2012 ல் சோனியா முதல் சிம்பு வரை

அண்ணே வணக்கம்ணே !

புத்தாண்டில் பிரபலங்கள்னு ஒரு தொடர்பதிவை ஆரம்பிச்சு திராட்ல விட்டுட்டம். நம்ம வேகத்துக்கு – நமக்கிருக்கிற டைட் ஷெட்யூலுக்கு விடாப்பிடியா டெக்ஸ்டா தொடர்ந்தா இன்னொரு புத்தாண்டு வந்துரும். அதனால சோனியா,ராகுல்,ஜெயலலிதா முதல் சிம்பு ,சூர்யா வரை பிரபலங்களோட எதிர்காலம் 2012ல எப்படி இருக்கும்னு ஆடியோவா தந்திருக்கேன்.

கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.

நம்ம புதிய விருந்தினர் சுந்தரேசன் அவர்களுடைய விபத்து பதிவையும் தந்திருக்கேன். இங்கே அழுத்தி படிச்சுருங்க.

அதுக்கு மிந்தி ச்சொம்மா டைம் பாஸுக்கு ரெண்டு உபகதை.

ஷீர்டி சாயிபாபா ஷீர்டில செட்டிலான புதுசுல திடீர்னு ஒரு ஆசாமி வந்தான்.பாபாவை அவர் உட்கார்ந்திருக்கிற இடத்தை விட்டு எந்திரிக்க சொன்னான். பாபா எந்திரிச்சாரு. வந்தவன் பாபா சீட்ல உட்கார்ந்துக்கிட்டான். இப்படி ஒரு 3 நாள் ஓடிருச்சு. சனம் பொங்கி எழுந்து வந்தவனை கிளிச்சுரப்பார்க்க பாபா "ஃப்ரீயா உடுங்க"ன்னாரு.

நாலாவது நாள் அந்த ஆசாமி எந்திரிச்சு பாபாவை வணங்கி "வந்து உங்க சீட்ல உட்காருங்க"ன்னான். பாபாவும் உட்கார்ந்தாரு. வந்தவர் பாபாவுக்கு பெரிய கும்பிடா போட்டுட்டு போயிட்டாரு.

இந்த உபகதைக்கும் நம்ம சுந்தரேசன் சாரோட வரவுக்கும் அலம்பலுக்கும் சம்பந்தமில்லை. சம்பந்தமிருக்குன்னு நினைச்சாலும் நஷ்டமில்லை. நிற்க.

மெர்ஜென்சிக்கு மிந்தி தமிழ் நாட்டு வந்துரு விதவை பென்சன் தரோம்னு இந்திரா காந்தியை திமுக காரவுக சகட்டு மேனிக்கு பேசினாய்ங்க. எமெர்ஜன்சி சமயம் செமர்த்தியா பொங்கல் வாங்கினாய்ங்க.

அதே எமெர்ஜென்சி பீரியட்ல டி.கே.பரூவான்னு ஒரு பார்ட்டி இந்தியாதான் இந்திரா இந்திராதான் இந்தியான்னு ஊத்தி விட்டாரு. அப்பாறம் நடந்த எலக்சன்ல இந்திராவை சனம் ஊத்தி மூடிட்டாய்ங்க.

நாகர் கோவில்ல படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்னு காமராசர் சொன்னாரு எந்திரிக்கவே இல்லை.இதையெல்லாம் ஹிட்ஸ் கணக்கு சொல்லி தாண்டி குதிக்கிற சுந்தரேசனுக்கு சொல்றதா நினைச்சுராதிங்க. நினைச்சாலும் நஷ்டமில்லை.

நம்ம ஜாதகத்துல ஆறுக்கு எட்டாவது இடம் கடகம் . இங்கனதான் குரு உச்சமா உட்கார்ந்திருக்காரு. குரு சுப கிரகம். நம்ம எதிரிகளுக்கு ரெம்ப டார்ச்சரெல்லாம் கொடுக்க மாட்டாரு.

வில்லன் கெட்டவன்னு வைங்க. அணு அணுவா சித்திரவதை பண்ணுவான்.அப்பாறம்தேன் கொல்லுவான்.

இதுவே வில்லன் ரெம்ப நல்லவன்னு வைங்க.. " டே ..டேய்.. என் கண்ணுக்கு மறைவா கொண்டு போயி ரெம்ப இம்சை -ரத்த சேதம் இல்லாம் பட்டுன்னு முடிச்சுருங்கடான்னு தேன் ஆணை கொடுப்பான்.

