உங்களுக்கும் ராஜயோகம் : 23

4 இன் ஒன்

அண்ணே வணக்கம்ணே !
உங்களுக்கும் ராஜயோகம் தொடர் தொடர்கிறது . குருபலம் அவாளோட கூட்டுறவில் எப்படி ஒர்க் அவுட் ஆகும். அவா உங்களுக்கு உதவனும்னா நீங்க எப்படி இருக்கனுமோ அப்படி குரு உங்களை மாத்திருவாருன்னு சொல்லியிருந்தேன். குரு தர்ர ராஜயோகம் ஒர்க் அவுட் ஆகனும்னா அவாளுக்கு “எல” எடுத்தே ஆகனுமான்னு பயந்துக்காதிங்க.

ஒவ்வொரு கிரகத்துக்கும் 1008 காரகத்வம் இருக்கு . ஒரு கிரகம் உங்க ஜாதகத்துல கரீட்டா உட்கார்ந்தாச்சுன்னா தன்னோட 1008 காரகத்வத்துல ஏதோ ஒரு வகையில உங்களுக்கு லிஃப்ட் கொடுத்தே தீரும். ராஜயோகத்தை கொடுத்தே தீரும்.

அதை வச்சி வாழறதா அல்லது எவனோ முத மந்திரி தூக்கு போட்டு செத்தானே அப்படி சாகறதாங்கறத முடிவு பண்றது நீங்க தேன்.

நல்ல நினைவாற்றல் குரு காரகம் . கலைஞர் பொதுப்பணித்துறை மந்திரியா இருக்கும் போது சண்முக நாதனை பார்க்கிறார் . படக்குனு “ஓன்” பண்ணிக்கிறாரு. ச. நாதன் பேசிக்கலா ஒரு குறுக்கெழுத்தாளர் . என்னதான் குறுக்கெழுத்தாளரா இருந்தாலும் பேச்சை எழுத்துக்கு எழுத்து ரிட்டனா கொண்டு வரனும்னா நினைவாற்றல் கட்டாயம்.

திட்டமிடல் குரு காரகம். ( போட்டு தள்றது /வச்சு செய்றது /செஞ்சுர்ரது இதுக்கான திட்டமிடல் எல்லாம் செவ் காரகம். அதையும் இதையும் குழப்பிக்காதிங்க.

குருவை தெய்வீக கிரகம்னு சொல்றாய்ங்க.கெரகத்துல என்னய்யா தெய்வீகம்னு கேப்பிங்க.மனிதன்னாலே சுய நலம் தான். அந்த சுய நலத்தை ஒரு மனுஷன் தாண்டி யோசிச்சான்னா அவன் தெய்வமாயிர்ரான். குரு கிரகம் இந்த அற்புதத்தை செய்யும்.

இரக்கம் -கருணை இந்த ரெண்டுக்கும் இடையில் நிறைய வித்யாசம் உண்டு. இரக்கம் இன்ஸ்டன்டா வரும். போயிரும். இது சந்திர காரகம். வாத்யார் போட்ட சத்துணவு இந்த சாதிதான்.

கருணைங்கறது வேற . இது குரு காரகம்.பல காலமா ஒதுக்கி/தள்ளி/அழுத்தி வைக்கப்பட்ட மக்களுக்காக -அந்த மக்களே தன்னை புறக்கணிச்சாலும் விடாப்பிடியா அவியளுக்காவ உழைக்கிறது .மறுபடி கலைஞரையே இதற்கும் உதாரணம் காட்டனும்னா அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆறதுக்கு அவர் ஒர்க் அவுட் பண்ணதை சொல்லலாம்.

அவரோட ஜாதக ராசி என்னடான்னா திருமாவின் போர்வாளே அவாளே ஓப்பனா பாராட்ட தயங்கற சமயத்துல மோடிக்கு போட்ட ஜால்ரா. இதை கண்டிக்க கூட மனம் வராத திருமா .

குரு பலன் தரும் காலம் பற்றி ஒரு விதி உண்டு. சமீபத்துல முக நூல்ல கூட சொல்லியிருந்தன். குரு தன் தசை /கோசாரத்தில் மத்திய காலத்தில் பலன் தருவார்.

குருன்னாலே திட்டமிடல் தான்.வாத்யாரு இரக்கம் காரணமா சத்துணவு கொடுத்தாரு .இதுவே கருணை உள்ளவன் என்ன செய்வான்?
யார் யாருக்கெல்லாம் உண்மையிலயே சத்துணவு தேவையோ கறாரா வடிக்கட்டி “தகுதி” உள்ளவிகளுக்கு மட்டும் கொடுப்பான். அதுவும் எப்படி ? இருபது இருபத்தஞ்சு பள்ளிகளுக்கு மையத்துல இருக்காப்ல ஒரு குக்கிங் ஸ்பாட் வச்சு -கைப்படாம சமைச்சு இன் டைம் சப்ளை கொடுப்பான்.

