ஆறில் சுக்கிரன் என்னா செய்வாரு?

Image

அண்ணே வணக்கம்ணே !
ஜாதகத்துல ஆறாவது பாவம் சத்ரு ரோக ருண உபாதைகள் காட்டுமிடம்.தாய்மாமனை காட்டுமிடம்,வயிற்றை காட்டுமிடம். இங்கன  சுக்கிரன் இருந்தால் என்ன பலன்னு பார்க்கோனம்னா சுக்கிர காரகங்கள் என்னன்னு தெரியனும்.
சுருக்கமா சொன்னா சுக்கிர காரகங்களால ஜாதகருக்கு கடன்,நோய்,வழக்கு விவகாரம்லாம் ஏற்படனும். சுக்கிர காரகங்கள் :
ஹவுசிங்
ஆட்டோமொபைல்ஸ்
அழகு,அலங்காரம்
ருசிக்கே தின்னும்,பருகும் பண்டங்கள் ,திரவங்கள் ( சரக்கை தவிர)
டெக்ஸ்டைல்ஸ்
ஃபர்னிச்சர்ஸ்,ஃபேன்சி,லக்சரி
பிக்னிக்,டூர்,கெட் டு கெதர்,கண்ணாலம் போன்ற சுபகாரியங்கள்
கலைகள்
பெண்கள்,கில்மா
மேற்சொன்ன விசயங்கள்ள தகராறு வரலாம், மேற்படி விஷயங்களால கடன் நோய் ஏற்படலாம். எப்படின்னு சுருக்கமா பார்க்கலாம்.
ஹவுசிங்:
வீடு கட்டற வசதி இருந்து அ வீட்டுக்கடனை தீர்க்கிற அளவுக்கு சம்பாதனை இருந்து கட்டினா சரி. அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்து தானும் வீடு கட்ட ஆரம்பிச்சா கடன், கடனை நினைச்சு நோய், சொன்ன சமயத்துக்கு கடனை திருப்பலின்னா வழக்கு வரும். முக்கியமா கடனை நினைச்சு நினைச்சு முடியாமை இயலாமை இத்யாதி கூட வந்துரலாம்(இழந்த சக்தி வைத்தியர்களின் விளம்பரம் பார்த்ததில்லையோ)
ஆட்டோமொபைல்ஸ்:
மனித உடலின் உஷ்ண நிலை 98.4 டிகிரி. இந்த டெம்பரேச்சர்ல உயிரணுக்கள் வாழமுடியாது. இதனாலதேன் இயற்கை ஆணின் விதைகள் பாடிக்கு வெளிய படைச்சிருக்கு. வாகனத்துல (தொடர்ந்து )பயணிக்கும் போது விதைகள் உடலோட ஒட்டி உறவாடி பாடி டெம்பரேச்சருக்கு வந்துரும். இதனால உயிரணுக்கள் குறைஞ்சுரலாம். துரிதஸ்கலிதம் கூட ஏற்படலாம்.
அழகு,அலங்காரம்:
புருசன் செந்தில் மாதிரி இருந்து பொஞ்சாதி இஷ்டாத்துக்கு அழகு அலங்காரம்னு இறங்கினா சந்தேகப்பேய் வந்து இறங்கிரும்ல.
ருசிக்கே தின்னும்,பருகும் பண்டங்கள் ,திரவங்கள் ( சரக்கை தவிர)
ஜங்க் ஃபுட், பேக்ட் ஃபுட் இத்யாதிதான் வயித்துக்கு எமன்னு சொல்றாய்ங்க. சுக்கிரன் ஆறில் இருந்தா இதையெல்லாம் கிரெடிட் கார்டை உபயோகிச்சாவது வாங்கி திங்க தோனும். தின்னா வவுறு நாறிரும்.
டெக்ஸ்டைல்ஸ்:
பண்டிகைக்கு,பிறந்த நாளைக்கு ட்ரஸ் எடுக்கலை,பட்டு எடுக்கலின்னு எத்தீனி ஃபேமிலியில ரணகளம் நடந்திருக்கு.
ஃபர்னிச்சர்ஸ்,ஃபேன்சி,லக்சரி:
உள்ளது ஒரே சக்தி.அது காம சக்தி.அது காமத்துல செலவழிய வழியில்லின்னா உருவாக்கும் சக்தியா வெளிப்படும். அப்பம் அது வெறியோட -கொலை வெறியோட வெளிப்படும். தம்பதியில அடுத்தவருக்கும் இதே அமைப்பு இருந்தா ஓகே இல்லின்னா என்னாகும்? ஃபேமிலி கோர்ட்டுதேன்
எச்சரிக்கை:
காமத்தில் செலவழிந்தும் உபரியா இருக்கக்கூடிய சக்தி உருவாக்கும் சக்தியா வெளிப்படும்போது அது ஜென்டிலா இருக்குங்கோ.
