சுக்கிரன் மறைவும் – காம சுகக்குறைவும்

Image

அண்ணே வணக்கம்ணே !
சுக்கிரன் நிலையும் காமக்கலையும்ங்கற தலைப்புல தொடரை ஆரம்பிச்சப்போ 12 நாளை ஓட்டிரலாம்னு நினைச்சேன்.ஆனால் சுக்கிரனின் மறைவுஸ்தானங்களான 3-7-10 பாவங்களை பற்றிதனித்தனியே எழுதினா அரைச்ச மாவையே அரைக்கிறான்யான்னிருவாய்ங்க.அதனாலதேன் ரெண்டு நாள் மிந்தி சரக்கு தீர்ந்துட்டாலும் பரவால்லைன்னு த்ரீ இன் ஒன்னா இந்த பதிவை தரேன்.

அல்லாரும் என்ன நினைப்பாய்ங்கன்னா சுக்கிரன் உச்சமாயிட்டா ஜாதகர் காதல் மன்னனாயிருவாரு -காதல் இளவரசனாயிருவாரு -அதாலயே காலிங் பெல் அடிக்கலாம் -எடுக்காமயே அனுபவிக்கலாம்னு நினைப்பாய்ங்க.
ஆனால் இன்னாடா மேட்டருன்னா சுக்கிர பலம் உள்ளவன் வீடு,வாகனம்,கில்மான்னு எதையும் நினைச்சுக்கூட பார்க்கமாட்டான்.அதும்பாட்டுக்கு கூரியர் தபால் மாதிரி வந்து கையெழுத்துக்கு நிக்கும். இவன் அசால்ட்டா டெலிவரி வாங்கிக்குவான்.

அதே போல பெண்கள் விஷயத்துலயும்  அடக்கி வாசிக்க ஏன் பாராமுகமா இருக்க  கூட  வாய்ப்பிருக்கு. பெண் தன்னை சுற்றி சுற்றிவருபவனை சந்தேகிப்பாள். கண்டு கொள்ளாதவனை ஆர்வத்துடன் கவனிப்பாள்.
நம்முது கடகலக்னமா இருந்தாலும் -சுக்கிரன் பாதகாதிபதியா இருந்தாலும் -சிம்மத்துல தன் சொந்த நட்சத்திர சாரம் வாங்கினதாலயோ என்னமோ (இதுல குருவேற லக்னத்துல உச்சம்)  தியரி மொத்தமும் மண்டைக்குள்ள ஏறிப்போச்சு.

தியரின்னா உங்க வீட்டு எங்க வீட்டு தியரி இல்லிங்கோ .. செமை தியரி. ப்ராக்டிக்கல் அனுபவங்கள் பெருசா இல்லாத காலத்துலயே ஏதோ பழம் தின்னு கொட்டை போட்ட கிழவாடி கணக்கா ஒரு ஃபீலிங்கு.
மேலும் நம்ம ஆதர்ச புருசர்கள் எல்லாம் கில்மா மேட்டர்ல பயங்கர ஸ்ட்ரிக்டு. யத்பாவம் தத்பவதிங்கறாப்ல நமக்கு அவிகளாவே மாறிட்டாப்ல போல ஒரு ஃபீலிங்கு.

இதனால ஜொள்ளு பார்ட்டியா மாறாம தப்பிச்சம். இதனால கிராஃப் எப்பவும் உச்சியை நோக்கித்தான் போயிட்டிருந்தது. எல்லாமே ஒரு ரெண்டு வருசம் தேன், படக்குனு ஒரு ஞானோதயம் ஏற்பட்டது. (காவலுக்கு குறுக்கே காலை வச்சிருந்தவனுக்கு கால் போயிருச்சு பாஸூ).அங்கே இருந்து நம்ம மைண்ட் செட் மாறிப்போச்சு கண்ணாலத்துக்கு ப்ளான் பண்ண ஆரம்பிச்சுட்டோம். தப்பிச்சோம்.

Image

இதுவே சுக்கிரன் லக்னாதிபதியோட சேராம -சொந்த சாரம் வாங்காம இருந்திருந்தா 1984 டு 1991 ஆடி முடிச்சி இறங்கி வர்ரதுக்குள்ள தாவு தீர்ந்திருக்கும். கிரேட் எஸ்கேப்.

இந்த சுக்கிர பலம் இல்லாத கேசுங்களை நம்பித்தான் வாகனக்கடன், வீட்டுக்கடனையே அறிமுகப்படுத்தியிருக்காய்ங்க. இவன் லட்ச ரூவாய்க்கு வாகனத்தை வாங்கி – கொஞ்ச நாள் ஓட்டிட்டு புது மேக் வந்திருக்குன்னு இதை அம்பதாயிரத்துக்கோ அறுவதாயிரத்துக்கோ வித்துருவான். அதை வாங்கறவன் சுக்கிர பலம் உள்ளவனா இருப்பான்.