சோத்தை போட்டாச்சுன்னு தூங்காம அந்த பிள்ளைகளோட பெற்றோர்கள் பற்றிய விவரங்களை திரட்டி அவியளுக்கு தொழிற்பயிற்சி /கவுன்சிலிங்/வங்கிக்கடன்/மானியம்னு கொடுத்து அவியளே சத்துணவு கொடுக்கிறாப்ல செய்வான்.கு.பட்சம் சில பல வருஷங்களுக்குள்ள டார்கெட் ரீச் பண்ணி “சோத்துக்கடைய “மூடிருவான்.

இதை இம்ப்லிமென்ட் பண்ணும் போது ஆரம்ப காலத்துல எல்லா பயலும் வண்டை வண்டையா திட்டுவான். திட்டம் சரியா இம்ப்லிமென்ட் ஆக ஆரம்பிச்சதும் “பரவால்லப்பா”ம்பான்.பிறவு? ஆங்..இதென்ன பிரமாதம் அப்படி ..அப்படி செய்திருந்தா இன்னம் பக்காவா செய்திருக்கலாம்னு உடையல் விட ஆரம்பிப்பான்.

குருவின் மத்யகாலம் பலன் கொடுப்பதோட சூட்சுமத்தை புரிஞ்சுக்கிட்டியளா?

இதயம்ங்கறது பம்பிங் ஸ்டேஷன். ரத்தத்தை உடல் முழுக்க பாய செய்வது இதயத்தோட வேலை.ரத்தத்தோட வேலை என்ன? உடலின் எல்லா பாகங்களுக்கும் க்ளூக்கோஸ்/ஆக்சிஜனை கொண்டு போறது.இதுல லயன்ஸ் ஷேர் மூளையோடது .மூளைக்கு 70% க்ளூகோஸ் தேவைப்படுதாம். மண்டைக்கு ரத்தம் பம்ப் ஆகலின்னா கண்ணெல்லாம் ப்ளாக் அவுட் ஆகி சொத்துன்னு விழுந்து வைப்பம். மூளை செல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா செத்துப்போக ஆரம்பிச்சுரும். டிக்கெட்டே கூட போட்டுருவம்.

குரு நெல்லாருந்தா இதயம் நெல்லா இருக்கும்.பம்பிங் பர்ஃபெக்டா நடக்கும். மூளைக்கு தேவையான க்ளூகோஸ் முழுமையா கிடைக்கும். அது பர்ஃபெக்டா வேலை செய்யும். பதட்டம் இத்யாதி இல்லாம கூலா வேலை பார்க்கும். எதையும் ப்ளான் பண்ணி செய்யற கப்பாசிடி வரும்.
இதயத்துலயே தகராறு இருந்தா என்னாகும்?

இது ஒரு வ்யூ .இன்னொரு பக்கம் வயிறுக்கும் குரு தான் காரகம்ங்கறாய்ங்க. எதையும் ப்ளான் பண்ணி செய்யனும்னா குரு பலம் தேவை .
வயிறுக்கும் -கில்மாவுக்கும் ஒரு லிங்க் இருக்கு . சாப்டதும் கண்ணை சொழட்டுதே காரணம் என்ன? சீரணம் நடந்தேற ரத்தம் வயிற்றுப்பகுதிக்கு பாயுது .இதனால மூளைக்கு போக வேண்டிய க்ளூக்கோஸ் குறையுது .

ஒரு கட்டிங் போட்டு -முட்ட முட்ட பிரியாணியை ஒரு கட்டு கட்டின கையோட ஒரு குட்டியும் வந்து பெல்லடிக்குதுன்னு வைங்க.
அப்ப என்னாகும்? மூளைக்கு போக வேண்டிய ரத்தமே டெஃப்சிட்ல இருக்கு .இதுல இடுப்புக்கு கீழவேற ரத்தம் பாய வேண்டிய நிலை .அப்ப என்னாகும்னா உயிர்களோட பேசிக்கல் இன்ஸ்டிங்டே கில்மா தானே . இயற்கையின் பார்வையில டாப் ப்ரியார்ட்டி இனப்பெருக்கம் தான். அதுக்கு வழி கில்மா தான்.ஆகவே சீரணத்தை ஒத்திப்போட்டுட்டு உடம்பு வேற வேலைக்கு ப்ரிப்பேர் ஆகுது .அப்ப என்னாகும்?

வவுத்துல உள்ளது செரிச்சு செரிக்காம -அழுகியும் அழுகாம -கியாஸ் ஃபார்ம் ஆக ஆரம்பிக்கலாம். உணவை செரிக்க சுரந்த அமிலம் இரைப்பையை புண்ணாக்கலாம்.