பிக்னிக்,டூர்,கெட் டு கெதர்,கண்ணாலம் போன்ற சுபகாரியங்கள்:
இந்த மேட்டர் எல்லாம் கெட்ட மேட்டருன்னு சொல்லமாட்டேன். ஆனால் இதே பொளப்பா இருந்தா பொளப்பு நாறிரும்ல. தம்பதியில ஒருத்தரு இதெல்லாம் வெட்டின்னு நினைச்சா கூட விவகாரமாயிரும்ல.
கலைகள்:
சுக்கிரன் சுபனா இருந்து சுபஸ்தானத்துல இருந்து பலம் பெற்றிருந்தா ஆக்கப்பூர்வமான போட்டி,விவாதம்,கருத்து மோதல் எல்லாம் ஏற்பட்டு கலை இன்னம் கொஞ்சம் பட்டை தீட்டப்படும்.
இதுவே சுக்கிரன் பாவியா இருந்து சுபஸ்தானத்துல நின்னிருந்தால் பவர் ஸ்டார் போல கலைவெறி கொண்டு தியேட்டர் வாடகை கட்டி சொந்த படத்தை 100  நாள் ஓட்டவேண்டி வந்துரும்.
பெண்கள்,கில்மா :
பெண்களிடம் விரோதம் ஏற்பட 3 காரணங்கள் இருக்கு. நாம விரும்பி அவிக விரும்பாம போறது. இதை நாம ஸ்போர்ட்டிவா எடுத்துக்கிட்டா பிரச்சினை இல்லை. எட்டாங்கிளாஸ்ல ஒரு குட்டிக்கு நாம லைன் விட – நம்மை விட க்ளாஸ் சாப் ஒருத்தன் அவளுக்கே லைன் விட நம்மை விட அவன் தான் பெட்டர் சாய்ஸுன்னு நாம கழண்டுக்கிட்டோம். (அந்தளவுக்கு ஸ்போர்ட்டிவ்)
அவிக விரும்பி நாம விரும்பாம போறது (இதை எவளும் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கவே மாட்டா..) அதுவும் எம்.ஜி.ஆர் படம் மாதிரி சகோதிரி அது இதுன்னு வசனம் விட்டா தாளி கிளிஞ்சிரும்.
அடுத்தது மேட்டர்ல இறங்கின பிறவு நாம வெத்துவேட்டுன்னு தெரிஞ்சு போறது ( இந்த ஒரு காரணத்துக்காவ விரோதம் பாராட்டற குட்டி சீக்கிரமே பெட்டர் சாய்ஸை கேட்ச் பண்ணிரும். நோ ப்ராப்ளம்.
அடுத்து ஒரே நேரத்துல பல குட்டிகள் நமக்கு லைன் விட்டா அப்பம் நம்மாளுக்கு வர்ரதை கோவம்னு சொல்ல முடியாது அதனால வர்ரது விரோதமும் கிடையாது. அது செல்லமான பொறாமை – ஊடல்னு சொல்லலாம். அதே சமயம் அல்ப்பம் போல அந்த குட்டிகள்ள எதுனா ஒரு குட்டிக்கு நாம ஜொள்ளுவிட்டு தொலைச்சா நிச்சயம் ஆப்புதேன்.
ஆக மொத்தத்துல சுக்கிரன் ஆறில் நின்றால் சுக்கிர காரகங்களால் சத்ரு,ரோக,ருண,விவகார உபாதைகள் கியாரண்டி.  மேலும் சரியா திங்க முடியாத,தூங்க முடியாத, கில்மாவில் ஈடுபட முடியாத  நோய்கள் வரலாம்.
பொஞ்சாதி கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிர்ரது – அவிக வீட்டு கூடத்துல பெருசுகளோட வெத்திலை பாக்கு பழை+உபதேச மழையில நனையறதும் நடக்கலாம்.
பெண் பெயர் கொண்ட நிறுவனங்கள் – பெண் பெயர் கொண்ட /சாயல் கொண்ட ஆண்களாலும் ஆப்பு வரலாம்.டேக் கேர்.
நாளைக்கு சுக்கிரன் 8 ல் இருந்தா என்னபலன்னு பார்ப்போம்.உடுங்க ஜூட்டு. நாம ஃபோட்டோஷூட் எடுத்து பல காலம் ஆனாப்ல ஃபீலிங்.அதனால நேத்திக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி செய்த ஃபோட்டோஷூட்டை மூவியாக்கி யூ ட்யூப்ல போட்டிருக்கன். பொறுமை உள்ளவுக பார்க்கலாம்.
பின்னணி இசைக்கு “சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா ” பாட்டை யூஸ் பண்ணியிருக்கம்.பாவம் ரஜினிக்கு என்ன ஒரு சோதனை?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s