உங்களுக்கும் ராஜயோகம் : 21

dad 50

அண்ணே வணக்கம்ணே !
நான் என்ன செய்யனும்னு என்னை விட “ஆத்தாவுக்கு” பர்ஃபெக்டா தெரியும். நான் என்ன செய்துக்கிட்டிருக்கேங்கறது ஒரு குன்ஸா புரிஞ்சாலும் நாமளும் ஆஃப்டர் ஆல் மன்சன் தானே! இந்த தொடரை டீல்ல விட்டுட்டு குரு பெயர்ச்சி அது இதுன்னு டைவர்ட் ஆகி ஏறக்குறைய ஒரு மாசம் ஆயிருச்சா..

சனம் யாரும் என்ன பாஸ் ..இந்த தொடரையும் ஊத்தி மூடிட்டிங்களானு கேட்கவே இல்லை. படக்குனு ஒரு டவுட் வந்திருச்சு. ஒரு வேளை ராஜயோகம்ங்கறதெல்லாம் சாமானிய சனத்துக்கு எட்டாத மேட்டரா? வெட்டியா எழுதிக்கிட்டிருக்கமானு சந்தேகம் வந்துருச்சு. எதுக்குனா நல்லது க்ளியர் பண்ணிக்குவம்னு ஒரு பதிவே போட்டு கருத்து கேட்டன்.

பத்து பேராச்சும் கருத்து சொன்னாதான் தொடர் தொடரும்னு பயம் கூட காட்டினேன். ஒன்னம் பேரல.ஆனால் நண்பர் சக்தி வேல் நான் ஒருத்தன் சொன்னா அந்த சக்தியும் -வேலவனும் ஒரே குரல்ல சொன்னாப்லனு ஒரு கமெண்ட் போட்டிருந்தாரு . சுஜாதா ஒக்காபிலரியில சொன்னா “சுஸ்தாயிட்டன்” (ஸ்வஸ்த் =ஆரோக்கியம் )

கடந்த சாப்டர்ல ராகு எப்படியெல்லாம் ராஜயோகத்தை தரக்கூடும்னு சொல்லியாச்சு. இந்த சாப்டர்ல ஜாதகத்துல ராகு பல்பு வாங்கியிருந்தா ராஜயோகம் பெற என்ன செய்யனும்?னு சொல்லோனம்.

நான் எல்லாம் ஆளை பார்த்ததுமே “பார்ட்டி ஜாதகத்துல ராகு பல்பு போல “னு கரெக்டா கெஸ் பண்ணிருவன். விவரம் தெரிஞ்சவிக ஜாதகசக்கரத்துல ராகு எங்க இருக்காருன்னு பார்த்து டிசைட் பண்ணிரலாம்.

இது ரெண்டுமே கைவராதவிக என்ன செய்ய?

1.உங்க நிறத்தை பாருங்க. கருப்புன்னதும் பயந்துக்காதிங்க. கருப்புல எத்தனையோ விதம் இருக்கு. சூட்சுமமா பார்த்தா கொஞ்சம் நீலம் கலந்தாப்ல தெரியும்.
2.உங்க ஃபிசிக்கை பாருங்க. ஒன்னு வயசுக்கேத்த வளர்ச்சி இருக்காது .அல்லது தாறுமாறா சதை போட்டிருப்பிங்க
3.அன் வாரன்டட் மோஷன்ஸ்/ வாமிட்டிங் சென்சேஷன்
4.பிறமதத்தவர் மேல இனம் புரியாத கடுப்பு/துவேஷம்
5.ஈசிமணி மேல கவர்ச்சி – சட்ட விரோதமான வழியில சம்பாதிக்கிறவன்லாம் நல்லாத்தானே இருக்காங்கற ஃபீல் -நாமளும் செய்தா என்ன என்ற எண்ணம்

