நன்கொடை தாரீர்!

DSC_1026

அண்ணே வணக்கம்ணே !

இந்த வலைதளம் தொடர்ந்து இயங்க – நாம இயங்கனும். நாம இயங்க பைசா வேணும். இத்தனை காலம் (சுமார் 9+6 வருசம்) ஜோதிட ஆலோசனை நம்ம சோர்ஸா இருந்தது .

2015,டிச,31 க்கு பெய்டட் ஆன் லைன் ஜோதிடனா நம்ம அவதாரத்தை முடிச்சுக்க போறம். (இலவச ஆலோசனை தொடரும்.டோன்ட் ஒர்ரி)அதுக்கு பிறவு புவ்வாவுக்கு என்ன பண்றதுன்னு ரோசிச்சு சின்னதா ஒரு ஸ்கெட்ச் போட்டம்.

ப்ரெட் ஹன்டரா இருந்த நம்மை – தினத்தந்தி மாதிரி கன்சர்வேட்டிவ் பத்திரிக்கையில குப்பை கொட்டி -வவுத்தை கழுவிக்கிட்டிருந்த நம்மை சொந்த கால்ல நிற்க வச்சுக்கிட்டிருக்கிறது ஆன்லைன் ஜோதிட ஆலோசனை தான். அதுக்கு அடிப்படையா இருந்தது நாம எழுதி சக்கை போடு போட்ட பதிவுகள் தான்

அந்த பதிவுகளை எல்லாம் இங்கிலீஷ்ல மொழி பெயர்க்க வச்சு – தனிய ஒரு வெப்சைட் வச்சு கூகுள் ஆட்சென்ஸ் வாங்கிரனும். இடையில ஏதாச்சும் மொழி பெயர்ப்பு வேலை கிடைச்சாலும் செய்துக்கலாம். (தமிழ் டு தெலுங்கு ; தெலுங்கு டு தமிழ்) மத்தபடி ஜோதிட ஆலோசனைக்கு மங்களம் பாடியே ஆகனும்னு தீர்கமான முடிவு .

டோன்டு ராகவன் உசுரோட இருந்தப்போ தமிழ் டு இங்கிலீஷ் ட்ரான்ஸ்லேஷனுக்கு என்ன சார்ஜ் பண்ணுவிங்கன்னு கேட்டன் (வார்த்தைக்கு ஒரு ரூவாயாம்) ஊஹூம். நமக்கு கட்டுப்படியாகாது.

இடையில ஒரு பார்ட்டி கிடைச்சு அந்த ஆசாமியை கட்டி மேய்க்கவே ஆலோசனை கட்டணத்தை எல்லாம் உசத்தினம்.ஆனால் பார்ட்டி ..பரார் ஆயிருச்சு .பிறவு ஒரு பார்ட்டிய பிடிச்சம் . அது அதுக்கு மேல இருக்கவே அம்பேல்.

பல வலை தளங்கள் வாசகர்களிடம் நன் கொடை கோருவதை பார்த்திருக்கன். சாரு நிவேதிதால்லாம் வாசகர்கள் கிட்டே நன் கொடை வாங்கி ஃபாரின் சரக்கு அடிக்கிறாராம்ல.

கட்டண ஆலோசனைக்கு வர்ர பலர்ல சிலர் கட்டணத்துக்கு மேல காசு அனுப்பிருவாய்ங்க. ஆனால் நாம அதை ஆக்செப்ட் பண்ணினதில்லை. திருப்பி அனுப்பற டெக்னாலஜி நமக்கு தெரியாததால எதிர்கால ஆலோசனைக்கு ரிசர்வ் ஃபண்டா வச்சுக்கறேன்னு தகவல் கொடுத்து அப்டியே மெயின்டெய்ன் பண்ணியிருக்கம்.

குடிசை தொழில் மாதிரி கைக்கு அடக்கமான ஆட்களை வச்சு -மன்னாடி வேலைய முடிச்சுரலாம்னு பார்த்தன் ( ஆங்கில வெப்சைட் ஆட் சென்ஸ் ) ஒன்னும் பேர்ரதா இல்லை. ப்ரொஃபெஷ்னலா தான் போகனும் போல. பட்ஜெட் எகிறிரும்ல?நம்ம இங்கிலீஷ் எல்லாம் மோடிக்கு கடிதாசு போடத்தான் உதவும்.லிட்டரலா ஒன்னும் பேராது .

