உங்களுக்கும் ராஜயோகம் :19

Gopalapuram

அண்ணே வணக்கம்ணே ! ராஜயோகம்னா தெரியும்ல? ஆட்சி/அதிகாரம். இந்த ராஜயோகத்தை ராஜகிரகங்கள் மட்டும் தர்ரதில்லை . எல்லா கிரகங்களும் தரமுடியும். ஏன்னா காலமாற்றம் அப்படி இதை எல்லாம் ஏற்கெனவே சொல்லி தொலைச்சுட்டதால ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்டு.

கடந்த பதிவுல செவ் பல்பு வாங்கியிருந்தா என்னெல்லாம் நடக்கும்? நடக்கறதை நடக்க விட்டா அதுவே எப்படி பரிகாரமா ஒர்க் அவுட் ஆகுதுன்னு சொல்லியிருந்தேன் ( நம்ம வாழ்க்கையில இருந்தே )

இந்த பதிவுல பாய்ண்ட் டு பாய்ண்ட் பரிகாரங்கள் தான். பதிவுக்கு போயிரலாமா?

1.போலீஸ் ஆஃபீசர் போன்ற கெட் அப்,ஹேர் ஸ்டைல் ,மீசை என்று மாறவும். சஃபாரி சூட் அணியலாம்.(பாக்கு நிறம்) கூலிங் க்ளாஸ் அணியும் வழக்கம் இருந்தால் பிரவுன் கலர் .தொப்பி அணியும் வழக்கம் இருந்தால் பிரவுன் கலர் .மார்ஷல் ஆர்ட்ஸ் பழகவும்.கு.பட்சம் ட்ராக் சூட் போட்டு நடை பயிற்சி .

2.கழுத்தில் முருகன் கையில் உள்ள வேல் டாலர் /பாக்கு நிற கயிற்றில் கோர்த்து அணிதல்.கந்தர் சஷ்டி கவசத்தில் “குத்து குத்து கூர்வடிவேலால் என்று துவங்கும் பகுதியை மட்டுமாவது மனப்பாடம் செய்து அவ்வப்போது சொல்லி வரவும்.ரத்த தானம் செய்க. பிரவுன் கலர் பர்சில் 12 கைகளிலும் ஆயுதம் தாங்கிய முருகன் படம். மொபைல்/பிசி/லேப்டாப்ல எரிமலை,தீவிபத்து ,யுத்தம் தொடர்பான ஸ்க்ரீன் சேவர் வச்சுக்கங்க.
4.வீட்டு ஹாலில் போர்க்கள காட்சி கொண்ட போஸ்டர்.போர் வீரன் சிலை .ஹாலில் உள்ள சோஃபா கவர் /ஸ்க்ரீன்ஸ் எல்லாமே பிரவுன் நிறம். இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை தாயும் செய்தல் நலம்.கூட்டு தொகை 9 வர்ர வாகனங்களை தவிர்க்கவும்.வண்டி நிறம் பிரவுன் எனில் நல்லது . வண்டியில் எங்கேனும் ஏதேனும் ஒரு ஆயுத வடிவத்தை ஸ்டிக்கரிங் செய்து கொள்ளவும்.

5.முதல் குழந்தையை உடனே பெற்றுக்கொள்ளவும் (ப்ளான் பண்றது /தள்ளி போடறதுல்லாம் வேண்டாம்) .மனைவி கருவுற்றிருக்கிறார் என்று தெரிந்த பின் டேக் ஆல் ப்ரிக்காஷன்ஸ்.ஒரு வேளை முதல் கரு அபார்ட் ஆயிட்டாலும் பொஞ்சாதிக்கு நல்ல பூஸ்ட் கொடுத்து அடுத்த முயற்சியில் குழந்தை பெற்றுக்கொண்டு விடவும்.முருகன் கை வேலை தியானிக்கவும்.வேல் பூசை செய்யவும்.குழந்தைகளுக்கும் முருகன் பெயர்களையே சூட்டவும்.இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை குழந்தைகளும் செய்தல் நலம்.

7.சமையலுக்கு நல்லெண்ணெய் (செக்கு) உபயோகிக்கவும்.ரத்த விருத்தி -ரத்த சுத்திகரிப்புக்காக ப்ராக்டிக்கலாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்.(மருத்துவர் ஆலோசனை பெற்று) உ.ம் சிகப்பு நிற காய்கறிகள் அதிகம் சேர்ப்பது ,ரேப்பிட் ப்ரீத்திங்,பிராணயாமம், வியர்வை வெளிப்படும்படி நடை பயிற்சி ,யோகா இப்படியாக. இடுப்பில் ஏதேனும் ஆயுதம் ( ஃபேன்சி ஸ்டோர்ல கிடைக்கும் -கழுத்துல போட்டுக்க விற்பாங்க. அதை இடுப்புல அரை ஞான் கயிற்றில் கட்டி கொள்க)இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை மனைவி/கணவரும் செய்தல் நலம்.

8.வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், சத்ரிய குலத்தினர், சமையல் , போட்டி, ஸ்போர்ட்ஸ், , பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம் ஆகிய விஷயங்களில் முடிந்தவரை விலகி இருங்கள் தவிர்க்க முடியாத பட்சம் அலார்ட்டா டீல் பண்ணுங்க.

