உங்களுக்கும் ராஜயோகம் :22

4

அண்ணே வணக்கம்ணே !
கிரகங்களை வரிசைப்படுத்தறதுல சில முறைகள் இருக்கு சூரியன், சந்திரன்,செவ்,ராகு,குரு,சனி,புத,கேது,சுக்ரன். இது ஒரு முறை.

சூ,சந்திரன்,செவ்,புதன்,குரு,சுக்கிரன்,சனி,ராகு,கேது இது ஒரு முறை.ஆனால் நான் முடிஞ்சவரை முதல் முறையையே ஃபாலோ பண்றேன். ஏன்னா மேற்படி வரிசையில தான் தசைகள் வரும்.

இந்த தொடர்ல சூ,சந்திரன்,செவ்,ராகு என்ற 4 கிரகங்களை பற்றி அனலைஸ் பண்ணியாச்சு. இந்த சாப்டர்ல குருவை பத்தி தான் எழுதனும்னு கன்ஃபார்ம் பண்ணிக்க பழைய பதிவையெல்லாம் ஸ்க்ரால் பண்ண வேண்டியதாயிருச்சு. அப்பத்தேன் இந்த வரிசை படுத்தும் முறை பத்தி யோசனை வந்தது .

ஓகே இந்த பதிவுல குரு தரும் ராஜயோகத்தை பார்ப்போம்.

ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு வர்ணம் உண்டு. இதன் படி குருவுக்குரிய வர்ணம் பிராமண வர்ணம்.
பிராமணாள் எப்படி ராஜயோகத்தை தரமுடியும்? நேத்திக்கு முக நூல் பதிவு ஒன்னை பார்த்தேன்.அமுகவாம் .அஃதாவது அந்தணர் முன்னேற்ற கழகம். தமிழ் நாட்ல 40 லட்சம் பிராமணால் இருக்காய்ங்களாம்.

இந்த 40 லட்சம் பேர் ஓட்டுப்போட்டு ஒரு ஆள் முதல்வராயிர முடியுமா? நிச்சயமா முடியாது . அப்ப ஜாதகத்துல குரு புஷ்கலமா இருந்தாலும் ராஜயோகம் கிடையாதான்னு கேட்டுராதிங்க.

அவா ஓட்டு போட்டு செயிக்க முடியாதுதான்.ஆனால் “லாபி” பண்றதுல அவா தான் புலிகள். கல்கி வார இதழ்ல கல்கியும் நானும்னு ஒரு தொடர் வருது. அதை படிச்சவிகளுக்கு தெரியும். தெறமை கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் நூலாடும் அவாளை எல்லாம் எப்படி ப்ரமோட் பண்ணியிருக்காய்ங்கன்னு.

அந்த தொடர்லயும் கலைஞருக்கு பயந்து இ.ஒ பின்பற்றியிருந்தாலும் “அவா” தான் சாஸ்தி. கலைஞர் மொத முறை தேர்தல்ல செயிச்சும் -எமர்ஜென்சி எதிர்ப்பு காரணமா பல்பு வாங்கி -அடுத்த தேர்தல்ல எம்.ஜி.ஆர் கிட்டே ஆட்சியை இழந்த எப்பிசோட்ல அவா ரோல் ரெம்ப முக்கியம்.

எம்.ஜி.ஆர் உலகம் சுற்றும் வாலிபன் ஷூட்டுக்கு வெளி நாடு போக அந்த ப்ராஜக்டுக்கு பி.ஆர்.ஓ இதயம் பேசுகிறது மணியன்.

அது நாள் வரை குற்றம் சொல்ல முடியாத குணாளனா இருந்த வாத்யாரை அன்னிய செலாவணி மோசடிங்கற வலையில சிக்க வச்சு -சென்டர்ல கொண்டு போய் சரண்டர் பண்ணி -ஊரை ரெண்டாக்கி -இடையில கெடா வெட்டி பொங்கல் வச்சது அவா தான்.