6.சினிமா மேல ஒரு கவர்ச்சி /போதை / சினிமாவுக்காக அதிகம் செலவழிக்கிறது /அதீத முக்கியத்துவம் தர்ரது .
7.பிக் பாக்கெட் /செயின் அறுப்பு /கதவை உடைத்து கொள்ளை இத்யாதி சம்பவத்துல விக்டிமா இருக்கிறது
8.நல்லா போயிட்டிருக்கும். திடீர்னு ஒரு அவமானம் /அவப்பெயர் ,விதவை பெண் ஒருவரால் பல்பு
9.ஓரப்பார்வை பார்க்கிறவிக ,பூனைக்கண் கொண்டவிகளால நஷ்டம்/கஷ்டம்
10.லைஃப் பார்ட்னரோட செயல்பாடுகள் சந்தேகாஸ்பதமா தோன்றது – ஒரு நாளில்லை ஒரு நாள் கையும் களவுமா பிடிக்கனுங்கற எண்ணம்
11.பாம்பு /பூச்சி பொட்டு கடிச்சுர்ரது / ஃபுட் பாய்சன்/மெடிக்கல் ரியாக்சன்

மேற்படி 11 விஷயத்துல பாதி சூட் ஆனாலும் உங்க ஜாதகத்துல ராகு பல்பு வாங்கியிருக்காருனு அருத்தம்.

ஆனாலும் இந்த சமயம் பார்த்து எலீக்சன் வருது .கு.பட்சம் கவுன்சிலரா நின்னே ஆகனும்னா என்ன பண்ணனும்?

1.நோட்டிஃபிகேஷன் வரதுக்கு மிந்தியே அன்னிய மதத்தார் வாழும் பகுதிகளை விசிட் அடிச்சு உங்களால முடிஞ்ச அடிப்படை வசதிய செய்து கொடுங்க.
2.மதராசா ,மெஷினரிகள் நடத்தும் பள்ளிக்கு உங்களால முடிஞ்ச நன் கொடைய கொடுங்க.
3.இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை.
4.எலீக்சன் முடிஞ்சு ரிசல்ட் வர்ர வரைக்கும் லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது.
5.இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.எலீக்சனுக்கு மிந்தின ராத்திரி ஆப்பரேஷன்ல டைரக்டா இன்வால்வ் ஆகாதிங்க.

6.சொந்த முதலீட்டில் / நீங்களே டெசிஷன் மேக்கர் என்ற நிலை இருந்தால் மேற்சொன்ன தொழில்கள் கூடவே கூடாது. இதுவே நீங்கள் ஒரு ஊழியர் மட்டுமே என்றால் பரவாயில்லை.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது.
7.பையில எப்பவும் க்ளூக்கோஸ்/ எலக்ட் ரால் பாக்கெட்லாம் வச்சுக்கோங்க. டீ ஹைடரேஷன் ஆயிராம பேலன்ஸ் பண்ணிக்கிட்டே இருங்க.
8.மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. சொந்த ட்யாக்னைஸ்/ சொந்த ப்ரிஸ்கிரிப்ஷன் வேண்டாம். ரியாக்ஷன் நடக்கலாம்.
9.வெளி இடங்களில் உணவு உண்பதை தவிர்க்கவும். குடி நீர் கூட கம்பெனி மாத்தாதிங்க.
10.கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு/முக்கியமா சட்ட விரோத வியாபாரம் செய்றவிக சங்காத்தம் வேணாம் .ஷேர் மார்க்கெட் வேண்டவே வேண்டாம்)

11. கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.
12.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.
13.உலக மகா கொள்ளைகள், கொள்ளைக்காரர்கள் ,உலக மகா சதிகள் போன்ற புத்தகங்கள் படித்தல்.
14.மேஜிக் கற்றுகொள்ளுதல், அன்னிய மொழி கற்றல்.
15.தியானம் யோகம் பயிலுதல், யோகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படித்தல் இவை நல்ல பரிகாரங்களாகும்.

