றுத் தர முடியுமா? ” என்று கேட்டது. தவளையும், “நாளை உனக்கு நீச்சல் நான் கற்றுத் தருகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றது.
    அடுத்தநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை தன்னுடடைய காலை எலியின் காலுடன் சேர்த்து ஒரு கைற்றினால் கட்டிக்கொண்டது.
    அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவைகளைப் பார்த்து தாக்க வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்த போதும் அதனுடைய கால்கள் தவளையுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது.
    அந்த சமயம்… தண்ணீரின் மீது சுண்டெலி செத்து மிதந்ததைக் கண்ட கழுகு கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது. அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் பருந்தின் பிடியில் சிக்கியது.
    இரண்டு விருந்து கிடைத்த சந்தோசத்தில் பருந்தானது தவளையையும் கொன்று தின்றது.
    நீதி : நாம் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன் அதற்கு அவர்கள் தகுதியானவரா என்று யோசிக்கவேண்டும். இல்லையேல் தவளைக்கு நேர்ந்த கதிதான் நமக்கும் ஏற்படும்.

    • வாங்க சிவா !

      தவளைக்கும் -எலிக்கும் கயிறு கட்டினாப்லனு ஒரு வரியில சொன்ன மேட்டரை இப்பூடி எஸ்டாப்ளிஷ் பண்ணிட்டியளே..அந்த ரெண்டு கிரகத்துக்கும் உண்டான பரிகாரங்களை நூத்துக்கு நூறு செய்தா ரெண்டுமே கொஞ்சமாச்சும் சைடு கொடுக்கும்ல. டோன்ட் ஒர்ரி .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s