ஒரு ஜாதகத்துல குரு நெல்லா இருக்காருன்னு வைங்க. அவன் எதையும் ப்ளான் பண்ணி செய்வான். எது முன்னே எது பின்னேன்னு பார்த்து பார்த்து செய்வான்.

கரப்பான் பூச்சில்லாம் எடுத்ததுமே கில்மா தானாம். பிறவு தான் தண்ணிய தேடி குடிக்குமாம். அதுக்கு பிறவுதான் உணவு .ஏதோ ஒரு கிழம் கெட்ட காரியம் செய்யாம இருந்தா 100 வயசு வாழலாம்னு சொன்னதா முக நூல் எல்லாம் பேச்சா கிடக்கு .

அந்த எண்ணமே இல்லாம வாழ்ந்திருந்தா ஓகே. வாய்ப்பு இல்லாம வாழ்ந்திருந்தா மூளை செப்டிக் டேங்கை விட கேவலமா இருக்குமே.
இதயத்தை வவுத்துக்கும் – மூளைக்கும் – இடுப்புக்கு கீழவும் அல்லாட விட்டா என்னாகும்? நாளாவட்டத்துல பம்ப் ரிப்பேரா போகவும் வாய்ப்பிருக்கு. நான் ஏதோ பீலா விடறேனு நினைக்காதிங்க.

நாட்பட்ட வயிற்று கோளாறுகள் இதய நோய்ல முடியுதாம் .விறைப்பு தன்மையில் குறைபாடு இதய நோய்க்கான அறிகுறியாம்.
மனித உடல்ல ரெண்டு டிவிஷன் .ரீ ப்ரொடக்டிவ் /டைஜஸ்டிவ். ஒன்னு வேல செய்யும் போது அடுத்தது வேலை செய்யாது.ஆனால் டைஜஸ்டிவ் விங்கை ஃப்ரீஸ் பண்ணி ரீ ப்ரொடக்டிவ் விங்கை வேலை செய்ய வைக்கலாம்.ஆனால் நாளாவட்டத்துல ரெண்டுமே நொண்டியடிக்கும்.

அடுத்து குரு பலம் சாதியளவில் பிராமணர்களாய் இருப்பவர்கள் மூலமாத்தான் ராஜயோகத்தை கொடுக்கனும்னுல்ல.

பிராமணன் என்றால் பிரம்மத்தை அறிந்தவன். இன்னைக்கு எத்தனை பார்ப்பானுக்கு பிரம்மம்னா என்னனு தெரியும்? அன்னமய்யா பிரம்மம் ஒக்கட்டே பரபிரம்மம் ஒக்கட்டேனு பாடி வச்சிருக்காரு . பெரியார் கணக்கா “சமத்துவ”த்தை பத்தி கடைசி காலத்துல கச்சாமுச்சான்னு எழுதி விட்டுட்டாரு . இந்த கடுப்புலதான் அவரோட கீர்த்தனைகள் பொறிச்சு வச்சிருந்த செம்பு தகட்டையெல்லாம் குடுமிகள் உருக்கி ஒழிச்சுட்டானுவன்னு ஒரு சம்சயம்.

தன்னை உடலாக உணர்பவன் பல வருட சாதனைகளின் பலனாய் ஃப்ராக்சன் ஆஃப் செகண்ட்ல தன்னை ஆத்மாவாக உணர்ந்தால் அப்போது உணர்கிறான் . தனக்கும் பரமாத்மனுக்கும்/கடவுளுக்கும்/பிரம்மத்துக்கும் இடையில் எந்த வித்யாசமும் இல்லை என்பதை .

அப்படி உணர்ந்தவனே பிராமணன். இந்த அளவுகோலை வச்சு பார்த்தா எவனோ போட்ட ஸ்டேட்டஸை லாஜிக் கூட பார்க்காம குருட்டுத்தனமா ஷேர் பண்ணி விட்ட எஸ்.வி.சேகர்/ஒய்.ஜி.மகேந்திரா எல்லாம் பிராமணாளா? நோ நெவர்.

பஸ்ஸையோ ரயிலையோ பிடிச்சு லோ லோன்னு லொங்களிச்சு என்னை சித்தூர்ல வச்சும் பார்க்கலாம். அல்லது இந்த பதிவுலயும் பார்க்கலாம். அப்படித்தான் கடவுளும் . இந்த படைப்பிலும் பார்க்கலாம். உங்களிலும் பார்க்கலாம். உணரலாம்.

படைப்பில் படைத்தவனை உணரும் தன்மை இருப்பவன் “வாடிய பயிரை காணும் போதெல்லாம் “வாடுவான். கோர்ட்ல கேஸ் போடறம்னு வக்கணை பேசமாட்டான்.