பதிமூனு வருசமா கலைஞர் வனவாசம் அனுபவிக்க காரணம் தில்லியில ஒரு லாபி இல்லாததுதான். இதை புரிஞ்சுக்கிட்டு தான் கலைஞர் சென்டர் ரிலேஷன்ஸ்ல அடக்கி வாசிக்க ஆரம்பிச்சாரு .

தமிழ் நாட்லயாச்சும் பெரியார் பயத்துல பிராமண லாபி அடக்கி வாசிக்கும்.ஆனால் வட நாட்டு பக்கம் போனா சீன் ரிவர்ஸ். இப்ப எங்க பக்கமும் ரெம்ப பவர் ஃபுல். ரெண்டு தெலுங்கு மானிலத்துக்கும் சி.எம் என்னமோ சூத்திராள் தான்.ஆனால் கவர்னர் அவா. பலன் ? பிராமண வாரியம்.ரெண்டு ஸ்டேட்லயும்.

அவா உங்களுக்காவ எப்ப லாபி செய்வாங்க?

நீங்க பார்க்கவாச்சும் அவா மாதிரி இருக்கோனம். பிராமண லட்சணம்.அய்யராத்து மாமிய தாயா / பொண்ணை தங்கையா பார்த்து நடக்கனும். கடவுள் நம்பிக்கை உள்ளவரா இருக்கனும். வேதங்களை ஏத்துக்கனும்.கோவில் /குளம்/யாகம்/ஹோமம்/புராணம் /இதிகாசம் இதை எல்லாம் கேள்வி கேட்காம ஏத்துக்கறவரா இருக்கனும். அவாளுக்கு வர்ணாசிரம (அ)தர்மமும் ,மனு (அ)தர்மமும் கொடுத்திருக்கிற ப்ரிவெலெஜஸை அப்படியே ஏத்துக்கற கிராக்கியா இருக்கோனம்.

இதெல்லாம் எப்ப அமையும்? குரு உங்க ஜாதகத்துல பவர் ஃபுல் பொசிஷன்ல உட்கார்ந்திருக்கனும்.அப்பத்தேன் அமையும்.

சேரிப்பிள்ளைக்கு உப நயனம் பண்ணது கூட ஒரு அவா தான் (பாரதி) ஆனால் அந்தாளு கெட்டுப்போன பார்ப்பான். மாமூல் வாழ்க்கையில இருக்கிற அவா “செயிக்கிற குதிரை மேல “தான் காசு கட்டுவோ.

நெல்ல ஞா சக்தி ,பெரியவான்னா கவுரதை ,ப்ளானிங்லாம் உங்களுக்கு இருக்கோனம். முக்கியமா வேதம்,புராணம் ,இதிகாசம் இத்யாதியில இருந்து பொருத்தமான நேரத்துல பொருத்தமான கோட்ஸை வாந்தி பண்ணனும்.

குடும்பத்துல அப்பன் குடிகார நாயா இருந்தாலும் -அம்மாக்காரி அவுசாரியா இருந்தாலும் ரெபல் ஆகாம கமுக்கமா இருக்கோனம். தெருவுல கொலையே நடந்தாலும் ஓடி வந்து வீட்டுக்குள்ள தாப்பா போட்டுக்கோனம், சோத்துக்கு இருக்கோ இல்லையோ மந்திரவாதி கணக்கா செண்டு செண்டா பூவாங்கி பூஜை பண்ணனும்.

வீட்டு பொம்பளைங்களுக்கு ஆஸ்மா இருந்தாலும்,ப்ராங்கட்டிஸ் இருந்தாலும் வாரத்துக்கு 3 தபா வீடு பூரா அலம்பி விடனும். அப்பப்போ கணபதி ஹோமம் ,திவசம்னு அய்யரை வீட்டுக்கு கூப்டு செலவழிக்கனும்.

உங்களை போல “உருப்படற ” பசங்களோட மட்டும் சகவாசம் வச்சுக்கனும். பசி,பட்டினிய கூட சகிச்சுக்கிட்டு கிடக்கனும். எல்லாத்தையும் அம்பாள் பார்த்துப்பா. எங்க குடும்பத்துக்கும் ஒரு நல்ல நேரம் வரும் மாமான்னுக்கிட்டு கிடக்கனும்.