இருக்கிற நாளா ரெம்ப குறைவு . அக்,நவ,டிச மொத்தமே 90 நாள் தான் இருக்கு .அதுக்குள்ள காரியத்தை முடிக்கனும். நாம எழுதியிருக்கிற (ஏ.கு) 2000 பதிவுகள்ள கு.பட்சம் 200 பதிவுகளை செலக்டடா இங்கிலீஷ்ல போட்டுட்டா போதும்.தூள் பண்ணலாம். கூகுள் ஆட்சென்ஸ்ல காசு பார்த்துரலாம்.

ஆகவே மக்கழே ! நம்ம பதிவுகளை தொடர்ந்து படித்து வந்திருக்கும் உங்களில் பலரும் நம்ம ஆஸ்ட் ரோ – டிப்ஸ் மற்றும் லாஜிக்கல் ரெமிடீஸை ஃபாலோ பண்ணி சக்சஸ் ஆகியிருப்பிங்க. நன்றி உணர்வுல தத்தளிச்சு போயிருப்பிங்க. அந்த உணர்வுக்கு வடிகால் அமைச்சு தர்ரதா முடிவு பண்ணியிருக்கன்.

நம்ம பதிவுகளால எந்தளவு பயன் பெற்றிருக்கிறீர்களோ அந்த அளவு நன் கொடையை எதிர்ப்பார்க்கிறேன். வாழ் நாள் எல்லாம் அல்ல. ஜஸ்ட் 90 நாளைக்கு. அதுவும் உங்களை போல் பலரும் பயனுற நம்ம பதிவுகளை இங்கிலீஷ்ல கொண்டு செல்ல தான்.

நாம வெப்சைட்ல சாம்பிராணி விற்கலை, மந்திரோபதேசம்னு ஊர ஏமாத்தல. ஜீ பூம்பா வேலைல்லாம் செய்வம்னு ஃப்ராடு பண்ணல. பல ஜோசியர்களை போல ஆயிரம் ஐ நூறு வாங்கிக்கிட்டு கேள்விக்கு பதில் சொல்றேன்னு 4 வரியில வேலைய முடிக்கல. பலன்-பரிகாரம்-தசாபலன்-கேள்விகளுக்கான பதில்கள்னு ஏறக்குறைய ஒரு மணி நேரம் தொண்டை தண்ணி வறள ஒலிப்பதிவு செய்து அனுப்பி வாங்கின காசுக்கு பலமடங்கு மேலயே சர்வீஸ் பண்ணியிருக்கம்.

இப்பவும் இந்த நன் கொடைய எதிர்பார்க்கிறது வாழ் நாள் எல்லாம் உங்களுக்கு இலவச சேவையை தொடர்ந்து கொடுக்கத்தான்.

தேவை சின்ன புரிதல் மட்டுமே ! நன் கொடை தர முடிவு செய்து விட்டவர்கள் கீழ் காணும் வங்கி கணக்கில் செலுத்தலாம்.(கூடவே ஒரு மெயிலும் போட்டுருங்கப்பு – கட்டண ஆலோசனைக்கா? நன் கொடையான்னு கன்ஃபீஸ் ஆயிரக்கூடாதில்லை)

Donate

Name: Sundaresan Murugan A/C No: 30333022274
Name of the Bank : State Bank of India
Branch Name: GREAMSPET Branch Code: 7083
IFSC Code: SBIN0007083
Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP
Pincode: 517002
Swift Code: N/A RTGS : YES

If you have an account @ Indian bank and it is more convenient and less expensive to transfer you can transfer fee to the below account which is belong to my daughter and operated by me.

Name of the A/C holder: M.SIREESHA
ACCOUNT NO: 6108716338
Bank: INDIAN BANK
Address: SESHAPIRAN STREET, CHITTOOR 517001
State: ANDHRA PRADESH
District: CHITTOOR (Click here for all the branches of “INDIAN BANK” in “CHITTOOR ” District)
Branch: CHITTOOR MAIN
IFSC Code: IDIB000C026 (used for RTGS and NEFT transactions)
Branch Code: Last six characters of IFSC Code represent Branch code.
MICR Code: 517019099

ஏன் பாஸ் ! இந்த முடிவு கட்டண ஆலோசனைய தொடரலாம்லனு சிலர் கேப்பிக. காசு வாங்கிக்கிட்டு பல மேட்டரை சொல்ல முடியறதில்லப்பா. மேலும் அசலான மேட்டரை சொல்லிர்ரதால நம்ம ஆவிசு -ஆடிட்டியூட் எல்லாம் குறைஞ்சுக்கிட்டே போகுது .