அடிச்சு பிடிச்சு எதிர்கட்சி தலைவர்களை கூட்டி மோடியை பிடிச்சு காவிரியில தண்ணி விட சொல்லி தாலியறுப்பான்.
வள்ளுவன் கூட அந்தணர் என்போர் அறவோர்னு சொல்லியிருக்காரு . என்னை கேட்டா அறவோர் என்போர் அந்தணர்னு சொல்வேன்.
நிற்க இப்படியா கொத்த அறவோர் கண்ல நீங்க பட்டா லபக்குதான். இதைத்தான் ராஜயோகம்னு சொல்றது .

அடுத்த பதிவுல தொடர்ரேன்.

எச்சரிக்கை:

நம்ம நூல் விற்பனையில் அதிரடி சலுகைய அறிவிச்சது ஞா இருக்கும்னு நினைக்கேன். சலுகை தொடருதான்னு நேத்திக்கும் இன்னைக்கும் கூட மெயில் வருது .மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் ராசா..பிடிச்சாதான் காசு -பிடிக்காட்டி அன்புப்பரிசு . தூள் பண்ணுங்க..

Advertisements

8 thoughts on “உங்களுக்கும் ராஜயோகம் : 23

  1. வணக்கம் சார் கிட்டதட்ட 20 நாட்கள் ஆகிவிட்டது
    தங்கள் பதிவுகளுக்காக காத்திருந்து,
    தினமும் தங்களது வலைதளத்தை பார்ப்பது என்பது
    வாடிக்கையாகிவிட்டது
    முடிந்தவரை வாரத்திற்கு ஒரு பதிவாவது வெளியிடுங்கள்
    சார் நன்றி

    • வாங்க சிவா !
      ஒரு காலத்துல ஒரு நாளைக்கு 2 பதிவு போடுவன். அப்பல்லாம் வீட்ல நெட் ஆக்சஸ் கிடையாது. அடிச்சு எடுத்துக்கிட்டு போய் நெட் சென்டர்ல போடனும்.

      இன்னைக்கும் ஆசை என்னமோ இருக்கு . ஆனால் தள்ளிக்கிட்டே போயிருது . இனி நிச்சயமா வாரம் ஒரு பதிவு . இதான் டார்கெட் .

  2. நாட்பட்ட வயிற்று கோளாறுகள் இதய நோய்ல முடியுதாம் .விறைப்பு தன்மையில் குறைபாடு இதய நோய்க்கான அறிகுறியாம்.

    இதற்கென்று பிரத்யேகமாக பரிகாரங்கள் இருந்தால்
    பரிந்துரைக்கவும் சார் அல்லது மருத்துவரை நாடுவது
    சாலச் சிறந்ததா சார்

    • வாங்க சிவா !
      இதே தொடரில் பரிகாரங்கள்னு கடேசியில கொடுப்பம்ல அதை ஃபாலோ பண்ணிக்கனும். நீங்க 20-40 வயசுக்குள்ள இருந்தா / நோய் தலை காட்டாமயோ /லேசா தலை காட்டிக்கிட்டிருக்கும் போதோ பரிகாரங்கள் போதும். ஒரு வேளை நோய் பிடியில் இருந்தால் டூ இன் ஒன் . டாக்டரையும் பார்க்கனும். பரிகாரங்களையும் செய்யனும்.

  3. வணக்கம் அண்ணே,

    ராகு கேது ரெட்டை /ஒரே பாம்பின் இரு துண்டுகள் /இவர் காலத்தில் அவர் /அவர் காலத்தில் இவர் பலனளிப்பவர்கள். ராகு தரும் பலன் சுக போகங்களுடன் வரும் .உலகம் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கும்.
    அப்ப ராகு தசை இல்ல ராகு புத்தியில கேது பலனும், கேது தசை இல்ல ராகு புத்தியில ராகு பலனும் கிடைக்குமா?

    • வாங்க குமார் !
      எஸ். அப்படித்தான். உதாரணமா ராகு தசை/ ராகு புக்தி நல்லா போயிட்டிருக்கும். திடீர்னு அல்லல் அலைச்சல்னு படுத்தி எடுக்கும் .இது கேதுவோட உபயம்.

      இதே போல கேது தசை/கேது புக்தி படுத்தி எடுத்துக்கிட்டிருக்கும். திடீர்னு லாட்டரில வந்தாப்ல ஓரு பெரிய அமவுண்டு வரும்.

  4. //இனி நிச்சயமா வாரம் ஒரு பதிவு . இதான் டார்கெட்// .

    Superb ji!!!

    • வாங்க அசோக் !

      ஏதோ உ.வசப்பட்டு வாய விட்டுட்டன். ஆத்தாதான் இதை செயலாக்கனும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s