வருடம் ஒரு முறை / தேர்தலுக்கு 45 நாட்களுக்கு முன் ஒரு சேவல் ஒன்றை விலைக்கு வாங்கி முருகன் கோவிலுக்கு சென்று 9 சுற்று சுற்றி -9 ஆவது சுற்றில் அந்த சேவலை அங்கேயே விட்டு விட்டு /அல்லது கோவில் மேலாளரிடம் ஒப்படைத்து விட்டு வந்துவிடவும்.

9.சொத்து, சேமிப்புக்க‌ள்,முதலீடு ,தூர‌பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்தொடர்பான டாக்குமென்ட்ஸ் பாக்கு நிற ஃபைல்ல போட்டு ஃபைல் மேல வேல் ஸ்டிக்கர் ஒன்னு ஒட்டி வைங்க. தூரப்பயணத்தின் போது பிரவுன் கலர் ஏர் பேக் . கூட்டு தொகை 9 வர்ர வாகனங்களை தவிர்க்கவும்.இந்த பதிவில் வரிசை எண் 1 க்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை தந்தையும் செய்தல் நலம்.

12.படுக்கையறையில் போர்க்கள காட்சி உள்ள போஸ்டர், போர் வீரன் சிலை .படுக்கை அறையின் பெயிண்ட்,பெட் ஸ்ப்ரெட்,பில்லோ கவர் அனைத்தும் பாக்கு நிறம். செருப்பும் இதே நிறம்.

(குறிப்பு: என்னடா சீரியல் நெம்பர் எகிறியிருக்கேனு கன்ஃபீஸ் ஆயிராதிங்க. இது சீரியல் நெம்பர் இல்லிங்ணா செவ் ஜாதகத்துல லக்னாத் எத்தனையாவது வீட்ல நிற்கிறாருனு காட்டுதுங்ணா)
ஸ்..அப்பாடா அடுத்த பதிவுல ராகு ஜாதகத்துல வலிமையா இருந்தா எப்படி ராஜயோகம் கொடுப்பாரு..பல்பு வாங்கியிருந்தா எப்படி ஆப்படிப்பாருன்னு பார்ப்பமா?
உடுங்க ஜூட்டு

9 thoughts on “உங்களுக்கும் ராஜயோகம் :19

 1. குருபெயர்ச்சி கிட்ட வந்துடுச்சி. இனி ஜெ வுக்கு ஜெயந்தானே .?

  • வாங்க சிவா !
   தெய்வங்களுக்கெல்லாம் ஜோசியம் சொல்றதில்லைன்னு முடிவு பண்ணிட்டமே ..தெரியாது போல.

   • ஜாேதிட விதிகளுக்கு அப்பாற்பட்டு வாழ்றவங்கள தெய்வங்கள்னே முடிவு பண்ணிட்டாப்ல இருக்கு…

   • வாங்க சிவா !
    பார்ப்பம் .ஜூலை 5 க்கு பிறகாவது தகிரியம் வருகிறதா என்று ?

 2. செவ்வாய் 6 ல் இருந்தால் என்ன செய்வதென்று செல்லவில்லையே ஐயா!

  (கடக லக்னம், 6 ல் செவ்வாய்,சூரியனோடு சேர்ந்து அஸ்தங்கமடைந்துள்ளார்)

  • வாங்க அசோக் !
   செவ் 6 லிருந்தால் அது செவ் தோஷம் அல்ல என்பதால் விட்டிருப்பேன். அதே நேரம் கடகலக்னத்துக்கு செவ் யோக காரகன் .இவர் ஆறில் இருப்பது நல்லதல்ல.

   இது தொழில்/ உத்யோகம் /வியாபாரம் விஷயங்களில் சத்ரு -ரோக -ருண உபாதைகள் ஏற்படலாம். மன அமைதி இராது .குழந்தை பிறப்பிலும் சிக்கல் வரலாம்.

   பரிகாரம்:

   எலக்ட் ரிக்கல் பொருட்களை தவணையில் வாங்கி கிட்டே இருங்க. முதலிரவு முதல் குழந்தை பிறப்பு வரை கடன் வாங்கின காசையே செலவழிக்கவும்.பேர் புகழுக்கு ஆசைப்பட வேண்டாம்.

   • மிக்க நன்றி ஐயா….இனி ரத்த தானம் செய்வதோடு இதையும் சேர்த்து செய்கிறேன்…

 3. ஐயா, நான் கடக லக்னம் வர்கோத்தம செவ், சுக் , கேது 9ல் மூன்று கிரகங்களும் ரேவதி 4ம் பாதம். செவ் பல்ப்பா. திசை எப்டி .

  • சுரேஷ்குமார் !
   ஸ்தூலமா அங்கே 3 கிரகம் இருந்தாலும் கேது தான் பவர்ஃபுல்லா இருப்பாரு. ரஜினி கணக்கா தோள்ள ஜோல்னா பை மாட்டிக்கிட்டு மாசம் ஒருக்கா சித்தர் சமாதி அது இதுன்னு சுத்திக்கிட்டு வாங்க. சமாளிச்சுரலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s