அப்படி ஆறுக்கு எட்டுல நின்ன குரு நம்ம எதிரிங்க கதையை முடிச்சுருவாரு. அதுக்காவ நாம நேரத்தை செலவழிக்கிறதா இல்லை.

அதே சமயம் நாம பூனை கணக்கா எலியை ஓடவிட்டு அடிப்பம். அதை பார்த்து அந்த எலி இது சோப்ளாங்கி பூனைன்னு நினைச்சு அசால்ட்டா இருந்தா இந்த பூனைக்கு தேன் லாபம்.

இதையெல்லாம் சுந்தரேசனுக்கு சொல்றதா நினைச்சுராதிங்க. நினைச்சாலும் நஷ்டமில்லை. அவரோட பதிவுகளை ஆயிரக்கணக்குல படிச்சதா சொல்றாரே.அதுக்கு எதுனா ஆதாரம் கீதாரம் இருந்து சொன்னா நெல்லாருக்கும்.

கூகுல்ல தேடு கொட்டும்னாரு. இந்தியாவுல லட்சம் சுந்தரேசன் இருப்பான். அல்லா சுந்தரேசனும் ஆஜர். இதுல இந்த வந்தரேசனை எப்படி கேட்ச் பண்றது? வில் யு கிவ் மீ சம் ஐடியா ப்ளீஸ்?

8 thoughts on “2012 ல் சோனியா முதல் சிம்பு வரை

 1. ஐயா!

  பாபா கதை மிகவும் நன்றாக உள்ளது. தொடர்ந்து இதுபோன்று ஆன்மீக கதையை வெளியிட்டு எங்கள் அறிவுக்கண்ணை திறந்து வையுங்கள். ஆமாம் இந்தக்கதையில் வரும் அந்த பாபா நான்தானே.

  • வாங்க வந்தரேசன் !
   வந்தரேசன் யாரு? இருந்த முருகேசன் ஆருன்னு நாடறியும் நல்லோர் அறிவர். ஃப்ரீயா உடுங்க. இதெல்லாம் ஒரு முன் எச்சரிக்கைக்காக.

   நாளைக்கு யாரோ ஒரு பார்ட்டி வந்து இந்தரேசன் இந்த சைட்ல இருந்து சுட்டுருக்காரு அ இந்த நூலை கட் பேஸ்ட் பண்ணியிருக்காருன்னு ஆதார பூர்வமா சொன்னா நான் மொக்கையாயிரக்கூடாதில்லை..அதுக்கு தேன்.

   உங்க பக்கம் உண்மையிருந்தால் தில்லு துரையா கோ அஹெட் !

 2. ஐயா!

  மார்கழி குளிருக்கு இதமாக இருக்குமே என்று நம் அனுபவ ஜோதிடம் வாசகர்களுக்காக படைப்புகளை சுடச்சுட அனுப்பினேன். அதை அவசரப்பட்டு டேஸ்ட் மற்றும் டெஸ்ட் செய்து பார்த்ததில் தங்களுக்கு நாக்கு பொத்து விட்டது போலும்.

  மேலும் சுடச்சுட உள்ள என் படைப்புகளை படித்ததில் தாங்கள் சூடாகி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். தங்களை சூடாக்குவதற்காக சுடச்சுட வெளியிடவில்லை ஐயா. ஆற அமர படித்திருக்கலாம். தாத்தா பாட்டி கதைகளை படித்துவிட்டு சிரிக்க மட்டும்தான் செய்வேன் ஐயா. நான் ஆசாபாசங்களை கடந்தவன் ஐயா.

  தயவுசெய்து என் படைப்புகள் தந்த அபார ஹிட்ஸ் தங்கள் மனதை புண்படுத்தினால் அதற்காக தௌசன் வாலா மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ஐயா.

  தொடர்ந்து தங்கள் நல்லதாரவை தாருங்கள் ஐயா…. வர்ட்டா… 🙂

 3. //அவரோட பதிவுகளை ஆயிரக்கணக்குல படிச்சதா சொல்றாரே.அதுக்கு எதுனா ஆதாரம் கீதாரம் இருந்து சொன்னா நெல்லாருக்கும்.//

  ஐயா!