அஞ்சு வட்டி பத்து வட்டிக்கு வாங்கியாவது நவகிரக ஸ்தலம், அறுபடை வீடு,திருப்பதின்னு எங்கெங்கும் இருக்கும் அவாளுக்கு படியளந்துட்டு வரனும். மொதலாளி உங்களை /உங்க உழைப்பை சுரண்டோ சுரண்டுன்னு சுரண்டினாலும் அவனுக்கு ஜல் ஜக் போட்டுக்கிட்டு அரசு தேர்வுகளுக்கு ப்ரிப்பேர் ஆயிட்டிருக்கனும்.

இந்த கருமாந்திரத்தை எல்லாம் மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டு அவா ஆத்துக்கு ஒட்டடை அடிச்சு ,கக்கூஸு அடைச்சுக்கிட்டா அடைப்பை நீக்கி “பிரமணை” தூக்கோனம்.

இந்த நிபந்தனைகளை எல்லாம் பூர்த்தி பண்ணா எட்டு இடமும் குளிர்ந்து இருக்கும் போது -அவா சொந்தம் /பந்தம்/ஒன்னு விட்ட உறவு / கசின் இப்படி யாரும் சூட்டபிள் கேண்டிடெட் இல்லின்னா உங்களை லாபி பண்ணி ரெக்கமெண்டேஷன்ல ஒரு இடத்துல செருகி விடுவோ.

குருபலம் இந்த கேடு கெட்ட வாழ்க்கைய வாழ்ந்தாதான் ராஜயோகத்தை கொடுக்குமான்னு நீங்க பல்லை கடிக்கிறது கேட்குது.

டோன்ட் ஒர்ரி குரு பலத்தை வச்சு எப்படி ராஜயோகத்தை கரெக்ட் பண்றதுங்கற சூட்சுமத்தை அடுத்த பதிவுல சொல்றேன்.

Advertisements

7 thoughts on “உங்களுக்கும் ராஜயோகம் :22

 1. அரசு வேலைக்கு பத்து வருடமாக ட்ரை பண்ணிட்டே இருக்கேன் சார் நல்ல வேளை செலக்ட் ஆகல குரு பகவான ஆக்டிவா வச்சிருக்கோம்னு ஒரு சந்தோஷம் மகிழ்ச்சி

  • வாங்க சிவா !

   தொடர்ந்து குரு சரியில்லைன்னா என்ன பரிகாரம்ங்கற மேட்டரையும் தருவன்ல.அதை ஃபாலோ பண்ணிக்கிட்டா கவர்ன்மென்ட் ஜாப்க்கு வாய்ப்பு அதிகரிக்கும். வெய்ட்.

 2. கோவில் குளத்துக்கு போறதுண்டு சார் முடிந்தால் உண்டியலில் காணிக்கை போடுவேன் இல்லைனா வெறுமனே கும்பிட்டுவிட்டு வருவேன் மத்தபடி அவாள கவனிக்க மாட்டேன் இது குத்தமா சார்

  • சிவா !
   அய்யர் வசதியானவரா இருந்தா குத்தமில்ல. ஒரு வேளை சாப்பாட்டுக்கே சிரம படறவரா இருந்தா குத்தம் தான்.

 3. குரு ஒரு வீட்டில் மற்ற கிரக சேர்க்கை இல்லாமல் தனியாக இருந்தால் அவ்வீட்டை கெடுத்துவிடுவார் என்பது சரிதானா ?
  மகர ராசிக்கு குரு நன்மை செய்யும் கிரகம் இல்லையாமே. எப்படி ராஜ யாேகம் அளிப்பார்.?

  • வாங்க சிவா !

   ஜோதிடம் என்பது ஆன்மீக சிகரங்களை நோக்கிய பயணம்.ஆனால் அது முழுக்க முழுக்க லோகாயதமானதாக மாற்றப்பட்டுவிட்டது . நல்ல லீட் கொடுத்திருக்கிங்க.

   சீக்கிரமே தனிப்பதிவா போடறேன். ப்ளீஸ் வெய்ட்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s