இந்த நாடு நம்ம கிட்டே பெருசா எதிர்ப்பார்க்குது . நம்ம கிட்டே ஒரு ஸ்பார்க் இருக்கு. இல்லேங்கல.ஆனால் அதை சில தனி நபர்களின் நலனுக்காக விரயம் பண்றதுல நமக்கு கில்ட்டி வந்துருது.மேலும் நம்ம ஆவிசு குறையறது நெல்லா தெரியுது.அதான் அம்பேல்.

Advertisements

14 thoughts on “நன்கொடை தாரீர்!

 1. வணக்கம் சார், தங்களால் பயன் அடைந்தவர்களில் நானும் ஒருத்தி.கட்டண சேவையை நிறுத்துவது மிகவும் வருத்தமாகவே உள்ளது.எனினும் தங்கள் நலனும் முக்கியம். நன்கொடையை paypal மூலம் அனுப்பலாமா?.

  • அம்மா!
   90 நாள் கெடு இருக்கிறதே. 90 ஆவது நாள் அனுப்புங்கள் போதும். (மற்றவர்கள் உடனே அனுப்பலாம்)

 2. Sir i have sent rupees and questions for detailed palangal .The ietter has returned. Is your address changed.please let me know your proper address. thanking you.

 3. sir ihave sent a letter and cheque for detailed palangal.But it was returned due to wrong address.I have taken your address from anubavajodidam website.Is there any change in your address.please let me know your address. thank you

  • அம்மா !
   தாங்கள் கட்டண ஆலோசனைக்கும் -ஆங்கில வலைதளத்துக்கு நன் கொடைக்கும் அனுப்பிய தலா ரூ.2000 க்கான இரண்டு செக்குகளும் கிடைத்தன. நன்றி. பலன்/பரிகாரம் அனுப்ப ஒரு வாரம் பத்து நாட்கள் ஆகலாம். தேவை சின்ன புரிதலும் -பொறுமையுமே..

  • அம்மா !
   தங்கள் கடிதத்தை அக்னாலட்ஜ் செய்து அனுப்பிய மெயில் ரிட்டர்ன் ஆகி விட்டது.தங்கள் சரியான மெயில் ஐடியிலருந்து என் மெயிலுக்கு swamy7867@gmail.com ஒரு டெஸ்ட் மெயில் அனுப்பிருங்க ப்ளீஸ் !

 4. அறிவிப்பு
  பலரும் ஆங்கில வலைதள ஏற்பாட்டுக்கு நன் கொடை அளித்து உதவி வருகிறார்கள் .ஆனால் பெயர்/விவரம் தெரிவிக்க கூடாது என்ற நிபந்தனையுடன்.

  இந்த நிபந்தனையை குறிப்பிடாத – தவறாக எண்ண மாட்டார்கள் என்று நான் கருதும் -சிலர் பட்டியலையாவது வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.

  அதுவும் இப்பம் வேணான்டா சாமீ ! நம்ம ராசிக்கு ரெண்டு எட்டுல இருந்து ராகு கேது விலகட்டும்.

  ஜனவரி எட்டுக்கு பிறகு வெளியிடுகிறேன். ஆங்கில வலைதளம் துவக்கப்பட்டுவிட்டது .ச்சும்மா ஒரு க்ளான்ஸ் பாருங்களேன்.

  http://www.astroant.com

  • ஐயா !
   நம் செயல்களில் இது சரியா தவறா என்ற சந்தேகம் இருக்கும் போது தான் இந்த இனம் புரியாத பயமேற்படும். இதை ரைட்பண்ணுங்க. அடுத்து ராம நாமம் சொல்லுங்க. சனி,செவ் கிழமைகளில் ஆஞ்சனேயர் கோவிலுக்கு போய் வாங்க.

 5. Sir naa BE complete pane 1+ year aguthu annum enaku job kedaikala dob: 10-08-1992 pls give me some ideas and suggestion thank u

  • லட்சுமி நாராயணன் !
   கவலை வேண்டாம்.ஆரஞ்சு நிற ஆடை அணிகலன் அதிகம் யூஸ் பண்ணுங்க. காலை,மாலை வாக் பண்ணுங்க. மார்ச் 7 ஆம் தேதிக்குள்ள ஒரு நண்பரின் தகவல்/உதவியால் வேலை கிடைக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s