16,மேலும் தனித்திருக்கும் போது அறையில் குறைவான வெளிச்சத்தை மெயின்டெய்ன் பண்ணலாம். நைட் ஷிஃப்ட் ட்யூட்டி வந்தா தாராளமா ஏத்துக்கலாம்.
17.தினசரி ஒரு மணி நேரம்-வாரம் ஒரு தினம் காவி உடை அணியவும் . இயன்றவரை சன்யாசி போலவே வாழ வேண்டும். எளிமையிலும் எளிமையான வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளவும்.
18.பிரச்சார வாகனத்து டேஷ் போர்ட்ல மும்மதங்களின் அடையாளங்களையும் வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு:
ராகு பல்பு வாங்கியதன் லட்சணங்கள் இல்லாதவர்களும் இந்த பரிகாரங்களை பின்பற்றலாம். ராகுவின் பலம் சேமிக்கப்பட்டு ஓட்டுகள் குவியும்.

dad

6 thoughts on “உங்களுக்கும் ராஜயோகம் : 21

 1. 4.எலீக்சன் முடிஞ்சு ரிசல்ட் வர்ர வரைக்கும் லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது
  // இது சற்று புரியவில்லை சார் விளக்கம் தேவை நன்றி

  • வாங்க சிவா !
   ராஜயோகம்னா என்ன ? தேர்தலில் வெற்றி தானே . ஜாதகத்தில் ராகு பலம் போதாதவர்கள் ஏற்கெனவே லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் செய்து வந்தால் ராகு லோ ஓல்ட்டேஜ் ஆகி இருப்பார். தேர்தலில் தோல்விக்கு வாய்ப்பிருக்கும். எனவே தேர்தல் முடியும் வரை மேற்படி தொழில்களில் இருந்து விலகி நிற்பது ராகு பலத்தை சேமிக்கும்/கு.பட்சம் கெடுபலன் குறைக்க பயன்படும்.

 2. ராகு பற்றிய பதிவு அருமை சார்!

  தங்களின் “உங்களுக்கும் ராஜயோகம்” பதிவுகளை நான் தவறாமல் படித்து வருகிறேன் ஐயா!

  ஜோதிட ஆர்வம் கொண்ட நண்பர்களுக்கும் பதிவுகளை படிக்க ஊக்குவிக்கிறேன்! கண்டிப்பாக தொடர்ந்து பதியுங்கள் ஐயா! ஜோதிடம் குறித்த புரிதல் அனைவரும் கிடைக்க வேண்டும்!

  /பிறமதத்தவர் மேல இனம் புரியாத கடுப்பு/துவேஷம்/

  மதம் மாத்த வர்ற கோஷ்டிகள பாத்தா தான் சார் கடுப்பு உச்சத்துக்கு போய்டுது….அவய்ங்களோட வியாபார தந்திரம் புரியாம வலையில விழற அப்பாவி இந்துக்கள நெனச்சா கஷ்டமா இருக்கு….

  இதனால நம்ம நாட்டு கலாச்சாரமே சீரழியுதேன்னு கவலையாயிருக்கு….

  என்ன செய்யட்டும்!

  • அசோக் !
   பில்லர் போட்டு எழுப்பின பில்டிங்கை அவ்ள சீக்கிரம் ஆரும் பெயர்க்க மிடியாது . இந்துமதத்தின் பில்லர் -அடி நாதம் என்னன்னு சனத்துக்கு சொல்லிப்போடுங்க..

   பில்லர் இல்லாத பில்டிங் எல்லாம் காலனியில இருக்கிறதை விட ஷிஃப்ட் ஆகி தொலையறதே பெட்டர்னு சந்தோசப்படுங்க.

   இந்து மதத்தின் பில்லர் இறை என்பதும் – மனிதர்களுடனான அதன் ஊடாடுதல் குறித்தும் எந்த வரையறையும் செய்யப்படாததே.

   • மிக்க நன்றி சார்!

    எல்லாம் அவன் செயல்!
    வாழ்க வளமுடன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s