  என் படைப்புகளை எத்தனை வாசகர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர் என்பதை சொன்னால் தங்கள் உயிருக்கும், இதயத்திற்கும் பாதிப்பு வந்துவிடும் என்ற அச்சத்தினால் வெளியிடாமல் இருந்தேன். இருப்பினும் தாங்கள் தங்களது ஸ்டேட்டில் உள்ள ஸ்டேட் கவுண்டரை வைத்து மாயாஜாலம் காட்டினீர்கள். நானும் தாங்கள் கூறிய கவுண்டரிடம் கேட்ட பொழுது அதே கவுண்டரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது கீழே உள்ள சுட்டியில் உள்ளவாறு காட்டினார். இது ஸ்டேட்டுக்கு ஸ்டேட்டு மாறுபடுமோ? என்று ஒருவித பயம் கலந்த சந்தேகத்துடன் வினவினேன். ஆனால் அவரோ சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்ணே! என்று ஒரு சுட்டியை தந்தார் (சட்டிய இல்லீங்க்ணா).

  இக்கடச்சூடு.

  சதம் அடித்தாலே தற்கொலை செய்வேன், நாண்டுக்குவேன் போன்ற திகிலூட்டும் வாசகங்களை கூறி வாசகர்களை பீதியாக்குவதால் எனக்குள் உண்மையான ரிப்போர்ட்டை வெளியிட ஈரக்குலை நடுங்குகிறது. என்னால் தாங்கள் விபரீத முடிவிற்கு சென்றுவிடக்கூடாது என்பதால் தாங்கள் சொடுக்கிய அதே கவுண்டரிடம் கேட்ட பொழுது லேசாக குறைத்து கூறினார்கள். இப்பொழுது உள்ள சூழ்நிலையில் உங்கள் மென்மையான மனதிற்கு இது போதும் என்று மேலே சுட்டியை இணைத்துள்ளேன் ஐயா. பார்த்து என்ஜாய் பண்ணிக்கொள்ளுங்கள். வர்ட்டா 🙂

 4. இதையெல்லாம் முருகேசன் ஐயாவுக்கு சொல்றதா நினைச்சிராதீங்ணா. (நெனச்சாலும் க(ந)ஷ்டமில்லீங்க்ணா)

  ஒரு ஊருல ஒரு சாமி சாமின்னு ஒருத்தர் இருந்தாராம். அந்தச்சாமி நெறைய டகால்ட்டி வேல பண்ணி மக்களை மாக்களா ஆக்கிக்கிட்டு இருந்தாராம். வந்தவங்களும் ஆஹா ஓகோன்னு சாமிய தல மேல வச்சி கொண்டாடிக்கிட்டுருந்தாங்கலாம். இதனால அந்த சாமி தன்ன அடிச்சிக்க ஆளே இல்லேன்னு நெனச்சிக்கிட்டாராம். ஒரு கட்டத்துல எல்லாமே தனக்கு கீழதான்னு நெனச்சிக்கிட்டு இருந்தாராம். இது அந்த நிஜமான சாமிக்கே பொறுக்காமா அந்த சாமிக்கு ஏபிசிடி சொல்லி குடுத்து திருத்துறதுக்கு புதுசா ஒரு “ஆ”சாமியா அவதாரம் எடுத்தாராம். அந்த ஊருக்கு புதுசா ஒரு “ஆ”சாமி வந்தாராம். (ஆ என்றால் பசு என்று அர்த்தம்). அந்த அவதார சாமி பண்ண வித்தைகளை பார்த்து மக்கள் கூட்டம் கூட ஆரம்பிச்சதும் அந்த சாமி நொந்த சாமியாகி அவதார சாமிட்ட சரணடைஞ்சிட்டாராம்.

  இந்தக்கதைல வந்த சாமியும் நானில்லை. நொந்த சாமியும் நானில்லை. கதையை கூறியது ரசிப்பதற்கு மட்டுமே. ஈர பேனாக்கி பேன பெருமாளாக்கிராதீங்க்ணா. வர்ட்டா 🙂

  • வாங்க ரேசன் !
   ஆமா.. என்னவோ சரக்கு குப்பையா இருக்கு .. எங்க தலைமேல எல்லாம் கொட்டறேன்னு பீத்திக்கிட்டிங்க.

   ஒன்னத்தையும் காணோம்? உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் ..முருகேசன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s