இவன் பொஞ்சாதி தாலி மொதக்கொண்டு -வேலை வெட்டி -ஆரோக்கியம் எல்லாத்தையும் பாழாக்கி வீட்டை கட்டுவான்.ஓவர் டைம் செய்த சுக்கிரன் ஆஃப் எடுத்துக்குவாரு.பொஞ்சாதி பேஷண்டாயிரும்.இல்லின்னா பொண்ணுஎவனோடயாச்சும் ஓடிப்போயிரும். கடுப்புல கட்டின வீட்டை வாடகைக்கு விட்டுட்டு அப்பார்ட்மென்டுக்கு மாறிருவாரு. இவன் வீட்டுக்கு குடிவர்ரவனுக்கு சுக்கிர பலம் இருக்கும். எந்த ரிஸ்கும் இல்லாத அந்த வீட்டை அனுபவிப்பான்.

இந்த கில்மா சமாசாரம் கூட இப்படித்தான் சுக்கிர பலம் இல்லாதவனுக்கு – இந்த மேட்டர் அவனோட சப் கான்ஷியஸ் மைண்ட்லயோ -அன் கான்ஷியஸ் மைண்ட்லயோ ரெக்கார்ட் ஆகியிருக்கும். இந்த உணர்வு அவனை பிஞ்சுல பழுத்தவனா மாத்திரும். “அது” கிடைக்காத வயசுல அதையே நினைச்சு நினைச்சு ஏங்கி ஏங்கி  “அது” கிடைக்கிற சமயத்துல ஏக்கத்தால் எரிக்கப்பட்ட சாம்பல் கூட நிப்பான் .

ஒரு விருந்தையே எடுத்துக்கங்க. டைனிங் ஹாலுக்கு போறதுக்கு அஞ்சு நிமிசம் மிந்தி சாப்பிட்டா நெல்லாயிருக்குமேன்னு தோனினா நட்டமில்லை. இன்னம் சொல்லப்போனால் நாவில் உமிழ் நீர் வவுத்துல  ஹெச்.சி.எல் எல்லாம் சுரந்து  சீரணத்துக்கு உதவும்.

கில்மா மேட்டர் இன்னம் கொடூரம். அதுல ஈடுபடும் போதுகூட  அதை  பற்றிய எண்ணங்களை தவிர்க்கனும்.

நம்மை பொருத்தவரை என்.டி.ஆர் எல்லாம் அதிமனிதன். ஆனா அவரை போல ஆகனும்னு நினைக்காத  நாளே இல்லை. அவரை நினைச்சாலே ஒரு வேக்குவம் வரும். கொய்யால ..சின்ன சின்ன மேட்டரையெல்லாம் விட்டுத்தொலைச்சு தலீவர் போல ஆகனும்பாங்கற லட்சியத்துல வேகம் கூடிரும். மத்ததெல்லாம் “சுருங்கி”போயிரும். இதையே க்ளைமேக்சை தள்ளிப்போடும் உத்தியா உபயோகிக்கிறதுண்டு.

ஈடுபடும்போது கூட அதை  நினைக்காதவன் தான் கில்மால வெற்றிகொடி கட்ட முடியும்ங்கற போது -அதுக்கான வாய்ப்பே இல்லாதபோதும்  அதையே நினைச்சிட்டிருக்கிறவன் நிலை என்னனு இமேஜின் பண்ணுங்க.
சுக்கிரன் மறைவு ஸ்தானத்தில் நின்ற ஜாதகர்களோட மனோ தத்துவம் – அவிகளோட கில்மா பழக்க வழக்கங்களை அடுத்த பதிவுல நிச்சயம் சொல்றேன். உடுங்க ஜூட்டு.

5 thoughts on “சுக்கிரன் மறைவும் – காம சுகக்குறைவும்

  1. அனுபவஜோதிடத்தின் புதிய பரிணாமத்திற்கு வெய்டிங் …
    பதிவுக்கு நன்றி . ஹாட் படங்கள் நன்றாய் இருக்கிறது ஆனால் வேலை பார்க்கும் இடங்களில் பொறுமையாக பதிவை படிக்க சற்று சிரமமாக இருக்கும் .
    பலான சைட்ல படம் பாக்கறானு நெனச்சா ஹேர் போச்சுன்னு விட்டுருவோம் , ஆனா அதை ஆல் இன் தி ரேடியோ பண்ணி தொலைச்சா ரிஸ்க் ஆய்டும் . அதான் இந்த கமெண்ட் .

    • அடடே..இப்படி ஒரு பிரச்சினை இருக்கா. பார்த்துக்கலாம்.அடக்கி வாசிப்போம்ல/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s